குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்–ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி—4-10-9-
குண சேஷ்டிதங்களாலே என்னை எழுதிக் கொண்டவனே
அம்மானே -என்ற பாடம் ஆகில் -சர்வ ஸ்வாமி யானவனே -என்று பொருளாகக் கடவது
அப்போது கீழ் சொன்ன ரஷணத்துக்கு அடியான ப்ராப்தியை சொல்லுகிறது
அன்று முதல்-
கருவரங்கத்துள் கிடந்த அன்று முதல் -என்னுதல்
திருப்பல்லாண்டு பாட நீ விஷயீகரித்த அன்று முதல் -என்னுதல்
இன்று அறுதியா –
இன்று அளவாக
ஆதியம் சோதி மறந்து அறியேன் –
சர்வ காரணமாய் -விலஷண தேஜோ ரூபமான உன்னுடைய விக்ரகத்தை மறந்து அறியேன் –
—————-
துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே–5-3-1-
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன்-
புக்க இடம் எல்லாம் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் –
அந்தர்யாமித்வம் -பரத்வம் -வியூகம் -விபவம் -அர்ச்சாவதாரம் -அளவாக
அறப் பறித்து -என்று அநிஷ்ட நிவ்ருத்தியும்
கண்டு கொண்டேன் -என்று இஷ்ட பிராப்தியும்
பண்ணித் தந்தோம் ஆகில் -இனி போய் வர அமையாதோ -என்ன –
இனிப் போக விடுவது உண்டோ –
அறப் பறித்து -என்றும் -கண்டு கொண்டேன் -என்றும் தாம் செய்தாராய் அருளிச் செய்கைக்கு அடி –
பிதா தேடின அர்த்தத்தை -தன்னது -என்னும் புத்திரனைப் போலே –
இனிப் போய் வர அமையாதோ என்ன -இனி போக விடுவது உண்டே –
விரோதியில் சிறிது கிடத்தல் –
காட்சியிலே சிறிது கிடத்தல் –
இவை இரண்டுக்கும் மூலமான ஸூஹ்ருதம் என் கையில் கிடத்தல் –
செய்யில் அன்றோ நான் போக விடுவது –
உன்னாலே பெற்ற நான் -என்னாலே இழப்பேனோ –
பேறு அவனாலே இழவு இவனாலே –
அவன் பெறுகைக்கு கிருஷி பண்ணும்
இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதால் போலே
அவனுடைய அனுமதியும் இழவுக்கு ஹேது அன்று –
போக விடுவது உண்டே –
இனி நான் போகல் ஒட்டேன் -என்று போக்கும் உண்டாய் –
ஒட்டேன் -என்கை அன்றிக்கே -போக என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார் –
உண்டே –
உனக்கு தெரியாதோ போகைக்கு ஹேது உண்டாகில் என்று அவனை கேட்கிறார் ஆகவுமாம்-
போகாத படி பெற்று -தம் இழவு தீர்ந்தமையை அருளிச் செய்கிறார் மேல்
————–
அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே–5-3-9-
கர்ப்பத்தில் கிடக்கிற காலத்திலே-அடிமை செய்கையே புருஷார்த்தம் -என்று துணிந்து இருப்பன் –
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன்-
அன்று நான் பிரார்த்தித்த படியே திரு மலையிலே வந்து
என் விரோதியைப் போக்கி -ஞானத்தைப் பிறப்பித்த உன்னை வந்து கண்டு கொண்டேன் –
புக்கினில் புக்கு-இனிப் போக விடுவது உண்டே –
கர்ப்பத்திலே கிலேசப்படுகிற வன்று -அடிமையிலே உற்று இருந்த நான்
அடிமை கொள்ளுகைக்கு சுலபன் ஆன இன்று போக விடுவேனோ
ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தையும் -அந்ய சேஷத்வத்தையும் கழித்து கொண்ட படியை மூதலிக்கிறார்-
————–
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே—-ஸ்ரீ பெரிய திருமொழி–1-10-8-
இதர நிர பேஷனான அவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கலில் வந்து புகுர
ஸா பேஷனான நான் அவனை விட்டுப் போவேனோ –
—-
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே—1-10-9-
நாம் இங்கே வந்து சிறைப் பட்டோம் என்னும் இன்னாப்போடு அன்றிக்கே
இவர் பக்கலிலே புகுந்து இருக்கப் பெற்ற இது பெறாத பேறாய்
தனக்கு பண்டு இல்லாத ஐஸ்வர்யம் பெற்றானாய் உத்சலனாக நின்றான் ஆயிற்று –
திருமலையிலே வந்து புகுந்து-உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே –
எனக்காக வந்து நிற்கிற நிலையை விடாய் –
ஆன பின்பு நான் உனக்காம் படி பற்றின பற்று விடுவேனோ-
இத்தால் -பரபக்தி பர்யந்தமாக பிறந்தது -என்றபடி
அரை ஷணம் அவனை ஒழியச் செல்லாமை உண்டாகை இறே
பரபக்தி -யாவது வ்யதிரேகத்தில் ஜீவியாத படி -ஆனார்
————–
மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்–3-5-4-
இவன் எப்போதும் ஒக்க அவர்களை போக்யைகளாக அனுசந்திக்கும் இத்தனை போக்கி –
அவை தன்னை இவன் தான் லபித்தானாகை- பெரும் பணி இறே –
அப்ராப்த விஷயங்களில் உண்டான வாஞ்சையை தவிர்த்து
பிராப்த விஷயத்தை ஆசைப்படப் பண்ணின இது தான் போரும் இறே உபகாரம்
அவற்றை நானே கை விட்டு உன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே
எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக –
நான் அபேஷிக்க அன்றிக்கே
தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் –
————–
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-
நான் உன்னை அபேஷியாதே இருக்க நீயே வந்து புகுந்த பின்பு இனிப் போகல் ஒட்டேன் –
நினைவு இன்றிக்கே இருக்க வந்த சம்பத்தை தள்ளுவார் உண்டோ
————–
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்–5-5-8-
மறவாதே எப்பொழுதும் – ஸ்மாரகர் உண்டாக மறுப்பு வாராதே இறே
இவளையும் அவனையும் சொல்லி அடுத்து இறே பழி சொல்லுவது –
(நினைவு படுத்துகிறார்கள் அன்றோ இவர்கள் )
இப்படி பழி சொல்லுகிற போது அவள் செய்கிறது என் எண்ணில் –
மாயவனே-ஆசர்ய குண சேஷ்டிதங்களை உடையவனே
மாதவனே –பிரணய தாரையிலே அவளுக்கு ஆனைக்கு குதிரை வைக்கையாலே பரம ரசிகன் ஆனவனே
என்கின்றாளால் –என்னா நிற்கும்
அதாவது
கலக்கிற இடத்தில் தாழ நின்று பரிமாறின படியையும்-அதுக்கடியான சீலத்தையும்
கலந்த போதை பரிமாற்றத்தின் வகைகளையும் –
இதில் ஸ்ரோத்ரியன் ஆகைக்கு வ்யுத்புத்தி பண்ணின இடத்தையும் சொல்லா நிற்கும் –
—————
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1-
மறவாது யானுலகில் பிறப்பேனாக எண்ணேன்-மறவாமையாலே பிறக்க எண்ண மாட்டேன் –
திரு விண்ணகரானே-நேராக விளித்து அருளிச் செய்கிறார் –
பிறவாமை அன்றோ இதுக்குப் பலம்-என்றும் மறவாது யானுலகில் பிறப்பேனாக எண்ணேன்-
அம் மறவாமையால் பெற்றது சம்சாரத்தில் பிறப்பேன் என்னும் மநோ ரதமும் தவிர்ந்தேன் –
மறவாமை உபாயம் இல்லை-நின் திறத்தேன் -என்றதும் உம்மால் தானே
திரு விண்ணகர் வந்து என்னைப் பிடித்து ஆள் கொள்ளவே-மறவாமை -அதிகாரி ஸ்வரூபம் –
—————-
துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே -6-3-2-
யுன்னை என் மனத் தகத்தே திறம்பாமல் கொண்டேன் – உன்னுடைய தடுமாற்றத்தைத் தவிர்த்தேன் –
ஸ்ரீ லஷ்மீ பதியாய் இருந்த உன்னை –-பிராட்டி புருஷகாரமாகவும்-என்னுடைய அநந்ய கதித்வத்தையும் முன்னிட்டு
என்னுடைய ஹிருதயத்திலே இனி நீ கால் வாங்கில் காதகரோ பாதி யாம்படியாக வைத்துக் கொண்டேன் –
நீயே வந்து புகுகிற இடத்தில்-நான் விலக்கிற்றிலேன்-என்ற படி
—————-
கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-
மறைக்கைக்கு சம்பாவனை உள்ள சம்சாரத்தே இருந்து
அனந்யார்ஹனான நான் ஸ்வாமியான உன்னையே சொல்லிக் கூப்பிடா நின்றேன் –
———
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே –7-1-4-
மகா உபகாரகனாய் இருக்கிற உன்னை உன்னாலே உபகாரம் கொண்டு இருக்கிற நான்
எத்தைச் சொல்லி மறப்பது –
புனிதன் இல்லை என்று மறக்கவோ
உள்ளத்தில் இல்லை என்று மறக்கவோ
குளிரப் பண்ண வில்லை என்று மறக்கவோ
ஆஸ்ரித பவ்யன் இல்லை என்று மறக்கவோ
பக்கத்தில் இல்லை என்று மறக்கவோ
ரசம் இல்லை என்று மறக்கவோ
உதாரம் இல்லை என்று மறக்கவோ
———–
அத்தா அரியே என்று உன்னை அழைக்கப்
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8-
முத்துப் போலே ஸ்ரமத்தைப் போக்குமவனே –
பெரு விலையனான மாணிக்கம் போலே இருக்கிறவனே
பலத்தோடு வ்யபசரியாதவனே –முளையாத வித்து – நிஷ்பலம் என்பதால் –
முளைக்கின்ற வித்தே -என்கிறார்–உன்னை எத்தைச் சொல்லி நான் விடுவது –
————–
தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ –7-1-9-
ஆபத்து கரை புரண்டால் வரையாதே எல்லாரையும் ஒக்க ரஷிக்கும் ஸ்வபாவன் ஆனவனே –
திரைக் கிளர்த்தி உடைய கடல் சூழ்ந்த பூமியை அமுது செய்த
திருப் பவளத்தை உடையவனே –இப்படி ஆபத் சகனான உன்னை எங்கனே மறக்கும் படி –
————–
நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன்
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-
இப்படி இருக்கிற உனக்கு
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று உன் திருவடிகளிலே சகல சேஷ வ்ருத்திகளிலும் அதிகரித்தேன்
என்னையும் அடிமையில் மூட்டுகைகாக என்னுடைய ஹிருதயத்திலே புகுந்த
உன்னைப் போக ஒட்டுவேனோ
வந்த கார்யம் தலைக் கட்டினோம் ஆகில் இனி வேறே ஒரு இருப்பிடம்
தேடித் போக அமையாதோ -என்று போக நினைத்தான்-நான் போக ஒட்டுவேனோ –
நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –
நீ முந்துற மடல் எடுத்து-பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது –
அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே-
————–
எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-6-
நான்-என்னுடைய தமப்பன்-அவனுடைய ஜநகன்-இவர்களோடு கூட அவ்வருகே எழுவர்
(மேல் பத்து கீழ் பத்து -21-என் தாதை -அர்த்த சித்தம்-தச பூர்வம் -உத்தரம்
கன்யாதான பல தயா -21 தலைமுறை பலம் கேசவன் தமர் படி சம்பந்திகள் பலித்தமை -இங்கும்)
சப்த சப்தஸ சப்தஸ –என்னக் கடவது இறே
ஒருவருக்கு உண்டான நன்மை அசல் காக்கும் இடத்தில் ஏழ் படி கால் சொல்லும் இறே –
இத்தால் குலமாக அனந்யார்கள் என்றபடி –
நான் அபேஷியாது இருக்க நீயே என்னுடைய ஹிருதயத்தில் வந்து புகுந்த உன்னை
போக ஒட்டுவேனோ –கைப் பட்ட நிதியை உதறுவார் உண்டோ –
—————
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நற் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-8-
என் பக்கலில் ஒரு அபேஷம் மாதரமும் கூட இன்றிக்கே இருக்க நீயே வந்து புகுந்து
உன்னுடைய போக்யதையை அறிவித்த பின்பு இனி உன்னை போக ஒட்டுவேனோ –
போக்யமான தேசத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவனே-அவ் ஊரில் அவஹாகித்தாருக்கு
வேறேயும் ஓர் இடம் தேடித் போகலாம் படியோ அவ் ஊரில் போக்யதை இருப்பது –
————-
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே —8-9-5-
நாம் என்ன உபகாரம் பண்ணினோமாகதான் இப்படி கிடந்து படுகிறது -என்ன –
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை-இதுக்கு மேற்பட நீ பண்ணக் கடவதொரு உபகாரம் உண்டோ –
வந்தாய் – நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் –
இவன் வந்திடுவான் எனக்கு என்றும் இராத என் ஹிருதயத்திலே நீயே வந்து புகுந்த பின்பு –
என் ஸ்வாமி யானவனே –போய் அறியாய் யிதுவே யமையாதோ-
நித்ய ஸூரிகள் பக்கலில் போவதாகவும் நினைக்கிறது இல்லை –இதுவே அமையாதோ –
இனி இதுக்கு மேற்பட ஒருவனுக்கு பேறு ஆகையாவது என் –
கொத்துக்கள் மிக்கு அழகியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திருக் குடந்தையிலே கண் வளர்ந்து
நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று அத்தாலே உகந்து –
இவர்களுக்கு விட ஒண்ணாத படி-நவீக்ருதமான யௌவனத்தை உடையனவாய் இருந்தவனே –
இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் –
நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் –நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –
இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ –
————–
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7-
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படியான பருவத்தை உடைய எனக்கு
எல்லா உறவு முறையும் தானேயாய் நின்று நோக்கி –
சந்த்ரனுக்கு வந்த ஷயத்தைப் போக்கி தன்னுடைய ரஷகத்வத்தைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன்
பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ –
புறம்பேயும் ஒரு புகல் உண்டாய் மறக்கவோ –
சம்சாரத்தே சில விடவுமாய் பற்றவுமாய் இருக்கிற இருப்பைக் கொண்டு
பகவத் விஷயத்தை மறக்கலாம் என்று இருக்கிற ஏழை நெஞ்சே நீ சொல்லு –
—————
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே -11-3-5-
உபாசன வேளையிலே இப்படி புத்தி பண்ணி
பின்பு வேறு ஒரு படியாகை அன்றிக்கே
உபாசநாநுகுணம் பலம் ஆகையாலே அவ்வளவும் போனால்
பெரும் பரம பிரயோஜனமாய்க் கொண்டு
பற்றப்படுவதும் தாமேயாக மனசிலே வைத்தோம் –
—————–
இந்த்ரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை
யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
வந்தணனை வந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–திரு நெடும் தாண்டகம்–4- –
விஸ்மரியாதே அனுபவிப்புதியேல்
பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேது விஷயாந்தர ஸ்பர்சம் ஆகையாலே
விஷயாந்தரம் கலசாதபடி அனுபவி -என்கிறாரோ -என்னில் –
அது இவர்க்குச் சேராது –
சரம தசையில் சாஷாத் கரித்து அனுபவிக்கிறவர் ஆகையாலே
இனி இவர்க்கு விஸ்ம்ர்தி ஹேது என் என்னில் –
தாபத் த்ரய ஆஸ்ரயமான தேக சம்பந்ததோடே இருக்கையாலே தேகத்தைப் பாரார் –
பூர்வ வ்ருத்தத்தைப் பாரார் –
விஷய வைலஷண்யத்தைப் பாரார் –
தந் நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் உறுப்பாக ஈஸ்வரனை உபாயமாக
அனுசந்திப்பதொரு அனுசந்தானம் உண்டு –
அது பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேதுவாகக் கடவது –
ஆகையாலே பூர்வார்தத்தில் இழியாதே அனுபவிக்கப் பார்
இவர் தாம் த்வய நிஷ்டர் அன்றோ
இங்கனே சொல்லுவான் என் என்னில்
அடியிலே ஒருக்கால் ஈஸ்வரன் கையில் நம் கார்யத்தை சமர்ப்பித்து விட்டோம் ஆகில்
இனி ஸ்வ உஜ்ஜீவனதுக்கு சிந்திக்கை யாவது பிறர் கார்யத்தில் இழிகை இ றே –
பிறர் கார்யம் -ஈஸ்வரன் கார்யம்
ஸ்வ ரஷணத்தோடு ஜகத் வியாபாரத்தோடு வாசி இல்லை இ றே பிராப்தி இல்லாமைக்கு-
வாழ்தியேல் –
அவனுடைய பரத்வத்திலும் சாதனத்திலும் இழியாதே –
போக்யதையில் இழிந்து அனுபவிப்புதி யாகில் –
வாழ்தியேல் –
வாழ்ச்சி உன்னதே இறே
நானும் உனக்கு சஹகாரியாம் இத்தனை இ றே –
வாழ்தியேல் -என்று
தமக்கு கரணமான மனசை சேதன சமாதியாலே
கர்த்தாவாகப் பேசுகிறார் இறே –
மன பிரதானம் தோற்ற –
யாவதாயுஷம் பகவத் அனுபவத்துக்கு பரிகாரம் இதுவாகையாலே –
தத் சாபேஷனாய் இறே முமுஷூ இருப்பது –
என்றும் வாழலாம் –
நித்ய சூரிகள் நடுவே இருந்து -யாவதாத்மபாவி வாழலாம் –
எங்கும் ஒக்க அனுபவம் இறே இவனுக்கு உள்ளது
வைஷ்ணவன் ஆகிறான் ராஜ குமாரன் இறே –
——————
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-
மறவியை இன்றி மனத்து வைப்பாரே -இப்படியும் இருப்பார்களோ -ஆத்மா பிராப்தியை கேவல அனுபவம்
மறக்காமல் பகவானை சாதனமாக வைப்பார்களோ –உபாசகனனுக்கு -சாதகமாக பற்றும் நிலை என்னே உங்கள் நிலை
சாதனத்வேனே மனத்தில் வைப்பார் -ஷேபிப்பார்
ஆழிப்படை அந்தணனை கண்டும் அனுபவியாமல் -சாதனம் என்பதை மறந்து விடாமல் -வியந்து நிந்திக்கிறார் –
———-
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-
இவ்விஷயத்தை -கெடுவாய் -சிலராலே விடப் போமோ –
மைந்து -இனிமை -அழகு -மிடுக்கு -பிடிக்கையில் இருக்கும் மிடுக்கு –
மூன்று காரணங்களாலும் விடப் போகாதே -நினைவே நீ தானே -ஆத்மா மனசின் மூலம் தானே
இவற்றை அனுபவிக்க வேண்டும் (-ஆகவே இந்த பொறுப்பு உன்னிடம் கொடுக்கிறேன் )
மலராள் மணவாளனைத்
பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் -என்னும் விஷயத்தை யன்றோ நான் உன்னை விடாதே கிடாய் என்கிறது
துஞ்சும் போதும்
அயோக்யன் -என்று அகலும் போதும் -விச்லேஷம் விநாச பர்யாயம் -என்கை
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும் அது இறே-இவர்க்கு துஞ்சுகை யாகிறது
பிரியில் இலேனுக்கு இளங்கோவும் அக்குளத்தில் மீன் இ றே-ஆச்சார்யஹிருதயம் -சூர்ணிகை -126
நான் அவனை அகன்று முடியும் அன்றும் -நீ அவனை விடாதே தொடரப் பார் கிடாய்
இவ்வேப்பங்குடி நீரை யன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்கிறது –அக்காரவடிசிலை அன்றோ சொல்கிறேன்-
பிராட்டி -அகலகில்லேன் இறையும் -என்கிற விஷயத்தை அன்றோ நான் உன்னை அனுபவிக்கச் சொல்கிறது –
——————-
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–
1-அபூர்ணன் என்று மறக்கவோ
2-அசந்நிஹிதன் என்று மறக்கவோ
3-வடிவு அழகு இல்லை என்று மறக்கவோ
4-மேன்மை இல்லை என்று மறக்கவோ
5-எனக்கு உபகாரகன் அன்று என்று மறக்கவோ
எத்தைச் சொல்லி மறப்பன் -என்கிறார் –
குணத்திலே குறை உண்டாதல் -தூரஸ்தன் என்னுதல் -செய்து நான் மறக்க வேணுமே
வடிவு அழகிலே குறை உண்டாய்த்தான் மறக்கவோ
—————
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-
என்னைப் பெறுகைக்கு பூர்வஜனான-எதிர் சூழல் புக்கு திரிந்த- நீ விடிலும்
விடாத படி நான் பிடித்தேனாகவே திரு உள்ளம் பற்ற வேணும்
அவனை மாஸூச -என்கிறார் –
—————–
உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ-2-6-5-
நான் உளேனாய் -சம்சாரிகளில் வ்யாவ்ருத்தனாய்ப் போந்து -சத்தை அடைந்து -ஸ்வரூபம் பெற்று –
என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன்
என்னுடைய முடிவு இன்றிக்கே இருந்துள்ள கொடிய பாவங்களை வாசனையோடு போக்கி
உன் திருவடிகளில் ஆத்மாந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி விட பிரசங்கம் உண்டோ
விடுவேனோ-உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
விஷயாந்தரங்களை விரும்பினேனோ விடுகைக்கு –உனது ஸ்வரூப சித்தி இன்றிக்கே ஒழிந்து விடுகிறேனோ –
உய்ந்து -ஆத்மா தாஸ்யம் -நீ ஸ்வாமி தாஸ்ய அறிமலத்தில் சுவடி அறியாமல் விடுகிறேனோ —
அடிமை- எனக்குத் தேகுட்டி விடுகிறேனோ -அந்தமில் அடிமை
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை -சிந்தை செய்த வெந்தாய் –
அடிமையில் சுவடு அறிந்த திருவனந்த ஆழ்வான் உன்னை விடில் அன்றோ நான் உன்னை விடுவது
———-
போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ-2-6-10-
உபகாரங்களைக் கண்ட நான் உன்னை பெற்று வைத்தும் விடுவேனோ-
தான் தனக்கு பார்க்கும் ஹிதமும் –
கால த்ரயத்தாலும் பரிவுடைய தாய் செய்வதும் செய்து -ஹித காமனான தமப்பன் செய்வதும் செய்து-
ச பித்ரா ச பரித்யக்த -என்று-அவர்கள் விடும் அளவிலும் தான் தனக்கு பார்க்கும் ஹிதமும் பார்க்கும்படி
சர்வ பிரகாரத்தாலும் ப்ராப்தனுமாய் உபகாரகனுமான உன்னை உபகார ஸ்ம்ருதியை உடைய நான்
கிட்டப் பெற்று வைத்து விட சம்பாவனை உண்டோ
————-
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்கச் செய்தே கர்ம வச்யரும் பிறவாத ஜன்மங்களிலே
பிறக்க வல்ல சர்வாதிகனை-அஜாய மாநோ பஹூதா விஜாயதே -அவதாரேண சௌலப்யம் —
மறப்பு ஓன்று இன்றி –
அவதாரங்களிலும் சேஷ்டிதங்களிலும் ஒரு மறப்பு இன்றிக்கே –
மறப்பு ஓன்று இன்றி –
இத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம் -மறக்க வேண்டும் –
அத்தலையில் உள்ளது ஒன்றும் நழுவ ஒண்ணாது –
என்றும் மகிழ்வேனே –
மகிழ்ச்சி என்றும் அனுபவம் என்றும் பர்யாயம்-அனுபவிப்பேன் என்கிறார் –தொழுது எழு -பர்யாய சொற்கள் –
ஆக -இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் -(மகாரார்த்தம் )
பெருமான் -என்கையாலே தம்முடைய-1- சேஷத்வமும்
மறப்பு ஓன்று இன்றி -என்கையாலே -2–ஜ்ஞாத்ருத்வமும்
என்றும் -என்கையாலே-3- நித்யத்வமும்
மகிழ்வு -என்கையாலே-4- போக்த்ருத்வமும் -போக்யமாக முதலில் இருந்து அவன் போக்கியம் கண்டு நாம் போகிக்க –
ஆக -இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் –அருளிச் செய்கிறார் யாயிற்று –
———
அரவம் ஏறி அலைகடல் அமருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-
காலம் நடையாடாத தேசத்தில் அனுபவத்தை அன்றோ காலம் நடையாடும் தேசத்திலே நான்
உங்களை அனுபவிக்கச் சொல்லுகிறது?’ என்கிறார்.
ஏத்துகைக்கு ஈடான காலம் ஆகையாலே ‘நல் இரவும் நன்பகலும்’ என்கிறார்.
‘துதி செய்து கொண்டே யிருக்கின்றார்கள்’ என்கிறபடியே ஆதல் வேண்டும் என்பார், ‘என்றும் ஏத்துதல்’ என்கிறார்.
———-
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-
வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே
அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி. வேறு ஒரு பிரயோஜனத்துக்காகத் தொழுதால் பிரயோஜனத்தளவிலே மீளும்;
சாதனம் என்ற எண்ணத்தோடு தொழில் பெற வேண்டிய பயன் கிடைத்த அளவிலே மீளும்;
அங்ஙன் அன்றிக்கே, இதுவே செயலாய் இருத்தல் என்பார், ‘தொழுது தொழுது’ என்கிறார்.
நாள்தோறும் அதுதன்னிலும் ஒரு கணமும் இடைவிடாதே.‘ஒரு நாளைக்கு ஒருகால் தொழுது
தேவை அற்று இராதே இடை விடாதே-
விரும்பும் –ஆசைப்படாநின்றது. ‘கிடைப்பது, கிடையாது ஒழிவது, ஆசைப்படுகின்றது’ என்றபடி.
—————–
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண் சுடரே!–5-10-6-
நினைத்துத் தலைக் கட்ட மாட்டார், நினையாதிருக்க மாட்டார்.
வருந்தி உன்னை நினைக்கப் புகுவன், நினைக்க மாட்டுகின்றிலேன்.
அன்றிக்கே,நினைக்கை தான் தேட்டமாய் நினைக்கலாவதொரு வழி ஏதோ என்று ஆராயா நின்றேன்.
ஒரு பிரயோஜனத்துக்காகப் போவார்க்கன்றோ அது கொண்டு மீளலாவது,
தன்னையே பிரயோஜனமாகப் பற்றிப் போவார்க்கு மீள விரகு உண்டோ.
இப்படியே அன்றோ பகவத் பிராவண்யமுடையார்படி.
————-
வைகல் நாடொறும் வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6-
கழிகிற நாள்தோறும்–வாயாலே சொல்லுகிற சொலவும்–மணி வண்ணன் நாமமே –
வடிவழகுக்கு வாசகமான வற்றையே சொல்லா நின்றாள்.
குண விஷயமாதல் விபூதிவிஷயமாதல் அன்றிக்கே, வடிவழகிற்குத் தோற்றமை தோற்றச் சொல்லா நின்றாள்.
———–
கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-
திருவடி தொழுத அன்று தொடங்கி இன்றளவும் வர என்னுதல்;
தன் சத்தை உண்டான அன்று தொடங்கி இன்று அளவும் வர என்னுதல்.
“அஸந்நேவ – அசத்தைப்போல”, “அன்று நான் பிறந்திலேன்” – திருச்சந்த விருத்தம். 64.-இதுவன்றோ முன்புற்றை நிலை.
அவன் கையிலும் அன்றிக்கே, பிறர் கையிலும் அன்றிக்கே, தன் கையதாயிருந்தபடி என் தான் தன் சத்தை!
சொல் கற்கை -தொழுகை என்று இரண்டு இல்லையே –
பால்யமே தொடங்கி பிராவண்யம் சத்தா பிரயுக்தம் —இவள் தானே தொழுகிறாள் –
நா கிஞ்சித் குர்வதஸ் ஸேஷத்வம் – கைங்கரியம் செய்யாதவனுக்குச் சேஷத்வம் இல்லை” என்கிறபடியே
“தொழுது எழு” அன்றோ.
இருந்து இருந்து அரவிந்த லோசந! என்று என்றே –
ஒருகால் அரவிந்தலோசந! என்னும் போது, நடுவே பதின்கால் பட்டைப் பொதி சோறு அவிழ்க்க வேணும்.
வலி இன்மையாலே சொல்லமாட்டாளோ? என்று இருக்கச் செய்தே, சொல்லித் தலைக்கட்டா நின்றாள்.
————–
ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-
தொண்டர்க்கு அமுது உண்ண -பக்தாம்ருதம் -உபகாரகனை மறக்க விரகு உண்டோ-
‘கைம்மாறு செய்யாதொழியவுமாம் கண்டீர், நான் மறந்து பிழைக்கப் பெற்றானாகில்!’ என்கிறார்.
என்று மறப்பேனோ –
‘முன்பு அநாதி காலம் மறந்து போந்ததாகில் இனிமேல் நினைக்கைக்குக் காரணமான காலத்தை எல்லாம்
மறக்கைக்கு உடலாக்கினால்தான் மறப்பனோ?’ என்றது,
‘முன்பு நினைக்கையில் உள்ள அருமையோபாதியும் போரும் இனி மறக்கையில் உள்ள அருகையும்:
இனி ஏதேனும் ஒரு நாள் தான் என்னாலே மறக்கப்போமோ?’ என்றபடி.
—————-
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-
தானே தன்னைக் கவிபாடிக் கொண்டனாகில், ஓர் ஆச்சரியம் இல்லை; அதற்குத் தகுதி இன்றிக்கே இருக்கிற
என்னைக்கொண்டு தப்பாமே கவிபாடின இந்த உபகாரத்தை இனி மறக்க உபாயம் இல்லை,’ என்கிறார்.
அப்பனை என்று மறப்பன் -உபகாரன் ஆனவனை நான் என்று மறப்பன்?
இனி, அவன் அபகாரம் செய்தால் தான் மறக்கப்போமோ?
————–
திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-
மறப்பு இல்லையான என்னை.
மறப்புக்கு முன் கணத்தில் நிகழக்கூடியதான நினைவும் எனக்கு இல்லை என்கைக்காக,
‘மறப்பிலா’ என்ற சொல்லாலே அருளிச்செய்கிறார்
‘’மறப்பு இலா’ என்ன வேண்டுவான் என்?’ என்னில், நினைவு உள்ள இடத்திலே அன்றோ மறப்பு உள்ளது?
ஆக, ஏதேனும் ஒரு காலத்தில் உண்டாகிற நினைவுங்கூடத் தமக்கு இல்லை என்கிறார் என்றபடி.
மறப்பு இலா என்னைத் தன்னாக்கி –
ஏதேனும் ஒரு காலத்தில் நினைத்துப் பின்னை ஒருகால் மறப்பு உண்டாய்,
அதனை காணாக் கண்ணிட்டுதான் இப்படி அங்கீகரித்தானோ?
முதலிலே தன் பக்கலிலே நினைவு இன்றிக்கே இருக்கிற என்னைத் தன்னாக்கி.
என்னால் –
‘மறந்தேன் உன்னை முன்னம்’ பெரிய திருமொழி, 6. 2 : 2.-என்கிற அநுதாபமுங்கூட இன்றிக்கே
இருக்கிற என்னைக் கொண்டு.
————-
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10-
என்றும் எப்போதும்-இனி கிலேசப் பட மாட்டேன்-இவ்வார்த்தை எத்தனை குளிக்கு நிற்கும்
என்றும் -எல்லா திவசத்திலும் எல்லா அவஸ்தைகளிலும்
———
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-
இவன் போகைக்கு உறுப்பாக என்னால் ஆவன எல்லாம் செய்தேன்-அதற்கும் கேட்ப்பானாய் இருந்திலன் –
நிச்சித்து இருந்தேனே –அச்சம் அடைகிறான் இல்லை -என்கிறபடியே இருந்தேன் –அவன் படியை நினைந்தால்
இவன் அச்சம் அற்றவனாய் இருக்கத் தட்டில்லை அன்றோ-
——————
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-
மறவாது –
கை புகுந்தது என்னா-மற்றை விஷயங்களிலே செய்வுற்றைச் செய்யாதே காண்-
வாழ் கண்டாய் –
உன்னுடைய வாழ்ச்சிக்கு நான் கால் பிடிக்க வேண்டுகிறது என் –
பால் குடிக்க கால் பிடிக்கிறேனோ அன்றோ –
மறவாது வாழ் கண்டாய் என்கை யன்றோ உள்ளது –
மேலே கூறிய விசேஷணங்களுக்கு பயன் என் -என்னில்-
புறம்பு போய் மணலை முக்க ஒண்ணாதே-பாது காக்க வல்லானைப் பற்ற வேண்டுமே-
பாது காப்பதற்கு வேண்டிய சாதனங்களை உடையவன் பாது காப்பவனாக வேண்டுமே-
அநந்ய பிரயோஜனர்கள் ஸ்வரூபம் ஸ்திதி அனைத்தைக்கும் நிர்வாஹகன் ஆனவன்-பாது காக்குமவனாக வேண்டும் –
ஒருக்கால் உளனாவது இலனாவது ஆகா நிற்கிறவனுக்கு-என்றும் உளனானவன் பாதுகாக்க வேண்டுமே-
இவை இல்லாத அன்று உண்டாக்கினவன் பாதுகாக்குமவனாக வேண்டும்-
உண்டான அன்று பாது காப்பவன் ஆகைக்கு-தம்மை பாது காப்பதில் குறைய நின்றனவற்றையும்
நோக்குமவன்-பாது காப்பவனாக வேண்டும்-
இருந்தபடியாமாகில் மறந்து காண் -உன்னாலே மறக்கப் போகாதே –
—————
என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–-ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–55-
இப்படி தேவர் என் பக்கலில் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தால் குறை யற்றேன் –
அதனுடைய பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவரே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார்
உன்னை நினைக்காக அரிதான சம்சாரத்திலே உன்னை நினைக்கும் படி பண்ணினாய் –
இனி ப்ராப்தி யளவும் பண்ணாய் -என்கிறார்-
பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீயே
பெற்றால் அனுபவிக்கக் கடவதான நிரதிசய ஆனந்தத்தையும் பண்ணித் தந்தருள வேணும்
ஞான சங்கோசம் அறுத்தாப் போலே -யேஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆன -7-உன்னுடைய ஆனந்த சமுத்ரத்தையும்
நீ எனக்கு அருளவும் வேணும் –-கண்டால் பிறக்கும் ஸூகத்தையும் பண்ணித் தந்து அருள வேணும்
அரியது செய்தால் எளியது செய்ய ஒண்ணாதோ
—————
சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி–17-
இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று அறிவதொரு நாள் உண்டானால்
அதுக்கு முன்பு உள்ள காலத்தோடு மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற எல்லாம்
ஸ பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –
இந்நாள் மருவுகைக்கு யுடலாய்க் கொண்டு
கழிந்த நாள்களும் இப்பேற்றை அனுபவித்து இருக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு
மேல் வரக் கடவ எல்லா நாள்களும் அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற நல்ல நாளாகத் தலைக் கட்டும் –
இத்தை அசையிடும் நாள் இறே –
———-
என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு–நான்முகன் திருவந்தாதி -92-
நான் கர்ப்ப வாசம் பண்ணும் போதே தொடங்கி எம்பெருமான் என்னை ரஷித்திக் கொண்டு
வருகையால் ஒரு காலும் அவனை மறந்து அறியேன் என்கிறார் –
அபிமான துங்கன் செல்வனைப் போலே நானும் உனக்கு பழ வடியேன் –
மாணிக்கத்தின் ஒளி அழுக்கினால் மழுங்கி இருந்து ஒரு நாள் அளவில் அழுக்கு நீங்கி விளங்கினாலும்
அவ்வொளி இயற்க்கை என்னத் தட்டில்லை —
இடையில் அடிமையை இழந்தால் -வயிறு எரிந்து -பொழுதே பல காலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் –என்றும் அன்று நான் பிறந்திலேன் -என்பர்
நிற்கும் இருந்தும் –எல்லா நிலைகளிலும் என்றபடி —நிற்கும் போதும் இருக்கும் போதும் நடக்கும் போதும் படுக்கும் போதும்
நாராயணா என்றால் உங்கள் தலையில் இடி விழுமோ -என்றானே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் –
———
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்–93-
எம்பெருமான் ரக்ஷித்து அருளியதை மறந்தறியேன் என்றும் நான் எம்பெருமானுக்கு
மங்களா சாசனம் பண்ணுவதை மறந்தறியேன் -என்றுமாம் –
————
வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை–ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி–23–
ஆபத் ரஷகமாக வைக்கப்பட்ட அஷயமான தனம் என்று –
நிர்தோஷராய் பிரேம யுக்தராய் இருக்கும் அவர்கள் -சீரிய நிதிகளை செப்புக்குள்ளே வைப்பாரைப் போலே –
மனச்சுக்குள்ளே -திவாராத்ரா விபாகம் அற சர்வ காலத்திலும் -வைக்கும் விஷயமான ஸ்ரீ எம்பெருமானாரை –
பூத பவிஷ்யத் வர்த்தமான காலத்திலும் வைக்கும் —
பூத காலத்தில் -ஸ்ரீ நம் ஆழ்வார்
கலியும் கெடும் கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக -என்று இவரை மங்களா சாசனம் பண்ணி நிற்கையாலும் –
ஸ்ரீ ஆள வந்தார் இவருடைய பிரபாவத்தை கேட்டருளி ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி –
ஸ்ரீ கரிய மணிக்கப் பெருமாள் சன்னதியில் இருந்து இவரை மங்களா சாசனம் பண்ணினார் ஆகையாலும் –
ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ ஆழ்வார் சம்ப்ராயத்தாலே இவருடைய விக்ரகத்தைப் பெற்று -சர்வ காலமும் ஆராதித்துப் போந்தார் ஆகையாலும்
நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் -என்னத் தட்டில்லை இறே-
—————–
இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107- –
சர்வ காலத்திலும் -சர்வ தேசத்திலும் -தேவரீருக்கு அனந்யார்ஹ்ராய் இருக்கும் அவர்களுக்கே மாறுபாடுருவின
ஸ்நேஹத்தை உடையேனாய் இருக்கும்படியாக செய்து என்னை அவர்கள் திருவடிகளிலே அடிமையாம்படி பண்ணி யருள வேணும் .
இதுவே அடியேனுக்கு புருஷார்த்தம் –
நான் பிறப்பு இறப்பு வேண்டாம் துன்புற்று வீதல் ஆகாது என்று தேவரீர் இடம் விண்ணப்பிக்கிறேன் அல்லேன் –
எத்தகைய நிலை ஏற்படினும் தேவரீர் தொண்டர்கட்கே அடிமை செய்யும் படி அருள் புரிய வேணும் -என்று
விண்ணப்பிக்கிறேன் என்றார் ஆயிற்று –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே —
ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் – என்றும்
தமேவ சாத்யம் புருஷம் பிரபத்யே -என்றும் பிரதம பர்வத்தில் சொல்லுகிறபடியே –
குருரேவ பரம் பிரம்ம -என்றும் –
உபாய உபேயே பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்றும்
தேவு மற்று அறியேன் -என்றும்
தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாக மன்னுமது – என்றும்
சரம பர்வத்தில் சொல்லுகிறபடியே சொல்லுவித்தார்-
ஸ்ரீ அமுதனாரோ -பிரதம பர்வத்தில் ஸ்ரீ ஆண்டாள் நிஷ்கர்ஷித்தது போல சரம பர்வத்தில் எம்பெருமானார்-திரு முகத்தை நோக்கி –
உன் தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்று நிஷ்கர்ஷிக்கிறார் .
—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply