ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
ஐந்தாவது -ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-/
ஆறாவது – வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்/
ஏழாவது பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள் /
எட்டாவது -சர்வ வியாக்யான அதிகரணம்–1-ஸூத்ரம்-ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-
1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள்
ஐந்தாவது அதிகரணம்- ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-
விஷயம்
கௌஷீதகீ உபநிஷத்தில் அறியத்தக்கவனாக உபதேசிக்கப்படுபவன் பரமாத்மாவே ஆவான் -என்கிறது
1-4-16-ஜகத் வாசித்வாத்
உலகத்தைக் கூறுவதால் இங்கு கூறப்படுவது பரமாத்மாவே
பூர்வ பக்ஷம்
சாங்க்யர்கள் மீண்டும் ஒரு ஆஷேபம்
வேதாந்தங்களில் சேதனனே ஜகத் காரணம் என்று கூறப்பட்டாலும் கபில தந்திரத்தின் மூலம் வெளிப்படுவதாக
பிரதானம் மற்றும் புருஷன் இவற்றை விட வேறே வஸ்து ஜகத்காரணமாக உள்ளது என்றால்
அதை நம்மால் அறிய முடியவில்லை
கௌஷீதகீ உபநிஷத்தில் -பாலாகி -அஜாத சத்ரு -சம்வாதம் -அனுபவிக்கும் புருஷனே -ஜீவாத்மாவே -ஜகத் காரணம்
என்று அறியப்பட வேண்டும் என்கிறது –
அதில் தொடக்கத்தில் பாலாகியால்-அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் குறித்து கேட்ட போது அதற்கு விடையாக
ப்ரஹ்மதே பிரவாணி -4-1-ப்ரஹ்மத்தைக் குறித்து உபதேசிக்கிறேன் என்று
தொடங்கி- 4-18-யோவை பாலாகே ஏதேஷாம் புருஷணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம ச வை வேதி தவ்ய-என்று
யார் இந்த புருஷர்களுக்கு கர்த்தாவாக உள்ளானோ -யாருக்கு இந்த புண்ய பாப ரூபமான கர்மா உள்ளதோ
அவனே அறியத் தக்கவன் என்று நிகமிக்கப்படுகிறது
பாலாகி என்ற அந்தணன் அஜாத சத்ரு அரசன் இடம் தன்னுடைய ப்ரஹ்ம ஞானம் வெளிப்படுத்த
ஸூர்ய மண்டலம் சந்த்ர மண்டலம் மின்னல் ஆகாசம் என்று ஒவ் ஒன்றாக உரைத்து அங்கே உள்ள ஆத்மாவை –
ஜீவாத்மாவே ப்ரஹ்மம் -என்று உரைக்க –
அரசன் ஏற்க மறுக்க –
பாலாகி பணிந்து அரசன் இடம் ப்ரஹ்மத்தை பற்றி உபதேசிக்க பிரார்த்திக்க –
இதுவே இந்த பகுதியின் அறிமுகம்
பாலாகியால் தொடக்கத்தில் எந்த ஒரு ப்ரஹ்மம் அறியப்பட வேண்டியதாகக் கூறப்பட்டதோ-அந்த ப்ரஹ்மமே –
அஜாத சத்ருவால் -ச வேதி திவ்ய -அவனே அறியப்பட வேண்டியவன் -என்று உபதேசிக்கப்பட்டதில் உள்ள ப்ரஹ்மம் ஆகும்
அந்த வரியில் உள்ள -யஸ்ய ச ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ -என்ற பகுதி அறியப்பட வேண்டிய வஸ்துவை
கர்மத்துடன் சம்பந்தப்படுத்துவதாக உள்ளது
ஆகவே இங்கே கூறப்படும் ப்ரஹ்மம் என்பது ப்ரக்ருதியை நியமிக்க வல்லவனும் அனுபவிப்பவனும் ஆகிய புருஷன் –
ஜீவாத்மா -என்று நிச்சயிக்கப் படுகிறது அல்லாமல் வேறே ஏதும் இல்லை -ஏன் என்றால்
வேறு ஏதும் கர்மத்துடன் சம்பந்தம் கொள்வது இல்லை –
கர்மங்கள் ஷேத்திரஞ்ஞனுக்கே-ஜீவாத்மாவுக்கே -சம்பவிக்கும்
பாலாகி வித்யை -ப்ராஹ்மணன் ஷத்ரியன் இடம் கேட்டு அறிகிறான் -ப்ரஹ்ம வித்யை யார் இடமும் கேட்கலாம்
தர்மவியாதான் இடம் ரிஷிகள் கேட்டது மஹா பாரதத்தில் உண்டே
-16-மந்த்ரங்கள் உண்டு இதில் -பூர்ண ப்ரஹ்ம ஞானம் இல்லாத பாலாகிக்கு அஜாத சத்ரு –
யோவை பாலாகே ஏதேஷாம் புருஷணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம ச வை வேதி தவ்ய-
ஸ்ருஷ்டித்தவன் யாரோ -அவனை அறிய வேண்டும் –
நிறை குடம் தழும்பாதே-உபதேசிக்க வந்தவன் உபதேசம் பெற்றுப் போனான்-
சமித் பாணியாக ப்ரஹ்ம உபதேசம் கேட்டான் –
இதம் ஏதத் அதோ மூன்று சப்தங்கள் -this-ஒரே சப்தம் -ஏதத் பிரத்யக்ஷமான இந்த ஜகத்து -என்றபடி –
கர்ம சம்பந்தம் -பிரகிருதி சம்பந்தத்தால் என்பது பூர்வ பக்ஷம் –
இதுக்கு சித்தாந்தி –
எது செய்யப்படுகிறதோ அதுவே கர்மம் என்ற சொல்லுக்கான பொருளாகும்
இங்குள்ள ஏதத் கர்ம -என்பதன் மூலம் ப்ரத்யக்ஷம் முதலான ப்ரமாணங்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஜகத்தே கூறப்படுகிறது
ஆகவே ஷேத்ரஞ்ஞனைக் காட்டிலும் வேறாக உள்ளவனும் யாருடைய கர்மம் -செயல் -என்பதே இந்த ஜகத்தாக உள்ளதோ –
என்று கூறப்படும் ஒருவனே அறியப்பட வேண்டியவன் -என்று கூறக் கூடும்
உபாதான காரணம் பற்றிய ஞானம் இச்சை பிரயத்தனம் பண்ண சாமர்த்தியம் மூன்றும் இருக்க வேண்டுமே –
கர்த்ருத்வத்துக்கு -இவை -பரமாத்மாவுக்கே பொருந்தும் –
இத்தை பூர்வ பக்ஷி மறுப்பான்
நீங்கள் கூறுவது போன்று வைத்துக் கொண்டால்
யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய -கௌஷீகீ -4-18-என்று
தனித் தனியாக இரண்டையும் உரைப்பது அவசியம் இல்லையே
கர்மம் பொதுவாக லோகத்திலும் வேதத்திலும் புண்ய பாப ரூபமாகவே உள்ள செயல்களைக் குறிக்கும்
ஆக புருஷணாம் கர்த்தா -என்பது கர்மங்களை அனுபவிப்பவர்களுக்கே பொருந்தும்
மேலும் கௌஷீதகீ –4-18-
தவ் ஹ ஸூப்தம் புருஷமீயது ஜூ தம் யஷ்டயா சிஷேபா -என்று
உறங்கும் அவன் இடம் செல்லுதல் -அவனைத் தடியால் அடித்தல் -அவனை எழுப்புதல் -இவை
புருஷனை வெளிப்படுத்தும் அடையாளங்களே
இதைத் தொடர்ந்து -கௌஷீதகீ -4-20-
தத் யதா ஸ்ரேஷ்டீ ஸ்வைர் புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்ட்டிநம் புஞ்ஜந்தி ஏவம் ஏவ ஏஷ பிரஞ்ஜாத்மா ஏதைராத்மபிர்
புங்க்தே ஏவம் ஏத ஏவ ஆத்மாந ஏநம் புஞ்ஜந்தி -என்று
எவ்விதம் இந்த செல்வந்த வைசியன் தனது வேலையாட்களுடன் இன்பமாக உள்ளானோ –
எவ்விதம் அந்த வேலையாட்கள் இவனுடன் சேர்ந்து இன்பமாக உள்ளார்களா
அதே போன்று புருஷன் -மற்ற புருஷர்களை -இந்த பிராணன் -முதலானவற்றை அனுபவிக்கிறான் –
அவர்களும் இந்த புருஷனை அனுபவிக்கிறார்கள் என்பதுவும் அனுபவிப்பவனையே -ஜீவாத்மாவையே கூறுவதாக உள்ளது –
யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
பாலாகி என்னும் ஒருவன் அஜாத சத்ரு என்ற அரசன் இடம் வந்து ப்ரஹ்மத்தை குறித்து கூறுவதாக சொல்லி
ப்ரஹ்ம தே ப்ருவாணி யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
யஸ்யா வா ஏதத் கர்ம -யாருக்கு இது கர்மமோ -இது என்றது உலகம் -கர்மம் -உலகை உருவாக்கும் செயலையும் சொல்லி
பர ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் என்றதாயிற்று
இது போன்றே கௌஷீ –4-18-க்வா ஏஷ பாலாகே புருஷோ சயிஷ்ட -க்வா ஏதத் அபூத் -குத ஏதத் ஆகாத்–என்ற
கேள்விகளை அஜாத சத்ரு கேட்க பாலாகி மௌனமாக இருக்க தானே பதில் கூறத் தொடங்கினான்
கௌஷீ -4-19-ஹிதா நாம ஹ்ருதயஸ்ய நாட்ய தாஸூ ததா பவதி யதா ஸூப்த–ஸ்வப்னம் ந கதஞ்சன பச்யதி
அதாஸ்மின் பிராண ஏவைகதா பவதி ததைநம் வாக் சர்வைர்நாமபி சஹாப்யேதி மந சர்வைர்த்யாநை சஹாப்யேதி
ச யதா பிரதிபத்யதே யதா அக்நோஜ் வலந்த சர்வாதிசோ விஸ்பு லிங்கா வி பிரதிஷ்டேரந் ஏவம் ஏவ ஏதஸ்மாத் ஆத்மந
பிராணா யதாயதநம் வி ப்ரதிஷ்டந்தே ப்ராணேப்யோ தேவா தேவேப்யோ லோகா -என்று
இதயத்தில் ஹிதா என்னும் நாடியில் இருந்தான் -ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காண்பதில்லை –
மனம் இந்திரியங்கள் ப்ராணனுடன் கலந்து ஒன்றாக உள்ளன -விழித்துக் கொள்ளும் போது
அக்னியில் இருந்து தீ பொறிகள் சிதறுவது போலே ஆத்மாவில் இருந்து இந்திரியங்கள் புறப்பட்டு
தங்கள் இருப்பிடங்களை அடைந்து இந்திரியங்கள் இந்திரிய விஷயங்களை அடைகின்றன
உபநிஷத்தில் தேவ பதம் இந்திரியங்களும் லோக பதம் இந்திரிய விஷயங்களையும் குறிக்கும் –
அஸ்மின் -ஜீவாத்மாவை சொல்லி -அதாஸ்மின் பிராண ஏவைகதா பவதி -பிராண என்று பிராணனைத் தாங்கும் ஜீவாத்மா –
இப்படியாக இந்த பகுதியின் தொடக்கத்தில் கூறப்பட்ட ப்ரஹ்மம் ஜீவாத்மாவே –
ஈஷம் -பார்த்தல் போன்றவை ஜீவாத்மாவுக்கே பொருந்தும்
எனவே ஜீவாத்மாவால் நியமிக்கப்படும் பிரதானமே ஜகத் காரணம் ஆகும் என்பர் பூர்வ பக்ஷி
சித்தாந்தம்
புருஷோத்தமனே கூறப்படுகிறான் -யஸ்ய ச ஏதத் கர்ம -என்பதில் ஏதத் -இந்த என்பதுடன் சம்பந்தம் கொண்டுள்ள
கர்ம -பரம புருஷனின் கார்யமான ஜகத்தைக் கூறுவதாகும் –
ப்ரத்யக்ஷம் முதலான ப்ரமாணங்களால் அறியப்படுவதும் சித் அசித் வஸ்துக்கள் கலந்த ஜகத் என்பதே கூறப்படுகிறது –
அல்லது புண்ய பாப செயல்களைக் கூற வில்லை
கௌஷீ -4-1-ப்ரஹ்ம தே பிரவாணி –என்று சொல்லத் னத்தொடங்கிய பாலாகி ஆதித்ய மண்டலத்தில் வசிக்கும்
புருஷர்கள் போன்ற ப்ரஹ்மம் அல்லாதவர்கள் குறித்து பேசிய பாலாகி இடம்
கௌஷீ -4-18- ம்ருஷா வை கலு மா ஸம்வ திஷ்டா —என்று தவறாக வாதாடாதே என்று அஜாதசத்ரு உரைத்தான் —
யோ வை பாலாகி –என்று கூறத் தொடங்கினான்
இங்கே கர்ம -என்னும் சொல் அவன் அறியாத ப்ரஹ்மத்தை உணர்த்த குறிக்க வந்ததால் இங்கு ஜகத்தையே குறிக்கும்
யஸ்ய கர்ம ச வேதி தவ்ய–யாருக்கு கர்மம் உள்ளதோ அவனே அறியப்பட வேண்டியவன் என்று இல்லாமல்
யஸ்ய வா ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ என்று இருப்பதால் -ஏதத் இது என்ற சொல்லுக்கு பயன் வேண்டுமே
அந்த உபநிஷத் வரியில் -யா ஏத்த ஏஷாம் கர்த்தா -யார் இவர்களுக்கு கர்த்தாவோ —
மற்றும் யஸ்ய வா ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ என்று தனித்தனியாக உபதேசிக்கப்பட்டதின்
அபிப்ராயம் ஏது என்றால் -நீ எந்த புருஷர்களை ப்ரஹ்மம் என்று உபதேசித்தாயோ
உண்மையில் அந்த ப்ரஹ்மமே அவர்களுடைய கர்த்தாவாகும்-அவர்கள் அந்த ப்ரஹ்மத்தின் கார்ய பூதங்கள்
ஆகவே புருஷர்களை -ஆதித்யன் போன்றவர்களைப் படைக்கும் சக்தி ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது –
எனவே இங்குள்ள உபநிஷத் வரியில் -அனைத்து வேதாந்தங்களிலும் அனைத்துக்கும் காரணம் என்று
வெளிப்படுத்தப்படுகின்ற பர ப்ரஹ்மமே அறியப்பட வேண்டியதாகும் என்பதே உபதேசிக்கப் படுகிறது –
——————
1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –
இங்கு ஜீவன் மற்றும் முக்கிய பிராணன் ஆகிய அடையாளங்கள் காணப்படுவதால் பரமாத்மா அல்லன்-என்றால்
முன்பு சொன்னபடியே அது பொருந்தாது
பிரதர்சன வித்யை -1-1-31–முன்பே இதன் விளக்கம் பார்த்தோம்
அதாஸ்மின் பிராண ஏவ ஏகதாபவதி-என்றும்
தத்யதா ச்ரெஷ்டீ ஸ்வைர்ப்புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்டி நம் புஞ்ஜந்தி
ஏவமேவைஷா பிரஜ்ஞாத்மா ஏதைராத்மயிர் புங்க்தே
ஏவமேவைத ஆத்மான எனம் புஞ்ஜந்தி -என்றும்
ப்ரஹ்மேதே பிரவாணி -என்றும்
உனக்கு நான் ப்ரஹ்மத்தைக் குறித்து உபதேசிக்கிறேன் -என்று ப்ரஹ்மத்தைக் குறித்தே உள்ளது
நடுவில் உள்ள பகுதியில் -யஸ்ய வா ஏதத் கர்ம –இது யாருடைய கர்மமோ என்பதிலும் ஜீவாத்மா கூறப்படவில்லை
அனைத்து ஜகத்துக்கும் ஒரே காரணமான ப்ரஹ்மமே கூறப்பட்டது என்றும் பார்த்தோம்
இறுதியிலும்
சர்வான் பாப்மநோப ஹத்ய சர்வேஷாம் பூதானாம் ஸ்ரைஷ்ட்யம் ஸ்வா ராஜ்ய மாதிபத்யம் பர்யேதி யா ஏவம் வேத -என்று
இதனை அறிபவன் தனது அனைத்து பாபங்களையும் நீக்கிக் கொண்டவனாக -அனைத்து ஜீவ ராசிகளில் உயர்ந்தவனாக –
அவற்றின் தலைவனாக -கர்ம வசப்படாதவனாக உள்ளான் என்பதன் மூலம்
பிராணனை உடலாக உடைய ப்ரஹ்மத்தை உபாசனை செய்ய வேண்டும் என்றதாயிற்று –
ப்ரஹ்ம உபாசனம் பலன் உடன் கூடியதாக உள்ள அனைத்துப் பாபங்களில் நின்றும் நீங்கப் பெற்ற மோக்ஷ சாம்ராஜ்யம்
பெறுவதை சொல்வதால் ப்ரஹ்ம விஷயமாகவே அனைத்தும் உள்ளன
பிரதர்சன வித்யையில் கூறப்படும் மூன்று வகை ப்ரஹ்ம உபாசனையில் உள்ள
ஜீவாத்மா முக்கிய பிராணன் போன்ற அடையாளங்கள் ப்ரஹ்மத்தைக் குறித்தே உள்ளன
அஸ்மிந் பிராணன் -என்றும்
அதாஸ்மிந் பிராண ஏவ ஏகதா பவதி –கௌஷீகீ -4-19-உறங்கும் போது பிராணன் உடன் சேர்ந்து ஒன்றாகிறான் –
என்பதில் உள்ள அஸ்மிந் பிராண சொற்கள் சாமா நாதி கரண்யத்தில்
பிராணனை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்ம உபாசனம் என்று சொல்லவே பிராண சப்தம்
ஜீவாத்மாவைக் குறித்து சொல்லும் அடையாளங்கள் எவ்வாறு ப்ரஹ்மத்தைக் குறிக்கும் என்பது அடுத்த ஸூத்ரம்
ஜீவாத்மாவுக்கு உரிய பல விசேஷணங்கள் இருப்பதால் இது ஜீவாத்மாவையே குறிக்கும்
பரமாத்மாவுக்கே உரிய ஒரு விசேஷணம் இருந்தாலும் இது ஒவ்வாதே
பிரகரணம் பரமாத்மாவையே குறிக்கும் –
ஜீவா முக்கிய பிராண லிங்காத் ஸமஸ்த பதம்
ஜீவ லிங்காத் முக்கிய பிராண லிங்காத்-என்று பிரித்தே அர்த்தம் –
உபக்ரம உபஸம்ஹார நியாயம் –போக்தா ஏவ -பரமாத்மாவே-ப்ரஹ்மம் உபதேசிக்க ஆரம்பம்-அதுவே நிகமனம்-
பாட க்ரமம் வேறாக இருந்தாலும் அர்த்த க்ரமமே பிரதானம்
ப்ரஹ்ம உபாசனமே சொல்லிற்று ஆயிற்று — –
மாம் உபாஸ்வா-என்றாலும் ப்ரஹ்மம் அந்தர்யாமியாய் இருப்பவனையே -சொல்லும்
சர்வ தேவ நமஸ்காரம் கேசவனையே சொல்லும் –
————
1-4-18-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –
அஜாத சத்ருவும் பாலாகியும் தூங்கிக் கொண்டு இருந்த மனிதனை எழுப்ப –
உடலில் வேறுபட்டவன் ஜீவன் -ஜீவனில் வேறுபட்டவன் பர ப்ரஹ்மம்
க்வ ஏஷ ஏதத் பாலாகே புருஷோசயிஷ்ட -தூங்கி எழுவதற்கு முன்னால் எங்கு இருந்தான்
விடையாக அதாஸ்மின் பிராண ஏவ ஏகதா-தூங்கும் பொழுது பிராணனில் ஒன்றி விடுகிறான்
சாந்தோக்யம் –
சதா சோம்ய ததா சம்பன்னோ பவதி –தூங்கும் பொழுது சத்துடன் ஒன்றி விடுகிறான்
பிராணன் என்றது ப்ரஹ்மமே
ப்ருஹத் உபநிஷத் –
ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே-என்று தூங்குபவன் இதயத்திலுள்ள
ஆகாயம் ஆகிய பரம் பொருளிடம் தூங்குகின்றான்
பிராணன் போன்ற சொற்கள் ப்ரஹ்மமே என்றதாயிற்று-
அன்யார்த்தம்-ஜீவனுக்கு மேலே பரமாத்மா உள்ளது என்று காட்டவே
து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே–ஜீவாத்மா- போக்தா -போன்ற சப்தங்கள் -நடுவில் –
இவற்றைக் காட்டிலும் மேலான பர ப்ரஹ்மம் இருப்பதை சொல்லவே வந்தது
தனது சிஷ்யர் -பாதராயணர் -இருவரும் இருவர் இடம் கௌரவ புத்தி கொண்டனர்
அந்தர் கர்பிதமான அர்த்தம் -face-value-கொள்ளாமல் -ப்ரஸ்ன வியாக்யானம் போலவே இங்கும் கொள்ள வேண்டும் –
வாஜசனேய சாகையிலும் இது போலவே உண்டே
ஆகவே காரணத்வம் பர ப்ரஹ்மத்திடமே நிலைக்கும் —
——————–——————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply