ஏதேனும் ஒன்றைக் கொண்டு வருந்தியாகிலும் போது போக்காதே இங்ஙனே செய்யலாமோ?’ என்று
பொடிகிற தாய்மாரைக் குறித்து, ‘என் நெஞ்சம் அவனாலே அபஹ்ருதமாகா -கொள்ளை கொள்ளப்பட்டது;
நான் எதனைக் கொண்டு போது போக்குவது?’ என்கிறாள்.
இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந்தினி யாரைக் கொண்டென் உசாகோ! ஓதக் கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே–7-3-4-
இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
நாணும் நிறையும் இழந்தது என்ற இடம், நிறத்திற்கும் உபலக்ஷணமன்றோ?
ஆதலால், அநு பாஷணத்திலே நிறம் இழந்ததையும் தோற்றச் சொல்லா நின்றாள்.
அத் தலையில் உள்ளனவற்றை முழுவதையும் நாம் சர்வ ஸ்வ அபஹரணம் -நமக்கு உரித்தாகச் செய்கை போய்.
நமக்கு உள்ளனவற்றிலே ஒன்றினைச் சிலர் கொடு போகையாவது என்?’ என்று செருக்குக் கொண்டு
இப்போதே மீட்டுக் கொடு வருகிறேன்’ என்று விரைந்து சென்ற மனமும் அங்கே படையற்றது.
என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
அங்கே புக்காரையும் தம்படி யாக்கிக் கொண்டார்.
பிரியேன்’ என்று சொன்னவர் அன்றோ இத் தலையைப் பிரிந்து நினையாது இருக்கிறார்?‘
நெஞ்சினார்
அலைந்த பரிவட்டமும் தாமுமாய் அணுக் கடித்துத் திரியா நின்றாராயிற்று.
ப்ரவேஷ்யாமி ச வாஹிநீம்’ யுத். 19:23.
தூசித்தலையில்-தூசித்தலை – படையின் முன்னிடம்- வியாபரிப்பேன் நான்’ என்றான் அன்றோ ஸ்ரீ விபீஷணாழ்வான்?‘
இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
நிறம் தொடக்கமாக இழந்தவை அடைய மீட்பதாகச் சொல்லிப் போன நெஞ்சினரும் அங்கே கால் தாழ்ந்தார்.
வினைத் தலையிலே படை அறுக்குமாறு போலே, வரிசையும் கொடுத்துத்
தம்மோடு சாம்யா பத்தியும் -ஒப்புமையையும் கொடுத்தார்.
ராஜஹ்யேஷவிபீஷண;’ யுத். 28:27. 1‘இந்த விபீஷணன் ராஜா வன்றோ?’ என்னுமாறு போலே,
வரிசை பெற்றுத் திரியா நின்றார்.
இது, இராவணனைப் பார்த்துச் சாரன் கூறியது.
தாருலா மணி மார்ப!நின் தம்பியே
தேரு லாவு கதிருந் திருந்து தன்
பேரு லாவு மளவினும் பெற்றனன்
நீரு லாவு மிலங்கை நெடுந் திரு.’, கம்பராமாயணம், ஒற்றுக்கேள்விப்படலம், 60.
இராவணன் முன்னே, அவன் சோற்றை உண்ட சுகசாரணர்கள் ஸ்ரீவிபீஷணாழ்வானை ‘ராஜா’ என்பான் என்?’ என்னில்
எழுத்து உரு அழியாதே கிடந்தாலும், புள்ளி குத்தினால் அத்தைக் கழித்து மேலே போமாறு போலே,
முடி கொடுக்குமவர் கையாலே வைக்கையாலே ‘ராஜா’ என்றார்கள்.
ஒன்றாலும் ராவணனுடைய கொடுமையை அறிந்து வைத்துக் கூசாதே இங்ஙன் சொல்லுவான் என்?’ என்னில்,
சித்திரம் குத்துமோ’ என்று இருந்தார்கள்.
நிலவரைக் கொண்டு வினை செய்யலாம்’ என்று தரம் கொடுப்பர் அன்றோ?
என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
நிறம் மீட்கப் போனாரும் நிறம் கொடு போனாரோடு ஒத்தார்.
இத் தலையில் வெறுமை கண்டு போனதுவும் -பவ்ங்கல்யம்- நிறைவினைக் கண்டு போனவனோடு ஒத்தது.
போவார் போவார் எல்லாரும் இத் தலைக்குக் காரியமாகக் காணும் போம் போது சொல்லிப் போவது!
அவன் தானே ‘இத் தலையில் ஊற்று இருக்க வேணும்’ என்று போனான் ஆனான்’
இது இத் தலையில் வெறுமை கண்டு, நோக்குகைக்காகப் போயிற்று.
நாம் தாம் அவர்களை வெறுக்கிறது என்?’
நோபஜனம் ஸ்மரன்- முத்தன் இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை,’ என்கிறபடியே, புக்கார் மீளாத தேசமான பின்பு.
அங்கே ஒழிந்தார் –
கடலுக்குக் குறை நிரப்ப வேணும்’ என்று திரியா நின்றார்.
பண்டு நெஞ்சு இழந்தவர்களும் வருந்தித் தரித்துச் சிலரோடே அவனுடைய
செயல்களைச் சொல்லிக் கொண்டு இருந்திலர்களோ?
நீயும் அப்படியே வருந்தியாகிலும் சிலரோடே காலம் கழிக்க வேண்டாவோ?’ என்ன,
இனி உழ்ந்து ஆரைக்கொண்டு என் உசாகோ –
என் நெஞ்சினை இழந்த பின்பு இனி, துக்கப்பட்டு ஆரோடே கூட எதனைச் சொல்லி நான் காலம்.போக்குவது?
உழந்து – வருந்தி.
இலங்கையிலே இருந்தவளுக்கு ஒருவனாதல் ஒருவன் குடியாதல் உண்டு; அதுவும் இல்லையே எனக்கு!
ஜ்யேஷ்டா கந்யா அநலாநாம விபீஷணஸூதா கபே
தயா மமஇதம் ஆக்யாதம் மாத்ரா ப்ரேஷிதயா ஸ்வயம்’. சுந். 37:11. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
ஜ்யேஷ்டா கந்யாநலா நாம விபீஷண ஸூதா – இங்கே இருந்தே அங்குத்தைக்கு -பெருமாளுக்கு.-ஆவாள் ஒருத்தி காண்!
கபே – ஒரோ நிலைகளிலே நீ உதவுமாறு போலே காண் இவளும் ஒரோ நிலைகளிலே உதவ வல்லபடி.
அன்ன சாவ முளதென ஆண்மையான்
மின்னு மௌலியன் வீடணன் மெய்ம்மையான்
கன்னி என்வயின் வைத்த கருணையாள்
சொன்ன துண்டு துணுக்கம் அகற்றுவாள்.’-கம்பராமாயணம்,. சூடாமணிப்பட. 22.
பல சொல்லி என்? உன்னோடு ஒப்பாள் ஒருத்தி.
ஆரைக் கொண்டு என் உசாகோ –
தேகாத்ம -சரீரத்தையே ஆத்மாவாக அபிமானித்து இருக்கிற சம்சாரிகளைக் கொண்டு போது போக்கவோ?
ஈஸ்வரோஹம் என்று இருக்கிற பிரமன் சிவன் முதலாயினோர்களைக் கொண்டு போதுபோக்கவோ?
பகவானுடைய அனுபவித்திலே நோக்காக இருக்கிற நித்ய ஸூரிகளைக் கொண்டு போது போக்கவோ?
இத் தலையை உரி சூறை கொண்டு போனவனைக் கொண்டு போது போக்கவோ?
யாரைக் கொண்டு எதனை உசாவுவது? என் உசாகோ –
நான் அங்கே பன்னிரண்டு வருடங்கள்’ என்று சொல்லலாமன்றோ பிராட்டிக்கு?
அப்படியே நமக்கும் ஏதேனும் உண்டோ?
கலவியில் அபர்யாப்தி -நிறைவு பெறாமை இருக்கிறபடி.
ஆரைக்கொண்டு –
நெஞ்சு போலே நமக்குப் பாங்காய் இருப்பார் உளரோ? ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்னில்,
ஓதம் கடல் ஒலி போல எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த –
அங்குத்தையது இங்கே நடையாடா நின்ற பின்பு, நாமும் அங்கே போய்ப் புகுமத்தனை
ஓதம் கிளர்ந்த கடல் போலே இருந்துள்ள வேத ஒலியானது எங்கும் பரம்பா நின்ற தென் திருப்பேரெயில் வீற்றிருந்த.
நல்வேதம் –
வேதாநாம் ஸாமவேதோஸ்மி’ ஸ்ரீ கீதை, 10 : 22.வேதங்களுக்குள்ளே சாம வேதம் நானாகிறேன்’ என்கிற
சாமத்தின் ஒலியாய்க் கிடக்குமத்தனை, பார்த்த பார்த்த இடம் எங்கும்,
அவ் விருப்பைக் கண்டு முத்தர் சாமகானம் பண்ணிப் பிரீதிக்குப் போக்கு விடுமாறு போலே.
முழங்கு சங்கக் கையன் –
வேத ஒலியானது ஸ்ரீ பாஞ்சஜன்யத்தைக் கிட்டி பிரதி த்வனி -எதிர் ஒலி எழா நிற்கும்.
மாயத்து ஆழ்ந்தேன் –
அவனுடைய புன்முறுவல் கடைக் கண் நோக்கம் முதலியவைகளிலே மீள ஒண்ணாதபடி அகப்பட்டேன்.
அன்னையர்காள் என்னை என் முனிந்தே –
சம்பந்தம் உண்டு என்னாச் சீறுமத்தனையோ?
சீற்றத்துக்கு எதிர்த் தலையும் வேண்டாவோ? தர்மி உண்டாய் முனிய வேணுமே!
மாயத்து ஆழ்ந்தேன் என்னை என் முனிந்தே –
ஸ்வாதீனமுள்ளவரை அன்றோ முனிந்தால் பிரயோஜனமுள்ளது!
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply