ஸ்ரீ யபதியும் -திருமகள் கேள்வனும் கூட நம்மை சிரஸா வஹித்து – தலைமேல் கொண்டு போருகிறது
இவ் வவஸ்தைக்கு அன்றோ?’ என்று திரு அபிஷேகத்தின் அழகு வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.
நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூ வுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–7-7-10-
நிற்றி முற்றத்துள் என்று. . . . . . . . . .நுங்கட்கு நசை என் –
இத்தனையும் நசை அறச் சொல்லா விடில் அவர்கள் விடார்கள் போலே.
நிற்றி முற்றுத்துள் என்று –
முற்றத்துள் நிற்றி’ என்பர்கள். படுக்கையினின்றும் எழுந்திருந்து எல்லாரும் காணும்படி
முற்றத்திலே நிற்கைக்கு மேற்படப் பழி இல்லையாக நினைத்திரா நின்றார்கள்.
யாந ஸக்யா புரா த்ரஷ்டும் பூதை: ஆகாஸகைரபி
தாமத்ய ஸீதாம் பஸ்யந்தி ராஜமார்க்ககதா ஜநா:’-அயோத். 33 : 7.
எவள் முன்பு ஆகாச சாரிகளான பிராணிகளாலும் பார்க்கப்படாதவளாய் இருந்தாளோ,
அத்தகைய சீதையைப் பெரும் தெருவில் செல்லும் மக்களும் கண்டார்கள்-
என்றதைப் போன்று நினைத்திரா நின்றார்களாயிற்று இத்தனை.
முற்றித்திலே புறப்பட்டு நிற்கும்படி பிறந்த ஸாஹஸத்துக்கு நெரித்த கையராய்.
என்னை நீர் –
உருவு வெளிப்பாடு புறப்பட விடுவித்து நிறுத்த நிற்கிற என்னை,
இதனால் நலிவு வாராதபடி புண்ணியம் செய்த நீங்கள். என்றது.
அவன் புறப்பட விடுவித்து நிறுத்த நிற்கிற என்னை, இது கொண்டு காரியம் இல்லாத நீங்கள்’ என்றபடி.
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்-
இவளைத் தப்புவித்தோமாம் விரகு என்?’ என்று நெஞ்சிலே விசாரிக்கையும்,
கால் வாங்கிப் பேர நிற்கவும் ஒண்ணாதபடி சூழ நின்றும் பொடியா நின்றீர் கோள்.
அன்றிக்கே, ‘போயும் வந்தும் பொடியா நின்றீர்கோள்’ என்னுதல்.
சுடர்ச்சோதி மணி நிறமாய் இம் மூவுலகும் முற்ற விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம் ஒற்றுமை கொண்டது –
மிக்க புகரையுடைத்தான ரத்தினத்தினுடைய ஒளியை யுடைத்தாய்க் கொண்டு கண்ட இடம் எங்கும் பரம்பா நின்றுள்ள
ஒளியை யுடைய திரு அபிஷேகத்தில் -முடியிலே ஒருமைப்பட்டது என்னுடைய உள்ளம்.
அன்றிக்கே, ‘அங்கே விலை செய்து கொடுத்தது’ என்னுதல். என்றது,
தப்புவிக்கைக்கு வார்த்தை சொல்லுகிற இவர்களைப் போலே ஓர் பிரதேசத்தில் -இடத்தில் அன்று அன்றே,
அகப்படுத்தி நலியக் கோலுகிற அது நிற்கும்படி?’ என்பதனைத் தெரிவித்தபடி.
அன்னைமீர் நசை என் நுங்கட்கே-
தாய்மாரான நீங்கள் என் பக்கல் நசை அற அமையும்,
தாய்மாராவார், பெற்று வளர்த்தப் போகத்திற்குத் தக்க பருவம் பிறந்தவாறே கைப் பிடித்தவன் கையிலே
காட்டிக் கொடுத்துக் கடக்க நிற்குமத்தனை போக்கி, பொடியக் கடவர்களோ?
ப்ராப்த யவ்வனைகள்- தக்க வந்து வந்தவர்களையும் பெற்ற பிராப்தி – சம்பந்தம் கொண்டு
ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கக் கடவதோ?
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply