ஸ்ரீ அருளிச் செயல்களில் –முதல் -பத பிரயோகங்கள் —

பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை–2-5-1-

மேன்மையை சொல்லுகிறது –
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே பகவத் அனுபவத்துக்கு முற்பாடரான நித்ய சூரிகளுக்கு
சேஷத்வேன பிரதானனாய் அவர்களுடைய சத்தாதிகளுக்கும் தாரகாதிகளுக்கும் தானே ஹேதுவானவனை-

——–

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ–4-10-4-

அஷய த்ரயாத்மகமான -பிரணவத்துக்கு வாச்யனாய் கொண்டு -சர்வ காரண பூதனாய் இருக்கிறவனே
மூன்று எழுத்தாய -என்கிற -சாமாநாதி கரண்யம் -வாச்ய வாசக பாவ சம்பந்த நிபந்தனம் –
பிரணவம் தான் -சப்த பிரதான்யத்தாலே -ஜீவ பரமாய் – அர்த்த ப்ராதான்யத்தாலே பகவத்பரமாய் இறே இருப்பது –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ஓம் இத் ஏக அஷரம் பிரம வ்யாஹரந்மா மநுச்மான்-என்றும் சொல்லக் கடவது இறே –
அதில் பிரதம அஷரத்தில் பிரக்ர்த்யம் இறே சர்வ காரணத்வம் –

————–

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து-திருப்பாவை–4-

திருமேனி போலே–சிருஷ்டி காலத்தில் கறுப்பு மிக்கு இருப்பானாம்–கிருபையால் சிருஷ்டி–
உபகரணங்கள் கொடுத்து-தனது பேறாக ஸ்ருஷ்டிப்பதால் திரு மேனி மிக்கு கருத்து–
முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணன்
காலோபலஷித சகல பதார்த்தங்களையும் உண்டாக்கின வனுடைய வடிவு உங்களுக்கு உண்டாக வேணும்-
கர்மானுகுணமாக சிருஷ்டிக்கும் பொழுது இப்படி இல்லை–
உருவம் போல் மெய் கறுத்து–அவன் அகவாயில் தண்ணளி இவனுக்கு தேட ஒண்ணாதே
ஊழி முதல்வன் –போலே -பெருமாள் போலே கர்மம் அடி இல்லை–
பிராட்டி போல்-கருணையே உருவாக உள்ளவன் போலே-
தானது தந்திலன்-காரேய் கருணை ராமானுசர் போலே ஔதார்யம் வேண்டும்–ஓன்று நீ கை கரவேல் என்கிறாள்
நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாது -என்றால் போலே–பார தந்த்ர்யமே -அவளுக்கு–ஸ்வா தந்த்ர்யம் கலசாத-
நப்பாசையால் போலி கண்டு தரிக்க பார்க்கிறார்கள்–
அம்மான் உருவம்–அன்னலும் துன்னலும் நீரும் நெருப்பும்-நான்கு பூதங்களும் மேகத்தில் உண்டே

———

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி–நாச்சியார் திரு மொழி –-14-9-

சிறிதிடம் தானே கை தொட்டு சிருஷ்டித்து
இவ்வருக்கு உண்டானவற்றை சிருஷ்டி என்று சதுர்முகன் தொடக்கமான பிரஜாபதிகளை உண்டாக்கின –
ஸ்ரமஹரமாய் இவ்வருகு கார்ய வர்க்கத்து எல்லாம் காரணமாக போகும் பரப்பை யுடைத்தாய்
செவ்விப் பூவை உடைத்தான திரு வுந்தியிலே ப்ரஹ்மாவுக்கு இருப்பிடத்தை பண்ணிக் கொடுத்து
இது தானே தனக்கு பிரயோஜனமாகக் கொண்டு லீலா ரசம் அனுபவிக்கிற –

———

ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே–திருச்சந்த விருத்தம்- –8-

இப்படி உபய விபூதியிலும் ப்ரதானரான இவர்கள் உடைய சத்தாதிகளுக்கு ஹேதுவான ப்ரதானன் நீ –
ஜகத் ஸ்ர்ஷ்டியாதி கர்த்தாக்களாய் ஊர்த்தவ லோகங்களுக்கு அத்யஷராய் வர்த்திக்கிற
ப்ரஹ்மாதிகள் உடைய பதங்களுடைய அவ்வவ காலத்துக்கு நியாமகனாய்
ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை
யாவர் காண வல்லரே -என்கிறார்
தாம்தாம் சத்தாதிகள் தேவரீர் இட்ட வழக்காய் இருந்த பின்பு தேவரீரை
பரிச்சேதிக்க வல்லார் உண்டோ – -என்கிறார்

—————-

ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –34-

சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்வதீயம் -என்கிறபடி யே த்ரிவித காரணமும்நீயே
எதுக்கு காரணம் ஆகிறது என் என்னில் -மஹதாதி விசேஷாந்தமான ப்ரகர்தி சிருஷ்டிக்கு –
பஹூஸ்யாம் -என்கிற சங்கல்ப்பத்தாலே காரண பூதன் –
ஓர் அண்டமாதி – மஹதாத்யவஸ்தனான நீயே ஏக ரூபமான அண்ட ஜாதியுமாவுதி –
ஈத்ர்சாநாம் ததா -என்கிறபடியே அண்டங்கள் ஏக ரூபமாய் இ றே இருப்பது
ஏக வசனம் ஜாத் யபிப்ராயத்தாலே
அதாகிறது -அண்டத்தில் உத்பன்னமான ப்ரஹ்மாதி பீபீலிகாந்தமான சகல
பதார்த்தங்களையும் ஸ்ர்ஷ்டித்து -தத் அனுப்ரேவேசத்தாலே சகல
அந்தர்யாமியாய் நிற்கை–ஆதலால் சோதியாத சோதி நீ –
இப்படி சகல ஜகத் காரண பூதனாகையாலே பரீஷிக்க வேண்டாத உபாஸ்ய தேஜஸ்
தத்வம் -நீ –உபாஸ்யமான தேஜஸ் தத்வம் –
த்ரிவித மஹா பூதமோ -தேவதையோ -ஆதித்யனோ -வைச்வானர அக்நியோ
என்று சங்கித்து -சர்வ நிர்வாஹகமான தேஜஸ் தத்வமே உபாஸ்யம் என்று
நிர்ணயிக்க வேண்டாது இருக்கை
அதயதத பரோதி வோஜ்யோதி -என்றும் -ததேவ ஜ்யோதி சாஜ்யோதி -என்றும் –
நாராயண பரோஜ்யோதி -என்கிற தத்வம் அல்லையோ நீ –
அது உண்மையில் விளங்கினாய் –
அந்த தேஜஸ் தத்வம் நித்ய நிர்தோஷ ப்ரமாண சித்தம் ஆகையாலே –
இதர விஸ ஜாதீயனாய்க் கொண்டு விளங்கினவனே
ஆதியாகி –இது எல்லாம் ருசி உடையவனுக்கு அங்கம் இறே -அந்த ருசி ஜநகனாய்க் கொண்டு
ஆயனாய மாயம் என்ன மாயமே – அதீந்த்ரியிமான இவ் விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கிக் கொண்டு
ருசி இல்லாருக்கு ருசி ஜனகனாயக் கொண்டு வந்து அவதரித்த இது என்ன ஆச்சர்யம் –

———-

சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி
அந்தமா யாதியாகி யரு மறை யவையும் ஆனாய்–4-6-9-

இவற்றை அடைய விபக்தமாக்கி கார்யம் கொள்ள நினைத்த அன்றைக்கு
அப்படி கார்யம் கொள்ளலாம்படி
இவற்றுக்கு அடங்கலும் காரண பூதனுமாய்-ஆதி யந்தங்களுக்கு நியாமகனாய் -என்றபடி –

———–

மன்னு மதுரை வசு தேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ் தார்க்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே–6-8-10-

வசு தேவர் வாழ் முதலை –
ஸ்ரீ வசுதேவர் உடைய சத்தைக்கு நிமித்த பூதனாய் உள்ளவனை –
இவனைக் கண்டு அத்தாலே உளராய்த்துத் திரிவது –

தாரகம் போஷகம் போக்யம் -வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல்

——————

புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!–6-10-5-

முதல்வாவோ –
உலகத்தை உண்டாக்கினவனே! உலகத்திற்கு வேர்ப்பற்றான தன்னை யன்றோ நோக்கித் தந்தது;
“படைப்புக்கு முன் சத் என்று சொல்லக்கூடிய இதுவே இருந்தது; வேறு பொருள் ஒன்றும் இல்லை” என்கிறபடியே.
“ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்”-என்பது, சாந்தோக்யம். 6. 2 : 1.
தான் உளனாகவே உண்டாகுமது அன்றோ உலகம்.

——————–

முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8-

பலத்தோடு வ்யபசரியாதவனே –
முளையாத வித்து – நிஷ்பலம் என்பதால் –
முளைக்கின்ற வித்தே -என்கிறார்

————

நந்தன் மதலை நிலமங்கை நற்துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ —8-4-9-

சர்வ சம்ஹர்த்தா வுமாய்
சர்வ ஸ்ரஷ்டாவுமானவன் –

———-

அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-1-

சர்வமும் உப சம்ஹ்ருதம் ஆனவன்று இவற்றுக்கு லய ஸ்தானமாய்-
சிருஷ்டி காலம் வந்தவாறே உத்பத்தி ஸ்தானமாய்
காரணாவஸ்திதமான சித் அசித்துக்களுக்கும் நிர்வாஹகனாய்
கார்ய மத்யே கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் –

————

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

இந்த்ரனையும் கூட்டி மூவர்க்கு பிரதானன் -என்னுதல்-
அன்றிக்கே
மூவரில் வைத்துக் கொண்டு தான் பிரதானன் -என்னுதல் –

விலஷணமான திரு நாபி கமலத்திலே
ஜகத்தை சிருஷ்டித்து
பின்னைப் பிரளயம் வந்தவாறே -வயிற்றிலே எடுத்து வைத்து –
உள்ளே கிடந்து நெருக்குப் பட ஒண்ணாது என்று வெளிநாடு காண உமிழ்ந்து
இப்படி நோக்குகிற -அயர்வறும் அமரர்கள் அதிபதியை –

————-

முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை–9-9-2-

மூ வுலகும் படைத்த பிரதான மூர்த்தி தன்னை –

————–

இந்த்ரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை—திரு நெடும் தாண்டகம்-4-

தனக்கு உத்பாதகன் இன்றியே இருக்கிறவன் –
இந்த்ரனுக்கும் பிரமனுக்கும் என்னாதே ரேபாந்தமாகச் சொல்லிற்று
பூஜ்யதா புத்தியால் அன்று -ஷேபிக்கிறார் –
ஈச்வரனே ஸ்ர்ஜயனாய் இருக்கச் செய்தே கிடீர்
த்ரிலோக்யாத்யஷன் -நான் -என்று இருக்கிறதும்
சதுர்தச புவனமும் என்னாலே ஸ்ர்ஜ்யம் -இத்தனைக்கும் நிர்வாஹகன் நான் என்று இருக்கையும்
கும்பிட்டுக் கொள்ளுகிறதும் –

————-

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை—திரு நெடும் தாண்டகம்-14-

உபய விபூதிக்கும் சத்தா ஹேதுவாய் நின்ற –
நித்ய சூரிகளுக்கு போக்யதையால் சத்தா ஹேதுவாய்
சம்சாரிகளுக்கு கரண களேபர பிரதானத்தாலே சத்தா ஹேதுவாய் இருக்கும் என்கை –

—————

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்–1-1-8-

ப்ரஹ்மாதிகளால் அறிய வரிய ஸ்வ பாவத்தை உடைத்தாய் இருக்கிற விண் உண்டு -மூல பிரகிருதி
அது தொடக்கமான உண்டான எல்லாவற்றுக்கும் வரிஷ்டமான காரணமாய்

————-

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்–1-5-1-

வளிவிதான ஏழ் உலகு -என்று லீலா விபூதியாய்-ததீயத்வ ஆகாரத்தால் வளப்பம் –
வானோர் இறை -என்கையாலே நித்ய விபூதியைச் சொல்லிற்றாய்
இப்படி உபய விபூதி நாதனைக் கிடீர் நான் அழிக்கப் பார்க்கிறது -என்கிறார் – கள்வா என்பான் –
வளவியனாய் ஏழ் உலகுக்கும் முதலாய் -வானோர் இறையாய் இருக்குமவனை -என்று அவன் தனக்கே விசேஷணம் ஆகவுமாம்
வளவியராய் ஏழ் உலகுக்கும் முதலாய் இருக்கும் வானோர் -என்று நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்
இவர்கள் வளவியராகை யாவது -பகவத் அனுபவத்தில் குசலராகை

————

மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா–1-5-6-

குடிசில் கூடக் கொண்டு திரிவதாலே -மனையோடு சேர்ந்த ஆயர் குலத்துக்கு மூலமானவனே
ஏஷ நாராயண ஸ்ரீ மான் விண்ணோர் தலைவா /ஷீரார்ணவ -கேசவ -ஆகாதோ மதுராம் புரம் –
மனை சேர் ஆயர் குல முதலே-நாராயணன் -பாற்கடலில் பையத் துயின்ற -மா மாயன் வைகுந்தன்–
அங்கும் இங்கும் மூவர் அனுபவம் மூன்று இடங்களிலும்

———–

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை-1-7-9-

நித்ய ஸூ ரிகளுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் தன் அதீநமாம் படி இருக்கிறவனை
இது தொடங்கி லீலா விபூதி விஷயமாய் இருக்கிறது
தன் பக்கல் பாவ பந்தம் சத்தா பிரயுக்தம் இன்றிக்கே இருக்கிறவர்களுக்கும் தன்னை வழி படுக்கைக்கு
உறுப்பாக கரண களேபரங்களைக் கொடுக்குமவனை

————–

எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்–1-9-1-

சர்வ அந்தராத்மாவாக -சஹாயாந்தர நிரபேஷமாய்-காரணமாய்-
ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் -இவை பிரவ்ருத்தி நிவ்ருத்யாதிகளுக்கு யோக்யமாம் படி
அந்தராத்மாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
இது பின்னை ஆக்கியும் என்று சிருஷ்டியைச் சொன்ன போதே சொல்லிற்று ஆகாதோ -என்னில்
தத் அநு பிரவச்ய -என்று இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக பண்ணும் அநு பிரவேசத்தைச் சொல்லுகிறது அங்கு
இங்கு இவற்றுக்குச் சொல்லும் வாசக சப்தம் தன்னளவிலே பர்யவசிக்கும் படியாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

————

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்–1-9-3-

நித்ய ஸூரி நிர்வாகத்வம் -சத்தா ஹேது -தராகாதிகள் இவனே-
அருகல்–குறைகை-கேடு –இல்- இல்லாமை -குறைவின்றிக்கே –ஆய -ஆன-நன்றான
ஹேய ப்ரத்ய நீக முமாய் கல்யாணை கதா நமுமான -நிரவதிக குணங்களை யுடையனுமாய் -இவற்றை அனுபவிக்க ஒரு நாடாக –
அவர்கள் சத்தாதிகள்–சத்தை – -தாரகம் -போஷகம் -போக்யம் – தன் அதீநமாம் படி இருக்கிறவன்

————-

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்–2-2-1-

அனைத்தும் -அல்பமாக -நிர்வகிப்பவன்
1-திண்ணன் வீடு -நித்ய விபூதி –முழுதும் -லீலா விபூதி —ஆய்-நிர்வாஹகன் -நிர்வாஹ்ய சம்பந்தம் –
திண்ணிதான நித்ய விபூதி தொடக்கமான எல்லா விபூதியையும் உடையனாய்
அன்றியே
2-திண்ணம் என்கிற இத்தை விட்டு வைத்து –வீடு முதல் முழுதுமாய் –
மோஷ ப்ரப்ருத் யசேஷ புருஷார்த்த ப்ரதனாய் -என்னவுமாம் –
ஐஸ்வர்ய கைவல்யம் –சகல பல பிரதன் -ஆய் -உபகார -கொடுப்பவர் அவரே என்பதால் அனைத்தும் அவரே –

———-

தகும் சீர்த் தனி முதலினுள்ளே–2-2-5-

ஜகத்துக்கு மூலம் தன் சங்கல்பம் /-மூல பிரகிருதி -என்றுமாம் -பிரகிருதி மாறுவதும் இவன் சங்கல்பம் தானே/
தனி முதல்-ஏக காரணம் என்று பரமாணு காரண வாதிகள் வ்யாவர்த்திக்கிறது –

———-

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

இந்த இருவர் -உத்பத்தி ஸ்தித்யாதிகளுக்கும் தானே ஹேதுவாக இருக்கும் –
கேசவ -நியாமகன் மட்டும் இலை –முதல் -காரணத்வம்
மோஷ பிரதன்-ரஷணத்துக்கு மேல் எல்லையான மோஷத்துக்கு ஹேதுவாக இருக்கும் –
நாம் அடையும் உபாயமாக இருக்கும் -என்றவாறு
மோஷ பிரதனாகைக்காக
அவதரித்த இடங்களிலே பஷிக்கு மோஷத்தைக் கொடுப்பது பிசாசுக்கு மோஷத்தைக் கொடுப்பதாகா நிற்கும் –
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு காரண பூதனாய் இருக்கும்
ஸ ப்ரஹ்ம ஸ சிவா -என்கிற பிரசித்தியாலே –இருவரவர் -என்கிறார்
அவ்விபூதியைச் சொல்லுகிற இடத்தில் அணைவது புணைவது -என்கையாலே
அது போக பூமியுமாய் -நித்யமுமாய் -இருக்கும் என்னும் இடமும்
இங்கு முதல் -என்கையாலே இவ்விபூதியில் கார்ய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும் –
இது தான் ஆவதும் அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது
முதல் -உத்பத்தி -முதல் இருந்தாலே முடிவும் உண்டே -சம்ஹாரம் -இரண்டும் உண்டே –
இத்தால் ப்ரஹ்ம ருத்ரர்கள் சம்சார பக்தர்கள் என்னும் இடமும்
ஈஸ்வரனே மோஷ ப்ரதனாக வல்லான் என்னும் இடமும் சொல்லுகிறார்
ஆக -ஆஸ்ரயணீயன் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆஸ்ரயணீயர் அல்லர் -என்கை
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகத்தந்தர் வ்யவஸ்திதா பிராணின கர்மஜனித
சம்சார வச வர்த்தின -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னா நின்றது இறே
ஸ்ரீ சௌனக பகவான் வார்த்தை -அர்ச்சா மூர்த்திகள் பற்றி பல சொல்லி இருக்கிறார்
இப்படி ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் காரண பூதன் ஆகையாலே வந்த மேன்மையை உடையவன் –

————–

எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

சக காரி -நிமித்த -உபாதான-த்ரிவித காரணமும் தானேயாய்
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –என்கிறபடியே — தஜ்ஜ தல்ல தன்ன தஜலன –
முந்துற இவற்றை யடைய உண்டாக்கி
பின்னை இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு பிரவேசித்து -இப்படி ஜகதாகாரனாய் நின்று –

வித்து –மாறி மரம் ஆகும் -உபாதானம் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்
முதல் -சங்கல்பம் -நிமித்த -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம்-நிமித்த காரணம்
வேர் -கெட்டியாக இருந்து நிற்கும் சஹ காரி காரணம் -ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம்
பரமபததுக்கு காரணத்வம் உண்டோ -நித்யம் அன்றோ
பரம பதம் – நித்யா இச்சா வேஷத்தால் நிமித்த காரணம் -கைங்கர்யம் கொண்டு கொண்டே இருப்பேன்-
வேற மாதிரி சங்கல்பம் அங்கே –நித்யா இச்சா விசிஷ்ட ப்ரஹ்மம்-அப்ராக்ருத அசித் சித் ஜீவ விசிஷ்ட ப்ரஹ்மம் –
மண்டப கோபுராதிகள் அங்கே-நித்யர்-

————–

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால் அளவு ஆகுமோ,-3-3-5-

தம்மை ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் ‘என்றாரே யன்றோ? இதனால் தம்மைத் தாழ்வுக்கு இவ்வருகாகச் சொன்னாராவர்;
மிகத் தாழ்ந்தவரான தாம் தொழுத போதே எல்லா உலகங்களும் தொழுதமை விழுக்காட்டாலே பெறுதும்;

-அக்ர பூஜை -கொடுக்கக் கூடாது –
ஸ்திதம் புஷ்ப ரதம் -த்ருஷ்ட்வா -கேசவே வ்ருத்திம் அவஸா -தங்கள் வசம் இல்லாமல் –
‘கிருஷ்ணனிடத்தில் பரவசப் பட்டவர்களாய்த் தகுந்தவாறு செயலை அடைந்தனர்’ என்கிறபடியே,
தொழக் கடவோமல்லோம் என்ற நினைவினைச்
செய்துகொண்டிருந்தவர்களுங்கூடக் கண்டவாறே தொழுதார்களாதலின், ‘எல்லா உலகும் தொழும்’ என்கிறார்.

————-

ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வனை–3-5-5-

வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பாடி; அன்றி, ‘வேதங்களாலே முதல்வனாகச் சொல்லப்படுகின்றவனைப் பாடி’ என்னுதல்.
‘பிறந்த முதல்வனைப் பாடுகிறது என்? வளர்ந்த விதங்களையும் பாடலாகாதோ?’ எனின்,
‘பிறந்தவாறு எத்திறம்?’ என்னா, வளர்ந்தவாற்றில் போகமாட்டாதே அன்றோ இருப்பது?
‘எத்திறம்!’ என்றால், பின்னையும் ‘எத்திறம்!’ என்னுமித்தனை. ‘உபாசகர்கள் சர்வேசுவரனுடைய அவதாரத்தைச்
சுற்றும் சுற்றும் வாரா நிற்பர்கள்,’ என்கிறபடியே, அதனைச் சுற்றும் சுற்றும் வாராநிற்குமத்தனை.

————

மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை–3-6-2-

உலகத்திற்குக் காரணனாய் இருந்துள்ள தன்னோடு கூடின மூவர்க்கும் காரணனாய் உள்ளவனை.
‘பிரமனுக்கும் சிவனுக்கும் காரணன் ஆகிறான், தனக்குக் காரணன் ஆகையாவது என்?’ என்னில்,
தான் இவர்களுக்குக் காரணனாய் இருப்பது போன்று தனக்கு அவ்வருகு வேறொரு காரணம் இன்றியே
இருத்தலைத் தெரிவித்தபடி. -அகில காரணாய அத்புத காரணாய நிஷ்காரணமாய் –
‘பதிம் விச்வச்ய ஆத்மேஸ்வரம் – தனக்குத் தானே தலைவன்’ என்பது உபநிடத வாக்கியம்.
இதனால், ‘மேற்கூறிய சாமாநாதிகரண்யம் சொரூபத்தால் அன்று;
காரிய காரணம் பற்றி வந்தது,’ என்பதனைத் தெரிவித்தபடி. அன்றியே, இந்திரனையும் கூட்டி,
‘உலகிற்கு முதல்வராய் இருக்கிற பிரமன் ருத்ரன் இந்திரன் இவர்களுக்கும் காரணனா யுள்ளவனை’ என்னுதல்.

———–

எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை–3-6-9-

பகவானுடைய அனுபவத்தில் குறைவில்லாத நித்தியசூரிகள் கூட்டத்துக்கு நிர்வாஹகனை.
இதனால், நித்தியசூரிகள் ஜீவனத்திற்குக் காரணமாயுள்ளவன் என்பதனைக் குறிப்பித்தபடி.

மூவர் தம்முள்ளும் ஆதியை –
மூவர் தாம் தியானிக்கின்ற காரணப் பொருளை; ‘காரணமாயுள்ளவன் தியானிக்கத்தக்கவன்’ என்பது மறைமொழி.
இனி, ‘பிரஹ்மன், உருத்திரன், இந்திரன் இவர்கட்கும் உள்ளுயிராய் நிர்வாஹகனுமானவனை’ என்னுதல்.
இனி, ‘மூவரிலும் வைத்துக்கொண்டு முதன்மையனானவனை’ என்னுதல்.
இனி, ‘மூவரிலும் வைத்துக்கொண்டு முதன்மையனானவனை’ என்னுதல்; அப்போது இந்திரன் ஒழியக் கொள்க.
மூவர் என்கிற இது, எண்ணப்படுபெயராய் மூவரிலும் வைத்துக் கொண்டு காரணபூதன்’ என்றபடி.

————-

உலகுக்கோர்முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!–5-7-7-

உலகத்துக்கு அத்விதீயனாய்ப் பழையனான தாயும் தமப்பனுமானவன்.
அங்கு இரண்டு தலையும் கூடி வருமே அன்றோ, இங்கு வெறும் ஒரு தலையேயாயிருக்கிறபடியைத் தெரிவித்தவாறு.
சேஷ சேஷி சம்பந்த ஞானம் இருவருக்கும் உண்டே -வானவர்களுக்கு –அவன் அறிந்த சம்பந்தமே
ஹேதுவாக அன்றோ வந்து அருளுகிறான்
“உயிர்களுக்கு எவன் அழியாத தந்தையோ” என்கிறபடியே, நாலு நாட்கள் மணற் கொட்டகம் இட்டு விளையாடுமாறு போலே
அழியும் தாயும் தமப்பனும் அன்றோ அவர்கள், ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள்.
“சர்வேஷாம் ஏவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:”
“மனிதர்களில் சிறந்தவர்களே! உலகங்களில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானாவர்
தாயும் தந்தையுமாக இருக்கிறார்; காப்பாற்றுகின்றவரான இவரை உபாயமாக அடைமின்” என்றார்
மார்க்கண்டேயரும் பாண்டவர்களைப் பார்த்து
“கச்சத்வம் – ஒருதலையாகாமே நீங்களும் அவனைப் பற்றப் பாருங்கோள்.”-நமஸ் கரித்தார்கள் ஜனார்த்தனம் –
இத்தால் சரணாகதி நமஸ்காரம் என்றதாயிற்று என்பர் -ஆபி முக்கியம் பண்ணி போகச் சொன்னான் –
இங்கே அவனாக வந்து அருளினான் –

முழு ஏழு உலகம் உண்டாய் –
மாதாவானவள் பத்து மாதங்கள் வயிற்றிலே வைத்துத் தரிப்பது,
‘பிறந்து வளர்ந்தால் பின்னை நம்மைப் பாதுகாப்பவனாவான்’ என்னும் பிரயோஜனத்தைப் பற்றவே அன்றோ;
இவன் அங்ஙன் அன்றிக்கே, ‘இவைதாம் நோவு படாதொழியப் பெற்றோமே’ என்று
இதனைத் தன் பேறாக நினைத்திருப்பான்.

———-

புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!-6-10-5-

உலகத்திற்கு வேர்ப்பற்றான உன்னைத்தந்தவனே!
பிரளயகாலத்தில் அன்று உலகத்தை உண்டாக்கியது இன்றாயிற்று.
அற்றைக்கு இவன்தான் உளனாகையாலே உண்டாக்கலாம்;
இங்கு நிரந்வயவிநாசம் அன்றோ பிறக்கப் புக்கது.
முதல்வாவோ –
உலகத்தை உண்டாக்கினவனே! உலகத்திற்கு வேர்ப்பற்றான தன்னை யன்றோ நோக்கித் தந்தது;
“படைப்புக்கு முன் சத் என்று சொல்லக்கூடிய இதுவே இருந்தது; வேறு பொருள் ஒன்றும் இல்லை” என்கிறபடியே.
“ஸதேவ ஸோம்ய இதமக்ரஆஸீத் ஏகமேவாத்விதீயம்”-என்பது, சாந்தோக்யம். 6. 2 : 1.
தான் உளனாகவே உண்டாகுமது அன்றோ உலகம். இப்படி இருக்கிற தன்னளவிலே வந்த ஆபத்தையோ நீக்கலாவது.

———–

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

பெற்ற பின்பு நோக்குகை அன்றிக்கே, ‘குழந்தையைப் பெற வேணும்’ என்று ஏற்கவே வருந்தும் தாயைப் போலே,
படைப்பதற்கு முன்பே இவற்றை உண்டாக்குகைக்காகத் திருவ்ருத்கரணத்தை-தேஜஸ் அப்பு பிருத்வி மூன்றும் —
நினைத்துப் பஞ்சீகரணத்தைச் செய்து,-ரக்ஷணத்தில் உள்ள பாரிப்பால் –
இவற்றை அடையப் படைத்து,படைக்கப்பட்ட பொருள்கள் பொருளாந்தன்மையைப் பெறுதல், பெயரை அடைதல்
முதலியவைகளுக்காக உயிர் வழியாக அநுப்பிரவேசித்து, பின்னர், இவற்றைச் சொல்லுகிற சொற்கள்,
அசித்தும் அசித்தை விரும்பி நிற்கிற உயிரும் உயிருக்குள் உயிராய் இருக்கிற பரமாத்துமாவுமான
இக் கூட்டத்தைச் சொல்லுகின்றனவாய்க் கொண்டு, தன்னளவிலே வரும்படி நிற்கிற நிலையைச் சொல்லுகிறது,

————

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-

‘மூவுருவாம் முதல்வனே-பிரமனைப் படைத்து அவனை அத்தியயனம்
செய்வித்தித் தேவர்களுக்கு வெளிச்சிறப்பைச் செய்வித்து அது தன்னைப் ‘பிரமன் செய்தான்,’ என்று
அவன் தலையில் ஏறிட்டும், சிவனுக்கு அந்தராத்துமாவாய்ப் புக்கு நின்று முப்புரங்களை எரிவித்துச்
‘சிவன் செய்தான்’ என்று அவன் தலையிலே ஏறிட்டும் விருது பிடிக்கப் பண்ணினாற்போலே,
தானே பிரபந்தத்தைச் செய்து, நான் செய்தேன் என்று என் தலையிலே ஏறிட்டு எனக்கு ஒரு பிரசித்தியைத் தந்தான்.
தானே காரியம் செய்து பிறர் தலையிலே ஏறிடுதல் அவனுக்குப் பண்டே சுபாவங் கண்டீர்!
‘இப்போது தானே நடத்திக்கொண்டது என்?’ என்றால், தன் உருவமாக இருந்து காரியம் செய்யுமாறு போலே,
பிரமன் சிவன் முதலானோர்களைத் தனக்குச் சரீரமாகக் கொண்டு நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து
அவர்கள்மேல் ஏறிட்டாப் போலே கண்டீர், என்மேலே ஏறிட்டுக் கவிபாடினேன்
நானாகச் சொல்லித் தலைக் கட்டினபடியும்,’ என்கைக்காகச் சொல்லிற்று.

————-

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-

முதல்வன் ஆம் இவன்,’ என்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு உண்டாம் படியாகச் செய்து: என்றது,
‘காரண வாக்கியங்களில் உபாசிக்கத் தக்கவனாகச் சொல்லப்படுகிறான் தானே என்று தன் பக்கலிலே நான் தெளியச்செய்து,’ என்றபடி.
அன்றிக்கே, ‘பரமபதத்தைப் போன்று, சம்சாரத்தையும் திருத்த நினைத்தோம்.
அதற்கு அடி ஆம் இவன், என்று என்பக்கலிலே தன் சொரூபம் முதலானவைகளைத் தெளியச் செய்து என்னுதல்.

இங்கே அருளிச்செய்யும் வார்த்தை: ‘திருப்புற்றுக்குக் கிழக்கே கரியமாணிக்காழ்வார் திருமுன்பின் படிக் கட்டிலிலே
ஆளவந்தார் எழுந்தருளியிருக்க, உடையவர்திருப்புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு,
‘ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச்செய்தாராம்’ என்பது.
என்னுடைய நாக்கிலே முற்பாடனாய் வந்து புகுந்து.
அன்றிக்கே, ‘என் நாவுக்கு அடியாய் வந்து புகுந்து’ என்னுதல்.

என் வாய் முதல் அப்பனை –
எனக்கு வாய்த்த காரணனான மஹோபகாரகளை.
அன்றிக்கே, ‘என் நா முதல்’ என்றது தன்னையே பின் மொழிந்து,
‘என் வாக்குக்கு முதலான அப்பனை’ என்கிறார்.என்னுதல்.

————–

உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –ஸ்ரீ முதல் திருவந்தாதி- –14-

ஜகத்தை அடையத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட சர்வேஸ்வரன் உடைய திரு மேனியே பிரதானம் –
சமஸ்ரயிப்பார் தலையிலும்-சமாஸ்ரயணீயர் தலையிலும் ஒக்கத் துகைத்தவன் –

———–

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது —-15-

பெற்ற தாய் ஆகையால் பரிவன்-தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-முலைப் பால் இருக்க விஷ பானம் பண்ணுவாரோ
தேவ தாந்தரங்களுக்கும்-உபாயாந்தரங்களுக்கும் தானே உள்ளீடாய் நிற்கையால் தான் காண வேண்டாதவரை
அவற்றிலே ருசியை வர்த்திப்பித்துத் தன்னை யகற்றும்
தான் உகந்தாரை அவற்றில் ருசிகளை விட்டுத் தன்னை உகக்கும் படி பண்ணும்-

———-

விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே –ஸ்ரீ திரு விருத்தம்- 50-

விண்ணுலகத்துக்கு முதன்மையான நாயகன் -விண் முதலிய உலகண்டகு எல்லாம் நாயகன்
திருமுடி முதல் திருவடி வரை தொங்கும் முத்து மாலை வெள்ளருவிக்கு வாய்த்த உவமை

————-

ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே –ஸ்ரீ திருவாசிரியம்–4-

தனி வித்து ஒரு தான் ஆகி
நிமித்த உபாதான சஹகாரி காரணத்ரயமும் தானே யாய்
வித்து -என்கையாலே –
காரண வஸ்து என்கை –
தனி -என்கையாலே
ஏஹோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாந –மஹா உபநிஷத் -என்றபடி அத்விதீயன் -என்கை
ஒரு -என்கையாலே
இதுக்கு ஸஹ காரிகள் ஒருவரும் இல்லை என்கை –
தான் ஆகி –
கார்ய ரூபமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் வேண்டும் காரண கணம் எல்லாம் தானேயாய்
இப்படி அண்ட ஸ்ருஷ்ட்டி அளவும் தானே உண்டாக்கி -இவ்வருகு உள்ளவற்றை உண்டாக்குகைக்காக
ஸ்ரீ கோயிலுக்கு ஸ்ரீ மதுர கவி தாசரை நிர்வாஹகராக விட்டால் போலே
ப்ரஹ்மாவை இப்பால் உள்ள ஸ்ருஷ்டிக்காக உண்டாக்கினான்
ஸ்ரீ ராமானுஜர் திவ்ய ஆஜ்ஜை அன்றோ அனைத்து ஸ்ரீ கோயில் நிர்வாகங்களும் -இது அதுக்கு த்ருஷ்டாந்தம்

மா முதல் அடியே
மா முதல் மாயக்கடவுள் என்று கூட்டி -பரம காரணமான மாயக்கடவுள் என்னுதல் –
மாயக்கடவுள் ஆனவனுடைய மா முதல் அடி என்னுதல்
ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதையான பரம காரண பூதனானவனுடைய திருவடி என்னுதல் –
மாயக்கடவுள் என்று அவனுடைய பரம ப்ராப்யமான திருவடிகள் என்னுதல் –
திருவடி -திரு மேனிக்கும் உப லக்ஷணம் என்னுதல்

—————

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது–6-

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி-
நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம்
அன்று கரு மானியாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு–இரண்டாம் திருவந்தாதி -61-என்கிறபடியே
திரு உலகு அளந்து அருளுவதாக நின்ற போது நின்ற திருவடி அந் நிலையில்
ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப–திரு நெடும் தாண்டகம் -5- என்கிறபடியே
ஆவரண ஜலத்துக்கு உட்பட்டத்தை அடைய தன் கீழே இட்டுக் கொண்டது –
வளர்ந்த திருத் தோள்கள் வியாபித்து திக்குகளை அளந்து கொண்டன

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி-
நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம்
அன்று கரு மானியாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு–இரண்டாம் திருவந்தாதி -61-என்கிறபடியே
திரு உலகு அளந்து அருளுவதாக நின்ற போது நின்ற திருவடி அந் நிலையில்
ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப–திரு நெடும் தாண்டகம் -5- என்கிறபடியே
ஆவரண ஜலத்துக்கு உட்பட்டத்தை அடைய தன் கீழே இட்டுக் கொண்டது –
வளர்ந்த திருத் தோள்கள் வியாபித்து திக்குகளை அளந்து கொண்டன

————-

நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட–7-

தளிர் போன்ற அழகிய தேஜஸ்ஸை யுடைய தேவர்கள் அதிபதி இந்திரன் இவர்கள் முதலான
போக ப்ரவணன் ஆகையால் அப்சரஸ்ஸுக்களை மெய்க்காட்டிக் கொண்டு வடிவைப் பேணி
தேவர்களுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இந்திரன் தொடக்கமாக-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading