ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யான அவதாரிகை தொகுப்பு -நாலாம் பத்து —

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம்
பன்னியிவை மாறன் உரைப்பால் –31-

மாறன் உரைப்பால் போம் –உயற்பாலவே கிரியை வரவழைத்துக் கொள்ள வேண்டும் –அறியப்பட்டன என்றுமாம்-

இதில் ஐஸ்வர்யாதிகளின் அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களை பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
சீர் பரவப் பெற்ற நான் -என்று-கீழ் ஸ்ரீ பகவத் அனுபவத்தாலே ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார்
அந்த ஹர்ஷத்தாலே இவ் விஷயத்தை ஒழிய ஐஸ்வர்யாதிகளிலே மண்டி இருக்கிறவர்களைக் குறித்து
மீளவும் இவற்றின் யுடைய அல்ப அஸ்திரத்வாதிகளாகிற தோஷங்களை அறியாதே
இவற்றிலே மண்டி இருக்கிறார்கள் என்று இவற்றின் தோஷங்களைப் பரக்க பேசா நின்று கொண்டு
பரம புருஷார்த்த பூதனான ஸ்ரீயபதியின் திருவடிகளை ஆஸ்ரயுங்கோள் என்று
பிறருக்கு உபதேசித்துச் செல்லுகிற -ஒரு நாயகத்தின் அர்த்தத்தை சங்க்ரஹித்து
ஒரு நாயகமாய் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

————-

பாலரைப் போல் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ —32-

இதில்-தேச கால விப்ரக்ருஷ்டமான அவன் படிகளை-தம் தாம் தேச கால விசிஷ்டமாம் படி
அனுபவிக்க வேண்டும் என்று ஆதரித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
மூன்று களையும் பறித்து சங்காயுமும் வாரின பயிர் சதசாகமாகப் பணைக்குமா போலே –
வீடுமின் முற்றவும்–சொன்னால் விரோதம் –ஒரு நாயகம் – என்ற மூன்று திருவாய் மொழிகளிலே சம்சாரிகளைக் குறித்து
உபதேசித்த இடத்தில்-அவ் உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே
தமக்கு ரசாந்தரங்களாலே அபி பூதனாய்க் கிடந்த முடியானேயில் விடாய்க்கு உத்தம்பகமாய்
பக்தி சத சாகமாகப் பணைக்க-அத்தாலே தேச கால விபக்ரஷ்டமான அவன் படிகளை
இப்போதே கண்டு அனுபவிக்க வேண்டும் என்னும் அபேஷை பிறந்து-அபேஷித்த படியே அனுபவிக்கப் பெறாமையாலே
தாம் நோவு பட்டு சொல்லுகிற படியை அந்யாப தேசத்தாலே அருளிச் செய்த
பாலனாய் ஏழு உலகின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் -பாலரைப் போலே -இத்யாதியாலே -என்கை –

—————–

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத் துவாதிதனை -மேவிக்
கழித்தடையைக் காட்டிக் கலந்த குணம் மாறன்
வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் —33

ஸ்ரீ பட்டர் நிர்வாகம் -கால உபாதி நிரசன குணம் –

இதில் கால உபாதியைக் கழித்து அனுபவிப்பித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
இப்படி தேச கால விப்ரக்ருஷ்டங்களானதன் படிகளை அனுபவிக்க வேணும் என்று ஆசைப் பட்ட இவர்க்கு
கால சக்கரத்தான் ஆகையாலே கால உபாதியைக் கழித்து வர்த்தமான காலம் போலே யாக்கிக் கொடுத்து
இவர் சத்தையே தனக்கு எல்லாமாக இருக்கிற தன் பிரணயித்வ குணத்தையும்
அவன் அனுபவிப்பிக்கவே எல்லாம் பெற்றாராய் இந்த பிரணயித்வ குணத்தையும் அனுபவித்து
அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே அத்தையே பேசிச் செல்லுகிற கோவை வாயாளின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -கோவான ஈசன் -இத்யாதியால் -என்கை –

———————–

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு—-34-

இதில் சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகவே பிரமித்து பேசின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில் –
கீழ் – காதல் மையல் ஏறினேன் -என்று பிரணயித்வ குணத்தை அனுபவித்து விளைந்த
ப்ரீதி பிரகர்ஷம் ஆஸ்ரயத்தையும் அழிக்கும் படி கரை அழித்துப் பெருக
அத்தை அரை ஆறு படுத்துக்கைக்காக அவன் பேர நிற்க -பிரிந்தது அவனை ஆகையாலே அவசன்னராய்
ஸ்ரீ ராம குணங்களுக்கு இட்டுப் பிறந்த ஸ்ரீ பரத ஆழ்வான்-ஒரு வேடன் வாய் இட்டு
ஸ்ரீ ராம சரிதத்தைக் கேட்டு தரித்தால் போலே இவ் வாழ்வாரும் அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும் அவனே என்று பிச்சேறும் படி தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷத்தை
அன்யாபதேசத்தாலே பேசின
மண்ணை இருந்து துழாவி -யின் -அர்த்தத்தை-மண்ணுலகில் -இத்யாதியால் -அருளிச் செய்தார் -என்கை –

————————–

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-

இதில் அப்ராக்ருத விபூதியில்-அசாதாராண ஆகாரத்தைக் காட்ட அனுபவித்து ஹ்ருஷ்டராகிற படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
வல்வினை தீர்க்கும் ஸ்ரீ கண்ணனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சத்ருச சம்பந்த வஸ்துக்களையும் அவனாகவே
அனுசந்திக்கும்படி பிறந்த இவருடைய பித்து சவாசனமாகத் தீரும்படி
சர்வ தேவ நமஸ்காரம் ஸ்ரீ கேசவனுக்கு செல்லுமே -மழை நீர் அருவிகள் கடலுக்கு போவது போலே -சாதாராண ஆகாரம் சர்வாத்மகம்
அசாதாராண வடிவம் -சத்வாரகமாக அன்றி நேராக கூராழி வெண் சங்கு எனது வாராய் –
விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷண ஆயுத பத்னீ பரிசரண விசிஷ்டனாய்க் கொண்டு
ஸ்ரீ பரம பதத்திலே வ்யாவ்ருத்தி தோன்ற இருக்கிற மேன்மையையும்
லீலா விபூதியில் உள்ளார் எல்லாரையும் ஸ்ருஷ்ட்ய அனுபிரவேசாதிகளால் ரஷிக்கிற அளவன்றிக்கே
மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து-ரஷித்துக் கொண்டு போருகிற படியையும் இவருக்குக் காட்டிக் கொடுத்து
ஸ்ரீ சர்வேஸ்வரன் இவரோடு வந்து பூர்ண சம்ச்லேஷம் பண்ணி அருள
அத்தைக் கண்டு-சூழ் விசும்பு அணி முகிலுக்கு மேலே அங்கே சென்றால் பண்ணுகிற மங்களா சாசனத்தை
இங்கேயே இருந்து அவனுடைய உபய விபூதி ஐஸ்வர்யத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி
க்ருத்க்ருத்யராய்-உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை -என்று
ஹ்ருஷ்டர் ஆகிற -வீற்று இருந்து ஏழ் உலகின் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார் -வீற்று இருக்கும் மால் விண்ணில் -இத்யாதியாலே -என்கை –

———————-

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்—-36-

சாத்மிக்க சாத்மிக்க கொடுப்பவன் உடனே பிரிந்தானே ––ஒர்ப்பாதும் இன்றி-அசங்க்யேவ சங்கதி-

இதில் பிரணயித்வ குண விசிஷ்ட வஸ்துவை பிரத்யஷமாக அனுபவிக்கப் பெறாமல்-பிரகிருதி விக்ருதியாய் மோஹித்துக் கிடக்க –
பிரேம பரவசர் பிரதிகிரியை பண்ணத் தேட-
அத்தை பிரபுத்த ஸூஹருத்துக்கள்-இது அநநுரூபம் -என்று அறிந்து அனுரூபமான நிதானத்தையும் தத் பரிகாரத்தையும்
விதிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
கீழ் உண்டான அனுபவம் மானச அனுபவ மாத்ரமாய்-பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
தம் தசையைத் தாம் அறியாதபடி மோஹித்துக் கிடக்க-பரிசர வர்த்திகளான பரிவர்கள்-அத்தைக் கலங்கி
சர்வான் தேவான் நமஸ் -யந்தியின் படியே-பரிவின் கனத்தாலே பரிஹரிக்க ஒருப்பட
இவர் பிரகிருதி அறிந்த ஸ்ரீ மதுரகவி பிரக்ருதிகளான பிரபுத்த ஸூஹ்ருத்துக்கள் அத்தை விலக்கி
உசித பரிஹாரத்தை விதித்துச் சொல்லுகிறபடியை
கலந்து பிரிந்த தலைமகள் அறிவு அழிவு கண்டு கலங்கி-பரிவின் கனத்தாலே -தேவதாந்திர பரையாய்
பிரதிபன்ன பாஷிணியான கட்டுவிச்சி பாசுரம் கொண்டு
வெறி யாட்டாலே பரிஹரிக்க தேடுகிற தாய்மாரை நோக்கி இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள்
நோயின் நிதானத்தை நிரூபணத்தாலே அறிந்தாளாய்க் கொண்டு
ஸ்ரீ கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனைக் கொண்டே பரிஹரிக்கும் அது ஒழிய
நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல
தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்கும் தத் சம்பந்தி ஸ்பர்சத்துக்கும் தேர் பாகனாரான ஸ்ரீ வண் துவாராபதி மன்னனை ஆஸ்ரயித்து
மாயன் தமர் அடி நீர் கொண்டு அணியுங்கோள் என்று
வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிற-தீர்ப்பாரை யாமினி — யில் தாத்பர்யத்தை
தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

—————————

சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு—-37-

இதில் திரு நாமத்தால் உணர்ந்தவர் நாமியான ஸ்ரீ நாராயணனை அனுபவிக்கப் பெறாமையாலே
அதி பிராலாபமாய் பிராலாபிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் – வர்ஷேண பீஜம் பிரதிச்ஜ்ஞ ஹர்ஷா -என்னுமா போலே
தோழி சொன்ன ம்ருத சஞ்ஜீவியான-திரு நாம பிரசங்கமே சிசிரோபோபசாரமாக வாஸ்வச்தராய் உணர்ந்த அநந்தரம்
பிறந்த உணர்த்தி பேற்றுக்கு உடல் அன்றிக்கே கிலேச அனுசந்தானத்துக்கு உடலாய் அத்தாலே நோவு பட்டு
ஆபத் சகனாக-தந்நிதான பரிஹாரங்களை உள்ளபடி அறியும் சர்வஞ்ஞனாய்
கார்யம் செய்கைக்கு உறுப்பான உறவையும் உடையனாய் இருக்கிறவன்
ரஷியாது ஒழிகையாலே ஆர்த்தி நிரம்பின கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே
அவனைக் காண வேணும் என்று கேட்டார் அடைய நீர்ப் பண்டமாம்படி கூப்பிடுகிற
சீலமில்லா சிறியனில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
சீலம் மிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து –இத்யாதியாலே -என்கை –

—————-

ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்கு
வேறுபடில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே
நம் தமக்குப் பேறாக நண்ணு —38-

ஏறு திருவுடையை ஈசன்-தன் திரு மார்பில் ஏறப் பெற்ற-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை உடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன்

இதில் இவ் வாற்றாமைக்கு உதவாமையாலே அவனுக்கு உறுப்பு அல்லாத
ஆத்மா ஆத்மீயங்களில் தாம் நசை அற்ற படியைப் பேசின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –கீழ் சீலமில்லாச் சிறியனில் ஓலம் இட்டு அழைத்த இடத்திலும்
வந்து முகம் காட்டக் காணாமையாலே
பிராப்தனாய்-சீலவானாய்-விரோதி நிரசன சமர்த்தனாய்
இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் இத்தசையில் முகம் காட்டாமைக்கு அடி இத்தலையை வேண்டாது ஒழிகை இறே –
அவனுக்கு வேண்டாத என் ஆத்மா ஆத்மதீயங்களால் எனக்கு ஒரு கார்யம் இல்லை -என்று
அவற்றில் நசை அற்ற படியை அன்யாபதேசத்தால் அருளிச் செய்து- திருவருள் செய்பவன் போல் —
உருவமும் ஆர் உயிரும் உடனே வேண்டான் -விருப்பட்ட வரிசைக் கிரமத்தில் இவர் அருளிச் செய்கிறார்
ஏறாளும் இறையோனில் அர்த்தத்தை-ஏறு திரு உடைய ஈசன் உகப்புக்கு -என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

——————-

நண்ணாது மாலடியை நாநிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள் -தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை யொன்று—39-

தாபஹர தேச வாசித்வம் -கல்யாண குணம் –

இதில் சம்சாரிகள் உடைய அனர்த்தத்தைக் கண்டு வெறுத்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்-கீழே ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற இடத்திலும்
அவை போகக் காணாமையாலே விரஹ வ்யசனம் அதிசயித்து
தம் இழவுக்கு கூட்டாவார் உண்டோ -என்று சம்சாரிகளைப் பார்த்த இடத்தில்
அவர்கள் ஸ்ரீ பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு
இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களே பேறும் இழவுமாய் நோவு படுகிற படியைக் கண்டு
அது பொறுக்க மாட்டாமல்
ஸ்ரீ சர்வேஸ்வரனை பார்த்து -ரஷகனான நீ உளனாய் இருக்க இவை நோவு படுகை போருமோ –
பிரானே என்று விஷண்ணராய் இவர்கள் நோவைப் போக்குதல்
இது கண்டு பொறுக்க மாட்டாத என்னை முடித்தல் செய்து அருள வேணும் -என்ன
இவர்களுக்கு இச்சை இல்லாமையாலே
உம்மோபாதி நாமும் நொந்து காணும் இருக்கிறது -என்ன
ஆனால் இவர்கள் நடுவில் நின்றும் என்னை வாங்க வேணும் -என்ன
இவர் கிலேசம் தீரும்படி
ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ திரு நாட்டில் இருக்கும் இருப்பை அவன் காட்டிக் கொடுக்க
அத்தைக் கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிற
நண்ணாதார் முறுவலிப்ப -வில் அர்த்தத்தை
நண்ணாது மாலடியை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

———————

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என வாரும் அறியவே -நன்றாக
மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை—40-

இதில் சம்சாரிகள் ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாக ஸ்ரீ அர்ச்சாவதாரே பரத்வத்தை அருளிச் செய்த
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
நண்ணாதாரில் -ஸ்ரீ ஈஸ்வரனும் கூட -திருத்த ஒண்ணாது -என்று
கை விட்ட சம்சாரிகளைத் திருத்த ஒருப்பட்டு ப்ரமாணாந்தர விலஷணமாய்
நித்ய -நிர்தோஷமான-வேதாந்த வாக்யங்களாலும்-சந்தம்ச நியாயங்களாலும்
இதிஹாசாதி சித்திதமான-ஜகன் நிதரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலும்
சம்சார பீஜமான தேவதாந்திர பரத்வ பிரதிபத்தியை அடி அறுத்து
ஸ்ரீ யபதியான நாராயணனே ஜகத் காரண பூதன் -என்று த்ருடதரமாக உபபாதித்து
இப்படி சர்வ ஸ்மாத் பரனான இவன் அரியன் -என்று கை வாங்க வேண்டாத படி
ஸ்ரீ திரு நகரியிலே வந்து சந்நிஹிதன் ஆன பின்பு–அவனை ஆஸ்ரயிங்கோள் என்று
பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிற-ஒன்றும் தேவில் அர்த்தத்தை
ஒன்றும் இலைத் தேவு -என்று துடங்கி அருளிச் செய்கிறார் என்கை

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading