ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-6-10–

பிராப்யன் அவனே என்னும் இடத்தைச் சொல்லி,
தன்னைப் பெறுவதற்குச் சாதனம் தானே என்னும் இடத்தையும் சொல்லி,
விரோதிகளை அழிப்பானே அவனே என்னும் இடத்தையும் சொல்லி,
இப்படி நம் பேற்றுக்குக் கண்ணழிவு இன்றிக்கே இருந்த பின்பு
அவன் தன்னை நமக்குத் தரும் என்று அறுதியிடுகிறார்.

ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே–7-6-10-

ஏற்ற அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு –
ஒருவராலும் ஸ்வ யத்தனத்தாலே -தம் முயற்சியால் அடைய ஒண்ணா திருக்கிற
ஸ்ரீ வைகுண்டத்தை அவன் தானே தரப் பெற இருக்கிற நமக்குத் தரும்.
எல்லா வழியாலும் அவன் ஸ்வபாவத்தை -தன்மையை அறிந்து, ‘அதனைத் தரும்’ என்று இருந்தீரே யாகிலும்,
பெற இருக்கிற நம் படியைப் பாரானோ?’ என்னில்,

ஆயர் குலத்து ஈற்றிளம்பிள்ளை –
நம் படி பார்க்க அறியாத இளைஞன். இளைஞனே!
முக்த ஸாயுஜ்யதோபூ:’ ஸ்தோத்ர ரத்நம், 63.
(சிசுபாலனுக்கு) நித்ய ஸூரிகளோடு ஒத்த இன்பத்தை அளித்தவன் ஆனாய்’ என்னக் கடவதன்றோ?
ஈற்றிளம்பிள்ளை –
ஈறான இளம்பிள்ளை’ என்றாய், மிக்க இளைஞன் என்றபடி. ஈறு -முடிவு.
அன்றிக்கே, ஈன்றிளம்பிள்ளை என்றாய், ‘கற்றிளம்பிள்ளை’ என்றபடி. இரண்டாலும் அதி இளைஞன் என்றபடி.

ஒன்றாய்ப் புக்கு –
கம்ஸனும் பொய்யே அம்மானாய் ‘வில் விழவுக்கு’ என்று அழைத்து விட,
இவனும் பொய்யே மருகனாய் அவற்றிற்கெல்லாம் தானே கடவனாக அபிமானித்து -விரும்பிப் போய்ப் புக்கானாயிற்று.
அன்றிக்கே, ‘வில் விழவு’ என்று கொண்டு ஒரு வியாஜத்தை இட்டுப் போய்ப் புக்கு என்னுதல்.

மாயங்களே இயற்றி –
ஆயுதச் சாலையிலே புக்கு ஆயுதங்களை முரிப்பது,
ஈரங்கொல்லியைக் கொன்று பரிவட்டம் சாத்துவது,
குவலயாபீடத்தின் கொம்பை முரிப்பது, மல்லரைக் கொல்லுவது போன்ற ஆச்சரிய காரியங்களையே செய்து.
இயற்றுதல் –
செய்யத் தொடங்குதல்.
இவன் இப்படிச் செய்யப் புக்கவாறே அவற்றைக் கேட்டுப் பொறுக்க மாட்டாமல் கூற்றுவனைப்
போலே கிளர்ந்தான் ஆயிற்றுக் கம்ஸன்.

கூற்று இயல் கஞ்சனைக் கொன்று-
மஞ்சத்திலே இருந்த கம்ஸனை முகம் கீழ்ப் பட விழ விட்டுக் கொன்று பொகட்டானாயிற்று.
இயல்பு-தன்மை.
கேஸேஷூ ஆக்ருஷ்ய விகளத் கிரீடம் அவநீதலே
ஸ கம்ஸம் பாதயாமாஸ தஸ்ய உபரி பபாத ச’-, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 84.
அந்தக் கண்ணபிரான், கிரீடம் கீழே விழும்படி மயிரைப் பிடித்து இழுத்துப் பூமியிலே தள்ளினார்’
என்றதற்குக் கருத்து என்னையோ?’ எனின்,‘
ராஜத் துரோகிகளைக் கொல்லும்போது ராஜ சிஹ்நங்களை வாங்கிக் கொல்லுவாரைப் போலே காண்’
என்று அம்மாள் பணிப்பர்.
தான் கொடுத்த தரம் ஆகையாலே மற்று ஒருவர்க்குத் தோற்றத்துக்குக் காரணமாக வேண்டும் அன்றோ?
அதாவது ஈஸ்வரன் கொடுத்த சிஹ்னங்கள் இருக்கில் அவன் தன்னாலும் கொல்லப் போகாது என்கை –

ஆக, தன்னைத் தான் அறிவதற்கு முன்பு,
கம்ஸன் வர விட்டவர்களையும் அவனையும் தப்புகைக்குப் பணி போந்தது;
பருவம் நிரம்பித் தன்னைத் தான் அறிந்த பின்பு, பாண்டவர்கள் காரியம் செய்து இத்தனை என்கிறார்.

ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து –
பாண்டவர்களைச் சீறினவர்கள் அடைய ‘சாரதி, சாரதி’ என்று வாய் பாறிக் கொண்டு வர,
அவர்களை அடையத் தேர் காலாலே உழக்கிப் பொகாட்டானாயிற்று.
ஆற்றல் மிக்கான் –
பகைவர்கள்யும் வேரோடே வாங்கிப் பொகட்டு,
தரும புத்திரன் தலையிலே முடியையும் வைத்து,
இவள் குலைந்த சூழலையும் முடிப்பித்த இடத்திலும்,
நாதிஸ்வஸ்த மநா:’ பாரதம்,
நிலை பெறாத மனத்தை யுடையவனாய் இருக்கிறேன்’ என்றே அன்றே எழுந்தருளினான்?‘
ஆற்றல் என்று பொறையாய், ‘பொறை மிக்கவன்’ என்னுதல்.
அன்றிக்கே, வலியாய், ‘வலி மிக்கவன்’ என்னுதல்.
இவற்றை அடைய அழியச் செய்கைக்கு அடியான வலியைச் சொன்னபடி.

பெரிய பரஞ்சோதி புக்க அரியே –
கம்ஸனும் துரியோதனனும் இல்லாத இடத்தில் பரம பதத்திலே போய்ப் புக்க பின்பும்,
நித்ய ஸூரிகள் நடுவே இருந்தோம் அன்றோ?’ என்று பாராதே,
கம்ஸன் துரியோதனன், கர்ணன் என்று, ஆசிலே வைத்த கையும் தானுமாய்ப்
பகைவர்கள் மேலே சீறன சீற்றத்தின் வாசனை அங்கேயும் அனுவர்த்தித்த – தொடர்ந்தபடி.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply