ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-7-7–

இவை அவள் முன்னே நிற்க வல்லனவோ?
இவற்றுக்கெல்லாம் தாம் நெற்றிக் கை அன்றோ?’ என்று
திரு நுதலில் அழகு வந்து நலிகிற படியை அருளிச் செய்கிறார்.

காண்மின்கள் அன்னையார் காள்!என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச் சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே–7-7-7-

அன்னையர்காள்! ‘காண்மின்கள்’ என்று காட்டும் வகை அறியேன் –
இது நலியா நின்றது என்று சொல்லா நின்றாய்; எங்களுக்கு இது தெரிகிறது இல்லை;
எங்களுக்கும் தெரியும்படி சொல்லிக் காணாய்’ என்ன,
நீங்களும் இதனைக் காணுங்கோள்’ என்று, உங்களுக்குக் காட்டும் பிரகாரம் அறிகின்றிலேன்.
என் கைக்குப் பிடி தருதல், உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில் அன்றோ என்றார் காட்டலாவது?
ஆண்களுக்குக் காட்டில் அன்றோ பருவம் நிரம்பின உங்களுக்குக் காட்டலாவது?’ என்பாள், ‘அன்னையர்காள்’ என்கிறாள்.

நாள் மன்னு வெண் திங்கள் கொல்-
சுக்ல பஷத்து எட்டாம் நாள் சந்திரனோ?
இளகிப் பதித்திருக்கைக்கும்,
காட்டு, காட்டு’ என்று வளருகைக்கும்,
தர்ச நீயமாய் -காட்சிக்கு இனியதாய் இருக்கைக்கும்.

நயந்தார்கட்கு நச்சு இலை கொல்-
ஆசைப்பட்டார்க்கு நச்சுப் பூண்டோ?’ என்னுதல்;
அன்றிக்கே, ‘தன்னை ஆசைப்பட்டார்க்கு ஆசைப்பட வேண்டாதிருக்கிறதோ?’என்னுதல்.
நச்சு மா மருந்தம்’ திருவாய். 3. 4. : 5. -என்னுமவர் அன்றோ இப்போது கண்ணாஞ்சுழலை இட்டு இவ் வார்த்தை சொல்லுகிறார்?
இன்ன மலையிலே உண்டு’ என்று அங்கே சென்று தேடி வருந்த வேண்டாமல்,
ஆசைப் படுவதுமாய்
மேல் காற்றிலே காட்டப் பரிகாரமுமாம் மருந்தாயிற்று இது.
அபத்யத்தையும் பொறுத்துக் கொள்ளும் மருந்தாதலின். ‘மா மருந்தம்’என்கிறது.
இவன் தலையிலே பழி இட்டுக் கைவிடும் மருந்து அன்று;
வான மா மலையில் தலையான ஒளஷதம் -மருந்து அன்றோ. இப்போது இவளுக்கு நச்சுப் பூண்டு ஆகிறது?

சேண் மன்னும் நால் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே-
திருநெற்றியே.
ஒக்கத்தை யுடைத்தாய், கற்பகத் தரு பணைத்தால் போலேயாய்ச் சுற்றுடைத்தாய் இருக்கிற திருத் தோள்களில்
அழகாலே என்னை அநந்யார்ஹை -தனக்கே உரியவளாகும்படி ஆக்கினவனுடைய
ஆயதாஸ்ச ஸூவ்ருத்தாஸ்ச பாஹவ: பரிகோபமா:
ஸர்வ பூஷண பூஷார்ஹா, கிமர்த்தம் ந விபூஷிதா:’கிஷ். 3 : 14.
நீண்டு உருண்டு கணையங்கள் போன்ற அழகிய திருத் தோள்கள் அணிகளால் ஏன் மறைக்கப்படாமல் இருக்கின்றன?
என்னும்படியே திருவடி அகப்பட்ட துறையிலே காணும் இவளும் அகப்பட்டது.

கொடியேன் உயிர் கோள் இழைத்துக் கோள் மன்னி ஆவி அடும்-
என் உயிரினுடைய அழகை அழித்துக் கொள்கையிலே விருப்பத்தைச் செய்து முடியா நின்றது.
அன்றிக்கே, ‘அழகு பாதகமாம்படி பாவத்தைச் செய்த என்னுடைய உயிரை முடிக்கையிலே துணிந்து,
அதிலே அபிநிவேசித்து -விருப்பத்தை வைத்து, உயிரை முடியா நின்றது,’ என்றுமாம்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply