சமுத்திர மதன வைசித்ரியை -திருப் பாற் கடலைக் கடைந்த
ஆச்சரியமான காரியத்தைச் சொல்லுகிறார்.
ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக் கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே–7-4-2-
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-
கடலிலே மந்தர மலையை நட்டவாறே கடல் கொந்தளித்து,
ஸஹ்யம் -மலை போய்த் தாழ்ந்து கொடுத்தது;
நீரானது தாழ்ந்த விடத்தே ஓடக் கடவதன்றோ?
ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டு ஓடுகிற போதை ஒலியானது இவர்க்குச் செவியிலே படுகிறபடி.
இவர்க்கு காலத்ரய -முக்காலத்திலும் உள்ளன எல்லாம் தெரியும்படி அன்றோ அவன் வெளிச் சிறப்பித்தது?
அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி –
வாசுகியினுடைய உடலைச் சுற்றிக் கடைகிற போதைச் சரசர வென்கிற ஒலியும்.
ஊறு – உடம்பு. சுலாய் – சுற்றி.
கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –
மந்தர மலையைக் கொடு புக்கு நட்டுத் திரித்த போது, கீழ்க்கடல் மேல் கடலாய்க்
கிடாய்ப் பாய்ச்சல் போலே திரை யோடு திரை தாக்கிக் கிளருகிற ஒலியும்,
அப்பன் –
உபகாரகன்.
சாறு பட –
கடலிலே நீர் கோதாம்படி பிரயோஜனமான அமிருதம் உண்டாக. என்றது,
நீரிலே ரசமான பசை பட’என்றபடி.
அன்றிக்கே, சாறு என்று திருவிழாவாய், ‘தேவ ஜாதிக்குத் திருவிழா உத்சவம் -உண்டாம்படியாக’ என்னுதல்;
சாறு பட – என்றபடி.
அமுதம் கொண்ட நான்றே –
அம்ருத மதனம் -திருப் பாற் கடல் கடைந்து அமுதம் கொண்ட காலத்தில்
இவை எல்லாம் உண்டாயின.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply