ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்
ஸ்ரீ பராசுர பட்டர் –
1-122-பரத்வம் சொல்லும் திரு நாமங்கள்
1-1- வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்—முதல் நான்கு திரு நாமங்கள்
1-2-சர்வ சேஷித்வம் -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நிர்வஹிக்கை -5-9 -ஸ்வாமித்வம் – சொல்லும் திரு நாமங்கள்
1-3–தோஷம் தட்டாத பரமாத்மா -10/11-திருநாமங்கள்
1-4-முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் -12-17 திரு நாமங்கள்-
1-5- முக்திக்கு உபாயமாய் உள்ளவை -18/19 –திரு நாமங்கள்
1-6-நியாமகன்-20-திரு நாமம்
1-7- சமஸ்த இதர விலஷணன் -21-65- திருநாமங்கள் –
1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் -66-88-திரு நாமங்கள்
1-9-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி –89-100 திரு நாமங்கள் –
1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122-திரு நாமங்கள்
—————
அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாக அபிரமேயாத்மா சர்வ யோக விநிஸ் ஸ்ருத –11-
வஸூர் வஸூ மநாஸ் சமாதமா சம்மிதஸ் சம
அமோக புண்டரீகாஷோ வ்ருஷ கர்மா வ்ருஷாக்ருதி –12
ருத்ரோ பஹூ ஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூசிஸ்ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வராரோஹோ மஹா தபா –13
——
அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாகபிர் அமேயாத்மா சர்வ யோக விநிஸ் ஸ்ருத –11-
————-
101-அச்யுத
தன்னைப் பற்றினாரை நழுவ விடாதவன் –
அப்ரஹ்மாத்மகம் -அவன் இல்லாத ஒன்றுமே இல்லையே –
அத்தைச் சொல்ல வில்லை
இங்கு அனுக்ரஹம் அருளுவதில் இருந்து நழுவாமல் பக்தர்களை கை விடாமல் இருப்பவன்
அச்யுதன் அமலன் என்கோ -நழுவு விடும் குற்றம் இல்லாதவன்
தேப்ய ப்ரபன்நேப்ய அநாபகத
அச்யுத
யஸ்மாத் ந ச்யுத பூர்வ அஹம் அச்யுத தேந கர்மணா
நான் எப்போதும் என் பக்தர்களைக் கை விடுவது இல்லை
இதனால் அச்யுதன் எனப்படுகிறேன்
தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி –ஸ்ரீ கீதை-6-30-
யார் என்னை எங்கும் காண்கிறானோ அவன் பார்வையில் இருந்து நான் மறைவது இல்லை
நத்யஜேயம் கதஞ்சன –யுத்த -18-3-நண்பன் என்று வந்தவனை நான் கை விட மாட்டேன்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –தோஷமே இருந்தாலும் மித்ர வேஷம் பூண்டு வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்
ஆபிமுக்யம் மாத்ரம் இருந்தாலும் அறிந்து -மித்ர பாவேன-சம்ப்ராப்தம்
கார்திகையானும் –முதுகிட்டு -பாணனை நிர்கதியாக விட்டு ஓடிப் போனவர்கள் போலே அன்று
அச்சுதன் -அமலன் -என்கோ -3-4-5-
தம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர்-எப்போதும் நழுவ விடாத சரித்திரம் உடையவன்
ஆஸ்ரிதர் இடம் இருந்து விலகாதவன்
-ஸ்ரீ பராசர பட்டர்
தம் ஸ்வரூப மகிமை முக் காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்
தேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
ஓம் அச்சுதாய நம
அடியார்களை விடாதவன் —மீண்டும் -320–557-நாமாவளி வரும்
————–
102-வ்ருஷாகபி –
கபி -வராஹம் -வராஹமாக தானே தோன்றி ரஷித்து அருளுபவன் -பரத்வ பரமான திரு நாமம் –
வ்ருஷா -தர்மம் -தர்ம ரூபி -அவதாரம் சொல்லவில்லை -வைகுண்ட நாதனே தர்ம ஸ்வரூபமாய் -ஸ்ரீ வராஹ மூர்த்தி
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத மூர்த்தி-ஞானப் பிரான் அல்லால் அல்ல -நான் கண்ட நல்லதுவே –
அச்யுத மேவ தர்ம வராஹ த்வேந சமர்தயதே
வ்ருஷா கபி
ததா அப நிருக்தம்
கபி வராஹ ஸ்ரேஷ்ட ச –தர்ம ச வ்ருஷ உச்யதே –தஸ்மாத் வ்ருஷாகபிம் பிராஹா -காஸ்யபோ மாம் ப்ரஜபேதி இதி
கபி -பதம் உயர்ந்த வராஹ ரூபம் உணர்த்தும்
தர்மம் என்பது வ்ருஷம் எனப்படும்
தர்மமே வடிவான என்னை வ்ருஷா கபி என்று காஸ்யப பிரஜாபதி கூறுகிறார்-(ரிஷி ப்ரோக்தம் இந்தத் திருநாமம்-தனக்கு கிடைத்த திரு நாமம் பற்றித் தானே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறான் )
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தை -10-10-7-
தர்மமே வடிவெடுத்த வராஹாவதாரம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தர்ம ரூபியாகவும் வராஹ ரூபியாகவும் இருப்பவர் -எல்லா விருப்பங்களையும் வர்ஷிப்பதால் தர்மம் வ்ருஷம் எனப்படும் –
தர்மம் பற்றியும் வ்யூஹ விபவ பரமான திருநாமங்கள் வரும் –
தர்மம் வளர்த்து -வ்யூஹம்
தர்மம் ரக்ஷணம் விபவம்
கம் -நீர் -அதில் இருந்த எடுத்தவர் ஆகையால் கபி -வராஹர் -வ்ருஷாகபி -தர்ம ஸ்வரூபரான வராஹர் -ஸ்ரீ சங்கரர்
தர்மத்தால் துன்பங்களைப் போக்குபவர் -அருளை வருஷிப்பவராய் -சுகத்தைப் பருகுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
ஓம் வ்ருஷாகபி நம
ஸ்ரீ வராஹ நாயனாராக பூமி உத்தாரணம் செய்து அருளினார்
———————–
103- அமேயாத்மா –
அறிய முடியாதவன் –அப்ரமேய -46-போலே –அனுக்ரஹ வெள்ளம் அளவிட முடியாதது
அங்கு ஸ்வரூப பரம் இங்கு அநுக்ரஹ வெள்ளம் அளவு காண முடியாதது என்கிறது
அஸ்மின் ஆஸ்ரித அநுக்ரஹ ஸ்ரோதஸி
இதி ந்யாயேந –அ மேயாத்மா –இயா நித்ய அபரிச்சேதய ஸ்வரூப
சேஷ சயம்- லோசனை அம்ருத நதி ஓடி வர–தவிக்கும் நமக்கு ஆலம்பனமாக ஆமோத ஸ்தம்பம் -மணத் தூண்கள்-
தாமோதரன் -ஸுலப்யம் அறிய முடியாத அளவு -பரத்வத்தால் ஏறிட்டுக் கொண்ட ஸுலப்யம்
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ-ஆகவே தான் இங்கு பரத்வ பரமான திரு நாமம்
அதோ ஜ்யாயாந் ச புருஷ -புருஷ ஸூக்தம்
தனக்கு ஒப்பு யாரும் இல்லாத காரணத்தால் அனைவரையும் விட உயர்ந்தவன் ஆவான்
பூயான் ச அத ஜனார்த்தன-எனவே ஜனார்த்தனன் அனைவரையும் விட உயர்ந்தவன்
பற்றுடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–எளிவரும் இயல்வினன் பிறர்களுக்கு அறிய வித்தகன் –
அடியவர்களுக்கு அருளும் திறத்தில் இவ்வளவு என்று அளவிட முடியாதவர்-ஸர்வதோ அதிக -ஸ்ரீ பராசர பட்டர்
இவ்வளவு என்று அளவிடமுடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்
முழுமையாக அறிய முடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் அமேயாத்மாய நம
அபரிச்சேத்யன் -யாரும் ஒரு நிலையன் என அறிய அரிய எம்பெருமான்
———————
104-ஸர்வ யோக விநிஸ் ஸ்ருத –
எல்லா உபாயங்களாலும் அடையப் படுபவன் -எந்த தசையிலும் ஆத்மாவுக்கு தஞ்சம் -நம்பத் தக்கவன்
கதம்
ஸர்வ யோக விநிஸ் ஸ்ருத
ஸர்வை ரபி ஸாஸ்த்ர லக்ஷணை -ஸ்வ மநீ –விகாபுரி கல்பிதைரபி- யோகை —
உபாயைர் –(ஸாஸ்த்ர விஹித -நம்மால் கல்பிக்கப்பட்ட -இரண்டும் சொல்லி
அஸாஸ்த்ரம் ஸ்ரத்தை உடன் செய்வது ஒன்றும் இல்லையே
முடிந்த அளவில் செய்வதையே இங்கு சொல்கிறது -)
விநிஸ் ஸ்ருத–விஸேஷேண வேத பரம குஹ்யரிவ நிஸ் ஸ்ருத ப்ராப்தும் யோக்ய (நன்கு அடைய யோக்யதை கொண்டவன் ஆகிறான் )ஸூஹ்ரஹ இதி வா —ஸ்வ புத்தி மாத்ர நிர்ஜ்ஞாத பரமாத்மா ஜகத் பிரபு ஸ்வ ஐஸ்வர்ய அனுபவ ப்ரீத ஞாதாரம் அநு சேவதே
யார் ஒருவன் இந்த ஜகத்தின் நாயகனான பரமாத்மாவை தனது ஞானம் மூலம் உள்ளது உள்ளபடி அறிகிறானோ
அப்படியாக அறிந்த பரமாத்மாவின் ஐஸ்வர்யத்தை தனது மனத்தால் அனுபவிக்கிறானோ
அப்படிப்பட்டவன் செய்கை மூலம் எம்பெருமான் மகிழ்ச்சி அடைந்து
இத்தகைய ஞானம் பொருந்திய அவனுடன் எப்பொழுதும் நின்று அவனை வாழ வைத்து அருளுகிறார்
யஸ்மாத் சத் பக்தி யுக்தா நாம் -ப்ரபந்நா நாம் க்ரமம் விநா- (க்ரமமாக செய்யா விட்டாலும் )பிரசாதம் ஏதி மந்திரேச து அசிராத் பாவிதாத்மநாம்(திரு உள்ளத்தில் நினைப்பவனுக்கும் சட்டென பலம் அருளுகிறார் )
கிம் புநர்வை க்ரியா ஞான சம்பூர்ணாநாம் து பவ்ஷ்கர ஸ்ரத்தா பக்தி பரானாம்ச போதிதா நாம் ச தேசிகை–பவ்ஷ்கர சம்ஹிதை
ஒரு சிலர் ஸாஸ்த்ரங்களில் கூறப்பட்ட விதி முறைகளை அறியாமல் தூய பக்தியை மட்டும் கொண்டவர்களாய் இருந்து
அனைத்து உயிர்களுக்கும் ஈஸ்வரனான எம்பெருமானை சரணம் அடையக் கூடும்
அவ்விதம் சரணம் புகுந்து மனதில் அன்புடன் த்யானம் செய்யத படி இருக்கக் கூடும்
இப்படிப்பட்டவர்கள் இடம் எம்பெருமான் விரைவாக ப்ரேமை கொள்கிறான்
இப்படிப்பட்ட இவர்கள் இடமே ப்ரேமையுடன் இருக்கிறான் என்றால்
ஆச்சார்யர் உபதேசம் பெற்று நல்ல அனுஷ்டானங்கள் நிறைந்தவர்கள் த்யானத்தில்
ஆர்வமும் பக்தியும் கொண்டுள்ளார் பக்கலிலே அதிகமான பிரேமை கொள்ளுகிறான் என்பதைச் சொல்லவும் வேணுமோ –
நியுக்த மனசா வாபி (மனத்தால் மட்டுமே நினைப்பவனுக்கும் )-யதி க்ருஷ்ணாதி மாதவ- கிம் னு நோத் மூலிதம் துக்கம் ஏதாவத் இதி நிச்சித இதி–ஸ்ரீ விஷ்ணு தத்வம்
திருமால் இடம் மனசை வைத்த நொடியிலே ஏற்றுக் கொள்ளுபவன் அவன் பெருமைகளை முற்றும் உணர்ந்து
தியானித்தால் பிரதிபந்தகங்கள் வேரோடு நீக்கப்படும் என்று கூறவும் வேண்டுமோ
கேசவா என்ன கெடும் இடராய எல்லாமே கெடுமே –
வாயினால் பாட -மனஸ் ஸஹ காரம் இல்லாமல் இருந்தாலும்
நம்பனை ஞாலம் படைத்தவனை -3-7-8-
இந்திரியங்களுக்கு அப்பால் பட்ட உன்னை -பிரமாணம் ஒன்றாலே அறிய வேண்டும் என்றால்
பெருமையை விட்டுக் கொடுக்காமல் இருந்தே -அர்ச்சாவதார -ஸகல மனுஷ நயன -விஷய தாங்கனாக திருவதரித்து வந்து
கண்களுக்கு விருந்தாக்கி -இந்திரியங்களுக்கு வசப்பட்டு நின்றாய் -கூரத்தாழ்வான்
எல்லா உபாயங்களிளாலும் எளிதில் அடையத் தக்கவர் -வேத ரஹஸ்யங்களை அறிந்து எளிதில் கிரஹிக்கவும் அடையவும் கூடியவர்
ஜகத் பிரபுவான மஹாத்மாவைத் தனது புத்தியைக் கொண்டு அறிந்தாலும்
அவர் தம் மஹிமையை அவன் அறிந்ததனால் அன்பு கூர்ந்து அவனை அநு சரிக்கிறார் -ஸ்ரீ பவ்ஷ்கரம் -ஸ்ரீ பராசர பட்டர்-
சாஸ்திரங்களில் கூறப்பட்ட விதி முறைகளை அறியாமல் தூய பக்தி கொண்டு சரணம் அடைந்து அன்புடன் த்யானிப்பவர்கள்
மேலே ப்ரீதியுடன் எம்பெருமான் அன்பு கொள்கிறான் என்றால்
ஆச்சார்ய உபதேசம் பெற்று சிறந்த ஞானம் அனுஷ்டானத்துடன் த்யானத்தில் ஆர்வமும் பக்தியும் உள்ளோர் இடம்
அதிகமான ப்ரேமம் கொள்கிறான் என்று சொல்லவும் வேண்டுமோ
எல்லாப் பற்றுக்களில் இருந்தும் வெளிப்பட்டவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும் பல யோகங்களால் அறியப் படுபவர் -பல ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட யோகத்தில் நின்றும் விலகினவர் -ஸ்ரீ சங்கரர்-
எல்லா யோகங்களும் வெளிவரக் காரணமாக இருப்பவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும்-உபாயங்களாலும்-
அவரவர்களுக்கு தோன்றும் உபாயங்களாலும் அறியப் படுபவர் -எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சர்வ யோக விநிஸ்ருதாய நம
யாரும் ஒரு நிலையன் என அறிய எளிய எம்பெருமான்
———————–
வஸூர் வஸூ மநாஸ் சமாதமா சம்மிதஸ் சம
அமோக புண்டரீகாஷோ வ்ருஷ கர்மா வ்ருஷாக்ருதி –12-
—————
105-வஸூ-
ஆஸ்ரிதர் இடம் வசிப்பவன் –
தேஷ் வியதா அப்யதி ப்ரீத்யா வஸ தீதி
வஸூ
வஸே
உணாதி ஸூத்ரம் –ஸ்ரு ஸ்வ்ருஸ் ரிஹி தப்ய ஸிவ ஸிஹ நிக்லிதி பந்திம மிப்யஸ் ச இதி உ –வஸி என்ற தாதுவுடன் உ இணையும் போது வஸூ உண்டாகிறது –
எண்ணிலும் வருவான் -என் ஊரைச் சொன்னாய் –
இத்தனை அடியனார்க்கும் இரங்கும் அரங்கனாகிய பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே-
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
பேரேன் என்று மன்னி நின்றான்
மீண்டும் 271–701 வரும்
சாதனாந்தரம் அனுஷ்ட்டித்தாலும் அவனிடம் மிகுந்த ப்ரேமையுடன் வசிக்கிறான்
அடியவர்களிடம் மிக்க அன்புடன் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லாம் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் -தாமும் அவற்றில் வசிப்பவர் –
வசுக்களில் அக்னியாக இருக்கிறேன் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ சங்கரர்-
எங்கும் வசிப்பவர் -ஞானத்தை வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் வஸூ-நம
மனத்துள்ளான்–மீண்டும் —271–701-நாமாவளி வரும்
———————-
106-வஸூ மநா –
ஆஸ்ரிதரை நிதியாக நினைப்பவன்-அடியார்களை தனக்கு வைத்த மா நிதியாக கொள்கிறான் –
வஸூநி நிகாவிவ தேஷு மநோ அஸ்யேதி
வஸூ மநா
ச மஹாத்மா ஸூ துர்லப –ஸ்ரீ கீதை -7-19-இத்தகைய மனிதன் மிகவும் கிடைப்பது அரிது
துயரறு சுடர் அடி -1-1-1- தனது துயர் போய் சுடர் விட்டு பிரகாசிக்கும் திருவடிகள் ஆஸ்ரிதர் ஒருவனை பெற்றால் –
ச மகாத்மா ஸூ துர்லப -என்று எண்ணுமவன்-
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -திரு நெடும் -1
கருகி வாடி இருந்தவை தளிர் விட்டனவே ஆழ்வார் தலை மேல் ஸ்பர்சத்தால்
சர்வ லோக மஹாத்மனா ராம -கொண்டாடப் படுபவன் அடியார்களை மஹாத்மா என்று கொள்கிறான்
அந்தாமத்து அன்பு செய்து –என் ஆவி சேர் அம்மான் -நிதியாக ஆழ்வாரைக் கொண்டானே
இத்தனை பெருமைகளும் பிரகாசப்பட்டன ஆழ்வாருடன் சேர்ந்த பின்பே
அடியவர்களை நிதி போல் நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
சிறந்த மனம் உள்ளவர் -விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் போன்றவற்றால் கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர்-
அடியவர்கள் அளிக்கும் நீரையும் ஸ்ய மந்தக மணியையும் சமமாக கருதுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் வஸூ மநா நம
ஆஸ்ரிதர்களை நிதியாக திரு உள்ளம் கொண்டவன் -ஆத்மாவாக கொள்ளுபவன்
———————-
107 –ஸத்ய –
சத்துக்களுக்கு அனுகூலன்
அவர்கள் நினைத்ததை தலைக் கட்டி வைப்பவன்
தேஷு ஸத் ஸூ ஸாதுரிதி ஸத்ய
அஷ்டாத்யாயீ –தத்ர ஸாது -ஏழாம் வேற்றுமையில் உள்ள சொல்லுக்குப் பின்னர்-யத் -என்பது இணைந்து ஸத்ய உண்டாகிறது
ஸத் புருஷர்கள் விஷயத்தில் மிகவும் ப்ரேமையுடன் உள்ளான் -என்றவாறு
பயன் அன்றாலும் பாங்கு அல்லர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்தி பணி கொள்வான்
மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் -மோக்ஷ பலன் -கிருபை காட்டி
பொய்யனாகும் -புறம்பே தொழுவார்க்கு எல்லாம் -கேட்டதையே அளித்து அனுப்புவான் இவர்களுக்கும்
பல நீ காட்டிப் படுப்பானே
இங்கு ஸத்யன் –
பக்தி முற்ற முற்ற மெய்யானாகும்
அடியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
அசத்தியத்திற்கு மாறானவர் -உருவத்துடனும் அருவத்துடனும் கூடியவர்
213–873-மீண்டும் வரும்
சத் -பிராணம் -தீ -அன்னம் -யம்-சூர்யம் -பிராணன் அன்னம் சூர்யன் ஆகிய ரூபம் உள்ளவர் -சாதுவானவர் -மாறாத ரூபம் உள்ளவர் -சேதன அசேதன ரூபமாக இருப்பவர் -சாதுக்களுக்கு உதவி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-
உலகங்களைப் படைப்பவர் -இருப்பை யுண்டாக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சத்யாய நம
————————-
108-ஸமாத்மா –ஸமாத்மனே –
ஆஸ்ரிதர்களை சமமாக எண்ணுபவன் –மேக வண்ணன் முகில் வண்ணன் அன்றோ
தேஷு குணாதிபிர் நிம்ந உந்நதேஷ்வப் யநலோசித விசேஷ மநா
ஸமாத்மா
யதா
சமோஹம் சர்வ பூதேஷு –ஸ்ரீ கீதை -9-29-அனைத்து உயிர்களிடம் நாம் ஸமமாகவே உள்ளேன்
வேடன் வேடுவச்சி வசிஷ்டன் குரங்கு -வாசி இன்றி-காபி சபரி-நின்னோடும் எழுவர் ஆனோம்
ஈடும் எடுப்புமில் ஈசன் -1-6-3-
பொது நின்ற பொன் அம் கழல் –
தம் மனத்தில் உயர்வு தாழ்வு இல்லாதவன் இங்கு
அடுத்த திரு நாமம் ஸம் மித –அடியார்கள் அளவுக்கு உடைபட்டு எட்டும்படி இருப்பவன் –
அபரிமித மாக இருந்தாலும்
அடியவர்களிடம் ஏற்றத் தாழ்வுகள் பாராமல் அனைவரையும் சமமாகக் கருதுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
விருப்பு வெறுப்பு முதலியவற்றால் மாறாத மனம் உள்ளவர் –எல்லா பூதங்களிடமும் சமமாக ஒரே ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
ஞானிகளுக்கு ஆத்மாவாக இருப்பவர் -லஷ்மி பிரம்மா வுடன் கூடியவர்
சாரமாய் லஷ்மியிடம் மனம் வைத்து இருப்பவர் -லஷ்மியின் மனத்தை தம்மிடம் வைத்து இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
ஓம் ஸமாத்மா நம
நித்ய சம்சாரிகளையும் நித்ய ஸூரிகளுக்கும் ஓக்க திரு உள்ளம் பற்றுபவன்
————————-
109-ஸம்மித –
அடங்கிய பொருளாய் இருப்பவன்
தைஸ் –ஸம்மித
த்யதிஸ் யதி இத்யாதி நேகார –அஸ்மத் தஸ் தஸ்த இதி ஸம்யக் பரிச்சின்ன
யதா
அஷ்டாத்யாயீ –த்யதி ஸ்யதி –நோ த்யதி ஸோ ஸ்யதி போன்ற தாதுக்களின் இறுதியில் உள்ள உயிர் எழுத்தானது இ என்று மாறுகிறது
ஊன ஷோடச வர்ஷோ மே ராமோ ராஜீவலோசந –பால -20-2-
தாமரை போன்ற திருக் கண்களை யுடைய எனது ராமன் பதினாறு வயது நிரம்பாத சிறுவன் ஆவான்
மம அயம் தநயோ நிஜ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-5-இந்தக் கண்ணன் எனக்கு அடங்கிய புத்ரன்-நிஜ-புத்ரனே -மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் –
தங்களுக்கு அடங்கி கட்டுப்பட்டவன் என்று அடியார்கள் உணரும்படி நடந்து கொள்பவன்
நம்முடைய கைகளுக்கு இவன் எட்டுபவன் என்று உணரும் படி உள்ளவன்
உன் மகனை வரக் கூவாய்
என் அவலம் போக்காய் ஆடுக செங்கீரை -சொன்னதை செய்யாமல் இருந்தால் அவலம் ஆகுமே
அலௌகிக காமம் -மா முனிகள் அறிந்து வியாக்யானம்
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே-
மே ராம -என்று தசரதன் சொல்லும் படி
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் –
அடியவர்களுக்கு அடங்கி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
நம்முடைய கைகளுக்கு எட்டுபவன் என்று உணர வைப்பவன்
உபாதி பேதத்தால்-எல்லாராலும் அளவுபடுத்தப் படுபவர் -ஆனால் ஸ்வயமாக அளவிடப் படாதவர் அசம்மித -என்றும் பாடம் -ஸ்ரீ சங்கரர்-
அசம்மித-உபநிஷத் -கட்டுப்படுத்த முடியாத அளவிட முடியாதவன் -அருளிச் செயல்களை ஆழ்ந்து பட்டர் வியாக்யானம்
பிரமாணங்களால் நன்கு அறியப் படுபவர் -மூ உலகங்களையும் அளந்தவர்
அசம்மித -என்ற பாடம் கொண்டு முழுமையாக எவராலும் அளவிட முடியாதவர் என்னவுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் ஸம்மிதாய நம
தேவகி யசோதா கௌசல்யாதிகளுக்கு தன்னை அடக்கி வைப்பவன்
——————-
110-ஸம –
எல்லார் இடமும் சமமாய் இருப்பவன்
தேஷ்வபி பரிசித அபரிசித- தீவ்ர மந்த ஸம் வேகித் வாத்- யவி கணய்ய கௌரவே ஸம இதி
கீழ் குணத்தில் தாரதம்யம் பார்க்காமல்
இங்கு பரிசித அபரிசித- தீவ்ர மந்த ஸம் வேகித் வாத்
உணாதி ஸூத்ரம் -ஸம ஷ்டம அவை கல்யே -ஓவ்ணாதி கோ அகார -குழப்பம் இல்லாதவன் என்னும் பொருள் தரும் ஸம் என்னும் தாதுவுக்கு அகாரம் சேர்ந்து ஸம என்றாயிற்று
சமோஹம் சர்வ பூதேஷு –
அன்பனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்-ஏழை எதனால் கீழ் மகன் என்னாது –இத்யாதி
அடியவர்களில் பழகினவர் -பழகாதவர் – ஆவல் அதிகம் உள்ளவர் – குறைவாக உள்ளவர்
போன்ற வேறுபாடுகளைப் பாராமல் ஒரே விதமான கௌரவம் வைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
எல்லாக் காலங்களிலும் விகாரமற்று இருப்பவர் –அல்லது–சஹா மா – லஷ்மியோடே கூடி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
லஷ்மீ வேதங்கள் பிரமாணங்கள் இவைகளுடன் சேர்ந்து இருப்பவர்
அவர்களுக்குத் தகுதியான பலன்களைத் தருபவர் –
எல்லா இடங்களிலும் எல்லா உருவங்களிலும் சமமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் -ஸமாய நம
ஆஸ்ரிதர்களுக்குள் வாசி பார்க்காதவன்
————————-
111-அமோக –
உறவு வீண் போகாதவன்–156 மேலும் வரும்
தேஷாம் அவிதத ஸ்பர்ச
அமோக
யதா
அமோகம் தர்சனம் ராம -ந ச மோக தவ ஸ்தவ- அமோகாஸ்தே பவிஷ்யந்தி- பக்திமந்த ச யே நர -இதி-யுத்த -120-31-
இராமா உனது தர்சனம் எப்போதும் பயன் அற்றுப் போவது இல்லை
யார் உன்னிடம் பக்தியுடன் உள்ளார்களா அவர்களுக்குப் பயன் கிட்டாமல் போவது இல்லை
பக்தர்கள் அமோகமாக இருப்பர் -எடுத்த கார்யம் வீணாகாதே
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -திருப்பாவை -28-
தமது சம்பந்தம் வீண் போகாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
பூசிப்பவர் துதிப்பவர் நினைப்பவர்க்கு வீண் போகாமல் எல்லாப் பலன்களையும் தருபவர்-ஸத்ய ஸங்கல்பன் -ஸங்கல்பம் மாறாதவர் -ஸ்ரீ சங்கரர்-
படைப்பு முதலியவை வீண் போகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் அமோகாய நம
தன்னையே பலமாக ஆஸ்ரிதர்களுக்கு கொடுப்பவன்
————————
112-புண்டரீ காஷ –
விண்ணோர்க்கு கண்ணாவான்
புண்டரீகம் பரம் தாம -நித்யம் -அக்ஷரம் -அவ்யயம்- தத் பவாந் புண்டரீகாஷா -உத்யோக பர்வம்
அழிவற்றதாகவும் குறைவற்றதாகவும் நித்யமாகவும் இருக்கும் பரமபதம் என்பது புண்டரீகம் எனப்படுகிறது
இது கண் போன்று இல்லாதால் நீ புண்டரீகாக்ஷன் எனப்படுகிறாய்-உம்மைக் கண்ணாகக் கொண்டு நித்ய ஸூரிகள் காண்கிறார்கள்
இதி புண்டரீகாஷா
நித்ய வைகுண்ட வாஸி நாம் த்ருஷ்ட்டி பூத இத்யர்த
யதா
திவி இவ சஷு –புருஷ ஸூக்தம் –பரமபதத்தில் உள்ளவர்களின் கண் போன்றவன்
ஆக பரமபதத்தில் உள்ளவர்களின் கண் போன்றவன் என்றதாயிற்று
திவீவ சஷூராததம் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -1-8-3-
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதலே-திரு விருத்தம் -97
புஷ்கராஷ தாமரைக் கண்ணன் –40 திரு நாமம் –
புண்டரீகம் எனப்படும் பரமபதத்தில் உள்ளவர்களுக்குக் கண் போன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
தாமரை போன்ற இரு கண்களை யுடையவர் -ஹ்ருதய புண்டரீகத்தில் பரவியிருப்பவர் –
அல்லது அங்கு பார்க்கப்படுபவர் –ஸ்ரீ சங்கரர்-
நரசிம்ஹ அவதாரத்தில் அக்னியை மூன்றாம் கண்ணாக யுடையவர் -தாமரை போன்ற
இரு கண்களை யுடையவர் -புண்டரீக முனிவருக்கு அருள் புரிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் புண்டரீ காஷாய நம
கண்ணாவான்
————————
113-வ்ருஷ கர்மா –
வ்ருக்ஷம் -தர்மம் -நற் செயலை செய்பவன் -தாப த்ரயத்தையும் குளிரச் செய்பவன்
ஏவம் ப்ரக்ருஷ்டஸ் யாப்யஸ் யாஸ்மதா தீநாம் அபி பூர்வோக்ததி ஸா ஸ்ரேயஸ் கரத்வாத் தர்ம ரூபமஸ்ய கர்மேதி
வ்ருஷ கர்மா
வ்ருஷ -ஸ்ரேஷ்ட தர்மம்
ஜன்ம கர்ம மே திவ்யம் –(113-114-ஜென்ம கர்ம இரண்டுமே ஸ்ரேஷ்டம் )
நம் போன்றவர்களுக்கும் பெரும் பேற்றை அளிப்பதால் தர்ம ரூபமான செய்கையை யுடையவர்-தாப த்ரயங்களை ஆற்றும் தன்மையான குளிர்ந்த செயல்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
தர்ம ரூபமான-நிமித்தமான -செய்கையை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-
புண்ய கர்மங்களை யுடையவர் -ஸ்ரீ கிருஷ்ணனாய் எருதுகளை அடக்கியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் -வ்ருஷ கர்மாய நம
தர்ம சமஸ்தானம் செய்பவன்
—————————
114-வ்ருஷா க்ருதி-
தர்மமே உருவானவன் -குளிர்ந்த திருமேனி உடையவன்
ததா ஆ க்ருத ரபீதி
வ்ருஷா க்ருதி
அதவா-தாப த்ரய நிர்வாபண -ஸூதா ஸேக-(அம்ருத கிரண )ஸீதல சேஷ்டித ஸாரு ரூபத்வாத்
வ்ருஷ கர்மா வ்ருஷா க்ருதி
வ்ருஷு ஸேச நே (தெளித்தல்)
யதா
ஸ்ரீ ஸாத்வதே பரத்யா நே
விஸ்வம் ஆப்யாயயன் -காந்த்யா -பூர்ணேந்த் வயுத துல்யயா -ஸாத்வத ஸம்ஹிதை —
ஆயிரக்கணக்கான பூர்ண சந்த்ர தேஜஸ் உடையவன்-
உலகம் அனைத்தையும் குளிர்ச்சி படுத்தியபடி உள்ளவன்
வபுஷா -ஸூந்தரேண ஏவ திவ்யேன- அவிக்ருதேந ச -முஞ்சந்தம் அநிசம் தேகாத் -ஆலோகம் ஞான லக்ஷணம்
பூர்வ கர்ம அநல ஆர்த்தாநாம் த்யாயினாம் கேத காந்தயே வதந இந்து சயோத்தேன ஹ்லாதயந் கோ கணேந து –பவ்ஷ்கார ஸம்ஹிதை
எவ்விதமான மாற்றமும் அடையாததும் அழகிய திவ்ய மங்கள விக்ரஹத்துடன் உள்ளான்
ஞானம் என்னும் ஒளியை வீசியபடி உள்ளான்
முற்பிறவியில் செய்த தீ வினைகள் என்னும் அக்னியின் மூலம் துன்பம் அடைந்து -மடீள்வதற்காக இவனைத் த்யானம் செய்ய
அவர்களின் துன்பம் நீங்கும் பொருட்டு பல பூர்ண நிலவுகளுக்கு அழகிய திரு முகத்தில் இருந்து
வெளிப்படும் குளிர்ந்த கிரணங்களால் மகிழ்வு ஊட்டுகிறான்
ததோ மஹதி பர்யங்கே -மணி காஞ்சன சித்ரிதே -ததர்ச கிருஷ்ணம் ஆஸீநம் -நீலம் மேரவ் இவ அம்புதம்–ராஜ தர்மம்
ரத்னங்களாலும் பொன்னாலும் இழைக்கப் பட்ட அழகான கட்டிலிலே கிருஷ்ணன் வீற்று இருந்தான்
இப்படியாக உள்ள அவனை மேரு மலையில் நீல மேகம் போன்று கண்டனர்
அறவனை ஆழிப்படை அந்தணனை -1-7-1-
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -8-5-1-
தாபத் த்ரயங்களைப் போக்கி அமுதம் பொழிவது போன்ற குளிர்ந்த திவ்ய ரூபம் யுடையவர் –
திரு மேனியும் தர்ம ரூபமாய் இருக்கும் -ஸ்ரீ பராசர பட்டர்-
குளிர்ந்த செயல்கள் -அழகான ரூபம் -என்பதால் வ்ருஷ கர்மா வ்ருஷ க்ருதி
வ்ருஷ -பெயர்ச் சொல்லாக தர்மம் -வினைச்சொல்லாக பொழிதல்
ஸம்பவாமி யுகே யுகே -தர்மத்தை நிலைநாட்ட அவதாரம் செய்து உருவம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-
எருதைப் போலே திடமான உடல் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் வ்ருஷ க்ருத்யே நம
தர்மமே வடிவானவன்
———————-
ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூசிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வராரோஹோ மஹா தபா –13-
மஹா தபா-தொடங்கி வ்யூஹம் -146 வரை-மேல் விபவம் –
————
115-ருத்ர –
ஆனந்த கண்ணீர் விடச் செய்பவன் -திவ்ய ரூபம் சேஷ்டிதங்கள் இவற்றால் உருகச் செய்பவன்-சாஷாத்தாகவே சொல்ல வந்த திரு நாமம் -அந்தராத்மாவைச் சொல்ல வில்லை ஸஹஸ்ர நாமத்தில் -ரோத நாத் -ருத்ரன் -11 ருத்ரன் -திருநாங்கூர் –
ஏவம் வித-(இப்படிப்பட்ட வ்ருஷ கர்ம-வ்ருஷா க்ருத -திவ்ய ஜன்ம திவ்ய கர்ம-திவ்ய மங்கள விக்ரஹமும் விளையாட்டுகளும் -கீதார்த்தமே இங்கும் )ரூப விவித சேஷ்டித த்ருத ஹ்ருதயான் ஸ ஆனந்த பாஷ்பான் குர்வன் ரோத யதீதி
ருத்ர(ஆனந்த கண்ணீர்-ஆஹ்லாத சீத நேத்ராம்பு- சில் என்றும் கோபத்தில் கண்ணீர் சூடாகவும் இருக்கும் என்பர் )
உணாதி ஸூத்ரம் —
ரோதே ர்ணி லுக் ச இதி ரக் ப்ரத்யயோ ணி லோபஸ் ச-ரோதி என்னும் வினை -அழுதல் பொருளில் –இத்துடன் ர ப்ரத்யயம் சேருகிறது
யதா–ஆஹ்லாத சீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் சதா பர குணா விஸ்ட –த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி -(இப்படிப்பட்ட பாகவத வர்களைக் கண்டு கொண்டு இருப்பதே நமக்கு கர்தவ்யம் )ஸ்ரீ விஷ்ணு தத்வம்
பகவத் அனுபவத்தின் மூலம் உண்டான மகிழ்ச்சி காரணமாகப் பெருகி நிற்கும் குளிர்ந்த கண்ணீர் கொண்டவனும்
மயிர்க் கூச்சல் எடுத்து எப்போதும் ஆவேசம் கொண்டவன் போல் உள்ளவனும்
ஆகிய ஒருவனையே சரீரம் கொண்ட அனைவரும் பார்க்க வேண்டும் -அவனே பார்க்கப்பட வேண்டியவன் என்றவாறு –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் -7-2-1-
வன் பொன்னிப் பேராறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் -பெருமாள் திரு -2-3-
தாய் எடுத்த சிறு கோலுக்கு அஞ்சி அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை
இன்பத்து இறுதி கண்டாளே -பெருமாள் திரு -7-8-
தானே அழுத படியாலும் அடியார்களை அழப் பண்ணுவதாலும் இவனே ருத்ரன்
உன்னிடம் வசப்பட்டவர் இடம் தானே நீ இவ்வாறு செய்தாய் -யசோதை உன்னை அழப் பண்ண –
அதை நினைக்கும் பக்தர்களை அழப் பண்ணுகிறாய் -கூரத்தாழ்வான் -அதி மானுஷ ஸ்தவம்
பர குணா விஸ்ட –த்ரஷ்டவ்ய-இருந்தான் கண்டு கொண்டே -ஆழ்வார் அழுது கொண்டே இருக்க -தானே
பரமாத்மாவிடம் ஈடுபட்ட ஜீவன் அழ வேண்டும்
பரர் -பிறர் இடம் ஈடுபட்ட அவன் அழுது காட்டினானே
இப்படிப்பட்ட திவ்ய ரூபத்தாலும் செயல்களாலும் பக்தர்களை நெஞ்சுருகி ஆனந்தக் கண்ணீர்
பெருக்கி அழச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
சம்ஹார காலத்தில் பிரஜைகளை அழித்து அழச் செய்பவர் -நன்மையைத் தருபவர் –
துன்பங்களையும் அவற்றின் காரணங்களையும் அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர்-
நோய் தீர்ப்பவர் -அழ வைப்பவர் -பறை முதலியவற்றிற்கு ஒலியைக் கொடுப்பவர் –
அடியவர்கள் செய்யும் துதிகளால் மகிழ்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் ருத்ரய்யா நம
அடியார்களுக்கு ஆனந்த கண்ணீர் பொழிய வைப்பவன்
————————
116-பஹூ சிரா
பல தலைகளை உடையவன்
பஹுநி ஸிராம்ஸி பரஸ் ஸஹஸ்ரம் பணா அஸ்யேதி
பஹு ஸிரா
சஹஸ்ர சீர்ஷா புருஷ -ஆதி சேஷனாய் பூமியைத் தாங்குபவன்
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் -8-1-10-
ஆயிரம் தலையையுடைய ஆதி சேஷனாக இருப்பவர் -விராட் புருஷனாய் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
பல தலைகளை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்-
எண்ணற்ற நாடிகளில் வசிப்பவர் -பல தலைகளை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் பஹு சிரஸாய நம
சஹஸ்ர சீர்ஷா இத்யாதி
—————–
117-பப்ரு –
பரிப்பவன் -தாங்குபவன் —சர்வ பூதானி மத் ஸ்தானி
ததா விதஸ் ஸன் பிபர் தீதி
பப்ரு(பல தலைகள் கொண்டவனாய் இருந்து கொண்டே தாங்குகிறார் )
உணாதி ஸூத்ரம்
குப்ரச்ச —இதி கு ப்ரத்யயோ த்வித்வம் ச -தாங்குவது என்ற பொருளில் –ப்ரு என்கிற தாது –கு ப்ரத்யயத்துடன் சேர்க்கிறது -இது தவிர ப என்பது இரண்டாகிறது -இதனால் பப்ரு என்றாகிறது
யஸ்ய சா சகலா ப்ருத்வீ பணா மணி சிகாருணா (அருணா சிகப்பு )பிபர்த்தி மாலாம் லோகா நாம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -யாருடைய தலையில் உள்ள ரத்னங்களின் தேஜஸ் மூலம் உலகம் மலர் மாலை போலே உள்ளதோ -உலகம் ஆதிசேஷனால் தாங்கப்படுகிறது-தாங்கும் பெருமை எல்லாம்- அநந்தன் திருநாமமும் திவ்ய மங்கள விக்ரஹமும் கொண்டு -பரவாஸூ தேவனுடையது என்பதற்காக இங்கு இந்தத் திரு நாமம் –
யோ அநந்த ப்ருதிவீம் தத்தே சேகர ஸ்திதி ஸம்ஸ்திதாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
மலர் மாலை போன்று உலகத்தை தாங்குகிறான்
நாகமேந்து மண்ணினை காத்து ஏகமேந்தி நின்ற நீர்மை -திருச் சந்த -6-
ஆதி சேஷனாக இருந்து கொண்டு உலகத்தை தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
உலகங்களைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்-
உலகங்களைத் தரித்து இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் -பப்ருவே நம
ஆதி கூர்மம் -ஆதி வராஹம் -தாங்கி அருளுபவர்
——————
118-விஸ்வ யோநி-
அனைத்து உலகத்தவருடன் தொடர்பு கொண்டவன்
இதம் அநந்த வபுஷா ஸாமாந்யம் ஸர்வ ஸாதாரணம் பக்த ஸம்ஸ்லேஷ விசேஷார்தம் வ்யவஸ்தாயதி
விஸ்வ யோநி
இதி விஸ் வேஷாம் பேஜு ஜாம் ஸ்வேந மிஸ்ரயி நேதி(ஆசை யுடையவர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் )
ஸாமாந்யம் ஸர்வ ஸாதாரணம்-எல்லாருக்கும் பொதுவான திருமேனி உடன் தொடர்பு -எல்லாருக்கும் கிட்டும் படி
உணாதி ஸூத்ரம் –யு மிஸ்ரேண -சேர்த்துக் கொள்ளுதல் என்ற பொருள் கொண்ட யு என்னும் தாதுவில் இருந்து யோநி வருகிறது
இதே போல் வஹி ச்ரி ச்ரு யு த்ரு க்லா ஹாத் வரிப்யோ நித் இதி நித் ப்ரத்யயா — போன்ற தாதுக்களுடன் இணைந்து
வஹ்நி ச்ரேணி ச்ரோணீ யோநி த்ரோணி ச்லாநி ஹாநி தூர்ணி –போன்றவை உண்டாகின்றன –
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
அன்பனாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
அணியனாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்—9-9-10-6/7/8/
சரணம் -ரஷகன் அன்பன் -தோஷம் காணாதவன் மெய்யன் -வேண்டியது கொடுப்பவன் அணியன் சுலபன்-
அடைந்தவர்கள் எல்லாரையும் தம்மோடு ஒன்றாகக் கொள்பவர் -திரு வநந்த ஆழ்வான் திரு மேனியோடு சமமாக
பக்தர்களோடு கூடி இருப்பதற்காக எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் படியைச் சொல்லுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
தாங்குவது கீழே சாதாரணம் -இங்கு அண்டின அடியவர்களை அணைத்துக் கொள்கிறான் என்கிறது
உலகங்களுக்குக் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
உலகுக்கு அல்லது வாயு தேவனுக்கு காரணமாக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் விஸ்வ யோநியே நம
ஸ்ருஷ்டித்த பின்பு ஸ்திதி பாலனம் செய்து அருளுபவர்
———————-
119-ஸூசி ஸ்ரவா
நல் வார்த்தைகளைக் கேட்பவன் –ஸூசி -தூய்மை பெற்றது
தத் யுக்த அந்ய வஸ்யம் ஸ்ருணோதீதி
ஸூசி ஸ்ரவா –
ஸூசீநி ஸ்ரவாணீயாநீ ஸ்ருணோமீஹ தனஞ்சய ந ச பாபாநி கிருஷ்ணாமி ததாஹம் வை ஸுசீ ஸ்ரவா–சாந்தி பர்வம்
அடியார்களின் இனிய சொற்களை கேட்பதாலேயே-ஸுசீ ஸ்ரவா– என்ற திரு நாமம் கொண்டேன்
இதி
பகத் யுப ஹ்ருத்யம் ஹி ஸூசி
யதா
விதுராந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச -உத்யோக பர்வம்–9-43-
தோஷங்கள் ஏதும் இல்லாதவையாயும் சிறந்த தன்மை கொண்டதுமான விதுரரால் அளிக்கப் பட்ட உணவை கிருஷ்ணன் உண்டான்
பத்ரம் புஷ்பம் தோயம் பலம் அஸ்நாமி -உண்கிறேன் சொல்லாய் இருந்தாலும் -அனுபவிக்கிறேன் –
தர்ம்யா ரம்யா ச அர்த்தவதீ விசித்ரார்த்த பத அக்ஷரா ஸ்ருண்வதோ விவிதா வாசஸ் விதுரஸ்ய மஹாத்மன
அகாமஸ்யைவ க்ருஷ்ணஸ்ய சா வ்யதீயாய சர்வரீ-உத்யோக பர்வம்
விதுரரின் சொற்கள் தர்மங்கள் நிறைந்தவையாயும் -இனிய பொருள் யுடையவையாயும் –
மென்மையான எழுத்துக்கள் கொண்டவையாயும் இருந்தன-
இவற்றைக் கேட்டபடியே இருந்த கிருஷ்ணனுக்கு இனிமையாயும் வேண்டாத சொற்கள் எதுவும் இல்லாமலும் இருந்தன
இதனால் நேரம் போனதே தெரியாமல் இரவு முழுவதும் அவற்றைக் கேட்டபடியே இருந்தான் –
மடி தடவாத சோறு -மகா மதி விதுர –இதுவே தூய்மை –ஸூசி-
இன் கவி பாடும் பரம கவிகளான ஆழ்வார்களின் ஈரச் சொற்களை உகந்து கேட்பவன்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே-4-5-10
இன்ப மாரி -இன்பம் பயக்கும் மேகம் -இன்பப் பாக்களை வர்ஷிக்கும் -அடியாருக்கும் சர்வேஸ்வரனுக்கும் இன்பம் பயக்கும்
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -பெரிய திரு மொழி -6-10-10-
மா முனிகள் வாயிலாக ஓர் ஆண்டு ஈடு கேட்டருளினானே-
நின் தனக்கும் குறிப்பாகில் கேட்கலாம் கவியின் பொருளே
தன் சரிதை கேட்டானே கண்ணன் இங்கும்- மிதிலைச் செல்வி லவகுசர்
நம்பெருமாள் ஒரு வருஷம் ஈடு கேட்டு அருளி –
திருவாறன்விளையில் திருமொழி கேட்டான்
இவை எல்லாம் ஸூஸி ஸ்ரவா
என் அடியார் அது செய்யார் -அவள் சிதைக்குரைத்தாலும் கேளான் அன்றோ
இளைய புன் கவிகளானாலும் எம்பிராற்கு இனியவாறு ஆகுமே
அடியார்களின் இன் சொற்களைக் கேட்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
பரிசுத்தமான நாமங்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-
புனிதமான புகழை யுடையவர் -செவிக்கு இனிய சொற்கள் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் ஸூசி ஸ்ரவாய நம
பாவனமான ஆஸ்ரிதர்களின் இனிய வாக்குகளைக் கேட்டு அருளுபவர் –
———————–
120- அம்ருத –
ஆராவமுதன்-அபர்யாப்த்த அம்ருதம் -என்னுள் கலந்து ஒழிந்தோம் -தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திக்கும் விஷயம்-பிராப்தம்
தேஷாம் நிரவதிக மாதுர் யேண –ஜரா மரண வாரணேந-
ஸதா ஸேவாயாம் அபி அத்ருப்தி கரத்வேந வா
அம்ருத
யதா
அம்ருதஸ்ய இவ ந அத்ருப்யன் ப்ரேஷமானா ஜனார்த்தனம் –ஆரா வமுதம் போன்றவனை
சதா பஸ்யந்தி பண்ணிக் கொண்டு ரிஷிகள் இருந்தார்கள்
காணத் தெவிட்டாத ஆரா அமுதம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே -2-5-4
ஆரா வமுதே அடியேனாவி அகமே தித்திப்பாய் -5-8-10-
எக் காலமும் சேவித்தாலும் ஆராவமுதம் -சம்சாரம் கழித்து நித்ய அனுபவம் அளிப்பவன் -ஸ்ரீ பராசர பட்டர்-
அழிவில்லாதவர் -ஸ்ரீ சங்கரர்-
அளவற்ற சாஸ்த்ரங்களுக்கு விஷயமாக இருப்பவர் -அனந்த சயனத்தில் இருபபவர்-அழிவில்லாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் அம்ருதாய நம
ஆராவமுதாய் ஆஸ்ரிதர்களுக்கு அமைத்துக் கொள்பவன்
———————
121–ஸாஸ்வத ஸ்தாணு –
என்றும் நிலைத்து இருப்பவன் –ஸாஸ்வத –நித்யமானவன்-ஸ்தாணு –நிலையானவன் இரண்டு பதங்கள் -கீழ்ச் சொன்ன அம்ருத விளக்கம் இந்தத் திரு நாமம்
ஈத்ருஸ ஸக்தி லேஸேந கலு சாகர சார அப்யம்ருதத்வ முபசர்யதே–
ததோ விசேஷமாஹ
ஸாஸ்வத ஸ்தாணு
ஸ்வயம் நித்ய போக்த்ருப்யோ (அ)நபாஹார் யஸ் ச அபுநரா வ்ருத்தி யோக்யத்வாத்
அந்யத்த யம்ருதம் அநித்யம் ஸக்ருத் ஸேவ்யம் ச –
தேவர் அமிர்தம் போலே பிறர் கடத்திக் கொண்டு போகாதபடி நிலைத்து இருந்து தன்னை அனுபவிக்கக் கொடுப்பவன்
தேவ லோக அமர்த்தம் ஒரு தடவையே பானம்
இது சதா பச்யந்தி அம்ருதம்
தன்னையே அருளுமவன்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -10-7-2-
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -அமுதம் உண்டு களித்தேனே -10-8-6-
அளப்பரிய ஆராவமுதமே அரங்கம் மேய அந்தணன்
அந்த உப்புச்சாறு -அம்ருத -வ்யாவ்ருத்தி –
தூய அமுதை பருகிப் பருகி மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே
தூய -நித்யம்
பருகி பருகி -ஆராவமுதம் அன்றோ ஸ்தாணு -நிலைத்து இருக்கும் அம்ருதம் -அபஹரிக்க முடியாதே
அமரத்வம் மட்டும் அது -இதுவோ மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே
இதுவே அம்ருத ஸாஸ்வத ஸ்தாணு
இடைவீடு இன்றி மன்னி- ஸாஸ்த்வத ஸ்தாணு
தேவ அமர்த்தம் போலே அன்றி நித்யமாகவும் அபகரிக்க முடியாதவராகவும் அடியவர்களிடம் நிலையாகவும் இருபபவர் –
இந்த ஆராவமுதம் கொண்டு நீ வேண்டாம் -உப்புச் சாறு அமையும் -ஒரு முறை உண்ணக் கூடியது அநித்தியம் -ஸ்ரீ பராசர பட்டர்-
அழிவில்லாமல் நிலையாக இருபபவர் -ஸ்ரீ சங்கரர்-
முக்தர்களுக்கு ஸ்வாமியாகவும் சேரும் இடமாகவும் இருபபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சாஸ்வத ஸ்தாணுவே நம
ஆச்ரித ரக்ஷண தீக்ஷை -அசைக்க ஒண்ணாத விரதம் கொண்டவன்
மீண்டும் –57–28-நாமாவளி வரும் –
——————–
122-வராரோஹா –
வரம் -மிக உயர்ந்த –
ஆரோஹணம் -பகவத் பிராப்தி
மேலான அடையத் தக்கவன் -பரம பத நாதன் -பர வாசுதேவன்
தஸ்மாத்(கீழ் ஸாஸ்த்வ அம்ருதம் ஸ்தாணு அம்ருதம் என்றதாலேயே )
வாரா ரோஹ
வரம் -உத்க்ருஷ்டம் -ஆரோஹணம் -ஸ்வ பிராப்தி ரஸ்யேதி
அந்யத்தி ஸர்வம் அவரம்
யதா
ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந -இதி(ரிஷி சிஷ்யப் பிள்ளைக்கு சொல்வது -நான்முகப் பதவியும் நரகத்துக்கு சமம் -பரமாத்மாவின் ஸ்ரீ வைகுண்டம் -ஒப்பிட்டால் )
விண்ணவர்க்கு நற் பொருள் தான் நாராயணன் -நான் திரு -13-
தன்னை வந்தடைவதே சிறந்த புருஷார்த்தம் -மற்றவை அனைத்தும் தாழ்ந்த புருஷார்த்தங்கள் –
வரம் ஆரோஹணம்–பரம புருஷார்த்தம் என்றவாறு
தம்மிடம் ஏறுவது எல்லாவற்றிலும் சிறந்ததாக இருப்பவர்-அடையும் உயர்ந்த இடம் அடைந்தவர்களுக்கு மீட்சி இல்லை -சிறந்த அடையாளங்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்-
சிறந்த வாகனத்தில் ஏறுபவர் -அரங்களை-ஆயுதங்களை உடையவர்களைக் காட்டிலும் உயர்ந்த தீயவர்களை அழிப்பவர்-
ஓம் வராரோஹாய நம
பரம புருஷார்த்தமாக இருப்பவன்
விஸ்வம் தொடங்கி இது வரை -சேஷி ப்ராப்யம் ஜகத் காரணம் மேன்மைகள் பலவற்றையும் -சொல்லி பரத்வம் பிரகரணம் நிகமனம்
———-
இங்கு தொடர்ந்து பரத்வம் விபவம் வியூஹம் ஆகியவை விரித்துக் கூறப் பட்டுள்ளது -இதுவரை பெரும்பாலும் பரத்வம் கூறப்பட்டது
கிமேகம் தைவதம் லோகே-எது உயர்ந்த ஒரே தெய்வம் -என்றும் கிம் வாபி ஏகம் பாராயணம் –எது அடையப்பட வேண்டிய ஒரே உயர்ந்த இலக்கு -என்றும் கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கும் அவற்றின் பதில்களும் பெரும்பாலும் இதில் முடிகின்றன
இனி ஸ்துவந்த கம் –யாரை ஆராதிப்பது -எனபது முதலாக உபாய விஷயமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விஷயமாக வ்யூஹம் சொல்லப் படுகிறது –
அதில் வாஸூதேவன் என்ற திரு நாமம் பரத்வத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது –
அடுத்து வரும் மஹா தப என்பதன் மூலம் ஸங்கர்ஷணன் பற்றிக் கூறப்படுகிறது
இப்பொழுது சங்கர்ஷணன் விஷயம் சொல்லப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந –சாந்தி பர்வம்-பீஷ்மர் யுதிஷ்டரன் இடம் கூறுவது
பரமாத்மாவின் ஸ்ரீ வைகுண்டத்தை ஒப்பிடும் போது ஸ்வர்க்காதிகளும் தாழ்வான நரகம் போன்றவையே யாகும்
பர வ்யூஹ விபவ ஆத்மநா த்ரிவிதம்
பரம் ப்ரஹ் மேதி பாகவத ஸித்தாந்த -தத்ர பரம் நாம அகார்யம் கார்யாந வச்சிந்ந பூர்ண ஷாங்குண்ய மஹா ஆர்ணவோ த் கலிகை காதபத் ரீக்ருத
நிஸ் ஸீம நித்ய போக விபூதிகம் முக்தோபஸ் ருப்யம் அநவ்பாதிகம் அவஸ்தா நாம்
வ்யூஹஸ் ச
முமுஷு ஸிஸ்ருஷயா ப்ரதேய ஸ்ருஷ்டி ஸ்திதி லய
ஸாஸ்த்ர ததர்த்த தத் பலாநி
த்யாந ஆராதநே லீலா சேதீத் ருஸ
கார்ய உப பக்த விபக்த பர குண ரூப வ்யாபார ஸீகர வ்யூஹ நிர்வாஹித லீலா விபூதிகம்
முக்தி ஸாதகம் சதுர் கா அவஸ்தா நாம்
பர ப்ரஹ்மமானது
பரம் வ்யூஹம் விபவம் என்று மூன்று நிலைகளாகத் தன்னையே பிரித்துக் கொண்டு
உலகோரை அனுக்ரஹிப்பது என்பதே பாஞ்சராத்ர ஸித்தாந்தம்
அதில் பரமாவது
காரியங்களில் தான் சேராமலும்
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும் ஆறு குணங்களும்
அந்த அந்தக் கார்யங்களுக்குத் தக்கபடி குறுகாமல் நிரம்பிக்
கருங்கடல் போல் அலை மோதி இருக்கும் படி பிரகாசிக்கும் இடமாகிய
அளவற்ற
பரமபதம் -நித்ய விபூதி -என்னும் ஸ்ரீ வைகுண்டத்தை ஆளுவதும்
முக்தி பெற்றவர்கள் சேரத்தக்கதும்
மற்ற உபாதிகளாயுள்ள ப்ரக்ருதி சம்பந்தங்கள் அணுகக் கூடாதுதமான முதல் நிலை
வ்யூஹமாவது
மோக்ஷத்தை விரும்புபவர்களை யுண்டாக்குவதற்கும்
அதற்கு உரிய ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்வதற்கும்
மோக்ஷத்துக்கு வேண்டிய ஸாஸ்த்ரங்களையும்
அவற்றின் பொருள்களையும்
அவற்றினால் உண்டாகும் பலன்களையும்
த்யானிப்பதற்கும்
ஆராதிப்பதற்கும் உரிய க்ரமங்களையும்
தனக்கு ஒரு விநோதத்தையும் உண்டுபண்ணும் படியாக
மேற் சொன்ன பர ரூபத்தில் உள்ள வியாபாரங்களில் சிந்தின துளிகளை பிரித்து எடுத்துக் கொண்டு
அவற்றினால் லீலா விபூதி எனப்படும் இவ்வுலகத்தை நடத்தியும்
முக்திக்கு ஸாதனத்தை அளித்தும்
வாஸூ தேவ -ஸங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்த -என்கிற
நான்கு உருவங்களாகப் பகுத்துக் கொண்டு இருக்கும் நிலை
விபவமாவது
மேற் கூறிய வ்யூஹங்களின் குணங்களில் ஏக தேசங்களுடன்
தேவ
மனுஷ்ய
விலங்கு
ஸ்தாவர
முதலிய ஜாதிகளிலும்
தனது இச்சையாலே அவ்வற்றைப் போன்ற தேகம் எடுத்து அவதரித்து
விபவஸ் ச
தச்சாய ஸூர நர திர்யக்காதி
ஸ்வ விபவ ஸஜாதீய ஐச்ச ப்ராதுர் பாவ வர்க
ததா ச ஸ்ரீ ஸாத்வதே
ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
நாநா க்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் – சாத்துவத சம்ஹிதை
ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே
தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
மத்ஸ்ய கூர்மாதயா
அந்யே து ருஷ்யாதிவி ஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந யதா
பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா
அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
யதா அர்ச்சாவதார
இதி சதுர்த்தா
நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் தத பேத உபதேசாத்
ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்
அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது
புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்
நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநா ஸ்வ பரி கண நாத்
தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச
ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்
ப்ராதுர் பாவ விசேஷாதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே
அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்
தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்
ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்
இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்
இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் தத் அம்ச பூதஸ் ஸந
விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
அம்ச ஸப்தஸ் சைதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத
அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்
ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதீதரஸ்ய
யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
தேவஸ்ய அலைசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
யுகங்களின் முடிவில்
சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்
அத்ராந்தர ஸப்தோ பேத வசந
இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்
ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்
ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்
அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச
புநரபி தாத்ருஸ லக்ஷணம்
ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வதா காராந்தர மாக்ருத
யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம்
ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
அப்யயை பிரபவாக் யைஸ்து கௌண முக்யை ஸூ ரேஸ்வரை
இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே
ததா முமுஷு பிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நஷேதஸ் ச
ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது
யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
ஜ்ஞாத் வைவம் பக்தி ஸா கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-
ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போம் கோப கரண தயா
பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்
இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீ நம் அவ திஷ்டதே
வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
காலோபி யந்தி யந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக
முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
ஜீ முதாச்சா அகிலா நாமா து அப்சரோ கண உத்தம
ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
சந்த்ரார்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச
அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி பண்டிதந்யாய பண்டிதம் அந்யாயாம்
ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே
———————————————————
101-அச்யுத -சரண் அடைந்தோர்களை விட்டு நீங்காதவன்
102-வ்ருஷாகபி -தர்மத்தின் உருவமாக ஸ்ரீ வராஹமாக பிறந்தவர்
103-அமேயாத்மா -தன் அடியார்களுக்கு எவ்வளவு செய்தார் என்று அளவிட முடியாதவர்
104-சர்வயோக விநிஸ்ருத -அனைத்து உபாயங்களாலும் அடையப் படுபவர்
105-வசூ-சிறிது அன்பு காட்டுபவன் இடம் வசிப்பவர் –
106-வசூ மநா-பக்தர்களை விலை மதிப்பில்லாத செல்வமாகக் கொள்பவர் –
107-சத்ய -தன் அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர் –
108-சமாதமா -ஏற்றத் தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாகக் கருதுபவர் –
109-சம்மித -அடியார்களுக்கு அடங்கியவர் –
110-சம -சரணம் அடைந்தவர்களுள் புதியவர் பழையவர் என்று வேறுபாடு பார்க்காதவர் –
111-அமோக -தன்னுடைய தொடர்பு வீணாகாதவன்-பக்தி வீணாவது இல்லை –
112-புண்டரீகாஷ – புண்டரீகம் என்னும் வைகுந்தத்தில் உள்ளோர்க்குக் கண் போன்றவர் –
113-வ்ருஷகர்மா -நம்மை நன்னெறிப் படுத்தும் தர்மமான செயல்களை உடையவர் –
114-வ்ருஷாக்ருதி -தர்மமே உருவானவர் -அமிர்தம் போன்ற குளிர்ந்த உரு உடையவர் –
115-ருத்ர -பக்தர்களை நெஞ்சு உருக்கி ஆனந்த கண்ணீர் விட வைப்பவர் –
116-பஹூ சிரா –ஆதி சேஷனைப் போலே எண்ணிறந்த தலைகளை உடையவர் –
117-பப்ரு -ஆதி சேஷ உருவில் உலகைத் தாங்குபவர் –
118-விஸ்வ யோனி -தம்மை அடைந்தவர்களை நெருக்கமாக கூட்டிக் கொள்பவர் —
119-சூசி ஸ்ரவா -தன் பக்தர்களின் இனிய தூய்மையான சொற்களைக் கேட்பவர் –
120-அம்ருத -முக்தி அளிக்கும் ஆராவமுதானவர் –
121-சாஸ்வதஸ் தாணு -தேவ லோகத்து அமுதம் போல அல்லாமல் நிலையானவர் –
122-வராரோஹா -மிகச் சிறந்த அடையும் பொருளாக இருப்பவர் –
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply