ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -5-1-8–

உபய விபூதி நாதனானவன் என் பக்கலிலே மேல் விழுந்து என்னை விடாதே
ஹ்ருதயத்திலே -மனத்திலே புகுந்திருந்தான்;
நானும், இனி நித்ய ஸூரிகளைப் போலே நித் ய சம்சாரத்தை விட்டு,
அவனையே எல்லா உறவு முறையுமாகப் பற்றப் பார்த்தேன் என்கிறார்.

மேலாத் தேவர்களும் நிலத் தேவரும் மேவித் தொழும்
மாலார் வந்து இன நாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே–5-1-8-

மேலாத் தேவர்களும் –
நித்ய ஸூ ரிகளும்.

நிலத் தேவரும் –
பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்களும்.

மேவித் தொழும் மாலார் – இளையபெருமாளும், இடக்கை வலக்கை அறியாத குரங்குகளும் ஒக்க அடிமை செய்தால் போல,
இரண்டு விபூதியில் -உலகங்களில் உள்ளவர்களும் ஒரு மிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் சர்வாதிகனானவன்.

வந்து –
தான் இருக்குமிடத்தே நான் செல்லுதல் ப்ராப்தமாக -தகுதியாக இருக்க, நான் இருந்த இடத்திலே தானே வந்து.

இன நாள் –
இப்போது, என்றது, பூர்வ க்ஷணத்தில் – அறியாது இருக்க, இங்ஙனே விடிந்து கொண்டு நிற்கக் கண்டேன் என்றபடி.
இப்படி வருகைக்குக் காரணம் என்? என்னில்,

அடியேன்-
விட ஒண்ணாத ப்ராப்தியை -சம்பந்தத்தை இட்டு வந்தான். வந்து செய்தது என்? என்னில்,

மனத்தே மன்னினார் –
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்” என்கிறபடியே,
பரம யோகிகள் நெஞ்சிலும், திருப்பாற் கடலிலும், பெரிய பிராட்டியார் திரு முலைத் தடங்களிலும் இருக்கக்கூடிய அவன்,
நித்ய சம்சாரியாய்ப் போந்த என் நெஞ்சிலே ஸ்தாவரத்தைப் போன்று -பிரதிஷ்டையாய் -நிலைபெற்று நின்றான்.
இனி, நீர் செய்யப் பார்த்தது என்? என்ன, இனி, இவனை ஒழிய எனக்கு ஒரு செயல் உண்டோ? என்கிறார் மேல்:

சேல் ஏய் கண்ணியரும் –
தங்கள் நோக்காலே துவக்க வல்ல ஸ்த்ரீகளும் -பெண்களும்.

பெரும் செல்வமும்-
நிரவதிகமான செல்வங்களும்.

நன்மக்களும் –
குணங்களால் மேம்பட்ட புத்திரர்களும்.

மேலாத் தாய் தந்தையும் –
தங்கள் தங்களை அழித்து மாறியாகிலும் -பிரஜையை -குழந்தைகளை நோக்கும் தாய் தந்தையர்களும் எல்லாம்.

இனி அவரே ஆவார்-
இனி அவரையே எனக்காகப் பற்றப் பார்த்தேன் என்கிறார்.
கிலேசகரமான -துக்கங்களைக் கொடுக்கக் கூடிய அவர் அவர்களுடைய சம்பந்தத்தால் துக்கப்பட வேண்டா என்பார்
அவரே ஆவார்’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.
மாதா பிதா -இத்யாதி -தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் சிநேகிதனும் மோக்ஷ உலகமும்
ஸ்ரீமந் நாராயணனாகவே இருக்கிறான்” என்பது உப நிஷத்
அஹம் தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபல க்ஷயே-பிராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ–அயோத். 58 : 31. –
யானோ தசரத சக்கரவர்த்தியிடத்தில் தகப்பன் என்ற முறையைப் பார்க்கிறேன் இல்லை;
எனக்கு ஸ்ரீ ராமபிரானே தமையனும் ஸ்வாமியும் உறவினர்களும் தமப்பனுமாக இருக்கிறார்” என்றார் இளைய பெருமாள்.

நற்றாதை நீ தனி நா யகன் நீ வயிற்றிற்
பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக்
கற்றாயிது காணுதி இன்றெனக் கை மறித்தான்
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அனான்–கம்ப ராமாயணம்.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply