ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த- ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்-ஸ்ரீ கீதார்த்த ரக்ஷை – ஸ்ரீ தாத்பர்ய சந்திரிகை-முதல் அத்யாய சாரம் –

ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த்யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-

ஜீவனுக்கு உரிய தர்ம-கர்ம – ஞானங்களால் -மற்றும்
வேறு விஷயங்களில் பற்று இல்லாத நிலையாலும் பக்தி யோகம் கை கூடும் –
இப்படி பக்தி யோகத்துக்கு மட்டும் இலக்காகும் பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ பகவத் கீதையில் நன்றாக அருளிச் செய்யப் பட்டுள்ளன –

———————————-

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-

ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் –
ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-பகவத் விஷய ஞானம்
இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

—————————————————————-

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்–5-

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் –
காருண்யம் –
தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

தகாத உறவினவர்கள் இடமும் நண்பர்கள் இடமும் உண்டாகும் அன்பு மற்றும் இரக்கம் காரணமாக
தர்ம யுத்தம் என்பதை அதர்மம் என்று கருதும் மயக்கம் உண்டானது –
இப்படியாகக் கலக்கம் கொண்டவனும் -தன்னைச் சரணம் புகுந்தவனுமாகிய அர்ஜுனனைக் குறித்து
ஸ்ரீ கீதா சாஸ்திரத்தின் முதல் அத்யாயம் உண்டானது –

ஸ்ரீ கீதா சாஸ்திரத்தின் முக்கியமான பொருளும்
மூன்று ஷட்கங்களாகப் பிரித்து ஒவ் ஒன்றின் முக்கிய பொருளும்
நான்கு ஸ்லோகங்களில் அருளிச் செய்த பின்
அடுத்து -18-ஸ்லோகங்களால் ஒவ் ஒரு அத்தியாயத்தின் பொருளும் சுருக்கமாக உரைக்கப்பட்டுள்ளன –

அர்ஜுனன் துயரம் கொள்வதும்
அத்தை பகவான் போக்குவதும்
முதல் இரண்டு அத்தியாயங்களின் பொருள்கள்

முதல் அத்தியாயமும் இரண்டாம் அத்யாயம் -11-ஸ்லோகம் வரையில் அருஜனின் சோகம்
இத்தை ஒரு ஸ்லோகத்தால் மேலே காட்டி அருளுகிறார்

இரண்டாம் அத்யாயம் -9- ஸ்லோகத்தில் ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஏவம் அஸ்தாநே சமுபஸ்தித ஸ்நேஹ காருண்யாப்யாம ப்ரக்ருதிம்
கதம் க்ஷத்ரியானாம் யுத்தம் பரம தர்மம்
அப்ய தர்மம் மந்வாநம் தர்ம புபுத்சயா
ச சரணாகதம் பார்த்தம் உத்திச்ய ஆத்ம யாதாத்ம்ய ஞாநேந
யுத்தஸ்ய பாலாபிசந்தி ரஹிதஸ் யாத்ம ப்ராப்த்யுபாய
தஜ் ஞாநேந ச விநா அஸ்ய மோஹோ ந ஸாம்ய தீதீ
மத்வா பகவதா பரம புருஷேண அத்யாத்ம ஸாஸ்த்ர அவதரணம் க்ருதும் தத் உக்திம்-
அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்-

வரக் கூடாத நேரத்தில் உண்டாகிய பாசம் -யுத்தம் செய்வது ஷத்ரிய தர்மம் என்ற போதிலும் யுத்தம் செய்வதை
அதர்மமாக நினைத்தல் -பகவான் இடம் சரணம் என்று புகுந்து தனக்கு உண்டான வழியை உபதேசிக்கும் படி கூறுதல் –
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அர்ஜுனன் இருந்தான் –
அவனைப் பார்த்த பகவான் தனது மனதில் -இவனுக்கு ஆத்மாவைப் பற்றிய ஞானம் பிறக்க வேண்டும் –
எந்த விதமான பற்றும் பலனும் எதிர்பாராமல் இப்போது போர் புரிவதன் மூலம் இவனுக்கு ஆத்ம ஞானம் பிறக்கும் –
அதன் பிறகே இவனுக்கு மயக்கம் நீங்கும் என்று எண்ணினான் –
இந்தக் கருத்தையே ஸ்ரீ ஆளவந்தார் இந்த ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்

தகாத இடத்தில் அன்பு -தயை -ஆகியவற்றின் காரணமாக -தர்மத்தில் அதர்மம் என்னும் எண்ணம் உண்டாகியது
என்பது ஸ்ரீ எம்பெருமானாரின் ஸ்ரீ கீதா பாஷ்ய சிந்தனை –
இதனை ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் முதல் அத்தியாயத்தில் -பந்து ஸ்நேஹ பரயா ச க்ருபயா
தர்ம அதர்ம பயேந ச அதிமாத்ர சன்ன சர்வாங்க –என்று

உறவினர்கள் மேல் கொண்ட ப்ரீதியாலும்
அதிகமான கருணையாலும்
தர்மத்தை அதர்மம் என்று எண்ணியதால் உண்டான
பயம் காரணமாகவும் ஒடுங்கிய உடல் உறுப்புக்களைக் கொண்டவனாய் -என்று இருப்பதன் மூலம் அறியலாம்

தர்ம அதர்ம பயாகுலம் -என்று படித்து –
கயிற்றை பாம்பு என்று என்னும் பயம் போலே -என்று கொள்ள வேண்டும்

உத்திச்ய-ஒரு காரணமாக வைத்தபடி என்னும் பொருள்
ஸ்ரீ கீதா பாஷ்ய தொடக்கத்தில் பாண்டு தநய யுத்தப்ரா உத்ஸாஹந வ்யாஜேந –பாண்டுவின் புத்ரனை
யுத்தத்தில் உத்ஸாஹப்படுத்த வேண்டும்
ப்ரபன்னன் -தன்னைக் குறித்து சரணாகதி செய்தவன் –
அஸ்ய மோஹோ ந ஸாம்ய தீதீ மத்வா-அர்ஜுனனின் மயக்கம் தீராது –

இரண்டாம் அத்யாயம் -11-ஸ்லோகம் வரை இந்த கருத்தே என்பதால் ஸ்ரீ ஆளவந்தார்
இந்த ஸங்க்ரஹ ஸ்லோகத்தில் முதல் அத்யாயம் என்று குறிக்க வில்லை

———-

நித்யாத்மா சங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோகதீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந்மோஹ சாந்தயே –6-

சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி –பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண –
மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி-கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –உபதேசிக்கிறார் –

இதுக்கு ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஏவம் ஆத்ம யாதாம்யம் யத்தாக் யஸ்ய ச கர்மணஸ் தத் பிராப்தி சாதன தாமஜாநதச் சாரீராத்மா ஞாநேந மோஹிதஸ்ய
தேந ச மோஹிந யுத்தாந் நிவ்ருத்தஸ்ய மோஹ சாந்தயே நித்யாத்ம விஷயா சாங்க்ய புத்திஸ் தத் பூர்விகா
ச அஸங்க கர்ம அனுஷ்டான ரூப கர்ம யோக விஷயா புத்தி ஸ்தித ப்ரஞ்ஞதா யோக சாதன பூதா த்வீதிய அத்யாயே ப்ரோக்தா-என்று
ஆத்மாவின் உண்மை நிலை -இத்தகைய ஆத்மாவை அடைய ஷத்ரியர்களுக்கு யுத்தமே உபாயம் போன்றவற்றை
அர்ஜுனன் அறியாமல் இருந்தான் -மேலும் அவன் இந்த மயக்கம் காரணமாக யுத்தத்தில் இருந்து வெளியேறவும் முயற்சித்தான் –
எனவே அவனுக்கு சாங்க்யம் என்ற ஞானம் அல்லது ஆத்மாவைப் பற்றிய அறிவு போதிக்கப் பட்டது –
மேலும் யோகம் அல்லது பலனில் விருப்பம் இல்லாது கர்மம் இயற்றும் மார்க்கமும் விளக்கப்பட்டது –
இவை இரண்டும் அசைக்க இயலாத ஞானத்தை உண்டாக்குகிறது –
இதையே ஸ்ரீ ஆளவந்தார் ஸங்க்ரஹ ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் –

——————-

கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கோர் இலக்கு என்று
அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரமம்
திருமகளோடு வரும் திருமால் என்று தான் உரைத்தான்
தருமம் உகந்த தனஞ்சனயனுக்கு அவன் சாரதியே –1-

உகவை அடைந்த உறவுடையார் பொரலுற்ற அந்நாள்
தகவுடன் அன்பு கரை புரளத் தருமத் தளவில்
மிக உளம் அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கோர்
நகையுடன் உண்மை யுரைக்க அமைந்தனன் நாரணனே —2-

மிகவும் கர்வம் கொண்டு இருந்த பந்துக்களான துரியோதனன் உள்ளிட்டவர்கள் பாண்டவர்களுடன்
யுத்தம் தொடங்கிய நேரத்தில் மிகுந்த கருணை காரணமாக அன்பு கரை புரண்டு ஓட-யுத்தம் என்பது
தர்மம் என்ற போதிலும் அச்சம் கொண்டு ஸ்ரீ கிருஷ்ண பகவானின் திருவடித் தாமரைகளில் அர்ஜுனன் விழுந்தான் –
அவனைப்பார்த்த ஸ்ரீ மந் நாராயணனாகிய ஸ்ரீ கிருஷ்ணன் புன்னகை பூத்தபடி உண்மையை உரைக்க நின்றான் –

———————–

த்ருதராஷ்ட்ர உவாச–
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ–
மாமகா பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய—-৷৷1.1৷৷

த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்;
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = தர்ம க்ஷேத்ரமான குருஷேத்ரத்தில்
ஸமவேதா: = ஒன்றாகக் கூடி
யுயுத்ஸவ: = யுத்தம் செய்ய வந்திருக்கும்
மாமகா: = நம்மவர்களும்;
பாண்ட³வா: = பாண்டவரும்;
கிம் அகுர்வத = என்ன செய்கிறார்கள்

த்ருதராஷ்ட்ரன் வாக்யத்துடன் தொடங்கி சஞ்சயன் வாக்யத்துடன் முடியும் -ஸ்ரீ கீதை –
என் பிள்ளைகள் –பாண்டு பிள்ளைகள் –கிம் அர்குவத -என்ன பண்ண -யார் வெல்ல போகிறார் -மனசில் வைத்து கேட்கிறான்-
அதார்மிகர்-தம் பிள்ளைகள் -க்ஷேத்ர சம்பந்தம் -நல்ல புத்தி வந்ததோ -ஆசை இருக்கலாமோ -க்ஷேத்ர மகிமையால்
தர்ம புத்திரர்கள் காண்டீபம் போட்டு விட்டு சண்டை போட்டு பெரும் ராஜ்யம் வேண்டாம் என்று போய் விட்டார்களோ –
கிம் அகுர்வத -எனக்கு வேண்டியதாக என்ன பண்ணுகிறார்கள் -என்றபடி –
மாமகா -மமகாராம் தோற்ற பேசி -பாண்டவர் ஒதுக்கி வைத்து பேசி

தர்ம க்ஷேத்ரே –தர்மம் செய்வதற்கு ஏற்றதான இடம் -என்பதன் மூலம் யுத்தம் என்னும் யஜ்ஞம் இயற்றுவதற்கான
இடம் என்று உணர்த்தப் படுகிறது –
குரு க்ஷேத்ரே –பாண்டவர்களுக்கும் த்ருதராஷ்ட்ர புத்ரர்களுக்கும் தங்கள் உறவினர்களுடன் கூடியுள்ளதான
காரணமாக வெகுமானம் செய்ய வேண்டியதான இடம்
ஸம வேதா யுயுத்ஸவ–ஒருவருக்கு ஒருவர் விரோதம் கொண்டபடி யுத்தத்திற்கு அணி வகுத்து நிற்கின்ற
ச மற்றும் ஏவ -இரண்டு பாதங்களும் ஒரே பொருளை உணர்த்தும்
இவ்வுலகில் அனைத்து அரசர்களும் இந்த இரண்டு வகுப்பினருக்கும் உதவி செய்யும் விதமாக கூடியபடியால்
இந்த இருவருமே முக்கியமானவர்கள் என்று உணர்த்தியபடி-

10 நாள் யுத்தம் நடந்த பின்பு கேள்வி
பீஷ்மர் சர கல்பத்தில் இருந்த பின்பும் என் பிள்ளைகளுக்கு வாழ்ச்சியா கேட்க்கிறானே

சரீரத்தில்-தர்ம க்ஷேத்ரம் தானே இது -சாத்வீகம் ஞானம் தயை பாண்டவர்
மாமகா -அஹங்காரம் -மமகாராம்
எது வெல்லும்
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்க்க வேண்டுமே
11 அக்வ்ஷகனிகள் பலிஷ்டம் கெட்டவையே -7 அக்வ்ஷகனிகள் -நல்லவை
முக் குணங்களில் இரண்டை அகற்றி ஒன்றையே வளர்க்க வேண்டுமே

—————-

ஸஞ்ஜய உவாச–
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ் ததா.—
ஆசார்ய முப ஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத்—-৷৷1.2৷৷

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
ததா³ = அப்போது
துர்யோதந = துர்யோதனன்;
வ்யூடம் = வியூகித்து நின்ற
பாண்ட³வாநீகம் = பாண்டவர் படையை;
த்³ருஷ்ட்வா = பார்த்துவிட்டு
ஆசார்யம் உபஸங்க³ம்ய = ஆச்சாரியனான துரோணரிடம் சென்று
வசனம் = வசனம்
அப்ரவீத் = சொல்லத் தொடங்கினான்;

அரசனான துரியோதனன் அணிவகுக்கப்பட்ட பாண்டவர்களின் சேனையைப் பார்த்து பின்பு
துரோணாச்சார்யரை அணுகிப் பின் வரும் சொற்களைக் கூறினான்

தவ ஸிஷ்யேண-கீழே இருப்பதால் இங்கு ஆச்சார்யர் என்பது துரோணரையே சொல்லும்
நாவினால் நவிற்று -நவிலுவது நாவால் தானே மனஸ் ஸஹகாரி இல்லாமல்
வசநமப்ரவீத்-வசனங்களை பேசினான் -சப்தம் தான் இருந்தது அர்த்தம் இல்லை -உள்ளே பயந்து பேசினான்
து -மூன்று இடத்தில் பார்த்த பின்பு -பாண்டவர் -துரியோதனன்
பார்த்ததால் பயந்தான் –
சேனையைப் பார்த்தே தலைவனே பார்த்தான்
ததா து அப்பொழுதே-

———–

பஸ்யைதாம் பாண்டு புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்.—
வ்யூடாம் த்ருபத புத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா—৷৷1.3৷৷

பஸ்ய = பார்
ஏதம் = இந்த
பாண்டு = பாண்டவர்களின்
புத்ராணாம் = புத்திரர்களின்
ஆச்சார்ய = ஆச்சாரியரே
மஹதம் = பெரிய, வலிமை மிக்க
சமூம் = படை
வியூடாம் = வியூகம், அணிவகுத்து நிற்கும்
த்³ருபத³புத்ரேண = துருபதனின் புத்திரனான (த்ரிஷ்டத்துய்மனன்)
தவ = உங்களுடைய
ஸி²ஷ்யேண = சீடனான
தீ⁴மதா = நன்றாக, புத்திசாலித்தனமாக

உம்முடைய சீடனும் அறிவாளியும் துருபதனின் மகனுமான திருஷ்டத்யும்னனால்
அணி வகுக்கப் பெற்றதாய் மிகப் பெரியதான இந்த பாண்டு புத்திரர்களின் சேனையைப் பாரும்
திருஷ்டத்யும்னன் -பாண்டவர் சேனாபதி -உம் சிஷ்யன் -குத்தி பேசி -பாண்டு புத்ரர்களுக்கு நீர் ஆச்சார்யர்

பஸ்யைதாம்-விடு பாம்பை போல் -கிரியை முன்னால் -பயந்த பேச்சு -வீடுமின் முற்றவும் போல் –

துரோணரைக் கொல்வதற்காக –யாஜர் மற்றும் உபாயகர் -இரண்டு அந்தணர்களை வைத்து
பாஞ்சால அரசன் துருபதன் யாகம் செய்ததன் விளைவாக பிறந்தவனே திருஷ்டத்யும்னன்
கிருஷ்ணை என்னும் திரௌபதியும் இந்த யாகத்திலேயே தோன்றினாள் –

———

அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுந ஸமா யுதி—
யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத—-৷৷1.4৷৷

அத்ர = இங்கே , நமது படையில்
ஸூ²ரா = சூரர்கள்
மஹேஷ்வாஸா = பெரிய வில்லாளிகள்
பீ⁴மார்ஜுநஸமா = பீமா + அர்ஜுன சமா = பீமனுக்கும்யு அர்ஜுனனுக்கும்தி சமமான
யுயுதா = யுயுதானன்
விராடஸ்²ச = விராடன்
த்ருபத³ஸ்²ச = துருபதன்-திரௌபதிக்கு தந்தை –
மஹாரத = போன்ற மஹாரதர்கள்

இந்தப் பாண்டவ சேனையிலே பெரிய வில்லாளிகளும் போரில் பீமார்ஜுனர்களுக்கு இணையானவர்களும்
ஸூரர்களுமான யுயுதானனும் –சாத்யகியும் -விராட அரசனும் பெரும் தேராளியான துருபதனும் உள்ளனர்

அங்கு 19 பேர் சொல்லி-அனைவரும் மஹா ரதிகள் – தம் சேனையில் 7 பேர் மட்டும்
மூன்று ஸ்லோகங்களால் -இதுவும் பயத்தின் காரணம்

த்ருஷ்டகேதுஷ் சேகிதாந காஸிராஜஷ்ச வீர்யவாந்—
புருஜித் குந்திபோஜஸ் ச ஷைப்யஸ்ச நரபுங்கவ—-৷৷1.5৷৷

த்⁴ருஷ்டகேது = திருஷ்டகேது
ஸ்²சேகிதாந: = சேகிநாதன்
காஸி²ராஜஸ்²ச = காசி ராஜன்
வீர்யவாந் = வீரியமான
புருஜித் = புருஜித்
குந்திபோ⁴ஜஸ்²ச = குந்தி போஜன்
ஸை²ப்³யஸ்²ச = சைப்பியன்
நரபுங்க³வ: = மனித ஏறு போன்ற

த்ருஷ்ட கேதுவும் சேகி நாதனும் வீர்யமுடைய காசி ராஜனும் புருஜித்தும்
குந்தி போஜனும் மனிதருள் சிறந்த சிபி வம்சத்து அரசனும் உள்ளனர்
த்ருஷ்ட கேது-சேதி நாட்டு மன்னன் -இவன் சிசுபாலனின் புத்ரன் –
சேகி நாதன் -வ்ருஷ்ணி வம்சம் –
புருஜித்தும் குந்தி போஜனும் -இருவரும் குந்தியின் உடன் பிறந்தவர்கள் –
சிபி வம்சத்து அரசன்-சைப்யன் – இவரது மகளான தேவிகாவை யுதிஷ்ட்ரர் மணந்தார்

யுதாமந்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவாந்.—
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா—৷৷1.6৷৷

யுதா⁴மந்யுஸ்²ச = யூதாமன்யு
விக்ராந்த: = வலிமையுள்ள
உத்தமௌஜாஸ்²ச =உத்தமௌஜா
வீர்யவாந் = வீரியமுள்ள
ஸௌப⁴த்³ரோ = சுபத்ரையின் மகன்
த்³ரௌபதே³யா ஸ்²ச = திரௌபதி மக்கள்
ஸர்வ ஏவ = எல்லோரும்
மஹாரதா²: = மஹாரதர்கள்

யுதா மன்யுவும் வீர்யமுடைய யுத்த மவ்ஜனும் சுபத்ரையின் மகனான அபிமன்யவும்
திரௌபதியின் பிள்ளைகளான இளம் பாண்டவர்களும் எல்லாரும் பெரிய தேராளிகளாக உள்ளனர்
யுதா மன்யுவும் – யுத்த மவ்ஜனும்-இருவரும் சகோதரர்கள் -இவர்கள் உறங்கும் போது அஸ்வத்தாமாவால் கொல்லப்பட்டனர்
இளம்-உப பாண்டவர்கள் -பிரதிவிந்த்யன் -ஸூத சோமன் -ச்ருதகர்மா -சதாநீகன் -ஸ்ருதசேனன்-ஆகியவர்கள்
இவர்கள் உறங்கும் பொழுது அஸ்வத்தாமாவால் கொல்லப் பட்டனர் –

————

அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம.-
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந் ப்ரவீமி தே—৷৷1.7৷৷

அஸ்மாகம் = நமது
து = ஆனால்
விஸி²ஷ்டா =விசேஷமான
யே = யார்
தாந் = அவர்கள்
நிபோத = சொல்லப்பட்டது
த்³விஜோத்தம = துவிஜ + உத்தம = இருமுறை உயர்ந்தவர்
நாயகா = நாயகனே , படை தளபதியே
மம = நமது
ஸைந்யஸ்ய = படைகள்
ஸஞ்ஜ்ஞார்த²ம் = நிலை
தாந் = அவர்கள்
ப் ³ரவீமி = சொல்கிறேன்
தே = உனக்கு

அந்தணர் தலைவரே நம்மிடையோ என்னில் என்னுடைய சேனையின் தலைவர்களாக
எவர்கள் உள்ளனரோ அவர்களை உமக்கு நன்கு அறிவதற்காகக் கூறுகிறேன் -கேட்பீராக
த்விஜோத்தம-இரு பிறவி அந்தணர் –ப்ராஹ்மணராக இருந்தும் யுத்த பூமியில்
அஸ்மாகம் து விஸிஷ்டா-இதே போலே அவர்களுக்குள் உயர்ந்தவர் என்ற விசேஷணம் அங்கு இல்லை –
இவர்கள் நமக்குள் மட்டுமே உயர்ந்தவர்-இவர்கள் எல்லாம் நமக்குள் தான் விசிஷ்டர்கள் -அவர்களுக்கு அப்படி விசேஷணம் இல்லையே –
மம-சைன்யம் உன்னைப் போலே உன் பிள்ளையும் மிருத்யு க்ஷமமான மமகாரத்துடன் -கந்தல் கழிய வேண்டுமே –
ந மம -அம்ருதம் ஆகும் -அர்த்த பஞ்சக ஞானத்தால் அறுக்க வேண்டுமே -அறுக்க பஞ்சகம் –

——–

பவாந் பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய–
அஷ்வத்தாத்மா விகர்ணஸ்ச ஸௌமதத்திஸ் ததைவ ச—-৷৷1.8৷৷

ப⁴வாந் = நீ
பீ ⁴ஷ்ம = பீஷ்மர்
ச = மேலும்
கர்ணஸ்²ச = கர்ணன்
க்ருபஸ்²ச = கிருபன்
ஸமிதிஞ்ஜய: = போரில் வெற்றி கொள்ளும்
அஸ்²வத்தா²மா = அஸ்வத்தாமன்
விகர்ணஸ் = விகர்ணன் மேலும்
ச =மேலும்
ஸௌமத³த்திஸ்ததை = சோமதத்தன் மகன்
எவ = அது அன்றி
ச = மேலும்

துரோணராகிய நீரும் பீஷ்மரும் கருணனும் போரில் வெற்றியடைய கிருபரும்
அஸ்வத்தாமாவும் விகர்ணனும் சோமதத்ததின் மகனும்
முதலில் நீர் -துரோணாச்சார்யரை சொல்லி –
சோமதத்ததின் மகன்-பூரிசிரவஸ்-சந்தனு மஹாராஜனின் மூத்த சகோதரரின் பேரன்
கிருபாச்சார்யர் -சரத்வர் மஹரிஷியின் புதல்வர் -சந்தனு மஹாராஜர் கிருபையால் வளர்ந்ததால் கிருபர் என்னும் பெயர்
அஸ்வத்தாமன் துரோணரின் புத்ரன்
விகர்ணன் த்ருதராஷ்ட்ரனின் நூறு புத்ரர்களில் ஒருவன் -இவன் ஒருவனே திரௌபதிக்காக சபையில் பேசினவன்

ஏழு பேருக்கும் குறை உண்டே
பீஷ்மர் இவர்களைக் கொல்ல மாட்டேன்
அஸ்வத்தாமாவை அர்ஜுனனை விட நீ உயரக்கூடாது என்று தந்தையான நீரே சொல்லி வைத்தீர்

—–

அந்யே ச பஹவம் ஷூரா மதர்தே த்யக்த ஜீவிதா–
நாநா ஸஸ்த்ரப்ரஹரணா ஸர்வே யுத்தவிஷாரதா—৷৷1.9৷৷

அந்யே = இது அன்றி
ச = மேலும்
ப³ஹவ: = பல
ஸூ²ரா: = சூரர்கள்
மத³ர்தே² = எனக்காக
த்யக்தஜீவிதா: = தங்கள் வாழ்வை தியாகம் செய்ய
நாநா ஸ²ஸ்த்ர ப்ரஹரணா: = நாநாவிதமான யுத்த சாத்திரங்களை அறிந்தவர்கள்
ஸர்வே = அனைவரும்
யுத்³த⁴ = போர்
விஸா²ரதா³: = திறமையானவர்கள்

மற்றும் சூரர்கள் பலரும் உள்ளனர் -அவர்கள் எனக்காக உயிரையே விட்டு இருப்பவர்கள் –
பல அஸ்த்ரங்களையும் ஆயுதங்களையும் உடையவர்கள் -எல்லாரும் போரில் வல்லவர்கள்
யுத்த நீதி அறிந்தவர்கள் –-எனக்காக உயிர் விட்டவர்கள் -வரப் போவதையும் சொல்கிறான் –
விதி வாய் வார்த்தை யாகிறது –
கும்பகர்ணன் வாயில் நிர் தேவத்வம் -ஜகத் தேவர்கள் இல்லாமல் கேட்க வந்தவன் நித்ராம் -கேட்டது போல்
ஒரு காண்டீபத்துக்கு நாநா வித சஸ்திரங்கள் வேண்டுமே
மஹா ரதி ஒருவருக்கும் சொல்ல முடிய வில்லையே சூரர் என்றே சொல்லாம் –

——

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்–
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்—৷৷1.10৷৷

அபர்யாப்தம் = பெரிய, அளவில்லாத
தத = அது, அந்த
அஸ்மாகம் = நமது
ப³லம் = பலம்
பீ⁴ஷ்மாபி⁴ரக்ஷிதம் = பீஷ்மரால் ரட்சிக்கப்பட்ட , காவல் செய்யப்பட்ட
பர்யாப்தம் = குறைந்த
து = ஆனால்
இதம் = இந்த
ஏதேஷம் = அவர்களின்
பலம் = பலம்
பீ⁴மாபி⁴ரக்ஷிதம் = பீமனால் ரக்ஷிக்கப்பட்ட

ஆகையால் பீஷ்மரால் காக்கப்படும் நமது படை அவர்களை வெல்லப் போகாது –
இந்தப் பாண்டவர்களின் படையோ எனில் நம்மை வெல்லப் போதுமானது –
நம்முடைய சேனை அளவில் அடங்காத –பீஷ்மரால் -அங்கு சின்னது பீமனால் –அச்சம் தோன்ற பேசுகிறான் –
மேலே அச்சம் போக்க சங்க நாதம் பீஷ்மர் வருவதால் -பீஷ்மர் -பீமன் ப்ரதிஞ்ஜை அறிவான்-
அபரியாப்தம் -போதாது –அவர்கள் சைன்யம் போதும் என்றவாறு-
அளவில் அடங்காதது என்ற அர்த்தத்தில் இல்லை என்றவாறு

தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குரு வ்ருத்த பிதாமஹ–
ஸிம்ஹ நாதம்–1-12- -ஆனந்தம் கொடுக்க என்பதால் இங்கு துக்கம் பயம் ஸூசகம்

மாயப்போர் தேர்ப்பாகு ஐவரை வெல் வித்த -அவர்களை தோற்கடிப்பது விட
இவர்களை வெல் விப்பதே மிக்க சிரமம் அன்றோ

——–

அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா–
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த ஸர்வ ஏவ ஹி—৷৷1.11৷৷

அயநேஷு = அனைத்து முக்கியமான இடங்களிலும்
ச = மேலும்
ஸர்வேஷு = அனைத்து
யதா²பா⁴கம் = உங்களுடைய இடங்களில் இருந்து
அவஸ்தி²தா: = நிலையில்
பீ⁴ஷ்மம் = பீஷ்மரை
யேவ =மட்டும்
அபி⁴ரக்ஷந்து =காத்து நில்லுங்கள்
ப⁴வந்த: = நீங்கள்
ஸர்வ =அனைத்து
ஏவ ஹி = அதையும் செய்யுங்கள்

நீங்கள் அனைவருமே வ்யூஹத்தினில் நுழையும் எல்லா வழிகளிலும் உங்கள் பகுதிகளைக்
கை விடாமல் நிற்பவர்களாய் பீஷ்மரையே சூழ்ந்து நின்று காப்பாற்றுங்கள்-என்று துரியோதனன் கூறினான்
பீஷ்மரை ரஷித்தால் நாம் வாழலாம் -என்கிறான் –
திருவடி இருந்தால் நாம் வாழலாம் ஜடாயு கேட்டது போலே –

—————

இந்த ஸ்லோகங்களுக்கு ஸ்ரீ பாஷ்யம்
பீமனால் காக்கப்படும் பாண்டவர்களின் சேனையை துரியோதனன் பார்த்தான் –
பீஷ்மரால் காக்கப்படும் தனது சேனையையும் பார்த்தான் –
பின்னர் தனது ஆச்சார்யரான துரோணரிடம் -கௌரவர்களான நம்மை அழிக்கத் தயாராக உள்ள பீமனால் ரஷிக்கப் படும் சேனை
கௌரவர்களை அழிக்கப் போதுமானது -ஆனால் பாண்டவர்களை வெற்றி கொள்ள நமது சேனை போதாது -என்றான் –
இதன் மூலம் அவன் மனம் வருத்தம் வெளிப்பட்டது

இதுக்கு தாத்பர்ய சந்திரிகை –
இப்படியாக துரியோதனனின் வெற்றி குறித்து அறிய வேண்டும் என்னும் ஆசையால் த்ருதராஷ்ட்ரன் சஞ்சயன் இடம்
முதல் ஸ்லோகத்தில் உள்ளபடிக் கேட்டான் –
இதற்கு சஞ்சயன் -யத்ர யோகேஸ்வர க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர–
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம–৷৷18.78৷৷- இறுதி ஸ்லோகத்தில் பதில் உரைக்கும் பொருட்டு –
நடுவில் நடைபெற்ற அனைத்தையும் உரைக்கிறான் –

இரண்டாம் ஸ்லோகத்தில் -த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம்-என்றதன் மூலம் துரியோதனனின் மன உறுதி
குலைவதற்கான காரணம் உணர்த்தப்பட்டது –
து -பதம் அவனது தைர்யம் நழுவியதைக் காட்டும் –
ஸம்ஜ்ஞார்தம்-1-7- நன்கு அறிவதற்காகக் கூறுகிறேன் -என்றது பெயர்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு என்றவாறு –

பாஷ்யத்தில் அந்தர் விஷன்னோ அபவத் -மனதில் துக்கம் நிறைந்தவனானான் -என்று காட்டப்பட்டது
அபர்யாப்தம் ததஸ்மாகம் 1-10-தனது சேனை பலம் குறைந்ததாக துரியோதனன் எண்ணுகிறான் என்பது இல்லை
தங்கள் சேனை பதினோரு அக்ஷவ்ஹினி-அவர்கள் சேனை ஏழு அக்ஷவ்ஹினி-
நமது சேனையை நாசம் செய்ய அவர் சேனை போதாது என்று அர்த்தம் என்றும் சிலர் சொல்வர்

ஆனால் அப்படி அல்ல -அவர்களைக் கொள்ள மாட்டேன் என்று பீஷ்மர் சபதம் –
பீமனோ அனைவரையும் கொல்வேன் என்று சபதம் –
அவர்கள் சேனையை -மஹதீம் சமூம்.1—3-பெரிய சேனை என்று வர்ணித்தான் –
தீமதா—சேனாதிபதியை புத்திமான் என்றும் வர்ணித்தான் –
மேலும் -அத்ர ஷூரா மஹேஷ்வாஸா-1-4-ஸர்வ ஏவ மஹாரதா—৷৷1.6৷৷-என்றும் வர்ணித்தான் –

தனது சேனையில் மதர்தே த்யக்த ஜீவிதா–-எனக்காக உயிரையே விட்டு இருப்பவர்கள் –-என்றானே ஒழிய
வெல்வார்கள் என்று சொல்லவில்லையே

மேலும் தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குரு வ்ருத்த பிதாமஹ– ஸிம்ஹ நாதம் விநத்யோச்சை ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்—৷৷1.12৷৷
பீஷ்மர் அந்த துரியோதனனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் பொருட்டு பலமாக ஸிம்ஹ நாதம் செய்து சங்கை ஊதினார்-என்பதால்
முன்பு துக்கப்பட்டது தெளிவு –
இதுவே இந்த ஸ்லோகார்த்த ஸ்வாரஸ்யம்
மஹா பாரதத்தில் -அகாராதீ நி நாமாநி அர்ஜுனத் ரஸ்த சேதச –என்று அ தொடங்கும் பெயர்களால் அச்சம் என்றானே –

————-

தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குரு வ்ருத்த பிதாமஹ–
ஸிம்ஹ நாதம் விநத்யோச்சை ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்—৷৷1.12৷৷

தஸ்ய = அவன்
ஸஞ்ஜநயந் = நிகழும்
ஹர்ஷம் = மகிழ்ச்சி
குருவ்ருத்³த⁴: = வயதான குரு வம்சத்தவன்
பிதாமஹ:| = தாத்தா
ஸிம்ஹநாத³ம் = சிம்ஹ நாதம் = சிம்ம நாதம்
விநத்ய = சப்தம் உண்டாக்கி
உச்சை: = மிக சப்தமாக
ஸ²ங்க²ம் = சங்கு
த³த்⁴மௌ = முழங்கினான்
ப்ரதாபவாந் = பெருமை மிக்கவன்

பெரு வீரம் உள்ளவரும் குரு வம்சவத்தர்களில் சிறந்தவரும் பாட்டனாருமான பீஷ்மர் அந்த துரியோதனனுக்கு
மகிழ்ச்சியை உண்டாக்கும் பொருட்டு பலமாக ஸிம்ஹ நாதம் செய்து சங்கை ஊதினார்

——-

தத ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோமுகா–
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஸப்தஸ்துமுலோபவத்—৷৷1.13৷৷

தத: =அதன் பின்
ஸ²ங்கா²ஸ்² = சங்குகள்
ச = மேலும்
பே⁴ர்யஸ்² = பேரிகைகள்
ச= மேலும்
பணவாநக = முரசுகள்
அவொ ³முகா²:| = துந்துபிகள்
ஸஹஸ = திடீரென்று
எவ = அதுவும்
அப்⁴யஹந்யந்த = பிளிறின
ஸ = மேலும்
ஸ²ப்³த = சப்தம்
துமுலோ = திமிலோகப் பட்டது
ப⁴வத் = அங்கு, அப்போது

பிறகு சங்கங்கள் பேரிகைகள் பணவங்கள் ஆநகங்கள் கோ முகங்கள் முதலிய பல வாத்தியங்களும்
உடனேயே முழங்கப்பட்டன -அந்த ஒலியானது ஆகாசம் வரை மிகப் பெரியதாக ஆயிற்று

—————-

தத ஸ்வேதைர்ஹயைர் யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ—
மாதவம் பாண்டவஸ்சைவ திவ்யௌ ஸங்கௌ ப்ரதத்மது—-৷৷1.14৷৷

தத: = பின்
ஸ்²வேதை ஹயைர் யுக்தே = வெள்ளை குதிரைகள் பூட்டிய
மஹதி ஸ்யந்த³நே = பெரிய தேரில்
ஸ்தி²தௌ| = நின்ற
மாத⁴வ: = மாதவனும்
பாண்ட³வ = பாண்டவனான அர்ஜுனனும்
தி³வ்யௌ ஸ²ங்கௌ²=திவ்யமான சங்குகளை
ப்ரத³த்⁴மது: = ஊதினார்கள்

பின்பு திருமகள் மணவாளான ஸ்ரீ கண்ணனும் பாண்டுவின் புதல்வனான அர்ஜுனனும்
வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் இருப்பவர்களாய் திவ்யமான தங்கள் சங்குகளை ஊதினார்கள்
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்க்காய் -அன்று பாரதப் போர் முடியப் -பரி நெடும் தேர் விடும் கோன் –இராமா -51-

———–

பாஞ்சஜந்யம் ஹரிஷீகேஷோ தேவதத்தம் தனஞ்சய —
பௌண்ட்ரம் தத்மௌ மஹா ஸங்கம் பீமகர்மா வ்ருகோதர—৷৷1.15৷৷

பாஞ்சஜந்யம் = பாஞ்சஜன்யம்
ஹ்ருஷீகேஸோ² = ரிஷிகேசன் என்ற கண்ணன்
தே³வத³த்தம் த⁴நஞ்ஜய:| = அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை
பௌண்ட்³ரம் = பவுண்டரம்
த³த்⁴மௌ = என்ற
மஹாஸ²ங்க²ம் = பெரிய சங்கை
பீ⁴மகர்மா = பெரிய செயல்களை செய்யக் கூடிய பீமன்
வ்ருகோத³ர: = ஓநாய் போன்ற பெரிய வயிறு உடைய

ஹ்ருஷீகேசனான ஸ்ரீ கண்ணன் பாஞ்ச ஜன்யம் என்னும் பெரும் சங்கை ஊதினான்
தனஞ்சய-அர்ஜுனன் தேவதத்தன் என்னும் சங்கை ஊதினான்
பயங்கரமான செயல்களை யுடைய வ்ருகோதர-பீமன் பௌண்ட்ரம் என்னும் பெரும் சங்கை ஊதினான்

ஸிம்ஹ நாதம் விநத்ய –ஓதந பாகம் பசதி–கடல் ஓசை எழுந்தது போலே ஸிம்ஹ நாதம் செய்தார்
பீஷ்மரின் ஸிம்ஹ கர்ஜனை சங்கின் ஒலிகளுடன் கலந்து என்றவாறு
ஸர்வேச்வரேச்வர பார்த்த சாரதி -அன்பின் காரணமாக தன்னை தாழ விட்டுக் கொண்டான் என்றபடி
மாதவ -பத பிரயோகம்–இப்படி பரத்வ ஸுலப்யங்களுக்கு நிதானம் பிராட்டியோட்டை சம்பந்தமே
பாண்டவர்கள் வெல்வார் என்று சஞ்சயன் திரு உள்ளத்தைக் காட்டும்
ஸ்யந்தநே ஸ்திதௌ—1-14-தேரில் அமர்ந்தபடி பொதுவாக இருந்தாலும் தேர் ஓட்டுபவனும் யஜமானனும் அமர்ந்து இருந்தமையைச் சொல்லும் –
திவ்யௌ ஸங்கௌ–ஸ்வேதைர்ஹயைர்-1-14-வெண்மை -மூ உலகங்களையும் வெல்வதற்கு ஏற்ப என்றவாறு
திவ்ய -சங்குகளின் மேன்மையைச் சொன்னவாறு –

——

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர—
நகுல ஸஹதேவஸ்ச ஸுகோஷமணி புஷ்பகௌ—৷৷1.16৷৷

அநந்தவிஜயம் = அநந்த விஜயம் என்ற சங்கை
ராஜா = இராஜா
குந்தீபுத்ரோ = குந்தியின் மகனான
யுதி⁴ஷ்டி²ர = யுதிஷ்டிரன்
நகுல: ஸஹதே³வஸ்²ச =நகுல சகாதேவர்கள்
ஸுகோ⁴ஷமணி புஷ்பகௌ = சுகோஷம் மற்றும் மணி புஷ்பம் என்ற சங்குகளை ஊதினார்கள்

குந்தியின் பிள்ளையும் அரசனுமான தர்ம புத்ரன் அனந்த விஜயம் எனும் சங்கையும்
நகுலனும் சகதேவனும் முறையே ஸூ கோஷம் மணி புஷ்பகம் எனும் சங்கை ஊதினார்கள்

———-

காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ ஷிகண்டீ ச மஹாரத–
த்ருஷ்டத்யும்நோ விராடஸ்ச ஸாத்யகிஸ் சாபராஜித—৷৷1.17৷৷

சிறந்த வில்லாளியான காசி ராஜனும் மஹா ரதனான சிகண்டியும்
த்ருஷ்டத்யும்னனும் விராடனனும் போரில் தோல்வி அடையாத சாத்யகியும்

த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வதஸ் ப்ருதிவீபதே.—
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு ஸங்காந்தத்மு ப்ருதக் ப்ருதக்—৷৷1.18৷৷

துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும் நீண்ட கையை யுடைய அபிமன்யுவும்
எல்லாப் பக்கங்களிலும் தனித்தனியாக தம் தம் சங்குகளை ஊதினார்கள்

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்.–
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்—৷৷1.19৷৷

ஆகாசம் பூமி முழுவதும் எதிரொலிக்கச் செய்ததான ஓன்று சேர்ந்த அந்த சங்கு நாதம்
திருதராஷ்டரனின் புதல்வர்களுடைய ஹ்ருதயங்களைப் பிளந்தது
மனசை உளுக்கும் படி -சஞ்சயன் முதல் பதில் -மறைத்து -மேலே மீண்டும் சொல்லுவான் –

ப்ருதக் ப்ருதக்—৷৷1.18৷৷–தனித்தனியே சங்க நாதம் -ஒவ் ஒன்றே இவர்கள் நெஞ்சை உலுக்கப் போதுமானதாய் இருக்க –
வ்யதாரயத்.–நெஞ்சை நன்றாகப் பிளப்பதைச் சொல்லிற்று
ஸர்வேஷாம் ஏவ பவத் புத்ராணாம் –உறுதியான மனம் கொண்டவன் யாருமே இல்லை என்றது –
தனது புத்திரர்கள் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனுக்கு ஏவம் -இப்படியாக சஞ்சயன் சொன்னார் என்கிறது

அத வ்யவஸ்திதாந் த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ–
ப்ரவ்ருத்தே ஸஸ்த்ர ஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ—৷৷1.20৷৷
கபி- திருவடி கொடி –

அர்ஜுந உவாச–
ஹரிஷீகேஷம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே—
ஸேநயோருபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத—৷৷1.21৷৷

திருதராஷ்டரனே -பிறகு ஹனுமக் கொடியோனான அர்ஜுனன் போர் தொடங்கிய அளவில்
முன் அணியில் நிற்கும் திருதராஷ்ட்ர புத்திரர்களை நோக்கி வில்லை எடுத்துக் கொண்டு
அப்போது ஹ்ருஷீகேசனான ஸ்ரீ கண்ணனை நோக்கி பின் வரும் வார்த்தையைச் சொன்னான்
அச்சுதனே இரண்டு சேனைகளும் நடுவில் என்னுடைய தேரை நிறுத்துவாயாக
ராஜாவே -அடியார் -தோள் கண்டார் தோளே காணும் படி -பும்ஸாம் சித்த திருஷ்ட்டி அபகாரம் –
இரண்டாவது பதில் இதில் –
கண்ணன் இவன் சொல்வதை செய்கிறான் -யார் ஜெயிப்பார் சொல்லவும் வேண்டுமோ

யாவதேதாந் நிரீக்ஷேஹம் யோத்து காமாநவஸ்திதாந்.—
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந் ரணஸமுத்யமே—-৷৷1.22৷৷

இந்தப் போர் முயற்சியில் என்னால் எவர் ஒருவருடன் போர் புரிய நேருமோ யுத்தம் செய்யும் ஆசையுடன்
அணி வகுத்து நிற்கும் இந்த எதிரிப்படை வீரர்களை நான் எது வரையில் காண்கிறேனோ —
அது வரை தேரை நிறுத்துவாயாக

யோத்ஸ்யமாநா நவேக்ஷேஹம் ய ஏதேத்ர ஸமாகதா–
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ —৷৷1.23৷৷

தீய அறிவை யுடைய துரியோதனனுக்குப் போரிலே இனியதைச் செய்ய விரும்பியவர்களாய் எவர்கள் இப்போர் களத்தில்
வந்து கூடி இருக்கிறார்களோ போர் புரிய போகின்ற அவர்களை நான் காண்பேன் -என்று அர்ஜுனன் கூறினான்
துர் புத்தி உள்ளவர்கள் -தர்ம க்ஷேத்ரம் இங்கு அன்றோ நிற்கிறார்கள்

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்தோ ஹரிஷீகேஷோ குடாகேஷேந பாரத.—
ஸேநயோருபயோர் மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் —৷৷1.24৷৷

பீஷ்மத்ரோண ப்ரமுகத ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்.—
உவாச பார்த பஸ்யைதாந் ஸமவேதாந் குரூநிதி—৷৷1.25৷৷

சஞ்சயன் கூறினான்
பாரத குலத்தில் உதித்த திருதராஷ்ட்ரனனே –ஹ்ருஷீகேசனான ஸ்ரீ கண்ணன் தூக்கத்தை வென்ற
அர்ஜுனனால் இவ்வாறு கூறப்பட்டவனாய்
இரண்டு சேனைகளுக்கும் நடுவில் பீஷ்ம த்ரோணர்களுக்கும் எல்லா அரசர்களுக்கும் முன்னிலையில் சிறந்த தேரை நிறுத்தி
குடாகேசன்-அர்ஜுனா இங்குக் குழுமி உள்ள குரு வம்சத்து உதித்தவர்களைப் பார் என்று கூறினான் –
ஆஸ்ரித வாத்சல்ய விவஸ்திதம் -தேரோட்டியாக அமைத்து -கூடாரை வெல்லும் சீர் –
கூடுவாருக்கு தோற்பான் -கட்டுண்ணப் பண்ணும் பெரு மாயன்
பீஷ்மர் த்ரோணாராதி முன்னால் வேன்டும் என்னும் என்று நிறுத்துகிறான் —

தனக்குச் சாரதியாக அமர்ந்துள்ள ஹ்ருஷீகேசனை நோக்கினான் -சரணாகத வாத்சல்யன் –
ஸ்வாபாவிக ஞானம் பலம் சக்தி தேஜஸ் ஐஸ்வர்யம் வீரம் இவற்றின் இருப்பிடம்
சங்கல்ப லவலேசத்தாலே அனைத்தையும் செய்ய வல்லவன் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் லீலையாக செய்பவன்
இந்த்ரியங்களுக்கி நாதன் -உள்ளும் புறமும் வியாபித்து நியமித்து தங்கி சேஷியாக இருப்பவன்
க்ரீடயா ஹ்ருஷ்யதி வ்யக்தமீச சந் ஸ்ருஷ்ட ரூபயா ஹ்ருஷீகேசத்வமீசத்வம் தேவத்வம் சாஸ்ய தத் ஸ்புடம் அவிகாரி தயா
ஜூஷ்டோ ஹ்ருஷிகோ வீர்ய ரூபயா ஈஸஸ் ஸ்வா தந்தர்ய யோகேந நித்யம் ஸ்ருஷ்ட்யாதி கர்மணி ஐஸ்வர்ய வீர்ய ரூபத்வம்
ஹ்ருஷீ கேஸத்வம் உச்யதே –அஹிர்புத்ன்ய சம்ஹிதை -53-44-/46-
அச்யுத-பத பிரயோகம் சரண் அடைந்தவர்களை நழுவ விடாதவன்
அப்படிப்பட்ட சர்வேஸ்வரன் அன்றோ அர்ஜுனன் உத்தரவு இடும்படி தன்னை தாழ்த்திக் கொண்டான்
அனைவரையும் நியமிக்க வல்ல சர்வேஸ்வரன் தன்னை நியாமகனாக ஏறிட்டுக் கொண்டானே
ஸ்வ சாரத்தியே அவஸ்திதம் -அனைவரது இந்திரியங்களை வசப்படுத்தி உள்ளவனுக்கு குதிரைகளை அடக்குவது பெரிய செயலோ
பீஷ்மர் துரோணர் மற்றவர் பார்த்துக் கொண்டு இருக்க அவர்களைக் கண்டு கொள்ளாமல் இவன் விருப்பத்துக்கு ஏற்ப
நீ வெல்லப்பட வேண்டியவர்களைப் பார் என்று கண்ணன் மறைமுகமாக அர்ஜுனன் இடம் கூறினான் –
வ்யவஸ்திதாந்-1-20-என்பதை விசேஷித்து யுயுத்ஸூந் -யுத்தம் செய்ய -என்றே கொள்ள வேண்டும்
இதையே யோத்து காமாநவஸ்திதாந்.-1-22-என்று விளக்குகிறார்
கபித்வஜ–1-20-லங்கா தஹன வானர த்வஜ -ராவண அரக்கர்கள் போலே நடுங்குவார்கள் என்பதைக் காட்டும்
பஸ்யைதாந் ஸமவேதாந் -1-25-வெற்றியின் இருப்பு இவ்விதம் -என்றவாறு

தத்ரா பஸ்யத் ஸ்திதாந் பார்த்த பித்ரூநத பிதாமஹாந்.–
ஆசார்யாந் மாதுலாந் ப்ராத்ரூந் புத்ராந் பௌத்ராந் ஸகீஂ ஸ்ததா—৷৷1.26৷৷

ஸ்வ ஸூராந் ஸுஹ்ருதஸ்சைவ ஸேநயோருபயோரபி.–

பிறகு அங்கு அர்ஜுனன் இரண்டு சேனையிலும் இருக்கும் பெரிய சிறிய தந்தையர் பீஷ்மர் முதலிய
பாட்டன்மார் துரோணர் முதலிய ஆச்சார்யர்கள் மாமன்மார் அண்ணன் தம்பிகள் பிள்ளைகள் பேரன்கள்
நண்பர்கள் மாமனார் நன்மை செய்தவர்கள் ஆகியோரைப் பார்த்தான்

தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய–ஸர்வாந் பந்தூந வஸ்திதாந்–৷
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நித மப்ரவீத்.৷1.27৷৷

குந்தியின் மகனான அந்த அர்ஜுனன் போர் முனையில் நிற்கும் உறவினர்கள் அனைவரையும் நன்கு பார்த்து
மிகக் கருணையினால் நிறைந்தவனாய்த் துன்புற்று பின்வரும் வார்த்தைகளை ஸ்ரீ கண்ணன் இடம் கூறினான்

அர்ஜுந உவாச-
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் கிருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்—৷৷1.28৷৷

ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஸூஷ்யதி.–
வேபதுஸ்ச ஸரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே—৷৷1.29৷৷

அர்ஜுனன் கூறினான்
கண்ணா போர் புரிய விரும்பியவராய் முன்னே நிற்கும் இந்த உறவினரைப் பார்த்து
என்னுடைய கை கால் முதலிய அவயவங்கள் மெலிகின்றன-முகம் வாடுகிறது -என் உடலில் நடுக்கம் ஏற்படுகிறது –
மயிர்க் கூச்சம் உண்டாகிறது -கருணையால் பீடிக்கப் பட்டு கண்ண நீர் –
பூமிக்கு ஆனந்தம் செல்வம் கொடுப்பவன் கிருஷ்ண -சப்த பிரயோகம் இங்கு-

காண்டீவம் ஸ்ரம் ஸதே ஹஸ்தாத் த்வக்சைவ பரிதஹ்யதே—
ந ச ஷக்நோம்ய வஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந—৷৷1.30৷৷

என் கையில் இருந்து காண்டீபம் எனும் என் வில் நழுவுகிறது -என் தோல் முழுவதும் எரிகிறது –
நிலையாக நிற்பதற்கும் வல்லமை அற்றவனாக இருக்கிறேன் -என் மனமும் சுழல்வது போல் உள்ளது –

நிமித்தாநி ச பஸ்யாமி விபரீதாநி கேஸவ.—
ந ச ஸ்ரேயோ அநுபஷ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே —৷৷1.31৷৷

கேசவனே தீமையைக் குறிக்கும் கெட்ட சகுனங்களையும் நான் பார்க்கிறேன் –
போரில் உறவினரைக் கொன்று நற்பயனை நான் காண்கின்றிலேன்
துர் நிமித்தங்கள்- கேசவ சப்தம் இங்கு -ப்ரஹ்மாதிகளுக்கும் நியாந்தா —

ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் –
போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்
கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ

யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸுகாநி ச–
த இமேவஸ்திதா யுத்தே ப்ராணாம் ஸ்த்யக்த்வா தநாநி ச—৷৷1.33৷৷

எவர்கள் பொருட்டு எங்களுக்கு அரசும் போகங்களும் சுகங்களும் விரும்பப் படுகின்றனவோ
அவர்கள் இப்போரில் உயிர்களையும் செல்வங்களையும் விடுவதற்குத் தயாராக நிற்கிறார்கள்
கைங்கர்யம் பண்ண வேண்டியவர்கள் அங்கே இருக்க –

ஆசார்யாஸ் பிதரஸ் புத்ராஸ் ததைவ ச பிதாமஹா–
மாதுலாஸ் ஸ்வ ஸூராஸ் பௌத்ராஸ் ஸ்யாலா ஸம்பந்தி நஸ்ததா—৷৷1.34৷৷

ஆச்சார்யர்கள் தந்தையர் பிள்ளைகள் பாட்டன்மார்கள் மாமன்மார்கள் மாமனார்கள் பேரர்கள்
மைத்துனர்கள் சம்பந்திகள் அனைவரும் இங்கு எதிரில் நிற்கின்றனர்

ஏதாந் ந ஹந்துமிச்சாமி க்நதோபி மதுஸூதந.–
அபி த்ரைலோக்ய ராஜ்யஸ்ய ஹேதோஸ் கிம் நு மஹீக்ருதே–৷৷1.35৷৷

மது ஸூதனனே எம்மைக் கொல்லுகிறவர்களாயினும் மூ உலக அரசுக்காகவும் இவர்களை நான் கொல்ல விரும்பவில்லை
பூ வுலகுக்காக இவர்களைக் கொல்ல விரும்பவில்லை என்பதைச் சொல்லவும்வேண்டுமோ
கொல்வதற்கு ஆசை இல்லை -இவர்கள் கொல்ல வந்தாலும் –
மது சூதன சப்தம் இங்கு -மூன்று உலகும் கொடுத்தாலும் வேண்டாம் –

நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந கா ப்ரீதி ஸ்யாஜ்ஜநார்தந–
பாபமே வாஸ்ரயே தஸ்மாந் ஹத்வை தாநாததாயிந—৷৷1.36৷৷

ஜனார்த்தனனே திருதராஷ்டர புத்திரர்களைக் கொன்று நமக்கு என்ன மகிழ்ச்சி உண்டாகப் போகின்றது
இந்தப் படு பாவிகளைக் கொன்றால் நம்மைப் பாவம் தான் வந்தடையும்
ஜனார்த்தன -நல்லதே செய்பவன் அன்றோ –

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் -தார்தராஷ்ட்ராந் ஸ்வ பாந்தவாந்.–
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந ஸ்யாம மாதவ—৷৷1.37৷৷

மாதவா ஆகவே நாங்கள் நம் உறவினரான திருதராஷ்ட்ர புத்திரர்களைக் கொல்ல வல்லவர்கள் அல்லோம்
உறவினரைக் கொன்று எப்படி சுகமுடையவர்களாக ஆவோம்
மாதவ -ஸ்ரீ யபதியாய் இருந்து வைத்து -அமங்களம் செய்யத் தூண்டுவதோ –

யத்யப்யேதே ந பஸ்யந்தி லோபோ பஹத சேதஸ–
குலக்ஷய க்ருதம் தோஷம் மித்ர த்ரோஹே ச பாதகம்—-৷৷1.38৷৷

கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி பாபாதஸ்மாந் நிவர்திதும்–
குலக்ஷயகரிதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர் ஜநார்தந—৷৷1.39৷৷

ஜனார்த்தனனே ராஜ்யத்தில் பேராசையினால் மதி இழந்த இந்த துரியோதனாதியார் குலத்தின் அழிவினால்
உண்டாகும் பாவத்தையும் நண்பர்களுக்குத் தீங்கு இழைப்பதினால் உண்டாகும் பாவத்தையும் காணவில்லையானாலும்
குலத்தின் அழிவினால் உண்டாகும் தீங்கை நன்கு காண்கின்றவர்களான எங்களால்
இப்பாவங்களில் நின்றும் மீள்வதற்கு எப்படி அறியாமல் இருக்க முடியும் –
குலம் அழியும் -தோஷம் கிட்டும் -மித்ர துரோகம் -அவர்கள் பார்க்க வில்லை -லோபம் பேராசையால் –
குல நாசம் நாங்கள் செய்ய மாட்டோம் -பாபம் போக்கத் தானே கார்யம் செய்ய வேன்டும்-

குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா ஸநாதநா–
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நம தர்மோபிபவத்யுத—৷৷1.40৷৷

குல நாசத்தினால் பழைமையான குல தர்மங்கள் சனாதன தர்மம் மாண்டு போகும்
தர்மம் அழிந்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்ந்து குலத்தை வெல்கிறது

அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய–
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண ஸங்கர—৷৷1.41৷৷

வ்ருஷ்ணீ குலத்தில் உதித்த கண்ணனே -அதர்மம் சூழ்ந்து கொள்வதால் குலப் பெண்கள் மிகவும் கெடுகின்றனர்
குலப் பெண்கள் கெட்டுப் போன அளவில் நான்கு வர்ணக் கலப்பு உண்டாகும்
ஸ்த்ரீகள் -கெட்டால் -வர்ணாஸ்ரமம் தர்மம் போகும் –

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச.–
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்த பிண்டோதகக்ரியா—৷৷1.42৷৷

வர்ணக் கலப்பு குலத்தை அழித்தவர்களுக்கும் குலத்திற்கும் நரக வாசம் ஏற்படவே காரணம் ஆகிறது
இவர்களுடைய பித்ருக்களும் பிண்டக் கிரியை உதக கிரியை –சிரார்த்தம் -தர்ப்பணம் -ஆகியவற்றை
இழந்து கீழ் உலகில் வீழ்கின்றனர்
நரகம் நிச்சயம் -பித்ருக்கள் -பிண்ட பிரதானம் செய்ய முடியாமல் தலை குப்புற விழும் படி ஆகும்

தோஷைரேதை குலக்நாநாம் வர்ண ஸங்கரகாரகை-
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா குலதர்மாஸ்ச ஸாஸ்வதா—৷৷1.43৷৷

குல நாசம் செய்தவர்களின் இந்த வர்ணக் கலப்பு ஏற்படுகின்ற குற்றங்களினால்
நிலையானவைகளான ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும்-சனாதன தர்மங்களும் அழிகின்றன

உத்ஸந்ந குல தர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந-
நரகேநியதம் வாஸோ பவதீத் யநுஸூஸ்ரும—৷৷1.44৷৷

ஜனார்த்தனனே குல தர்மம் அடியோடு அழியப் பெற்ற மனிதர்களுக்கு நரகங்களில்
எப்போதும் வாசம் ஏற்படுகிறது என்று கேள்விப் படுகின்றோம் -நரக வாஸம் நிச்சயம் –

அஹோ பத மஹத் பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்–
யத் ராஜ்ய ஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜந முத்யதா—৷৷1.45৷৷

அந்தோ பாவம் நாம் பெரும் பாவம் செய்ய முனைந்து விட்டோம் -ஏன் என்னில்
ராஜ்ய சுகத்துக்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களையே கொல்லத் துணிந்து விட்டோம் –
அநியாயம் -பெரிய பாபம் செய்ய அன்றோ -ராஜ்யம் சுகம் பேராசையால் வந்தோம் –

யதி மாம ப்ரதீகாரம ஸஸ்த்ரம் ஸஸ்த்ர பாணய–
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ் தந்மே க்ஷேமதரம் பவேத்–৷৷1.46৷৷

போரில் பழி வாங்காதவனாய் ஆயுதம் அற்றவனான என்னை ஆயுதத்தைக் கையில் ஏந்திய
திருத்ராத்ட்ரா புத்திரர்கள் கொல்வார்கள் ஆகில் அதுவே எனக்கு மிகவும் நன்மையாகும்
என்று அர்ஜுனன் கூறினான்
நான் சண்டை போடாமல் -ஓடினாலும் -என்னை கொன்றாலும் நல்லதே

ஸஞ்ஜய உவாச–
ஏவமுக்த்வார்ஜுந ஸம்க்யே ரதோபஸ்த உபாவிஸத்–
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஷோக ஸம் விக்ந மாநஸ—৷৷1.47৷৷

சஞ்சயன் கூறினான்
இவ்வாறு கூறி அம்புடன் கூடிய வில்லைக் கை விட்டு துன்பத்தால் துவளும் மனமுடையவனாய்
போரில் தேரின் மேல் அர்ஜுனன் அமர்ந்து விட்டான் -என்று சஞ்சயன் கூறினான்
ரதம் நடுவில் அமர்ந்து அழ -வில் கீழே விழ -சோகம் பீடித்து -நீர் தளும்ப -சோகம் பட்டு நிற்கிறான் –

மிகவும் பரந்த மனம் உடையவன் -கருணை உடையவன் -உறவினர்களை விரும்புபவன் -தர்மத்தின் வழியில் நிற்பவன் அர்ஜுனன்
இவர்களோ என்னில் அரக்கு மாளிகையில் தீ வைத்து மேலும் பல முறை பல வஞ்சனை செயல்களைச் செய்தவர்கள் –
இருந்தாலும் அவர்கள் மேல் இரக்கமும் கருணையும் அன்பும் கொண்டான் -தர்மத்துக்குப் பயந்தான் –
நான் போர் புரிய மாட்டேன் என்று வில்லைக் கை விட்டான் -கலங்கிய மனத்துடன் தேரில் அமர்ந்தான் –

ந காங்க்ஷே விஜயம்-1-32-வெற்றிகளை துச்சமாக எண்ணுபவன் –
மஹா மந –பெரிய மனம் படைத்தவன் –
க்ருபயா பரயாவிஷ்டோ-1-28-கருணையால் பீடிக்கப்பட்டவன்
அக்னி தோ கரதச்சைவ சஸ்த்ர பாணிர்தநாபஹ -க்ஷேத்ர தார ஹரச்சைவ -ஷடதே ஆத தாயிந -என்று
தீ வைத்தவன் -விஷம் வைப்பவன் -ஆயுதம் தங்கி அழிக்க வருபவன் -செல்வத்தை அபகரித்தவன் -நிலத்தை அபகரித்தவன் –
மற்றவன் மனைவியை அபகரித்தவன் -ஆறு பேர்களும் ஆத தாயிகள்
ஆத தாயி நமாயாந்தம் ஹந்யா தேவா விசாரயன் -நாத தாயிவதே தோஷ ஹந்துர் பவதி கம்சனை –மனு ஸ்ம்ருதி -8-351-
தன்னை அழிக்க வரும் ஆததாயியை எந்த யோசனை இன்றி அழிக்க வேண்டும் -எந்தப்பாவமும் உண்டாகாது
பரம புருஷ சஹாயா -துணையாகக் கொண்ட என்றும் ஸ்ரீ கீதா யோக சாஸ்திரம் வெளியிட வியாஜ்யமாக என்றுமாம்
வில்லையும் அம்பையும் கீழே போட்டு தேர் எஜமானன் அமர வேண்டிய இடத்தை விட்டு கீழ்த் தட்டில் அமர்ந்தான்

———————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading