ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
அவதாரிகை –
கலி தோஷ அபிபூதமான ஜகத்தை ரஷித்தமையை சொல்லி -இவரை -ஆஸ்ரயிப்பார்க்கு-ஆத்ம குணாதிகள்
தானே வந்து சேரும் என்னும் அத்தையும் –
இவருடைய ஆத்ம குணோத்-பாதகத்வ ஹேதுவான சகாய பலத்தையும் அருளிச் செய்தார் கீழ் இரண்டு பாட்டாலே –
இப்பாட்டிலே –
இப்படி கலி தோஷத்தைப் போக்கி -லோகத்தை ரஷித்த அளவிலும் – ஸ்ரீ எம்பெருமானார் குணங்கள் பிரகாசித்தது இல்லை-
என் கர்மத்தைக் கழித்த பின்பு வைலஷண்யத்தை தரித்தது -என்கிறார் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
கீழ் இரண்டு பாட்டாலே –
கலியினுடைய க்ரௌர்யத்தாலே க்லேசப்பட்ட லோகத்தை ரஷித்த –ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு
ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கள் தன்னடையே வந்து சேரும்-என்றும் –
அவர் தாம் அந்த ரஷணத்துக்கு உறுப்பான வைபவத்தை உடையவர் என்றும் பிரதி பாதித்து
இப்பாட்டிலே –
அப்படிப்பட்ட ரஷணத்திலே ஸ்ரீ எம்பெருமானார் உடைய பிரபாவம் பிரகாசித்தது இல்லை –
என்னுடைய ஆசூர க்ருத்யங்களை யம லோகத்தில் எழுதி வைத்த புஸ்தக பாரத்தை எல்லாம்-தஹித்த பின்பு காணும்
அவருடைய கல்யாண குண வைபவத்துக்கு ஒரு பிரகாசம் லபித்தது -என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–
செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்தமையும் –
ஆஸ்ரயிப்பார்க்கு ஆத்ம குணாதிகள் தாமே வந்து சேருதலும் –
ஆத்ம குணங்களை உண்டாக்குவதற்கு-இவருக்கு ஏற்ப்பட்டு உள்ள சகாய பலமும் -கீழ் இரண்டு பாட்டுக்களாலும் கூறப் பட்டன –
இந்தப் பாட்டில்
இப்படிக் கலியை செறுத்து உலகை ரஷித்த படியால் ஸ்ரீ எம்பெருமானார் குணங்கள்-பிரகாசிக்க வில்லை –
என் வினை யனைத்தையும் விலக்கிய பின்னரே அவை பிரகாசித்தன -என்கிறார் –
ஈசன் வானவர்க்கு என்பான் என்றால் அது தேசமோ திரு வேங்கடத்தானுக்கு .
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே.-ஆழ்வார்-…அது போல-
அந்தாமத்து அன்பு செய்-ஆவி சேர் அம்மான்-கலந்து சேர்ந்த பின்பு தான் விலஷணம் ஆனது என்று ஆழ்வார் அருளியது போல .
ஆவி சேர்ந்த பின்பு தான் அம்மான் ஆனான்
தளிர் புரையும் திருவடி என் தலை மீது ..திரு மங்கை ஆழ்வார் கிட்டியதும் சருகாய் இருந்தது தளிர் விட-
அகில ஜகத் நாதன் அஸ்மின் நாதன்-ஸ்ரீ ரெங்க நாத மம நாத
தம் வினைகள் பாரம் -குறித்து அதைப் போக்கியதே கலியை கெடுத்ததை விட சுவாமிக்கு புகழ் என்கிறார்
நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –
பத உரை –
இராமானுசன் தன் -எம்பெருமானார் உடைய
நயப் புகழ்-விரும்பத் தக்க குணத் திரள்
நிலத்தை -உலகத்தை
செறுத்து -நிலை குலையச் செய்து
உண்ணும் -துன்புறுத்தும்
நீசக் கலியை -கீழ்த் தரமான தன்மை கொண்ட கலியினுடைய
நினைப்பரிய -நெஞ்சினாலும் இவ்வளவு என்று நினைக்க முடியாத
பலத்தை -வலுவை
செறுத்தும் -தொலைத்தும்
பிறங்கியது இல்லை -விளங்கியது இல்லை
என்-என்னாலே
செய்-செய்யப்பட்ட
வினை-பாபங்களை
தென் புலத்தில் -யம லோகத்தில்
பொறித்த -எழுதி வைத்த
அப்புத்தகச் சும்மை -அத சுவடிச் சுமையை
பொறுக்கிய பின் -கொளுத்திய பின்
நலத்தை -விளங்கும் சிறப்பை
பொறுத்தது -தாங்கிக் கொண்டது-
வியாக்யானம் –
ஸ்ரீ எம்பெருமானாருடைய ஸ்ப்ருஹநீயமான குண ஜாதம் –
லோகத்தை அபிபவித்து ஹிம்சியா நின்று உள்ள ஹேயமான கலியை மனஸ்சாலே பரிச்சேதிக்க அரிதாய் இருந்துள்ள பலத்தை –
தேஜஸ் சகாசத்தில் திமிரம் போலே அபிபூதமாம்படி பண்ணின வளவிலும் பிரகாசித்தது இல்லை –
என்னாலே உண்டாக்கப் பட்ட பாபங்களை யம லோகத்திலே எழுதி வைத்த அந்தப் புஸ்தக பாரத்தை-தஹித்த பின்பு
ஔ ஜ்ஜ்வல்ய ரூபமான வைலஷண்யத்தை தரித்தது –
பிறங்குதல்-பிரகாசித்தல்
தென் புலம் -யம புரம்
சும்மை-சுமை
பொறுத்தல்-தஹித்தல்
நயம்-விருப்பம்–
பொறித்த -கல் வெட்டு போலே செய்த கர்மங்கள் -நைச்சிய அனுசந்தானம் –
புண்யம் தாமரை -விகாசம் அடைய -பாபம் ஆகிய இருள் போக்க ஸ்ரீ ராமானுஜ திவாகரன் –
நிலம்-
தர்மார்த்த காம மோஷ புருஷார்த்தங்களுக்கு எல்லாம் விளை நிலமான மகா பிருத்வி
க்ருத த்ரேதா த்வபாரதி யுகங்களிலே -சாதுர்வர்ண மயா ஸ்ரஷ்டா குண கர்ம விபாக -என்று சொல்லப்படுகிற-
தம் தம் மரியாதைகளில் நடந்து -ஸூகோத்தரமாக பகவத் ஆஜ்ஜா பரிபாலனம் பண்ணிக் கொண்டு போருகிற பூமி –என்றபடி –
நிலத்தை –
அந்த பூமியிலே வர்த்திக்கிற சேதனரை –
செறுத்து –
அந்த மரியாதை எல்லாம் மூலையடியே-நடத்திக் கொண்டு பூர்வ காலத்துக்கு விபரீதமாக
எல்லாரையும் துக்காகுலராம் படி பண்ணி –
உண்ணும் –
லோகத்தாரை எல்லாம் ஸ்வ வசமாக கொண்டு சாம்ராஜ்யம் பண்ணி நிற்கிற கலி
தான் லோகத்தை-அழித்த பிரகாரத்தை கீழில் பாட்டில் பரக்க சொன்னோம்-
நிலம்-
தர்மம் அர்த்தம் காமம் புருஷார்த்தம் -விளை நிலம் ஆன மகா ப்ருத்வி– கொண்டாடுகிறார்
ஸ்ரீ ராமன் ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ ஆழ்வார் திருவடி பட்ட இடம்.என்பதால்–இதுவும் அவன் விபூதி தானே
கலி படுத்தும் பாட்டால் நிலத்தை பழிக்க கூடாது
வைபவம் நிறைய கர்ம பூமி–வர்ண ஆஸ்ரம பிரிவின் படி நடந்து ஞானம் பெற்று பக்தி வளர்க்க -ஹேதுவான நிலம்
செல்வ செழிப்பு, ஆரோக்யமாக, பயம் நீங்கி ,இளையவர் மரிப்பதை பார்க்க வேண்டாத படி
தான தான்யம் நிறைந்து ஆனந்தமாக இருந்தார்கள்.
பகவத் ஆணை படி நடந்த காலம்..-முன்பு உள்ள யுகங்கள்
இவற்றை மூலை அடி பண்ணி விபரீதமாக துக்கமே அனுபவித்து சாம்ராஜ்யம் பண்ணி வச படுத்தி கொண்டு
நிலத்தை செறுப்பதே சோறு கலிக்கு
நீசக் கலியை –
மனுஷ்யரிலே சண்டாளரைப் போலே காணும் யுகங்களிலே அதி ஹேயமான கலி யுகமும் –
நீசக் கலியை –
நீசமான கலி யுகத்தின் உடைய –
நினைப்பரிய பலத்தை –
அப்ராப்ய மனச சஹா -என்னுமா போலே எத்தனையேனும் தரம் உடையார்க்கும்-அந்த யுகத்தின் உடைய க்ரௌர்யம்
தட்டாதபடி வர்த்திப்போம் என்று நினைத்து இருக்கவும் அரியதாய் இருக்கிற பலத்தை –
மனசால் பரிச்சேதிக்க அரிதாய் இருக்கிற பலத்தை -என்றபடி –
மகா பல-என்று சொல்லப்படுகிற-ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய பலத்தை பரிச்சேதிக்கிலும்
இதனுடைய பலத்தை பரிச்சேதிக்க ஒண்ணாது காணும் –
செறுத்தும் –
பாஸ்கரன் உதித்து அந்தகாரத்தை சவாசனமாக போக்கினது போலே -கலி தோஷத்தை நிவர்த்திப்பித்த அளவிலும் –
பொலிக பொலிக பொலிக போயிற்று வல் உயர் சாபம் நலியும் நரகமும்-நைந்த நமக்கு இங்கி யாதொன்றுமில்லை –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று மயர்வற-மதி நலம் அருளப் பெற்றவரும்
இவருடைய அவதாரத்தைக் கொண்டாடினார் இறே –
ஸ்வ புருஷம் மபிவீஷ்ய பாசாஹச்துவம் வததியம் கிலதச்ய கர்ண மூலே -என்றும்
பரிஹர மதுசூதன பிரபன்னா ப்ரபுரகம் அன்யக்ர்ணா ந வைஷ்ணவானாம் –என்றும்
பவ சரணம் இதீரயந்தியே வைத்ய ஜடதூரதரென தானபாபான் -என்றும்
நகலு பாகவதாயாம் விஷயம் நச்சந்தி -என்கிறபடியே
இவர் அவதரித்து -எல்லாரையும் பிரபத்தி மார்க்கத்திலே-நடப்பித்து -பாகவதாரகப் பண்ணி –
கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழி தருகின்றோம்-நமன் தமர் தலைகள் மீதே -என்கிற பிரகாரத்திலே
கலியினுடைய வெக்காயம் தட்டாதபடி லோகத்தை எல்லாம் -ரஷித்த அளவிலும் என்றபடி-
நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலி –
நிலம்-நிலத்தில் உள்ள சேதனர் செறுக்கப் படுபவர் அவரே ஆதலின் கலி நீசனாதற்கு ஹேது நிலத்தை செறுத்து உண்ணுதல்
உண்ணல்-கபளீகரித்தல் ஆவது -உலகைத் தன வசம் ஆக்குதல்
காலம் ஆதலின் உலகத்தை தன வசத்திலே ஆக்கி வியாபகமாய் இருத்தல் பொருந்தும் –
கிருதாதிகள் நிலத்தில் வியாபிக்கும் அவை அன்றி செறுத்து உண்பவை அல்ல –
செறுத்தல் ஆவது –
வர்ண ஆஸ்ரம மரியாதைதையும் இறைவனை வழி படும் நெறியையும் குலைத்தல் –
வர்ண ஆஸ்ரம ஆசார வதீ பிரவ்ருத்திர் நகலவ் ந்ருனாம்-என்று வர்ண ஆஸ்ரமங்களை பொறுத்த நடவடிக்கை
மானிடர்க்கு கலி காலத்தில் இல்லை -என்று சரீரத்தோடு கூடிய நிலைக்கு ஏற்ப வகுக்கப்பட்ட அறநெறி வரம்பும் –
விசிஷ்ட வேஷ மரியாதையும் –
கலவ ஜகத்பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டார மீச்வரம்
நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோபஹதா ஜனா -என்று
மைத்ரேயரே -உலகின் தலைவனும் அனைத்தையும் படைத்தவனும் -ஈஸ்வரனும் ஆகிய விஷ்ணுவை-
பாஷண்டர்களால் கெடுக்கப்பட்ட ஜனங்கள் கலி காலத்தில் பூஜிக்க மாட்டார்கள்-என்று-
சரீர தொடர்பு அற்ற பரிசுத்த ஆத்ம தத்துவத்துக்கு ஏற்ப வகுக்கப்பட்ட நெறி முறையும் –
நிஷ்க்ருஷ்ட வேஷ மரியாதையையும் -குலைக்கப்படுவது கலியினால் அன்றோ –
இருவகை மரியாதையையும் குலைத்தலின் கலி நீசனாயினான் –
வர்ண தர்மங்கள் விட்டவரும்-நெடும் தகையை நினையாதவரும் நீசர் அன்றோ –
விடச் செய்தவனும் நினைக்க ஒட்டாதவனும்-நீசனாகக் கேட்க வேணுமோ –
செறுத்தல்
உணவாய் -தாரகமாதல் பற்றி உண்ணும் -என்கிறார் -ஆகவுமாம்-
கலியை-உருபு மயக்கம்
நினைப்பரிய பலத்தைச் செலுத்தும் பிறந்கியது இல்லை –
நிலத்தை எல்லாம் செறுத்து உண்ணும் கலியாதலின் அதன் பலம் நினைப்பு அரியதாயிற்று –
உலகு உண்டவன் பலத்தை பரிச்சேதித்தாலும் உலகைச் செறுத்து உண்ணும் இதன் பலம் பரிச்சேதிக்க வரிது–
இறைவனாலும் காக்க முடியாத படி அன்றோ இது செறுகிறது
இத்தகைய கலியின் பலத்தை செறுத்து அதை ஒடுக்கினால் இராமானுசன் புகழ் எவ்வளவு பிறந்கியதாக வேண்டும் –
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழி தரக் கண்டோம் -திரு வாய் மொழி -5 2-1 – – என்று
ஸ்ரீ நம் ஆழ்வாரும் இவரால் கலி கெடுவதை அருளிச் செய்தார் –
பகவன் நாமத்தை அண்டை கொண்டவர்க்கே கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நமன் தமர் தலைகள் மீது நாவல் இட்டு உழி தர முடியுமானால் ஸ்ரீ இராமானுசனை அண்டை கொண்டவர்க்கு கேட்க வேணுமா –
இவ்வாறு கலியின் மிடுக்கை ஒடுக்கியதால் இராமானுசன் புகழ் பிறந்கியது இல்லையாம்-
ஏன் எனில் அவருக்கு இது ஒரு பெரிய காரியம் அன்றாம் –
பின்னையோ எனின் –
இராமானுசன் தன் நயப் புகழே –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய-ஸ்ப்ர்ஹநீயமான கல்யாண குணங்கள் –
நயம் –
விருப்பம் –
பிறந்கியது இல்லை -பிரகாசித்தது இல்லை பின்னை எத்தாலே பிரகாசித்தது என்றால் –
என் பெய் வினை –
அநாதி காலமே தொடங்கி இவ்வளவாக –தேப்யோ ப்யதி காநிதான்ய ஹமபி சூத்ர கரோமிஷனாத்-என்றும் –
யாவச்ச்சயம் சதுரிதம் சகலச்ய-ஜந்தோ தாவச்சதத் தத்தி கஞ்சமா மாச்திசத்யம் -என்றும் சொல்லப்படுகிற
ஹேய உபாதேய விவேக-சூன்யனான என்னாலே உண்டாக்கப்பட்ட
அக்ருத்த்ய கரணமும் க்ருத்த்ய அகரணமும் தொடக்கமான பாபங்களை
பெய்கை –
உண்டாக்குகை –
தென் புலத்தில் –
தஷிண திக்கில் பாதக ஸ்தலமாய் கொண்டு இருக்கிற யம லோகத்திலே
தென்புலம் –
யம புரம் –
பொறித்த –
சித்ர குப்தனாலே எழுதப்பட்ட –அப் புத்தக சும்மை -அந்த புஸ்தக பாரங்களை
சும்மை-
பாரம் -இத்தால் பகவத அபசார – பாகவத அபசார -அசஹ்யா அபசார ரூபமாய் -சமசித்த பிராரப்த காமி-ரூபமாய்
இருக்கிற கர்மங்களினுடைய அபரிமிதத்வத்தை சொல்லிற்று ஆய்த்து –
பொறுக்கிய பின் –
அந்த-பாபங்களை எல்லாம் பிரிகதிர் படாதபடி தஹித்த பின்பு –
பொறுக்குதல்-
தஹித்தல் –
நலத்தை-பொறுத்தது –
பாபத்வாந்த ஷயாயச ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமாவ் ராமானுஜ திவாகர -என்கிறபடியே-
பிரகாசத்தைப் பெற்றது அப்போது -என்றபடி –
என் பெய் வினை பொறுத்தது –
இவரால் வினைகள் ஒவ் ஒன்றாக செய்யப்படுவன அல்ல –
ஒரு பொழுதில் பல வினைகள் பெய்யப்படுகின்றனவாம் –
யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹா ஷனார்த்தே-என்று-
பதினாயிரம் ப்ரஹ்ம கல்ப காலம் அனுபவித்தாலும் -தீராத பாபத்தை அரை நொடியில் இங்கு-
ஒரு பிராணி சிருஷ்டி செய்து விடுகிறது -என்றபடி
இவர் செய்த வினைகள் யம புரத்தில் சித்ர குப்தனால் புத்தகத்தில் எழுதப்படுகின்றன –
அங்கனம் எழுதப்பட்ட புத்தகங்கள் சுமை சுமையாக இருக்கின்றனவாம் –
அவை எல்லாவற்றையும் ஒரு நொடியில் கொளுத்தி விட்டது –
இராமானுசன் தன்னைப் புகழ்-
இது யாராலும் செயற்கரிய செயல் ஆதலின் இச் செய்கையால் நலத்தை-பொறுத்தது –
இவ் வுலகில் உள்ள அனைவரும் செய்த வினைகள் அனைத்தும் சேர்ந்தாலும் -என் வினைக்கு ஈடாக மாட்டா —
ஆதலின் கலியைச் செறுத்து நிலத்தாரைக் கலியின் கொடுமையிலிருந்து விடுவித்ததனால்-
ஸ்ரீ எம்பெருமானார் புகழ் பிறந்கியது இல்லை-
யம லோகத்தில் சுமை சுமையாக புத்தகத்தில்-எழுதப் பட்ட என் வினைகளைப் பொசுக்கியதாலேயே
அது பெருமை பெற்று விளங்குகிறது-எனபது ஸ்ரீ அமுதனார் கருத்து-
தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும் திண் கழற்கால் அசுரர்–ஸ்ரீ திருவாய் மொழி-3-5-2-
இடகி லேன் ஒன்று; அட்ட கில்லேன்; ஐம்புலன் வெல்ல கிலேன்;
கடவ னாகிக் காலந்தோறும் பூப் பறித்து ஏத்த கிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல் வினையேன்–4-7-9-
என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்–7-1-2-
தீர் மருந் தின்றி ஐவர் நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை–7-1-5-
ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமை—-பெரிய திருமொழி–1-6-8-
உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா–7-4-8-
நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-8-
கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி முதல்வா -11-8-5-
தண்ணன இல்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணோடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமுமாகி நின்றாய்
எண்ணலாம் போதே உன்னாமம் எல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-10 6-
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5 1-3 –
சித்தர குத்தன் எழுத்தால் தென் புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
முத்து திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே –5 2-2-
இருந்தான் கண்டு கொண்டே என தேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே—8-7-2–நான் இந்த்ரியங்களுக்கு கட்டுப்பட்டு இருந்த தன்மையை-இந்திரிய வஸ்யதையை –
தன் அழகாலே தவிர்த்து-என்னை அங்கீகரித்த உபகாரத்துக்கு ஒவ்வாது
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தை நீக்கிய தன்மையும்-ஆபந் நிவாரணமும் -என்கிறார்-
செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க் கொள்ள
செவ்வாய் முறுவலோடு என துள்ளத் திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-அவன் தம்மோடு கலந்த கலவியினாலே ஹ்ருஷ்டானாய் -உவகையனாய்
அது தன் பேறாக முறுவல் செய்த திருப் பவளத்தை அனுபவித்துப் ப்ரீதர் ஆகிறார் –
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply