ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-3-5–

இங்ஙனம் விரைதல் ஸ்த்ரீத்வத்துக்கு பெண் தன்மைக்குப் போராதுகாண்,’ என்று தாய்மார் அலைக்க,
அதுவும் பண்டே போயிற்று; பிரயோஜனம் இல்லாத நிலையிலே கொடு போக நில்லாதே.
என்னை முன்னரே கொடு சென்று தென் திருப்பேரெயிலிலே விடுங்கோள்,’ என்கிறாள்.
முனிகிறது தான் என்னுடைய ஹிதத்தை -நலத்தைப் பார்த்தே யானால்
என் ஹிதத்திலே நலத்திலே செல்லப் பாருங்கோள் என்கிறாள்.’

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே–7-3-5-

முனிந்து சகடம் . . . . . . . . . . தோற்றேன் –
என்னுடைய நினைவு தன்னைப் புத்தி பண்ணுங்கோள்;
அவன் முனிவிலே அகப்பட்ட நான் இனி உங்கள் முனிவிற்கு மீளுவேனோ?
ஹிதமுமாய்ப் பிரியமுமான முனிவிலே அகப்பட்ட நான், ஹிதம் இல்லாததுமாய்ப் பிரியம் இல்லாததுமான
உங்கள் முனிவிற்கு மீளுவேனோ?

முனிந்து சகடம் உதைத்து –
முலை வரவு தாழ்த்தது என்று சீறி நீட்டின திருவடிகளுக்கு இலக்காய்ப் பொடி பட்ட தாயிற்றுச் சகடம்.
சிக்ஷேப் பரணா வூர்த்வம் ஸ்தந்யார்த்தீ ப்ரருரோத ஹ’-ஸ் ரீவிஷ்ணு புரா. 5. 6 : 1.
முலைப் பாலை விரும்பினவராய்த் திருவடிகளை மேலே நிமிர்த்தார் அழுதார்’ என்கிற தன்றோ?

மாயப் பேய் முலை உண்டு –
முலையை நினைத்துச் சீறினான்’ என்று முலை கொடுக்கத் தாய் வடிவு கொண்டு வந்த
வஞ்சனை யுடையவளான பேய்ச்சியை முடித்து.

மருதிடை போய் –
முலை உண்டால் தவழுமத்தனை அன்றோ?
புறம்பு நின்றும் வந்து.நலிகை அன்றிக்கே, நின்ற இடத்தே நின்று தப்பாமல் கொல்ல நினைத்த
மருத மரங்கள் இரண்டனையும் பொடி படுத்தி.

கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த –
அசுர ஆவேசத்தாலே ஒன்று கனிந்த விளவாய், ஒன்று கன்றாய் நின்றது;
அதிலே ஒன்றை இட்டு ஒன்றை எறிந்து இரண்டையும் முடித்த.

கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –
அழியுமற்றையும் அழித்தான்: அழியாததனையும் அழித்தான்.
வன்மையாலே அழித்தான் அவற்றை; மென்மையாலே அழித்தான் இவளை.
அவற்றின் கையிலே தான் அகப்படாமல் தப்பித் தன்னைத் தந்த உபகாரத்துக்கு எழுதிக் கொடுக்கிறாள் காணும்
பிரானுக்கு’ என்று, சேஷியான தன்னை உண்டாக்கி, என்னைச் சேஷத்வத்தினுடைய எல்லையிலே நிறுத்தினான்.
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி’-, ஸ்ரீகீதை, 4 : 5.
என்னுடைய பல பிறவிகள் கடந்தன்’ என்கிற அவதாரங்களைப் போன்று பரப்புப் போரும் காணும்
இவ் வவதாரத்தில் இவளைப் பெறுகைக்குச் செய்த ப்ரவ்ருத்திகளும் -செயல்களும் அவனுக்கு
அடியார்களிடத்துள்ள வாத்சல்யத்தின் காரியமான முனிவே அன்றோ?

கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –
ஆகையால் ‘அதோஸ்மி லோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம:’ ஸ்ரீ கீதை, 15 : 18.
வேதத்திலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று சொல்லப்படுகிறேன்’ என்றும்
ஜாநாதி புருஷோத்தமம்’ , ஸ்ரீ கீதை, 15 : 19.
என்னைப் புருஷோத்தமன் என்று எவன் தெரிந்து கொள்ளுகின்றானோ’ என்றும் சொல்லுகிற தன்னுடைய
பும்ஸ்த்வத்தை -ஆண் தன்மையைக் காட்டிக் காணும் இவளுடைய பெண்மையைக் கொள்ளை கொண்டது.
பெண்மை தோற்றேன் –
தோலாதது தோற்றேன்.

முனிந்து இனி-
இனி மீட்கலாம் என்றே நினைக்கிறது?
மீட்க நினைக்கிற நீங்கள் அவனுடைய வெற்றிச் செயல்கட்கு முன்னே அன்றோ மீட்கப் பார்ப்பது?

என் செய்தீர் –
எனக்கு அநுகூலர்கள் ஆனீர் அல்லீர்; மீட்கத் தொடங்கினது தலைக் கட்டிற்று அன்று.

அன்னைமீர்காள் –
ஜென்ம ப்ரப்ருதி என் பிரகிருதி -பிறந்தது முதல் கொண்டு என் இயல்பினை அறிந்து போருகிற நீங்கள் மீட்கப் பார்ப்பதே!
அவன் செய்த உபகாரங்களை அறியாமல் அன்றோ நீங்கள் பொடிகிறது?
அவன் செய்த உபகாரங்கள் மறக்க ஒண்ணாதாகில் நினைக்கிறாய்;
பெற்று வளர்த்த எங்களுடைய உபகாரமும் நினைக்க வேணும் காண்!’ என்ன,

முன்னி அவன் வந்து வீற்றிருந்த –
உபகாரத்தில் முற்பாடன் அவன் காணுங்கோள். முன்னி – முற்பாடனாய் நின்று;
பூர்வஜ-முன்னே உண்டாவனவனே’ என்னும்படியே, என்னைப் பெறுகைக்குக் காலத்தை
எதிர் நோக்கினவனாய்க் கொண்டு தன் வேறுபாடு தோற்ற இருக்கிற.

கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே –
கொண்டு புக்குக் காட்டுவார் தாழ்வே; அங்குள்ளன எல்லாம் பக்குவ பலமாக இருக்கும்.
கனிந்த மரம் கண்டால், ‘அசுர ஆவேசம் உண்டு’ என்று அஞ்ச வேண்டாத சோலை.

காலம் பெற என்னைக் காட்டுமினே –
இக் குடிக்கும் எனக்கும் பரிஹாரம் ஒன்றே அன்றோ?
பின்னையும் என்னை அங்கே கொண்டு போய் விடுதலைத் தவிரீர்கோள்;
நான் உளேனான போதே அதனைச் செய்யப் பாருங்கோள்.
பின்பு -கதே ஜலே சேது பந்தம் ஆகாதே -தண்ணீர் சென்ற பிறகு அணை கட்டப் பாராமல்,
நான் ஜீவிக்கும் எல்லையிலே காட்டுங்கோள்.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading