திரு மார்பில் தலை வைத்து உறங்கும் கண்ணனை எழுப்பி உனக்கே அற்று தீர்ந்தவள்- வேதாந்த வாக்கியம் அறுதி இட்ட வார்த்தை சுவாமி அவன் சொத்து நாம் –பரதன் பாரதந்த்ரம் காட்ட பிறந்தவன்..ராஜ்யமும் நானும் ராமனுக்கு அடிமை-அசித் போன்ற பார தந்த்ர்யம்-பகவத் சேஷ பூதம் அனைவரும் அனைத்தும் -பார்த்து பார்யா சம்பந்தமும் கூடினது ஜன்ம ச்த்ரீத்வம் -ஏர் இட்டு கொள்ள வேண்டிய நிலை மற்றவர்களுக்கு அஞ்சு குடிக்கு ஒரு சந்நிதியாய் –விஞ்சி நிற்கும் தன்மையால்— இன்றோ திரு ஆடி பூரம் வான் போகம் தன்னை இகழ்ந்து எமக்காக அன்றோ அவதரித்தாள் –அவளும் நின் ஆகத்து இருப்பது அறிந்தும் –ஆசை விடாளால் பர கால நாயகி -இட எந்தை வல எந்தை திரு கடல் மலை
ஸூகரம் அருளிய ஸூ கரமான உபாயம் – தூ மலர் தூவி தொழுது வாயினால் பாடி -மனத்தினால் சிந்திக்க –போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-தீயினில் தூசாகும்-இதை அருள வந்தவள் கண்ணன் மீது தனக்கு இருந்த காதலும் இவள் பேரில் உள்ள கண்ணன் காதலும் அருள இரண்டு பிர பந்தங்கள் அருளி–முதல் பத்தில் காம தேவன்-மறந்தும் புறம் தொழா மாந்தர் -உபாயாந்தரம் பற்றி கண்ணன் திரு அடி மட்டுமே பற்ற— மாம் ஏக சரணம் விரஜ -நாராயணனே நமக்கே பறை தருவான்-ஏ வகாரம் முக்கியம் –தம் ஏவ சரணம் நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்-சுருக்கி நால் ஆயிரம் சொல்வது -மற்று ஒன்றாலே அவனை அடையாமல் உபாயாந்தர சம்பந்தம் இன்றி -அவனால் மற்று ஒன்றை அடையாமல் பிராப்யாந்தர சம்பந்தம் இன்றி –அவனாலே அவனை அடைவது..ஒன்றே குறி–
அடைய போகும் வஸ்து பெருமையால் எங்கு போயினும் அடையலாம்—அதிக்ரமித்தாலும் வழி அல்லா வழி போய் ஆகிலும் கிட்டலாம்–அனங்கன்-சிவன் எரித்ததால்-கள் அவில் புஷ்பம் பாணம்-கடல் வண்ணன் பெயரை எழுதி கொண்டு-இலக்கு புள் வாய் பிளந்த கண்ணன்–விரோதி நிரசன சீலன் -இவளுக்கு விரக தாபம் தான் விரோதி அதை ஒழிக்க வேண்டும்..
அடுத்த பத்து -சிற்றில் இளைக்கும் கதை அடுத்து துகில் -அடுத்து கூடல் பதிகம்-நாமம் ஆயிரம் ஏத்த நின்ற -கண்ணன் தன காவல் சோர்வால் இவள் காம தேவன் காலில் விழுந்தாள் என்று வெட்கம் பட்டான்–கோவர்த்தன விருத்தாந்தம்-இனியது தனி அருந்தேல்-தானே உண்டானே -முன் இருந்து தான் உண்ண-தேவதாந்திர சம்பந்தம் என்பதால் தவிர்த்தான் -சூடு சுரணை உள்ளவன்-தன தப்பு என்று வந்து நிற்கிறான்-கோபிமார்கள் திரும்பி பார்க்காமல் மணல் வீடு கட்டி விளையாட -நான் இருக்க இன்னும் ஒன்றிலா -தீமை செய்யும் ஸ்ரீதரா -எங்கள் இடம் தப்பு செய்து அவள் இடம் கேட்ட பெயர் வாங்கி கொள்ளாதே–இன்று முற்றும் முதுகு நோவ –சிற்றிலை- நீ ஜகம் சிருஷ்டித்த பொழுது சங்கல்பத்தால்- அழிப்பது தப்பு இல்லை நாங்கள் கஷ்ட பட்டு -முதுகில் வந்து தடவி பரி மாறுவான் என்று –ஒரு கோபி முற்றம் தேடி அவன் வராமல் சிற்றில் இளைத்து மகிழ கதவை சாத்தி உள்ளே இருக்க -வீடு கட்டி -முற்றதூடு புகுந்து -உன் முகம் காட்டி-கதவுக்கும் அந்தர் ஆத்மா தான் என்று -கரந்த சில் இடம் தோறும் -கரந்து எங்கும் பரந்துளன்-புன் முறுவல் செய்து-தூக்கி வந்து இருப்பேன்-குசல பிரசனம் வேற பண்ணி -சிற்றிளோடு எங்கள் சிந்தையும் சிதைக்க கடவையோ கோவிந்தா நின் முற்றம் புகுந்து -திரு பாவை –நினைத்து நினைத்து பரி மாறுவான் ..அவனை சேர்த்து தான் எதையும் செய்ய வேண்டும்..சீதை பிராட்டி அம்மான் இருக்க அம் மானை நினைத்தது தவறு–10 மாதம் பிரிவு..பாகவத அபசாரம் பின்பு பிரிந்தது -லஷ்மணன் இடம் சுடு சொல்–பெரிய பிரிவு..சிந்தை உன்னை தவிர வேறு ஒன்றை அனுபவிக்க இருந்ததையும் அழித்தான்
கோழி அழைப்பதன் முன்னம் -தோழியும் நானும் தொழுதோம் துகிலை -குருந்திடை கூறை பணியாய்–கூடாரை வெல்லும் சீர் –ஆடை உடுப்போம் -உன் தன்னை பாடி ஆடை உடுப்போம் கோவிந்தா -இந்த நாமம் கொண்டு தான் புடவை சுரந்ததாம் நாமம் சொன்னால் இல்லாத புடவை சுரக்கும் அவன் இருந்தால் இருந்த கூறை போகும் நா வாயில் உண்டே -ஏத்தும் பொழுது உண்டே –பேர் ஆயிரம் கொண்ட பீடு உடையான் -திரு நாம சங்கீர்த்தன மகிமை..-தன்னை தாங்கள் காப்போம் என்கிற எண்ணம் கூடாது தோழியும் நானும் தொழுதோம்–அவன் கை பார்த்து தான் இருக்க வேண்டும்-இரு கையும் விட்டேனோ திரௌபதி போலே –ஆயிரம் ஆண்டு தேவ மானம் கழித்து தானே கஜேந்த்ரனை ரஷித்தான்-கால் அழுந்த உடல் அழுந்த துதிக்கை மட்டும் இருக்கும் பொழுது தானே ஆதி மூலமே -கையுள் நன் முகம் வைக்கும்–என் கையை என் முகத்தில் வைப்பதும் கூடாது கை பிடித்த மணவாளன் எம்பெருமானே ரட்ஷகன் என்ற எண்ணம் வேண்டும்..-சீதை பிராட்டி-வாலில் நெருப்பு சுடாமல் இருக்க பண்ணி- இலங்கை எரித்து தப்பி இருக்கலாமே -ராமன் கை ஒன்றையே எதிர் பார்த்து இருக்க வேண்டும்..-சொல்லினால் சுடுவேன் வில்லுக்கு மாசு-என்பதால் விடுவேன்–சாஷ்டாங்க பிரமாணம்-தலை 2கால்2 கை புத்தி -மனசு-அகங்காரம்-ஆக எட்டும் –கோலம் கரிய பிரானே கயலோடு வாளை-இரண்டு மீன்களும்-கஜேந்த்ரனுக்கு முதலை -இங்கு அநாதி காலம் அங்கு 1000 இங்கு அபலைகள் ஐந்து இந்த்ரியங்கள் தெளிவில்லா அளவில்லா சிற்று இன்பம்-உன்னாலே துன்பம் படுபவரை ரட்ஷிக்க மாட்டாயா –முதலையால் வந்த துன்பம் தான் துடைப்பாயா -அவன் அணிந்தால் அழகே இருக்கிறது குருந்திடை கூறை கிளையிலும் மரத்திலும் கட்டி வைத்த கூறை போதும்-ஒருவர் கூறை ஒன்பது பேர் சுற்றி வருவோம்..-காளிய தமன்-ஷீர் கரணம் கூறை பறித்த இடம் இன்றும் குரங்குகள் பல உண்டு இங்கு –இன்றும் சேவிக்கலாம் ராச கிரீடை இடம் பார்க்க வேண்டியது
கூடிடு கூடலே அசேதனம் காலில் விழுந்து..சோலி-வைத்து -காட்டில் வேம்கடம் –பூத்த நீள் கடம்பேறி-கூத்தனார் வந்து கூடிடில் கூடலே..பூமி பிராட்டி அசேதனம் காலில் விழுவதா –பூத்த நீள் கடம்பு ஏறி-கருடன் கொண்டு வந்த அமிர்தம் சொட்டு விழுந்ததால்- கண்ணன் திரு அடி வைத்ததால்-
ஆயனுக்காக தான் கண்ட கனவு–வாரணம் ஆயிரம்-திரு வேம்கடம் உடையான் திரு மஞ்சனம் பொழுது நாச்சியார் திரு மொழி அனுசந்தானம் உண்டு–பிரிந்த தாயார் விரக தாபம் தீர்த்து கொள்ள -ஐதீகம் எம்பெருமானார் செய்த முறை–ஆயிரம்வாரணம் சூழ வளம்-பசு மாடு கன்று தானே -ஒரு பிறவியில் இரு பிறவி ஆனவர் இவர்-வசு தேவர் சொத்தும் உண்டே-யானைகளும் உண்டு–பதினாறாயிரம் பிள்ளைகள் -பரமம் சாம்யம் உபதி சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே–தனக்கு நிகராகா -சாம்யா பத்தி மோட்ஷம் -எட்டு கல்யாண குணங்களிலும் சாம்யம்-நாளை வதுவை-இன்று இல்லை பத்து நாள்கள் கழித்து இல்லை-விரக தாபமோ சந்தோஷமோ அதிகம் கூடாது–மலையாள ஊட்டு போல் ஆழ்வார் நிறைய பாசுரங்கள் சேர்ந்தும் பிரிந்தும் அருளுவார்-சாத்மிக போக பிரதானம்-செம் கண் சிறு சிறிதே எம் மேல் விழியாவோ–நேராக பரதன் முன் குதிக்காமல் பரத்வாஜ ஆஸ்ரமம் இரங்கி அடுத்த நாள் போனானே-கோளரி மாதவன் கோவிந்தன்-மேனானிப்பு தோன்ற நடந்து வந்தான்-இதை ஸ்ரீ தேவி இடம் கற்று வந்தான் மாதவன்-உள்ளே வந்ததும் கோவிந்தன் எளியவன்-அனைவர் இடமும் பழகி-என்பானோர் காளை புகாத கனா கண்டேன் தோழி நான்–மதுரையார் மன்னன் -புது பெயர் கொடுத்து இருக்கிறாள் ஆண்டாள் –அதிர புகுத்த கனா கண்டேன் தோழி நான்-வாமன மூர்த்தி கால் நடுங்க -வாங்கி பழக்கம் இல்லை செய்யாத கார்யம் செய்ததால்-பூமி கிடைக்குமா பதட்டம் இங்கு பூமி பிராட்டி-அதிர -புனிதனாய் -குளித்துவிட்டு வந்தவன்–கார்த்திகை கார்த்திகை நாள் உடம்பு இருக்க தலைக்கு குளிப்பார்கள் இடையர்கள் இவன் அன்றும் குளிக்க மாட்டான் தலைவன்-ஆச்சர்ய சீலர் பெரி ஆழ்வார் என்றதால் -கும்பன் இடையன் ஜனகன் இஷ்வாகு வம்சம் ஆசை பட்டது போல்–கை தலம் பற்ற -வாயும் நல மக்களை பெற்று மகிழ்வரே-திரு கல்யாணம் போல் நல்ல பதியும் புத்ரனும் பெரி ஆழ்வார் போல் பக்தன் பிறப்பான்-அதர அமுதம் எப்படி இருக்கும் -சங்கரையா உன் செல்வம் சால அழகியதே -வாய் சுவை நாற்றம்-கற்பூரம் நாறுமோ-கமல பூ நாறுமோ–வெண் சங்கே சொல்–கடலில் பிறந்து கருதாது -கை தலத்தில் குடி ஏறி- தேவி மார் பார்த்து இருப்ப பொதுவாக உண்பதை -சிதையாரோ-கையது வாய் அதுவாக —கண்ணாலம் கோடித்து -ஆங்கு அவளை கை பிடித்த –வைதிக காமம்-ஆண்டாள் -கொண்டது அதனால் தான் ருக்மிணி இருப்பதால் பேசி சேர்த்து வைப்பாள் –கை பிடித்தபென்ணாளன் பேணும் ஊர் அரங்கமே
மதுரை புரம் உய்த்திடுமின்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் பீதக வண்ண ஆடை வீச சொல்லி ..பட்டி மேய்ந்த கார் ஏறு -பல தேவர்க்கு ஓர் கீழ் கன்று இட்டீர் இட்டு விளையாட –இட்டமான பசுக்களை இனிது மறுத்து நீர் ஊட்டி விட்டு கொண்டு விளையாட -விருந்தாவனத்தே கண்டோமே-மாலாய் பிறந்த நம்பியை – மாலே செய்யும் மணாளனை –ஏலா பொய்கள் உரைப்பானை–வினைதை சிறுவன் சிறகில் கண்டோமே –வன் துவாரபதி மன்னனை மருந்தாய் வைத்து இருப்பவர் பெரும் தாள்கள் விட்டு பிரியாமல் வாழலாம்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன் எசோதை இளம் சிங்கம்–மாயனை தாமோதரனை செப்பு–ஐந்தாம் பாசுரம்-நாயகனாய் -மாயன்மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான் ஸ்வாமி எம் காலில் விழுந்தான் நாங்கள் உன் காலில்விழுந்து இருக்கிறோம் இன்று–அம்பரமே நந்தன் எழுந்திராய் யசோதா அறி உறாய்-கட்டிலையும் தொட்டிலையும் -பிடித்து கொண்டு–எல்லாம் அசுர வேஷம் அதனால் முதலில் நந்தன்–அனிருதனை கட்டிலோடு தூக்கி போனார்களே -நப்பின்னை பிராட்டி தொழுது-எழுப்புகிறாள் நரசிம்கன்-யாதவ சிம்மம் பற்றி நடை அழகை பாடுகிறாள் மாரி மலை பாசுரத்தால் -உன் தன்னை பெற்றோம் உண்ணாத நீ பிறவாத நீ பிறந்தாய் அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -கொள்ளாமல் போகாது -மற்றை நம் காமங்கள் மாற்று–அநுகாரம் பண்ணி தருகிறாள் பட்டர் பிரான் கோதை சொன்ன -எங்கும் திரு அருள் பெற்று இன்புறுவர் –மல்லி நாடு ஆண்ட -ஸ்ரீ வில்லி புத்தூர் மல்லி நாடு -கேசவ நம்பியை கால் பிடித்து அனுபவித்தாள்
————————————————————–
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Like this:
Like Loading...
Related
This entry was posted on August 22, 2011 at 12:27 am and is filed under Aandaal, Acharyarkall, கிருஷ்ணன் கதை அமுதம், திருப்பாவை, நாச்சியார் திருமொழி, Kannan, Prabandha Amudhu, Tamizl. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply