சாந்தோக்ய உபநிஷத்-அத்யாயம்-6-
காண்டம்-1
ஸர்வம்கலு இதம் ப்ரஹ்ம தத்ஜலான் (சிருஷ்டி, ஸ்திதி, லயம்)
இதி சாந்தஹ உபாஸிதஹ
பிரம்ம தத்துவத்தையும், ஆத்ம தத்துவத்தையும் (ஆதேஷம்) பற்றி குருவிடம் கேட்டாயா?
எந்த ஒன்றை அறிந்தால் எல்லாமும் அறிந்துக் கொள்ள முடியுமோ அதை அடைந்தாயா?
என்று அருணி, தம் மகன் ஸ்வேதகேதுவிடம் கேட்டார்.
ஒரு விஷயம் புத்தியில் நிலை பெற வேண்டுமென்றால் கீழே கொடுத்துள்ள நான்கு படிகளைத் தாண்டித்தான் வர வேண்டும்.
1. ஸம்ஸயஹ – சந்தேகம்
2. ஸம்பாவனா – இருக்கலாம்
3. நிஸ்சயஹ – சரிதான், நிச்சயமானதுதான்
4. நிஷ்டா – சரியென்பதிலே நிலைபெறுதல்
—————-
காண்டம்-2- <>
சூத்ர வாக்கியம்:
ஸதேவ ஸோம்ய இதம் அக்ரஹ ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம்.
மாயா – அவ்யக்தம் – வெளிதோற்றத்திற்கு வராத நாம ரூபம்
வ்யக்த – ஸ்ருஷ்டி – வெளிதோற்றத்திற்கு வந்த நாம ரூபம்
—————
சாந்தோக்ய உபநிஷத்-அத்யாயம்-7–பூம வித்யா–
சாகா சந்திர நியாயம்:
மூன்றாம் பிறையை மரக்கிளையைக் காட்டி பிறகு தெரிய வைக்கும் உத்தி
ஆனந்தம்தான் பிரம்மஸ்வரூபம் என்று எடுத்துக்கொண்டு பிரம்மத்தை உணர வைத்தல்
பிரம்ம ஞானத்தை அடைய வேண்டுமென்றால் குருவின் உபதேசம் மூலமாகத் தான் முயற்சி செய்ய வேண்டும்.
நடுநிலை அதிகாரிகளுக்கு சில பண்புகள் தேவை, அதையும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது.
குருவிடம் எப்படிப்பட்டவனாக செல்ல வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது
பூய-பெரியது; ஸத்யம் உத்கிருஷ் – தத்துவம் மேலானது; பிரம்மன ஸாமீப்யம்- பிரம்மத்திற்கு அருகில்
குரு உபதேசிக்கும்போது முழு கவனத்துடன் கேட்க வேண்டும்.
இப்படி கவனத்துடன் கேட்டவற்றை சிந்தித்துப்பார்த்து அதில் நிலைப்பட வேண்டும்.
மந்தா குருவின் வார்த்தையை மீண்டும் மீண்டும் சிந்தித்தல்
போத்தா சரியாக புரிந்து கொண்டவனாகிறான், மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் அறிவை அடைதல்
கர்த்தா இவ்விதம் அறிந்த அறிவின் மூலம் அதனை செயல்படுத்த தொடங்குவான்.
விக்ஞாதா செயல் மூலம் பலனை அடைகிறான்.
இவையெல்லாம் கிரமமாக செய்வதற்கு சக்தி வேண்டும்.
நான் என்ற சொல்லில் ஆத்மாவும், அனாத்மாவும் சேர்ந்து குறிக்கிறது.
இங்கே அனாத்மாவை மட்டும் நீக்கி விட்டால் ஆத்மா தானாகவே புரிந்துவிடும்.
ஆத்மாவைப் பற்றி அனுபவம் இருக்கிறது ஆனால் அறிவில்லை.
யத்ர – எதனிடத்தில்; அன்யத் – வேறொன்றை; ந பஷ்யதி – பார்க்கவில்லையோ; அதுவே பூமாவாகும்.
வேறொருவன் வேறொரு கருவியைக் கொண்டு வேறொரு விஷயத்தைப் பார்ப்பதில்லையோ அதாவது
எதனிடத்தில் ஒன்றை ஒருவன் ஒன்றினால் பார்ப்பது இல்லையோ அதுவே பூமாவாகும்.
அதேமாதிரி வேறொன்றை அறிவதில்லையோ.
யத்ர நான்ய பஷ்யதி, நான்ய விஜானாதி, நான்ய ஸ்னோதி, தத்ர பூமா.
நாம ரூபங்களை நிஷேதம் செய்யப்படுகிறது
எல்லா இந்திரியங்களின் விஷயங்களையும் நிஷேதம் செய்யப்படுகிறது
பூமா என்பது தெரிவதில்லை, உணரப்படவேண்டியது.
அறிபவனொருவன் (சிதாபாஸன்) இந்திரியங்களை பயன்படுத்தி விஷயங்களை அறிந்துக்கொண்டிருக்கிறான்.
சிதாபாஸன், அந்தக்கரணம், பிரபஞ்சம் இவையெல்லாம் எதில் ஒடுங்குகிறதோ அதுவே சைதன்யம்
பார்ப்பவன் பார்க்கும்பொருள், பார்க்க உதவும் கருவி இவையெல்லாம் நீக்கி விட்டால் பிறகு உணரப்படுவது பரப்பிரம்மம்
எது காட்சி மாதிரி தோன்றிக் கொண்டிருக்கிறதோ அதைத் தான் நீக்க முடியும்.
பூமாவில் ஒருவன் எதைக் கொண்டும் அதையும் அறிவதில்லை.
காண்டம்-26
இவ்விதம் படிப்படியாக தாண்டி ஞானத்தையடைந்த ஞானியானவனுக்கு இந்தப்படிகள் எல்லாம்
அவன் மீது ஏற்றி வைத்துப்பார்க்கப்பட்டதுதான். எல்லாமே என்னிடமிருந்துதான் தோற்றுவிக்கப்பட்டது.
அனைத்து ஸ்ருஷ்டியும்,லயமும் என்னிடத்தில் இருந்துதான் வந்தது, ஒடுங்குகிறது.
பார்ப்பவன் பார்ப்பதில்லை – ஆத்மாவை பார்ப்பவன்,மரணத்தைப் பார்ப்பதில்லை. நோயை பார்ப்பதில்லை,
துயரத்தை பார்ப்பதில்லை. இவன் எல்லாவற்றையும் தானாக பார்ப்பான், எல்லாவிதத்திலும் தன்னையே அடைகிறான்.
மனதுக்கு இந்திரியங்கள் மூலம் நல்ல விஷயங்களை கொடுத்தால் சித்த ஸுத்தி ஏற்பட்டு
அடைய வேண்டிய ஞானத்தை அடைவதில் வெற்றியடையலம்.
—————-
அத்யாயம்-8-(பிரஜாபதி வித்யா – தகர வித்யா)
காண்டம்-1
இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம், அதை ஆகாசம் என்று குறிக்கப்படுகிறது (தகராகாசம்)
அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது இருவகையாக பிரிக்கப்படுகிறது,
அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது. இதில் ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது.
தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக உபாஸிக்கப்படுகிறது.
ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது உபதேசிக்கப்படுகிறது.
இதை அப்யாஸத்தின் மூலம் வளர்க்க வேண்டும். இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக உபாஸிக்கப்படுகிறது.
ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க சொல்கிறது.
இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம்,
இல்லையென்றால் “கிரம்முக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று பிறகு மோட்சம் அடையலாம்.
பிரம்மம் வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது அதுதான் இதயம்.
அதற்குள்ளே சிறிய ஆகாசம் இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும்.
அதையையே அறிய வேண்டும், அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது.
அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள் ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.
காண்டம்-2
இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்?
அங்கு தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?
ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது. ஆகாசம் பிளவுபடாத்து.
வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேப்போலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசம்.
இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது.
சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது.
எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.
உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?
உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும் வியாபித்திருக்கிறது, அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம்.
உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
அவைகள் 1.பாவமற்றது, 2.வயதற்றது, 3.மரணமற்றது, 4.துயரமற்றது, 5.பசியற்றது, 6.தாகமற்றது,
7.நிறைவேறுகின்ற ஆசை,8.நிறைவேறுகின்ற சங்கல்பம்
ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள்
(இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நினைப்பது) செய்வோம்,
ஆனால் அதில் ஒரு சிலதான் ஆசையாக மாறி அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது.
ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே நிறைவேறுகிறது.
இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான் இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும்.
இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து விடலாம்.
இப்படி தியனத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்
இந்த உலகத்தில் நாம் அடையும் எதுவும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது.
அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும்.
இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும் புண்ணியத்தினால்
அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை. இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால்,
அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான்.
அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிரான். ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.
யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள்.
எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.
சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை. ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும்.
இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர்.
உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும்.
எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.
காண்டம்-3
ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப் பற்றிய விளக்கம்:
நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும்.
உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி.
இதற்கு மித்யா ஞானம் தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி,
இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால்
நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.
இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை. அன்ருத அபிதானம் – வெளி விஷயங்களை அடைவதில் ஆசை,
மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராத்தற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால்
மூடபட்டிருப்பதால், உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.
ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)
ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர், இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள்
வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம். தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின்
மீது வசிப்பவன் அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனால் அவனுடைய அந்த புதையலைப் பற்றிய
அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.
ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)
ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள்
ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல
ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.
ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ – அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்
அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய – இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு
பரம் ஜோதிஹி – ஞான ஸ்வரூபமாக
உபஸம்பத்ய – தன்னை தானாகவே உணர்ந்து
ஸ்வேனரூபேன – தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே
அபினிஸ்வத்யதே – விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)
அஸரீர தயாதிஷ்டதி – உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.
சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்
சத்யம் – உண்மை பேசுதல்
சத்யம் – எல்லா காலத்திலும் இருப்பது – நிர்குண பிரம்மம்
சத்யம் – ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்
இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக (நித்தியமானது) இருக்கின்றது.
எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.
சத்யம் – ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும்,
அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.
இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையடைகிறார்கள்.
காண்டம்-4
அபஹதபாப்மா – பாபமற்றவர்; ஸேது – பாலம், குளம், வரப்பு
ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
இது நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார்.
உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது.
இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.
இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார்,
வயதற்றவர், மரணமற்றவர், துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது.
ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.
இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள்,
உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள்.
இருளாகிப் போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக் கொண்டிருப்பவர்.
சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்த பின்தான் இந்த பலனை அடைவார்கள்.
ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்
இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம்.
இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள்.
இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.
காண்டம்-5
பிரம்மசர்ய சாதனையின் பெருமை
குருவுக்கு சேவை செய்தல்
வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
எளிமையான வாழ்க்கை வாழ்தல்
சிற்றின்பத்தை துறத்தல்
இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்.
பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்
யக்ஞம் – இறைவனை வழிபடுதல்
இஷ்டம் – பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்
ஸத்ராயண – ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.
மௌனம் – இதனால் அடையும் பலன்
அநாஸகாயனம் – உபவாசம்
அரண்யாயனம் – வனத்தில் வாழ்தல்
இந்த ஆறு ஸாதனைகளின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்
பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை வரும்.
அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது.
யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான் நகரத்தில் வசிக்கலாம்.
காண்டம்-6
சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.
நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது.
இதே போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது.
சூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது.
ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான். எல்லாவித்மான இந்திரிய விவகாரங்களிலிருந்து
விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை. இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை,
எந்த பாவமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.
நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது.
அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான். மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது
மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.
காண்டம்-7 (பிரஜாபதி வித்யா)
ஞானி என்பவர் யார்?
எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?
ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?
எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?
ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?
ஸ்லோகம்-1
மூன்றுவிதமான கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
ஆத்ம ஸ்வரூபம்
ஞானத்தை அடையும் வழி
ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்
ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது.
இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்து விட்டு நீங்குகின்றன.
பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது.
அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை,
சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.
அபஹதபாப்மா – ஆத்மா காரண சரீரமற்றது
விஜரஹ – ஸ்தூல சரீரமற்றது
விம்ருத்யு – மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது
விஷோகஹ – துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது
விஜிதாத்ய – பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது
அபிபாக – தாகமுமில்லை.
எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.
இந்த ஆத்மாவானது மாயாவின் துணைக் கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது.
அவை எட்டு குணங்களாக பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது.
இதை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவைகள்
1.அன்வேஷனம் – ஞானத்வார பிராப்தம் இச்சேத் – அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும்.
உபநிஷத் மிகத் தெளிவாக சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ,
மற்ற எதனாலும் அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் ஸாதனைகள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும்.
ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும்.
பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.
2.விஜிக்ஞாஸிதவ்ய – தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய வேண்டும்.
சிஷ்ய பிரயத்தனம் – தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள் இரண்டு,
ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை அடைகிறான்
இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான், எல்லா ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன
பிறகு மனநிறைவை அடைகிறான்.
—————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply