அது தன் மூக்கு வலி காட்ட நாம் பேசாதே இருந்தால், ‘அத்தனையோ இதன் வாய் வலி’ என்று
நம்மை ஏசுவர்கள் என்று திருப் பவளத்தின் அழகு வந்து நலிகிற படியை அருளிச் செய்கிறார்.
வாலிய தோர் கனி கொல்?வினை யாட்டியேன் வல் வினை கொல்?
கோலம் திரள் பவளக் கொழுந் துண்டங்கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திரு மேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே–7-7-3-
வாலியது ஓர் கனி கொல் –
முன்பு பிஞ்சாய், பின்பு பக்குவமாய், பின்பு அனுபவ யோக்கியம் அன்றிக்கே போவன சில பழங்கள் உளவே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே, என்றும் ஒக்க ஏக ரூபமாய் -ஒரே தன்மையாய் இருப்பது ஒரு கனியோ?
அத் தலையில் இனிமை போது செய்யாமையாலே
இத் தலையில் ஆற்றாமையும் போது செய்யாதே!
வினையாட்டியேன் வல் வினை கொல் –
போக்ய வாஸ்து பாதகமாய் -இனிய பொருள் தீயது ஆயிற்று.
அனுபவிக்கின்றவர்கள் செய்த பாபத்தாலே அன்றோ?
அமிருதமே விஷமாம் படியான பாவத்தைச் செய்தேன்.
கொஞ்சு கிளி அன்ன மொழி குமுத இதழ் அமுதால்
எஞ்சினன் நராதிபதி ஈதொரு வியப்போ!
அஞ்சு தரு தீ வினையின் ஆரமுதும் நஞ்சாம்;
நஞ்சும் அமுதாம் உரிய நல் வினையின் மாதோ,’-வில்லி பாரதம்.
வினையாட்டியேன் வல் வினை கொல்
பாவத்தைச் செய்த என்னுடைய பாபமானது பக்வமாய்-பலத்தைக் கொடுப்பதாய்க் கொண்டு அங்கே குடி ஏறிற்றோ?
அங்கே கிடந்தே அன்றோ இங்கே அனுபவிப்பிப்பது? என்றது,
பகவத் விஷயத்தில் நிக்ரஹ ரூபேண -தண்டனை உருவமாகக் கிடந்தே அன்றோ இங்கு அனுபவிப்பிப்பது?’ என்றபடி.
கிரியை -செய்த செயலாகையாலே செய்த போதே நசித்துப் போமே?
இவன் செய்த பாபத்துக்கு, தானே ஸ்வதந்தரமாய் நின்று பலத்தைக் கொடுப்பதற்குத் தகுதி -பிராப்தி -இல்லையே!
வல்வினை
அனுபவித்தாலும் அழியாத பாவம்’ என்பாள், ‘வல்வினை’ என்கிறாள்.
கோலம் திரள் பவளம் கொழுந்துண்டங்கொலோ அறியேன்-
அழகு திரண்டிருந்துள்ள பவளத்தினுடைய அன்பினை யுடைத்தான முறியோ?
அறிகிலேன். புழுதி புடைத்திராமைக்கு ‘முறியோ’ என்கிறது;
முறித்த வாயானது ஒளி உண்டாய் நெய்த்திருக்கும் அன்றோ?
நீல நெடு முகில் போல் திரு மேனி அம்மான் –
இது தான் என்றும் உண்டாய் இருக்கச் செய்தே, இதற்கு முன்பு பாதகமாயிற்று இல்லை அன்றோ?
கூட்டுப் படை நின்றவாறே வலியா நின்றதாயிற்று.
நீலமாய் இனிமை அளவு இறந்துள்ள முகில் போன்ற வடிவையுடைய சர்வேஸ்வரனுடைய.
தொண்டை வாய்-
தொண்டை -கோவை -கோவைப் பழம் போலே கனிந்து நெய்த்து அன்றோ திருப் பவளம் தான் இருப்பது?
தன்னில் தான் உண்டான பகை பார்த்திருக்கிறது இல்லை யாயிற்று, இவளை நலிகிற விடத்தில்.
இரண்டுக்கும் சேர வன்னியம் இல்லை அன்றோ?
வன்னியம் -ஸ்வாதந்தர்யம் -ஒருவர் பக்கல் இருவர் பகையானால் -இருவரும் ஸ்வ தந்தரரானால் அவனை வெல்ல ஒண்ணாது –
ஆகையால் இருவரும் ஒரு மிடறாய் நலிவார்கள் -அப்படியே இங்கும் –
அவை நலிந்து கொடு தோற்றா நின்றதாகில் தப்பப் பார்த்தாலோ?’ என்ன,
வாய் வலி தப்பலாயோ இருக்கிறது?’ என்கிறாள் மேல்:
ஏலும் திசை யுள் எல்லாம்–
நானும் இவை நலியாத இடம் தேடித் தப்ப விரகு பாரா நின்றேன்:
அவ் வவ் விடங்களிலே வந்து தோன்றா நின்றது. என்றது,
பாரத்த இடமெல்லாம் தானே யாய் இரா நின்றது,’ என்றபடி.
தோன்றுகிறதற்குக் கருத்து என்?’ என்னில்,
என் இன் உயிர்க்கே-
என்னுடைய நற் சீவனை முடிக்கைக்காக.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply