சேர்க்குமவள் ஒருத்தி யுமேயாக, அல்லாத பங்களம் அடங்கலும் ‘நமக்கு நிலம் அன்று’ என்று கை வங்கிற்று
தோழியானவள், ‘இது நமக்குப் போராது காண்; நெஞ்சை ஒருங்கப் பிடித்துத் தரித்து இருக்க வேண்டாவோ?’ என்ன,
அந் நெஞ்சு தான் இனிச் செய்வது என்? அவயவம் முதலியவற்றின் சோபைகளிலே அகப்பட்டு
அதுவும் தனக்குள்ளது அடங்கலும் இழந்தது காண்!’ என்கிறாள்.
செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே–7-3-3-
செங்கனி வாயின் திறத்ததாயும், செஞ்சுடர் நீண் முடி தாழ்ந்ததாயும், சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்,
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும், நெஞ்சும் நாணும் நிறையும் இழந்தது காண்!’ என்கிறாள்.
சௌபரி என்பான் ஒருவன் ஒரு ஸூஹ்ருதம் -நல் வினை அடியாக ஐம்பது வடிவு கொண்டான் அன்றோ?
அவ்வளவு அன்றே, இவள் கலந்த விஷயம் செய்ய வல்லது?
அன்றிக்கே, ,ஸ ஏகதாபவதி த்ரிதாபவதி’ சாந்தோக்யம்,7:26.
ஒரு பிரகாரமாக ஆகிறான், மூன்று பிரகாரமாக ஆகிறான்’ என்கிறபடியே அனுபவியா நின்றால் பிறக்கும் நாநா பாவம்,
பிரிவிலே நெஞ்சுக்கு உண்டாகா நின்றது,’ என்னுதல்.
அன்றிக்கே, அவன் வ்யக்தி -உருவம் தோறும் பர்சமாப்ய வர்த்திக்குமா- நிறைந்து வசிக்குமாறு- போலே யாயிற்று,
இதுவும் அவயம் தோறும் தனித் தனி அகப்பட வல்லபடி’என்னுதல்.
செங்கனி வாயின் திறத்ததாயும் –
பிரிந்து கடக்க இருக்கில் என்? உன் கண் வட்டத்திலே கிடக்கில் என்? இது உன் சரக்கு அன்றோ?’ என்று
சொல்லத் தொடங்கி, தழு தழுத்து வருகிற திரு வதரத்திலே அகப்பட்டபடி.
அதிலும், அதரத்தில் பழுப்புக்குள் இழிய மாட்டுகிறது இல்லை.
வாயின் திறத்ததாயும் –
அதுதான் ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் ஆகாதே?
செஞ் சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும் –
பிரிவினைப் பற்றிப் பேசிப் பேர நின்ற போது, ஆதி ராஜ்ய ஸூசகமாய்‘உபய விபூதி நாதன்’ என்று
தோற்றும்படி இருக்கிற திரு அபிஷேகத்தை -முடியைக் கண்டு தரைப் பட்டுக் காலைப் பிடித்தது.
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
பிரிந்தால் விரோதியைப் போக்குகைக்குக் கருவியாய், வைத்த கண் மாற ஒண்ணாத அழகை யுடைய
ஆழ்வார்களைக் கண்டு உகந்தது.
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் –
தவாஸ்மி- உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின
திருக் கண்களுக்கு ஆயிற்று அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,
பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.
இதுவும் விஷயத்திற்குத் தகுதியாகப் பல வடிவு கொள்ளுகிறபடி,’ என்னுதல்
அவனுடைய ஐஸ்வர்யமடைய இதற்கு உண்டாகக் கடவதன்றோ?
திருப்பாற்கடல் கடைகிற காலத்தில் தான் எட்டு வடிவு கொண்டால் போலே காணும்,
ஓருரு வெற்பைத் தரித்தது தானவர் உம்பர் உள்ளாய்
ஈருரு நின்று கடைந்தது வேலை யிதனிடையோர்
பேருரு இன்னமுதோடே பிறந்தது பெண்மை கொண்டோர்
நாருரு நின்ற தரங்கா! இது என்ன நற்றவமே?’திருவரங்கத்து மாலை.
இப்பாசுரத்திற்கூறப்பட்ட ஐந்து வடிவோடு, வாசுகி மந்தரம் இவற்றுக்கு அந்தரியாமியாய் நின்ற வடிவு இரண்டு;
உபேந்ரனாய் நின்ற வடிவு ஒன்று: ஆக, மூன்றதனையும் கூட்டிக் காண்க.
திங்களும் நாளும் விழா அறாத –
உத்தேஸ்யமான பூமியிலே நித்யோத்ஸவம் செல்லா நிற்க, அது இங்கே நம் கண் வட்டத்தே
துக்கத்துக்கு இலக்காய் இருக்குமோ!
மாதத் திருநாளும் நித்ய -நாள் திருநாளும் ஓவாத.
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு-
இவ்விருப்பு நமக்கு ஆக்கிக் கொண்டிருக்கிற உபகாரகனுக்கு. என்றது,
பரத்வம், நித்ய முத்தர்கட்கு;
வியூகம், முத்தரைப் போன்றவர்கட்கு;
விபவம், புண்ணியம் செய்தார்க்கு’
இவ் விருப்பு, பாபம் செய்த சம்சாரிகளுக்காக அன்றோ?’ என்றபடி.
என் நெஞ்சம்-
அவனுடைய உபகாரமும் அழகு முதலானவைகளும் வயிர உருக்கு ஆகை.
நெஞ்சினுடைய வன்மை அறிதி அன்றோ? நெஞ்சம் அவனும் ஒரு கோவையிலே அடைப்பு உண்டபடி.
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் –
ராகவோர்ஹதி வைதே ஹீம்’சுந். 16:5.
ஸ்ரீ ராகவனுக்குத் தகுந்தவள் ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்’ என்னுமாறு போலே.
தோழீ –
நெஞ்சினைத் திருத்திக் கலப்பிக்கப்பட்ட வருத்தம் அறிதி அன்றோ’
இப்போது நீயும் கூட எதிர்த்தலை யாம்படி யன்றோ வாய்த்தது?
நாணும் நிறையும் இழந்ததுவே –
இது இழவாதது உண்டோ!
அரை ஷணம் அவன் பேர நின்று படுத்தின பாடு எல்லாம் என் தான்!
நான், தன்னை இழந்தேன்:
தாய்மார் தோழிமார்கள், என்னை இழந்தார்கள்:
நெஞ்சு, நாணும் நிறையும் இழத்தது.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply