ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-7-1–

ஏழாம் பத்து -ஏழாம் திருவாய்மொழி-‘ஏழையர்’-பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியிலே
மல்கு நீலச் சுடர் தழைப்பச் செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்,
அந்தர மேல் செம் பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய், செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே’ என்று
அவன் வடிவழகினைச் சொன்னார்;
அவ் வடிவழகு தானே நெஞ்சிலே ஊற்றிருக்க, அதனையே பாவித்த காரணத்தாலே,
அந்த பாவனையின் ப்ரகர்ஷத்தாலே -மிகுதியாலே ப்ரத்யக்ஷ சாமானாகாரமாய் -கண் கூடாகக் காண்பதே போன்றதாய்,
பின்பு கண் கூடாகப் பார்ப்பதாகவே நினைத்து அணைக்கக் கணிசித்துக் கையை நீட்டி.
அப்போதே பெறாமையாலே தமக்கப் பிறந்த ஆற்றாமையை,
எம்பெருமானோடே கலந்து பிரிந்து உருவு வெளிப்பாட்டாலே நோவுபடுகிறாள்.
ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச்செய்கிறார்.

சர்வேஸ்வரனோடே கலந்த பிரிந்து தளர்ந்து உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி.
ஒருவர் ஒருவரோடு கலக்கும் போது த்ருஷ்ட்டி பந்தம் -காட்சி முன்னாகப் பின்பே அன்றோ
மற்றைப் பரிமாற்றங்களை ஆசைப் படுவது?
ஆகையாலே, திருக் கண்களின் அழகைக் கூறி,
அவ் வழியாலே திரு முகத்தில் அழகைக் கூறி பின்பு
அவ் வருகே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அப்போதே அது கை வாராமையாலே நோவு பட;
இவள் நிலையைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஓடுகிறது என்? என்று கேட்க,
ஆற்றாமை பிரசித்தமாயின படியால் சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும் படியான நிலை இல்லையே!
ஆகையாலே, அவர்களைக் குறித்து,
அவனுடைய திரு முகத்தில் அழகானது தனித் தனியும் திரளவும் வந்து நலியா நின்றது’ என்ன,
நீ இங்ஙனே சொல்லுமது உன்னுடைய பெண்மைக்குப் போராது;
அவனுடைய தலைமைக்கும் போராது;
நீ தான் எங்களை நோக்கக் கடவதாய் இருப்பது ஒரு தன்மை உண்டே அதுக்கும் போராது;
ஆன பின்பு, இதனைத் தவிர்,’ என்று ஹிதம் சொல்லுவாரும் பொடிவாருமாக;
நீங்கள் பொடிகிற இதனைக் கேட்டு மீளும் அளவு அன்று அது என்னை நலிகிறபடி;
இனித் தான் ஏதேனுமாக உறைத்ததிலே ஊன்றி நிற்குமத்தனை அன்றோ?
ஆன பின்பு, நீங்கள் என்னை விட்டுப் பிடிக்க அமையும்,’ என்று அவர்களுக்குத் தன் பக்கல் நசை அற வேண்டும்படி
தனக்குப் பிறந்த ஆற்றாமையை அறிவிக்கறாளாய் இருக்கிறது.

இவர்க்குத் திருவாய் மொழி எங்கும் ஓடுகிற தன்மைகள்
சர்வேஸ்வரனுடைய குணங்களை ஆசைப்படுகையும்,
அது தான் மானஸ அனுபவமாய் இருக்கையும்,
அனுபவித்த குணங்கள் ஒழிய மற்றைய குணங்களிலே விருப்பம் செலுத்துதலும்.
அது தன்னில் கிரமப் பிராப்தி பற்றாமையும்,
அதுதான் மேல் நின்ற நிலையை மறக்கும்படி செய்கையும் ஆகிற இவையே அன்றோ?

அவற்றைக் காட்டிலும், உருவு வெளிப்பாடாகச் சொல்லுகிற இதில் ஏறின அமிசம் என்?’ என்னில்,
முன்பு பிறந்த வைசம்யம் -தெளிவும் கிடக்கச் செய்தே மேலே அபேக்ஷை -விருப்பத்தை உண்டாக்குமது
அன்றோ உருவு வெளிப்பாடாகிறது?
மற்றைய இடத்தில், முன் பிறந்த வைஸத்யத்தை -தெளிவை அழித்தே அன்றோ மேலில் அபேக்ஷை -விருப்பம் பிறப்பது?
எங்ஙனேயோ?’ என்ற திருவாய் மொழியிலும் பெரும்பாலும் இதுவே அன்றோ ஓடுகிறது?
அதில் இதற்கு வாசி என்?’ என்னில்,
அதில் பிரீதியும் பிரீநி இன்மையும் சமமாக இருக்கும்;
இங்குப் பிரீதி இன்மை மிக்கிருக்கும்.
திருக் கண்களில் அழகை ‘இணைக் கூற்றங்கொலோ!’ என்னும்படி யாயிற்று
இங்குத் தீங்கு செய்வதில்-பாதகத்வத்தில் – உறைப்பு இருக்கும்படி.

——————————

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்! என் செய்கேன் துயராட்டியேனே–7-7-1-

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்கொலோ அறியேன்-
ஒவ்வொரு விஷயத்திலே சா பால்யத்தை -விருப்பத்தைச் செய்து, அவை பெறா விடில் தரிக்க மாட்டாத
பலம் இல்லாத பெண்களுடைய பிராணன்களை முடிக்கிற கூற்றுகள் இரண்டோ?
பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கும் அன்றிக்கே,
இது ஆகாது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கும் பருவம் கழிந்த தாய்மார்க்கும் அன்றிக்கே,
அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ! தன் கண் அழகு தான் அறிகின்றிலனே!
தன்னையும் நலிந்ததாகில் வாரானோ?
கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ?
ஆவி உண்ணும்
ராம பாணம் போலே, ஒப்பனை குறி அழியாதே இருக்க
உயிரை முடியா நின்றது ஆதலின்-‘ஆவி உண்ணும், ’ என்கிறது.
இணைக் கூற்றங்கொலோ
கூற்றுவர் இருவர் தங்களிலே கிருத சங்கேதராய் வந்தால் போலே காணும் திருக் கண்களில் அழகு
பாதகமாகின்றன என்பாள், ‘இணைக் கூற்றங்கொலோ’ என்கிறாள். ‘
அறியேன்-
அறியேன்’ என்பான் என்? ‘கூற்றம்’ என்று அறுதியிட்டாலோ?’ என்னில்,
கூற்றுவர் இருவர் கிருத சங்கேதராய் வந்தாலும் அபலைகளையே- நலிய வேண்டும் நிர்ப்பந்தமில்லையே!
ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தினையும் கவர்கின்றவர்’ அன்றோ?
அதனாலே ‘அறியேன்’என்று சொல்லுகிறது.
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம்

ஆழி அம் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் –
அன்றிக்கே, பெண் பிறந்தாரையே நலியக் கூடியவைகள் தாமேயோ?
அற்பம் அண்ணியாரே பாதகராம் அன்று தப்ப விரகு இல்லை;
இப்படி முதலுறவு பண்ணிப் பொருந்த விட்ட இத் திருக்கண்கள் தாமேயோ?
உபகாரம் செய்தலையே ஸ்வபாவமாக வுடைய கிருஷ்ணனுடைய கடல் போலே திருக்கண்கள் என்னுதல்;
அன்றிக்கே, ‘கடல் போன்ற ஸ்ரமஹரமான வடிவையுடைய உபகாரசீலனான கிருஷ்ணனுடைய திருக் கண்கள்’ என்னுதல்.
அறியேன் –
இதற்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக் கண்கள் பாதகமாம் என்று வ்யத்பத்தி -அறியக் காரணம் இல்லை.
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்’-பெரிய திருமொழி, 7. 1 : 9- என்றே அன்றோ கேட்டிருப்பது?
இக் கடாக்ஷமே தாரகமாக அன்றோ உலகம் அடைய ஜீவிப்பது?
நாம் கேட்டிருந்தபடி அன்றிக்கே இரா நின்றது, இப்போது காண்கிறபடி. ‘ஆனால், தப்பினாலோ?’ என்னில்,

சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் –
மூல பலத்தின் அன்று பார்த்த இடமெல்லாம் பெருமாளே ஆனால் போலே ஆயிற்று;
ராம பாணத்துக்கு ராஷசர்கள் தப்பலாம் அன்றாயிற்று, இக் கண்களின் அழகின் கீழ் அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது?
புண்டரீக நெடுந்தடங்கள் போலப் பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்’ –திருவிருத்தம், 39.-என்னக் கடவது அன்றோ?
பாம்பைக் கண்ட அச்சம் போலே இருக்கை.
இறாய்க்க நினைத்த இடம் எங்கும் தானேயாய் இராநின்றது.
இப்போது ‘தாமரை நாண் மலர் போல்’ என்பான் என்?’ என்னில்,
ஸ தவ அதர்ஸநாத் ஆர்யே ராகவ: பரிதப்யதே
மஹாத ஜ்வலதா நித்யம் அந்நிநேவாக்நிபர்வத:’- சுந். 35 : 44.
நைவ தம்ஸாந் நமஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்
ராகவோபநயேத் காத்ராத் த்வத் கதேநாந்தராத்மநா’- சுந். 36 : 42.
பூஜிக்கத்தக்க பிராட்டியே! அந்தப் பெருமாள் தேவரீரைப் பார்க்காத காரணத்தால் மிகப் பெரியதாயும் எரிந்து கொண்டு இருக்கிற
நெருப்பினாலே சூழப்பட்ட நெருப்புமாலை போன்று பரிதபிக்கிறார்,’ என்றும்,

கன்மத்தை ஞாலத் தவர் ஆர் உளரே கடப்பார்?
பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய்
நன்மத்தை நாகத் தயல் சூடிய நம்பனே போல்
உன் மத்தனானான் தனை ஒன்றும் உணர்ந்தி லாதான்.’- கம்பராமா. உருக்காட்டுப்படலம் . 84.

பெருமாள் ஊர்ந்ததும் கடித்ததும் துடைக்க அறியார்’ என்றும் சொல்லப்படும் நிலை அன்றோ அவருடை நிலை?
நன்று; அதற்கு அடி என்?’ என்ன,
த்வத்கதேநாந்தராத்மநா-உன்னிடத்தில் வைத்த மனத்தை யுடையவராதலாலே’ பெருமாள் இங்கே குடி போர,
அங்கு இவை யார் தான் அறிவார் என்றான் அன்றோ?
பிரிவில் இவ்வளவு அன்று அன்றோ அத்தலைக்கு ஆற்றாமை?
அதனை அறிகிலலே இவள்.
தன்னோடே வந்து கலந்த விளை நீர் அடைத்துக் கொண்டு பிரிகிற போதைச் செவ்வி அன்றோ இவள் அறிவது?
அதுவே அன்றோ இவள் நெஞ்சில் பட்டுக் கிடப்பது? பின்பு அவன் பட்டது அறியாளே;
ஆகையாலே, தாமரை நாண் மலர் போல்’ என்று சொல்லுகிறாள்.

வந்து தோன்றும் –
பிரித்யக்ஷத்திலே அத் தலையாலே வரவு ஆனால் போலே
உருவு வெளிப்பாட்டிலும் அத் தலையாலே வந்து தோன்ற ஆயிற்றுத் தான் அறிகிறது.

கண்டீர் –
உங்களுக்கு இது தோற்றுகிறது இல்லையோ?

தோழியர்காள் அன்னைமீர் –
சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படி யன்றே இவள் நிலை? என்றது,
தோழிமார்க்குச் சொன்ன இதனைத் தாய்மார்க்குச் சொல்லுவோம் அல்லோம்,’ என்று மறைக்கும் அளவு அன்று
ஆயிற்று, இவளுக்குப் பிறந்த தசா -நிலை விசேஷம்,’ என்றபடி.

என் செய்கேன் –
இதனைத் தப்பப் பார்ப்பதோ,
அனுபவிக்கப் பார்ப்பதோ? எதனைச் செய்கேன்?

துயராட்டியேனே –
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் நபிபேதி குதஸ்சந’-தைத்திரீ.
இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் எப் பொருளினின்றும் அஞ்சான்,’ என்று இருக்க வேண்டி இருக்க,
அங்ஙன் அன்றிக்கே, -அவசியம் அனுபோக் தவ்யம் ‘அவசியம் அனுபவிக்கத் தக்கது’ என்கிற படியே,
பழைய கிலேசமே அனுபவிக்கும்படி ஆயிற்றே.

இடராக வந்தென்னைப் புன் சிறு தெய்வங்கள் என் செயுமான்
இடராக வன் பிணி மாநாக மென் செயும் யான் வெருவி
இடராக வன்னி புனல் இடி கோள் மற்றும் என் செயும்வில்
இடராக வன் அரங் கன் திருத் தாள் என் இதயத்ததே.’- திருவரங்கத்தந்தாதி

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply