ஸ்ரீ பாஷ்யம்— -1-4–7-சமந்வய அத்யாயம்- பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
ஐந்தாவது -ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-/
ஆறாவது – வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்/
ஏழாவது பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள்

———–

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –6 ஸூத்ரங்கள்-

1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —

ப்ரஹ்மமே உபாதான காரணமாக இருந்தால் மட்டுமே பிரதிஞ்ஞை எனப்படும் உண்மையான வரிகள் பொய்யாகாது
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-என்று மாயையான பரம் பொருள்
மாயையான பிரகிருதி கொண்டு உலகைப் படைக்கிறான்

பூர்வ பஷி –
இதனால் நிமித்த காரணமும் உபாதான காரணமும் வெவ்வேறே என்பர்
ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகக் கொண்டால் மாறுதல் அடைய வேண்டி வரும் –
அவிகாராய என்றது பொய்யாகும் என்பர்

சித்தாந்தம்
பிரதிஜ்ஞை -உததமாதே சம்ப்ராஷ்ய யே நாஸ்ருதம் ஸ்ருதம் பவத்யமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் -என்று
பரம்பொருளைக் குறித்து சொல்லிற்று
எதை ஒன்றைக் கேட்டால் கேட்க்கப் படாதது கேட்க்கப் படுகிறதோ நினைத்தால் நினைக்கப் படாதவை
நினைக்கப் படுகிறதோ அறிந்தால் அறிந்தது ஆகின்றதோ -அதுவே பரம்பொருள்
சாந்தோக்யம் –
திருஷ்டாந்தம் -யதா சோம்ய ஏகேந மருத் பிண்டேந சர்வம் ம்ருண்மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்
குயவன் என்று மட்டும் கொண்டால் அனைத்தையும் அறிந்தது ஆகாதே
ப்ரஹ்மத்தை உபாதானமாக் கொண்டு ஏற்படும் மாறுதல்கள் அவனது உடலாக உள்ள நமது சரீரத்தில் நிகழ்வதால் அவனுக்கு தோஷம் தட்டாதே
இத்தையே அஸ்மான் மாயீ ஸ்ருஜ்யதே -என்கிறது

உயிரான அதிகரணம் இதுவும்
பிரதி தந்த்ர சித்தாந்தம் –
ப்ரஹ்மமே நிமித்த காரணம் எல்லாரும் ஒத்துக் கொண்டு -மேலே உபாதானம் பற்றிய விசாரம் –
அபின்ன நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மமே –
நியாய சாஸ்திரம் சமவாயி என்பர்
பிரகிருதி ச-உபாதான காரணமும் ப்ரஹ்மமே -உம்மைத் தொகை நிமித்த காரணமும் ப்ரஹ்மமே
மூன்று -முக்கிய -24-கிளைகள் உண்டே
உபாதானத்வம்-உபேயதானத்வம் -மண் பானை -தங்கம் வளையல் –
உரம் -கழிவு கொண்டு-sewage- தானியம் -விளைய -பரிணாம வாதம் -ஹேயமான வஸ்துவில் இருந்து –
அ மேத்யம் -யாகத்துக்கு ஆகாதது -உண்ணுவதும் யாகம் –
பிராண அக்னி ஹோத்ரம் -வைஸ்வாரன அக்னிக்கு ஆஹுதி -ப்ராணாயஸ்வாஹா இத்யாதி
பிராயச்சித்தம் பண்ணி உண்ண வில்லையே
ஆரம்பவாதம் -தார்க்கிகள் -காரண -கார்ய –
பரிணாம வாதத்திலும் சாங்க்ய நம் சம்ப்ரதாயம் வாசி உண்டே
சங்காத வாதம் புத்தர்கள் –
மாத்வர்-உபாதானம் ஒத்து கொள்ளாமல் நிமித்த காரணமே ப்ரஹ்மம் என்பர்
சங்கரர் -உபாதேயம் மித்யை -உபாதானம் இருந்தாலும்
மண்ணே சத்யம் -பானை இத்யாதி மித்யை -ஜகாத் மித்யை ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் –
மித்யா பூதமான வஸ்துவுக்கு காரணம் சொல்ல வேண்டுமா -உபாதான காரணம் வருமா –
அபின்ன நிமித்த உபாதானம் நமக்கு மட்டுமே -இதனாலே –

விஷய வாக்கியம் -சத் வித்யை சாந்தோக்யம் -அருணா -குரு ஸ்வேதகேது சிஷ்யர் பிள்ளை சம்வாதம்
நிரீஸ்வர சாங்க்யர் -சேஸ்வர சாங்க்யர் -இரண்டு விதம் -யோகம் -சேஸ்வர சாங்க்யர் -சாங்க்ய காரிகை -இவர்கள் பிரமாணம்
பிரகிருதி-பிரகர்ஷேன க்ருத்யம் -பிரக்ருதி ஸ்வயமேவ காரணம் -நிரீஸ்வர சாங்க்ய நிரசனம் இது வரை –
இனி சேஸ்வர சாங்க்ய நிரசனம் -26-தத்வம் யோகம் -என்பர் இவர்கள் –
ஸ்ரீ மத் பாகவதம் -மூன்றாவது ஸ்கந்தம் -கபிலர் தேவபூதை சம்வாதம் -உண்டே –
யோகம் தவிர சேஸ்வர சாங்க்யர் உண்டு என்பாரும் உண்டே

ப்ரஹ்ம வஸ்து ஈஷதே பஹுஸ்யாம் பிரஜாயேதி -சங்கல்பித்து -பலவாக கடவேன்-
நிஷ்கலம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் நிர்விகாரம் –போன்ற சுருதி வாக்கியங்கள் விரோதிக்குமே -பூர்வ பக்ஷம்
கடம் படம் -நிமித்த காரணம் சேதனம் உபாதானம் அசேதன வஸ்து தானே
பிரக்ருதியே உபாதானம் என்றால் சரியாகும்
மாயா -பிரகிருதி என்னும் அசேதனத்தை கொண்டு நிமித்தமாக ப்ரஹ்மம் என்பர் –
நிமித்த உபாதான பேதம் நியமம் உண்டே -லோக சித்தம் -பரமாத்மாவால் அதிஷ்டமான பிரக்ருதியே உபாதானம் என்பர் –
சேஸ்வர சாங்க்யர் பூர்வ பக்ஷம் -சாங்க்ய காரிகையில் ஈஸ்வர நிராகரணமும் ஈஸ்வர பிரஸ்தாபமும் இல்லை

ஈஸ்வர ஜகத் நிமித்த காரணம் இவர்களும் ஒத்துக் கொண்டார்கள்
கிலேசம் கர்மம் விபாகம் இல்லாமல் இருப்பவன் ஈஸ்வரன் -புருஷ விசேஷம் ஈஸ்வரன் என்பர் இவர்
நாம் ஜகத் காரண பூதன் -அனந்த கல்யாண குணாத்மகன் உபய லிங்கத்தவம்-
உபரோதம் -வியாதாக -விருத்தமான வார்த்தைகள் -சொல்லுவது –
ப்ரதிஜ்ஜை அருணர் ஸ்வேதகேதுவுக்கு -ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் -மூன்று த்ருஷ்டாந்தங்கள் சொல்லி –
நமக்கு ஸ்ருதியே பரம பிரமாணம் -தர்க்கம் -யுக்தி பிரதானம் இல்லை –logic-does-not-have—final -say-
சாஸ்த்ரீக சமைதி கம்யம்-
தங்கம் -வளையல்–உபாதான காரணத்துக்கும் உபாதேயத்துக்கும் -இரண்டுக்கும் அபேதம் -காண்கிறோம் –
ப்ரஹ்மம் அறிந்தால் அனைத்தையும் அறியலாம் என்பது -உபாதானமாக இருந்தால் தான் ப்ரதிஜ்ஜைக்கு ஒத்து வரும் –
பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத்-
உபாதானம் -material-cause–அவஸ்தா -மண் -குடம் -பிண்டத்வா அவஸ்தா -கடத்வா அவஸ்தா -லோஷ்டம் அவஸ்தை உடைத்தால் –
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டப்ரஹ்மம் காரண அவஸ்தை -ஸ்தூல சித் அசித் விசிஷ்டப்ரஹ்மம் காரிய அவஸ்தை
ஆகந்துகம் அப்ருதக் சித்த தர்மம் -அவஸ்தைகள் -பரிணாமங்கள் -இரண்டும் வேண்டும் உபாதானத்துக்கு –
ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் யோகம் -இரண்டும் ஒத்து போக வேண்டுமே –

————————————————————————————-

1-4-24-அபித்யோப தேஸாத் ச-

தனது சங்கல்பத்தை ப்ரஹ்மம் –
ததைஷத பஹூஸ்யாம் -சாந்தோக்யம் என்றும்
ஸோ காமயத பஹூஸ்யாம் -தைத்ரியம் -என்றும்
சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-

ஆதேசா–என்று ப்ரஹ்மத்தை சொல்லும்
காரணம் -கார்யம் -பாவம் -கரணம் சாதக சமம் -அதிசயிதமான காரணம் கரணம் என்பர் -காரணம் கர்த்தா –
ஆதிஷ்யதே-ப்ரதிஷ்யதே–ஆதேசா -பரமாத்மா -சாதக சாமார்த்யம் –
சர்வஞ்ஞன் சர்வவித் -சமூக ஞானமும் ஒவ் ஒன்றின் ஞானமும் -ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் –
மண் -தங்கம் -திருஷ்டாந்தம் -ஸத்வித்யா பிரகரணம்
பாதிதமான அர்த்த வாக்கியம் -யானை ஆகாசத்தில் பறக்கிறது – -புலி புல்லை சாப்பிடுகிறது -போல்வன-
த்ருஷ்டாந்தத்தில் மண் குயவன் பானை -தங்கம் தட்டான் மோதிரம் -இங்கு ப்ரஹ்மம் ஒன்றே ஒவ்வாதே-பாதிதமான அர்த்த வாக்கியம் இது என்பர்
ஸர்வதா பொருத்தம் -த்ருஷ்டாந்தத்துக்கும் தார்ஷ்டாந்தத்துக்கும் இருக்க வேண்டாமே -சந்திரன் இவ முகம்-போலே உண்டே
சகல இதர விலக்ஷனான் ப்ரஹ்மம் -த்ருஷ்டாந்தம் கொண்டு விளக்க முடியாதே -சர்வ சக்தன் -சர்வேஸ்வரன் -ஸத்யஸங்கல்பன் –

அபித்யோப தேஸாத் ச-அபித்யா உபதேசாத் ச —இரண்டு பிரமாணங்கள் –
தைத்ரியம் -சாந்தோக்யம் ஸத்வித்யை -அஹம் ஏவ -I-will-transform-myself–into -many-பஹஸ்யாம் பிரஜாயேதி
ததைஷத பஹூஸ்யாம்-ஐஷத-சங்கல்பம் -பூர்வகம் -transformation-
சதேவ –சத் சப்த வாஸ்யம் மட்டுமாகவே இருந்தது
ஏகமேவ -ஒன்றாகவே இருந்தது
அத்விதீயம் -இரண்டாவது இல்லாமல்
தன்னையே தான் மாற்றிக் கொண்டு -அநேகமாக ஆக்கிக் கொண்டு -உபதேசம் –

——————————————————————————————–

1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச

வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் –
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
மநீஷிணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே –
உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே
நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-

சாஷாத் உபயாம்நா நாத் ச–சாஷாத்தாக உபய ஆம்நாநாத் -வேதமே சொல்லுமே –
வேதம் ஆம்னாயம் -பர்யாய சப்தங்கள்
வனம் த்ருஷ்டாந்தம் -வ்ருக்ஷங்களும் வனமாக இருப்பதும் ப்ரஹ்மமே –

—————————————————————————————–

1-4-26-ஆத்ம க்ருதே

தன்னைத் தானே படைத்துக் கொண்டதாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே
தைத்ரியம் –
ஸோ காமயத பஹூஸ்யாம் -என்றும்
ததாத்மானம் ஸ்வயமக்ருத-என்றும் கூறப்பட்டது
உலகில் உள்ளவற்றை தனது உடலாகக் கொண்டு-அவற்றை படைக்கும் கர்த்தாவாகவும்
தன்னால் படைக்கப் பட்ட தானே உருவாக்கப் பொருளாகவும் ப்ரஹ்மம் உள்ளது
இத்தாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே -என்னலாம்-

ஆத்ம க்ருதே–தன்னையே தானே மாற்றிக் கொள்கிறான் -ஸ்ருஷ்டும் இச்சா -முமுஷு இச்சை போலவே –
தாதுவுக்கு அநேக விருத்திகள் -பஞ்ச விருத்தி சமஸ்க்ருதம் –
கர்த்தா -கர்மம் -ராமன் பழத்தை சாப்பிடுகிறான் -கிரியா பதம் -கர்த்ரு பதம்-பாணினி விளக்கம் –
ஆத்மாநாம் ஸ்வயம் க்ருத -ஒரே பதம் கர்த்தாவுக்கும் –
தன்னைத் தான் பரிணாமம் உண்டு பண்ணும் படிப் பண்ணிக் கொண்டது –
தனக்காகவே தன்னுள்ளே -பண்ணிக் கொண்டதே -புரிவது ஞானிகளுக்கு மட்டும் –
விலக்ஷணம் -தானே த்ரிவித காரணம் மட்டும் அல்ல காரியமும் தானே –

————————————————————————————

1-4-27-பரிணாமாத்–

பரிணாமத்தைக் கூறுவதால் ப்ரஹ்மம் குறையற்றது
ப்ருஹத் உபநிஷத்தில் –
தத் ஹ இதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தத் நாம ரூபாப்யாம் வ்யாக்ரியத
ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது
தோஷங்கள் தட்டாது-

பரிணாம வாதம் -transformation- பால் தயிராக மாறுவது –ஆதஞ்சனம்-காய்ச்சி -உறை குத்தி –த்ருஷ்டாந்தம் –
நாம ரூப விபாகம் –
உபாதான காரண வஸ்து தானே பரிணாமம் அடையும் –
அவாப்த ஸமஸ்த காமன் -லீலா கார்யம் -சங்கல்பம் -நிரங்குச ஐஸ்வர்யம் -தோஷ ரஹிதம் –
பரிணாமம் என்றாலே தோஷ பூயிஷ்டம் -புத்தர் வாதம் -பால் தயிர் -கெட்ட வாசனை நாள் செல்ல செல்ல –
தோஷத்துக்கு ஆஸ்பதம் ஆகும் -அநித்யமாகும் -துஷ்டமாகும் -தர்மம் மாறி வஸ்து விகாரம் –

அகிலஹேய ப்ரத்ய நீகம் -கல்யாணை குண ஏக -உபய லிங்கம் -தோஷம் தட்டாத அமலன் –
ஸூவ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் -சர்வஞ்ஞன் சத்ய சங்கல்பம் அவாப்த ஸமஸ்த காமன் அனவதிக அதிசய ஆனந்த மயன்
சரீர பூத பிரபஞ்சம் –தமஸ்-மூலமாக வைத்து பரிணாமம் -black-hole-இந்த தமஸ் -பூர்வவத் -ஸ்ருஷ்ட்டி -ஆத்மாநம் பரிணாமம்

வைசேஷிகம் நியாயம்–இவை இரண்டும் தர்க்க சாஸ்திரம்
சாங்க்யம் யோகம் -இவை இரண்டும்
பூர்வ உத்தர மீமாம்சிகர் -இவை இரண்டும் ஆஸ்திக புற மதங்கள்
அதாதோ ப்ரஹ்ம ஞிஞ்ஞாச்சா –ஈஸ்வர-ஆத்ம பகவத் நாராயண சப்தம் இல்லாமல் ப்ரஹ்ம சப்தம் –
அமர நிர்ஜரா தேவர் பர்யாய சப்தங்கள் –

புருஷ -பூர்ஷ-சேத்- சரீரத்துக்குள் அந்தராத்மா -ப்ரஹ்மம் என்றவாறு -புருஷோத்தம -லௌகிக புருஷர்களின் வியாவிருத்தம்
புருஷோத்தம உத்தமன் -ஸ்ரீ மத் பாகவதம்-
பும்ஸத்வம் அவன் ஒருவனுக்கே -ஜீவாத்மா அனைவரும் சேஷ புத்தர் ஸ்த்ரீத்வம் -மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லை –
ஆத்மா ஞானமயம் என்பதையே கொண்டு நியாய சாஸ்திரம் த்விதம் ஜீவாத்மா பரமாத்மா -நம்மது தத்வ த்ரய வாதம் –
சாங்க்யம் யோகம் வேத பாஞ்சராத்ரம் பாசுபதம் ஐந்தும் ஆத்ம பிரமாணங்கள்
சில அம்சங்களே க்ராஹ்யம் இல்லை
அனுக்தம்-யுக்தம் -சிலவும் உண்டே இவற்றில் –
பேதம் ஆமுக்தே ரேவ பாஞ்சராத்ரம் சொல்லும் -ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் முத்தி அடையும் வரையில் தான் பேதம் –
முக்த தசையில் பேதம் போகும் – பேத ஹேது இல்லாததால்
பர்வத பரமாணு வாசி பிரகிருதி ஸ்வரூபம் ஜீவ ஸ்வரூபம் பரமாத்மா ஸ்வரூபம் -போக்தா போக்யம் பிரேரிதா-
பரிணாம விவரணம் -சிருஷ்ட்டி பிரகிரியை விவரிக்கிறார் ஸ்ரீ பாஷ்யத்தில் -கர்ம நிபந்தம் சரீரம் –
ஷட்பாவ விகாரங்கள் -சரீரத்துக்கு தான்-அநித்தியம் –நிரங்குச ஐஸ்வர்யம் –
ப்ரஹ்மத்துக்கு-இந்த வ்யாப்த கத தோஷம் விகாரம் தட்டாதே

அவயவி அவயவ பாவ விசாரங்கள்
பரிணாம வாதம் -கார்ய காரண பாவம் -ஆரம்ப வாதம் தார்க்கிகள் -சங்காத வாதம் புத்தர்கள் -கேவல யுக்திகளை வைத்து –
ஸத்கார்ய வாதம் -அஸத்கார்ய வாதம் –
ஸ்ருஷ்ட்டி -ஸ்திதி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் – ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம்-
ஸூஷ்மத்வம்- நாம ரூப விபாக அனர்ஹத்வம் -ரூபம் -ஸ்வரூபம் -form-நாமம் –
எழுத்துக்களின் சேர்க்கை -ஆனுபூர்வி -முயல் கொம்பு இல்லை நாஸ்தி -முயல் அறிவோம் -கொம்பு அறிவோம் –
முயல் கொம்பு இல்லையே -முயலுக்கு கொம்பு இல்லை என்பதே முயல் கொம்பு இல்லை என்பது –
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -undivided–whole-முன்பு ப்ரஹ்மம்
இவை அவனில் அடங்கி உள்ளவை – விபாகம் இல்லை -சர்வஞ்ஞனான ப்ரஹ்மமும் அறியாதபடி —
அஞ்ஞானம் இல்லையே முயல் கொம்பு இல்லை என்று அறிவதே ஞானம் –
தஸ்மாத் விபாக அனர்ஹாத் ஏகி பூதம் அத்யந்த ஸூஷ்மம் –

தைத்ரியம் பர ப்ரஹ்மம் தபஸ்ஸை பண்ணி -ஸ்ருஷ்ட்வா அநு பிரவேசித்து –
தபஸ் சப்தம் ஞானம் வருவதற்கு இல்லையே சர்வஞ்ஞனனுக்கு -யதா பூர்வம் ஸ்ருஷ்டிக்க -நாநா ரூபம் –
நரத்வம் ஸிம்ஹத்வம் கோத்வம் ஜாதி -நிறைய தர்மங்கள் இருப்பதால் -நரசிம்ஹத்வம் ஜாதியா -தர்க்க சாஸ்திரம் கேள்வி –
ஜாதி தான் -யுகம் தோறும்-கல்பங்கள் தோறும் உண்டே –
அசத் கல்பம் -லீல உபகரணங்கள் -சரீரதயா–தேவாதி -தத் யச்சா பவதி -யதா பூத -ஆத்மபூத -தயாவான் –
ருதம் சத்யம் – அசத்தியம் அருதம் -சேதன அசேதனங்கள் -ப்ரஹ்மா மூலம் வந்தவற்றுக்கு எப்படி தோஷம் -கேள்விகள் வருமே –
சப்த மூலத்வாத் -சுருதிகள் படியே -எதற்க்காக ஸ்ருஷ்ட்டி -லோகவத் லீலாவத்-அவாப்த ஸமஸ்த காமனுக்கு
என்ன பிரயோஜனம் இருக்க முடியும் இதனால் -ஸ்வயம் பிரயோஜனம் வியாபாரம் லீலா -க்ரீடைக்காகவே -குழந்தை விளையாட்டு போலே –

அநு பிரவேசம் ஏழு வித பிரவேசம் -தேவதத்தன் கிருஹத்துக்குள் போவது போல இல்லை –
குடத்துக்குள் ஜலம் போவது போலே -இப்படி விசாரம் சங்கரர் பாஷ்யத்தில் -அந்தர்யாமித்வம் -subtle-issue-
ஏகத்துவம் நாநாத்வம்-அறிந்து கொள்வது துர்லபம் -தர்க்க பாதம் மேலே பல கேள்விகளும் பதிலும் உண்டே –
தோஷ பூயமானவை எவ்வாறு பரமாத்மா இடம் வந்தவற்றுக்கு வரும்
இங்கும் ஸ்ரீ பாஷ்யத்தில் கொஞ்சம் காட்டி அருளுகிறார் –

———————————————————————————-

1-4-28-யோநிஸ் ஸ கீயதே ஹி-

ப்ரஹ்மத்தை யோநியாகவும் கூறுவதாலும் அவனே உபாதான காரணமாவான்
முண்டக உபநிஷத் –
யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா -ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ -என்றும்
கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் -படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம் -என்றும்
யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி
யதா சத புருஷாத் கேசலோ மாநி ததா ஷராத் சம்பவதீஹ விச்வம் -என்று
சிலந்தி நூலை தன்னுள்ளே இழுத்துக் கொள்வது போலேயும் -பயிர்கள் பூமியில் இருந்து தோன்றுவது போலேயும் –
பரம் பொருளின் இடத்தில் இருந்து உலகம் தோன்றுகிறது-

கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்
யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-

கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம்-அவனே கர்த்தா -யோநி -புருஷன் -ப்ரஹ்மாதிகளுக்கும் காரணம்
யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச-spaider-த்ருஷ்டாந்தம் –
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி–பூமியில் இருந்து ஓஷதிகள் வருமா போலே
சாந்தோக்யம் -குரு சிஷ்ய சம்வாதம் -ஆலமரம் -வித்து -உடைத்து -பார்த்து -பெரிய ஆலமரம் -பீஜம் -root–cause-
பகவத் சங்கல்பத்தால் தானே -sprout-வரும் -திவ்யமான விஷயம் இதிலே பார்க்கலாம்
அக்ஷரம் -ப்ரஹ்மம் -தானே யோநி -கர்த்தா –
பூத யோநி -எல்லாவற்றுக்கும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே –
நிமித்த காரணம் அனைவரும் விவாதம் இல்லாமல் ஒத்துக் கொண்டார்களே

பிரக்ருத் யதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading