ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-7-4–

என் தான்! இங்ஙனே- அதர உத்தர -கீழ் மேல் ஆயிற்றோ போய்?’ என்று
திருப் புருவத்தில் அழகு வளைந்து கொடு வந்து நலிகிறபடியை அருளிச் செய்கிறார்.

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற் கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண் ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலன வாய் அடுகின்றன என்றும் நின்றே–7-7-4-

இன் உயிர்க்கு –
என்னுடைய நற் ஜீவனைக் கொள்ளுகைக்காக.

ஏழையர் மேல் வளையும் –
வளைப்பாரும் இன்றிக்கே வளைக்கைக்கு விஷயமு மின்றிக்கே, –
அகர்கமாகவும் -செயப் படு பொருள் இல்லாமலும் -அகர்த்ருகமும் -செய்பவன் இல்லாமலும் வளையா நின்றது.
விஷயம் இல்லாமையால் கர்மம் இல்லை –
வளைப்பார் இல்லாமையாலே கர்த்தா இல்லை;

இணை நீல வில் கொலோ –
ஏழையர் மேல் வளைகிற நீலமான இரண்டு விற்களோ? என்றது,
ஸக்ரசாப நிபே சாபே க்ருஹீத்வா ஸத்ருநாஸநே’– கிஷ்கிந். 3 : 9.
பகைவர்களை அழிக்கத் தக்க, இந்திர வில் போன்ற விற்களைப் பிடித்து’ என்னும் படியே என்றபடி
இந்திர வில்லுக்கு அபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லை அன்றோ?

மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல் –
பெண் பிறந்தாரையே நலியக் கூடியதான காமனுடைய வில்லு தானேயோ?
அது தன்னிலும் சிவனாலே வடிவு இழப்பதற்கு முன்புத்தை அவன் கையில் வில்லாக வேணும் –
கருப்புச் சிலை கொல்-
கண்ணுக்கு ஆபாசமாய்ப் பாதகம் உறைத்திருக்கிறபடி.

மதனன் தன் உயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் அவையே-
அவனுடைய சம்பந்தத்தால் வந்த ராஜ குலம் கொண்டு திரிகிறவன் கையில் வில்லுக்கு
இத்தனை உறைப்பு உண்டாக மாட்டாது,
அவனுக்கும் கூடத் தந்தையான கிருஷ்ணனுடைய திருப் புருவங்கள் தாமே ஆக வேணும்.
தன் கைச் சார்ங்கமதுவே போல் புருவ வட்டம் அழகியவனுடைய புருவங்கள் தாமே யாக வேண்டும்.
ஆண்டாள் வார்த்தை இருக்கிறபடி அன்றோ? நாய்ச்சியார் திருமொழி. 14 : 6.-3‘
தருமம் அறியாக் குறும்பனை – தருமம் அறியும் போது அபிஷிக்த – முடி சூடின க்ஷத்திரியன் வயிற்றிலே
பிறந்தவனாக வேண்டாவோ?
யாதவர்கள் நேரே முடி சூடுவது இல்லை அன்றோ?
ஆந்ருசம்சயம் -இரக்கம் இருக்கும்படி —
முதலிலே புதியது உண்டு அறியாதவனாயிற்று.
ஸ்ரீ நந்தகோபர், தம்முடைய ராஜ்யத்திலே மூலை யடியே நடந்தி திரிவான் ஒரு பிள்ளை யாயிற்றுப் பெற்றது.
தன் கைச் சார்ங்கம் –
கையிலே வில்லைக் கண்டால், ‘முகத்திலே இருக்கக் கூடிய அது கையிலே இருந்ததே! என்னாலாம் படியாய் இருக்கும்;
முகத்திலே கண்டவாறே, ‘கையிலே இருக்கக் கூடிய இது முகத்திலே இருந்ததே!’ என்னலாய் இருக்கும்.
அதுவே போல என்கிறதாயிற்று, ஸர்வதா ஸாம்யத்தாலே -முற்றும் ஒத்திருக்கையாலே.
புருவ வட்டமழகிய’
என்றதனால் ‘தரும மறியான்’ என்று இழக்க ஒண்ணாத படியாயிற்று, வடிவழகு இருப்பது.
பொருத்தம் இலியை-
சில பொருள்கள் உளவே அன்றோ, நிறங்கள் அழகியனவாய்ப் பார்த்தாவாறே அனுபவிக்க யோக்கியம் அன்றிக்கே இருப்பன?
அவை போலே, வடிவழகே யாய், ஆசைப்பட்டார் பக்கல் ரசம் தொங்கிலும் தொங்கானாயிற்று.
கண்டீரே –
அவனுக்குப் பொருத்தம் இல்லாவிட்டால், நமக்குப் பொருத்தம் இல்லையாகில் அன்றோ விட்டிருக்கலாவது?
அவன் பொருந்தாமை தமக்குத் தொடர்ந்து திரியுமத்தனை யாயிற்று.

புருவம் அவையே-
கீழ்ச சொன்ன அழகுகள் தாம் அநுகூலங்கள் என்னும்படி யாகவாயிற்று, இவை பாதகமாகிறபடி.

என் உயிர் மேலனவாய்-
இருப்பன அங்கேயாய் இருக்கச் செய்தேயும்,
நோக்கு என் மேலேயாய் இரா நின்றது.
எங்கும் பக்கம் நோக்கு அறியாமல் அன்றோ இருப்பது? திருவாய். 2. 6 : 2.

அடுகின்றன –
கொல்லா நின்றன.

என்றும் நின்றே-
பாதகமாக நிற்கச் செய்தேயும் அநித்யமாய் -அழிந்து போகக் கூடியனவாய் இருப்பன சில பொருள்கள் உள அன்றோ?
இவை அங்ஙன் அன்றிக்கே என்றும் ஒக்க நின்று நலியா நின்றன.
என்னை நலிகைக்காக நித்யமாய் இருக்கும் தன்மையை ஏறிட்டுக் கொண்டன;
நித்யம் நித்யாக்ருதிதரம் -நித்யமாய் இருப்பதும் நித்யமாய் இருக்கும் வடிவை ஏறிட்டுக் கொண்டதும்’
என்கிறது தானே அன்றோ நலிகிறது?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply