ஸ்ரீ பாஷ்யம் சாரம் -முதல் இரண்டு அத்தியாயங்கள்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 ஸ்ரீ பாஷ்யம் அறிந்து கொண்டு பேசணும் ..பகவத் விஷயம் தெரிந்து எடுத்து சொல்லணும்

 போன்ற ஆறு கட்டளைகள்

பாஷ்யத்தோன் ஈடேற பார்வை செய்தான் வாழியே-ஆள வந்தார் கடாஷித்து -இளைய ஆழ்வாரை -ஆ முதல் அப்பன் இவன்
-கச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தான் வாழியே -தேவாதி தேவனையும் பிரார்த்தித்து சம்ப்ராயததுக்கு ஆக்கி தர வேண்டி கொண்டார்..
 ஆறு வார்த்தை பூதாராருக்கு அளித்தவன் வாழியே -திரு கச்சி நம்பி அருளால் கண்டு –  கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி-
தான் உகந்த திரு மேனி ஆபரணங்கள் இன்றி திரு மஞ்சனத்தில் சேவித்து கண் பெற்ற பயன் பெறலாம் /வேத மார்க்க பிரதிஷ் டாசார்யர்..

மூன்று விரல் மடங்கி..ப்ரஹ்ம சூத்ர உரை// பராசர மக ரிஷி பெயரையும் //நம் ஆழ்வார் பெயரையும்// வைக்க  .
. சூழ் உரைத்ததும் விரல் மடங்கித்தாம்….திரு குருகை பிரான் பிள்ளான்- ராமனுஜரின் அபிமான புத்திரன்  என்பர் /
 /பராசர பட்டார் //உபய வேதாந்தம் -விளக்க ஸ்ரீ பாஷ்யம்.. கூரத் ஆழ்வானை வைத்து அருளினார்..
யுகங்கள் நான்கு..கிருத/ துவாபர -யுகத்தில் வேத வியாசர் -பட்ட பெயர் -பாராசரர் -பராசர மக ரிஷி பிள்ளை .
பிரம்மா-.வசிஷ்டர் -சக்தி-பராசர்- வியாசர்- சுகர் –வேதங்களை பிரித்து கொடுத்தார்..நாத முனிகள் அருளி செயலை பகிர்ந்து அருளியது போல..
/ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் -சூதரம் -எழுத்துகள் குறைவு அர்த்தம் அதிகம்../
/தருவித்து கொண்டு..வேதம் பிரித்து கொடுத்து என்ன சொல்ல வந்தது என்று சொல்ல அருளினார்..பலர் அர்த்தங்கள் திரித்து சொல்ல .
.தகுந்த அர்த்தம் அருள ஆதி சேஷனை 200 வருஷம்/ ராமானுஜரும் மா முனிகளும்../
அரவரச பெரும் ஜோதி அனந்தன் ..-தூண்டு கோல் போல ஆளவந்தாரும் திரு கச்சி நம்பிகளும்
/இன்புறும் இவ் விளை ஆட்டு உடையவன் ..//வியாசர் காலத்தில் அவர் இடமே கேட்டு அருளிய  போதாயன விருத்த கிரந்தம்

ஸ்ரீ பண்டாரம் -காஷ்மீரில் -போதாயன குறிப்பை-சாரதா தேவியே எடுத்து கொடுக்க ..அத்வைதிகள் பறித்து கொண்டு போக.
–தனத்தை இழந்த வருத்தம்..- கூரத் ஆழ்வான்-நினைவில் எல்லாம் கொள்ள —

ஜைமினி பூர்வ மீமாம்ச= பூஜ்ய விஷய விசாரம்..16 அத்யாயம் கர்ம பகுதியை..-பர தேவதை -மேம் பட்ட தேவன்
அவனை  அண்டியவர்களையும் தன்னை போல பெரியவன் ஆக்குபவன் …/தனி மா தெய்வம் –சாம்யா பத்தி  மோஷம்
-சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம்-பின் பகுதி வேதாந்தம் உபநிஷத்..முதலில் கர்ம பாகம் அறிந்து -பின்பு பிரம விசாரத்துக்கு வருவார்கள்..

நான்கு அத்யாயம் //16 பாதங்கள்//  156அதிகரணம் // 545சூத்திரம் –
-555சங்கரர் வ்யாக்யானத்தில்   //மத்வர் வ்யாக்யானத்தில் //கிடம்பி ஆச்சான் கொண்டு போய் கொடுக்க
சாரதா தேவி வியாசர் உள்ளத்துக்கு ஏற்புடைத்து என்று ஸ்ரீ பாஷ்யம் பெயர் கொடுத்தால் ஞான பிரான் ஹயக்ரீவர் அருளினாள்/
/சமன்வயா அத்யாயம் முதல் அடுத்து …. //சித்தத்விகம் இரண்டும்–  அடுத்து  இரண்டும் -சாதத்விகம் சாதனா  அத்யாயமும்  பலா அத்யாயம்.
.சோம்பரை உகத்தி போலும்- மதி விகற்ப்பால் பேசுவார்கள் ..நாரணன் என்று -உயிரை   உடையவன் சுவாமி என்று அறியாமல்- 
கலி இருளே ஆக்ரமித்ததால்- ராமனுஜன் போராடி- நாட்டி வைத்தார்..சுடர் ஒளியால் இருட்டை விரட்டினார்.. வேதமே விளக்கு –ப்ரஹ்ம ஜகத் காரணம் -அணுவே.. அசித் ..ஆத்மா .. சிவன் ..வருணன்.. பிராண வாயு தான் காரணம்  /முழு முதல் காரணம் அவன் தன அறுதி இட்டார்.. அடுத்த அத்யாயம்-விரோதி நிரசனம் பிரமமே- கரணம்..அந்ய யோகம் விலக்கி..அவிரோத அத்யாயம்.. //முயற்சி-வழி-
சாதனா அத்யாயம் மூன்றாவது– கர்ம ஞான பக்தி யோகம் -உபாசன மார்க்கம் –
-காலை மாலை கமல மலர் இட்டு-மால் கொள் சிந்தையராய் ஆட்டம் .சரவணம் ஆத்மாசமர்ப்பணம்  -நவ வித பக்தி..

அழகும் உணங்களும் உண்டே உபாசனதுக்கு ..மனசால் சிந்திக்க கை தொழ வாய் பாட சுவாமிகளையே /பல அத்யாயம்  நாலாவது
–முக்தி -வைகுண்ட பிராப்தி -பரம புருஷார்த்தம் அனுபவ ஜனித பிரிதி உந்த கைங்கர்யம் /
பாபங்களை தொலைத்து அர்ச்சிராதி மார்க்கம் -12 லோககங்களை கடந்து ஆதி வாகர்களை வைத்து கூட்டி கொண்டு.
.முடிவில் பெரும் பாழ் கடந்து- விரஜா நதி -குளித்து அமானவன் கைச்பர்சம் பட்டு அப்ராக்ருதமான சாரூப்ய மோஷம் பெற்று..

கதி பாதம்/ பிராப்தி பாதம் கடைசியில்.//.ஸ்வரூப ஆவிர்பாகம் பெறுகிறான் ../அழுக்கு கழிந்த மாணிக்கம் போல ஒளி பெறுகிறான்
../ஞான மயன் ஆனந்த மயன் ..அஹம்  அன்னம் –நா வர்தந்தே – விஷய வாக்கியம் -பூர்வ பஷி வாதம் சொல்லி  சித்தாந்தம் நிரூபணம்.
.திரும்பி வந்தால் என்ன பண்ணுவது அப் பொழுது ஓர் சிந்தை செய்து -வாதில் வென்றார் எம் ராமனுஜன் மெய் மதி கடல்../
/இவனா திரும்புவானா அவன் அனுப்புவானா பதில் கேள்வி கேட்டு..அந்த அனுபவம் பெற்ற பின்பு
-முயற்சி பல எடுத்து அடைந்த அந்த அனுபவம் பெற்ற பின்பு/ சத்ய வாக்யன்– அனுப்ப மாட்டான்
நச புன ஆவர்ததே-முடித்தார்-இது சர்வம் சமன்ஜயம் முரண் பாடுகளை முடித்து ஒருங்க வைத்தார் ..

சேஷி-ஸ்ரீ ரெங்க விமானத்திலே தரிசித்து கொள்ளலாம் பிரணவத்திலும் ஸ்ரீ பாஷ்யத்திலும் கண்டு கொள்ளலாம்./ஞான முத்தரை வாழியே .
————————

சகல வேத சங்க்ரஹமான திரு மந்திரத்தில் பாத த்ரயத்தால் ஜீவாத்மாக்களுடைய -அநந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரணத்வ -அநந்ய போக்யத்வ ரூப
ஆகார த்ரயம் சாப்தமாக ப்ரதிபாதிதம் -பரமாத்வானுடைய சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் ஆகிற ஆகார த்ரயம் அர்த்தமாக கிடைக்கும் –
ஆவேச அவதாரம் -ஸ்ரீ வேத வியாசர் அத்யாய சதுஷ்டயாத்மகமான சாரீரிக மீமாம்சக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்தியாயங்களில் பர ப்ரஹ்மத்தை
ஜகத் ஏக காரணமாயும் -சேதன அசேதன விலக்ஷணமாயும் சர்வ சேஷியாகவும் அறுதி இட்டார் -இதுவே பிராணவார்த நிரூபணம்
மூன்றாம் அத்தியாயத்தில் ப்ரஹ்மமே உபாயம் -என்று அறுதி இட்டார் -இதுவே நமஸ் சப்தார்த்த நிரூபணம் –
நான்காம் அத்தியாயத்தில் பர ப்ரஹ்மம் பிராப்யம் என்று அறுதி இட்டார் -இதுவே த்ருதீய பதார்த்த நிரூபணம்
காரணத்வமும் –அபாத்யத்வமும் -உபாயத்வமும் -உபேயத்வமும்-இ றே அத்யாய சதுஷ்ட்யார்த்தம் –
மற்று ஒரு சம்சாரியை தஞ்சமாக பற்றுவது ஓட்டை ஓட்டத்தோடு ஒழுகல் ஓடமாகும் அத்தனை
ப்ரஹ்மமே ஜிஞ்ஞாஸ்யம் -உபாஸ்யம் -சரண்யம் -என்று சித்தாந்தம் -காரணந்த்யேயா / யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே –
என்கிற வேதாந்த கோஷத்தையே ஸ்தாபிக்கவே ஸ்ரீ வேத வியாசர் திரு அவதாரம் -ஸ்ரீ பராசரர் -ஸ்ரீ மத் சத்யவதி —
-4-அத்தியாயங்கள் /-16-பாதங்கள் / -156-அதிகாரணங்கள் /-545-ஸூ த்ரங்கள் -உத்தர மீமாம்சை என்பர் -ப்ரஹ்ம விசாரம்
ஜைமினி -பூர்வ மீமாம்சை -16-அதிகாரங்கள் –/-12-கர்ம விசாரம் -4-தேவதா விசாரம் /
இரண்டும் ஒரே சாஸ்திரம் –
ஆராதன விசிஷ்ட –ஆராத்யன் -பர ப்ரஹ்ம சப்த வாச்யனான ஸ்ரீ மன் நாராயணன் – ஒரே அர்த்தம் இந்த சாஸ்திரம் சொல்லும்
பூர்வ காண்ட யுக்த கர்மங்களுக்கு அங்கி காட்ட உத்தர காண்டமும் -உத்தர காண்ட யுக்தமான ஞானம் ஆகிற அங்கிக்கு அங்கம்
பூர்வ காண்டமும் சொல்லுவதால் கர்ம அங்ககம் ஞானம் உபாயம் -சொல்லும் ஒரே சாஸ்திரம்

இத்தையே வித்யாம் ச அவித்யாம் ச -யஸ்தத் வேத உபயம் ஸஹ -அவித்யயா ம்ருத்யும் தீர்த்தவா வித்யயா அம்ருதம் அஸ்நுதே -உபநிஷத் வாக்யார்த்தம்

இதற்கு அத்வைதிகள் -தீர்த்தவா -அடைந்து என்கிற பொருளில் -வியாக்யானம் -கர்ம ஞானங்கள் பரஸ்பர விருத்தங்கள்
-கர்மம் பேத அவலம்பி / ஞானம் அபேத அவலம்பி /ஆகவே சாஹித்ய அனுஷ்டானம் -ஒரு சேர இருக்க முடியாதே என்பர்

யாதவ ப்ரகாசன் -இதற்கு -ஞான கர்மங்கள் சம பிரதான உபாயங்களாக ஞாதவ்யங்கள் -உபாயமும் இரண்டு
-கர்மமும் ஞானமும் -உபேயமும் இரண்டு -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
-அநிஷ்ட நிவ்ருத்தி ரூப பலத்துக்கு உபாயம் கர்மம் -இஷ்ட பிராப்தி ரூப பலத்துக்கு உபாயம் ஞானம்

ஆனால் தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயநாய வித்யதே -என்கிற வேத வாக்யத்துக்கு விரோதம் வருமே
அநிஷ்ட நிவ்ருத்தி தன்னடையே இஷ்ட பிராப்தி சித்திக்கும் -ஒரே உபாயம் -அங்க அங்கி பாவேந சாஹித்யமே ஆதரணீயம்

பாஸ்கரனும் அங்க அங்கி பாவத்தை அங்கீ கரித்தாலும் -அவன் கர்மத்தை ஞான உத்பாதகத்வேன அங்கம் என்று அங்கீ கரிக்காமல்
உத்பன்ன ஞானத்துக்கு அநுக்ராஹம் என்றான் –
கர்மம் ஞான உத்பாதகம் என்றும் -உத்பன்ன ஞான வர்த்தகம் என்றுமே ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம்

————————–

நான்கு அத்தியாயங்களையும் –விஷய த்விகம் அல்லது சித்த த்விகம் -என்றும் விஷயீ த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் என்றும் இரண்டு கூறாகப் பிரிப்பார்கள்
சித்த வஸ்துவைப் பற்றி பூர்வ த்விகமான முதல் இரண்டு அத்தியாயங்களும் விஷய த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் /
மூன்றாவது அத்தியாயத்தில் ப்ரதிபாதிதமான பக்தி ரூப ஞானமும் / நான்காவது அத்தியாயத்தில் ப்ரதிபாதிதமான ப்ரஹ்ம அனுபவ ரூப ஞானமும்
விஷயியாயும் சேதன யத்ன சாத்யமாயும் உள்ள படியால் விஷயீ த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் என்பர் –
-16-பாதங்களும் –16-கல்யாண குணங்களையும் காட்டி அருளுகிறார்
-1-ஸ்ரஷ்டா/ -2-தேஹீ /-3-ஸ்வ நிஷ்ட –அநந்யதாரான / -4-நிரவதி மஹிமா / -5-அபாஸ்த பாதா / -6- ஸ்ரீரித ஆப்த -பஞ்ச கால பராயணர்க்கு ஆப்தன் /
-7-காத்மாதே உசித ஜனன க்ருத் –ஆகாச ஜீவர்களுக்கு ஸ்வரூப விகார -ஸ்வபாவ விகார ரூப ஜனன கர்த்தா –
-8-இந்திரியாதே உசித ஜனன க்ருத் -இந்திரியங்களை உண்டாக்குமவன் /-9-ஸம்ஸ்ருதவ் தந்த்ரவாஹீ-ஜாக்ரதாத் அவஸ்தா நிவாஹகன் /
-10-நிர்தோஷத்வாதி ரம்ய-அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணைகதாநன் /-11-பஹு பஜன பதம் –நாநா வித வித்யா உபாஸ்யன்
-12-ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய -வர்ணாஸ்ரம ஆசாரத்தாலே திரு உள்ளம் உகப்பவன் –
–13- பாபாச்சித் -வித்யா நிஷ்டர்க்கு உத்தர பூர்வ பாபங்கள் அஸ்லேஷ விஸ்லேஷ கர்த்தா
–14-ப்ரஹ்ம நாடீ கத்தி க்ருத்-ஹார்த்தனான பகவானுடைய அருளாலே ப்ரஹ்ம நாடீ பிரவேசம் -ஸ்தூல தேஹ யுக்தனுக்கு ஏற்படும் பலம்
–15-அதி வஹன்-அர்ச்சிஸ் முதலான ஆதி வாஹிகர் மூலம் ஜீவனை உபசரிக்குமவன்
-16-சாம்யதா –நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் -அனுபவ ஜெனித ப்ரீதி-ப்ரீதி காரித
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தா உசித அசேஷ கைங்கர்யம் –
அதிகரண சாராவளி ஸ்லோகம் -ஸ்ராஷ்டா தேஹீ

—————————-
முதல் அத்யாயம் –முதல் பாதம் -11- / இரண்டாம் -6- / மூன்றாம் -10-/ -நான்காம் பாதம் -8- ஆக -35-அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம்- முதல் பாதம் -10-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -7-/ நான்காம் -8- /-ஆக-33-அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம்- முதல் பாதம் -6-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -26-/ நான்காம் -15- /-ஆக-55-அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் -முதல் பாதம் -11-/ இரண்டாம் –11-/ மூன்றாம் -5-/ நான்காம் –6–ஆக-33-அதிகரணங்கள்
-மொத்தம் -156-அஷோர்மி-அதிகாரண சாராவளீ ஸ்லோகம் –

முதல் அதிகரணம் – ஜிஞ்ஞாசாதிகரணம் -ப்ரஹ்ம விசார கர்த்தவ்ய ஸ்தாபன பரம் /முதல் நான்கு -சாஸ்திர உபோத்காதம்
-26-அதிகரணம் -அபஸூத்ராதிகரணம் -ப்ரஹ்ம வித்யாதிகார விசார பரம்
-35-அதிகரணம் -சர்வ வியாக்யாநாதி கரணம் -பூர்வ யுக்த அந்யாயாதிதேச பரம்
மீதி உள்ள -32-அதிகாரணங்களும் -சேதன அசேதன விலக்ஷணன்-சர்வஞ்ஞன் -சர்வசக்தன் -சகல ஜகத்துக்கும்
-அபின்ன நிமித்த உபாதான காரண பூதன் என்று காட்டி அருளுகிறார் –
முதல் பாதத்தில் -ப்ரஹ்மம் சேதன அசேதன விலக்ஷணன் -ஈஷாத் அதிகரணத்தில் அசேதன விலக்ஷணன் என்றும் —
-ஆனந்தமயாதிகரணத்தில் சேதன விலக்ஷணன் என்றும்-ஸ்பஷ்டமாகவும் -மேலும் அவனே -ஜகத் ஏக காரணம் -விலக்ஷண புருஷோத்தமன் என்று காட்டி அருளி
இரண்டாம் பாதத்தில் -6-அதிகரணங்களால் -அவனே ஜகத் சரீரன் என்றும்
மூன்றாம் பாதத்தில் அவனுடைய சர்வாத்மத்வம் -ஸங்கீத தோஷ நிராச முகேன சம்யக் ஸ்தாபித்து –
சர்வம் ப்ரஹ்ம கார்யம் ப்ரஹ்ம சரீரம் ப்ரஹ்மாத்மகம் என்று அன்வய முகேன அருளி
நான்காம் பாதத்தால் வியதிரேக முகத்தால் அருளி -மூன்று பாதங்களில் ஞான அனுகுணமாக அறுதியிட்டு அர்த்தத்தை வைராக்ய அனுகுணமாக ஸ்தாபிக்கிறார்
நம் கண்ணன் கண் –என்றும் -அல்லது இல்லை ஓர் கண்ணே -என்று ஆழ்வார் அருளிச் செய்தார் இ றே
இத்தால் ஞானத்தில் காட்டில் வைராக்யத்துக்கு உண்டான ப்ராதான்யம் அருளிச் செய்கிறார்

முதல் பாகம் -அயோக வியவச்சேதம்/ மேல் மூன்றும் அந்நிய யோக வியவச்சேதம்
ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று முதலில் ஸ்தாபித்து
மேலே ப்ரஹ்மமே ஜகத் காரணம் ஸ்தாபிக்கிறார்
ப்ரஹ்ம பின்னம் ஜகத் காரணம் இல்லை என்று மேலே -என்றபடி
ப்ரஹ்ம லக்ஷண ஜகத் காரணத்வத்துக்கு -அசம்பவ சங்கா பரிகார பாவம் முதலில் / அதி வியாப்தி சங்கா பரிகார பரம் மேல் பாத த்ரயம் –
ஆகையால் முதல் பாதம் -அசம்பவ சங்கா பரிஹார பரம் -அயோக வியவச்சேத பரம் -என்றும்
மேலே பாத த்ரயம் -அதி வியாப்தி சங்கா பரிஹார பரம் என்றும் அந்நிய யோக வியவச்சேத பரம் என்றும் –
முதல் பாதத்தில் -நாஸ சப்தம் -அந்நிய இத்யாதி சப்தங்கள் / மேலே பாத த்ரயத்திலும் -ச -ச -ஆநுமாநிகமபி–ப்ராஞ்ஞா -இத்யாதி சப்தங்கள் இந்த நிர்வாகத்துக்கு சேரும்
நான்காவது பாத ஆரம்பத்தில் -அபி -சப்த பிரயோகம் அந்நிய யோக வியவச்சேத பரம் -மேலே அயோக வியவச்சேத பரம் -இருந்தாலும்
பெரும்பான்மையாக முன் சொல்லிய படியே என்றவாறு –
நியாய கலாப சங்க்ரஹம்–அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்கக வாக்ய விசாரம் முதல் பாதத்திலும்
அஸ்பஷ்ட ஜீவாதி லிங்கக வாக்ய விசாரம் இரண்டாம் பாதத்திலும்
ஸ்பஷ்ட ஜீவாதி லிங்கக வாக்ய விசாரம் மூன்றாம் பாதத்திலும்
ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்கக வாக்ய விசாரம் -செய்கிறார் என்பது ஸ்வ ரசம்
ஜீவாதிகளை லிங்கமாக -அடையாளமாக -உள்ள உபநிஷத் காரண வாக்கியங்கள் விசாரம் -சில வாக்கியங்களில் லிங்கம் அஸ்பஷ்ட தரம் –
சில வாக்கியங்கள் அஸ்பஷ்டம் -வேறு சில வற்றில் ஸ்பஷ்டம் -இன்னும் சிலவற்றில் ஸ்பஷ்ட தரம்
இவற்றை நியாய மார்க்கத்தாலே விசாரித்து -சேதன அசேதன விலக்ஷணம் -ஜகத் ஏக காரணம் -பரம் ப்ரஹ்மம் என்று அறுதி இடுகிறார்
காரண வாக்யங்களுக்கு ப்ரஹ்மத்தின் இடத்தில் சம்யக் அன்வயத்தை -பிரதிபாதகத்வேன சம்பந்தத்தை நிரூபிக்கிறபடியால் -சமன்வய அத்யாயம் -எனப்பட்டது

———————————

-இரண்டாம் அத்யாயம் -அவிரோதாத்யாயம் -ப்ரஹ்மத்துக்கு உண்டான காரணத்தவத்தாலும் -ஜகத்தினுடைய கார்யத்வத்திலும்
சங்கதமான விரோதங்களை பரிக்ரஹித்து -ஜகத் ப்ரஹ்மங்களுக்கு உள்ள கார்ய காரண பாவத்தை ஸ்த்திரம் ஆக்குவது -என்றபடி
-2–1-ஸ்ம்ருதி பாதம் -இதில் முதல் இரண்டு அதிகரணங்களால் சாங்க்ய யோக ஸ்ம்ருதி யோக விசாரம் செய்து
மற்ற அதிகரணங்களில் யுக்தி விசாரம் செய்தாலும் ஸ்ம்ருதி விசார பிரதானம் என்பதால் இந்த பாதம் ஸ்ம்ருதி பாதம் –
ஸ்ரீ கபில மகரிஷியே சாங்க்ய தந்த்ர பிரவர்த்தகர் ஆவியும் மன்வாதி ஸ்ம்ருதி விருத்தம் -என்று அநாதரணீயை-என்றவாறு –
நியாய வ்ருத்த சம்ருத்ய நுக்ருஹீத சுருதியில் காட்டிலும் நியாய அவ்ருத்த சம்ருத்ய நுக்ருஹீத சுருதி பிரபலை என்றும்
ருஷி -கபில -மாத்ர பிரணீத சம்ருத்ய நுக்ருஹீத சுருதியில் காட்டிலும் ஆப்த தம -மனு பிரணீத சம்ருத்ய நுக்ருஹீத சுருதி பிரபலை என்றும்
ஏக ஸ்ம்ருதி அநுக்ருஹீத சுருதியில் காட்டிலும் அநேக ஸ்ம்ருதி அநுக்ருஹீத சுருதி பிரபலை என்றும் கருத்து
ஆக கபில தந்த்ர ஸித்தமான பிரகிருதி தத்வம் ஜகத் காரணம் அல்ல -மன்வாதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடி
சேதன அசேதன விலக்ஷண ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்பது வேதாந்த விழுப் பொருள் என்கிறார் இதில் –

-2–2-தர்க்க பாதம் -யுக்தி விசார பிரதானம் -முதல் அதிகரணத்தில் பிரதான காரணத்வ வாத நிரஸனம் /
மேல் அதிகரணங்களில் பரமாணு காரணத்வ வாத நிரஸனம் செய்து ப்ரஹ்ம காரண வாத ஸ்தாபனம் –
-2–1-ஸ்வ பக்ஷ ஸ்தாபனம் / -2-2-பர பக்ஷ ப்ரதிஷேப பரம்
ஸ்வ பக்ஷத்தில் பிறர் ஏறிடும் தோஷங்களை பரிஹரித்து ஸ்வ பாஷா ஸ்தாபனம் செய்தார் ஸ்ம்ருதி பாதத்தில்
பிற மாதங்களுக்கு தோஷங்களைக் காட்டி அவற்றைக் கண்டிக்கிறார் தர்க்க பாதத்தில் –
சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன சைவ மதங்களை தூஷிக்கிறார் தர்க்க பாதத்தில் -7-அதிகரணங்களாலே
-மேலே இறுதி -8-அதிகரணத்தில் பாஞ்ச ராத்ர பிராமண்ய ஸ்தாபனம் –
ஈஷாத் யதிகரணாதிகளில் சாங்க்ய மத பிரஸ்தாபம் உள்ளதாயினும் சாஷாத்தாக தன் மத கண்டனம் உள்ளது இந்த தர்க்க பாத்ததிலே என்பர் ஸ்ரீ பாஷ்யகாரர்
பிரதானம் என்றும் மூல பிரகிருதி என்றும் சப்தம் என்றும் சொல்லுகிற அசித்தத்வம்-ஆனுமாநிகம்-அப்ரஹ்மாத்மகம்
-குணத்ரயாத்மகம் -ஜகத் காரணம் என்பதே சாங்க்ய பக்ஷம்
அவன் அனுமானத்தை நிரசித்து- சாங்க்ய யுக்த பக்ஷம் நிரஸனம் -செய்யும் பொழுது -தத் யுக்த பிராமண த்ரய தூஷணமும் கர்தவ்யம் ஆகிறது
ப்ரத்யக்ஷ சித்த பதார்த்தங்களில் சாணக்யனோடு அதிக விவாதம் கிடையாது -தர்மி தர்மங்களுக்கு அபேதமே
-காரியங்களுக்கு அபி வ்யக்தி மாத்திரமே உள்ளது -அவஸ்தாந்த்ராபத்தி இல்லை -இத்யாதி விஷயங்களில் விவாதம் உண்டு —
ஆயினும் ப்ரத்யக்ஷ சித்த பதார்த்தங்களில் நாதீவ விவாத -என்பது ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம் –ஆகையால் பிரத்யக்ஷ நிராஸத்தை உபேக்ஷித்தார் ஸ்ரீ வியாசர்
சாங்க்ய ஆகமம் பூர்வ காண்டத்தில் -முதல் அத்யாயம் -பிராமண அத்தியாயத்தில் -பெரும்பாலும் நிரஸ்தம் —
ஆகையால் ஆகம நிராசம் உபேக்ஷிதம் -பரிசேஷாத் சாங்க்ய யோக யுக்தி அனுமானத்தை இங்கே தூஷிக்கிறார்
அப்ரஹ்மாத்மகம் பிரதானம் ஜகத் காரணம் எனும் தத் யுக்த அனுமானத்தை தூஷித்து சத் அனுமானத்தாலே ப்ராஞ்ஞ அதிஷ்டிதமே பிரதானம் என்று
ஸ்தாபிக்கிறார் வியாசர் -இங்கே சங்கை எழுமே -இந்த அதிகரணத்தில் அனுமானத்தாலே ஈஸ்வரனை ஸ்தாபிக்கும் வியாசர்
சாஸ்திர யோனித்வ அதிகரணத்தில் முன்னமே அனுமானத்தால் ஈஸ்வரனை சாதிக்க இயலாது என்பான் என் என்னில் -இந்த சங்கைக்கு பரிஹாரம்
சர்வ ஸ்ரஷ்டாவான பரமாத்வை அனுமானத்தால் சாதிக்க இயலாது என்றார் அங்கு -இங்கு பரமாத்வாய் அனுமானத்தாலும் பாதிக்க இயலாது என்கிறார்
அனுமான அவிஷயமான பர ப்ரஹ்மத்தை அனுமானத்தால் சாதிக்கவும் பாதிக்கவும் இயலாது என்பதே திரண்ட பொருள்
தர்க்க பாதத்தில் -கபில ப்ரோக்தமான சாங்க்ய தந்த்ரத்தையும் -ஹிரண்ய கர்ப்ப ப்ரணீதரமான யோக தந்த்ரத்தையும் -சிவ ப்ரோக்தமான
சைவ தந்த்ரத்தையும் வியாசர் தூஷிக்கிற படியால் தேறிய பொருளாவது –
மும்மூர்த்திகள் ஆனதும் வேத விருத்தமாக அவர்கள் பேசினால் த்யாஜ்யம் -வேத அனுகுணமே உத்தேச்யம் –
இறுதியில் பாஞ்சராத்ர பூஷணம் செய்வது சங்கதமே/ சங்கதி யாவது தூஷணமோ பூஷணமோ பதார்த்தம் அல்ல
-சாங்க்யாதிகள் வேதத்துக்கு எதிரியாக மாட்டாதே என்ற நிரூபணம் பாதார்த்தம்–ஆகும்
-சாங்க்யாதி மதங்கள் குத்ஸிதி யுக்தி மூலகங்கள் ஆகையால் துர்பலங்கள்-ஆகையால் வேதங்களுக்கு எதிராக நிற்க இயலாது
-பாஞ்ச ராத்ரம் வேத அனுகுணம் ஆகையால் வேத விருத்தம் இல்லை —
சாங்யாதிகளுக்கு வேத ப்ரத்யர்த்த நிராஸமே பாதார்த்தம் -என்றபடி -ஆகையால் பாஞ்சராத்ர ப்ரமண்ய ஸ்தாபனம் பாத சங்கதமே யாகும் என்றபடி –
பாஞ்ச ராத்ர சந்நிதியில் -சாங்க்யாதிகளான பஞ்ச மதங்களும் இராத்திரியாகுமே
–சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன சைவ தூஷணத்தையும் -பாஞ்ச ராத்ர பூஷணத்தையும் சேர்த்து கண்டவர்கள் உணர்வார்கள்
மோக்ஷ தர்மத்திலும் -சாங்க்ய யோக யுக்தமான -25-தத்துவங்களையும் -யோக யுக்தமான யோகத்தையும் -வேத யுக்தமான கர்மங்களையும் -அங்கீ கரித்து
தத்வங்கள் ப்ரஹ்மாத்மகங்கள் என்றும் -யோகம் ப்ரஹ்ம உபாசனம் என்றும் – கர்மங்கள் ப்ரஹ்ம ஆராதனங்கள் என்றும் ஆரண்யகத்தில் அருளிச் செய்தார்
இவ்விஷயத்தையே பாஞ்ச ராத்ரஸ்ய க்ருத்ஸ நஸ்ய வக்தா நாராயண ஸ்வயம் -என்று
நாராயணன் பாஞ்ச ராத்ர தந்திரத்தில் விஸதீ கரித்தான் என்றபடி -என்பதே ஸ்ரீ பாஷ்ய சாரம்
மேலே வேத வாக்கியங்களில் பரஸ்பர விரோதா சங்கா பரிக்ரஹம் செய்யப் போகிறவராய் முதல் முன்னமே வேத சாத்வதங்களுக்கு விரோதி சங்கா பரிக்ரஹம் செய்கிறார் இங்கு
ஆகாசாத் யுத்பத்தி விஷயத்திலும் ஜீவ அனுத்பத்தி விஷயத்திலும் ஸ்ருதி வாக்கியங்களில் காணப்படும் பரஸ்பர விரோதி சங்கா பரிக்ரஹம்
வியதிகரணம் தொடக்கமாக செய்யப் போகிறார் வியாசர்
அதற்கு முன்னமே ஜீவ அனுத்பத்தி விஷயத்தில் பாஞ்ச ராத்ர விரோத சங்கை ஏற்பட அதற்கு பரிஹாரம் உரைத்து
பாஞ்ச ராத்ரம் பரமதம் என்ற பிரமத்தை நிரசிக்கிறார் இங்கே -ஆகையால் இந்த அதிகரணம் பாதத்தின் இறுதியில் அமைத்தார்
இந்த பாதத்தில் ரஸநாநுபத்திகரணம் தொடங்கி சாங்க்யாத் யாகம விசாரம் செய்யப் படுகிறது –
ஆகம சாம்யத்தைப் பற்ற பாஞ்சராத்ர ஆகமும் அப்ரமாணம் என்ற சங்கை உதிக்க அத்தை நிரசித்து பாஞ்சராத்ர ப்ராமாண்யத்தை ஸ்தாபிக்கிறார் –
சாக்த மத நிராச பரம் என்பர் மத்வர் -அது பின்ன விஷயம் -பாஞ்ச ராத்ர யுக்த நாராயண பரத்வமும் நாராயண ஆராதன வைபவமும் சங்கர பாஷ்ய சம்மதமே
தத் யுக்த ஜீவ உத்பத்தி விஷயம் ஒன்றிலே மட்டும் விசம்வாதம் காட்டினார்கள் -பாஷ்யபா மதீகாரர்களான-சங்கர வாசஸ்பதி மிஸ்ரர் –
பாஞ்சராத்ரத்துக்கு ஜீவ உத்பத்தி விஷயத்தில் தாத்பர்யம் இல்லை என்று அந்த விசம்வாதத்தையும் களைந்து எறிந்தார் கல்ப தருகாரரான அமலா நந்தர்
பாஞ்ச ராத்ரத்துக்கு -ஜீவ உத்பத்தி -வசனத்துக்கு கௌணார்த்தவம் கொண்டு பாஞ்ச ராத்ர பிரமாணத்தையே கல்பதருகாரரே ஸ்தாபிக்கிறார்
-மாதாந்தர்களுக்கும் பாஞ்சராத்ர ஆகமம் சம்மதம் என்றதாயிற்று

இப்படி ஆறு பாதங்களால் ப்ராஹ்மண நிஷ்டமான காரணத்தை சோதித்து
-மேல் இரண்டு பாதங்களால் -வியத் பாதம் -பிராண பாதம் –ஜெகன் நிஷ்டமான கார்யத்வத்தை சோதிக்கிறார் வியாசர்
ஆகாச ஆத்ம இந்திரியாதிகளுக்கு தத் தத் வஸ்து ஸ்வரூப அனுகுணமாய் ஸ்வரூப விகார ஸ்வபாவ விகாரங்களை நிரூபித்து
அவற்றுக்கும் ப்ரஹ்ம கார்யத்துவமே உள்ளது என்று ஸ்தாபிக்கிறார் –
வியததிகரணத்தில்-ஆகாச நித்யத்வத்தை சங்கித்து ஆகாச கார்யத்வம் சித்தாந்தம் /
ஆத்மாதிகரணத்தில் ஆத்ம கார்யத்வத்தை சங்கித்து ஆத்ம ஸ்வரூப நித்யத்வம் சித்தாந்தம் -/
ஆகையால் சேதன அசேதனங்களில் துல்ய கார்யதா நிரூபணம் இப்பத்துக்கு பிரமேயம் என்ன ஒண்ணாது
ஆகையால் இ றே ஸ்ரீ பாஷ்யகாரர் கார்யதா பிரகார விசோதனம் பாதார்த்தம் என்று அருளிச் செய்கிறார் –
-2–1-பாதத்தில் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -என்கிற விஷயத்தில் பர சமயிகளால் உத்பாவிதங்களான தோஷங்களை பரிஹரித்து
ப்ரஹ்ம காரணத்தை ஸ்தாபித்தார் -/ -2–3-பாதத்தில் ஜகத்து காரியம் விஷயத்தில் பர யுக்த தோஷங்களை பரிஹரிக்கிறார்
இவ்விரண்டும் ஸ்வ பக்ஷ ஸ்தாபன பரம் -என்று சங்கதம்
நடுவில் -2–2-அமைய காரணம் என் என்னில் –
காரண விஷயத்தில் பர யுக்த தோஷ பரிக்ரஹ பரம் முதலில் அருளி -காரண விஷயத்தில் பர பக்ஷ பிரதி ஷேப பரமான
-காரண விசார பரம் -என்று இரண்டையும் பூர்வாபரமாக நிர்த்தேசித்து மேலே கார்ய விசார பரமான வியத்பாத பிராண பாதங்களை பின்னே அமைத்தார் என்றபடி –
ஆகாசாதிகளுக்கு ஸ்வரூப விகார ரூப கார்யத்வமும் -ஜீவாத்மாக்களுக்கு ஸ்வ பாவ ரூப கார்யத்வமே என்று நிரூபிப்பார் -ஆர் என்னில் -உபநிஷத்தே நியாமகம்
போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா–என்று தத்வ த்ரய ஸ்வரூப கதனம் –
போக்கிய பூதமான பிரகிருதி மஹத் அஹங்கார பூத பஞ்சக இந்திரியாதி ரூபேண ஸ்வரூப பரிணாமம் பெற்றால் ஒழிய ஜீவாத்மாக்களுக்கு போக்யம் ஆக்கமாட்டாது
ஜீவாத்மா ஸ்வரூப கத விகாரம் அற்றவனாய் தன் ஸ் வபாவமான தர்ம பூத ஞானத்தினுடைய விகாசத்தாலே
அனுபவிக்கும் போக்தா ஆகையால் ஞான விகாசம் அவசியம் ஆகிறது
ஆகையால் பகவான் ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ விகாசத்தை பிறப்பிக்க
ப்ரக்ருதியை ப்ராக்ருதமாக ஸ்வரூபத்தாலே பரிணமிப்பிக்கிறான் -என்றபடி -ஆக சர்வம் ப்ரஹ்ம கார்யம் என்றதாயிற்று –
வியததிகரணம் தொடக்கமாக அசித் உத்பத்தி பிரகாரம் /ஆத்மாதிகரணம் தொடக்கமாக சித் உத்பத்தி பிரகாரம் -என்று கண்டு கொள்வது –
பூர்வ யுக்த வியததிகரண நியாயத்தாலே ஜீவ உத்பத்தி சங்கை ஸ்வத ப்ராப்த்தை யாகிறது -ஆகையால் ஜீவ உத்பத்தி வாதம் ஆகிற
பூர்வ பஷத்தை ஸூ த்ரகாரர் ஸூத்ரத்தால் நிர்தேசியாமல் ஜீவ அநுத்பத்தி பரமான சித்தாந்த ஸூ த்ரத்தை மட்டும் அருளிச் செய்கிறார்
பிராண உத்பத்தி அதிகரணத்தில் -வியததிகரண நியாயத்தாலே-ஸ்வத ப்ராப்தமான பிராண உத்பத்தி விஷயமான -சித்தாந்தத்தை ஸூத்ரகாரர்
ஸூத்ரத்தால் நிர்தேசியாமல் பிராண அநுத்பத்தி சங்கா பூர்வ பக்ஷ ஸூத்ரத்தை மட்டும் அருளிச் செய்கிறார்
இவ்வதிகரணத்தில் ஸூத்ரகாரர் திரு உள்ளம் பற்றிய சித்தாந்தம் இன்னது என்பதை ஸ்ரீ பாஷ்யகாரர் நிர்த்தேசித்து அருளுகிறார்
-அப ஸூத்ராதிகரணத்தில் போலே -என்று கொள்வது
ஆத்மாதிகரணத்தில் ஜீவாத்மா நித்யத்வத்வ ஸ்தாபனம் -இங்கே சங்கை -சாஸ்திர யோநித்வாதி கரணத்தில் ப்ரஹ்மத்தின் ஜகத் காரணத்வம்
வேதாந்த பிரமாணகம் என்று சொல்லி -இதில் ஆத்மா நித்யன் என்று அறுதியிட்டால் பரஸ்பர விரோதம் வாராதோ என்னில்
ப்ரஹ்மம் சாஸ்திர பிரமாணகம் என்ற விஷயமே அங்கு -ஜகத் காரணத்வம் சாஸ்திர பிரமாணகம் என்ற விஷயம் விஷயம் அன்று அங்கு
இங்கு ஆத்ம நித்யத்வ பரமாக உதாகரிக்கப் பட்ட ஸ்ருதிகளுக்கு நோக்கு -அசித்தை போலே ஸ்வரூப அந்யதா பாவ ரூபமான விகாரம் இல்லை என்பதிலே நோக்கு என்றும்
பரமாத்மா நித்யத்வ பரமாக உதாஹரிக்கப் பட்ட வசனங்களுக்கு ஜீவாத்மாக்களில் பிரசித்தமான ஸ்வ பாவ அந்யதா பாவ -ஞான சங்கோச விகாச -ரூப விகாரம்
பரமாத்மாவுக்கு இல்லை -என்ற விஷயத்திலே நோக்கு
அசித்துக்கு உண்டான ஸ்வரூப விகாரங்களும் சித்துக்கு உண்டான ஸ் வ பாவ விகாரங்களும் அநிஷ்டங்கள்
இவை பரமாத்வாவுக்கு இல்லை யாயினும் பர ப்ரஹ்மத்துக்கு உண்டான காரணத்வத்தை நிர்வஹிக்க மூன்றாவது விகாரம் ஓன்று
அந்த பரனுக்கே கூடும் -உபய விகார விசிஷ்ட சேதன அசேதன விசிஷ்டத்துவமே இ றே அவ்விகாரம் என்றபடி
-ஆகையால் பர ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்பது அக்ஷதம் –

ஆக இரண்டு அத்யாயங்களால் ப்ரமேயத்வ வியாபக கார்யதா நிரூபித காரணத்வம் ப்ரஹ்ம லக்ஷணம் என்றதாயிற்று –
பூர்வ த்வகத்தில் ஸூத்ரகாரர் -ப்ரக்ருதி ஆத்ம பேதத்தையும் -ஆத்ம பரமாத்மா பேதத்தையும் -ப்ரஹ்ம நிஷ்ட ஞான ஆனந்தாதி கல்யாண குணங்களையும் –
தர்மி ஞான தர்ம பூத ஞான பேதத்தையும் சாப்தமாக அருளிச் செய்தார்
ஈஷத் யதிகரணத்தில் -பிரகிருதி ரூப அசித் விலக்ஷணன் பரமாத்மா என்றும்
ஆனந்த மயாதிகாரணத்தில் ஜீவ விலக்ஷணன் பரமாத்மா என்றும்
அந்தரதிகரணத்தில் ஜீவ விசேஷ விலக்ஷணன் பரமாத்மா என்றும் வியாசர் ஸ்தாபித்தார் –
ஈஷத்யதிகரண பூர்வ பஷியினுடைய அநு யாயியை காரணத்வாதி கரணத்திலும்
ஆனந்த மயாதி கரண பூர்வ பஷியினுடைய அநு யாயியை ஜகத்வாசித்வாதி கரணத்திலும் நிரசித்து
சேதன அசேதன விலக்ஷணன் பரமாத்மா என்று அறுதியிட்டார் –
நேதர அநுபபத்தே–1–1–17-
பேத வ்யபதேசாச்ச –1–1–18-
பேத வியபதேசாச்ச அந்நிய –1–1–22-
கர்ம கர்த்ரு வ்யபதேசாச்ச–1- -2–4-
உபயேபி ஹி பேதேந ஏநமதீயதே -1–2–21-
பேத வ்யபதேசாத–1- -3–4-
ஸ்தித்யத நாப்யாஞ்ச –1- -3–6-
ஸூ ஷூப்த் யுத்க்ரந்த்யோர் பேதேந –1–3–43-
பத்யாதி சப்தேப்ய —1–3–44-
அதிகம் து பேத நிர்தேசாத் –2–1–22—இத்யாதி ஸூத்ரங்களாலே ஜீவ பரர்களுக்கு உண்டான பாரமார்த்திக ஸ்வரூப பேதத்தை வியாசர் அருளிச் செய்கிறார்
ஈஷத் யதிகரணம் தொடக்கமாக ஞான ஆனந்தாதி குண யோகத்தை ஹேதுவாகக் காட்டி சேதன அசேதன விலக்ஷணம் ப்ரஹ்மம் என்கிற வியாச ஸூ த்ரங்கள்
ப்ரஹ்மம் ச விசேஷம் என்கிற பக்ஷத்துக்கு பொருந்தும் அல்லது
ப்ரஹ்மம் நிர் விசேஷம் அத்விதீயம் குணதோ அபி சத்விதீயதாம் ந ஸஹதே –என்கிற மாயாவதி பக்ஷத்துக்குப் பொருந்தாது
ஜீவ பர பேதமே சித்தாந்தம் என்று கொண்ட ஸ்ரீ வேத வியாசர் ஜீவ பர அபேதத்தை அப்ரசித்தமும் விசாராநாஹமும் ஆகையால் விசார விஷயமாகக் கொள்ளாமல்
உபநிஷத் வாக்கியங்களில் எங்கேனும் ஜீவ பர அபேத சங்கை அங்குரிக்குமே யானால் அவ்விடத்தில் மட்டுமே
ஜீவ பர பேதத்தை குண ஸூத்ரங்களால் ஸ்தாபிக்கிறார் என்று கண்டு கொள்வது –
தர்மியும் தர்மமும் ஞானம் என்பது ஜீவ பர விஷயத்தில் அந கீ க்ருதம் –அதாவது ஜீவனும் பரனும் இருவருமே ஞான ஸ்வரூபர்கள் ஞான குணகர்கள்-என்றபடி –
ஞாத்ருத்வம் ஞானதா ச ஸ்ருதி பிரபிததே நாத்ர பக்ஷே பதாம -தேசிகன் –
யாவதாத்ம பா வித்வாச்ச ந தோஷ தத் தர்சநாத் –2–3–30-என்கிறார் வியாசர்
நிதயனான ஆத்மா நியாமான தர்ம பூத ஞானம் யுடையவன் –தர்ம பூத ஞானத்தையும் அதனுடைய நித்யத்தையும் ஸ்தாபிக்கிறார் வியாசர்
தர்ம பூத ஞானம் அத்ரவ்யம் அநித்தியம் ஆசந்துகம் -என்பர் நையாயிகர்
அது த்ரவ்யம் நித்யம் என்பது ஸ்ரீ ராமானுஜர் மதம்
ஜீவ தர்ம பூத ஞானத்துக்கு சங்கோச விகாசங்கள் உள்ளன -ஆனாலும் நித்யனான ஜீவாத்மாவைப் பற்றிக் கிடக்கிற தர்ம பூத ஞானம் நித்யமே என்பர் நம் பெரியோர் –
ஆகையால் சங்கோச விகாச ப்ரயுக்த ஞான விநாச சங்கைக்கு அவகாசம் இல்லை என்றபடி –
தர்மம் ஸ்வாபாவிகம் ஆனாலும் தர்மி அநித்யமானால் தர்மமும் அநித்யமாகும் –
தர்மி நித்யமானாலும் தர்மம் சோபாதிகம் ஆனால் உபாதை நிவ்ருத்தமாகும் போது ஓவ்பாதிகமும் நிவ்ருத்தம் ஆகையால் தர்மம் அநித்யமாகும்
இங்கு தர்மியான ஆத்மாவும் -தர்மமான ஞானமும் ஓவ்பாதிகம் அல்ல -ஆகையால் தர்ம பூத ஞானம் நித்யமே -என்று
திரு உள்ளம் பற்றி ஸ்ரீ பாஷ்யகாரர் -நித்யஸ்ய ஸ்வாபாவிக தர்மத்வேந -என்று அருளிச் செய்கிறார்
ஆகையால் சாரீரக மீமாம்சை விசிஷ்டாத்வைத சித்தாந்த்தையே நிலை நாட்டுகிறது -என்பதே ஸ்ரீ பாஷ்ய சாரமாகும் –

ஆக இவ்வளவால் பிராணவார்த்தம் -நிரூபிதம்-அசேஷ சித்அசித் வஸ்து சேஷித்வம் –
அகில புவன ஜென்ம -என்று அகாரத்தில் உபக்ரமித்தும்
ஆனுமாநிகாதிகரணத்தில் -உக்தம் -என்று உகாரத்தையும்
இறுதியில் சர்வம் சமஞ்ஜசம் -மகாரத்தையும் கொண்டு பிராணவாகாரமாகவே தோற்றுமே –
முதல் இரண்டு அத்யாயங்களால் ப்ரணவார்த்த நிரூபணம் -மேல் இரண்டு அத்தியாயங்கள் மந்த்ர சேஷார்த்தம்
-மூன்றாம் அத்யாயம்–சாதன அத்யாயம் – நமஸ் சப்தார்த்த நிரூபண பரம்
நான்காம் அத்யாய-பலாத்யாயம் – த்ருதீய பதார்த்த நிரூபண பரம்
நமஸ் சப்தார்த்தம் உபாயம் இ றே -சர்வ சேஷியான நாராயணனே பரம உபாயம் என்று இ றே சம்பிரதாய நிஷ்கர்ஷம்

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading