ஸ்ரீ தெளி விசும்பு திருநாடும் -தேசமும் -தேஹமும் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

ஸ்ரீ தெளி விசும்பு திருநாடு அடைந்து வாழ்ச்சி பெற காருணிகனான சர்வேஸ்வரன் நமக்குத் தேஹத்தைத்யும் சாஸ்திரங்களையும் தந்து அருளி
அவை கொண்டு நல்லது தீயது அறிந்து -அது அடியாகத் தீயவை அகற்றி -நன்மையைச் செய்து -திவ்ய தேசம் அடைந்து
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்து வாழ்வதே உஜ்ஜீவனம் -பரம புருஷார்த்தம்

தேசமாவது அவன் உகந்து அருளினை திவ்ய தேசங்கள் -அர்ச்சா ஸ்தலங்கள் -தேஹம் -ஞானியான சம்சாரியுடைய சரீரம்

ஸ்ரீ ராமாயணம் திருவாய்மொழி -இரண்டும் த்வயதார்த்த விவரண வ்யுத்க்ரம வியாக்யானம்
ஸ்ரீ சரணாகதி கத்யமும் ஸ்ரீ வசன பூஷணமும் த்வயார்த்த விவரண சக்ரம வியாக்யானம்

திருவாய் மொழியிலே முதல் இட்டு மூன்று பாத்தாலே த்வய பூர்வார்த்த விவரணம் பண்ணுகிறார்
உபதேச தஸா யாம் பலம் பூர்வ பாவி -ஸாதனம் பஸ்ஸாத் பாவி –

சரணாகதி கத்யத்திலும் ஸ்ரீ வசன பூஷணத்திலும் ச கிராமமாக த்வயம்ன் வியாக்யானம் -உபாய உபேய பரம் த்வயம் விஸதீ க்ரியதே
ப்ரபத்யே இத் யந்தேந பூர்வ கண்டோ வியாக்யாதா
அத உத்தர கண்டம் விவ்ருண்வந் –

தனக்குத் தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் -என்று ஆரம்பித்து உத்தர வாக்ய அர்த்தம் அருளிச் செய்பவர்
ச க்ரம வியாக்யானம் செய்யாதே -நம ஸ்ரீ மதே நாராயணாய -என்று வ்யுத்க்ரம வியாக்யானம் செய்து அருளுகிறார்
இதற்கு காரணம் சரணாகதி கத்ய ப்ரக்ரியை -நமஸ் ஸப்தார்த்தம் முன்னாக அருளிச் செய்தது போலவே இங்கும் –
இஷ்ட ப்ராப்தே அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வ கத்ய ரூபா அர்த்த க்ரமாத் பிரமம் நமஸ் ஸப்தார்த்த மாஹ-

நமஸ் -அநிஷ்ட நிவ்ருத்தி வாசகம் அன்றோ
அநிஷ்டமாவது எது என்னில்
இஷ்டா நிஷ்டங்கள் பகவானைப் பற்றிப் பார்க்க வேண்டும் -நம்மைக் குறித்துப் பார்க்கக் கூடாதே –
தன்னால் வரும் நன்மை விலைப்பாலைப் போலே -அவனாலே வரும் நன்மை முலைப்பாலைப் போலே -திருக்குருகைப் பிரான் பிள்ளான்
விலைப்பால் -ஒவ் பாதிகமாயும் விரசமும் அப்ராப்தமுமாய் இருக்கும்
முலைப்பால் -நிருபாதிகமாய் -ஸ ரஸமுமாய் -ப்ராப்தமுமாய் இருக்கும்

தனக்குத் தானே தேடும் நன்மை உபாய திசையிலும் உபேய அனுபவ திசையிலும் பிராப்தி தசையிலும் ஆகலாம்
இவை இத்தனையும் அவன் திரு உள்ளத்துக்குப் பொருந்தா விடில் இவை எத்தனையும் விரோதிகளே

ஏதன் நிவ்ருத்தி பிரார்த்தனையை நமஸ்
1-ஸ்ரீ பரதாழ்வானுக்கு நன்மை தானே தீமை யாயிற்று
2- தனக்குத் தானே தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும்
3-குணம் போலே தோஷ நிவ்ருத்தி
மூன்று ஸ்ரீ வசன பூஷண ஸூத்ரங்கள்
முந்தியது உபாய தசையில் விரோதியையும்
இடையது உபேய தசையில் விரோதியையும்
பிந்தியது பிராப்தி தசையில் விரோதியையும் கூறும்

பிராப்தி தசை -சரணாகதி செய்த பிறகு இவ்வுலகில் இருக்கும் நாள்
ஸகல வேத ஸங்க்ரஹம் திருமந்திரம்
ருச யஜும் ஷி சாமானி தந்தைவ அதர்வணாநி ச
சர்வம் அஷ்டாக்ஷர அந்தஸ் ஸ்த்தம் யச்சான்யதபி வாங்மயம்
நாராயணாயா -பர அனுபவம் -ஜீவனைப் பரன் அனுபவிக்கிற அனுபவம் -அவன் போக்தா இவன் போக்யன்
ஸ்வா தந்தர்யம் நிஜ ரக்ஷணம் சமுசிதா வ்ருத்திஸ் ச நான்ய உசிதா -தஸ்யை வேதி ஹரேர் விவிச்ய கதிதம் -ஸ்வஸ் யாபி நார்ஹம் தத -அஷ்ட ஸ்லோஹி

பெண் பிள்ளைகளையோ க்ருஹ ஷேத்ராதிகளையோ பிரார்த்திப்பது கூடாது போலவே பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவத்துக்குத் தடையான
தேஹ நிவ்ருத்தியையும் ஞானி பகவான் இடத்தில் பிரார்த்திக்கலாமா -என்ற விசாரம் ஸ்ரீ வசன பூஷணத்தில் உண்டே –
குணம் போலே தோஷ நிவ்ருத்தி

பகவான் விரும்புகிறான் ஞானியை -ஞானி விரும்புகிறான் பகவானை –
ஸ்வரூபம் வேறே ரூபம் வேறே
ஞானிகளான ஆழ்வார்கள் பகவத் ஸ்வரூபத்தைக் காட்டிலும் பகவத் விக்ரஹத்தையே ஆதரிப்பார்கள்

பகவானும் ஆழ்வார்களுடைய ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் அவர்கள் திருமேனியையே போர உகப்பன்
இருவரும் தேஹாத்ம அபிமானிகளே
பொய் கலவாது என் மெய் கலந்தானே -1-8-5-
அவனும் என்னை விட்டு என்னுடைய தேஹத்தையே விரும்பி நின்றான் -ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்
ஈஸ்வரன் தனக்கும் போக்ய தமமான நித்ய விக்ரஹ அனுபவத்தில் ஊற்றத்தாலே திருமங்கை ஆழ்வார் தம்மை
ஈஸ்வர விஷயத்தில் தேஹாத்ம வாதிகளாக அருளிச் செய்வார் -தேசிகன் -த்வய அதிகாரம் –
ஆக ஞானியினுடைய தேகம் பரமனுக்கு பரம அனுபாவ்யம் என்றது ஆயிற்று –
இத்தைக் கழித்து விடு என்ற பிரார்த்தனை அவன் விருப்பத்துக்கு மாறாக உள்ளதாகையாலே

சரீர நிவ்ருத்தி பிரார்த்தனை அநிஷ்டம் என்றதாயிற்று –

ஞானியினுடைய ஹ்ருதய வாச ப்ராப்திக்காகவே உகந்து அருளினை திவ்ய தேசங்கள் வாசம்-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -36–

மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேனே –திருவாய் -10-4-4–

இதில் நின்று -த்வா -ப்ரத்ய யாந்த நிர்த்தேசம் -திவ்ய தேசத்தில் இருப்பு -அங்கம் –
மனத்துள் இருந்தான் -ஹ்ருதய வாஸம் அங்கி –ஸாத்ய -ஸாதக பாவம் –

பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடி வந்து
என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ -பெரியாழ்வார் -5-4-7–அவனுடைய அத்ய ஆதாரம் தெளிவு

அங்குத்தை வாஸம் ஸாதனம் -இங்குத்தை வாஸம் ஸாத்யம் -ஞான ஹ்ருதய வாசம் ப்ராப்யம் -பேறு -ஸாத்யம்

ஞானி விக்ரஹம் பெற்ற பின்பு திவ்ய தேசங்களில் பகவானுடைய ஆதரம் தாழ்ந்து இருக்குமே

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–ஸ்ரீ பெரிய திருவந்தாதி -68-

———

வைவாஹிக க்ருஹாஸக்தனுக்கு ஸ்வ க்ருஹத்தில் ஸ்திதி போலவாம் –

ஸாத்யத்தின் போக்ய அதிசயம் காணக் காண அதிசயித்து இருக்கிற சாதன ஆதார அதிசயம் என்றும்
இவருடைய ஸாத்யம் அவனுக்கு ஸாதனமாய்
அவனுடைய ஸாத்யம் இவருக்குத் த்யாஜ்யமாய் இருக்கிறது -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் ஸ்ரீ வசன பூஷண வியாக்யானம் –

நீள் நகரம் அதுவே மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன் விளை –வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றிலமே -7-10-7-என்று
திவ்யதேசம் பிராப்யம் என்றும் பகவான் ப்ராபகம்
ப்ராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிக்கிறார் ஏழாம் பத்தில்
அருளிச் செய்த ஆழ்வார் தாமே எட்டாம் பத்தில் திவ்ய தேசமே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று ஸித்தாந்தீ கரித்து அருளிச் செய்கிறார்

திருக்கடித்தானத்தை ஏத்த நில்லா குறிக்கொண்மின் இடர் -8-6-6-
இரு கரையர் ஆக்காமல் –ப்ராப்ய ஏக பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில்

ஆக -சரீரத்தைக் கழித்து விடு என்கிற தோஷ நிவ்ருத்தி தானே காமினியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே
தோஷமே அபிமதமாய் இத்துடன் தன்னைப் புஜிக்க ஆதரிக்கும் அவனது போகத்தை விலக்கக் கூடாதே

அவனது உடைமையானபடியாலே இதுவும் ததீயத்வ ஆகாரத்தாலே உத்தேச்யம்
மதீயம் என்னில் விட்டு அகலவும் ததீயம் என்னில் இகழ்வறவும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -149-
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ -திருவாய் 3-4-1-

பேர் ஆயிரம் கொண்ட பீடு உடையாரின் ஒரு திரு நாமம் ருத்ர -ரோத யதீதி ருத்ர -ஸ்ரீ பட்டர் பாஷ்யம்
ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் ஸதா பரகுண ஆவிஷ்ட த்ரஷ்டவ்ய சர்வ தேஹி பி -ஸ்ரீ விஷ்ணு தத்வ ஸ்லோகம்

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –ஸ்ரீ பெருமாள் திருமொழி -2-3-
ஆனந்தக்கண்ணீர் -ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் அருளிச் செய்கிறார் -அடியார்களை அழச்செய்பவன் -ஆகையால் ருத்ரன் என்று அவன் திருநாமம்

ஸதா -த்ரஷ்டவ்ய -பதத்தோடே சேர்த்து நம்பிள்ளை
உண்ணும் சோறு –6-7-1-
கண்கள் நீர் மல்கி -இவர்களுடைய உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் இருக்கிற படி —
ஒருவண்பகவத் குண வித்தகனாய்க் கண்ணும் கண்ணநீருமாய் இருக்க –
அவனைக் கண்டு கொண்டு இருக்க வாகாதே யடுப்பதே
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ -என்று சேதனராகில் மங்களா ஸாஸனம் பண்ண அன்றோ அடுப்பது –

நஞ்சீயர் பிள்ளை திரு நறையூர் அரையரோடே மூன்று திருவாய் மொழி கேட்டேன் -அதில் எனக்கு ஒரு வார்த்தைகளும் போகாது –
ஒரு திருவாய் மொழியை பிரஸ்தாவியா அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் இருப்பை நினைத்து இருப்பன் -என்று அருளிச் செய்வர்
ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு -ஸதா த்ரஷ்டவ்ய-ஸதா தர்சனம் பண்ணுகைக்கு ஒரு தேச விசேஷம் தேடிப்போக வேணுமோ –

இதுவே பரம புருஷார்த்தம் -த்ரஷ்டவ்ய -தவ்ய ப்ரத்யயம் -விதி ப்ரத்யயம் -இத்தால் இது ஸித்தம்
பார்க்க வேண்டியவன் எவன் என்னில் -ஸர்வ தேஹி அபி -தேஹம் படைத்த ஒவ்வொருவனுக்கும் இதுவே பலம் –
நாமும் தேஹிகளே –
பகவானும் தேஹியே –
ஆக ஸ்ரீ வைஷ்ணவ விக்ரஹ அனுபவம் பகவானுக்கும் பாகவதருக்கு பலம் -என்றதாயிற்று –
த்ரஷ்டவ்ய-என்கிற இத்தால் நது வக்தவ்ய -என்பதும் கிடைக்கும்
யதோ வாஸோ நிவர்த்தந்தே -என்று ஸ்ருதி மீண்ட பகவத் விஷயத்தைப் பேசினாலும் பேசலாம்
ஸ்ரீ வைஷ்ணவனுடைய வைபவத்தைப் பேச இயலுமோ -இயலாது -என்றபடி –

ஆக தேசம் -திவ்யதேசம் -திருவரங்கம் தொடக்கமானவை
அவற்றில் எம்பெருமான் எழுந்து அருளி இருப்பதே ஒரு ஞானி விக்ரஹ வாஸத்தை ஆசைப்பட்டே –
இவனுடைய தேஹத்தை அவன் மிகவும் ஆதரிக்கிறேன் -என்றபடி –

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன் னெல்லாம்–
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே –

ஹிருதயம் தத் விஜா நீயாத் விஸ் வஸ்ய ஆயதனம் மஹத் -ஸ்ருதி கோஷிக்குமே
ஞானி ஹிருதயம் பகவானுக்கு மஹா ஆயதனம் -பெரிய கோயில் என்றபடி
பெரிய கோயில் தொடக்கமான திவ்ய தேசங்கள் எல்லாம் இளங்கோயில்கள்
வெள்ளத்து இளங்கோயில் -பூதத்தாழ்வார்
இளம் கோயில் கைவிடேல் என்று பிரார்த்திக்க வேண்டும்படி அன்றோ இவை –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading