பல சொல்வதனால் பயன் என்? நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
அப்ராக்ருதமான பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்.
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலு ளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே–5-1-9-
ஆவார் துணை ஆர் என்று –
துணை ஆவார் யார்? என்று.
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க-
ஷூபிதமான- கொந்தளிப்பை யுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே,
சம்சார ஆர்ணவத்தில் -பிறவிப் பெரும் கடலிலே நின்று நான் நடுங்க.
நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்ரத்தை நினைத்தபோது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக்
கரையிலே நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக.
அதற்குக் கருத்து, நோவு படா நிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி.
நடுங்குகையாவது, அசைந்து வருகை.
அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் மாஞ்சா க்ரோஸந்தி கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகுபெயராகக் கொண்டு,
நாவாய்’ என்பதற்கு, நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம்.
இவ்விதமான நடுக்கத்தில் சர்வேஸ்வரன் செய்தது என்? என்னில்,
தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே-
அப்ராக்ருத -பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய சமஸ்தானத்தோடும் -உறுப்புகளோடும் அவ் வுறுப்புக்களில் சேர்ந்த
திவ்ய ஆயுதங்களோடும் கூட வந்து, ஐயோ! ஐயோ! என்று என் பக்கலிலே கிருபையைச் செய்து என்னோடே வந்து கலந்தான்.
தேவு-அழகு -திவ்யமாய் அப்ராக்ருதம் என்றபடி
பின் இரண்டு அடிகட்கு, திருக் கையில் ஆழ்வார்களோடு பொருந்தினால் போலே என்னோடே வந்து கலந்தான்” என்று
ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.
இதனை எம்பெருமானார் கேட்டருளி “இங்ஙனேயாக அடுக்கும், ‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்’ என்றாயிற்று
இவர் ஆசைப் பட்டிருப்பது; ஆசைப் பட்டபடியே திவ்விய ஆயுதங்களோடே வந்து கலந்தான்” என்று அருளிச் செய்தார்.
இவர் தாம் பூ வேளைக் காரரைப் போலே, இவை காணாத போது கை மேலே முடிவார் ஒருவரே யன்றோ.
அருள் செய்து அடியேனோடும் ஆனான் –
கேசவன் தமர்” என்ற திருவாய்மொழி தொடங்கி லோபத்தாலே, கிருபையை, ‘விதி’ என்ற சொல்லால் சொல்லிப் போந்தவர்,
இப்பாசுரத்தில் அதனை ‘அருள்’ என்று வெளியிடுகிறார்.
ஸ்வரூபத்திற்குத் தகுதியாகச் -அனுரூபமாக -சேஷியாகவே வந்து கலந்தான் என்பார் ‘அடியேனொடும் ஆனானே’ என்கிறார்.
(அடியேனொடும்” என்ற உம்மையாலே, கையில் ஆழ்வார்களோடு சேர்ந்தார்போலே என்னோடும்
சேர்ந்தான் என்றபடி. “கோலத்தோடும்” என்ற உம்மை, அசை நிலை.
’இதனை’ என்றது, “திருச்சக்கரம் சங்கினொடும்” என்றதனைத் திருஷ்டாந்தமாக யோஜித்த ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாகத்தைக் குறித்தபடி.
எம்பெருமானார் நிர்வாகத்தில் “அடியேனொடும்” என்ற உம்மை, இழிவு சிறப்பு. “கூராராழி வெண்சங்கு” என்பது, திருவாய். 6. 9 : 1.)
(பூ வேளைக்காரர் – அரசர்களுக்கு அவ்வக்காலங்களில் பூ இடாவிடில் குத்திக்கொண்டு முடியுமவர்கள்.
இவை காணாத போது’ என்றது, இவற்றைக் கைமேலே காணாத போது என்றபடி.
கைமேலே முடிவார்” என்பதற்குப் போரிலே முடிவார் என்பது வேறும் ஒரு பொருள்.)
(“கேசவன் தமர்” என்ற திருப் பதிகத்திலுள்ள “மதுசூதனை” என்கிற திருப்பாசுரம் தொடங்கி என்றபடி.
தொடங்கி’ என்றது, பின்னே வருகின்ற “என்றும் ஒன்றாகி”, “கையார் சக்கரம்”, “அம்மான் ஆழிப்பிரான்”
என்ற திருப் பாசுரங்களைத் திரு வுள்ளம்பற்றி)
(அடியேன்” என்ற பதத்திலே நோக்காக, அதற்கு மறுதலைப் பொருளாயுள்ள ‘சேஷி’ என்ற சொல்லைக்
கொணர்ந்து கூட்டிப் பொருள் அருளிச் செய்கிறார்)
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply