ஸ்ரீ திரு விருத்தம் -18–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

(தோழி பாசுரம்
தாய் பாசுரம் என்றுமாம்
அரும்பதம் -சங்கதி சொல்லும்
கீழே தேர்க் காலைக் கண்டு -அழிக்காதே பிரார்த்திக்கும் தலைமைகளைத் தோழி என் என்று கேட்க
இருளிலே பிரிந்தவர் என் சொல்லிப் போந்தார்
வர்ஷா காலத்தில் வருவதாக சொல்லிப் போந்தார்
வர்ஷா காலம்வந்தது அவன் வரவில்லையே என்று வருந்தி கண்ணநீர் பெருகி இருக்க
காலம் மயக்கப் பார்த்து ஆற்றாமையைத் தணிக்கப் பார்க்கிறாள் -என்று
சங்கதி கொண்டு அவதாரிகை அருளிச் செய்கிறார்
பிரளயம் வர கடலை மேகம் பருக -சண்டை கடலுக்கும் மேகத்துக்கும்
பாக்கி உள்ள ஜலத்தை மேகம் கொட்டித்து என்கிறாள்
மீன்கள் போல்வனவற்றுக்கு தண்ணீர் தானே தாரகம் -ஆகவே அன்றி -கோபித்து பின் தொடர்ந்து சென்று
ஆகாசம் கொண்ட நீரைத் திரும்பப் பெற்று
அது ஒழிந்த -மேகத்தில் மீதம் உள்ள நீரை மேகம் மழையாகப் பொழிய -இது -என்று காட்டுகிறாள்
சங்கையாக சொல்லி நம்புவாள் என்று இரண்டையும் சொல்கிறாள்
கடல் கொண்டு -ஒவ்வொரு வரியிலும் -அர்த்தம் கொஞ்சம் மாறுமே )

(சூழ் விசும்பணி முகில் -10-9-இதன் விவரணம்

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

தாத்பர்யம்

பாகவதர்கள் திருமலைக்குப் போகும் போது
தேர் எடுத்துக் போனார்கள்
கீழே
வரவு குறித்த காலத்தில் வராமல் போக -ஆற்றாமை மிக்கு விஷண்ணையாய் இருக்க
ஆஸ்வசிப்பிக்கும் வேறே பாகவதர்கள் –
குறித்த காலம் வரவில்லையே
திருவடி இட்டு அனர்த்தம் நடக்காமல் பரதாழ்வானுக்கு தெரிவித்து ஆஸ்வாசப்படுத்தினாரே
கண்ணும் கண்ண நீருமாக இருப்பவளை அபலாபம் பண்ணும் தோழி
வர்ஷாகால சிஹ்னங்களைப் பார்த்து நாயகி வியாசனப்பட
ஓ ஸஹி உனக்கு கண்ண நீர் வர வேண்டாமே
வர்ஷா காலம் வந்தது என்றால் நாயகன் வந்து இருப்பானே –
ஆகாசத்தில் இருண்டு சஞ்சரிப்பது என் என்று நாயகி கேட்க
நீ பிரமிக்கும் படி மேகம் இல்லை
மேகம் சமுத்திரத்தில் இறங்கி நீரைக் கொண்டு போக
சண்டை போட -அதனால் வந்த மழை
மேகத்தில் சேஷித்த நீர் திவலைகள் நம் மேல் விழும் நீர் என்று
நேராகப் பார்க்கும் ஒன்றை இல்லை என்னும் புத்த மதஸ்தர்
ப்ரத்யக்ஷம் உள்ளதை இல்லை என்றால் நம்ப மாட்டாள் –
ஆகவே பிரளய காலமோ வர்ஷா காலமோ என்று இரண்டையும் சொல்கிறாள்

அவதாரிகை –
துறை கால மயக்கு
(ஏழாம் பாசுரம் போல் கால மயக்கு துறையாகும் இதுவும் ..
அது மழை காலம் தொடக்கம் இது முடிவு )-
இவள் இவள் ஆகியும் ,(அதி பிரவணை )
அவன் அவனாகையும் ,(சர்வ விலக்ஷணன் )
தசை இதுவாகையும்,
இது அல்லது இல்லையே இருந்த படி –
(கால மயக்கு சொல்லா விட்டால் இவள் சத்தையே அழிந்து போவாளே )

திரு மங்கை ஆழ்வாருக்கு சரணம் புக வேண்டும் போலே–
(வந்து உன் திரு அடி அடைந்தேன் என்று தொடங்கி பத்து பாசுரங்களிலும் பத்து விதமாக அருளுகிறார் பெரிய திரு மொழி 1-6-1-
அதுக்கும் மேல் பத்து இடங்களிலே சரணாகதி பண்ணினார் )
இவருக்கு கால மயக்கு வேண்டிய படி –

கீழ் காண்கிற பதார்த்தங்களை அபலபித்து கால மயக்கு ஏற்பட –
இங்கு பதார்த்தங்களை அபலப்பதும் செய்து ,
சாஸ்திர சித்த மானவற்றை முன்னிடுவதும் செய்தது –
மேகத்துக்கும் கடலுக்கும் அன்யோன்யம் விரோதமாய் பிணன்குகிறது காண்-

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-

பாசுரம் -18-கடல் கொண்டு எழுந்தது வானம் -கார்காலம் கண்டு வருந்திய தலைவியைப் பார்த்துத் தோழி இரங்கல் –
சூழ் விசும்பணி முகில் -10-9-

பதவுரை

கடல்கொண்ட–கடலளவினதான-கடலைத் தோற்பித்த-
கண்நீர் அருவி–கண்ணீர் வெள்ளத்தை
செய்யா நிற்கும்–செரிந்து நிற்கிற
காரிகையே–அழகிய நங்காய்!
காரிகைக்கு -பாட பேதம்
கடல் போன்ற விஸ்தாரமான கண்கள் என்றும்
கடலை விஞ்சிய கண்ண நீர் என்றுமாம்
வானம்–ஆகாயமானது
கடல் கொண்டு எழுந்தது–கடலைக் கவர்ந்து கொண்டு கிளம்பியது;
கடல்–அக் கடல் தான்
அன்றி–(அங்ஙனம் தன்னைக் கொள்ளை கொண்ட ஆகாசத்தின் மீது கோபித்து
அ வானத்தை சென்று கொண்டு ஒழிந்த அதனால்–ஆகாயத்தைப் போய்க் கவர்ந்து கொண்டு விட்டதனால்
இது–இந்த நிலை, உண்டாயிற்று;
கண்ணன் மண்ணும் விண்ணும்–எம்பெருமானுடைய உடைமையான மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
கடல்கொண்டு எழுந்த அகாலம் கொலோ ஓ–பிரளய சமுத்திரம் தன்னுள் ஆக்கிக் கொண்டு
மேற் கிளர்ந்த அந்தக் கறபாந்த காலந்தானோ? (அன்றி)
புயல் காலம் கொல் ஓ–மழைக்காலந்தானோ? (அறியேன்.)

கடல் கொண்டு எழுந்த வானம் இத்யாதி —
வானம் –
மேகம் —
மேகமானது கடலை தரையாக பருகி
ஜல சர சத்வங்கள் துடிக்கும் படிக்கு ஈடாய் போகிற கண்டு ,
தம் பிரஜைகள் நோவு பட —
நம் உடைமையை-நேராக கொடு போவதே -என்று தொடர்ந்து
தம் உடைமையை வாங்கிக் கொள்கிறது காண் —

அன்றி-
சீறி-

ஒழிந்த வதனால்
இது-
மேல் விழுந்த துளிகள் என்று என்று காட்ட ,
அவை பிணங்குகிற போது சிந்தினவை காண் இவை-மேகம் பாரார்தமாய் இருக்கையாலே ,
தொங்கினவற்றை கொண்டு உபகரிகிற படி–
பெரிய உடையாரும் ராவணன் யுத்தம் புரிகிற போது ,சகலங்கள் விழுந்தால் போலே

கண்ணன் மண்ணும் விண்ணும் இத்யாதி–
அங்கனே ஆகில் இவ் வெள்ளத்துக்கு அடி என் என்னில்–
சர்வேஸ்வரன் உடைய பூமியும் மேல் உண்டான ஆகாசமும் கடல் கொண்டு போன அக் காலமோ அறிகிலேன்–
பிரளயம் கொண்ட காலம்–

தன்னை விஸ்வசிக்கைக்கு
தானும் அதுவோ ?–இதுவோ ?என்று சம்சயிகிறாள் —
இத் தசை வந்தால் அவன் வரும் என்னும் அத்தாலே–

(தோழி சமாதானம்
மழைக்காலமானால் நாயகன் வந்தே தீருவான்
ஒரு சொல்
பிரளய காலமாக இருந்தாலும் ஏகாகி ந ரமேத என்று
ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள்
உன்னையும் கூட்டியே போவான் )

புயல் காலம் கொலோ அறியேன்-
அன்றியே அவ் வர்ஷா தானோ அறிகிலேன் ..
இவை எல்லாம் வேணுமோ ?இவ் வெள்ளத்துக்கு அடி அறிந்தோம் என்கிறாள் –

கடல் கொண்ட கண்–
கடலை தோற்பித்த கண் —

அத்தை கொள்ளுகை ஆவது
அதன் படி எல்லாம் உண்டாய் இருக்கை ..
தோற்பித்தது என்றும் ஆம்

நீர் அருவி செய்யா நிற்கும்–
இப் பிரளயத்துக்கு அடி கடல் உடைந்தால் போல்  இக் கண்ணில் வெள்ளம் காண்

காரிகையே–
இவை எல்லாம் பொறுக்க மாட்டாத அபலை கிடீர்-

(படர்க்கையாக சொன்னதாகவும்
நீராக சொன்னதாகவும்
சம்போதகம் ஆகவுமாம்
இப்படி மூன்றும் கொள்ளலாம் )

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading