ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -9-3-1–

ஒன்பதாம் பத்து -மூன்றாம் திருவாய் மொழி -ஓராயிரம் -பிரவேசம் –

நீர் இங்கனே அர்த்திக்க- விரும்பிக் கேட்க வேண்டுமோ
நம்முடைய குடல் துவக்கை அறியீரோ -என்ன
அதனை அனுசந்தித்து –
நினைந்தும் சொல்லியும் இனியர் ஆகிறார் –

கூவுதல் வருதல் செய்யாய் -என்று பிரார்த்தித்தார் கீழ் – –
யார் வேண்டிக் கொள்ள வேண்டியதை யார் வேண்டிக் கொள்ளுகிறார் –
உம்முடைய லாபத்துக்கு நாம் வேண்டிக் கொள்ளும்படி அன்றோ
உம்மோடு நமக்கு உண்டான ரக்த ஸ்பர்சம் – சம்பந்தம் –
ஆனபின்பு நீர் விரும்பியவை சர்வ அபேக்ஷித்ங்களையும் -அனைத்தையும் செய்யக் கடவோம்
நீர் வெறுக்க வேண்டா -என்று சமாதானம் செய்தான் –
இவரும் சமாதானத்தை அடைந்தார் –

மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ -நாச்சியார் திரு மொழி -2-4-என்னக் கடவது இ றே
ஸ்ரீ கௌசல்யார் ஏக புத்ரையான- ஒரே பிள்ளையை உடையாளான நாம் உம்மைப் பிரிந்து தனி இருக்க மாட்டேன்
கூட வருவேன் இத்தனை -என்று பின் தொடர
புரிந்து பார்த்து -அம்மையீர் நீர் என்னைப் பின் தொடருகிற இடம் தர்மத்துக்கு ஹானி -குறைவு வரும் காண் -என்று
முகத்தை பார்த்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய
மீட்பதற்குப் போன இவர் மங்களா சாசனம் செய்து மீண்டாரே அன்றோ –
இப்படி அன்றோ -அவனுடைய பார்வைகளும் -மையல் ஏற்றி -உக்திகளும் -வார்த்தைகளும் -பெருமாள் வார்த்தைகள் -இருக்கும்படி –
அவன் வார்த்தை சொன்னால் பின்னை அவன் வழியே போக வேண்டும்படியாய் அன்றோ இருப்பது –

ஆக –
அவன் நாராயணனாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்தார் -நினைந்தார் –
அந் நாராயண மந்த்ரத்தின் உடைய பொருளை ஆராய இழிந்தவாறே
ஒரு பொருளுக்கும் தன்னுடைய பேறு இழவுகட்கு பிரார்த்திக்க -வேண்டிக் கொள்ளுதற்கு
தனக்கு பிராப்தி -சம்பந்தம் இல்லாமலே இருந்தது –
இப்படி இருக்கிறவன் தம் பக்கலிலே விசேஷ கடாஷம் செய்த படியையும்
இந்த நாராயண மந்த்ரத்தின் அர்த்தத்துக்கு எல்லையான அவன் சீல குணத்தையும் அனுசந்தித்தார் -நினைத்தார்
நினைந்த வாறே -இப்படி சீல குனமுடையவனை இப்பொழுதே காண வேண்டும் என்னும் அபேக்ஷை -விருப்பம் பிறந்தது
அதில் தமக்கு அவன் இருந்த இடத்தளவும் கால்நடை தராதபடிக்கு ஈடாயிற்று
அவனுடைய சீலம் முதலான குணங்களிலே ஈடுபட்டு தாம் துவக்கு உண்டபடி –

இனித்தான் இவர் போனாலும் ஒரு கைங்கர்யத்தை செய்கை மிகையாம்படி இருப்பான் ஒருவனாய் இருந்தான் அவன்
இவர் தாம் ஓன்று செய்து அனுபவிக்க வல்லவர் அன்றிக்கே இருந்தார் –
அவனுடைய சீல குணங்களிலே கால் தாழ்ந்து இருக்குமவர் ஆகையாலே –
இப்படிப் பட்டவனுடைய சீல குணத்தின் ப்ராஸுர்யத்தை -மிகுதியைச் சொல்லி
தலைக் கட்டுகிறது இத் திருவாய் மொழி-

அன்றிக்கே
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார்
அத் திருவாய் மொழியிலே முதல் இரண்டரை பாசுரங்களிலே
அகாரார்தம் -அகாரத்தின் பொருளை -அருளிச் செய்தது
மேல் ஒன்றரைப் பாசுரங்களாலே -சதுர்த்தி அர்த்தத்தையும் -நான்காம் வேற்றுமையின் பொருளையும் -அடிமைத் தன்மையும் –
மத்யம அக்ஷர அர்த்தத்தையும் -த்ருதீய அக்ஷர அர்த்தத்தையும் –
மகாரத்தின் பொருளையும் -யானும் தானாய் ஒழிந்தான் -அருளிச் செய்தார்
நன்று -இது சேஷத்வம் -அடிமையாம் தன்மை -இது அநந்யார்ஹத்வம் அவனுக்கே உரிமையாம் தன்மை –
இது அவற்றுக்கு இடமாய் இருக்கிற ஆத்மா என்று பிரித்து சொல்லாமல்
மகாரத்தின் பொருளாய் இருக்கின்ற ஆத்மாவோடு கூட்டியே அருளிச் செய்தது என் -எனில்
அவற்றைத் தனித் தனியே பிரித்து அருளிச் செய்யாதது
நான்காம் வேற்றுமையின் அர்த்தமும்-உகாரத்தின் அர்த்தமும்
ஆத்மாவை விட்டுப் பிரிந்து தனித்து இராமையாலே கூட அருளிச் செய்தார் -என்க –

அதற்க்கு மேல நான்கு பாசுரங்களாலே
மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்மாவின் உடைய ஞான ஆனந்தங்கள் முதலிய வற்றின்
வைலக்ஷண்யத்தை -சிறப்பினை அருளிச் செய்தார்
மேல் இரண்டு பாசுரங்களாலே
இம் முறையில் பிரணவத்தின் அர்த்தத்தை நினையாத-அனுசந்தானம் பண்ணாத -பாஹ்ய –
வேதத்துக்கு புறம்பான புறச் சமயத்தாரையும்- அகச் சமயத்தார் ஆகிற குத்ருஷ்டிகளையும் மறுத்தார் –

ஆக –
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியாலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்து –
மேல்
கருமாணிக்க மலை -நெடுமாற்கு அடிமை -என்னும்
இரண்டு திருவாய் மொழி களாலும் -நமஸ் –என்றதன் அர்த்தத்தை அருளிச் செய்தார்
எங்கனே எனின் –
சாப்தமான அர்த்தம் -சொல்லால் கிடைக்கின்ற பொருளும்
ஆர்த்தமான அர்த்தம் -பொருளால் கிடைக்கின்ற பொருளும்
என்னும் இரண்டு வகையான பொருள்களும் கூறப்படும் -நமஸ் -என்ற சொல்லுக்கு
அவற்றுள் சொல்லால் -கிடைக்கும் பொருளை -கரு மாணிக்க மலை -என்னும் திருவாய் மொழியில் அருளிச் செய்து
பொருளால் கிடைக்கும் பொருளை -நெடுமாற்கு அடிமை -என்னும் திரு வாய் மொழியில் அருளிச் செய்தார்
நமஸ் -என்பதன் சாப்தமான அர்த்தம் -சொற் பொருள் – நான் எனக்கு உரியன் அல்லேன் -என்பதே அன்றோ –
ஒரு கன்னியானால் ஒருவனுக்கேயாய் இருக்கையும்
தான் தனக்கு உரியன் அன்றிக்கே இருக்கையும்
அன்றோ ஸ்வரூபம் –
அதனை அருளிச் செய்தார் கரு மாணிக்க மலை என்ற திருவாய் மொழியில்
ஆர்த்த அர்த்தம் -பொருள் ஆற்றலால் கிடைக்கும் பொருள் -அவன் அடியார்க்கு அடிமை பட்டு இருத்தல்
அதனை அருளிச் செய்தார் – நெடுமாற்கு அடிமை -என்ற திருவாய் மொழியில்

அதற்கு மேல்
கொண்ட பெண்டிர் -என்ற திருவாய் மொழியில்
நாராயண மந்த்ரத்தின் பொருளை -சப்தார்த்தை -அருளிச் செய்தார்
யாங்கனம் எனின் –
நாராயண பதத்துக்கு பொருள்
ஸ்வாமித்வம் -நும்மது ஆகும் அவன் அன்றி மற்று இல்லை -தொண்டரோமாய் -பாசுரங்களால் –
வாத்சல்யம் -வண் புகழே -என்றும் -கணை ஒன்றாலே ஏழு மரமும் எய்த
உபாயத்வம் -கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
உபேயத்வம்-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
வியாபகத்வம் -நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லை
என்னும் இவை முதலானவைகள் அன்றோ –

அதற்கு மேல்
பண்டை நாளால் -என்கிற திருவாய் மொழியில் ஆய -என்னும் சதுர்த்தி -நான்காம் வேற்றுமையும்
அர்த்தத்தை அருளிச் செய்தார்
நான்காம் வேற்றுமைக்கு பொருள் -கைங்கர்யத்தை பிரார்த்தித்தல் அன்றோ –

பிரணவத்தின் பொருளும்-நம -என்ற சொல்லின் பொருளும்-வியாபகத்வமும் –
எங்கும் பரந்து இருத்தலும் -அவியாபகத்வமும் -பரந்து இராமையும் –
வாசு தேவன் -விஷ்ணு -என்னும் வியாபக மந்த்ரங்களிலும் உண்டு
அதில் தாம் ஆதரித்து அருளியது -திரு அஷ்டாக்ஷரமே -எட்டு எழுத்தே -என்னுமதனை
ஓர் ஆயிரமாய் -என்னும் இத் திருவாய் மொழியிலே அருளிச் செய்கிறார்
இங்கனம் -நடுவில் திரு வீதிப் பிள்ளை -அருளிச் செய்வர் –

—————————————–

அவன் நாராயணன் அன்றோ-நம் அபேக்ஷிதம் -விருப்பத்தை முடித்தல் நிச்சயம் என்று
தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிறார் —

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே-9-3-1-

ஓர் ஆயிரமாய் அளிக்கும் –
ஒவ்வொரு திருப் பெயரே ஆயிரம் முகத்தாலே ரக்ஷிக்க காக்க வல்லதாய் இருக்கும் –
ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யசச ஸ்ரிய
ஜ்ஞான வைராக்யயோ சைவ ஷண்ணாம் பக இதீரணா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-74
நிறைந்த செல்வம் என்ன
வீர்யம் என்ன
கீர்த்தி என்ன
சம்பத்து என்ன
ஜ்ஞானம் என்ன
வைராக்கியம் என்ன
ஆகிய இவர் ஆருக்கும் பக -என்கிற -நிர்வசன -நிருக்தி பேதத்தாலே
பலவகையாக காக்க வல்லதாய் அன்றோ இருப்பது –

உலகு –
ரஷிக்கும் -காக்கும் இடத்து ஒவ்வொருவராக அன்றி உலகம் முழுதினையும் காப்பாற்றும் –

ஏழ்-
அதிலும் ஓர் உலகம் மாத்ரம் அன்றிக்கே சர்வ -எல்லா உலகங்களையும் பாதுகாக்கும் –
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷு நாரதமான்
ஷிபாமி அஜஸ்ரம் அசூபான் ஆசூரீஷ்வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -16-19-
ஆஸ்ரிதர் -அடியார் ஒருவரைக் காப்பாற்றுமது உண்டு அன்றோ அவனுக்கு –
திருப் பெயர்கள் காப்பது அங்கன் அன்று -என்றபடி –

அளிக்கும் –
இவை செய்த பாவங்களைப் பார்த்து -ஷிபாமி -தள்ளுகிறேன் -என்பதும்
ஒரு காலத்தில் உண்டு அவனுக்கு –
அளிக்குமது ஒன்றுமே ஆயிற்று இவற்றுக்கு ஸ்வபாவம் -இயல்பு –

பேர் –
ரஷிக்கைக்கு -காப்பதற்கு ஒரு பேர் -காணும் -வேண்டுவது –
அப்படிப் பட்ட -ஒரே பெயரே ஆயிரம் முகமாக காக்க வல்ல -திருப் பெயர்களைத் தான்
எத்தனை உடையன் -என்னில் –

ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் –
சஹஸ்ராஷ சஹஸ்ராச்ய சஹச்ர சரணோ விபு
சஹச்ர பாஹூ சர்வஞ்ஞ தேவோ நாம சஹஸ்ரவான் -போலே
தேவன் திருப் பெயர்கள் ஆயிரம் உடையவன்-பல பசுக்களை உடையவன் -என்னுமாறு
எல்லாருக்கும் உணவு அளிக்க நினைத்தவர்கள்
சோறும் தண்ணீரும் குறை அறுத்துக் கொண்டு இருக்குமாறு போலே
உலகத்தை பாதுகாக்க நினைத்த ஈஸ்வரனுக்கு
அதற்குத் தகுதியாக ஆயிரம் திருப் பெயர்கள் உண்டாய் இருக்கும் ஆயிற்று –
புத்திரன் இறக்க வ்யோகத்தாலே -அதனாலே வருந்திய -கோயிலாய்த்தான்
பட்டர் திருவடிகளிலே வந்து தன் சோகம் எல்லாம் தோற்ற விழுந்து கிடக்க
அவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது
நீ நம்முடைய திருப் பெயர் சாற்றின பிள்ளை இறந்தான் என்று அன்றோ
துக்கப் படுகிறாய் -அதற்கு துக்கப் பட வேண்டா அந்த பெயரை உடைய நாம் இருந்தோமே -என்று
தம்மைப் போலே ஒரு விக்ரஹத்தை ஏறி அருளப் பண்ணி அவர்க்கு கொடுத்து அருளினார் -என்பது சரித்ரம் –
ஆயிரம் திருப் பெயர்களை உடையவன் ஆகையால் வந்த பெருமையை உடையவன் –
அவை தான்
கரை கட்டா காவிரி போன்று பரந்து இருந்தால் -அவற்றை எல்லாம் ஒரு முகம் செய்து
அனுபவிப்பதற்கு தக்கதான வடிவை உடையவனாய் இருக்கும் என்கிறார் -மேல் –

கார் ஆயின காளநல் மேனியினன்-
கார் என்றே இருக்கிறார் ஆயிற்று-முற்று உருவகம் இருக்கிறபடி
கறுத்து இருந்துள்ள காள மேகம் போலே இருப்பதாய் –
அது தானும் பெருக்காற்றில் இழிவார் ஒரு தெப்பம் தேடி இழியுமாறு போலே
ஒன்றைச் சொல்லும் போது உபமானம் முன்னாக அல்லது சொல்ல
ஒண்ணாமை யாலே சொன்ன இத்தனை போக்கி
திரு மேனியைப் பார்த்தால் உபமானமில்லாததாய் ஆயிற்று இருப்பது
இப்படி இருப்பதனை உடையவன் தான் யார் -என்ன
நாராயணன் -என்கிறார் மேல் –

நாராயணன் –
ஞானம் சக்தி முதலானவைகளும் குணங்களாய் இருக்கச் செய்தே
ஞானத்துவம்
ஆனந்தத்துவம்
அமலத்துவம்
முதலானவைகள் ஸ்வரூபத்துக்கு நிரூபகமாய் இருக்கும் அன்றோ
ஸ்வரூபத்தை காட்டும் திரு நாமம் என்பதால் வந்த ஏற்றம் என்கிறார்-

அப்படியே பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடுடையான் என்றவன் ஆகிறான் யார் -என்ன
இன்னான் -என்று விசேஷிக்கிற இடத்தில் -நாராயணன் -என்கையாலே நிரூபகமாய் புக்க தன்றோ
ஆயிரம் திரு நாமங்களைச் சொல்லி
அவற்றிலே மூன்றினைப் பிரதானமாக -விஷ்ணு காயத்ரியிலே -எடுத்தது
வியாபக மந்த்ரங்கள் ஆகையாலே
அவற்றிலே இரண்டனை மற்றைய வற்றோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆயிற்று
இதற்கு உண்டான ப்ராதான்யம் -முதன்மை –

அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை -திரு நெடும் தாண்டகம் -4-என்றும்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் -பெரிய திரு மொழி -8-10-3-என்றும்
நாராயணா என்னும் நாமம் -பெரிய திருமொழி -1-1-1- என்றும் –
நமோ நாராயணம் -பெரிய திருமொழி -6-10-1-என்றும்
இவை அன்றோ திரு மங்கை மன்னன் படி
நம் ஆழ்வாரும்
வண் புகழ் நாரணன் -திருவாய் மொழி -1-2-10-என்று தொடங்கி
திருவாய் மொழி முடிய அருளிச் செய்ததும் இதுவே இருக்கும் அன்றோ –
வேதங்களும் ஆழ்வார்களும் நம் ஆச்சார்யர்களும் எல்லாம் சென்ற வழி இது ஆயிற்று –
நாமும் எல்லாம் இப்போதும் அதனை ஆதரித்தால் ஒரு குற்றம் இல்லை அன்றோ

மற்றை இரண்டு திருப்பெயர்களையும் சூத்ரர் – சைவர்-முதலாயினாரும்-வைசிய ஷத்ரியர் –
மற்றையாரும் -அத்வைதிகள் –விரும்புவதனால் அன்றோ நாம் அவற்றைத் தவிர்ந்தது –
நம் ஆசார்யர்கள் சென்ற வழியை அன்றோ நாம் ஆதரிக்க வேண்டுவது –

நங்கள் பிரான் அவனே –
நம்மை காப்பாற்று கின்றவனான உபகாரகன் அவனே
கூவுதல் வருதல் செய்திடாய் -என்று நம் பேற்றுக்கு நாம் பிரார்த்திக்க
நமக்கு பிராப்தி -உரிமை இல்லை என்கிறது -அவனே -என்கிற ஏகாரத்தாலே –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading