இந்த அவஸ்தைக்கு -இச் சமயத்துக்கு அன்றோ நமக்குப் பூவும் புழுகும் இட்டுச் சிரஸா
வஹித்துக் கொடு போந்தது?’ என்று ‘திருக் குழற் கற்றையில் அழகு வந்து நலியா நின்றது’ என்கிறாள்.
கொள் கின்ற கோள் இரு ளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள் கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே–7-7-9-
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல் –
திருக் குழலின் அழகுக்கு ஓர் உவமானம் சொல்லப் புக்கு,
அழகுக்கு அது தான் நேர் கொடு நேர் உபமானமாகப் போராமையாலே அதனைக் கிடந்து சிக்ஷிக்கிறது.
பிரளய காலத்தில் திவா ராத்ர விபாகம் -பகல் இரவு என்னும் வேறுபாடு அற
எங்கும் ஒக்கத் தானே யாம்படி பரந்து நின்றுள்ள, கோட்பாட்டை யுடைய இருள்’ என்னுதல்.
கோள்’ என்று மிடுக்காய், ‘மிடுக்கை யுடைய இருள்’ என்னுதல்.
அந்த இருட்டினைச் சுகிருவது -எஃகுவது: இப்படி எஃகி அதிலே கொழுவிதான அமிசத்தைத் திரட்டுவது,
அது தன்னிலும் உண்டான புற இதழைக் கழிக்க,
அக வாயில் வயிரமாய் நீலமான நிறத்தை யுடையத்தாய் நன்றாய் இருந்துள்ள நூல் திரளோ?
அன்று மாயன் குழல் –
இவள் நெஞ்சிலே அழகிதாக மயிர் பட்டது.காணும்.
இத்தனை சிஷித்தால் -அடை மொழி கொடுத்துக் கூறினால் ஆயிற்று உபமானமாகப் போராது என்னலாவது.
பின்னையும், ஆச்சரியத்தை யுடையனான அவனுடைய திருக் குழல் என்னுமித்தனை.
இத்தனை இடு சிவப்பானது அவனுடைய இயல்பிலே அமைந்ததான திருக் குழலுக்கு ஒப்பாகுமோ?
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து-
அலரா நிற்பதாய் அழகியதாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத் துழாயில் பரிமளமானது முகத்திலே
அலை எறியவாயிற்று வந்து தோற்றுகிறது.
திருக் குழலில் அழகுக்குத் திருத் துழாயில் பரிமளமானது தூசி ஏறி நடக்க ஆயிற்று வந்து பாதகம் ஆகிறது.
என் உயிரைக் கள்கின்றவாறு அறியீர் –
நீங்கள் எல்லாரும் ஸூகமே இருக்கச் செய்தே, என் ஒருத்தி யுடைய ஆத்மாவை வந்து களவு
காண்கிற பிரகாரத்தை அறிகின்றலீர்கோள்.
கள்கின்ற –
களவு காண்கின்ற. களவு காண்கையாவது என்?’ என்னில்,
இத் தலையில் இசைவு இன்றிக்கே இருக்கக் கைக் கொள்ளுதல். அவன் அன்றோ களவு காண்கிறான்?’
பண்டே உன் தொண்டாம் பழ வுயிரை என்ன தென்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே-மண்டலத்தோர்
புள் வாய் பிளந்த புயலே! உனைக் கச்சிக்
கள்வா!’ என்று ஓதுவது என் கண்டு?’- நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி.
இத் தலை அத் தலையானபடி.
அப்ராப்தன் -சம்பந்தம் இல்லாதவன் அபகரித்தால் அதனைப் போக்கலாம்;
ப்ராப்தன் -சம்பந்தமுள்ளவன் அபகரித்தால் பரிகாரம் இல்லை அன்றோ?
த்வம்மே ஹம்மே குதஸ்தத் ததபிகுத: இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சாநாதி ஹித்தாத் அநுபவவிபவாத் ஸோபி ஸாக்ரோஸ ஏவ
க்வாக்ரோஸ: கஸ்ய கீதாதிஷூ மமவிதித: கோத்ர ஸாக்ஷீ ஸூதீ: ஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷபாதீ ஸஇதி ந்ருகலஹே ம்ருக்ய மத்யஸ்த் த்வத்வம்’-என்று பட்டர் அருளிச் செய்த சுலோகம் அநுசந்தேயம்.
இது கைப்பட்டவாறே ஒரு பிரமாணம் கொடு நின்று வழக்குப் பேசத் தொடங்கும் அன்றோ அவன்?
அன்னைமீர் கழறா நிற்றிரே –
நீங்கள் அபிபவித்து -வருந்தி இக் களவுக்கு நானும் பெரு நிலை நின்று கூட்டுப் பட்டேனாகப் பொடியா நின்றீர்கோள்.
இந்த உருவு வெளிப் பாட்டைத் பரிஹரிக்கலாகவும் -தடை செய்தலும் வேண்டாவோ?
ஒரு நியந்த்ரு -ந்யாம்ய பாவமே -நியமித்தல் நியமிக்கப்படுதல் என்னும் தன்மையேயோ வேண்டுவது பொடி கைக்கு?
கழறல் –
நோவச் சொல்லுதல்.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply