ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13-
சர்வகஸ் சர்வ வித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14
லோகாத்யஷஸ் ஸூராத்யஷோ தர்மாத்யஷ க்ருதாக்ருத
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்ப்புஜ–15
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-
மஹாதபா-சாஹிஷ்ணுர்–வ்யூஹ பரம்
ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ–விபவ பரம்
———————————————————-
இங்கு தொடர்ந்து பரத்வம் விபவம் வியூஹம் ஆகியவை விரித்துக் கூறப் பட்டுள்ளது -இதுவரை பெரும்பாலும் பரத்வம் கூறப்பட்டது
கிமேகம் தைவதம் லோகே-எது உயர்ந்த ஒரே தெய்வம் -என்றும் கிம் வாபி ஏகம் பாராயணம் –எது அடையப்பட வேண்டிய ஒரே உயர்ந்த இலக்கு -என்றும் கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கும் அவற்றின் பதில்களும் பெரும்பாலும் இதில் முடிகின்றன
இனி ஸ்துவந்த கம் –யாரை ஆராதிப்பது -எனபது முதலாக உபாய விஷயமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விஷயமாக வ்யூஹம் சொல்லப் படுகிறது –
அதில் வாஸூதேவன் என்ற திரு நாமம் பரத்வத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது –
அடுத்து வரும் மஹா தப என்பதன் மூலம் ஸங்கர்ஷணன் பற்றிக் கூறப்படுகிறது
இப்பொழுது சங்கர்ஷணன் விஷயம் சொல்லப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந –சாந்தி பர்வம்-பீஷ்மர் யுதிஷ்டரன் இடம் கூறுவது
பரமாத்மாவின் ஸ்ரீ வைகுண்டத்தை ஒப்பிடும் போது ஸ்வர்க்காதிகளும் தாழ்வான நரகம் போன்றவையே யாகும்
பர வ்யூஹ விபவ ஆத்மநா த்ரிவிதம்
பரம் ப்ரஹ் மேதி பாகவத ஸித்தாந்த –
தத்ர பரம் நாம -அகார்யம் -கார்ய அநவச்சிந்ந -பூர்ண ஷாங்குண்ய மஹா ஆர்ணவ -உத்கலிக ஏகாதபத்ரீ (ஒரு வெண் கொற்றக்கொடையின் கீழ் )-க்ருத
நிஸ் ஸீம -நித்ய போக விபூதிகம் முக்த உபஸ் ருப்யம் அநவ்பாதிகம் அவஸ்தா நாம்
வ்யூஹஸ் ச
முமுஷு ஸிஸ்ருஷயா (முமுஷுவாக்க )ப்ரதேய ஸ்ருஷ்டி ஸ்திதி லய
ஸாஸ்த்ர -ததர்த்த -தத் பலாநி
த்யாந -ஆராதநே- லீலா சேதீத் ருஸ
கார்ய உப யுக்த விபக்த பர குண ரூப -வ்யாபார ஸீகர- வ்யூஹ நிர்வாஹித லீலா விபூதிகம்
முக்தி ஸாதகம் சதுர்தா அவஸ்தா நாம்
பர ப்ரஹ்மமானது
பரம் வ்யூஹம் விபவம் என்று மூன்று நிலைகளாகத் தன்னையே பிரித்துக் கொண்டு
உலகோரை அனுக்ரஹிப்பது என்பதே பாஞ்சராத்ர ஸித்தாந்தம்
அதில் பரமாவது
காரியங்களில் தான் சேராமலும்
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும் ஆறு குணங்களும்
அந்த அந்தக் கார்யங்களுக்குத் தக்கபடி குறுகாமல் நிரம்பிக்
கருங்கடல் போல் அலை மோதி இருக்கும் படி பிரகாசிக்கும் இடமாகிய
அளவற்ற
பரமபதம் -நித்ய விபூதி -என்னும் ஸ்ரீ வைகுண்டத்தை ஆளுவதும்
முக்தி பெற்றவர்கள் சேரத் தக்கதும்
மற்ற உபாதிகளாயுள்ள ப்ரக்ருதி சம்பந்தங்கள் அணுகக் கூடாதுதமான முதல் நிலை
வ்யூஹமாவது
மோக்ஷத்தை விரும்புபவர்களை யுண்டாக்குவதற்கும்
அதற்கு உரிய ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்வதற்கும்
மோக்ஷத்துக்கு வேண்டிய ஸாஸ்த்ரங்களையும்
அவற்றின் பொருள்களையும்
அவற்றினால் உண்டாகும் பலன்களையும்
த்யானிப்பதற்கும்
ஆராதிப்பதற்கும் உரிய க்ரமங்களையும்
தனக்கு ஒரு விநோதத்தையும் உண்டுபண்ணும் படியாக
மேற் சொன்ன பர ரூபத்தில் உள்ள வியாபாரங்களில் சிந்தின துளிகளை பிரித்து எடுத்துக் கொண்டு
அவற்றினால் லீலா விபூதி எனப்படும் இவ்வுலகத்தை நடத்தியும்
முக்திக்கு ஸாதனத்தை அளித்தும்
வாஸூ தேவ -ஸங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்த -என்கிற
நான்கு உருவங்களாகப் பகுத்துக் கொண்டு இருக்கும் நிலை
விபவஸ் ச
தச்சாய ஸூர நர திர்யக்காதி
ஸ்வ விபவ ஸஜாதீய ஐச்ச ப்ராதுர் பாவ வர்க
விபவமாவது-விசேஷண பவதி -விபவம்
மேற் கூறிய வ்யூஹங்களின் குணங்களில் ஏக தேசங்களுடன்
தேவ
மனுஷ்ய
விலங்கு
ஸ்தாவர
முதலிய ஜாதிகளிலும்
தனது இச்சையாலே அவ்வற்றைப் போன்ற தேகம் எடுத்து அவதரித்து-என்நின்ற யோனியுமாய் பிறந்தாய்
ததா ச ஸ்ரீ ஸாத்வதே
ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
நாநா ஆக்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் (இஹ லோக பர லோக ஐஸ்வர்யம் அளிக்கும் )- சாத்துவத சம்ஹிதை
ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே
தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
மத்ஸ்ய கூர்மாதயா
அந்யே து ருஷ்யாதி விஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந –யதா
பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா
அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
யதா அர்ச்சாவதார
இதி சதுர்த்தா
நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் -தத் அபேத உபதேசாத்
ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்(நம் போல்வாரும் புல்லும் கூட விட்டுப்பிரியாமலே இருக்குமே )
அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது
புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்
நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநாஸூ அபரி கண நாத்
தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச(இவர்களும் படைக்கப்பட்டவர்களாகவே எண்ணப்படுகிறார்கள் )
ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்(ஒரு லேச பிரபாவம் பெற்றவர்கள் )
ப்ராதுர் பாவ விசேஷ அதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே
அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்(அவதாரங்களில் இருந்து வேறுபட்டு உடைமையாக )
தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்
ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்
இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்
இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் (ஆறாவது வேற்றுமை -அவனுடைய சேஷன் )தத் அம்ச பூதஸ் ஸந
விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
அம்ச ஸப்தஸ் ச ஏதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத
அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்
ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதி இதரஸ்ய
யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
தேவஸ்ய அனலசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
யுகங்களின் முடிவில்
சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்
அத்ர அந்தர ஸப்தோ பேத வசந
இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்(இனிப்பில் வேறுபாடு )
ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்
ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்
அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச
புநரபி தாத்ருஸ லக்ஷணம்
ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருத
யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம்
ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
அப்யயை பிரபவாக்யைஸ் து கௌண முக்யை ஸூரேஸ்வரை
இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே
ததா முமுஷுபிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் –ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நிஷேதஸ் ச
ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது
யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
ஜ்ஞாத் வைவம் பக்தி ஸாங்கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-
கோக்குல மன்னரை –போற்றும் புனிதன் ராமானுஜன்
ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போகோப கரண தயா
பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்
இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீநம் அவ திஷ்டதே
வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
காலோபி யந் நியந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக
முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
ஜீமுதாச்சா அகிலா நாகா து அப்சரோ கண உத்தம
ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
சந்த்ர அர்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச
அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி ஸாம்ய பண்டித ந்யாய பண்டிதம் அந்யாயாம்
ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே
———–
இது வரை –கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –
வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-
சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-128———2 திரு நாமங்கள்
முதல் 6-ஞானம் பலம் -சங்கர்ஷணனுக்கு –
அடுத்த 4 சங்கர்ஷணன் -ஸம்ஹாரம்
அடுத்த 2-ப்ரத்யும்னன் -ஸ்ருஷ்ட்டி
அடுத்த 4-அநிருத்தன் -ஸ்திதி
அடுத்த 8 -வாசுதேவன்
———-
ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13-
————–
123-மஹா தபா –
சிறந்த ஞானம் உடையவன் –அதிகமாக பூஜிக்கத்தக்க ஞானம் யுடையவன்
தத்ர வராரோஹ இத்யேத தந்தைர்நாமபி ப்ரயாஸ பரத்வம் யுக்தம்
கிமேகம் தைவதம் லோகே கிம் வா அப் யேகம் பராயணம் இதி
ப்ராப்ய ப்ரஸ்நயோஸ் -தத் ப்ரதி வசனயோஸ் ச ப்ராயேணா மீஷ் மேவ விஸ்ராந்தி
அத ஸ்து வந்த கம் கம இத்யாதீநாம் உபாய -ப்ரஸ்ன ப்ரதி வசநாநாம் அதிகார வ்யூஹ
தத்ர வாஸூ தேவ பரத்வேந வ்யாக்யாத
இதா நீம் ஸங்கர்ஷண
இதுவரையில் அடையத்தக்க பர வஸ்து எது என்கிற வினாவுக்குத் தக்கபடி
பர ஸ்வரூபம் பெரும்பாலும் கூறப்பட்டது
இனி வ்யூஹத்தைக் கூறுவது
அந்த வ்யூஹம்
வாஸூ தேவன்
சங்கர்ஷ்ணன்
ப்ரத்யும்னன்
அநிருத்தன்
என நான்கு வகைப்படும்
அவற்றுள் வாஸூ தேவன் பர ரூபத்தில் சேர்ந்ததனால் தனித்துச் சொல்ல வேண்டியது இல்லை
ஆதலால் இதற்கு மேல் ஸங்கர்ஷண வ்யூஹம் சொல்லப்படுகிறது-
மஹா தபா
யஸ்ய ஞான மயம் தப -இதி மஹத் பூஜ்யம் ஞானம் அஸ்யேதி
ஷட் குணா வ்யாக்யாஸ் யந்தே
தேஷு ஞான பல சங்கர்ஷணஸ்ய குணவ் வ்யூடவ்
ஞானம் -ச ப்ராசீன பவ பரிஸ் ராந்தி ஸாந்தயே சஞ்ஜி ஹீர்ஷா லக்ஷண மாத்ர –
யஸ்ய ஜ்ஞான மயம் தப -முண்டக-1-1-ஞான மயமான தபம் கொண்டவன்
தொடர்ந்து ஆறு குணங்களும் கூறப்பட உள்ளன
இவற்றில் ஞானம் பலம் இரண்டும் சங்கர்ஷனின் தன்மையாக உள்ளன
இங்கு ஞானம் என்பது அநாதி காலமாக சம்சாரத்தில் உழன்று தவிக்கும் ஜீவர்களைக் கரை ஏற்றும் செயலுக்குத் தக்க ஞானம்
ஞானத்தின் ஒளி யுரு -பெரிய திருமொழி -6-3-
ஞானமாகி ஞாயிறாகி-திருச் சந்த -114
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா -4-7-1
சங்கர்ஷணன் – சம்ஹார கர்த்தா -சங்கல்பத்தால் -செய்து அருளி -ஞானம் -உடையவன்
சிறந்த ஞானம் உள்ளவர் -ஞானம் பலம் சங்கர்ஷணனுக்கு யுரியவை –
அடியார் பிறவித் துயரைப் போக்கும் இச்சையே ஞானம் என்ற சொல் -ஸ்ரீ பராசர பட்டர்-
ஸ்ருஷ்டியைப் பற்றிய சிறந்த ஞானம் யுடையவர் -உயர்ந்த ஐஸ்வர்யம் பெருமை யுடையவர்–சங்கரர் –
சிறந்த ஞானம் உள்ளவர் கபிலராக தபச்வியானவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் மஹா தபஸே நம
————
சர்வகஸ் சர்வவித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14
———–
124- ஸ்ர்வக –
எல்லாம் தன்னிடம் வைத்துக் கொள்பவன் -லயம் -பிரளயம் பொழுது
தாரண ஸாமர்த்தய லக்ஷணேந பாலேந ஆத்மவத் தாரயன் ஸம் ஹ்ருதான் ஸர்வான் கச்சதீதி
ஸர்வக
அந்த -அத்யந்த -அத்வ -தூர -பார -ஸர்வ -அநந்த ஷு ட
ஏவம் ஸங்கர்ஷணாத் தி ஸங்கர்ஷணம் நாம நிருச்யதே —அஷ்டாத்யாயீ -3-2-48-–செல்லுதல் என்ற பொருள் கொண்ட கம் என்பதன் பின் ட என்பதை இணைத்துக் கொள்கிறது -எப்போது என்றால்
அந்த -அத்யந்த -அத்வ -தூர -பார -ஸர்வ -அநந்த -போன்ற சொற்களுடன் கூடும் போது ஆகும் –
கார் யேழ் கடல் யேழ் மலை ஏழும் உண்டும் ஆரா வயிற்றான் -10-8-2–
தாரண சாமர்த்தியம் -பலம் –சங்கர்ஷணன் -556-
அனைத்தையும் தன்னிடம் இழுத்துப் பிடித்து வைத்து கொள்பவன் -ஞானத்துக்கு முக்கியமான அங்கம்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று உயிர் படைத்தான் -4-10-1-
தன்னுள் ஒன்ற வைத்து பின்னை வெளிக் காண படைத்தான் –
சம்ஹரிக்கப் பட்டவற்றை எல்லாம் தம் பலத்தினால் அடைந்து தரிப்பவர் –
சங்கர்ஷிப்பத்தால் -அழிப்பதால் சங்கர்ஷணன் -சம்ஹரிக்கப்பட்டவை எல்லாவற்றையும் தம்மிடம் வைத்துத் தாங்கும் வன்மை
இது கீழ் சொல்லிய ஞானத்துக்கு முக்கிய அங்கம் –ஸ்ரீ பராசர பட்டர்-
ஆத்ம வடிவில் அனைவரையும் சென்று அடைபவன்
சங்கர்ஷம-556-அவன் தன்னில் அனைவரையும் வரவழைக்கிறான் என்றபடி
காரணமாக எங்கும் பரவி இருப்பதால் எங்கும் செல்பவர் -கார்யமாதலால் காரணங்களில் எங்கும் வியாபித்து இருப்பவர் -சங்கரர் –
எங்கும் செல்பவர் -அல்லது எல்லாம் அறிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சர்வகயா நம
————-
125- ஸர்வ வித் –
எல்லாவற்றையும் அடைபவன் –ஸ்ருஷ்டிக்க -ஐஸ்வர்யம் வீர்யம் ப்ரத்யுமனுக்கு -இதில் ஐஸ்வர்யம் -வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
அதஸ் ஸம் ஹ்ருதான் ஸிஸ்ரு ஷு –ப்ரத்யும்ந –ஸர்வ கார்ய விந்ததி ஸ்ருஷ்டயா லபதே இதி
ஸர்வ வித்
இதமத்ர ஜகத் க்ரியா ஸ்க்த் யுல்லாஸ ரூபம் ஐஸ்வர்யம்
யஸ் சர்வஜ்ஞ சர்வ வித் -யஸ்ய ஜ்ஞான மயம் தப –சர்வ வித் -ஞான பூர்த்தி
நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -4-8-6
பிரத்யும்னன் -நாம ரூபங்கள் கொடுத்து ஸ்ருஷ்டிப்பதை –
ஜகத் கிரியா உல்லாச ரூபமான ஐஸ்வர்யம்
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த -8-10-7–
சம்ஹரிக்கப் பட்டவற்றை மறுபடி படைத்து அடைகிறார் -சிருஷ்டிக்கும் மூர்த்தி பிரத்யும்னன் –
கிரியா சக்தி உடைய விலாசமான ஐஸ்வர்யம்-மற்றும் பலம்-வீர்யம் -கூறப்படுகிறது -விசித்திரமான உலகங்களை உண்டு பண்ணும் திறமை இங்கு கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லா இடத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து பிரகாசிப்பவர் -எல்லாம் தம்மிடத்தில் பொருந்தி இருப்பவர் -ப்ரகாசிப்பவர் -சர்வவித் பாநு -ஒரே திரு நாமம் -எல்லா இடங்களிலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து -எல்லாம் தம்மிடத்தில் பொருந்தி பிரகாசிப்பவர் -சங்கரர் –
அனைத்தும் அறிபவர் -எல்லாம் அடைந்தார் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சர்வ வித் நம
——————-
126-பாநு-
விளங்குபவன் -மாறுபடாமல் விளங்கும் வீர்ய குணம்
வீர்யம் -ஸுர்யம் -பராக்ரமம்
தனக்கு விகாரம் இல்லாமல் செய்வதே வீர்யம்-நித்ய நிர்விகார தத்வம்
ஸர்வ நிர்மாணே அப் யவி குர்வாணோ பாதீதி
பாநு
உணாதி ஸூத்ரம் –தா பாப் யாம் நு –ஒளிர்தல் என்னும் பொருள் கொண்ட பா என்பதுடனும்
அளித்தல் என்னும் பொருள் கொண்ட தா என்பதடுடனும்
நு என்பது சேர்க்கிறது
ஸ ஏஷ ஸ்வயம் உத்வபவ் –அவன் தானாகவே ஒளிர்கிறான்
இதம் அவிகார ஆகாரம் வீர்யம் –தனது வீர்யம் காரணமாக மாறுபடாமல் உள்ளான்
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் -4-5-1-
பாநு -285-மீண்டும் -கிரணங்கள் உடைய ஆதித்யன்
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் -4-4-2-
எல்லாவற்றையும் படைத்து தாம் விகாரம் இல்லாமல் விளங்குபவர் -அவிகாரம் -என்கிற வீர்யம் -ஸ்ரீ பராசர பட்டர்-
பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் பானுவே நம
——————
127-விஷ்வக்சேன
யாவரும் தன்னை ரஷகனாய் கொண்டு வாழும்படி செய்பவன்-அவன் எஜமானனுடன் உள்ளதால் சேனன் ஆகிறான்
அநிருத்தன் -சக்தி- தேஜஸ் -ஜகத் ரக்ஷணம்-இரண்டும் வேண்டுமே –
அத ஸ்தாபகோ –அநிருத்தோ–
விஷ்வக் ஸேந
இநேந ஸ்வாமிநா ஸஹ வர்தத இதி ஸேநா (தலைவர் உடன் கூட இருப்பதால் சேனா )-ஸேஸ் வரேதி
யாஸ்க
அநேந ரக்ஷக வந்தோ ஜந்தவோ விஷ் வஞ்சோ -அஸ் யேதி
இயமத்ர ஸாமர்த்ய ஸரீரா ஸக்தி
ரஷிக்க சேனை உடையவன் –
அநிருத்த-வ்யூஹ மூர்த்தியைச் சொல்லும் திரு நாமம்
ரஷண சாமர்த்திய சக்தியைச் சொல்லும் திரு நாமம் –
அவன் நியமனப் படி நிர்வஹிக்கும் சேனை முதல்வருக்கும் இத் திரு நாமம் பெயர்
இவர் ரஷணத்தில் வாழ்பவன் வைகுந்த குட்டன் –
எல்லாரும் தம்மைக் கொண்டு ரஷகராகக் கொண்டு ஜீவிக்கும்படி இருப்பவர் –
ரஷிக்கும் அநிருத்தன் -யுடைய சக்தி -எதையும் ரக்ஷிக்கும் திறம் –இங்கே கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
போர் செய்யத் தொடங்கிய யுடன் அசுர சேனை சிதறி ஓடும்படி செய்தவர் -தன்னுடைய யோக சக்தியால் செய்பவர் -சங்கரர் –
பிரமன் முதலிய அனைவரையும் சேனையாக உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் விஷ்வக் ஸேனாய நம
—————
128-ஜனார்த்தன –
விரோதிகளை சம்ஹரிப்பவன் –தேஜஸ் -சொல்லும் -பராபிபவன சாமர்த்தியம்
வற்கலா ஜனார்த்தன பெருமாள் -ஜனி பிறப்பை அளிக்கும் ஜனார்த்தனன்-
ரஷா ப்ரதி பஷான் ஜநான் அநபேஷோ அர்த்தயதீதி
ஜனார்த்தந-
தஸ்யு த்ராணாத் ஜனார்த்தன -உத்யோக பர்வம்–71-6- –தீயவர்கள் இடம் ரக்ஷிப்பதால் ஜனார்த்தனன்
இதன் மூலம் யாருடைய உதவியும் இன்றி எதிரிகளை அளிக்கும் தேஜஸ் சொல்லப்படுகிறது
இதம் அநபேஷா லக்ஷணம் –தேஜஸ்
ப்ரதி மூர்தி குணா நாம் வ்யவஸ்தேயம் இயதாம் ஆவிஷ் காராத்
பகவதஸ் ஸர்வத்ரா நாவரண குணத்வாத் —
மூலே ஹி ஸ்ரூயதே–ஞாநேந ஐஸ்வர்யேன சக்த்யா (முதல் மூன்றையும் சொன்னது அடுத்த மூன்றுக்கும் உப லக்ஷணம் )இதி சர்வே பகவத அநூநா பூர்ணா –மூல ஸம்ஹிதை -பூரணமான ஞானாதி குணங்கள் கொண்டவன்
இதி ஏஷ ஆத்மா சதுர்வித
ஸர்வஞ்ஞ-ஸர்வ தர்சீ ஸர்வேஸ்வர ஸர்வ ஸக்திஸ் ஸம் ருத்தி மான் வா அக்ரன் திர நூந ஆப்தோ வஸீ ஸ்வாதீநோ அநாதி ரநந்தோ
வ்யபகத (ஒழிக்கப்பட்ட )நித்ரா பய க்ரோத தந்த்ரோ வ்யபகதேச்சா தம க்லம வியாதிர் நிர்தோஷா நிர நிஷ்டோ நிரவத்யோ யே பகவந்தம் வாஸூ தேவ மேவம் விது
ந தே விதுரிதி பகவான் வாஸூ தேவோ அநந்த ஏவ அபரிமிதோ அனந்தத்வேந அபரிமிதத்வேந பவதி(முடிவற்ற அளவற்ற )-இதி ப்ரதி பர்யாயம்
தன் சொத்தை ரஷிக்க சத்ருக்களை தானே அழித்து-தேஜஸ் விளங்கும் –
அநிருத்த பகவானே விபவ அவதாரங்களுக்கு மூலமாம்
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -2-6-1-
ரஷிப்பதற்குத் தடையாக உள்ளவர்களை உதவி தேடாமல் அழிப்பவர்-அபேஷியாமல் ரஷிக்கும் தேஜஸ் -ஸ்ரீ பராசர பட்டர்-
மக்களால் மோஷம் செல்வம் முதலிய பயன்கள் வேண்டப்படுபவர் -தீயர்களை நரகத்தில் தள்ளுபவர் -சங்கரர் –
அடியவர்களின் பிறப்பை அறுப்பவர் -சமுத்ரத்தில் இருக்கும் ஜன என்னும் அசுரர்களை அழிப்பவர் -சம்சாரத்தை அழிப்பவர் –
ஜனங்களால் யாசிக்கப் படுபவர் -அடையப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் ஜனார்த்தனாய நம
——————————————-
பகவானுக்கு ஆறு குணங்களும் எல்லா மூர்த்திகளிலும் மறையாமல் பிரகாசிப்பதாக ப்ரமாணங்களினால் சொல்லப்பட்டு இருந்தாலும்
அந்த அந்தக் கார்யங்களுக்குத் தக்கபடி மூர்த்திகள் தோறும் பிரகாசிக்கும் குணங்களை இங்கு வகுத்து உரைத்தது
சாஸ்த்ர ப்ரவர்த்தம் -4- சங்கர்ஷணன்
தர்ம ப்ரவர்த்தகம் -2-ப்ரத்யும்னன்
பலன் ப்ரவர்த்தகம் -4 -அநிருத்தன்
இனி ஸங்கர்ஷண வ்யூஹம்
உலகங்களுக்கு ஸாஸ்திரங்களைக் கொடுத்து அருளுவது என்பது சொல்லப்படுகிறது –
129-வேத –
வேத சாஸ்த்ரங்களை தருபவன் –
புந ஸங்கர்ஷணஸ் ய ஸாஸ்த்ர ப்ரதத்வம் உச்யதே
வேத
ஸ்ருஷ்டி லம்பித கரணா விந்தந்தி தஸ்மிந் நிதி
ஹலஸ் ச இதி கஞ்-
யதா
யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை –ஸ்வேதாஸ்வர–6-18—நான்முகனுக்கு வேதங்களை உபதேசிப்பவன்
வேத நான்காய் விளக்கு ஒளியாய் -திருநெடு -1-வேதத்தை -என்னை ஆளுடை அப்பனையே கலியன் –
சாஸ்திரங்கள் சாஸ்திர ஜன்ய ஞானத்தையும் தந்தவன்
இதுவும் சங்கர்ஷணன் மூர்த்தியைப் பற்றியது –சாஸ்திர ப்ரதன்
நேதா -நடத்துபவன் பந்தா மார்க்கம் ப்ரஹ்மன ஆசார்ய-அறிவிப்பான் போன்ற திரு நாமங்கள் இத்தாலே
வேதத்தை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை -பெரிய திரு மொழி -2-3-2-
சுடர் போல் என் மனத்து இருந்த வேதா -பெரிய திருமொழி -6-2-9-
தம்மால் உடல்களையும் இந்த்ரியங்களையும் அடைந்து இருப்பவர்கள் -சாஸ்த்ரங்களை தம்மிடம் இருந்தே
அடையும் படி இருப்பவர் -மீண்டும் சங்கர்ஷணன் சாஸ்திரங்கள் அளிப்பதைக் கூறுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர்-
அத அப்யுபாய
ஆகம-பந்த -நேதா -ப்ராஹ்மண -ஆச்சார்ய -இதி ஸங்கர்ஷண அபிஞ்ஞா
ஆக ஸங்கர்ஷணனே
உபாயமாகவும்(அப்யுபாயம் பர கதியை அடைவதற்கு கருவி )
ஆகம விதிகளாகவும்(ஸாஸ்த்ரம் வரும் இடம் )
பந்த-மார்க்கமாகவும்
நேதா-எஜமானனாகவும்
அந்தணனாகவும்
ஆச்சார்யனாகவும் –உள்ளான் என்றவாறு
வேத ரூபி -எல்லாவற்றையும் தெரிவிப்பவர் -அஞ்ஞானம் ஆகிய இருளை போக்கி அருளுபவர் -சங்கரர் –
எல்லாவற்றையும் தெரிவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் வேதாய நம
——————
130-வேத வித் –
வேதங்களை அறிந்தவன்
வேதார்தம் ச அவிஸய விபர்யாஸம் வேத்தீதி
வேத வித்
ஆஹ ஹி
வேத விதேவ ச அஹம் -ஸ்ரீ கீதை –15-1-வேதங்களில் வல்லவன் நான்
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை -திரு நெடு -30
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் -திருச்சந்த -9–
அவிஸய அஸம்சய விபர்யாஸம் வேத்தீதி–ஐயம் திரிபின்றி வேதார்த்தங்களை அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
வேதங்களையும் வேதார்த்தங்களையும் உள்ளபடி அறிபவர் –சங்கரர் –
வேதங்களை அறிந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் வேத வித் நம
———————-
131-அவ்யங்க-
வேதாங்கங்கள் நிறைந்து இருப்பவன்
ததங்கைஸ் சந்த கல்பாதிபி -ஸ்வ கல்பிதைர் அவிஹீந
அவ்யங்க
சிஷை –வியாகரணம்- சந்தஸ் -நிருக்தம் -கல்பம் -ஜோதிஷம்
இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் -பெரிய திருமொழி -9-2-1-
“கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற் பொருள் தானும், மற்றை நிலைகளும்
வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து“ –8-2-5-என்றபடி தன்னாலே அளிக்கப்பட்ட சாஸ்த்ரங்கள்
பழுது படாதபடி அவற்றை உலகில் நன்கு பிரசாரம் செய்விப்பவன் -நீர்மையினால் அருள் செய்தான்-என்றாவறு.
சந்தஸ் -கல்பம் முதலிய ஆறு அங்கங்களும் தம்மிடம் குறைவின்றி நினைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18– –என்கிற படியே –
(சிஷை -வேத அங்கங்களில் எழுத்துக்களை உச்சரிக்கும் முறையும்
வியாகாரணத்தாலும் நிருத்தத்தாலும் பதங்களின் அறிவும்
சந்தஸ் -என்னும் வேத அங்கத்தில் காயத்ரி போன்ற சந்தஸ்ஸுக்களின் இலக்கணமும்
ஜ்யோதிஷத்தால் கர்மங்கள் செய்ய வேண்டிய காலமும்
கல்ப சங்கத்தால் கர்ம அனுஷ்டானங்களையும்
தர்க்க சாஸ்திரம் மீமாம்சைகளாலும் தெளிவான பொருள்களும்
புராணங்களாலும் ஸ்ம்ருதிகளாலும் கருத்துக் பொருள்களையும் சொல்லப்படுகின்றன
ஞானம் முதலிய குணங்கள் நிறைந்தவர் -வ்யக்தமாக இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –
ஆதி சேஷனின் மேல் சயனித்துக் கொண்டு இருப்பவர் -சூர்யனைக் கண்ணாக யுடையவர் –
குறையில்லாத அங்கங்கள் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் அவ்யங்காய நம
——————–
132-வேதாங்க –
வேதங்களை சரீரமாக -அங்கங்களாக -உடையவன்
அவன் ஆஜ்ஞ்ஞா ரூபமே வேதம் -அதனால் அவன் சரீரம் போலே
வேதாஸ் ச அநந்த ஸாகா அஸ்ய அங்கம் ஸரீரம் அந்தரங்க வ்யஞ்ஜகத்வாதி
வேதாங்க
யதா
நா வேதவித் மனுதே தம் ப்ருஹந்தம் –கடகம் -3-9--வேதங்களை அறியாதவன் ப்ரஹ்மத்தை அறியாதவன்
விதூநுதே வேத மயம் சரீரம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-29-வேத மயமான சரீரத்தை உதறுகிறான்
ஸ்ருதி ஸ்ம்ருதி மமைவ ஆஜ்ஜா–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -76-31-ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் எனது கட்டளைகளே
தைவம் பித்ரயம் ச கர்தவ்யம்–பகவானுக்கும் பித்ருக்களுக்கும் உரியவற்றைச் செய்தே தீர வேண்டும்
இதி தஸ்ய அநு சாநம் –இது அவனது கட்டளை
இதி தத் ஞானத்வா வா வேதாங்க
சந்தோகன் பௌழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாமவேதி -பெரிய திரு மொழி -5-5-9-
வேதத்தைத் தமது சரீரமாக உடையவர் -சரீரத்தினால் ஆத்மா அறியப்படுவது போலே வேதத்தினால் அறியப்படுபவர்
வேதம் தம்முடைய ஆஜ்ஜையாக உடையவர் ஆகையால் அத்தைக்கு கருவியாகக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
வேதங்களை அங்கங்கங்களாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
வேத அபிமானியான லஷ்மி தேவியை உடையவர் -வேதாங்களான பாரதம் போன்றவற்றை வெளியிட்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் வேதாங்காய நம
——————-
133-வேதவித் –
வேதார்த்தமான தர்மங்களை அறிந்தவன் -அவற்றை சாஸ்திர விஹித தர்மங்களை சேதனர்கள் அனுஷ்டிக்க செய்து -பிரத்யும்னன் –
வேதைர் வேத் யதே இதி -வேத
ததர்தோ -தர்ம
தம் அனுஷ்டாப நேந விந்ததீதி ப்ரத்யும்ன
வேத வித்
அதோ ஹ்யஸ்ய தர்ம -ப்ரத்யோ தயிதா ப்ரவர்த்தயிதா இதி ச நிர்தேஸா
தர்மம் ஏற்படுத்தி செய்விப்பவரும் இவரே-
சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதியனே நெடுமாலே -பெரிய திருமொழி -7-7-2-
இவற்றை நன்கு அறிந்தவன் -இவற்றால் அறியப் படுபவன் -இவற்றை நமக்கு அளிப்பவன் –
வேதங்களை விசாரிப்பவர் –
வேதங்களினால் அறியப்படும் தர்மத்தை அனுஷ்டிக்கும்படி செய்து -அதை ஆராதனமாகப் பெறுபவர் இது ப்ரத்யும்னனைக் குறிக்கும் -எனவே இவரை 1-தர்மம் என்றும் -2-ப்ரத்யோதபிதா-பிரகாசப்படுத்துபவன் என்றும் -3-ப்ரவர்த்தயிதா -ப்ரவர்த்திப்பவன் என்றும் கூறுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
வேதங்களை விசாரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
மத்ச்யாதி ரூபத்துடன் பிரமன் முதலியவர்களுக்கு வேதங்களைக் கிடைக்கச் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் வேத வித் நம
———————
134-கவி –அநிருத்தன் பரமான திரு நாமம்
அதிக்ரமித்துப் பார்ப்பவன் -சர்வஞ்ஞன் -மேல் மூன்று திரு நாமங்களும் சர்வஞ்ஞதையையே பேசுகின்றன
ச ஏவ க்ராந்த தர்சித் வாத்
கவி
கு சப்தே –தர்சன -கர்மணோ -அஸ்மாதின்
காண்பது என்னும் பொருளை அளிக்கும் கு என்பதுடன் இன் சேர்க்கப்படுகிறது
என்னையும் நோக்கி என்னல்குலும் நோக்கி எனது இளம் கொங்கையும் நோக்குகின்றார் -பெரிய திரு மொழி -9-2-1-
ஞான பக்தி வைராக்யங்களை சொல்லும்
எல்லாவற்றையும் அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
(பின் மூன்று திரு நாமங்கள் ஸர்வஞ்ஞர் என்பதையே விவரிக்கும்)
எல்லாவற்றையும் பார்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
புகழப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் கவயே நம
—————
லோகாத்யஷஸ் ஸூராத்யஷோ தர்மாத்யஷ க்ருதாக்ருத
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்ப்புஜ–15
——————
135-லோகாத் யஷ –136- ஸூராத்யஷ -137-தர்மாத்யஷ – அநிருத்தன் பரமான திரு நாமம்-
உலகங்களை அறிந்தவன்
உலகம் மூன்று உடையாய் -6-10-10-
க்ராந்த தர்சித்வமேவ -த்ரிபிர் உப பாதயதி
லோகாத் யஷ -ஸூராத் யஷ- தர்மாத் யஷ –இதி
லோகா -தர்மாதி காரிண
ஸூரா -தத் ஆராத்ய தேவதா
தர்ம -தத் ஸாதனம் வைதம்
தேஷாம் அத்யக்ஷ -அக்ருதாப் யாகம க்ருத விப்ரணாஸ பரி ஹாரேண பலம் தாதும் அநு சந்தாதா
அநிருத்த
அதோ ஹ்யஸ்ய
தர்மஞ்ஞ
உபாயஞ்ஞ
அத்யக்ஷ
தத்ய சந்த
ஸ ஏவாஸ்ய ஸம் விதம் ததாதி இதி வ்யபதேசா
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
செய்வார்களை செய்வேனும் யானே என்னும் -செயகைப் பயனும் யானே என்னும்
தர்ம அனுஷ்டானத்துக்கு தகுதி யுள்ளவர்களை ப்ரத்யஷமாக அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
அத்யக்ஷ -அதிருஷ்ட ஸ்தானத்தில் நின்று பலனை அளிக்கும் அநிருத்தனைச் சொல்லி
லோகம் என்று தர்ம அனுஷ்டானத்துக்கு தகுதியான அதிகாரிகளைச் சொல்லி
ஸூர என்று அவர்கள் ஆராதிக்கும் தேவதைகளைச் சொல்லி –
தர்ம என்று ஆராதிக்கும் வழி முறைகளைச் சொல்லி
இவன் தர்மஞ்ஞன்–தர்மங்களை அறிந்தவன் என்றும் –உபாயஞ்ஞன் -உபாயங்களை அறிந்தவன் என்றும் —
அத்யக்ஷன்-பிரதான தேவதை என்றும் -ஸத்யஸந்தன் -சத்யமயன் -ஞானம் அளிப்பவன் என்றதாயிற்று
உலகங்களை பிரத்யஷமாகக் காண்பவர் -உலகங்களுக்குத் தலைமையாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
பிரகாசமான ஸ்வரூபம் உடைய லோகாதிபதி -லோகங்களை விட மேன்மையானவர்-அழியாதவர் –
உலகிற்குத் தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் லோகாத்யாஷாய நம
———————-
136- ஸூராத்யஷ -அநிருத்தன் பரமான திரு நாமம்
ஸூரர்களை அறிந்தவன்
அமரர்கள் அதிபதி -வானோர் தலைமகன்
அவர்களால் ஆராதிக்கப் படும் தேவதைகளைப் பிரத்யஷமாக அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
லோக பாலர்களான தேவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர் –
அவர்கள் தங்கள் இடங்களில் இருந்து அதிகாரங்களை நடத்துகையில்
அதற்கு விரோதிகளான அஸூராதி ஸத்ருக்களை தடுக்க நினைக்கும் போது
அவர்களுக்குப் பிரத்யக்ஷமாக ஆவிர்பவிப்பவர் என்று கருத்து –
தேவேந்த்ரனுடைய கண்களுக்கு விஷயமானவர் -நன்கு ஆராதிக்கப் படுபவராய் எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் உள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் ஸூராத்யஷாய நம
—————-
137-தர்மாத்யஷ -அநிருத்தன் பரமான திரு நாமம்
தர்மத்தை அறிந்தவன் –
வேதத்தின் சுவைப் பயன் -பெரிய திருமொழி -2-3-2-
தர்மங்கள் அனுஷ்டிப்பாருக்கு தக்க பலன் அளிப்பவன்
தருமம் அறியாக் குறும்பன் -நாச்-116-
அந்த தர்மத்திற்கு சாதனமாக விதிக்கப் பட்டவைகளை அறிபவர் -ப்ரத்யஷமாக அறிந்து தர்மம் செய்வாருக்கு பலன் கொடுக்கவும்
செய்யாதாருக்கு பலன் கொடுக்காமல் போகவும் அறிந்து இருப்பவர் அநிருத்தர் -ஆதலால்
1-தர்மஞ்ஞர் -தர்மத்தையும் -2-உபாயஞ்ஞர் உபாயத்தையும் அறிந்தவர் -3-அத்யஞ்ஞர் எல்லாவற்றையும் நடத்துபவர் -4-ஸத்ய ஸந்தர்-சொல் தவறாதவர் -5-ஞானம் அளிப்பவரும் இவரே -ஸ்ரீ பராசர பட்டர்-
தகுந்த பலன்களைக் கொடுப்பதற்காக தர்ம அதர்மங்களை நேராகக் காண்பவர் -ஸ்ரீ சங்கரர் –
தர்மத்தின் அதிபதி -தர்மத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் தர்மாத்யஷாய நம
————————————————————————————–
138-க்ருதாக்ருத -அநிருத்தன் பரமான திரு நாமம்
இஹ பர பலங்களை அளிப்பவன் –
த்வவ் ச தர்மவ் –ஸம்ஸாரஸ்ய ப்ரவர்த்தகோ நிவர்த்தகஸ் ச
தத்ர ப்ரவர்த்தகஸ்ய அநித்யா பல ப்ரதத்வேந உபசாராத
க்ருத
நிவர்த்தகஸ்ய நித்ய பல ப்ரதத்வேந அக்ருதஸ சேதி
ச ஏவ க்ருதாக்ருத -க்ருதம் பிரவ்ருத்தி தர்மம் அக்ருதம் நிவ்ருத்தி தர்மம் அறிந்து பலங்களை அளிப்பவன் –
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் -கோலமில் நரகமும் யானே என்னும் -கோலம் திகழ மோக்கமும் யானே என்னும் -5-6-10-
யோகம் ஐஸ்வர்யம் போன்ற அநித்திய பலன்களையும் -மோக்ஷமாகிய நித்ய பலனையும் கொடுப்பவர் -சம்சாரத்தின் பிரவர்த்தகம் நிவர்த்தகம் ஆகிய
இரண்டு தர்மங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
க்ருத ப்ரவர்த்திக்க தர்மம்-அல்ப அஸ்திர பலன்களை கொடுக்கும் —
அக்ருத-நிவ்ருத்திக தர்மம் -மோக்ஷ பலன் -இரண்டுக்கும் பலன்களை அளிப்பவன்
கார்யமாகவும் காரணமாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
கர்மங்களினால் அடையப் படாதவர் -அக்ருதம் என்னும் மோஷம் தருபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் க்ருதக்ருத்யா நம
உபாய உபேய ஐக்கியம் அவனே
——————–
139-சதுராத்மா –
நான்கு ரூபங்கள் –
இத்தம் சதுராத்மா
வாஸூ தேவ -ஸங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்த -இதி –வாசுதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் –
மீண்டும் -775-நாலு விதமாக -ஜாக்ரத -ஸ்வப்ன -ஸூ ஷுப்தி -துரீயம் -ஸ்தூலம் ஸூஷ்மாயும் விளங்குபவன்
வாஸூதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் -என்னும் நான்கு மூர்த்திகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களில் நான்கு வகை சக்திகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
ப்ரம்மா தக்ஷர் முதலான ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் -காலம் பிராணங்கள் ஆகிய நான்குவகை ஸ்ருஷ்டி கருவிகளையும்
விஷ்ணு மனு முதலானவர்கள் -காலம் பிராணங்கள் ஆகிய நான்குவகை டீரக்ஷண கருவிகளையும்
ருத்ரன் காலம் எமன் பிராணங்கள் ஆகிய நான்குவகை ஸம்ஹாரக் கருவிகளையும் உடையவர் -விஷ்ணு புராணம்
பரவும் தன்மை யுடைய சாதுர்யமான ஆத்மாவாக இருப்பவர் -ஞானியான பிரமனைத் தோற்றுவித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சதுராத்மா நம
——————-
140-சதுர் வ்யூஹ –
நான்கு வ்யூஹ மூர்த்திகளாக
மீண்டும் 773–வாசுதேவ கிருஷ்ணன் -பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன்
கதமேகஸ்ய சாதுராத்ம்யம் –தத்ராஹ
சதுர் வ்யூஹ
யத் யுக்த ப்ரயோஜன -ஏப்யோத்யே -ஆராத்யா -வ்யக்தயே –
ச ஸமஸ்த வ்யஸ்தேந குண ஷட்கேந -தத் வ்யஞ்ஜக வ்ய அவஸ்தித
அவயவ- வர்ண-பூஷண- ப்ரஹரண -வாஹந -த்வஜாதி பிர்
ஜாகரா க்ரதாத்ய வஸ்தா சதுஷ்டய விஸிஷ்ட அபி மூர்த்திபிஸ்
சதுர்த்தா வ்யூஹத இதி
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நான்கு மூர்த்தி இத்யாதி
த்யானத்துக்கு-ஏற்ப -உருவம் நிறம் திரு ஆபரணங்கள் வாஹனம் த்வஜம் வேறு பட்டு
அநிருத்தன் -ஜாக்ரத விளித்து கொண்டு இருக்கும் அவஸ்தை நிலை
பிரத்யும்னன் -ஸ்வப்ன -நிலை
சங்கர்ஷணன் ஆழ்ந்த தூக்கம் ஸூ ஷுப்தி
வாசுதேவன் துரீய அவஸ்தை மூச்சும் அடங்கி இருக்கும் நிலை
கறுப்பு வெள்ளை மாந்தளிர் பச்சை சிகப்பு வர்ணங்கள் யுகம் தோறும் மாறும்
ஜீவ மனஸ் அஹங்காரம் அதிஷ்டானம் இந்த மூவரும்
கேசவாதி -ஒவ்வொருவருக்கும் மூன்று
மேற்சொன்ன நான்கு மூர்த்திகளில் முறையே ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி துர்ய என்னும் நான்கு நிலைகளை உடையவர் -த்யானிக்க
வேண்டும் ஸ்வரூபம் இன்னது என்று தெரிவிக்க -ஆறு கல்யாண குணங்களைப் பிரித்தும் -அந்தந்த குணங்களுக்கு பிரகாசகமாக ஏற்பட்ட
அவயவம் வர்ணம் ஆபரணம் ஆயுதம் வாஹனம் கொடி முதலானவைகளோடும் கூடிய நான்கு நிலைகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
அநிருத்தர் -ஜாக்ரத் -விழிப்பு நிலை —
ப்ரத்யும்னர் -ஸ்வப்னம் கனவு நிலை–
ஸங்கர்ஷணர் -ஸூஷூப்தி-ஆழ்ந்த நிலை உறக்கம் —
வாஸூ தேவர் -தூரியம்-மயக்க நிலை -தாமே தம்மை நான்காக வகுத்துக் கொண்டு கொண்டு இருப்பவர்
வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் என்ற நான்கு வியூஹங்களை உடையவர்–ஸ்ரீ சங்கரர் –
வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்-என்னும் நான்கு வ்யூஹங்களை-அல்லது நான்கு வித ஆத்மாக்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சதுர் வ்யூஹயா நம
———————
141-சதுர்த் தம்ஷ்ட்ர-
நான்கு முன் பற்களை உடையவன் -முத்துக்கள் போலே
வ்யூஹ மூலேந பரேண ரூபேண
சதுர் தம்ஷ்ட்ர
சதுர் தம்ஷ்ட்ரத்வம் மஹா புருஷ லக்ஷணம்
யதா
சதுர் தச சம த்வந்த்வ சதுர் தம்ஷ்ட்ர சதுர் கதி –ஸூந்தர-35-19-
14-உறுப்புக்கள் -4-பற்கள் -4-நடைகள் கொண்டவன்
வ்யூஹங்களுக்கு மூலமான பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -மஹா புருஷ லக்ஷணம் —ஸ்ரீ பராசர பட்டர்-
சிங்கம் புலி யானை காளை நடைகள் -சிம்ம கதி வ்யாக்ர கதி கஜ கதி ரிஷப கதி
14-உறுப்புக்கள் -புருவங்கள்- நாசி துவாரம் -கண்கள்- காதுகள்- உதடுகள் -திரு மார்புகள் -கை முஷ்டிகள்-
இரண்டு பட்ட இடுப்புக்கள் -கால் முஷ்டிகள் -மணிக்கட்டுகள்- திருக்கரங்கள் -திருவடிகள் -கால்கள் –
நரசிம்ஹ அவதாரத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -அல்லது ஞானம் யோகம் கிரியை சர்யை ஆகிய நான்கு கொம்புகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
நான்கு கோரைப் பற்களை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சதுர் தம்ஷ்ட்ராய நம
—————–
142-சதுர் புஜ –
நான்கு திருக்கைகள் உடையவன்
ததா சதுர்புஜ-ததா ஹி பரம் ரூபம் ஆஹ
சதுர் புஜம் உதாராங்கம் சக்ராத்யாயுத முஷ்ணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்
நான்கு திருத்தோள்களோடே கம்பீரமான திவ்ய மங்கள விக்ரஹத்துடன்
திருச் சக்ரம் போன்ற திவ்ய ஆயுதங்களைத் தரித்தவன்
தமச பரமோதாதா சங்க சக்ர கதா தர –யுத்த -114-15-
அப்பால் உள்ள பரமபதத்தில் சங்கு சக்ரம் கதை போன்ற திவ்ய ஆயுதங்களை ஏந்தியபடியே உள்ளவன்
புஜைஸ் சதுர்பி சம்மதம் -மஹா பாரதம்-நான்கு புஜங்களுடன் கூடியவன்
ஈரிரண்டு மால் வரைத் தோள்
நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-
பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு திருக் கைகள் உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-
நான்கு திருக் கரங்கள் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
தர்ம அர்த்த காம மோஷங்களைத் தருபவர் -நான்கு கைகளை உடையவர் -நான்கு வேதங்களினால் உண்டாகும் ஞானத்தால்
தம்மைக் காட்டித் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சதுர் புஜாய நம
தாமரை -பரம புருஷார்த்தம்
நான்கு புருஷார்த்தங்கள் -அறம் பொருள் இன்பம் வீடு
————
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-
————
143-ப்ரா ஜிஷ்ணு –
இந்த சதுர்புஜ ரூபத்துடன் பக்தர்களுக்கு தன்னை பிரகாசப் படுத்துபவன்
இதமேவ யதோக்தம் வ்யூஹ்ய
ப்ராஜிஷ்ணு
புவஸ் ச இத்யத்ர சகாராதி ஷ்ணுச் உபாஸித்ருப்ய ப்ரகாஸன ஸீல
தன்னை உபாஸிப்பவர்களுக்கு இவை அனைத்துடன் கூடிய பிரகாசமாக உள்ளவன்
இத்தகைய தன்மை யுடையவன் என்ற பொருள் கொண்ட இஷ்ணுக் என்பது பு என்ற தாது உடன் இணைந்தது
அர்ஜுனன் -தேனைவ ரூபேண சதுர்புஜேன சஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே -ஸ்ரீ கீதை -11-6-
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்
அப்பூச்சி காட்டுகின்றான் ஐதிகம்
ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் -திருப்பாவை -30-
பர ரூபத்தைப் பகிர்ந்து கொண்டு உபாஸிப்பவர்களுக்கு இவ்வடிவைப் புலப்படுத்துபவர் —ஸ்ரீ பராசர பட்டர்-
ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –
பிரகாசம் உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் ப்ரா ஜிஷ்ணுவே நம
—————–
144-போஜனம் –
அனுபவத்துக்கு விஷயம்
தைர் புஜ்யதே –ஸூகே நாநு மூயதே இதி
போஜநம்
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1-
விழுமிய அமரர் விழுங்கும் கோதிலின்கவி -நந்தனார் களிறு -பெரிய திருமொழி -2-3-2-
பக்தர்களால் உணவு போலே ஸூகமாக அனுபவிக்கப் படுபவர் —ஸ்ரீ பராசர பட்டர்-
அனுபவிக்கப் படுவதாகிய மாயை என்னும் பிரகிருதி வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
எல்லாரும் பிழைக்கும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் போஜனாய நம
——————
145-போக்தா
அனுபவிப்பவன்
அஹம் அன்னம் அஹம் அந்நாத –
ஸ்வயமபி ததர்பி தஸ்ய ப்ராபணாதே ரம்ருதஸ் யேவ
போக்தா
யதா
அஸ்நாமி ப்ரயதாத்மந—9-26–தூய மனஸுடன் அளிப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்
போக்தாரம் யஜ்ஜ தபஸாம்-5-29- —அணைத்த யஜ்ஞங்களையும் தபஸ்ஸுக்களையும் ஏற்று மகிழ்கிறேன்
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –-பக்தியையே பார்த்து ஸ்வீகாரம்
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்-9-6-10—என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
அவாவறச் சூழ் அரி -10-10-11
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -5-6-4-
பக்தர்களால் சமர்ப்பிக்கப் படும் ப்ராபணம் முதலியவற்றை அமுதம் போலே ஏற்றுக் கொள்பவர்-(நெய் பால் தேன் சக்கரைகளோடு கோதுமையைச் சேர்த்துப் பாகம் செய்யப்பட பாயாஸம் பிராபணம் என்னப்படும் )—ஸ்ரீ பராசர பட்டர்-
அந்தப் பிரக்ருதியை அனுபவிக்கும் புருஷனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அனைத்து சாரங்களையும் அனுபவிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் போக்தாய நம
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –பக்தியையே பார்த்து ஸ்வீகாரம்
——————–
146- ஸஹிஷ்ணு –
ஷமிப்பவன் –சர்வான் அசேஷத ஷமஸ்வ
தேஷாம் அபி முக்யாத் பிராகூர்த்தவம் (போய பிழையும் புகுதருவான் நின்றனவும் )ச ஸஞ்சிதா நாம் புத்தயா அபுத்வயா ச ஸகல கரணை ஸர்வதா
ஸர்வதா ச ப்ரஸீய மாநா நாம் விதி நிஷேத ஸாஸநாதி லங்க-நாத்ம நாம் சாதாராணா நாம் அசாதாரண நாம்
ச ஸ்வ அவஞ்ஞா நிந்தாதிநாம் ஸர்வம் சஹேந
ஸ்வே நாபி துஸ் சஹா நாம் ஸ்வ பக்த விஷயாணாம்
சா நவதிகா நாமபராதா நாம்
ஸ ஹிஷ்ணு
அலங்க்ருஞச் இத்யாதி நா இஷ்ணுச்–குத இயதீ மஹதீ ஷமா அஸ்யேத்யா காங்ஷா -யாம்
ஸஸி ஸலில ஸீதலிமாதி வத் ஸ்வரூப ப்ரத்யுக்தத்வாதி த்யேவம் பரஸ் தாச்ஸீல் யாதி
விஷய இஷ்ணுச் ப்ரத்யய
ஏவம் வ்யூஹ
இஷ்ணுச் என்பது அலங்க்ரு ஸ என்ற பதங்களின் பின்னே வரும் போது -இவன் இத்தகைய தன்மை கொண்டவன் என்ற பொருளை உணர்த்துகிறது
இவனுக்கு இத்தகைய பொறுமையும் தாராளமான உதார குணமும் தண்ணீர் சந்திரன் இவற்றுக்கு
குளிர்ச்சி இயல்பானது போல் இயல்பானது என்பதையே ஷ்ணு விகுதி உணர்த்துகிறது –
தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் -சிதகுரைக்கு மேல் என் அடியார் அது செய்யார்
செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் -பெரியாழ்வார் -4-9-2-
தம்மிடத்திலும் தம் அடியார்கள் இடத்திலும் செய்யும் அபராதங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவர் –
போய பிழைகளையும் புகுதருவான் நின்றனவும் க்ருத அக்ருதங்களையும் அக்ருத க்ருதங்களையும்
அவமானங்கள் நிந்தனைகளையும் பகவத் அபசார பாகவத அபசார அசஹ்யாபசார -எண்ணற்ற
அபராதங்களையும் பொறுப்பவர் —-ஸ்ரீ பராசர பட்டர்-
ஹிரண்யாஷன் முதலிய விரோதிகளை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் —
அடியவர்களின் குற்றங்களைப் பொறுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சஹிஷ்ணுவே நம
இப்படியாக இது வரை வ்யூஹங்கள் பற்றிக் கூறப் பட்டது –
—————
————————– வ்யூஹ வாஸூ தேவன் –ஸங்கர்ஷணன் -ப்ரத்யும்னன் ——-அநிருத்தன்
ஸ்தானம் ————- –ஆனந்தம் ———————ஆமோதம் ———ப்ரமோதம் ———-ஸம்மோதம்
நிறம் -க்ருத யுகம் — வெள்ளை ——————–சிகப்பு —————–மாந்தளிர் பச்சை -கறுப்பு
நிறம் த்ரேதா யுகம் – சிகப்பு ————————-மாந்தளிர் பச்சை —கறுப்பு ————–வெள்ளை
நிறம் -த்வாபர யுகம் –மாந்தளிர் பச்சை ——–கறுப்பு —————–வெள்ளை ——— சிகப்பு
நிறம் -கலியுகம் ——–கறுப்பு ———————வெள்ளை ————-சிகப்பு ————– மாந்தளிர் பச்சை –
தொழில் ——-முத்தொழில்களையும் — அழித்தல் — படைத்தல் காத்தல்
குணங்கள் –ஆறு குணங்களும் — ஞானம் பலம் – ஐஸ்வர்யம் -வீர்யம் –சக்தி தேஜஸ்
குணங்களுக்குத் திரு நாமங்கள் —————–மஹாதபா சர்வகஸ் —சர்வவித் பாநுர் –விஷ்வக்சேநோ ஜனார்த்தன
அருளுக்குத் திருநாமங்கள் –139-146————-129-132———————133-134————–135-138-
அதிஷ்டானம் —————————— ஜீவாத்மா — மனஸ் தத்வம் — அஹங்காரம்
விசாக யூக ஸ்தம்பம் -ஞான வடிவானது -ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள தூண்
இதில் கீழ் இருந்து மேலாக நான்கு இடங்கள் உள்ளன
இவை மனிதனின் நான்கு நிலையான –
ஜாக்ரத் -விழிப்பு நிலை –
ஸ்வப்ன -கனவு நிலை –
ஸூஷூப்தி –ஆழ்ந்த உறக்கம்
துரிய -மயக்க நிலை தசைகளைக் குறிக்கும்
இதில் ஒவ்வொரு இடத்திலும் நான்கு கிளைகளாக
வாஸூ தேவ -கிழக்கு
ஸங்கர்ஷண -தெற்கு
ப்ரத்யும்ன -மேற்கு
அநிருத்த -வடக்கு
ஒரு பக்தன் உபாஸிக்கும் போது கீழ் இருந்து படிப்படியாக உயர்ந்து
கடைசி நிலையை அடைய வேண்டும் –
—————–
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –சாந்தோதித விசிஷ்டமான பரத்வ அனுபவம் இது வரை –
இனி வியூஹ அனுபவம் –
ஷாட் குண்யாத் வாஸூதேவ பர இதி சபவாந் முக்த போக்ய பல ஆட்யாத்
போதாத் சங்கர்ஷண த்வம் ஹரசி விதநுஷே சாஸ்திரம் ஐஸ்வர்ய வீர்யாத்
ப்ரத்யும்ன சர்க்க தர்மவ் நயசி ச பகவந் சக்தி தேஜஸ் அநிருத்த
பிப்ரண பாசி தத்வம் கமயசி ச ததா வ்யூஹ ரங்காதிராஜ–39-
ஹே பகவந் ரங்காதிராஜ
சபவாந் த்வாம் –பூஜ்யரான தேவரீர்
வ்யூஹ–வாஸூ தேவாதி வ்யூஹ ரூபேண அவதரித்து
ஷாட் குண்யாத் –ஞானாதி ஆறு குணங்களோடு கூடி
வாஸூதேவ பர இதி –பர வாஸூ தேவர் என்று வழங்கப்பட்டவராகி
முக்த போக்ய அஸி –முக்தர்களுக்கு அநு பாவ்யராகின்றீர்
பல ஆட்யாத் போதாத் -பலத்தோடு கூடின ஞானத்துடன் -ஞான பலம் இரண்டு குணங்களுடன் கூடி
சங்கர்ஷண –சங்கர்ஷண மூர்த்தியாகி -ஜீவ தத்துவத்தை அதிஷ்டித்து
த்வம் ஹரசி –சம்ஹாரத் தொழிலை நடத்துகின்றீர்
விதநுஷே சாஸ்திரம் –சாஸ்திரத்தையும் அளிக்கின்றீர்
ஐஸ்வர்ய வீர்யாத்–ஐஸ்வர்ய வீர்யங்களோடே கூடி
ப்ரத்யும்ன –ப்ரத்யும்ன மூர்த்தியாகி -மனஸ் தத்வம் அதிஷ்டானம்
சர்க்க தர்மவ் நயசி ச –ஸ்ருஷ்டியும் பண்ணி தர்மத்தையும் ப்ரவர்த்திப்பிக்கிறீர்
சக்தி தேஜஸ்–சக்தி தேஜஸ் இரண்டையும் கொண்டு
அநிருத்த-அநிருத்த மூர்த்தியாகி
பாசி-ரக்ஷணத் தொழிலை நடத்துகிறீர்
தத்வம் கமயசி ச ததா –அப்படியே தத்வ ஞான பிரதானமும் பண்ணுகிறீர்
வாஸூ தேவ ரூபியாய் பரத்வத்தோடு ஒத்த -நித்ய முக்த அநுபாவ்யராய்க் கொண்டு ஷாட் குண பரிபூர்ணராய்
சங்கர்ஷணராய் ஞான பலங்களோடு கூடி ஸாஸ்த்ர பிரதான சம்ஹாரங்களைப் பண்ணி
ப்ரத்யும்னராய் ஐஸ்வர்ய வீர்யங்களோடு கூடி ஸ்ருஷ்ட்டியையும் ஸாஸ்த்ர ப்ரவர்த்தங்களையும் பண்ணி
அனிருத்ரராய் சக்தி தேஜஸ்ஸூக்களோடு கூடி ரக்ஷணத்தையும் மோக்ஷ ஹேதுவான
சத்வ ப்ரவர்த்தனத்தையும் பண்ணுகிறது என்கிறார்
பகவானுக்கு எல்லா இடத்திலும் எல்லா குணங்களும் உண்டு என்றாலும்
இவ்வாறு விவஸ்தை பண்ணுவது தத் தத் கார்ய அநு குணத்வ ஆவிஷ்காரத்தைப் பற்ற –
——————
ஜாக்ரத் ஸ்வப்ந அத்யலச துரீய பிராய த்யாத்ரு க்ரமவத் உபாஸ்ய
ஸ்வாமிந் தத் தத் ஸஹ பரிபர்ஹ சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா -40-
ஸ்வாமிந்
ஜாக்ரத்- பிராய–விழித்துக் கொண்டு இருப்பாரும்
ஸ்வப்ந -பிராய-உறங்கிக் கொண்டு இருப்பாரும்
அத்யலச துரீய பிராய -ஸூஷூப்தீயில் இருப்பாரும்
த்யாத்ரு க்ரமவத் உபாஸ்ய–த்யானம் செய்பவர்களின் ரீதிகளையுடைய அதிகாரிகளாலே உபாஸிக்கத் தகுந்தவராய்
தத் தத் ஸஹ பரிபர்ஹ –தகுதியான பரிச்சதங்களை யுடையவராய்
சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா -நாலு வகையான வியூஹ சதுஷ்ட்யத்தை வஹிக்கின்றீர்
ஒவ் ஒரு வ்யூஹ மூர்த்தியும் உபாஸிக்கத் தக்க நான்கு வகை என்று -16-வகையாகும் –
விழிப்பு நிலைகள் புலன்கள் இயங்கும்
கனவு நிலை -புலன்கள் இயங்கா மனஸ்ஸூ விழித்து இருக்கும்
ஆழ்ந்த உறக்கம் -மனஸூம் இயங்கா மூச்சு மட்டும் –
மூர்ச்சா மயக்க நிலை -பிராணனும் சீராக இல்லாமல்
நான்கு வ்யூஹங்கள் போல்
ஜாக்ரதாதி துரிய க்ரம சதுஷ்ட்ய விஸிஷ்ட தத் உபாசன அநு குணமாக தத் தத் மூர்த்தி அநு குண பரிகரமாக
விசிஷ்டராய்க் கொண்டு ப்ரத்யேகம் நான்கு வ்யூஹம் என்கிறார் –
ஜாகரணம் போலும் -ஸ்வப்நம் போலும் -அத்யாலச பத சப்தமான ஸூ ஷுப்தி போலும் –
துரீயமான மூர்ச்சை மரணங்கள் போலும் இருக்கிற
ஞான தார தம்ய அதிகார ரூபங்களான உபாசன க்ரமங்களையும் உடையவராலே உபாஸிக்கப் படுமவராய் –
அதுக்கு அநுகுண பரிகரங்களோடு கூடி
நான்கு வ்யூஹத்தையும் நான்கு விதமாக தேவரீர் வஹிக்கிறீர்
——————
ஆறு குணங்கள் –
123-மஹா தபா -அளவற்ற ஞானம் உடையவர் -1/6-
124-சர்வக -சம்ஹரிக்கப் பட்ட அனைத்தையும் தன்னிடம் தாங்கும் பலம் உடையவர் -2/6-
125-சர்வவித் -மறுபடியும் படைத்து பிரபஞ்சத்தையே அடையும் செல்வம் உடையவர் -3/6-
126-பாநு -உலகத்தை படைக்கும் போதும் விகாரம் இல்லாத வீர்யம் படைத்தவர் -4/6-
127-விஷ்வக்சேன -உலகையே காக்கும் சேனையை உடைய சக்தி படைத்தவர் -5/6-
128- ஜனார்த்தன -அடியார்களைக் காக்கும் போது எதிர்த்தவர்களை வேறு உதவி தேடாமல் அளிக்கும் தேஜஸ் உடையவர் -6/6-
———————————————–
மூவரின் முத் தொழில்கள் –
129-வேத -வேதங்களை அளிப்பவர்-
130-வேதவித் -வேதத்தின் ஆழ் பொருளை ஐயம் இன்றி அறிபவர் –
131-அவ்யங்க-சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்கிற வேத ஆறு அங்கங்களால் குறைவற்றவர் –
132-வேதாங்க -வேதத்தை தனக்கு திருமேனியாக உடையவர் –
133-வேதவித் -வேதத்தைக் கொண்டு அறியப்படுபவர் -வேத தர்மங்களை கடைப்பிடிக்கச் செய்து அதனால் அடையப் படுபவர் –
134-கவி -அனைத்தையும் எதிர் காலச் சிந்தனையோடு பார்ப்பவர் –
135-லோகாத்யஷ-தர்மத்தைச் செய்யும் தகுதி உள்ள மனிதர்களை அறிபவர் –
136-ஸூராத்யஷ -அவர்களால் பூசிக்கப் படும் தேவர்களை அறிபவர் –
137-தர்மாத்யஷ-வழி முறைகளான தர்மங்களையும் அறிபவர் -அதற்கு உரிய பயனை அறிந்து கொள்பவன் –
138-க்ருதாக்ருத -இவ் உலக மற்றும் அவ் உலக பயன்களை அளிப்பவன் –
——————————————————
நால்வரின் நான்கு தன்மைகள் –
139-சதுராத்மா -வஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்னன் அநிருத்தர் -என்று நான்கு உருவங்களை உடையவர் –
140-சதுர்வ்யூஹ-விழிப்பு கனவு நிலை ஆழ்ந்த உறக்கம் முழு உணர்தல் -ஆகிய நான்கு நிலைகளிலும் இருப்பவர் –
141-சதுர் தம்ஷ்ட்ர -பரவாஸூ தேவ உருவத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -இது மஹா புருஷ லஷணம்-
142-சதுர்புஜ -பர வாஸூ தேவ உருவத்தில் நான்கு கைகளை உடையவர் –
143-ப்ராஜிஷ்ணு -தன்னை உபாசிப்பவர்களுக்கு ஒளி விடுபவர் –
144-போஜனம் -பக்தர்களால் இனிய உணவாக இன்பமாக அனுபவிக்கப் படுபவர் –
145-போக்தா -பக்தர்கள் சமர்ப்பிக்கும் அமுதம் போன்ற பாயசம் முதலானவற்றை அன்போடு ஏற்று உண்பவர் –
146-சஹிஷ்ணு -தன் பக்தர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த குற்றங்களைப் பொறுப்பவர் –
———————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply