ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களை ஒற்றியே ஸ்ரீ நாச்சியார் அருளிச் செயல்கள்–

1-ஸ்ரீ புத்தூர்‌ – திவ்ய தேசமாகுகை
ஸ்ரீ கோதை நாச்சியாரும்‌, அவரது தகப்பனாரும்‌, பிறந்து வளர்ந்த பெருமையினாலேயே திருவில்லிபுத்தூர்‌ தெய்விகத் தன்மை பெற்று விளங்குகின்றது எனலாம்‌.
மென்னடை யன்னம்‌ பரந்து விளையாடும்‌ வில்லிபுத்தூர் உறைவான் தன் -நாச்சியார்‌ திரு-5-5-என்றும்‌
மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் —பெரியாழ்வார்‌ திருமொழி-2-2-6–என்றும்‌ அருளிச் செய்து திவ்யதேசமாக ஆக்கி அருளினார்கள் –

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே
-2 2-6 –மின்னோடு  ஒத்த நுண்ணிய இடையை உடையவர்கள் என்னுதல்- மின்னை ஒரு வகைக்கு ஒப்பாக உடைத்தாய் -அவ்வளவு இன்றிக்கே ஸூஷ்மமான இடையை உடையவர்கள் என்னுதல் –விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே – ஸ்ரீ பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-
தாழ்ந்தார்க்கு  முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே -திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே- பரம சாம்யாபந்நருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே ஸ்ரீ பரம பதத்தில் –
இங்கு இரண்டுமே சித்திக்குமே – (ரெங்க ராஜ ஸ்தவம் அஹ்ருத ஸஹஜ தாஸ்யம் பரிகொடாதவர்கள் -அஹங்காரம் இல்லாதவர் )நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால்
வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் – நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும்  உண்டு இறே –அவ்வளவு அன்றிக்கே – லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் – இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை – எனக்கு உண்டாக்கித் தந்த–கண்டவர்களுடைய சர்வேந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாத படி உன் வசம்
ஆக்கிக் கொள்ளும் வைலஷண்யத்தை உடையவனே –-யாத்ர நாந் யத்ர பஸ்யதி பூமா )-முலை உணாயே-

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-ஊராக தன் இனமே பெருத்து இருக்குமாய்த்து – பரம பதத்திலே நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்கிறவன் அத்தை விட்டு என்னோடு சஜாதீய பதார்த்தங்கள் கண்டு போது போக்கைக்காக வன்றோ இங்கே வந்து நிற்கிறது – இப்போது காணப் பெறாத வருத்தம் வெறுப்பு தோன்ற வந்து நிற்கிறது –என்கிறாள் –வைகுந்தம் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்கை பிராப்தம்-அது தூரஸ்தம் ஆகையாலே – தனக்காக வந்து நிற்கிற இடத்திலே காணப் பெறாதே நோவு பட்டு கண் உறங்காதே இருந்தாள் என்றால் இது சேரும்படி எங்கனே என்று -நான்-நம்பிள்ளை – ஜீயரைக் கேட்டேன் –உள்ளுக்குப் புக்கால் குறி யாழியாமே நம்மைப் போலே போர வல்லவல்லள் இவள் ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே மோஹிப்பாள் ஒருத்தி யாய்த்து – உள்ளே கொடு புகில் அந்த சீல குணத்தைக் கண்டவாறே இவள் மோஹித்துக் கிடக்கும் –பின்னை இவளை இழக்க ஒண்ணாது என்று கொண்டு –
புக்கார்கள் இல்லை போலே காணும் என்று அருளிச் செய்தார் -என்று அருளிச் செய்வர் –குழையும் வானமுகத்து ஏழையை தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு இழை கொள் சோதி செந்தாமரைக் கட்பிரான் இருந்தமை காட்டினீர் –திருவாய் மொழி -6-5-5-என்று பரிஹாரம் சொல்லுகிறவர்கள் தாங்களே படுகுலை யடுத்தி கோள் -என்னும் படி இறே இருப்பது-பொன் -அழகு – பிறருக்கு காட்டுகைக்காக வந்து நிற்கிறவன் திருவடிகள் காண வேணும் என்னும் ஆசையினாலே-என் பொரு கயல் கண் இணை துஞ்சா –இக் கண்ணுக்கு   இலக்கானவன் படுமத்தை தான் படா நின்றாள் யாய்த்து – பொரா நின்றுள்ள கயல் போலேயே ஒன்றுக்கு ஓன்று ஒப்பான கண்களானவை உறங்கா –இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை-உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே – பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை– இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது
இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் –-அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு-குயில் -ஆசார்யன் –-தானே ஆசார்யனுக்கு அடிமை யாகி என் உடைமைகளையும் அவனுக்கு அடிமை ஆக்குவேன் -அரும் பொருள் த்வனிக்கும் –-கொள்ளுவன்-என்னாதே கொள்விப்பன் -என்றது – அந்த கிளியைப் போலே உன்னையும் உபலா ளிப்பன்-என்றபடி -சாதனத்வ சங்கா நிவ்ர்த்யர்த்தம்-கார்யம் -கூவுகை -அல்பம் -பேறு அதிகம் -சம்ஸ்லேஷம் நித்யமாய் நிரதிவகமாய் இருக்குமே –உலகளந்தான் வரக் கூவாய்-இத்தோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு – பேறு எனக்குக் கைப்படும் – எல்லாரோடும் வரையாதே பொருந்துமவன் வரக் கூவுகை -உனக்குக் கார்யம் — குணாகுணம் நிரூபணம் பண்ணாதே – வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாரோடும் பொருந்துமவன் வரும்படி கூவப் பாராய் –

2-பகவதநுபவம்‌ உண்டபோது ஒரு வார்த்தையும்‌, . உண்ணாத போது ஒரு வார்த்தையும்‌ பேசுபவர்கள்‌,
காற்றினைப்‌ புனலைச்‌ சென்று நாடிக்‌ கண்ணமங்கையுள்‌ கண்டு கொண்டேனே” -7-10-5- என்று பகவதநுபவம்‌ உண்டபோது ஒரு வார்த்தையும்‌,
‘ கடியன்‌ கொடியன்‌ நெடியமால்‌ உலகம்‌ கொண்ட அடியன்‌” -5-3-5-என்றும்‌,
ஆசை வழுவாதேத்தும்‌ எமக்கிங்கிழுக்காய்த்து * அடியோர்க்குத்‌ தேசமறிய உமக்கே யாளாய்த்‌ திரிகின்றோமுக்கு *. காசினொளியில்‌ திகழும்‌ வண்ணம்‌, காட்டீர்‌ எம்பெருமான்‌ ! * வாசிவல்லீர்‌! இந்தளூரீர்‌! வாழ்ந்தே போம்‌ நீரே! -4-9-4-என்று உண்ணாத போது ஒருவார்த்தையும்‌ பேசுவதைக்‌ காணலாம்

பகவதநுபவத்தை ஆசைப்பட்ட ஆழ்வார்களுக்கும்‌, பகவத்‌ ஸம்ருத்தியை (நிறைவில்‌ ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும்‌ நெடுவாசியுண்டு. பகவத்‌ ஸம்ருத்தியை ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும்‌ பாகவத ஸம்ருத்தியை ஆசைப்பட்ட ஆண்டாளுக்கும்‌ அம்மாதிரியே நெடுவாசி யுண்டு. ஆழ்வார்கள்‌ இளைய பெருமாளைப்‌ போன்றவர்கள்‌. “ பெரியாழ்வார்‌ பரதாழ்வானுக்கு ஒப்பானவர்‌. ஆண்டாளும்‌ மதுரகவிகளும்‌ ஸ்ரீசத்ருக்கனாழ்வானைப் போன்றவர்கள்

கலியுகம் -97-நள வருஷம் திருவாடிப்பூரம் சுக்ல பக்ஷம் -செவ்வாய் கிளம்பி -சதுர்த்தி -அயோநிஜையாய் திருவவதரித்தார்
மிக்க இறைநிலை விளக்கம் -திருப்பாவையில் முதல் ஐந்து பாசுரங்கள்
மெய்யாம் உயிர் நிலை -6-15 பாசுரங்கள்
தக்க நெறி -16-22-
வாழ்வினை பகவத் கைங்கர்யம் -23-27
ஊழ்வினை-ப்ரக்ருதி சம்பந்தம் -28-30-
பகவத் ஸம்ஸ்லேஷமே நீராட்டம்
பகவத் கைங்கர்யமே பறை

இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் |
ஸமூடமஸ்ய பாகும்ஸுரே |
த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதா” ப்ய: |
தததோ தர்மாணி தாரயந் |-விஷ்ணு ஸூக்தம்

இதம் விஷ்ணுர் வி சக்ரமே த்ரேதா நிததே பதம் -ருக்வேதம் -ஸ்ரீ விஷ்ணு உலகங்களை எல்லாமே மூன்றடியால் அளந்தான்
த்ரீணீ பதா வி சக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய -ருக்வேதம் -யாராலும் வெல்ல முடியாத ஸர்வ ரக்ஷகனான ஸ்ரீ விஷ்ணு உலகங்களை எல்லாமே மூன்றடியால் அளந்தான்
ஓங்கி உலகளந்த உத்தமன்
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்
அன்றிவ்வுலகம் அளந்தான் அடி போற்றி

ஸ காரணம் கரணாதிபாதிப ந சாஸ்ய கச்சித் ஜநிதா ந சாதிப -ஸ்வேதா -இவ்வாத்மாவுக்கு அதிபதியான ஈஸ்வரனே எல்லாவற்றுக்கும் காரணமாய் நின்று படைக்கும் முதல்வன் -அவனை உண்டாக்கியவனும் அவனுக்கு அதிபதியாகவும் யாரும் இல்லை
ஊழி முதல்வன் –பாழி யம் தோளுடை பற்ம நாபன்

அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் -ஸ்வேதா -மாயனான பரமபுருஷன் பிரபஞ்சம் அனைத்தையுமே படைத்தருளுகிறான்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-
மா மாயன் மாதவன் வைகுந்தன் -9-
மாயன் மணிவண்ணன் -16-

ஸமுத்ரே அந்தம் விஸ்வ சம்பவம் அந்த ஸமுத்ரே கவயோ வயந்தி -தைத்ரியம் -பாற் கடலின் நடுவே பள்ளி கொண்டவன் அகிலப் பிரபஞ்சத்துக்கும் மங்கள கரன் -அவன் திருப்பாற் கடலுள் இடமுடையான் என்றும் கவிகள் அறிகிறார்கள்
பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் -2-
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து–6-

தத்யதா இஷீ காதூலம் அஃனவ் ப்ரோதம் ப்ரதூ யேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மான ப்ரதூயந்தே -சாந்தோக்யம் -நெருப்பிலிட்டு பஞ்ச போலே ஸஞ்சித பாபங்கள் அடியோடு அற்றுப் போகின்றன –
தத்யதா புஷ்கர பலாஸ ஆபோந ஸ்லிஷ்யந்தே ஏவமேவம்விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே —சாந்தோக்யம் -ஸ்வரூப ஞானம் பிறந்த பிறகு தாமரை இலையில் நீர் ஒட்டாதது போல் பாப கர்மங்கள் இவன் கண் ஒட்டுவதில்லை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

அத யததஸ் பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே -சாந்தோக்யம் -பரதத்வத்தின் தோற்றமாய் நின்ற ஒண் சுடர்
தோற்றமாய் நின்ற சுடரே –21-

ஞானம் ஆத்மனி மஹதி நியச்சேத் தத் யச்சேத் சாந்தா ஆத்மனி-கட உபநிஷத் –சேஷமான இவ்வாத்மாவை சேஷியான பரமாத்மாவுக்கே தக்கவனாய் சேர்க்க வேண்டியது –
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீலே சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்த்தோம் –22-

அந்தப்பிரதிஷ்ட ஸாஸ்தா ஜனனாம் ஸர்வாத்மா -ஸ்வேதாஸ் –எல்லாப் பொருள்களிலும் உள் நிறைந்து உயிர் அனைத்தையுமே நியமிப்பவன்-குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி -24- இந்திரனுக்கு ஸர்வாத்ம பாவமும் நியமிப்பவனாயும் இருப்பதைக் உணர்த்தி அருளினவன்

ஸனோ புத்யா சுபயா ஸம்யுநக்து -ஸ்வேதா அவ்வெம்பெருமான் நன்மை நல்லறிவுடன் கூட்டுக -கைங்கர்யம் யவாதாத்மபாவி அருள வேண்டும் –
உனக்கே நாம் ஆட் செய்வோம் –எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்-29-

தேவஸ்யைஷ ஸ்வ பாவோயம் ஆத்ம காமஸ்ய காஸ் ப்ரூ –மாண்டூக்யம் -அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரனுக்கு அடையப்படாததாயும் அடையப்பட வேண்டியது ஒன்றுமே இல்லை
குறை ஒன்றுமே இல்லாத கோவிந்தா -29-

அறம் செய்ய விரும்பு -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
ஆறுவது சினம் -சில்லென்று அழையேன்மின்
ஓதுவது ஒழியேல் -முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார்
ஓங்கி உலகளந்த –நீங்காத செல்வம் –
தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வசனம் வழங்காது எனின் –
அம்பரமே தண்ணீரே
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

30-3+0=3-ஆச்சார்ய பரம் -மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ –
ஐ ஐந்தும் ஐ ஐந்தும் –பஞ்சபூதங்கள் சம்பந்தமுள்ள இந்த உடம்பில் ஐம் புலன்களையும் ஐம் பொருள்களையும் அடக்கி யாண்டால் அர்த்த பஞ்சகம் ஞானம் ஸித்தித்து ஆழ் பொருளை உணரலாம்
நாச்சியார் திருமொழி –143-1+4+3=8-–பிரணவத்தின்-1- விவாரமான – நான்கு வேத சாரத்தை -3 ஆச்சார்யர் அனுக்ரஹத்தின் மூலமும் அறிந்தால் ப்ரணவாகார விமானத்தின் கீழ் எழுந்தருளி இருக்கும் திரு அஷ்டாக்ஷர பொருளாக நாராயணனை அடையலாம்
எல்லே இளங்கிளியே -15-பாகவத நிஷ்டை சொல்லும் இது திருப்பாவை யாகிறது -1+5=6-உய்யும் ஆறு படி நடந்தால் அறிந்து அடையலாம்

பதின்மருடைய ஞானமும் ஸ்திரீ தனமாக இவள்‌ பக்கலிறே குடி கொண்டது. பத்துப்‌ பேர்க்கு ஒரு பெண்‌ பிள்ளை இறே – பெண்‌ ஆணைக்‌ கண்டு காதல் கொள்வது பள்ளமடை ஆகும்‌. எனவே ஆழ்வார்‌ களுடைய பக்தியைக்‌ காட்டிலும்‌ பதின் மடங்கு அதிகமான அன்பை யுடையவர்‌ கோதை நாச்சியார்‌-உபயவிபூதிக்கும்‌ நாயகன்‌ இடைக் குலத்தில்‌. பிறந்து எளிமைக்‌ குணமே நிரம்பப்‌ பெற்று இச்சை யுடையோர்க்கு வீட்டின்பத்தை அளித்தான்‌. அதே போன்று கோதை நாச்சியாரும்‌, . தாம்‌ அந்தண குலத்தில்‌ வளர்ந்தாலும்‌, இறைவனை அடைவதற்கு உபாயமாக, துவாபர யுகத்தில்‌ கோபியர்கள்‌ மேற் கொண்ட நோன்பினை வழியாகப்‌ பின் பற்றுகிறார்

இடை நடையும்‌ இடை முடியும்‌, இடையர் பேச்சும்‌ கொண்ட ‘இடைப் பெண்ணாக பாவநா ப்ரகர்ஷத்தாலே (நினைவின்‌ முதிர்ச்சியாலே) வடிவெடுத்து இடைக்குலச்‌ சிறுமியரோடு இணைந்து, ஸ்ரீவில்லி புத்தூரே . திருவாய்ப்பாடியாகவும்‌, வடபெருங்கோயிலுடையான்‌ திருக்கோயிலே நந்தகோபர்‌ திருமாளிகையாகவும்‌, வடபெருங்கோயிலுடையானையே கண்ணனாகவும்‌ பாவித்து, நோன்பினைக்‌ கைக்கொள்கிறார் –
கண்ணனும்‌, கோதை, நாச்சியாரும்‌, இழிந்த குலமென்ற தாழ்ச்சி எதுவும்‌ இன்றி இச்சை யொன்றே தாம்‌ உகந்தருளும்‌ இடம்‌ என்று காட்டியதை அடி யொற்றி இராமாநுசர்‌ பிட்டிதேவன்‌ என்ற அரசனை விஷ்ணு வர்த்தனன்‌ என்ற பெயரில்‌ திருத்திப்‌ பணி கொண்டார்‌. வில்லி என்ற: வேட்டுவனை அரங்கனின்‌ கண்ணழகைக் காட்டி, உய்வித்தார்‌, ஊனமுற்ற ஊமைக்கும்‌ உய்யும்‌ வழி அருளிச்‌ செய்தார் –-முத்தியோ சிலரது சொத்தென் றிருக்கையில்‌ தமிழ்நாடு தம்‌ இருந் தவப்‌ பயனாய்‌ நம்‌ இராமாநுசனைத்‌ தந்தது அன்றோ-

3-இளமைப்‌ பருவத்தில்‌ கோதையார்‌ ஆடிய விளையாடல்‌களிலும்‌ எம்பெருமானும்‌ எம்பெருமான்‌ தொடர்பு பெற்ற பொருட்‌ களுமே இடம்‌ பெருகின்றன.
பொங்கு வெண்‌ மணல் கொண்டு சிற்றிலும்‌ முற்றத்‌ திழைக்கலுறில்‌ சங்கு சக்கம்‌ தண்டு வாள்‌ வில்லுமல்லது இழைக்கலுறாள்‌”-பெரியாழ்வார் -3-7-3-என்பதனால்‌ இதனை அறியலாம்

பொங்கு -இத்யாதி-புறம்பே போய் -தீ இணக்கி  இணங்கி ஆடாதே முற்றத்திலே இருந்து விளையாடு -என்று நான் நியமித்து வைத்தால் வண்டலிட்டதாகையலே நுண்ணியதாய் -வெளுத்து இருக்கிற மணலைக் கொண்டு முற்றத்திலே கொட்டகமிட ஒருப் பட்டாளாகில்–உறில்-என்கையாலே-இவளுக்கு மனசு இல்லாமையும் – தன்னுடைய நிர்பந்தத்துக்காக செய்கிற இத்தனை என்னுமதும் தோற்ற சொல்லுகிறாள்-சங்கு -இத்யாதி-அவனுக்கு அசாதாராண சிஹ்னமாய் – அழகுக்கும் விரோதி நிரசனத்துக்கும் உடலாய் இருக்கும் ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆயுதம் ஒழிய   வேறு ஒன்றும் இட நினையாள்

4-அண்ணலார்‌ தாளிணை மேல்‌ அணி தண்ணந்துழாயென்றே மாலுமால்‌ வல்வினையேன்‌ மடவல்லியே -திருவாய் -4-2-1-என்கிறார்‌. பெரியாழ்‌வார் தன் பெண்‌ கொடியாகிய கோதை நாச்சியாருக்கு ஏற்ற கொழு கொம்பு எம்பெருமானே என்பதை அறிகிறார் -கோதை கோதை நாச்சியாரும் எந்நேரமும்‌ எம்பெருமானின்‌ வரவை எதிர் நோக்கிக்‌ காத்திருப்பவர்‌. அதனால்‌ எப்போதும்‌ அணி கலன்‌ பூண்டு ஆடைகளைச்‌ செவ்வனே உடுத்தி அழகு பார்த்திருப்‌பவர்‌. இதனை-காறை பூணும்‌ கண்ணாடி காணும்‌ தன்‌ கையில்‌ வளை குலுக்கும்‌ கூறை யுடுக்கும்‌ அயர்க்கும்‌ தன்‌ கொவ்வைச்‌ செவ்வாய்‌ திருத்தும்‌”பெரியாழ்வார் -3-7-8-என்பதால்‌ உணர இயலும்‌.
பரபக்தி நிலையில்‌ அருளிச் செய்தது திருப்பாவை. பரபக்தி, பரஜ்ஞானமாக வளர்ந்த நிலையில்‌ உருவானதே நாச்சியார்‌ திருமொழி. பரம பக்தி பிறந்த நிலையில்‌ சீவான்மாவின்‌ துடிப்பை உணர்ந்த எம்பெருமான்‌ தான்‌ தன்‌ உருக் காட்டலானான் –சேதன அசேதனம்‌ இரண்டையும்‌ எம்பெருமான்‌ உடலாகக்‌ கொண்டிருக்கிறான்‌. இவற்றுள்‌ உயிராக நின்று இயக்குபவன்‌ எம்பெருமான்‌.-இதையே திருவில்லிபுத்தூர்‌ கோயிலிலே ஆண்டாள் நாச்சியாரும்‌, ரங்கமன்னாரும்‌, பெரிய திருவடியும் ஏக ஆசனத்தில்‌ அமைந்திருப்பதைக்‌ காணும் போது எளிதில் உணர முடிகின்றது –

காறை பூணும் –தன் ஆற்றாமையாலே – ஏதேனும் ஒன்றைச் செய்து நாம் அவனை பெற வேணும் -என்று நினைத்து – அவனுக்கு ஆகர்ஷமாம் படி நம்மை அலங்கரிக்கவே அவன் தானே வந்து மேலே விழும் -என்று தன்னை அலங்கரிக்கையிலே -ப்ரவர்த்தையாய் –ப்ரதமம் –அவனைக் கண்டு பிரியப்பட்டு கட்டிக் கொள்ளும் கழுத்துக்கு அலங்காரமாக காறையைப் பூணும்-இது தான் உத்தம  அங்கத்துக்கும் உடம்புக்கும் நடுவாய் நின்று – ஒளி விடுவதோர் ஆபரணம் இறேகண்ணாடி காணும்-காறை பூண்ட திருத்தம் தன் கண்ணுக்கு விஷயம் அல்லாமையாலே அவனுக்கு உகக்கும்படி வாய்த்ததோ இல்லையோ என்னும் இடம் அறிகைக்காக-காறையும் கழுத்துமான சேர்த்தி அழகை கண்ணாடி புறத்திலே பாரா நிற்கும்–இது தான் அவயாந்தரங்களில் ஆபரணங்களும் இவள் பூணும் அதுக்கு உப லஷணம்–தன் கையில் வளை குலுக்கும்-இம் மநோ ரதம் அடியாக உடம்பிலே ஒரு பூரிப்பு தோற்றுகையாலே அது அறிகைக்காக கையிலே வளையை அசைத்து பாரா நிற்கும் –விரஹ கார்ச்யத்தாலே (பிரிவால் இளைப்பாலே )கையிலே வளைகள் கழன்றாலும் பின்னையும் எடுப்பது இடுவதாய் இறே இவள் தான் இருப்பது-இவள் எடுத்து இட்டாலும் அவை கையில் தொங்காதே
இப்போது உடம்பில் தோன்றுகிற பூரிப்பாலே -அவை கையிலே தொங்கினமை அறிகைக்காக
அசைத்து பாரா நிற்கும் -என்கை–கூறை உடுக்கும் – பரியட்டமும் அறையில் தொங்கும்படி ஆய்த்து -இம் மநோரத நிபந்தனமான தேக பௌஷ்கல்யத்தாலே இறே – அல்லாத போது – கையிலே ஒரு தலைப்பும் —காலிலும் தரையிலும் ஒரு தலைப்பு மாம் இறே–வளையும் கலையும் க்ரத சந்கேதரைப் போலே  –
கழலும் போது ஒக்க கழன்று தொங்கும் போதும் ஒக்க தொங்கா நிற்கும் ஆய்த்து —காறை பூண்டதுக்கு  மேலே ஓர் அதிசயம் தேடுகைக்காக இறே கூறை உடுக்கப் புகுந்தது–அதாவது அவனுக்கு ஆகர்ஷமாம்படி பரியட்டத்தை நன்றாக உடா நிற்கும் -என்கை-இவளுடைய அழகிலே ஆய்த்து அவன் ஈடுபடுவது-ஆதலால் அவன் உகக்க தக்க உடை வாய்ப்பு வரும் அளவும் குலைப்பது உடுப்பதுமாய் செல்லா நிற்கும் ஆய்த்து-அயர்க்கும்-இப்படி அவன் வரவுக்கு உடலாக -தன்னை அலங்கரித்த அளவிலும் வரக் காணாமையாலே அறிவு அழியா நிற்கும்–தன் கோவைச் செவ்வாய் திருத்தும் –
மீளவும் அறிவு குடி புகுந்து – இன்னமும் அவனுக்கு ஆகர்ஷமாம் படி இருப்பதோர் அதிசயம் நம் பக்கல் உண்டாக்க கடவோம் என்று – ஸ்வபாவமே கோவைப் பழம் போலே சிவந்து இருக்கிற தன்னுடைய அதரத்தை ராக ஜனகமான பதார்த்த சேவைகளாலும் மிகவும் சிவக்கும் படி பண்ணா நிற்கும்
அல்லாதவை போலே அன்றிக்கே –இது அவனுக்கு வாய் புகு சோறாய் இருப்பது ஓன்று இறே
தொண்டை அம் செங்கனி வாய் நுகர்ந்தான் -என்கிறபடியே–தேறித் தேறி நின்று – தன்னுடைய அவயவ அலங்காரத்தின் வாய்ப்பாலும் – தச்மிம்ச் ச பகவோ குண-(ஸூந்தர )-என்கிறபடியே இத் தசையில் வந்து உதவுகைக்கு ஈடான அவன் குணங்களிலே விச்வாசத்தாலும்-அயர்க்கை தவிர்ந்து
மென் மேலும் தெளிவை உடையவளாய் -அத் தெளிவு கை கொடுக்க தரித்து நின்று –ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும் –தேவோ நாம சஹஸ்ரவான் -என்கிறபடியே (தேவ -திவி கிரீடா கிரீஷா ஸ்தோத்ரம் பண்ணத்தக்கவர் ஆனந்தம் கொண்டவர் -பல அர்த்தங்கள் உண்டே )-தன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களை உடையவனாய் – அவை எல்லா வற்றிலும் மநோஹரமான வடிவு அழகை உடையனாய் – அவனுடைய பிரகாரங்களை -அவற்றினுடைய ரஸ்யதையாலே கலங்கி அடைவு கெட பேசா நிற்கும்–மாறில் -இத்யாதி-ஆகையால் ஒப்பு இல்லாத நீல ரத்னம் போன்ற வடிவு அழகை உடையவன் விஷயமாக இவள் இப்படி பிச்சேறா நின்றாள்-

5-மாணிக்கக்‌ கிண்கிணி யாரவாரிப்ப மருங்கின்‌. மேல்‌” பெரியாழ்வார்‌-1-6-1- கிங்கிணி வாய்ச்‌ செய்த தாமரைப்‌ பூப்போலே-25-

மாணிக்க கிண் கிணி யார்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னால் செய்த ஆய்ப் பொன்னுடை மணி
பேணிப் பவள வாய் முத்து இலங்கப் பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி
–1 6-1 –பழிப்பு அற்று –
அழகியதாய் இருந்துள்ள – அரை வடத்தை உடைத்தான மருங்கின் மேல் – மாணிக்க கிண் கிணியானது த்வனிக்க –ஆய் பொன்னுடை மணி -என்கிற இடத்தில் – ஆய்தல் தெரிதலாய் பழிப்பு அறுதலை சொல் நாக மாணிக்கம் ஆகையாலே என்னவுமாம் – கிண் கிணிக்கு புறம்பே மாணிக்கம் பதித்தாலும் சப்தியாது –(ஆணிப்பொன் என்பதால் -அழகு -மேல் பகுதி-மணியின் நாக்கு மட்டும் மாணிக்கம் -சப்திக்குமேநாக மாணிக்கம் என்று இத்தையே சொல்லுவார் )

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே – ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை –அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது – நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்
அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும்
ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது
ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்றுஇழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படிகாலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி
பெண்காள் நம்மைக் கிட்டுகையாலே எல்லாம் சபலமாயிற்றோ என்ன – விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளீர்தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -உத்யோக பர்வதம் –90(ஆற்றாமை வெப்பம் போக்க ஆஹ்லாத கரம் -சந்திரன் – சேஷத்வம் அறிந்து முமுஷுவான பின்பும் அந்தகாரம் போக்க ஆதித்யன் குளிர்ந்த வெப்பம் உடைய கிருஷ்ணனை குரு வம்சம் -அனுகூலர்களுக்கு பிரசன்னம் -பிரதிகூலர்களுக்கு வெப்பம் )


6-வித்தகன்‌ வேங்கடவாணன்‌ உன்னை விளிக்கின்ற” _-1-4-3-
வித்தகன்‌ வேங்கடவாணன்‌ என்னும்‌*-விளக்கினில்‌ புக என்னை விதிக்கிற்றியே-1-3-

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி  பரந்து எங்கும்-
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கடம் வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -1 4-3 –அழகாலும் குண சேஷ்டிதங்களாலும் -விஸ்மயநீயனாய் – துர்மாநிகளான- உன் போல்வாரை அநாதரித்து- கானமும் வானரமும் ஆனவற்றை ஆதரித்து கொண்டு திருமலையில் வர்த்திக்கிறவன்-(ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ) உன்னை ஆதரித்து அழைக்கிற திருக் கைத் தலம் நோவாதபடியாக அம்புலீ -விரைந்து ஓடி வா –வாணன்– வாழ் நன்

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-பரம பதத்தில் நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்க கடவ -அவன் அவ்விருப்பை விட்டு- கானமும் வானரமும் வேடரும் -நான் முகன் -47- ஓலக்கம் கொடுக்கத் திருமலையிலே வந்து நிற்கிற விஸ்மய நீயன் –
மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு -மூன்றாம் திரு -70-என்றும் –வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு -நான்முகன் -46-என்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை -என்றும் திரு விளக்கு இடுவதும் -திரு வாராதனம் பண்ணுவனவும் இவை இறே –சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திருவிருத்தம் -21- அதில் காட்டில் இது போக்யமாய் இறே இங்கு வந்து அவன் நிற்கிறது-வேங்கட வாணன் -என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே– பரம பதத்தில் ஸ்வரூபம் மைத்துப் போலே இருப்பது – திருமலையிலே வந்து நின்ற பின்பாய்த்து- ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் உண்டாய்த்து – குன்றத்தில் இட்ட விளக்காய்த்தே –வேடார் திருவேங்கடம் மேய விளக்கு -பெரிய திரு -4-7-5-இறே – திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

மைத்தடங்கண்ணி யசோதை தன்‌ மகனுக்கு? மைத்தடங்கண்ணி –1-4-10- யசோதைக்கு அடைமொழி
மைத்தடங்கண்ணினாய்‌ நீ உன்‌ மணாளனை” –19-மைத்தடங்கண்ணி – நப்பின்னைப்‌ பிராட்டிக்கு அடைமொழி-

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -1-4 10-கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை – அஞ்சனத்தாலே அலங்க்ருதமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து –இவன் பக்கல் ஸ்நேகத்தாலே விகசிதமான கண்ணை உடையவள்
என்னுதல் –(மையார் கண்ணி -யமுனா நதி கறுமை -கிருஷ்ண துளஸீ கறுமை –
இவற்றுக்கும் அந்யோன்யம் இவனுக்கும் உண்டே )

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-19-மைத் தடங்கண்ணினாய் –சுத்த சத்வம் ஆகிற அஞ்சனத்தை உடைத்தாகையாலே-விஸ்ருங்கலமான ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவளே –இவன் மறுமாற்றம் சொல்லப் புக –நம்மை ஒழிய தாங்களே எழுப்புவதே என்று கண்ணாலே வாய் வாய் என்று வாயை நெரித்தாள் –இவன் வாய் திறக்கப் போக -இவர்கள் நம்மை ஒழிய இவனை எழுப்புவதே என்று அவனைக் கண்ணாலே வாய் வாய் என்ன பேசாதே கிடந்தான் ஆக் யாதி ஹ்ருதயம் ஹ்ருதா(உள்ளமும் உள்ளமும் பேசிக்கொள்ளுமே )-நாம் ஆரோனையும் இன்னாதாகிறது என் – நம் பரிகரம் நமக்கு உதவுகிறது இல்லை -என்கிறார்கள் – இவள் விலக்க வேணுமோ -இக் கண் உண்டாக அமையாதோ – அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவன் அக்கடலை கரை கண்டால் இறே நம்மைப் பார்ப்பது-மை இட்டு எழுதோம் -என்று இருக்கிற எங்களையும் மை இடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மை இடுவது – உன்னுடைய கண்ணில் அழகும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் – அது இழவுக்கு உடலாவதே –நீ யுன் மணாளனை-மைத்தடம் கண்ணினாய்- உன்னுடைய கண்ணில் புகரும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –அது இழவுக்கு உடலாவதேஇக் கடலைக் கரை கண்டால் இறே நம் அநீதியை அவன் பார்ப்பதுஅல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -(3-10-8) மண நோக்கம் உண்டான்(பெரிய திருமொழி -8-10) ந ஜீவேயம் க்ஷணம் அபி –என்னப் பண்ணுமவை இறேமையிட்டு எழுதோம் என்றவர்களையும் உன்படி ஆக்க வேண்டாவோ
உன்னாலே அவனைப் பெறுகை தவிர்ந்து இப்போது மற்றப்படி செய்கை யாய்த்தோ

கஞ்சன்‌ புணர்பினில்‌ வந்த கடிய சகடம்‌ உதைத்து -2-4-4-
கள்ளச்‌ சகடம்‌ கலக்கழியக் காலோச்சி”்‌–6-

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 – கம்ச ப்ரேரிதனாய் வந்த அதி க்ரூரரான சகடாசுரனை –முலை வரவு தாழ்த்தி சீறி நிமிர்த்த திருவடிகளாலே கலக்கு அழியும்படியாக உதைத்து–

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி – பேயாகில் ஆராய்ந்து கொள்ளலாம்- தாயே ரஷையாக வைத்த சகடம் – அசூர ஆவேசத்தால் பிறந்த அபாயம் ஆகையாலே -கள்ளச் சகடம் -என்கிறது –சகடமானது கலக்கழியும் படி திருவடிகளை ஓச்சி -முலை வரவு தாழ்ந்தது என்று- மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது –இப்பொழுது இவ்வபதானங்கள் சொல்லுகிறது- பிறந்த அபாயங்கள் கேட்டு துணுக என்று எழுந்து இருக்கைக்காக-கள்ளச் சகடம்
கிருத்ரிம சகடம் ஆனதுகலக்கழிய காலோச்சிகட்டு அழிந்து சிதறும்படியாக திருவடிகளை நிமிர்த்து(இங்கும் கள்ளச் சகடம் வெளியில் உள்ளார் வார்த்தை –கலக்கழிய காலோச்சி உள்ளே இருப்பவள் வார்த்தை )காவலாக வைத்த சகடம் அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக அது கட்டு அழிந்து
சிதறும் படியாக திருவடிகளாலே உதைத்து( திருக் கால் ஆண்ட பெருமான் -ஊர்ந்த சகடத்தை உதைத்த பாதத்தான்-ப்ரேமத்தாலே பயப்படுகைக்கு உடலாய் அச்சம் கெடுகைக்கும் உடலாய் இருக்கும்
பாதத்தன் -இவன் முஃயத்தாலே உறங்கத் திருவடிகளாலே பெற்றோம் -(திண் கழல் இறே )
அவனுடைய ஆபத்துக்கும் சேஷ பூதனுடைய ஆபத்துக்கும் ரக்ஷகமான திருவடிகள் – திருக் காலாண்ட பெருமான் (6-9-) ராமாவதாரத்துக்கு இளைய பெருமாளைப் போலகள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
காம குரோதங்களையும் நிவர்ப்பித்து

பேயின்‌ முலையுண்ட பிள்ளை இவன்‌ முன்னம்‌?-2-5-2-
பேய்முலை நஞ்சுண்டு -6-

பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும்  மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்
தூ மணி வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-2 – முன்னம் தாய் வடிவு கொண்டு வந்த பூதனை உடைய முலையை – தாய் முலை உண்ணுமா போலே இருந்து உண்ட முக்தன் இவன் – இவனுக்கு பிள்ளைத் தனத்தில் புரை( குறை ) இல்லை யாகில் -அவள் முடிந்த படி என் என்னில் – பிரதி கூலித்து கிட்டினார் முடிய கடவ வஸ்து ஸ்வாபத்தாலே முடிந்த இத்தனை –

பேய் முலை நஞ்சுண்டு – பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து-
இத்தலையை முடிக்க வந்தவள் தன்னோடே போம்படி பண்ணி –போது விடிந்தது பெண்ணே எழுந்திரு என்ன இவள் துணுக் என்று புறப்படுகைக்காகபுகுந்த அபாயம் கேட்டிலையோபெரியாழ்வாரோடு குடல் துவக்குடையார்க்கு உறங்க விரகு உண்டோ -என்கிறார்கள்(பேய் முலை நஞ்சு இது வெளியில் உள்ளார் வார்த்தை – உண்டு-இது உள்ளே இருப்பவள் வார்த்தை )சர்வேஸ்வரனை துக்க நிவர்த்தகன் என்று இருப்பார் அல்லாதார் இறே -பெரியாழ்வார் சம்பந்திகள்அங்குத்தைக்கு என் புகுகிறதோ என்று வயிறு பிடிக்குமவர்கள் இறேஅவள் பய நிவ்ருத்தி அளவும் அனுசந்தித்து பயம் கெட்டுக் கிடக்கிறாள்பேய் உண்டு -பிரகிருதிமுலை உண்டு -அஹங்கார மமகாரங்கள்நஞ்சுண்டு -அவைகள் ஆகிற விஷம்
உண்டு -அனுபவித்து –அதாவதுபிரகிருதி சம்பந்த நிபந்தமாய் சேதனருக்கு வரும் அஹங்கார மமகாரங்களைப் போக்கி -என்றபடி –பேய் பால் உண்டான் என்று அனுசந்திக்க தாய் பால் குடிக்க பிறக்க வேண்டாமே-

பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின்‌ வாய் கீண்டான்‌’ -2-6-3-
புள்ளின்‌ வாய்‌ கீண்டானை’ -13-

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-வருகிற போதை வேகத்தை பொறுத்து நின்று தன்னை நலிவதாக எதிரே  வந்த பகாசுரனுடைய வாயை கிழித்தவன்

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )- கள்ளச் சகடம் -என்னுமா போலே – மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் – பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல
அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் ) கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் – தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்- அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –புள்ளின் வாய் கீண்டானை –ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸ்வ அனுபவ விரோதியான காமாதி தோஷ நிவர்தகனாய்

புண்ணில்‌ புளிப்பெய்தாலொக்கும்‌ தீமை” -2-9-1-
புண்ணில்‌ புளிப்பெய்தால் போலப்‌ புறம்‌ நின்று அழகு பேசாதே” –13-1-

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான்  மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 –புண்ணிலே புளியை குறந்திட்டால் கரிக்குமா போலே துஸ்ஸகமான தீமைகளை செய்யா நின்றால் எங்கனே பொறுப்பது -நீங்கள் ஓரகத்தில் உள்ளார் அன்றோ இப்படி சொல்லுகிறிகோள்-உங்கள் ஓரகத்திலும் இப்படி நின்று இவன் தீம்புகளை செய்கிறான் ஆகாதே என்ன –-எங்கள் அகம் ஒன்றிலும் அன்று –அகம் தோறும் இப்படி இருந்துள்ள தீமைகளை செய்ய வல்லவன் காண் இவன் என்கிறார்கள் –
புரையாவது -க்ரஹம்–வீப்சையால் அகம் தோறும் என்றபடி –-ஆல்-அசைஅண்ணல் கண்ணான் –
அண்ணல் என்றது ஸ்வாமி வாசகம்
-அண்ணல் கண்ணான் என்றது ஸ்வாமித்வ ஸூசுகமான கண்ணை உடையவன் என்றபடி –-இத்தால் இவ்விடத்தில் ஸ்வாமி என்றது –-க்ரித்ரிமர்க்கு தலைவன் என்றபடியாய்-இதுக்கு பிரகாசமான கண்ணை உடையவன் என்றது ஆய்த்து –அன்றிக்கே –-அண்ணற்கு என்றது  அண்ணனுக்கு என்றபடியாய்-அண்ணான் என்றது -அண்ணியன் ஆகாதவன் என்றபடியாய்-இப்படி தீம்புகளை செய்கையாலே-தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான் (10-7)-என்கிறபடியே-சாதுவாய் திரியும் நம்பி மூத்த பிரானுக்கும் தனக்கும் ஒரு சேர்த்தி இல்லாதவன் என்னவுமாம் –

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே–13-1-புண்ணின் விவரத்திலே துளையிலே -புளியைப் பிரவேசிப்பித்தால் போலே-புறம் நின்று – வாசலுக்கு புறம்பு ஓன்று சொல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறாள் அல்லள்-என்னையும் அவனையும் சேர்க்கும் கூற்றிலே –-இதுவே அகம் –-நின்று வார்த்தை சொல்லுமது ஒழிய- மீட்கும் கூற்றிலே நின்று –புறம் நின்று -வார்த்தை சொல்லாதே-என்னையும் அவனோடு சேர்க்கைக்கு ஈடான வார்த்தை சொல்லுகை அன்றிக்கே-எனக்கு அவன் பக்கல் பிராவண்யத்தை குலைக்கு ஈடான வார்த்தை சொல்லாதே-அழகு சொல்லாதே –இப்போது மீட்கப் பார்க்கிறவர்கள் அவனுடைய சௌந்தர்யத்தைச் சொல்லுகிறார்கள் அன்றே–அவனிடம் ஈடுபாட்டைத் தவிர்ந்து மேல் வரும் நன்மைகளைப் பாராய் -என்று சொல்லாதீர்கள் -என்ற படி–இப்போது இவாற்றாமையைப் பரிஹரித்தால் –-மேல் வரும் நன்மைகளைப் பாராய் என்று அவற்றைச் சொல்லா நில்லாதே –அழகு -நன்மைபேசாதே-இது சப்த மாத்ரமாய் அர்த்த ஸ்பர்சி அன்று –காதிலே தான் விழும் நெஞ்சில் படாது என்றபடி – நீங்கள் இதில் படும் நேர்த்தியை -ஸ்ரமத்தை -செயலிலே நேரப் பாருங்கோள்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன
உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ – முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே-சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்-பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே-பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி –

வங்கம்‌ விட்டுலவும்‌ கடற்பள்ளி மாயனை”?-4-5-6-
வங்கக்‌ கடல்கடைந்த மாதவனை-30-

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை 
சங்கம் விட்டவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன் 
வங்கம் விட்டு வுலவும்  கடல் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து 
ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே -4 -5-6 –மரக்கலம் உலவா நின்றுள்ள -கடலில் கண் வளர்ந்து அருளுகிற -ஆச்சர்ய பூதனை –அன்றிக்கே –மாயனை -என்றது -ஞானமாய் –தன் இச்சையால் கண் வளர்ந்து அருளுகிறவன்-என்றபடி –குரை கடல் மேல் அரவணை மேல் குல வரை போல் பள்ளி கொண்டு -என்னக் கடவது இறே –மது சூதனை- மதுவை நிரசித்தால் போலே ஆஸ்ரித விரோதியைப் போக்குமவனே  வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல்  துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே  வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் ( 8-10 )-என்னக் கடவது இறே 

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்–30-கடல் கடையா நிற்க மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் –கடைந்த போது சுழன்று வருகையாலே கடலடைய மரக்கலமாய் நின்றபடி -என்றுமாம் – பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்றுஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்றுதேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டுபெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக கடல் கடைந்தபடி –ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த கிருஷ்ணன் உடைய ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே சொல்லுகிறார்கள் –தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதைப் பெற்று அப்போது உகப்போடே இருந்தால் போலே
ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி- பெண்களைப் பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறேஅன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலேஇங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்கன்னிகைகளைப் பெறக் கடவனாய் இறே இருப்பதுபாற் கடலில் பையத் துயின்ற (2)-என்று ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
அதில் கிடந்து முன் கடைந்த -(திருச்சந்த )ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் -என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கைஅவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது
அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை-அறுப்புண்டான்

மானிட சாதியில்‌ தோன்றிற்று ஒர்‌ மானிட சாதியை.”–மானிட சாதியின்‌ பேரிட்டால்‌ மறுமைக்கில்லை?! -4-6-4-
மானிடவர்க்கென்று பேச்சுப்‌ படில்‌ வாழகில்லேன் -1-5-

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை 
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
 
வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால் 
நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 4-மனுஷ்ய ஜாதியில் உத்பன்னமான தொரு மனுஷ்ய ஜந்துவை  -ஆத்மா கர்ம அனுகுணமாக தேவாதி யோனிகள் தோறும் பிறக்கக் கடவன் ஆகையாலே -புண்ய பாபங்கள் இரண்டையும் அனுபவிக்கைக்கும்  ஆர்ஜிக்கைக்கும் -உறுப்பாக ஆய்த்து -மனுஷ்ய யோனியில் பிறந்தது – ஆகையால் இப்படி இருக்கிற மனுஷ்ய ஜாதியிலே உத்பன்னமானதொரு ஜந்துவை  -த்ருஷ்ட பிரயோஜனத்தை நச்சி -கர்ம வச்யமான மனுஷ்ய ஜாதியில் ஒன்றின்  பேர் இட்டால் ஐஹிகத்தில் சில பிரயோஜனம் சித்திக்கிலும் மறுமைக்கு  ஒரு பிரயோஜனம் இல்லை -மறுமை யாவது அத்ருஷ்டம் 

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5–நானும் அறியாது இருக்க –அவனும் அறியாது இருக்க –மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம் பரிமாறும் ஆகில்- அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —உனக்கே நாம் ஆட்செய்வோம் –என்ற உறுதி உள்ள இவளுக்கு –ராவணன் மாயா சிரசைக் காட்டின போது இதர ஸ்திரீகளோ பாதி தரித்து இருந்ததுக்கு கருத்து என் -என்று ஜீயரைக் கேட்க – இவளுடைய சத்தைக்கு ஹேது பெருமாள் சத்தை யாய்த்து – அதற்கு தைவம் அறிய ஒரு குறை இல்லாமையாலே தரித்து இருந்தாள்-
இவள் சத்தைக்கு ஹேது பிரதிபத்தி அபிரதிபத்திகள் இல்லை அத்தலையில் சத்தை யாய்த்து -என்று அருளி செய்வர் –

செப்போது மென்முலையார்கள்‌ சிறுசோறும்‌ இல்லும்‌ சிதைத்திட்டு -2-8-3-
நாமமாயிரமேத்த நின்ற நாராயணா! நரனே?“ 2-1-என்று கண்ணனைத்‌ தாங்கள்‌ இழைத்த சிற்றிலைச்‌ சிதைக்க வேண்டாம்‌ என்று ஒரு பதிகத்தையே(2பதிகம் )அமைத்துள்ளார்

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும்  இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 -3-செப்பு என்று சொல்லும்படியான  சந்நிவேசத்தை உடைத்தாய் -அது போலே கடினமாய் இருக்கை அன்றிகே மிருதுவாய் இருக்கும் முலையை உடையவர்களுடைய லீலார்த்தமாக மணல் கொழித்து சமைத்த சிறு சோற்றையும்
கொட்டகத்தையும் அழித்திட்டு பெண்களோடே கை பிணக்கிட்டு திரிய வேண்டா காண் -என்று
அப்போது நான் கோபித்தவாறே- நான் பிடிக்குதல் அடிக்குதல் செய்யப் போகிறேன் என்று
என் முன் நிற்க அஞ்சி போய் உனக்கு இனிதாக சமைத்து வைத்த அடிசிலும் அமுது செய்திலை–

நமக்கு அசாதாரணைகளாய் இருக்கும் இவர்கள் தேவதாந்த்ரங்களின் காலில் விழப் பார்த்து இருக்கை நமக்கு மிகவும் பொல்லாங்கு என்று திரு உள்ளம் நொந்து தளும்பி முன் மடுவின் கரையிலே யானைக்கு உதவினால் போலே கடுக வந்து ஆய்ச்சிகட்கு முகம் காட்ட-அவர்களும் இவனை காணாதவர்கள் போலே அந்ய பரரையாய் இருக்கையைக் காட்டி சிற்றில் இழைக்க அந்த செயலும் காமாஸ்ரயணம் போலே இவனுக்கு அநிஷ்டம் ஆதலால் அவர்கள் இழைக்கும் சிற்றிலை இவன் அழிப்பதாக முயற்சி செய்ய-அவர்கள் அதுவும் வேண்டா என்ன இவன் வேணும் என்ன இப்படி நடுவே ஒரு மகா பாரதம் நடந்தது–பிறகு புணர்ச்சி நேர்ந்து அது தானும் பிரிவிலே தலைக் கட்டி நின்ற வாற்றை
ஆண்டாள் அனுகரித்து அருளிச் செய்யும் திரு மொழி இது–ஒன்பதாம் பாட்டில் -எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் -என்பதால் புணர்ச்சி நேர்ந்த படி தோற்றும்-கோழி அழைப்பதன் முன்னம் -அடுத்த திருமொழியில் அமைக்கு நோக்கும் இடத்து பிரிவில் தலைக் கட்டினபடி தோற்றும்-

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-நான் உங்களை நெஞ்சாலும் நினைக்காமல் இருக்க என்னை எதிர் பார்த்து நீங்கள் சிற்றில் இழைக்க – உனக்காக சிற்றில் இழைக்க வில்லை- காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்-காம தேவன் வீதி வலம் வரக் கூடும் என்று சொல்ல-நீங்கள் சிற்றில் இளைப்பது அந்ய அர்த்தமாகில் அதனை நான் அழிப்பதும் அந்ய அர்த்தம் தான் என்று அளிக்கப் புக ஆய்சிகள் அழிக்க வேண்டா என்று விலக்குகிறார்கள்

“இன்றுமுற்று முதுகு நோவ –2-2-என்பதற்குக் கருத்து எங்கள் முதுகை நோவு தீரச்சற்றுப் பிடிக்கலாகாதோ? என்பதாம்.-இச் சிற்றிலை இழைக்கப் பட்ட பாடு பன்னி உரைக்கும் கால் பாரதமாம் –
முதுகு நோவ தீர சற்று பிடிக்கல் ஆகாதோ-

வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
—2-3-

செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-4-பேச்சும் செய்கையும்
தாழ்ந்த வார்த்தைகளும் தாழ்ந்த வியாபாரங்களும் பிரானே எங்கள் திறத்திலே அடியேன் குடியேன் என்றால் போலே சொல்லும் அதி விநய வார்த்தைகளும் கள்ளக் குழைச்சல்களும் எங்களை மிகவும் மயக்குகின்றனவே இதற்கு எல்லாம் அடி உன் திருமுக மண்டலம் இறே-இப்படிப் பட்ட மயக்கத்தை உண்டு பண்ணுகைக்கு உன் திருமுகம் அம்மான் பொடியோ-

நாங்கள் இளைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்-
-2-5-நாங்கள் இளைத்த இக் கோலத்தை அழித்தாயேஆகிலும் சர்வ ஸ்மாத் பரனானவன் இப்படி எல்லாம் செய்யப் பெறுவதே
ஈது என்ன சௌசீல்யம் என்று நெஞ்சு உருகிப் போம் இத்தனை ஒழிய ரோஷம் என்று பேர் இடும்படி ஒரு விகாரம் பெற்றோம் ஆகோம்-
ஆகிலும் உன் முகத்தில் உள்ளவை மெய்யே கண்கள் ஆகில்
நீ இந்த சிற்றிலை அழிக்க ஒருப்பட மாட்டாய்-இச் சிற்றிலை அன்புடன் நோக்குகை அன்றோ
கண் படைத்ததற்குபிரயோஜனம் என்கிறார்கள்-உரோடம் -ரோஷம்-

முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது
கற்றிலோம்-
-2-6-சிற்றில் விஷயமாக ஒரு வியாஜ்யத்தை வைத்துக் கொண்டு நீ சிறிதுண்டு –
நீ செய்யும் செய்திகள் சில உள-திண்ணென நாமது கற்றிலோம்-அவற்றை நாங்கள் அழகியதாக அப்யசித்தோம் அல்லோம்-கண்ண பிரான் இன்னது செய்தான் என்று பிறருக்கு சொல்ல முடியாத படி சில குறும்புகளைச் செய்ய அது கண்ட ஆய்ச்சிகள் அப்பா நெஞ்சில் நினைத்தபடி சில செய்யும் அளவேயோ வேண்டுவது-எங்கள் பருவத்தை சிறிது ஆராய வேண்டாவோ-கொங்கை இன்னும் குவிந்து எழுந்து இலாத எங்கள் திறத்து நீ செய்யும் குறும்புகளுக்கு நாங்கள் அறியும்படி குருகுல வாசம் பண்ணி ஒன்றும் கற்றிலோம்

ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
——2-7-கண்ண பிரான் ஆய்ச்சிமார்களை நோக்கி சில குறும்பு வார்த்தைகளைச் சொல்லி சிற்றில் அழித்து நலிய அதுகண்ட அவர்கள் -அப்பனே
வார்த்தைகளின் வாசியை அறிய வல்லவர்கள் இடத்தில் நீ இந்த குறும்பு வார்த்தைகளைச் சொல்ல
அவர்கள் ஒன்பது சொல்ல மேன் மேலே வார்த்தைகள் பெருகி பரம ரசமாகச் செல்லும் கபடம் அற்ற
வார்த்தைகளின் கருத்தையும் அறிய மாட்டாத எங்கள் திறத்திலே அந்த பேச்சுகளைப் பேசி நலிவதனால் உனக்கு என்ன பயன் உண்டு என்று சொல்லச் செய்தேயும் அவன் மேன் மேலும் சிற்றிலை சிதைக்கப் புக நின் திருமேல் ஆணை -என்று பிராட்டி மேல் ஆணை இட்டு விலக்கப் பார்க்கிறார்கள்-

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய்
–2-8-கண்ணபிரான், ‘ஆய்ச்சிகாள்! இச்சிற்றிலை நான் காலாலும் கையாலும் உதைத்துச் சிதைப்பதினால் எனக்கு ஒரு பயனுமில்லை யென்பது மெய்யே உங்களைத் தீண்டுவதன்றோ எனக்குப் பிரயோஜனம்’ என்று அவர்களைத் தீண்ட-அது கண்டு ஆய்ச்சிகள், ‘ஹரி, ஹரி! நீ எத்தனை தூரிரஸ்த்ரிகளோடு கலந்துவந்தாயோ தெரியாது, எங்கள் மேல் தீண்டாதே கடக்க நில்’ என்ன’-அதுகேட்ட கண்ணன் ‘நான் ஸர்வேச்வரனல்லேனோ? என்னுடைய ஸ்பர்சம் உங்களுக்கு நலிவாய் விட்டதோ? நான் ஈச்வரனென்பதில் உங்களுக்கு ஸம்வயமுண்டாகில் என் திவ்யாயுதத்தைப் பாருங்கள்” என்று திருக்கையிற் சக்கரந் தோற்ற நின்றான்-

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
–2-9-இவன் தனித்தனியே ஒவ்வொரு ஆய்ச்சியிடத்துஞ் சென்று,-நங்காய்! எங்ஙனே இங்கு வந்தாய்? கால்கள் நோகின்றனவோ? நானும் நீயுங் கலந்துவரப் பெற்றிலோமே!’-என்றாற்போலே சிலவற்றைச் சொல்லி முகத்தை விளங்கக்காட்டினனென்க.-அங்ஙனஞ் சொல்லக்கேட்ட ஆய்ச்சிகள் ‘நமது எண்ணம் வீணாயொழிந்ததே!’ என்று தங்கள் தோல்வியை நினைத்து லஜ்ஜிக்க, இவன் புன்முறுவல் செய்தான்.-நாம் இவனுக்குத் தோற்று வெட்கமடைகின்றமையை இவன் அறியலாகாது’ அந்யபரதையைக் காட்டுவோம்’ என்று அங்கேயிருந்து சிற்றிலிழைக்கப் புக்கார்கள்.-அதுகண்ட கண்ணபிரான் ‘இங்கே நம் கண்வட்டத்திலே இவர்கள் அந்யபரராவதென்!’ என்று சிவிட்கென்று, நினைக்கைக்கு நெஞ்சுங் கூடாதே வியாபாரிக்கைக்குக் கையுங்கூடாதபடியாகச் சிலவற்றைச் செய்தான்; (சிற்றிலோடு இத்யாதி.) உனக்குப் பசுமேய்க்கையன்றோ தொழில்; பெண்களை நலிகையும் பணியோ? என்கிறார்கள். ‘கோவிந்தா!’ என்ற விளியில் நோக்கு.–ஆவது ஆயிடுக -என்று பெண்களின் பரியட்டங்களைக் கிழித்து அவர்கள் உடம்பு கொண்டு தாய்மார் முன் நிற்க ஒண்ணாதபடி பண்ணினான் – எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என்
சொல்லார் -என்கிறார்கள்-என்னோடு அணைகை உங்களுக்கு அசஹ்யமாய் இருந்ததோ
யோகிகளும் என் உடம்போடு அணைக்க ஆசைப்பட -என்ன உன்னோடு சம்ச்லேஷிக்கை எங்களுக்கு மிகவும் அழகிதே-ஆனாலும் அருகில் உள்ளார்க்கு அஞ்ச வேண்டுமே -என்றார்கள்-இத்தால் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்லுகிறதுஆழ்வார்கள் ஆண்களாய் இருந்துவைத்து
பெண்ணுடை உடுத்து மின்னிடை மடவார் முதலிய திருவாய் மொழிகளிலே என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி-ஒரு நான்று தடி பிணக்கே -என்றால் போல் சொல்லும் பாசுரங்கள் போல் அன்றிக்கே பெண் பிள்ளை தனக்கே அதுக்கு மேலே ஒரு மென்மை பிறந்து வார்த்தை சொல்லும் வேறுபாடு என்னே -என்று ஈடுபட்டு உருகுவாராம் நம்பிள்ளை-

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே
–2-10-நிகமத்தில்
இப்பதிகம் ஓத வல்லார் பெரும் பேற்றை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்-சீதை வாய் அமுதம் உண்டாய் -என்ற விளிச் சொல்லும்-ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை -என்பதையும் நோக்குக
பருவம் நிரம்பினவள் உடன் ரசானுபவம் பண்ணுபவன் எல்லாரும் திரளும் இடத்திலே மறைக்க வேண்டியவற்றை மறைக்கக்கூட தெரியாத தோற்றினபடி விளையாடுகிற பருவம் நிரம்பாத பெண்களுடன் போராடுகை விரூபம் என்று உணர்த்தியவாறு-

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை சேற்றாலெறிந்து வளை துகில்‌ கைக் கொண்டு”–2-10-1-என்று பெரியாழ்வார்‌ உரைத்தவற்றிலிருந்து கோதை நாச்சியார்‌,
கோழியழைப்பதன்‌ முன்னம்‌ குடைந்து நீராடுவான்‌ போந்தோம்‌
ஆழியஞ்செல்வன்‌ எழுந்தான்‌ அரவணை மேல்‌ பள்ளி கொண்டாய்‌ !
ஏழையமை யாற்றவும்‌ பட்டோம்‌ இனி யென்றும்‌ பொய்கைக்கு வாரோம்‌
தோழியும்‌ நானும்‌ தொழுதோம்‌ துகிலைப்‌
பணித்தருளாயே -3-1-என்று கண்ணன்‌ கவர்ந்து கொண்ட கூறைகளைக்‌ கன்னியர்‌ கேட்பதாக ஒரு பதிகம்‌(3) பாடியுள்ளார்

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில்  கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்  
-2 -10-1 –சிலர் எங்களது -என்று அபிமாநிக்கும் நிலத்திலே இருந்தோமோ –சர்வ சாதாரணமான ஸ்தலத்திலே அன்றோ நாங்கள் இருந்தது –இத்தால் ஏகாந்தமாய் -இவனுக்கு வந்து தீம்பு செய்ய ஒண்ணாதபடி பலரும் போவார் வருவாரான ஸ்தலத்திலே அன்றோ-நாங்கள் அந்ய பரைகள் அன்றோ – தன் இடையாட்டம் பட்டமோ – நாங்கள் முன் தீமை செய்தோம் ஆகிலுமாம் இறே-தன்னைக் கடைக் கண்ணால் கணிசித்தோமோ – தன்னை இங்கு இட்டு (இங்கிட்டு இங்கே )எண்ணினார் இல்லை கிடீர் –சேற்றை இட்டு எறிந்து – பிறர் அறியாதபடி -கைகளாலே ஸ்பர்சித்தால் ஆகாதோ-இது ஏது என்று பிறர் கண்டு கேட்கும்படி சேற்றை இட்டு எறிய வேணுமோ –நாங்கள் குளிகைக்காக கழற்றி இட்டு வைத்த வளைகளையும் துகில்களையும்  வாரிக் கொண்டு
இடைப் பென்கள் ஆகையாலே ஆபரணங்களையும் பரிவட்டங்களையும் களைந்து இட்டு வைத்து இறே குளிப்பது-துடர அகப்படாதே காற்றிலும் காட்டிலும் கடியனாக ஓடி – தன் ஜீவனத்தில் ஒன்றும் குறையாடதபடி கொண்டால் – எங்கள் ஜீவனத்தையும் கொண்டு போக வேணுமோ –
அவனுக்கு ஜீவனம் -இவர்களுடைய வளையல்களும் துகில்களும் –இவர்களுக்கு ஜீவனம் –அவன் தன்னுடைய வடிவு இறே
(திருக்கோளூர் பதிகம் -இதே போல் -தனது ஜீவனம் தேடித் போனாள் – அவள் தானே திருத்தாயாருக்கு ஜீவனம் -முகத்தை வைத்து போகலாகாதோ )-பின் தொடர்ந்து சென்றாலும் காணப் போகாதபடி தன் அகத்திலே சென்று புக்கு வழி பறித்து அசாதாரண  ஸ்தலத்திலே ஆய்த்து இருப்பது-நாங்கள் தன் பேரை சொல்லி அழைத்தாலும் -அதுக்கு ஒரு மாற்றம் தானும் சொல்லுகிறான் இல்லை –
வார்த்தையும் -ஏதேனும் வளையும் துகிலுமோ (உம்மைத்தொகை -வளை துகில் தர வில்லை –வார்த்தையும் தர வில்லை-மாற்றமும் தாராரோ -திருப்பாவை -தூ மணி மாட பாசுரம் போல் )
ஒரு வாரத்தை தன்னை ஆகிலும் தந்தால் ஆகாதோ – இப்படி  ஒரு வார்த்தையும் உட்பட சொல்லாதவனாலே இன்று முடிவோம் – ஒரு வார்த்தை பேரில் ஜீவிப்பார் போலே காணும்
-தருவன் என்னுதல் -தாரேன் என்னுதல் -வளை இடையாட்டமாக ஒன்றும் சொல்லாதவனாலே இன்று முடிவோம்

வடிவார்சோதி வலத்துறையுஞ்‌ சுடராழியும்‌ பல்லாண்டு படைபோர்‌ புக்கு முழங்கும்‌ அப்பாஞ்ச சன்னியமும்‌ பல்லாண்டே-1-
பூங்கொள்‌ திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்‌ ‘ சார்ங்கவில்‌ நாணொலியும்‌ தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ-9-9-

வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்குமுழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி கல் மதிள் இட்டால் போலே இருக்கிற ஆழ்வார்களைப்-பாரீர் என்ன -அவர்களோட்டை சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களா சாசனம்-பண்ணுகிறார் –-வடிவார் சோதி – காளமேக நிபச்யாமமான திருமேனி ஸ்வ தேஜஸ் ஸாலே வ்யாப்தமாம் படியாய் இருக்கை –-புருஷம் க்ருஷ்ண பிங்களம் -என்னும் படியாய் இறே இருப்பது-தேஜோ ராசியாய் இருக்கும் வடிவை உடையவன் என்னவுமாம்-வலத் துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –-வலம் அருகே நித்யவாசம் பண்ணுமவனாய் -பிறருக்கு அநபி பவநீயனாய் இருக்கிற ஆழ்வானோட்டை சேர்த்தி நித்தியமாய் செல்ல வேணும் என்கிறார் –
ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட -ஆபரண புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார் என்கை –
படை போர் இத்யாதி – நம் கையை விடாதே த்வநியாலே எதிரிகளை யழிக்கும் இவனைப் பாரீர் என்ன –
படை போர் முழங்கும் –சேனையை உடையயுத்தத்திலே புக்கு முழங்கும் என்னுதல்
யுத்தத்திலே ஆயுதமாக புக்கு முழங்கும் என்னுதல்-முழங்கும் சகோஷொ  தார்த்தராஷ்டாராணாம்  ஹ்ருதயா நிவ்யதாரயத் -என்றும் – யஸ்ய நாதேன தைத்யானாம் பலஹா நிரஜாயத-என்றும் பிரதிகூலர் மண் உண்ணும்படியும் அனுகூலர் வாழும்படியாய் இறே த்வனி இருப்பது -இத் த்வனி இவருக்கு பய ஸ்தானமான படி-என் என்னில் -த்வனி வழியே நின்று இடம் காட்டிக்  என்று பயப்படுகிறார்-அப் பாஞ்ச சன்னியமும் –-முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் – புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்-

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ
–9-9-இரண்டாவது அவதாரத்தில் பிராட்டிமார்க்கு உதவினது தனக்கு ஒருத்திக்குமே வேண்டும்படி யாய்த்து இவள் தசை-சிஸூ பாலன் ஸ்வயம் வரார்த்தமாக ஒருப்பட்ட சமயத்தில் புறச் சோலையிலே-ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானது கோஷமானது-வந்து செவிப்பட்டு தரிப்பித்தது-ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை-ராவணன் மாயா சிரசைக் காட்டின போது ஸ்ரீ சார்ங்கத்தின் ஜய கோஷமானது வந்து செவிப்பட்டு –இரண்டு அவதாரத்தில் உள்ளவையும் மடுத்து ஒலிக்க வேண்டும் படி யாய்த்து இவள் விடாய்- அவர்கள் அளவல்ல வாய்த்து இவள் ஆற்றாமை –தரிப்பித்தது ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை

நல்ல என்‌ தோழி! நாகணையிசை நம்பரர்‌ * செல்வர்‌ பெரியர்‌ சிறுமானிடவர்‌ நாம்‌ செய்வதென்‌? வில்லிபுதுவை விட்டுசித்தர்‌ தங்கள்‌ தேவரை வல்லபரிசு வருவிப்பரேல்‌ அது காண்டுமே -10-10-

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-நல்ல வென் தோழீ – என்னிலும் என் இழவுக்கு நொந்து இருப்பாய் நீயே இறே-நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்-அநந்த சாயியாய் -ஸ்ரீ யபதியுமாய் -உயர்ந்தார் ஒருத்தரை இருக்கிறவரை -அதி ஷூத்ரராய் இருக்கிற நம்மால்-செய்யலாவது உண்டோ –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சரணம் புக ஒருப்பட்டவர் அதுக்கு உறுப்பாக –-அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்-தன் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தவை தன்னையும் இழவுக்கு உடலாகச் சொல்லி கை வாங்கும் படி காணும் கண்ணாஞ்சுழலை இட்ட படி –நாகணை மிசை--அநந்த சாயியாய் இருக்கைக்கு மேற்பட இல்லை இறே ஒருவனுக்கு ஏற்றத்துக்கு–நம் பரர் –அநந்ய பரமான வாக்யங்களாலே பிரசித்தமான பரத்வத்தை உடையவர்-நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரம் ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர —இத்யாதிகளில் -படியே-செல்வர் –ஸ்ரீ யபதிகள்-அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -திருவாய் -2-8-1- ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்கிறபடியே ஆகையாலே–பெரியர் –
நமக்கும் அவனுக்கும் பர்வத பரம அணுக்களோட்டை வாசி போரும்-சிறு மானிடவர் – தேவ யோநியிலே பிறந்து சிறிது அணைய நிற்கையும்  அன்றிக்கே-ப்ராஜ்ஞராய் அவனோடு அணைய நிற்கவும் அன்றிக்கே அதி ஷூத்ரரான மனுஷ்யர் நாம் செய்வது என் முன்பே ஒரு வார்த்தை சொல்லி வைத்தார் என்பதையே கொண்டு நம்மாலே அவரை வளைக்கப் போமோ-ஆனால் நாம் இழந்தே போம் அத்தனையோ -என்ன -நமக்கு இழக்க வேண்டா காண் த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-பரதேன மஹா பாஹோ லஷ்மணேன யவீயஸா -யுத்த -41-4-என்றவனுக்குச் சொல்ல வேண்டுவதும் ஒரு விஷயம் உண்டு காண்-நீ பின்னையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தது என் என்ன-வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே– சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று-ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து – விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8– அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்–சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது -சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இறே இந்நாள் வரை கிடந்தது-தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து-பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்–பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –-வல்ல பரிசு வருவிப்பரேல் ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்-ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப்பண்ணவுமாம்-
வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம் திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்க வுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டுபதிகம்வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆரை  மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இறே-அன்றிக்கே நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்–வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி-அது காண்டுமே -அவ் வழியாலே பெறக் கடவோம்–பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்கு வைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர -நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்பல்லாண்டு இசைப்பாரே ––திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் -சத் சஹாவாசம் வேணும் –வேணும் –கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –உனக்கும் பாகவதருக்கும் பல்லாண்டு பாட பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் போல்வார் வேணும் –

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்--19-போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை-பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –போற்றி –புகழ்ந்து –வந்தோம்பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –புகழ்ந்துசத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய-என்று
மாற்றாரும் தங்களைத் தோற்பித்த வீர்யத்தை சொல்லி புகழ்வார்கள்-இவர்களும் தங்களை நலிந்த நலிவை சொல்லிப் புகழும் அத்தனை இறே –எங்களைத் தோற்பித்த குணங்களை சொல்லிப் புகழ்ந்து
அழித்தாய் யுன் திருவடியால் (6-2) -நின் தன்னால் நலிவே படுவோம் -என்று வருகை இறே யுள்ளது-

பிரானடிக் கீழ் பிரியாது -14-10
சாயை போலே அணுக்கர்களே -பெரியாழ்வார் திருமொழி -5-4-11-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –
ஸ்ரீ எம்பாரை சிலர் -இப் பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –நான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் – ஆகிலும் நீங்கள் கேட்ட இவ் அர்த்தம் போராது என்ன ஒண்ணாது –-இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல ஒண்ணாதபடி
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு – இப்பொழுது ஸ்ரீ உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
(ராமானுஜ பதச்சாயை தாமே இவ்வர்த்தம் அருளிச் செய்யும் படி ஆய்த்தே )தாமும் -என்கைக்கு அடி –
அவர்கள் ஏற்றதை நினைத்து-அதாவது – பிரயோஜனாந்தரங்களையும் -உபாயாந்தரங்களையும் -கணிசித்து – மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே – தத் காலத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே – கழிந்த காலத்துக்கும் மங்களா சாசனம் பண்ணுகை இறே ஏற்றம் –
(அன்று உலகு அளந்தாய் அடி போற்றி –இன்று யாம் வந்தோம் ஆண்டாள் போல் )
இப்படிக்கொத்த தம்மை தம்முடைய வம்சத்தில் ஏழு படி கால் இல்லை என்னும் இடத்தை ஏழாட்  காலம் பழிப்பிலோம்  -என்று அருளிச் செய்தார் இறே –பாடுகை யாவது – உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்கை-சாயை போலே என்றது – புருஷனுடைய சாயை அவன் புக்க இடத்தே புக்கு – புறப்பட்ட இடத்தே புறப்பட்டு –
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் இட்ட வழக்கமா போலே –இத் திரு மொழி கற்றார்க்கும்
தங்களுக்கு என்ன ஒரு பிரவ்ருத்தி நிவ்ருதிகள் இன்றிக்கே ஈஸ்வரனுக்கு அந்தரங்கர் ஆகப் பெறுவார்கள் –செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்று பாட வல்லார் நிழலும் அடி தாறுமாகப் பெறுவார்கள்
–அடி தாறு -திருவடிகளில் ரேகைகள்-சாயை போலே பாட வல்லார் – நிழல் உண்டாக பாட வல்லார்-நிழல் ஆவது -குளிர்த்தி-குளிரப் பாட வல்லார் என்றும் சொல்லுவார்கள்

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன –தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்-பரம பிராப்யமாய் – நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை – உடையவன் திருவடிகளிலே உனக்கே நாம் ஆட்  செய்வோம் என்று-பிரியாது என்றும் இருப்பரே— சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்-தாள் -என்கையாலே
பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

————————————————————————————–

ஸ்ரீ கோயிலே கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading