(கீழே பகவத் விஸ்லேஷம் பிரஸ்த்துதமானதே விஸ்லேஷத்தில் அனைத்தும் நலிய-
ஜகத்தில் பொருந்தாமல் –
மல்லிகை கமழ தென்றல் -9-9-போல்
தலைவி இரவி வியஸனம் துறை இது
இரவை விவரித்து பாசுரம் )
(மல்லிகை கமழ தென்றல் -9-9-இதன் விவரணம்
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-மாலைப்பூசல் பதிகம்
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-)
——————-
அப்பிள்ளை உரை
ஆஸ்வாசம் ஏற்படுத்தும் பகலை அப நோதித்து- தள்ளி
அந்தகாரம் வந்து நலியா நின்றது
இந்த தசையில் வாடையால் வந்த நலிவைத் தவிர்த்து
நமக்கு ரக்ஷகராவார் யாரோ என்கிறாள்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
நக்ஷத்ராதிகளை அடர்த்து வளரா நின்றுள்ள செங்கோலை நடத்தும்
வேறே தேஜஸ் பதார்த்தங்கள் இவன் சந்நிதியில் ஒளி விடாவே
தானே உஷ்ணத்துக்கு ராஜா என்று இருக்கும் ஆதித்யன்
வளரா நின்றுள்ள செங்கோலை நடத்துகிற உஷ்ண கிரண ராஜா
கொஞ்சமாக ஒளி இல்லாமல் மட்டும் இல்லாமல் முழுவதுமாக அவிந்து போக -நசிக்க –
அஸ்தமித்த பின்பு
பனி வளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
அரசர் சிறிது அந்தகார சந்த்ராதிகளை அடர்த்து கொண்டு போனது போல்
துக்கத்தை மிகப் பண்ணா நிற்கும் அந்தகாரமானது
ஆதித்யனும் போய்
பிரதிபக்ஷமே இல்லாமல்
தனது வேண்டற்பாடு தோன்ற பூமியைத் தனக்கு இருப்பிடமாக்கிக் கொண்டதே
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
துக்கம் வளர்க்கும் காதலை விளைக்கும் திருத்துழாயை அளைந்து கொண்டு
கந்தத்தை முகந்து வரும் வாடையை இரு துண்டமாக்கி
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே
இப்படி நான் சிதிலமாகி உள்ள தசையில்
எனது சைத்தில்யத்தைப் போக்கி ரஷிப்பார் உண்டோ
பாதகமான இவை எத்தனை காலம் ஈருமோ
————
அவதாரிகை –
1-ஆஸ்வாச கரமான காலம் போக்கையும் ,
2-பிரதி கூலமான காலம் வருகையும் ,
3-அதற்கு ஸஹ காரிகள் குவாலா லாகையும்
4-ரஷகன் வாராது ஒழிகையும்
முடிந்தோம் இறே என்கிறாள் .
பகல் பதார்த்த தர்சனம் பண்ணி ,இந்த்ரியங்கள் அந்ய பரம் ஆகையாலே ,
தரித்து இருக்கலாம் –
ராத்திரி எல்லாம் ஒக்க ,உபரதமாய் ஒரு மடப் படுகையாலும் ,
சம்போக யோக்யமான காலம் ஆகையாலும்
தரிக்க ஒண்ணாது
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-
பாசுரம் -13-தனி வளர் செங்கோல் நடாவு -தலைவி பிரிவு மேலிட இருளுக்கும் வாடைக்கும் இரங்கல் –
மல்லிகை கமழ தென்றல் -9-9-
பதவுரை
தனி வளர்–ஒப்பில்லாமல் வளருந்தன்மையுள்ள
செங்கோல்–(தனது ஒளியாகிய) அரசாட்சியை
நடாவு–(எங்கும் தடையின்றிச்) செலுத்துகிற
தழாய் வாய் அரசு–உஷ்ணத்துக்கு வாய் ஸ்தானமான வெப்பம் வாய்ந்த ஸுர்யனாகிய அரசன்
அவிய–ஒழிய
பனி வளர் செங்கோல் இருள்–(ஜனங்களுக்கு) நடுக்கத்தைச் செய்கின்ற ஆட்சியையுடைய இருளாகிய சிற்றரசு
பார் முழுவதும்–பூமி முழுவதும்
வீற்றிந்தது–அரசு வீற்றிருந்தது;
இனி–இனி மேல்,
நுனி வளர் காதல்–துன்பத்தை அதிகப்படுத்துகிற என் ஆசைக்கு இலக்கான
துழாயை–(தலைவனது) திருத்துழாய் மாலையை
துழாவு–அளைந்து வருகிற
தண் வாடை–குளிர்ந்த காற்றை
தடிந்து–தண்டித்து (அழித்து)
வளை–(பிரிவாற்றாமையால் மெலிந்த எனது கைகளினின்று கழன்று விழத் தொடங்கின) வளைகளை
காப்பவர்–கழல வொட்டாது தடுத்துப் பாதுகாப்பவர்.
ஆர்–யாருளர்?
(எவருமில்லை.)
ஊழிகள்–(கற்பக வடிவங்கொண்ட இராத்திரிகள்
எனை–என்னை
ஈர்வன–பிளக்குந்தன்மையுடையன.
தனி வளர் செங்கோல் நடாவு –
பாவியேன் பர பஷம் பட்டது என்கிறாள்
ராத்ரியிலே சந்திரனும் நட்ஷத்ரங்களும் கூட செலுத்தினது எல்லாம் தானே ,
தானே ராத்ரியை போல,சத்தா நாசம் பண்ணி செலுத்துகை அன்றியே..
எதிரிகளும் நிற்கச் செய்தே அசத் கல்பமாம் படி தேஜஸ்ஸாலே அமுக்கி செலுத்துகை ..
குருந ப்ரச்சாதையா நஸ்ரியா —
(சூரியோதயம் ஆனதும் நக்ஷத்திரங்கள் ஒளி இல்லாத படி
அந்த பரபக்ஷம் ஒன்றுமே எழும்பாமல் உள்ள –
இவை இருக்கவே மின்மினி போல் ஆக்கிற்றே
அதே போல் இரவில் இது இல்லாமலே போனதே
அத்தைச் சொல்லவே இது இங்கு
குருந ப்ரச்சாதையா நஸ்ரியா —
கிருஷ்ணன் தனது காந்தியால் பீஷ்மாதிகளின் ஒளி மங்கிப் போனது போலே
சந்த்ரவம்சன் -ஸூர்ய குணம் கொண்டு அடக்கியது போல் )
செங்கோல் நடாவு-
மனு மாந்த்தாதாக்களை போல
தழல் வாய் அரசு அவிய –
அநபிபவநீயன் கிடீர் இப்படி பட்டான்
அரசு-
ஏக வீரன்
அவிய –
விளக்கு அவிந்தார் போல-
ஒண் சுடரோன் வாராது ஒழிந்தான் -என்னும் தசைக்கு
அவ் அருகே இருந்தபடி
விடியக் காணாமையாலே இவன் முடிந்தான் என்கிறாள்
பனி வளர் செங்கோல் இருள் வீற்று இருந்து –
குளிர்ச்சியை வளரா நின்று உள்ள செங்கோலை உடைய ராத்திரி
பூமி பரப்பை அடங்க தனக்கு இருப்பிடமாக கொண்டது
ராஜ்ஜியம் பண்ணின ராஜா முடிந்தால்
வேற ஒரு ராஜா புகுருமா போல
புதுக் கோமுற்றாரை கண்டால் நடுங்குமா போல வீற்று இருந்தது
ஆதித்யன் ராஜ்ஜியம் இத்தனையும் ,ராத்ரிக்கு அழகு ஓலக்கம் இருக்க போந்த இத்தனை
(பனி குளிர்ச்சி நடுக்கம் இரண்டு அர்த்தம் உண்டே )
வீற்று இருந்து –
இனி எதிரிகள் இல்லை என்னும் படி இருந்தது
பனி வளர் செங்கோல் வீற்று இருந்து –
அரைகளிலே ஒளித்து கிடந்தார் புறப் படுமா போலே
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து-தினி வளை காப்பவர் ஆர்–
துக்கம் வளரா நின்றுள்ள காதலை உடைத்தான துழையை
துழாவி வருகிற குளிர்ந்த வாடையை
இரு முறியாக வெட்டி
இனி வளையை காப்பவர் ஆர் ?
தண் வாடை அமூர்தம் மூர்த்தம் ஆகிற படி பாதகத்வத்தில் உறைப்பு
(வளை -கற்பு நிறை ஆழ்வார் )
இனி வளை காப்பவர் ஆர் ? –
வந்து கிட்டுவது காணும் என்று இருக்கிறாள்
எனை வூழிகள் ஈர்வனவே —
அநேகமான கல்பங்கள் ஈரா நின்றன –
ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது-
————
தாத்பர்யம்
ஆழ்வார் தமக்கு சம்சாரம் அஸஹ்யமான படியை –
காலம் குறித்துப் போன சமயத்தில் வருவதாகச் சொன்ன நாயகன் வாராமையைக் கண்டு
வருந்தி உரைத்த நாயகியின் பாசுரத்தால் பேசுகிறார்
பகல் காலத்தில் சூர்யன் நக்ஷத்ரங்களும் சந்திரனும் மறையும்படி
தனது கிரணங்களை வியாபிக்கச் செய்து ஸகல பதார்த்தங்களையும் பிரகாசிப்பிக்க
அவற்றைப் பார்த்துக் கொண்டு காலம் போக்கினோம்
இரவில் ஸூர்யனும் அஸ்தமித்து இராத்திரி பிரவேசித்தது
இருள் மண்டிற்று
குளிர் நடுங்கத் தொடங்கிற்று
இருள் பதார்த்தங்களை எல்லாம் மறைத்ததே
இதுக்கு மேல்
நான் ஆசைப்பட்ட திருத்துழாய் வாசனையை அளாவி வந்து வாடைக்காற்று
என்னை நலிந்தது -பாதியா நின்றது
இதனால் என் சரீரம் இளைத்து வளையல்கள் கழன்று போகவே
கழல் வளை கழலும் வளையானவே
நாயகனோ வரவில்லை
எனக்கு பாதகங்களான இவைகளைப் போக்கி நாயகன் வந்து ரக்ஷித்து அருளுவது எப்போதோ என்கிறாள்
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply