வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அரும்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே -ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி-1-1-7-
ஸ்ரீ நந்தகோபன் மகன் அல்லன் -பெறுதற்கு அரிய சர்வேஸ்வரன் –
பாய சீருடை பண்புடைப் பாலகன் –
பரம்பின கல்யாண குணங்களை -உடையனாய் -நீர்மை உடையனான -சிறு பிள்ளை –
மாயன் -ஆச்சர்ய சக்தன்
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே அச்சோ அச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8-
என் இத்யாதி -திருக் கையில் உதகம் விழுந்த அநந்தரம்-திருவடிகளை வளர்த்து அளக்கப் புக்கவாறே –
இத்தைக் கண்ட மகாபலி புத்ரனான -நமுசி ஓடி வந்து –
இது என் -என்று வளருகிற திருவடிகளை தகைய –
நீ தகைகிறது என் -நான் உதகம் ஏற்றது அளந்து கொள்ள வேண்டாவோ -என்ன –
நீ க்ரித்ரிமம் என்பான் என் -என்னுடைய பிரமச்சரிய வேஷத்தையும் -அர்த்திவத்தையும் -கண்டு உன்னுடைய பிதா –
உதக தானம் பண்ணிப் போந்தது பொய்யோ -என்ன –
தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2 -2-5 – –
மாயம் தன்னால் வலைப் படுக்கில் -உன்னை நலிகைக்காக மாயா ரூபிகளான ஆசூர பிரகிருதிகளை
திர்யக்காகவும் ஸ்தாவரமாகவும் உள்ள வடிவுகளை கொண்டு நீ வியாபாரிக்கும்
ஸ்தலங்களில் நிற்கும் படி பண்ணியும் -நீ அறியாமல் வஞ்சனத்தால் நழுவாதபடி பிடித்து கொள்ளில் –
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3- –
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ –
இந்த ஆச்சர்யங்களை செய்ய வல்லவனாய்-பிள்ளைத் தனத்தால் பூர்ணம் ஆனவனே
வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில
சாய்விலாத குறுந்தலை சில பிள்ளைகளோடு இணங்கித்
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி
மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே – 3-7 2- –
மாயன் மா மணி வண்ணன் மேல்-
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களையும் நீல ரத்னம் போன்ற வடிவையும் உடையவன் விஷயத்திலே
இவள் மால் உருகின்றாளே-
இப்படி செம்மை சொன்ன இவள் -அதுக்கு சேராதபடி -அவன் குண சேஷ்டிதங்களைச் சொல்லுவது
வடிவு அழகைச் சொல்லுவதாய் கொண்டு பிச்சேறா நின்றாள்
தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாட உறில் வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்மையே கண்டார் உளர் – 4-1 4-
மாயம் -இத்யாதி –
சிறிய வடிவை கொண்டு பெரிய லோகங்களை வயற்றிலே வைத்து ஒரு பவனான
ஆலம் தளிரிலே கண் வளர்ந்து அருளின -அகடிதகட நா சாமர்த்தியத்தால் வந்த
ஆச்சர்யத்தை உடைய அந்த குழவியை –
முக்தசசிசுர் வடதளே சயிதோ சிதன்வா தந்வா ஜகந்தி பிப்ருஷேச விகாசமேவ ஐசீமான்தவ
துசக்தி மத்ர்கிதவ்யாம் அவ்யாஜ த பிரதய சேகிமி ஹாவதீர்ணா -என்றார் இறே ஆழ்வான்
குழவி என்பதற்கு ஈடாக -அதனை-என்கிறது -அவனை-என்றபடி
கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4 1-10 –
கரிய முகல் புரை மேனி மாயனை-
காள மேகம் போன்ற வடிவை உடையவனாய் -ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை உடைய அவனை –
————
வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 8-
ஸ்ரீ பரம பதத்தில் பொருந்தி வர்த்திக்கிற நித்ய முக்தருக்கு -ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளும்
நியந்தாவானவனே -ஏய்கை -பொருந்துகை
அப்படி சர்வ ஸ்மாத் பரனாய் இருந்த வைத்து -இங்கு உள்ளாரை ஆள் கொள்ளுகைக்காக
ஸ்ரீ மதுரையில் -இதர சஜாதீயனாய் -வந்து அவதரித்த ஆச்சர்ய பூதனே –
அங்கு நியந்தாவாய் நின்று ஆள் கொள்ளும் -இங்கு நியாம்யனாய் வந்து ஆள் கொள்ளும் –
ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ -என்றார் இறே –
———
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே–4-10-10-
ஆச்சர்ய ரூப குண சேஷ்டிதங்களை உடையவன் -இத்தால்
விக்ரக குணமான சௌந்தர்ய சௌகுமார்யங்களாலும்
ஆத்ம குணமான -வாத்சல்ய சௌசீல்ய ஸௌலப்யாதிகளாலும்
ஆஸ்ரித ரஷண அர்த்தமான மநோஹாரி சேஷ்டிதங்களாலும்
அனுபவித்தகளான பிரேம யுக்தர்க்கு அநவரதம் மங்களா சாசனம் பண்ணும் வேண்டும் படியான
வை லஷண்யத்தை உடையவன் -என்கை-
————-
மாணிக் குறள் உருவாய மாயனை என் மனத்துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் -5-2-5-
இரப்பிலே தகண் ஏறி –நிரதிசய போக்யனுமாய் -தன்னுடைய தேக குணங்களாலும்
ஆத்ம குணங்களாலும் அவனை வசீகரித்த படி –
உருவாய மாயனை–மாயம் தான் ஒரு வடிவு கொண்டால் போல் இருக்கை
அழகு தான் ஒரு வடிவு கொண்டு உலாவுமாப் போலே இருக்கை
உரு -வடிவு
——————-
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ–5-4-9-
மாய மணாளா நம்பீ –
இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பு இறே -குணங்களும் -திரு மேனியில் செவ்வியும் பூர்த்தி பெற்றது
————–
மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –5-
பரம பதத்திலே -அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய்க் கொண்டு– தன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கும்
இருப்பை நினைத்து அது தான் வாசாம் அகோசரம் ஆகையாலே –மாயன் -என்கிறது –
கிருஷ்ண அவதாரத்தில் நீர்மை தங்களுக்கு நிலம் இல்லாமையாலே– பரமபதத்திலே அனுபவிக்கக் கோலி
அது தானும் நிலம் அல்லாமையாலே எத்திறம் -என்கிறார்கள் –
ஒரூருக்கு தன்னைக் கொடுத்த நீர்மை இறே இது–-ஒரு நாட்டுக்காக தன்னைக் கொடுத்துக் கொண்டு
இருக்கிற நீர்மை யாகையாலே ஏற்றம் உண்டே அங்குத்தைக்கு-
அன்றிக்கே
நித்ய ஸூரிகளும் நேர் நின்று பார்க்க ஒண்ணாத நிரங்குச ஐஸ்வர்யத்தை உடையவன் கிடீர்–
அவதரித்தான் என்று–அவதார சௌலப்யத்தை அனுசந்தித்து அந்த ஆச்சர்யத்தை சொல்லுவதற்கு முன்பே-
ஆழம் கால் பட்டு -எத்திறம் -என்கிறார்கள் -ஆகவுமாம் –
ஒரே சப்தத்தால் பேசலாம் படி கை வந்தபடி
தாம்பாலே பந்தித்த ஊர்–சதா பச்யந்தி- கடைக் கண் என்னும் நெடும் கயிறு கொண்டு கட்ட-
———–
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-
மா மாயன் ––
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே–அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டவன் –
அத்யந்த சுலபன்-பெரிய இடையன் -ஆயன் அல்ல பெரும் தெய்வம் .-
———-
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-14-
மாயனைப் –
தன் கையில் அவர்கள் படுமத்தனை பெண்கள் கையில் படுமவனை
மாயனை –
எல்லையில் ஞானத்தன் ஞானம் அக்தே கொண்டு எல்லா கருமங்களையும் செய் எல்லையிலா மாயன் கண்ணன்
கண்ணன் முடித்தது ஒரு யானை ஆச்சார்யர்கள் முடித்ததோ பல யானைகள்
வாரி சுருக்கி மதக் களிற்று ஐந்தினையும் சேரி திரியாமல் –பொய்கையார் -47-ஜிதேந்த்ரியர்கள்-கலியும் கெடும்
—————
பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ–நாச்சியார் திரு மொழி–2-4-
உன் தாழ்ந்த பேச்சுக்களும் வியாபாரங்களும் எங்களைப் பிச்சேற்றி அறிவு கெடுக்க
உன் முகம் அம்மான் பொடியோ -என்கிறார்கள்
————-
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-
தன்னுடைமையை பெறுகைக்காக தன்னை இரப்பாளான் ஆக்கிக் கொண்டவனை
—————
மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்–12-3-
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்பவனாய்- ஆற்றிலிருந்து விளையோடுவோர்களை சேற்றால் எறிந்து
வளை துகில் கைக் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி அகம் புகுவானாய்
இப்படி தீமைகள் செய்து திரிபவனாய் உள்ள மகனை
————–
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –-திருச்சந்த விருத்தம்-7-
தேவரீர் இதர சஜாதீயராய் அவதரித்து ரஷிக்கிற படியை ஜ்ஞானத்தாலும் சக்தியாலும்
அதிகனான ருத்ரனும் அறிய மாட்டான் -என்கிறார்
————–
சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென் மலர்
மங்கை மன்னு வாழு மார்ப வாழி மேனி மாயனே –24-
கடல் போலே ஸ்ரமஹரமான திருமேனியை உடைய ஆச்சர்ய பூதனே
ஹிரண்யனுக்கு அநபிபவநீயமான அவ்வடிவு தான் ஆஸ்ரிதருக்கு ஸ்ரமஹரமான படியைச் சொல்லுகிறது –
பரம பாவநனுமாய் -நிரதிசய போக்யனுமாய் -போக்தாக்களை காத்தூட்ட வல்ல
பரிகரத்தையும் உடைய தேவரீர் -ஆஸ்ரித ரஷணத்துக்கு அநுரூபமாக திவ்ய விக்ரஹத்தை அழிய மாறி வந்து
தோற்றின இவ் வேற்றத்தை நித்ய ஸூரிகள் அறிதல் – பிராட்டி அறிதல் -ஒழிய
வேறு யார் அறிய வல்லார் என்று பின்னையும் அந்த நரசிம்ஹ வ்ருத்தாந்தத்தில் ஈடுபடுகிறார்
————–
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28-
சங்கல்ப லேசத்தாலே அண்ட காரணமான ஜல சிருஷ்டி முதலான சகல ஸ்ர்ஷ்டியும் பண்ணக் கடவ நீ –
ஸ்ரஷ்டமான ஜகத்திலே ஆஸ்ரித ரஷ்ண அர்த்தமாக உன்னை அழிய மாறி அநேக
அவதாரங்களைப் பண்ணியும் -ஆஸ்ரித விரோதிகளான துர் வர்க்கத்தை திவ்ய
ஆயுதங்களாலே கை தொட்டு அழிக்கையும் – விரோதி நிரசநத்து ஈடான அநேக ஆயுதங்களை உடைத்தாய்
அவ்வாயுதங்களுக்கு ஸத்ர்சமான சுற்றுடைதான திருக்கையை உடைய ஆச்சர்ய பூதனே
ஆகிற இவ் வாச்சர்யங்களை ஒருவரும் அறிய வல்லார் இல்லை என்கிறார்-
———-
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –34-
கார்ய காரணங்கள் என்ன –-பிரமாண ப்ரமேயங்கள் என்ன – சகலமும் ஸுவாதீனமாம்படி இருக்கிற நீ –
புருஷார்த்த ருசி இல்லாதாருக்கு ருசி ஜனகனாய்க் கொண்டு – –
அதீந்த்ரியிமான இவ் விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கிக் கொண்டு ருசி இல்லாருக்கு
ருசி ஜனகனாயக் கொண்டு வந்து அவதரித்த இது என்ன ஆச்சர்யம் –-என்கிறார்
———
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-
அநந்ய பிரயோஜனரை ரஷிக்கும் இடத்தில் நித்ய ஸூரிகளுக்கு மேல் எல்லையான பிராட்டிமாரோடே –
சம்சாரிகளுக்கு கீழான திர்யக்குகள் உடன் வாசியற -தன்னை ஒழியச் செல்லாமை ஒன்றுமே ஹேதுவாக
விரோதி நிரசன பூர்வகமாக ரஷிக்கும் ஆச்சர்யங்களை யநுபவிக்கிறார் –
சம்ஸ்லேஷ அர்த்தமாக ஒப்பித்து நிற்கிற தசையிலே அவள் சந்நிதியிலே சென்று
ரிஷபங்கள் ஏழையும் அடர்த்த ஆச்சர்யம் முன்பு செய்த செயல்களுக்கும் அவ்வருகாய் ஒன்றாய் இருந்ததீ –
———–
நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே –85-
என்னை இப் பிரக்ர்தியோடே வைத்த போதே தேவரீர் நினைவு இன்னது என்று அறிகிலேன் –
முந்துற முன்னம் உன் ப்ரசாதத்தாலே திருவடிகளில் பிறந்த ருசியை மாற்றி –
இதர விஷய பரவணன் ஆக்காது ஒழிய வேணும் என்று பிரார்த்திக்கிறார் –
மமமாயா -என்கிறபடியே தேவரீர் இட்ட வழக்கான பிரக்ர்தியோடே நித்ய சம்ஸ்ரஷ்டனாம்படி பண்ணி –
உனக்கு பரிகரமான சப்தாதி விஷயங்களில் மூட்டி – என்னை அறிவு கெடுக்க பாராது ஒழிய வேணும் –
உபமாநம சேஷாணாம் ஸாதூநாம் -என்கிறபடியே ப்ரஹ்லாதனை எதிர் அம்பு கோக்க
பண்ண வல்லை -பிராதிகூல்யத்தில் வ்யவஸ்திதனான சிசுபாலனுக்கு சாயுஜ்ய ப்ரதனாகவும் வல்லை –
இதுவன்றோ தேவரீர் உடைய ஸ்வாதந்த்ர்யம் -என்கிறார் –
—————
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-
உன் கேவல க்ருபை ஒழிய வேறு ஒரு வழியாலே உன்னைப் பெற இருப்பார்க்கு இருப்பார்க்கு-
சித்தியாத ஆச்சர்ய பூதனே –
லோகத்திலே சாத்யங்களுக்கு எல்லாம் சாதனம் உண்டாய் இருக்க அநந்ய சாத்யனான-ஆச்சர்ய பூதனே
————-
தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய் மாய –110-
வண்டுகள் அபிநிவேசிக்கும் திருத் துழாயாலே அலங்க்ர்தமாய் ஆச்சர்யமான
குண சேஷ்டிதங்களை வுடையவனே –
திர்யக்குகளுக்கும் ஸ்பர்ஹை பண்ண வேண்டும்படி இ றே போக்யதை இருப்பது –
ஒப்பனை அழகும் குண சேஷ்டிதங்களும் ஆய்த்து இவரை மேல் விழப் பண்ணிற்று
————
கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்-கண்ணி–1-
நிரதிசய ஆச்சர்ய யுக்தன்இத்தால் அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை உண்டாய் அது தன்னை ஷூத்ரரைப் போலே
களவாகிற வழி எல்லா வழியே இழிந்து சர்வ சக்தியான தான் அது தன்னைத் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக
அகப்பட்டுக் கட்டுண்டு – பையவே நிலையும் -என்று உடம்பு வெளுத்து நின்ற நிலை அளவும் செல்ல நினைக்கிறார்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு –எத்திறம் -என்றும்
பிறந்தவாறும் என்றும் -பையவே நிலையும் வந்து -என்றும்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையால் அத்தைப் பேசுகிறார்
—————————
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் -ஸ்ரீ பெரிய திருமொழி-1-6-2-
மாயா–இவன் ஒரு நாள் திருவடிகளில் விழுந்தால் பின்னை இவனுடைய நெடு நாள் இழவு மறக்கும்படி
முகம் கொடுக்கும் படிக்கு அடியான ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனே –
———–
பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே-1-9-9-
பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு கை கழியப் போன வஸ்துவுக்கு பகவத் ப்ராப்திக்கு ஈடாக
சொல்லலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை –அது இல்லாமையாலே பாபங்களையே பண்ணி
பின்னை நிரூபிக்கும் இடத்தில் ஞான ஆனந்தாதிகளை ஒழிய பாபங்களை இட்டு நிரூபிக்கும் படி யானேன் –
ப்ராப்திக்கு ஈடான உபாய விஷய ஞானம் இல்லை –அஹமஸ்ம் யபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அகதி –ப்ரார்தனா மதி சரணாகதி
இங்கனே இருந்துள்ளவர்களையும் ரஷிக்கைக்கு ஈடான ஆச்சர்ய சக்தி உக்தனே –
———-
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் -1-10-8-
நான் அபேஷியாது இருக்க என்னுடைய ஹ்ருதயத்தில் வந்து புகுந்து நித்ய வாசம் பண்ணுகிற ஆச்சர்ய பூதன் –
அடியேனை ஆட் கொண்டு அருள -இடர் நீக்கி அருள பிரார்த்தித்தார் அன்றோ என்னில்
கைங்கர்ய பிரதிபந்தகங்களைப் போக்க பிரார்த்தித்து-
அவனுக்கு இவர் நெஞ்சில் வருகை உத்தேச்யமாய் மஹிஷீ உடன் புகுந்தானே-
———–
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்-2-7-7-
இவ்வளவான பிரேமத்துக்கு அவன் கிருஷி பண்ணின படியைச் சொல்லி வாய் வெருவும் –
சம்ருத்தமான பழங்களை உடைத்தாய் பொழிலாலே சூழப்பட்ட திருமலையிலே ஆர்யர்கள் இழந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு
முகம் கொடுத்து நிற்கிற ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை அனுசந்தித்து பின்னை வாசனையே உபாத்யாயராக சொல்லுமது ஒழிய
உணர்த்தியுடன் சொல்லுவது ஒரு வார்த்தையும் இல்லை –
———–
அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய்-2-7-10-
அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார் –
இன் தொண்டர்க்கு இன் அருள் புரிந்த உபகாரம் தாஸோஹம் என்று அறிய வைத்த அருள்
—————-
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம்-3-1-3-
பூமிப் பரப்பு அடங்கலும் வயிற்றிலே எடுத்து வைத்து ஒரு பவனான ஆலம் தளிரிலே
கண் வளர்ந்து அருளின ஆச்சர்ய சக்தி உக்தன் –
அகடிதகடங்களைச் செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன்-
————-
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன்–3-2-8-
கேசி உடைய வாயோடு கூட உடம்பை அநாயாசேன இரண்டாகக் கிழித்து இந்த்ரனால் வந்த மழையிலே
பெருத்துப் பழையதான கோவர்த்தனத்தை எடுத்து ஆயர் தலைவனாய் பசு மேய்த்து
லோகத்தை திரு வயிற்றில் வைத்த ஆச்சர்ய பூதன்-
—————
வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-3-
வண்டுகள் சஞ்சரிக்கும்
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதியாதே நித்ய ஸந்நிஹிதனாய் அருளுபவன் அன்றோ-
———
அரியாய் மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்-4-10-8-
பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு
ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
————
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்–5-5-8-
மாயவனே-ஆசர்ய குண சேஷ்டிதங்களை உடையவனே
————–
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்து அருளாய் என்ன–5-9-5-
தண்டவக்கரன்-வாயை முன் காலத்தில் கிழித்துப் புகட்ட ஆச்சர்ய பூதனே என்று
வானோர்-புக்கு அரண் தந்து அருளாய் என்ன–தேவதைகள் திரண்டு வந்து -ரக்ஷிக்க பிரார்த்திக்க –
————-
தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் -6-5-10-
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமாய் ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை உடையனாய்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவனானவன் வந்து வர்த்திக்கிற தேசம் –
—————-
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடி-7-4-7-
அஞ்சன கிரி போலே இருக்கிற வடிவை உடைய ஆச்சர்ய பூதனே -என்றும் –
——————-
சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ-7-9-7-
தூரத்துக்கு வாசகமாய் இருக்கையாலே
மிகவும் ஓங்கின திருமலையிலே நிற்கிற ஆச்சர்ய பூதனை –
————-
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை-7-10-2-
அகடிதகடநா சாமர்த்தியத்தை உடையவனை –ஒரு சிறு வடிவாலே சகல லோகங்களையும் அடக்கி
ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளின ஆச்சர்ய பூதனை –
—————-
தெள்ளியார் வணங்கப் படும் தேவனை மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை-7-10-4-
ஆச்சர்ய பூதனை –
————–
ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்-9-2-9-
மௌக்த்யத்தாலே ஒருவராலும் எழுப்ப ஒண்ணாத படி ஒரு பவனான ஆலந்தளிரிலே பள்ளி கொள்கிற
ஆச்சர்ய பூதன் என்று தோற்றும்படி இரா நின்றார் –
கண்டவாறே இவருடைய அகடிதகட நா சாமர்த்தியம் எனக்குத் தோற்றா நின்றது –
————–
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்—-புல்லாணியே–9-3-6-
மாயன் –
இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி
அப்போது அப்படி பரிமாறினவன்-
————-
எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான்–10-6-1-
எங்கேனும் ஓர் இடத்திலே தான் இத்தோடு ஒத்து இருப்பதோர் ஆச்சர்யம் உண்டோ –
இப்படி பட்ட ஆச்சர்யம் தான் என் என்னில் –
நர நாரணனாய் யுலகத் தற நூல் சிங்காமை விரித்தவன் –
நர நாராயண ரூபியாய்க் கொண்டு லோகத்திலே அற நூல் உண்டு –
ஹிதானுசாசனம் பண்ணப் போந்த வேதம் –அது சிங்காதபடியாக-அது சங்குசிதம் ஆகாமே
உபதேசத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக விஸ்த்ருதமாம் படி பண்ணினான் –
——————
ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-
அத்தை அடங்கலும் கோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் –
அத்தை அடங்கலும் அமுது செய்தானாய் அல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று –
————
அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை–11-1-10-
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனாய்-தன்னை ஒழிந்ததுக்கு அடங்கலும் தான் நியாமகனாய் இருந்து
வைத்துப் பாண்டவர்கள் நோவு படுகிற அன்று பாரத சமரத்திலே -இன்னார் தூதன் -என்னும்படி
தன்னைத் தாழ விட்டு தூதனாய் நின்ற ஆச்சர்யத்தை யாயிற்று கவி பாடிற்று –
——————-
துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்–1-3-10-
மனம் திரிவு -அறிவு கெடும்படி தெரியாமையைப் பண்ணக் கடவதான குண சேஷ்டிதங்களை
கூடின அவதாரங்கள் -மாயைகள் – ஆகாசத்தைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாது
விண்ணுளார் பெருமான் அடிமை செய்வாரையும் -அறும்-அவனுடைய ஆச்சர்யங்கள் நம்மால்
பரிச்சேதிக்கப் போமோ -அது கிடக்கிடீர் –
அவன் அனுக்ரஹத்தாலே காட்டின வடிவழகை அனுபவிப்போம் நாம் என்கிறார்
நன்கு அனுபவித்து உள்ளம் கலங்கி போகும் ஆனந்த மயக்கம் இது
————–
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-
மாயோனே –– ப்ரஹ்மாதிகளையும் ஷூத்ர மனுஷ்ய ஸ்தானத்தில் ஆக்க வல்ல உன்னுடைய ஆச்சர்யமான
வைலஷண்யம் இருந்த படி என் – பிறர் உடைய அநதிகாரம் சொல்வதில் நோக்கு இல்லை –
ஸுவ அநவதிகாரம் சொல்வதிலே நோக்கு –
————-
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-
மாயா -இச்சா ரூபா ஞானம் என்றபடி –
மாயா வயுனம் ஜ்ஞானம் -என்கிறபடியே இச்சா பர்யாயமாய் இருக்கிற ஜ்ஞானத்தாலே புக்கு
உண்டாய் வெண்ணெய் –அது செய்யும் இடத்தில் சக்கரவர்த்தி திரு மகனாய்ப் புக்கு –
வெண்ணெய் அமுது செய்ய -என்றால் கொடார்கள் இறே
மாயோனே0ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தாரணம் இல்லாத படியான
ஆஸ்ரித வ்யாமோஹத்தாலே செய்தாய் அத்தனை அன்றோ –
——————
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன்-1-5-9-
விஷம் அமிர்தமாம் படி அமுது செய்து-தன்னை காப்பாற்றி – தன்னைத் தந்து நம்மை உண்டாக்கின ஆச்சர்ய பூதன் –
புனல் தரு புணர்ச்சி பூ தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி –தன்னைக் காத்து –
அதனால் தங்களை சமர்ப்பிப்பார்களே ஆழ்வார்கள்-சத்தையை உண்டாக்கிய ஆச்சர்ய பூதன்
எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல –அவனுக்கே -என்று அவள் அனந்யார்ஹம் ஆக்குகையாலே அமிர்தம் ஆயிற்று –
இதனாலே ஆத்மாவின் வினைகளும் கழியுமே-பூதனையுடைய விஷம் அமிர்தமாம் படி அமுது செய்தவன்
—————
ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-
மாயப்பிரானை
அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரன்
தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து திருவவதரித்து
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரியாதானாய் -அசந்நேவ-ஆவேனே என்று பரம சத்வம் எண்ணுவதே –
அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக
அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை அனுசந்தித்து –
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து –மாயப் பிரானை –என்கிறார் –
—————
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-
———-
யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-
கடல் மலி மாயப் பெருமான்
திருப் பாற் கடலிலே குறைவற வந்து வர்த்திப்பானாய் -ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடைய சர்வேஸ்வரன்
அன்றிக்கே
கடலில் காட்டில் மிக்க ஆச்சர்யத்தை யுடைய சர்வேஸ்வரன் -என்றுமாம்
———–
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5-
ஸ்ருஷ்டமான ஜகத்திலே அனுபிரவேசம் முதலான ஆச்சர்யத்தை உடையவன் –
சர்வ சரீரியாய் இருக்கிற சர்வேஸ்வரன்
——————
மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே-1-9-6-
மாயன் என் நெஞ்சினுள்ளான் –
இது என்ன பெறாப் பேறு-ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவன் –
(பூர்வ உத்தர ஆதி -அனுவாத -தர்சநாத் -மாயனில் முடித்து இதிலும் தொடங்கி –
நெஞ்சில் உள்ளது பெறாப் பேறு என்றபடி )-என்னுடைய ஹ்ருதயஸ்தனானான்
இது என்ன சேராச் சேர்த்தி-மற்றும் ஆரேனும் நான் பெற்ற பேறு பெற்றார் உண்டோ
———–
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா–2-3-2-
என்னை இப்படி விஷயீ கரித்த நீ தான் ஒரு குறைவாளனாய்ச் செய்தாயோ
ஸ்ரீ யபதிக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாத படி இருப்பதொரு தாரித்ர்யம் உண்டு
(கீழே ஏக ரசமாய் கலந்தவனை நெஞ்சிலே நினைத்து -அவன் எவ்விடத்தான் நாம் யார்
என்று நினைத்து அருளிச் செய்கிறார் )
ந தத் சமச்சாப்யாதி கச்ச த்ருச்யதே –என்கிறபடியே சமாதிக தரித்ரனாய் இருக்கும்
இது என்ன ஆச்சர்யம் தான் –
————
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-
பரம பதத்தில் ஆபரணமாகக் காட்சி தரும்-இங்கு ஆயுதமாய் இறே இருப்பது
இப்படி ரஷிக்கிறவனுடைய அந்த ரஷணத்தில் தோற்று இருப்பாராய்–அவன் தன்னோடு ஒக்க ப்ராப்யருமாய்
பகவத் குணங்களுக்கு தேசிகராய் இருப்பாருமாய் -போதயந்த பரஸ்பரத்துக்கு துணையாய் இருக்கிறவர்களுடைய குழாங்கள்
கலியர் -கலவரிசிச் சோறு உண்ண-என்னுமா போலே -அத்திரள்களிலே போய்ப் புகப் பெறுவது எப்போதோ -என்கிறார் –
அடியார்கள் குழாங்களையே-இரண்டிலும் பன்மை -அத்திரள்களிலே
————
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்–2-10-8-
தன்னையும் கொடுத்து தன்னை தன்னை அனுபவிக்கைக்கு ஈடான சக்தியையும் கொடுக்கும்
ஆச்சர்ய பூதனான கிருஷ்ணன் வர்த்திக்கிற தேசம்
—————
அண்ணல் மாயன் அணி கொள் செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்-3-3-3-
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியங்களையுடையவன்.
‘அவற்றில் ஓர் அம்மான் பொடி-அம்மான்’ -அப்படியே, ஆச்சரியமாக
அணிகொள் செந்தாமரைக் கண்ணன்-முதலுறவு செய்யுங் கண்களைச் சொல்லுகிறது.-தூது செய் கண்கள் –
வேறே ஆபரணம் வேண்டாத படி தாமரையை வென்ற திருக் கண்கள்
———–
கண்ணனை மாயன் றன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை அனந்தனை–3-4-9-
கண்ணனை மாயன் தன்னை –
‘எத்திறம்!’ என்ன வேண்டும்படியான குணங்களையும் செயல்களையுமுடையவனை.
——-
வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்?-3-6-4-
உம்முடைய மனத்திலே வையுங்கோள் என்று நான் சொல்லுகின்ற ஆச்சரியமான அழகு குணம் செயல்களை
யுடையனானவனுடைய சீலத்தன்மையை.
அன்றியே,
‘மாயவன் சீர்மை’ என்றதனால், ‘அதிகாரி புருஷர்களான பிரமன் சிவன் முதலாயினார்கள் எல்லாம் வந்து பற்றும்படியாக
அன்றோ அவனுடைய பெருமை’ என்று, பற்றுவதற்கு உறுப்பாக அவனுடைய பரத்துவத்தைச் சொல்லிற்றாகவுமாம்.
—————–
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-10-4-
பகைவர்கள் மேலே பொருகிற சிறகுகளையுடைய பெரிய திருவடியைக் கருத்து அறிந்து
நடத்த வல்ல ஆச்சரியத்தையுடையவனை.
இங்கு ஆச்சரியமாவது, வாணனுடைய கரத்தைக் கழித்து, அவனை இறையிலி செய்து,
நாட்டுக்குத் தானே நின்று இறையான ஆச்சரியம். ‘வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ அன்றோ?
——————
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-
மாயன்– ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவன்.
————-
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-
கணக்கு இல்லாததான பிரகிருதியின் விகாரமுகத்தால் உண்டான மக்களுடைய மதிமயக்கங்களாலே
பிரீதிக்கு இடமான விளையாட்டுகளை உடையவனைப் பெற்று.
‘நாம் ஒன்றை நினைத்துச் செய்ய, இவை ஒன்றைச் சூழ்த்துக்கொண்ட படி கண்டாயே!’ என்று பிராட்டி
முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்ய, ‘அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாக முடியும்’ என்றபடி.
——–
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-
நினைவின் உருவமான ஞானத்தாலே படைத்தல் முதலிய காரியங்களைச் செய்ய வல்ல
ஆச்சரியமான சத்திகளோடு கூடியவனை.
————-
மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!-4-3-4-
ஆய மாயனே’ என்பதனை ‘மாய ஆயனே’ எனப் பிரித்துக் கூட்டுக. ஆயன் – கிருஷ்ணன்
ஆச்சரியமான ஆற்றலையுடைய ஆயனே!
இவனும் பிள்ளையாயே முலையுண்டான்; அவளும் தாயாய் முலை கொடுத்தாள்;
பொருளின் தன்மையாலே முடிந்தாள் இத்தனை.
————
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!–4-3-7-
‘உன் திருவடிகளிலே கைகூப்பி வணங்கினவர்கள் உன்னைக் கூட நின்ற மாயனே’ என்னுதல்.
அன்றிக்கே, ‘கைகூப்புவார்கள் குரை கழல்கள் கூட நின்ற மாயனே’ என்று கொண்டு கூட்டி,
‘உன்னைக் கைகூப்புவார்கள் குரைகழல்கள் கூட நின்ற மாயனே’ என்னுதல்.
திருவடிதான் அஞ்சலிக்கு விஷயமுமாய் அஞ்சலியினாலே சாதிக்கப்படுகின்ற பொருளுமாய் அன்றோ இருப்பது?
மாயனே –
‘ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே உன்னை அடையலாம்படி இருப்பதே! இது என்ன ஆச்சரியந்தான்!’ என்கிறார்.
———–
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;–4-4-6-
பொருளின் தன்மை அறிந்தவர்கள், பொருளின் தன்மை அறியாதவர்கள்’ என்று வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒக்க
ஈடுபடுத்தும் குழலின் நல்லிசை வந்து செவிப்படில் கிருஷ்ணன் என்று மோஹிப்பாள்;
‘நுடங்கு கேள்வி இசை’ என்னப்படுகின்றவன் அன்றோ அவன்?
அன்றிக்கே, ‘பகல் எல்லாம் பசுக்களின் பின்னே போனேன்; மாதா பிதாக்களுக்குப் பரதந்திரன் ஆனேன்; பிரிந்தேன் ஆற்றேன்,
‘ஒரு பகல் ஆயிரம் ஊழி’ என்பன போலே சொல்லிச் சமாதானம் பண்ணிக்கொண்டு வந்து தோற்றுமவன் என்று,
அவன் குழலிலே வைத்துச் சொல்லும் தாழ்ந்த சொற்களை நினைத்து மோஹிக்கும் என்னுதல்.
————
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-
மாயம் போர் –
ஆச்சரியமான போர்;
அன்றிக்கே, ‘
வஞ்சனையுடைய போர்’ என்னுதல். பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது ஆனவை
இத்தலையிலும் உண்டு; மஹாரதர் பலர் கூடி ஒருவனான அபிமன்யுவைக் கொன்றது
தொடக்கமானது அத்தலையிலும் உண்டு; இவற்றைச் சொன்னபடி.
———
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியத்தை யுடையனாய், அந்த அழகு முதலானவற்றை
அடியார்களுக்காக ஆக்கி வைக்கும் உபகாரகன்
————–
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-
ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனுடைய குணங்களிலே
ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை.
————–
பரம் புருடன் நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3-
என் மடியில் சுவடு அறிந்த பின்பு படுக்கையில் பொருந்தி அறியாதவன்.
மிக்க வியாமோகத்தையுடையவன்-மடி – வயிறு. சுவடு – இனிமை. –
கண்ணன் என் ஒக்கலையானே’ –திருவாய். 1. 9 : 4
——-
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே –5-1-3-
புறமே சில மாயம் சொல்லி
புறப் பூச்சாக சில பொய்களைச் சொல்லி
இத்தாலே கூத்துக்களைச் சொல்ல -என்ற இடத்தைச் சொல்லிற்று
————
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி–5-2-5-
மாயத்தினால் எங்கும் மன்னி-
“மாயா வயுநம் ஞானம்” என்கிறபடியே, இச்சை என்ற பொருளைக் குறிக்கிற ஞானத்தாலே.
இச்சையாலே எங்கும் புகுந்திருந்து.
———-
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -5-2-11-
ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடைய கண்ணனை ஆயிற்றுக் கவி பாடிற்று.
————-
உற்றாரிலி மாயன் வந்து ஏறக் கொலோ?-5-6-7-
இற்றைக்கு முன்பு தம் முயற்சியால் கிட்டினவர்கள் ஒருவரும் இல்லாதபடி இருக்கிற
ஆச்சரியத்தையுடைய ஸ்ரீ சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
(அடையக் கொலோ இல்லையே -அவன் அனுக்ரஹம் பேற்றுக்கு உபாயம் என்றதாயிற்று )
————
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி–5-7-4-
ஆச்சரியமான போரைச் செய்து.
அன்றிக்கே,
வஞ்சகமான போரைச் செய்து என்னுதல். என்றது,
பகலை இரவாக்கியும்,-ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும்,
பகைவர்களுடைய உயிர்நிலையைக் காட்டிக் கொடுத்தும் செய்தமையைத் தெரிவித்தபடி.-
மாயப் போர் தேர்ப் பாகு-
————–
என் கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!–5-7-9-
ஒருவர்க்கும் தெரியாத ஆச்சரியமான செயல்களையுடையையாய், அவை எல்லாம்
எனக்குத் தெரியும்படி செய்து,என்னை அகப்படுத்திக் கொண்டவனே! –
மற்றவர்க்கு கள்ளன் –மாயவன் -எனக்கு கள்ள மாயவன்
————
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்–5-10-1-
அடியார்களைக் காப்பாற்றுவதற்காக வந்து பிறந்து அவர்களுடைய
ஆபத்துக்களைப் போக்கி உபகரித்தால், ‘இது நமக்காகச் செய்தானன்றோ’ என்று இருக்கை யன்றிக்கே,
“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந: மோஹியித்வா ஜகத் ஸர்வம் கத:ஸ்வம் ஸ்தாநமுத்தமம்”-என்பது, பாரதம்.
இவன் தன்னோடே எதிரிடும் படியான சம்சாரத்திலே இராமல், ஓரவசரத்திலே இங்கு நின்றும்
போன ஆச்சரியமான செயல்களும். என்றது,
“நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், பூமியின் பாரத்தை நீக்கி உலகத்தை யெல்லாம் மோஹிக்கச் செய்து
மேலான இடமான தன் பரமபதத்தை அடைந்தார்” என்று, வந்து திருவவதாரம் செய்து,
அநுகூலர் காரியங்கள் அடையத் தலைக்கட்டி, பிரதிகூலரை யடைய முட்கோலுக்கு இரையாக்கி,
அனுகூலரை யடையக் கண்களாலே விழவிட்டு, இரு திறத்தாரையும் நோவு படுத்தி,
இங்கு நின்றும் போய்த் தப்பப் பெறுவதே! என்கிறது.
“ஸ்வம் ஸ்தாநம் உத்தமம் – தன்னுடைய உத்தமமான ஸ்தானத்தை” என்கிறபடியே,
இங்குள்ளாரடங்கலும் எதிரம்பு கோக்குமாறு போலே யன்றோ அங்குள்ளாரடங்கலும் எதிர் ஏற்கப் போனபடி.
————-
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்?–5-10-6-
கண்களால் பார்க்க முடியாமலிருக்கிற உன்னுடைய ஆச்சரியமான செயல்களை.
———-
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.–6-1-9-
அடியார்கட்கு விரோதிகளை அழியச் செய்யுமிடத்தில் கண் பாராத ஆச்சரியத்தை யுடையவனை.
அடியார்கட்குத் தான் கையாளாக நின்று தன்னைக் கொடுக்குமவனை.
இத்தனையும் செய்தாலும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்னும் வியாமோகத்தை யுடையவனை.
தன்னைப் பிரிந்தார் படும் நோவறியாத கொடுமையை யுடையவனை.
எளிமை-காதா சித்தம்- ஒரு கால விசேஷத்தில் உள்ளது, முதன்மையே கண்டீர் பெருத்திருப்பது
இனி, எளியனானதுவும் வேண்டிச் செய்தான் அல்லன், இத்தலையை நலிகைக்காகச் செய்த
செயல் கண்டீர் என்று அருளிச் செய்வர் பட்டர்.
—————-
ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே?–6-2-4-
உன்னுடைய வஞ்சனை பொருந்திய காரியங்களை, உண்டாக்கப்பட்ட இந்திரன் முதலானோர்
அன்றிக்கே நித்திய ஸூரிகளும் அறியார்கள்.
அறியாமைக்கு அவர்களும் ஒத்திருக்கச் செய்தே, உகந்தாரைக் காற்கடைக் கொள்ளுதலைச் சொல்லும்
இடமாகையாலே நித்திய ஸூரிகளை எடுத்துக் காட்டாகச் சொல்லுகிறார்கள்
“சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி”-திருவிருத்.செய். 21.-என்று கொண்டு அவர்கள் சமாராதனத்துக்கு
வேண்டுவன கொண்டு நிற்க ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்தான் அன்றோ.
அது தன்னையும் விட்டு அன்றோ அடல் ஆயர் தம் கொம்பினுக்குக் கோட்டிடை ஆடினான்.
பழையாரை எல்லாம் காற்கடைக் கொள்ளுகிற இடமாய் இருக்கிறதன்றோ.
நவப் பிரியைகளை விரும்புவாரைப் போலே காணும்.
————–
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-6-4-2-
நப்பின்னைப் பிராட்டியோடே கலந்த ஒற்று மஞ்சளும் தானுமான மிக்க
ஆச்சரியமான ஒப்பனை யுடைய உபகாரகன்.
அன்றிக்கே,
நப்பின்னைப் பிராட்டியோடு கலந்தாற் போலே,
அல்லாத பிராட்டிமார் “கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்,
தங்கு மேல் என் ஆவி தங்கும்” –நாய்ச்சியார் திருமொழி, 8 : 7.என்று இருக்குமவர்களுடைய
திரு முலைத் தடத்தில் குங்குமக் குழம்பும் கோயிற் சாந்துமாய் நின்ற அழகினைச் சொல்லவுமாம்.
தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது –
அவன் செயல்களை நினைத்தவாறே நெஞ்சு தன் வசம் இன்றி அழியும்படி.
“நினை தொறும், நெஞ்சு இடிந்துகும்” –. 9. 6 : 2.என்றே அன்றோ இருப்பது.
———–
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6-
பரப்பை யுடைத்தான பூமியடங்கலும் வருத்தம் இன்றி வளர்ந்து அளந்த ஆச்சரியத்தை யுடையனான
உபகாரகனுடைய ஆச்சரியமான செயல்களையே.
—————-
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-
அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சை யுடையேன்.
——————
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-
‘திரு உலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்து கொண்டது தம்மை என்று இருக்கிறார்.
மநோ வாக் காயங்கள் -சிந்தை சொல் செயல் மூன்றையும் கொண்டானே –
—————
மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்–6-4-10-
பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது,
எதிரிகளுடைய மாமத்தைக் காட்டிக் கொடுப்பது ஆனவை தொடக்கமானவற்றைச் செய்து.
————
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு மாயச் சகடம் உதைத்த மணாளற்கு–6-6-8-
வஞ்சனை பொருந்திய சகடம் என்னுதல்;
“தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாய் பிளந்து வீய” என்கிறபடியே,
சகடம் உருமாயும்படி என்னுதல்.
——
மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு–6-6-9-
————-
பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10-
வந்து அவதரித்து மற்பொரு தோளையுடையனாயிருக்கை.
சாத்தின சாந்து அழியாதபடி மல் பொருத ஆச்சரியத்தையுடையவனாதலின் ‘மாயப் பிரான்’ என்கிறாள்.
சாவத் தகர்த்த சாந்து அணி தோளன் – பெரியாழ்வார் திருமொழி, 4. 2 : 6.-அன்றோ.
ஸ்ரீ மதுரையிற் பெண்களுக்கு அழகினை உபகரித்தவனாதலின் ‘பிரான்’ என்கிறாள்.
அன்றிக்கே,
மற்றும் ஆச்சரியமான உபகாரங்களைச் செய்தவனுக்கு என்றுமாம்.
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு –
ஸ்தாவர ஐங்கமங்களான எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் நிற்கச் செய்தே,
அவற்றின் தோஷங்கள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கிற ஆச்சரியத்தை யுடையவனுக்கு.
————
பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்–திருவாய்மொழி–6-8-7-
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் –
சிலரோடு கலக்கும் போது அவர்கள் தாங்களாய்க் கலக்குமவன்.
சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாய் நின்றவன்.
“அவற்றை அநுப் பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்”
–“தத் அநுப்ரவிஸ்ய ஸச்ச த்யச்ச அபவத்” என்பது, தைத்திரீய ஆனந். .-என்கிறபடியே.
புணர்ச்சிக் காலத்தில் ஒரே பொருள் என்னலாம்படி கலக்க வல்லவன்.
மாயன் –
அவர்களாய்க் கலவா நிற்கச் செய்தே, தனக்கு அங்கு ஒரு தொற்று அற்றுப் போருமவன்.
சர்வாந்தர்யாமியாய் இருக்கச் செய்தே, “கர்ம பலத்தை அநுபவிக்காமல் வேறுபட்டு நிற்கிற
ஈஸ்வரன் விளங்கிக் கொண்டிருக்கிறான்” என்கிறபடியே,
இவற்றின் குற்றங்கள் தன் பக்கல் தட்டாதபடி இருக்கை.
உலகமே உருவமாய்க் கொண்டு இவர்களோடு பிரித்து எண்ண ஒண்ணாதபடி நிற்கச்செய்தே,
அசித்தினுடைய பரிணாமமாதல், சித்தினுடைய இன்ப துன்பங்களாதல் தட்டாதபடி நிற்கை.
என்னோடே பரிமாறு போலே கண்டீர் எல்லாரோடும் கலந்து நின்றே ஒட்டு அற்று இருக்கும்படி
என்கைக்காக ‘யாவையும் யாவருமாய் நின்ற மாயன்’ என்கிறாள்;
இல்லையாகில், இப்போது இவ்விடத்திற்கு இது தேட்டம் அன்றே.
அழுக்குப் பதித்த உடம்பைக் காட்டில் பரஞ்சுடர் உடம்புக்கு உண்டான வாசி சொல்லுகிறது மேல் :
கலந்தும் கழன்றும் இருக்கும் சாமர்த்தியம் -ஆழ்வார் இடமும் காட்டி அருளு கிறானே
————-
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே–6-9-2-
திருமகள் கேள்வனானவன் இரப்பவனானபடியும், வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடியும்,
“கொள்வன் நான் மாவலி” என்றாற் போலே சில மழலைச் சொற்களைப் பேசினபடியும்,
சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்த படியும் தொடக்கமான ஆச்சரியங்களைச் சொல்லுகிறது.
—————
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6-
தன்னுடைமையைத் தீண்டுதற்குத் தான் வியாமோகம் செய்யுமவன்.
என்னளவில் வந்தவாறே என்னை இரப்பாளன் ஆக்குகிறாயோ? அத்தலை இத்தலை ஆயிற்றோ?
————–
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10-
மீண்டு இன்றிக்கே ஒழிந்தாலும் விடொண்ணாத கல்யாண குணயோகம் சொல்லுகிது.
————-
வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!-6-10-3-
மாய அம்மானே –
வெறும் வடிவழகே அன்றிக்கே, ஆச்சரியமான குணங்களாலும் செயல்களாலும் பெரியன் ஆனவனே!
———–
இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து-7-1-8-
முன்னம் மாயம் எல்லாம்-
அநாதியான சம்சாரத்தை எல்லாம்.
———-
‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;செய்ய வாய்—7-2-6-
மா மாயனே என்னும்-
மையல் செய்த பிரகாரங்கள், என்றது,‘கலக்கிற சமயத்தில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்த
பரிமாற்றங்காணும் இவள் மனத்தில் பட்டுக் கிடக்கிறது’ என்றபடி.
‘இயல்பாயுள்ள மேன்மை போன்றதன்றே, காதலால் தாழ நின்ற நிலை’ கலவிக் காலத்தில்
ஆச்சரியமான செயல்களையுடையவனே!’ என்னும்.
செய்ய வாய்-
இதுவும் அந்த மாயங்களிலே ஒன்று.
————–
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-
மாயன் –
சொல்லிச் சொல்லாத தேக காந்தியையும் ஆத்தும குணங்ளையும் நினைக்கிறது.
அன்றிக்கே, மாயன் – ‘அடியார்களிடத்தில் பக்ஷபாதத்தையுடையவன்’ என்னுதல்.
————
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-
சிறுக்கனுடைய சூளுறுவு செய்த அக்காலத்திலே தோற்றி, இரணியனுடைய உடலை
இரு பிளவு ஆக்கின இவ்வாச்சரியமான செயலை அறிந்தும்.
———
மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?–7-5-9-
அவனுடைய செயல்கள் முழுதும் தன்னை அடைந்தவர்களின் பொருட்டாய் ஆச்சரியமாய் இருக்கும்
என்று அறியுமவர்கள்–அடியவர்கட்குப் பரதந்திரப்பட்டவனுக்கு அன்றி ஆள் ஆவரோ?
———–
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?–7-5-10-
அவன் ‘என்னையேபற்று’ என்று சொல்லாநின்றார், இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவார்களோ?
இரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ அவள் சூழல் முடிக்கைக்காக?
———–
ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி–7-6-10-
மாயங்களே இயற்றி –
ஆயுதச் சாலையிலே புக்கு ஆயுதங்களை முரிப்பது, ஈரங்கொல்லியைக் கொன்று பரிவட்டம் சாத்துவது,
குவலயா பீடத்தின் கொம்பை முரிப்பது, மல்லரைக் கொல்லுவது ஆன ஆச்சரிய காரியங்களையே செய்து.
இயற்றுதல் – செய்யத்தொடங்குதல்
————-
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்–7-7-9-
இவள் நெஞ்சிலே அழகிதாக மயிர்பட்டது காணும்.
இத்தனை அடைமொழி கொடுத்துக் கூறினால் ஆயிற்று உபமானமாகப் போராது என்னலாவது.
பராசர பட்டர் ஆயிரம் நாக்கு வாங்கி அரங்கன் வைபவம் சொல்ல முடியாது என்றால் போலே –
பின்னையும், ஆச்சரியத்தை யுடையனான அவனுடைய திருக்குழல் என்னுமித்தனை. -மாயன் குழல் என்று சொல்லுவதே –
இத்தனை இடு சிவப்பானது அவனுடைய இயல்பிலே அமைந்ததான திருக்குழலுக்கு ஒப்பாகுமோ?
————-
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்–7-8-1-
மாயா –
‘மாயா!’ என்கிற இது, இத்திருவாய்மொழிக்காகச் சுருக்கமாய் இருக்கிறது.
மாயனை மன்னு-அங்கும் 30 பாட்டிலும் மாயன் அர்த்தம் கோத்து அர்த்தங்கள் உண்டே –
————-
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-
வைத்த வளையத்தில் அழகைக் காட்டியாயிற்று,புறம்பு உண்டான பற்று அறுத்ததும்,
தனக்கேயாம்படியாகச் செய்ததும்.
உன் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து, பின்னையும் இதிலே பொருந்தாதபடியான என்னைச் சம்சாரத்திலே
வையா நின்றாய் – இவை என்ன தெரியாத செயல்கள்தாம்!
புறம்பு உண்டான பற்றை அறுத்து உன் பக்கலிலே அன்பைப் பிறப்பிக்கையாலே நீ அங்கீகரித்தாயோ என்று இரா நின்றேன்;
பின்னையும் இச்சம்சாரத்திலே வைக்கையாலே கைவிட நினைத்தாயோ என்று இரா நின்றேன்; இது என்ன மயக்கம்!
———–
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை–7-10-10-
செய்யப்பட்ட மாயங்கள் அவனுக்கு தெரியாதது ஒன்றும் இல்லையே –
சர்வஞ்ஞன் அன்றோ -எண்ணம் -மாயங்கள் -அவன் அறியான் என்று நாம் நினைப்பதால் –
பூதேவர்களான பாகவதர்களாலே சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் வணங்கப்படுகின்ற,
சிந்தையை மகிழச் செய்கின்ற திருவாறன்விளை என்னும் திவ்விய தேசத்திலே எழுந்தருளியிருக்கின்ற
பரிசுத்தனான சர்வேஸ்வரனுக்கே அடிமை என்று அறுதியிட்ட பின்பு,
என் மனமானது வேறு ஒன்றினை உத்தேசியமாக நினைத்திராத தன்மையைச் சர்வேஸ்வரன் அறிவான்;
சிந்தையினால் நினைக்கப்படுவனவான வஞ்சனைகள் அவன் அறியாதன ஒன்றும் இல்லை ஆதலால்,’ என்றவாறு.
——–
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்–8-1-4-
ஒருவகையான பிரயோஜனத்தையும் விரும்பாமலே கிட்ட வேண்டும் செயல்கள்-
உன்னுடைய ஆச்சர்யமான செயல்கள்-
அநந்ய பிரயோஜனராக தூண்டும் அவன் சேஷ்டிதங்கள் எல்லாம் –
————
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-
மாயம் கூத்தன் –
ஆச்சர்யமான செயல்களை உடையவன்–
————
காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி–8-2-9-
மாயத்தால் -கை செய்கைக்கு அப்பாலதான வடிவழகை உடைய வாமன வடிவைக் காட்டி
மாயமாவது -உபய விபூதிகளையும் உடையனான தான் ஒன்றும் இல்லாதவனாய் வருகையும்-
திருமகள் கேள்வனான தன்னை இரப்பாளானாக ஆக்கியும்–சிறுகாலைக் காட்டி
பெரும் காலால் அளந்து கொள்ளுகையுமாம்
மாயம் -வஞ்சனை
கை செய்கை -எனபது கை செய் -என்று கடை குறைந்து நிற்கிறது
அளவிடற்கு அரிய பெருமை உடைய தான் இரப்பிலே–தகண் ஏறின வாமன வேடத்தைக் கொண்டான்
————
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-
அத்தேசத்தில் நித்யவாசம் செய்கிற ஆச்சர்யத்தை உடையனான சர்வேஸ்வரனை –
பிரமன் சிவன் -இவர்களை பலகால் சொல்லுகிறது–
இவனுடைய நிர்வாஹக தன்மை தோற்றுகைக்காகவும்
நிர்வஹிக்கப்படும் பொருள்களில் ஒன்றால் நலிவு உண்டாகை கூடாது என்கைக்கும்
அமர்ந்த மாயோன் -என்று வைத்து இவர்களைச் சொல்லித் தலைக் கட்டுகையாலே
சாமாநாதி கரணத்தைக் காட்டுகிற சொற்கள் விசேடியத்தில் சென்று சேரக் கடவை ஆகையாலே
சரீரியாய் இருக்கிறவனை என்றுமாம் –
———–
தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும் வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே-8-4-11-
வானிலே இருக்கிற பிரமனை படைப்பிற்கு தகுதியாக செவ்வியை உடைத்தாய் திரு நாபி கமலத்தில்
படைத்த ஆச்சர்யத்தை உடையவனை
மலர்மிசை படைத்த மாயோனாய் – சம்பந்தத்தை உடையவனாய் -கோனை –என்கை
பிறவி மா மாயக் கூத்தினையே -முடிக்கும் –
அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே-
இப் பத்து தானே முந்துற பரம பதத்தைக் கொடுத்து பின்பு சம்சாரம் ஆகிற மகா நாடகத்தை அறுக்கும் –
————
மாயக் கூத்தா வாமனா–8-5-1-
ஆச்சயர்யங்களையும்-
மனத்தினைக் கொள்ளை கொள்ளுகிற செயல்களையும்-உடையவனே
இந்த்ரனுடைய இரப்பைத் தலைக் கட்டுக்கைக்காக
அன்றே பிறந்து – அன்றே வளர்ந்த – அன்றே இரப்பிலே அதிகரிக்கையும் –
மகாபலியினுடைய வேள்விச் சாலை அளவும் காட்சிக்கு இனியதாம்படி நடந்து சென்று –
மாவலி -என்றாப் போலே சில மழலைச் சொற்களை சொல்லுதல்-முக்த ஜல்பிதம் –
முதலான முதலான மனத்தினைக் கொள்ளை கொள்கின்ற செயல்களையும் உடையவனே –
நடந்து சென்ற நடை வல்லார் ஆடினாப் போலே இருக்கிறதாயிற்று இவர்க்கு–அதனால் கூத்தா -என்கிறார் –
————–
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே-8-5-9-
பகைவர்களான கஞ்சன் முதலியோர் நடுவே பிறந்த மாயோனே –
தோன்றுதல் அன்றிக்கே –அதன்பின் பன்னிரண்டாம் மாதத்தில் -என்கிறபடியே-
ததஸ்த த்வாதஸ மாஸே சைத்ரே நவாமிகே திதௌ-பால -18-10-கர்ப்ப வாசம் செய்து
பிறந்த ஆச்சர்யத்தை உடையவன் ஆதலின் -பிறந்த மாயனே -என்கிறார் –
பூமியின் பாரத்தை போக்குதல் என்னும் வ்யாஜ்யத்தாலே-தனக்கு வேறுபட்ட சாதியினை உடையவனாய்
வந்து அவதரித்து அடியார்கள் உடைய விரோதிகளைப்-போக்கும் தன்மையானவன்
————-
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெருமாயா
உன்னை எங்கே காண்கேனே-8-5-10-
பிறந்த மாயா –
கர்மங்கட்கு கட்டுப் படாதவனாய் வைத்து –
பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியை தனக்கு-வேறுபட்ட சாதியை உடையதாக்கி அவதரித்த
ஆச்சர்யத்தை யுடையவனே –
பாரதம் பொருத மாயா –
பிறந்தால் போலே இருப்பது ஒன்றாய் ஆயிற்று இவ் ஆச்சரியமும் -என்றது-
சத்தியத்தை மேற் கொண்ட இறைவன் அசத்தியத்தை மேற்கொண்டவனான -ஆச்சர்யம் -என்றபடி –
அதாவது
ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுக்கையும் –பகலை இரவு ஆக்குதலும் – முதலாயின –
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
————
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3-
பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்கிற திருமார்வினை
உடையனாய்
திருக் கடித்தானத்தை மருவி உறையா நின்று கொண்டு
என் பக்கலிலே ஆச்சர்யமாம்படி
ஈடுபட்டு இருக்குமவனாவன் நினைக்கும் தோறும் புதியனாய்–இனியன் ஆகா நின்றான்-
வீர ஸ்ரீ ஸ்ரீ சீதா பிராட்டி இருவர் உடன் வந்து என் விரோதிகளை போக்கி
கைங்கர்யம் கொள்ளும் மிதுனம் என்கிறார் –
————-
மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்–8-6-4-
ஆச்சர்யமான குணங்களையும் செயல்களையும் உடைய உபகாரகன் –
தன்னைப் பிரிந்து நான் பட்ட கிலேசம் எல்லாம் நசித்துப் போம் படி -என்றது
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியில்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து-பட்ட விடாய் எல்லாம் வாசனையோடே போம்படி -என்றபடி
மாய -மட்டும் இல்லை மாய்ந்து அற –மறுகல் இடாதபடிக்கு
——————-
தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே-8-6-8-
சிலாக்கியமான இருப்பிடமான-நகரங்கள் முற்றும்
என் பக்கலிலே காதலை உடையனான ஆச்சர்யத்தை உடையவனுக்கு-ஆக இருக்கச் செய்தேயும் –
————–
தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான்-8-6-9-
மாயத்தினால் –
காதலாலே -என்னுதல்–அபி நிவேசம் /மோகம் வ்யாமோஹம் /பரிவு -பொங்கும் பரிவு /மால் நெடுமால்
இச்சையாலே -என்னுதல்
மாயா வயுனம் ஞானம் -நிகண்டு
———-
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3–
ஒரு சம்சாரி சேதனனை பெற்று சர்வேஸ்வரன் இப்படி இருந்தான் என்னுமது கூடுவது ஓன்று அன்று
இது என் அறிவு கேட்டால் சொல்லுகிறேனோ –
அவன் தன்னுடைய ஆச்சர்யமான மயக்கத்துக்கு சாதனங்களாய் இருப்பவற்றைக் கொண்டு மயங்கச் செய்தானோ-
நெடுநாள் இந்த சரீரத்தைக் கொடுத்து அறிவு கொடுத்தான் –பிராமாயன் சர்வ பூதாநி யந்த்ரா ரூபாயா மாயையா —
இப்போது தன்னுடைய காதலாலே என்னை மயங்கச் செய்தான் –
———
மாய மயக்கு மயக்கான்என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு -8-7-4-
என்னை வஞ்சித்து-மாய மயக்கு மயக்கான்-
அடியார் அல்லாதாரான துரியோதனாதியர்களைக் குறித்து-
ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுத்தும் –பகலை இரவாக்கியும்
வஞ்சித்தான் இத்தனை அல்லது-பாண்டவர்கள் விஷயத்தில் அதனைச் செய்தானோ
ஆகையாலே தனக்கே பரமான என்னை வஞ்சித்து-ஆச்சர்யமான மயக்கத்துக்கு உரிய
சாதனங்களாலே-மயங்கச் செய்யான் –
காரணம் -என் -என்ன –
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் –
நித்ய சூரிகளுக்கு அவ்வருகான ஏற்றத்தை உடையனாய் வைத்து
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
என்னுடைய அடிமையை நிர்வகித்த-பரம ஆப்தன் -என்னை வஞ்சித்து மாய மயக்கு மயக்கான் –
திரு மோகூர் ஆப்தன் -வழித்துணை பெருமாள் –
———————————
ஆடல் பறவை யுயர் கொடி
எம்மாயனாவாத துவதுவே–8-8-9-
சர்வேஸ்வரன் உடைய வாகனம் என்னும் உவகையின் மிகுதியாலே-
ஆடா நின்றுள்ள பெரிய திருவடியை கொடியாக உடையவனாய் –
ஆச்சர்யமான குணங்களையும் செயல்களையும் உடையவனாய்
பெரிய திருவடி திருத் தோளிலே பின்பும்-பிறகு வாளியுமாய் -பின்புறம் சாத்துகின்ற ஆபரண விசேடம் –
சம்சாரியாக இவ்வாத்மா இருப்பது –அவயவம் போலே –
ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே -சொல்ல ஆடல் பறவை –
——–
வழி பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து -8-10-5-
பகவத் பிரசாதத்தால் பெற்று
அழகாலும் ஸூ சீலத்தவ குணத்தாலும் -மாயனான கோல மலர் அடிக்கீழ்
————
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனை–9-5-11-
இவ் உலக மக்கள் நடுவே என்னை ஒருவனையும்-விசேட கடாஷம் செய்த-ஆச்சர்யத்தை உடையவனை –
அங்கன் அன்றிக்கே –-
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த
தன் புகழ் ஏத்த பல ஊழிக்கு தன்னை அருள் செய்த மாறனை-என்று கொண்டு கூட்டி
அனுபவிப்பார்க்கு எல்லை இல்லாத ஆனந்தத்தை விளைப்பதாய்-எங்கும் ஒக்க பரம்பின தன் கல்யாண குணங்களை
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்-நான் அனுபவிக்கும்படி செய்த மாயன் –
என்று பொருள் கூறலுமாம் –
————-
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து–10-7-1-
அப்படி அறியச் செய்தேயும் தப்ப ஒண்ணாத படியான-ஆச்சர்யமான செயல்களையும் குணங்களையும் உடையவன் –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் தான் மாய மந்த்ரம் தாம் கொலோ -நாச்சியார் திரு மொழி -2-4-என்கிறபடியே-
நன்று -குணங்களாலும் செயல்களாலும் உம்மை அவன் அகப்படுத்தின வழி தான் யாது -என்ன –
மாயக் கவியாய் –
ஆழ்வீர் உம்மைக் கொண்டு உலகத்தில் நடையாடாத-சில கவிகளைப் பாடுவித்துக் கொள்ளப் பாரா நின்றோம்-
அப்படிச் செய்வோம் -என்று ஆயிற்றுப் புகுந்தது
கவி என்று ஒரு காரணத்தை இட்டுக் கொண்டு வந்தான்-காதலி இருக்கும் இடத்தில் -தண்ணீர் -என்று புகுமாறே போலே –
—————-
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்–10-7-3-
என் மாய ஆக்கை –
என்னுடைய உயிரை அனுபவித்து அவ்வளவிலே தான் தவிருவானாய் இருந்தானோ-
அழுக்கு உடம்பு -திரு விருத்தம் -என்றும்-பொல்லா ஆக்கை 3-2-8- என்றும்-
புண்ணை மறைய வரிந்து -5-1-5-என்றும் சொல்லுகிறபடியே இவர் தண்ணிது என்று
தாம் அருவருத்து புறப்பட்டு நில்லா நின்றார் –
இவர் இகழா நிற்கச் செய்தே அவன் இது உத்தேச்யம் என்று மேல் விழா நின்றான்
மாய அம்மான் சேர் –
ஆச்சர்யமான குணங்களையும் செயல்களையும் உடைய சர்வேஸ்வரனும் கூட-தண்ணீர் தண்ணீர் -என்று
கிட்டும்படியான தேசம் ஆயிற்று –தென்னன் திருமால் இரும் சோலை –
———–
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே–10-7-8-
ஆத்மா என்று ஒரு பெயரே மாத்ரமாய்-அநாதி காலம் மூலப் பிரக்ருதியிலே கலந்து-
அதனாலே அசித்தினைப் போன்று இருப்பது ஓன்று ஆகையாலே அதனை-அரு மா மாயத்து எனது உயிர் -என்கிறார் –
தைவீ ஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா -ஸ்ரீ கீதை -7-14-என்கிறபடியே
ஒருவராலும் கடக்க அரியதாய் இருந்துள்ளே-அசித்தோடே கலசிக்கிடக்கிற ஆத்மாவிலும் -என்றபடி-
———–
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை-10-8-3-
மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன் –சூஷ்ம சரீர விமோசனம் –
இவ் உலக வாழ்கையில் நிற்கைக்கு அடியான மாயை உண்டு -மூல பிரகிருதி-அதனைத் திரிய விடுவித்தேன்-நிவர்த்தம் ஆக்கினேன் –
சூஷ்ம சரீரத்தின் நாசம் சொன்னபடி –தொடருகிற பாம்பினைத் திரிய விடுவிப்பாரைப் போலே-
எம்பெருமானார் -உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே-நடுவே மீண்டு அருள-
எம்பார் கதவினை ஒருச்சரித்து-திருமால் இரும் சோலை ஆகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது-என்ன-
ஆம் அப்படியே -என்று அருளிச் செய்தார் –
———-
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-
ஒன்றும் மாயம் செய்யேல் –
உன்னை அறிவதற்கு முன்பு-விடத்தக்க விஷயங்களைக் காட்டி அதுவே அமையும் என்னச் செய்தாய்-
உன்னை அறிந்த பின்பு குணங்களை அனுபவிப்பித்து-
உம்பர் என் குறை -10-8-7-என்னவும்
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-என்னவும் செய்தாய்
அப்படியே இனி ஒரு குணத்தை அனுபவிக்கச் செய்து-நான் பெற்றேனாக செய்து என்னை வஞ்சியாதே கொள் –
————-
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்–10-10-2-
மேல் மாயம் செய்யேல் -என்னச் செய்தே-மீண்டும் சொல்லுகிறது என்ன ஆற்றாமை தான் –
இப்படி இவர் நிர்பந்தித்த இடத்திலும் -உம்மை மாயம் செய்யோம் -துக்கப் பட வேண்டா -என்னாமையாலே-
மாயம் செய்யேல் -என்று மீண்டும் கூறுகிறார் –மா ஸூ ச சொல்ல வேண்டாமோ –
———-
ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து –ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி-—50-
ஆயவனே யாதவனே என்று அவனை –
கிருஷ்ணனே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனே என்று இரண்டும் சொல்லிக் கூப்பிடுவார்கள் போலே காணும் அவர்கள் —
இடைத்தனத்தோபாதி ஸ்ரீவஸூ தேவர் மகனானதுவும் ஆகர்ஷகமான படி –
இரண்டு அவதாரத்துக்கும் பிரயோஜனம் ருக்மிணீ நீளைகளை ப்ராபிக்கை –
இரண்டு மூன்று அக்ஷரமாய் இருக்கச் செய்தே-தளர்த்தியின் கனத்தாலே சொல்லி முடிக்க ஒண்ணாத
பெருமையை யுடைத்தான -திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிடுவார்கள்-
———-
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று -நான்முகன் திருவந்தாதி -–6-
சர்வ கந்த -என்னும்படி நிரதிசய போக்யனாய்-குண சேஷ்டிதங்களால் ஆச்சர்ய பூதனாய் –
அதுக்கு அளவன்றிக்கே -ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமுக்தனாய்
அதுக்கடியாக ஸ்ரீ ய பதியானவனை –ஏத்தாதார் ஹேயரே
———————
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர்–ஸ்ரீ திரு விருத்தம் -10-
நோய் கொள்வேனும் நானேயாய்-வருவானும் நானேயாய்-சொல்லுவேனும் நானேயாய் யானாலும்
கேட்கை அரிதாக வேணுமோ –அனுஷ்டானம் வேண்டா -கேட்கவே அமையும்
இத்தால் –
ஆழ்வார் உடைய ஆத்மா குணங்களோடு தேக குணங்களோடு அவற்றில் ஏக தேசத்தோடு வாசி அற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்கிறபடி –
————
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-
இவர் தாம் அங்கும் கூட நின்று இங்கும் கூட போந்தார் போல் காணும்
ஆழ்வாருக்கு பரத்வத் தோடு-அவதாரத்தோடு வாசி அற நிலமாய் இருந்த படி-
பஞ்ச வடிக்கு போகும் வழியில் ஜடாயுவை கண்டால் போல் -வெண்ணெய்க்கு போந்த இடத்தே ஸ்திரீ ரத்னத்தை லபித்த படி –
விறகுக்கு போந்த இடத்தே விற்பிடி மாணிக்கம் பெற்ற படி-உத்தேசம் ஆகையாலே கூத்து -என்கிறார்–-
அம் கொம்போடே பொரலாம் ஆகில் , இக் கொம்புகளோடே பொருதல் என்றே வேணும் என்று பொருதான்-
அக் குலத்தை எல்லாம் உண்டாக்க பிறந்த படி-
—————-
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் –90-
பூர்வ ஜென்ம தவ பலனாகவே நாயகனைப் பெற இயலும் -உன் திருவடிகளில் அடிமையால் அல்லது
செல்லாத படியான சரீரத்தைப் பெற்ற படியையும்-அப்படி இருக்கச் செய்தே-அவ்வடிமையை இழந்து இருக்கிற இருப்பையும்
அனுசந்திக்கக் காலம் போருகிறது இல்லை -என்கிறார் -அப்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்
ஆயிரம் ஜென்மங்கள் செய்த நோன்பின் பயனாகவே ஸ்ரீ வைஷ்ணவ ஜென்மம் கிட்டும்
மாயம் செவ்வே-நிலைப் பெய்திலாத நிலைமையும்-இந்த ஆச்சர்யம் ஒரு படியாக நிலை நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும் -அன்றிக்கே
இவ்வுடம்பு நிலை இல்லாது இருக்கும் தன்மை -என்றும் பிரகிருதி சம்பந்தத்தால் இருப்பதால் உண்டான
சேஷத்வம் நிலை பெறாமல் சளிக்கக் கூடிய தன்மையையும் என்றுமாம் –
————
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே –ஸ்ரீ திருவாசிரியம்–4-
மாய கடவுள்
ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதை
மா முதல் மாயக்கடவுள் என்று கூட்டி -பரம காரணமான மாயக்கடவுள் என்னுதல் –
மாயக்கடவுள் ஆனவனுடைய மா முதல் அடி என்னுதல்
ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதையான பரம காரண பூதனானவனுடைய திருவடி என்னுதல் –
மாயக்கடவுள் என்று அவனுடைய பரம ப்ராப்யமான திருவடிகள் என்னுதல் –
திருவடி -திரு மேனிக்கும் உப லக்ஷணம் என்னுதல்
——–
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7-
எம் பெரு -என்னுடைய ஸ்வாமியாய் -பெரியவனாய் –
மா மாயனை அல்லது-அளவிட்டு அறிய முடியாதவனாய் ஆச்சர்ய சக்தி யுடைய ஸ்ரீ மந் நாராயணனை ஒழிய
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?– வேறான பெரிய தேவதையை நாம் ஆஸ்ரயணீயராக உடையோமோ
இப்படி இவற்றை திரு வயிற்றிலே வைத்து தான் முகிழ் விரியாதே பவனாய் இருபத்தொரு ஆலந்தளிரிலே
கண் வளர்ந்த நம்முடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை ஒழிய
அன்று அவன் சர்வ ஆதார பூதனாய் இருக்கிறபடியைக் கண்டு இது ஓர் ஆச்சர்யமே என்று விஸ்மிதர் ஆகிறார்
இப்படிப்பட்ட ஆச்சர்ய யோகத்தைச் சொல்லுகிறது -பெரு மா மாயன் -என்று
அவனை ஒழியப் புறம்பே கால் காணித் தெய்வம் உடையோமோ நாம்
—————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply