(தலைவி மாலை பெற்று மகிழ்தல் -துறை
பகவத் ப்ரஸாதம் பெற்றபின்பு பிரதிகூலமானவை எல்லாம் அனுகூலமாகுமே
செறுவாரும் நன்மை செய்வார்களே
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் -நாயகி துன்பம் நீங்கிய திருவாய் மொழி அதுவும்
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-
அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-8-6-10-
பெரியாருக்கு ஆட் பட்டால் பெறாத பயன் என்ன
திருத்தண் கா இப்பொழுது தான் குளிர்ந்ததானது
இதுவே கீழ்ப்பாட்டுக்கும் இதுக்கும் சங்கதி
மாலைப் பிரசாதம் பெற்றாள் -அதன் பயனே இது )
அவதாரிகை-
நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் உடைய கிருபையே இவ் ஆத்மாவுக்கு ரஷை
இவன் கடாஷித்தால் இவ் வருகில் உண்டான பிரதி பந்தங்களும் தானே அனுகூலிக்கும்
ராஜா குமாரன் தட்டியில் இருந்த பொழுது ,பிரதி கூலித்தவர்கள் அபிஷிக்தன் ஆனவாறே-
தாங்களே வந்து ,அனுசரிக்குமா போலேயும்
பிராட்டியை தர்ஜன பர்த்சனங்கள் பண்ணின ஏகாஷீ ஏக கர்ணிகளான
ராஷசிகள் அனுகூலித்தால் போலேயும் –
(வேற்றுப் பொருள் வைப்பு அணி இது என்பர்
காற்று குளிர்ந்து இருப்பதுக்கு ஹேது சொன்னவாறு )
சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-
பாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே –
தலைவி மாலை பெற்று மகிழ்தல் –
எல்லியும் காலையும்–8-6-
பதவுரை
செம் கோன் அருளே–(எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம்–நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும்–முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்
வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நி ஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
ஏழு அரை நாழிகை -மூன்று பங்கு 22 அரை -சாயம் சந்தை காலம் சந்தை சேர்ந்து ஏழு அரை நாழிகை ஆகுமே
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று–பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற–உறுதி பொருந்த
வையம் சொல்லும்–உலகத்தோர் கூறுகிற
மெய்யே–உண்மை மொழியின் படியே,
அ வாடை–அந்தக் காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய–நமது தலைவனான எம்பெருமானது அழகிய
குளிர்ந்த திருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது–இதோ வந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.
வியாக்யானம்-
சேமம் செம்கோன் அருளே —
இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை
அவனே இதுக்கு ரஷையாமோபாதி–
இவன் தானும் தனக்கு அநர்த்த அவஹானாய் இருக்கும்-
எங்கனே என்னில் —
ஜகத்தை உண்டாக்குகையும் ,
சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து
பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி
திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும்
இத்தை கால் கடை கொண்டு ,
தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது
மாமேகம் -என்று
தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்
அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே இருப்பது அவன் படி
(பக்தி உழவனின் பெரும் உபகாரங்கள் –
ஷேம க்ருஷி பரம்பரைகளைப் பட்டியல் இடுகிறார்
யாதானும் பற்றி அன்றோ நாம் இவற்றைத் தப்புவது )
இவன் சைதன்யம் -தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்
அவன் சைதன்யம்
உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி
இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்-
தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று
(உத்தமன் என்றும் உளன் கண்டாய் –
நாம் பாராமுகனாய் இருக்கும் அவஸ்தையிலும் அவன் ரஷித்தே தீருவான் )
செம்கோன்-
செவ்விய நிர்வாககன் —
பதிம் விஸ்வஸ்ய —
யஸ்யாஸ்மி ந தம் அந்தரேமி
பாரார்த்யம் ஸ்வம் —என்று சொல்லலாம் படி இருக்கும்-
அருளே-
அவன் கிருபை அல்லது இல்லை —
அவ் வருள் அல்லன அருளும் அல்ல —
இடையீடான பக்தியாதிகளும் வேண்டா
செருவாரும் நட்பாகுவார் என்று —
சத்ருக்களும் பந்துக்கள் ஆவார் என்று
சத்ருக்களும் மேவுற்று செய்வார்கள் என்றுமாம்-
த்யாஜ்யமும் ,பகவத் கடாஷத்தாலே உபாய சக காரியாய்
ஸ்வ யத்ந் த்யாஜமாய் இருக்கும்
(த்யாஜ்யமான சரீரமும்
அவன் அருள் இருண்மதால்
உபாயத்துக்கு ஸஹ காரியாய் -கைங்கர்யத்துக்கு
ஸ்வ யத்ன உபாயாந்தரம்
த்யாஜ்யம் -உபாயாந்தரம் என்று கொண்டு
சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் செய்தவை உபாயாந்தரம் இல்லை –அதிகார பூர்த்திக்கு சித்த்யர்த்தம்
கைங்கர்யத்துக்கு உத்தேச்யம் அன்றோ இவை )
ஏமம் பெற –
பழமை பெற
ரஷை பெற என்றும் ஆம்
வையம் சொல்லும் மெய்யே —
லௌகிகமான பழம் சொல்லும் சத்தியமாய் இருந்தது-
சாவாதிருந்தால் காண்பன சில உள என்னுமா போலே —
கல்யாணீ லௌகிக ப்ரதிபாதிமே -ஏதி ஜீவநதி இத்யாதி-
(நூறு வர்ஷம் ஆனாலும் வாழ்ந்து இருப்பவனுக்கே ஒரு நாள் ஆனந்தம் கிட்டும் )
பிராட்டி அசோகா வனத்திலே இருந்து-
இனி முடிய அமையும் என்று நிச்சயிப்பது
பெருமானை காணலாம் ஆகில் இருந்தால் ஆகாதோ-என்பதாமே-
அவ் அளவிலே திரு அடி சென்று
ராம குணங்களை சொல்லி ,முகம் காட்டின அளவிலே ,
இங்கனேயும் ஓன்று சம்பவிப்பதே-என்று ஹிருஷ்ட்டையாய் –
ஒரு காலத்தில் சோகித்தார் முடியாது இருந்தால் ஒரு காலத்தில் ஆனந்திக்கலாம் என்று சொல்லுவது-
இன்று வாடை குளிர்ந்த படியால் மெய்யாகக் கண்டோம்
(பத்து மாதங்களில் ஒன்பது மாதம் இருந்தால் தானே
இப்பொழுது திருவடி வார்த்தை கேட்கவும் முடிந்தது
பின்பு ராமர் கூட கூடவும் பெறுவாள் )
பண்டு எல்லாம்-
சிறை கூடத்தில் பிறந்து
வளர்ந்தாரை போலே
என்றும் பிரிவேயாய்
வாடையின் கையில் நோவு பட்ட படி
அறை கூய்–
மகாராஜர் பெருமாளை அண்டை கொண்டு ,
வாலியை அறை கூவினால் போலே
இங்கு வாடை தனி வீரனான படி
யாமங்களோடு எரி வீசும் —
பாதகத்தில் உறைப்பாலே கோமுக வியாக்ரம் என்கிற படியாலே
(பசு தோல் போர்த்திய புலி போல் )வேறு பட்டு வருகிற படி-
வீசும்-
தன் மேல் விரஹ அக்நி கதுவாமே கடக்க நின்று வீசும் படி-
லௌகிக அக்நி போல அன்று இறே நரக அக்நி —
அத்தை நீர் என்னலாம் படி இறே
விரஹ அக்நி
நம் கண்ணன் தண் அம் துழாய் இத்யாதி —
துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்-
(வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே )
அழகியதாய்
ஸ்ரமஹரமான திரு துழாய் மாலையை ஸ்பர்சிக்க —
சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்டா-
ஸ்பர்சிக்கவே அமையும்
அவ் வாடை –
முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள் —
முன்பு அப்படி தடிந்து போன வாடை
ஈதோ வந்து தண் என்றதே —
இப்படி வந்து குளிரா நின்றது-.
ஈதோ வந்து தண் என்றது வையம் சொல்லும் மெய்யே-
தாத்பர்யம்
கீழ் பகவத் ஆலாபத்தால் நொந்த -சம்சார அச்சத்தாலே பாதிக்கப்பட்ட ஆழ்வாரை
தலைமகனே ஆஸ்வசிப்பித்த அளவில்
அவற்றில் நெஞ்சு ஊன்றி –
சந்தோஷமாக
பாலை நிலத்தில் நடந்து இழைத்த துக்கம் தீரப்பெற்று
திவ்யதேசங்களைக் காட்டக் கண்டு ஸூகித்த ஆழ்வார்
அவனால் சாத்தி அருளப்பெற்ற திருத்துழாய்
இப்போது குளிர்ந்து ஆனந்தகரமாய் இருக்கக் கண்டு
தெய்வம் அநு கூலித்தால் -அனைத்துமே அநு கூலிக்கும் என்கிற உலக மொழியை
இப்பொழுது யதார்த்தம் என்று அறிந்தோம்
பகவத் அருள் இல்லாவிட்டால் இன்று உள்ள அநு கூல்ய பதார்த்தங்கள் எல்லாம் பிரதிகூலிக்கும் என்றும்
அருள் இருந்தால் துக்கம் தருமவை எல்லாம் ஸூக கரம் ஆகும் என்கிற யதார்த்தம் நன்றாகவே இப்பொழுது அறிந்தேன்
ஜகத் ரக்ஷணத்துக்கு ஸ்ரீ யப்பதியே ஏக ரக்ஷகம் என்றும்
தேவ தாந்தரங்களும் சாதனாந்தரங்களும் ரக்ஷகம் ஆகாவே
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply