“போரவைத்தாய் புறமே” என்று இவர் நொந்தவாறே, ‘இவருடைய இழவை மறப்பித்து உளராக்கி நடத்த வேண்டும்’
என்று பார்த்துத் தன் வடிவழகைக் காட்ட, அவ் வடிவழகைக் கண்டவாறே தம்முடம்பை மறந்து பிரீதராய்,
கண்டுகொண்டேன் என்கிறார். இவரை மெய்ம் மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு.
புற மறக் கட்டிக் கொண்டு இரு வல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிற முடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயல் ஆழி அங்கைக் கரு மேனி அம்மான் தன்னையே–5-1-6-
புறம் அறக் கட்டிக்கொண்டு-
பிணைத்த இடம் அறிந்து இவனால் அவிழ்த்துக்கொள்ள ஒண்ணாதபடியாக,
புச்சம் தோன்றாதபடி உள் முடியாக முடிந்து. –
மம மாயா துரத்யயா -என்னுடைய மாயையானது தாண்ட முடியாதது” என்கிறபடியே,
சர்வ சக்தியான தான் பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்க ஒண்ணாது என்றானே அன்றோ.
இரு வல் வினையார் குமைக்கும்-
இரு வகைப்பட்ட மஹா பாவங்கள் தகர்க்கும்.
வினையார்
என்கிறது -அவற்றால் நெருக்குண்கிற படியைக் கண்டு சொல்லிற்றாதல்
அவைதாம் பலவாகையாலே பஹு வசனமாதல்
குமைக்கும் முறை முறை யாக்கை –
புண்ணியம் காரணமாகத் தேவ சரீரத்தை அடைந்தும்,
பாவம் காரணமாக விலங்கு முதலான சரீரங்களை அடைந்தும்,
இவ் விரண்டு வினைகளும் காரணமாக மனித சரீரத்தை அடைந்தும்
படும்பாட்டுக்கு ஒரு முடிவு இல்லை அன்றோ?
திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் பொருள் போலே, கர்மங்களுக்குத் தகுதியாகத்
தேவர்கள் முதலான சரீரங்கள் தோறும் பிரவேசித்துத் திரியும்.
புகல் ஒழிய –
புகுதல் தவிர. ஞான ஆனந்த லக்ஷணமான ஆத்மாவே அன்றோ -உபசயாத்மகமாய் -அஸ்திரமான சரீரத்தில் –
தோன்றுதல் வளர்தல் முதலான தொழில்களை யுடையதாய், நிலை இல்லாத சரீரத்திலே -அகப்பட்டு நோவுபடுகிறது. அது தவிர,
கண்டு கொண்டொழிந்தேன் –
உத்தேசிய வஸ்துவைக் கண்டு அநுபவிக்கப் பெற்றேன்.
சரீர பிரவேசம் தவிர்ந்தேன் -பிறவி நீங்கினேன் என்றபடி.
நி்றமுடை நால் தடம் தோள் –
சர்வ பூஷண பூஷார்ஹா-ஸ்ரீராமா. 3 : 14.-எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கைக்குத் தகுதியாக
இருக்கிற திருத் தோள்கள்” என்கிறபடியே,
ஆபரணத்திற்கு ஆபரணமாய், நான்காய், சுற்றுடைத்தான திருத் தோள்களை யுடையனாய்.
செய்ய வாய் செய்ய தாமரைக் கண் –
ஸவிலாச ஸ்மிதாதாரம் பிப்ராணம் முக பங்கஜம்” இது, ஸ்ரீ விஷ்ணுபுரா.-5. 17 : 21.
ஸ்மித ஆதாரம்” என்ற பதங்களுக்குப் பொருள், ‘முறுவல் எடுத்த கலம்’ என்பது.
விலாசத்தோடு கூடிய திருமுறுவலுக்கு ஆதாரமான திருமுக மண்டலத்தையுடையவர்” என்கிறபடியே,
“முறுவல் எடுத்த கலம்” என்னும்படி திரு முகத்தைச் செவ்வி பெறுத்தா நின்றுள்ள புன் சிரிப்பையும்,
இழவு மறக்கும்படி குளிரக் கடாக்ஷிக்கிற திருக் கண்களை யுமுடையனாய்.
அறம் முயல் ஆழி அம் கை-
ஆஸ்ரித ரக்ஷணமாகிய -அடியார்களைக் காப்பாற்றுதலாகிற பரம தர்மத்திலே தன்னிலும்
முயலா நின்றுள்ள திரு வாழியையுடைய அழகிய திருக் கையையும்,
கரு மேனி –
அதற்குத் தப்பிலும் தப்ப ஒண்ணாத குளிர்ந்த வடிவழகையும்,
அம்மான் தன்னை –
இவை எல்லாம் எனக்கு’ என்று அநுபவிக்கும் படியான ப்ராப்தியையும் -சம்பந்தத்தை யுமுடையவனைக் காணப்பெற்றேன் என்க.
தஸ்ய மத்யே வஃநிசிகா அணீய ஊர்த்வா வ்யவஸ்தித:-நீலதோயத மத்யஸ் தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீவார சூகவத் தந்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா. இது, தைத்திரீய நாராயண உபநிஷத் –
அந்தத் துவாரத்தின் மத்தியில் பரமாத்மாவினது அப்ராகிருதமான சரீரமானது மெல்லியதாயும்
மேல் நோக்கின பிரகாசத்தையுடையதாகவும் இருக்கிறது; அத் திருமேனி எங்ஙனம் இருக்கிறது? எனின்,
கரிய மேகத்தை நடுவிலுடையதான மின்னற்கொடி போன்று மெல்லியதாகவும் உருக்கின தங்கம் போன்ற
காந்தியை யுடையதாயுமிருக்கிற ஒரு சிகை இருந்தால் அதுபோன்று இருக்கிறது” என்கிறபடியே,
ஹ்ருதயத்திலே இருக்கிற படி.
முன்பு இவ் வுடம்பு அவ் வுடம்பை மறப்பித்தால் போலே இப்போது அவ் வுடம்பு இவ் வுடம்பை மறப்பித்தது.
(மாலின்யம் போக்கி அடிமை கொண்டான்-இவரின் இழவை -மறப்பித்து தனது வடிவு அழகை காட்டி –
தம்முடைய உடம்பை மறந்து ப்ரீதராய் கண்டு கொண்டேன்
இவரை -மெய் மறக்க பண்ணிற்று அவன் வடிவு அழகு
‘மெய்’ என்றது-சிலேடை: சரீரமும், சத்தியமும் என்பன பொருள்.
மெய்ம் மறக்கப் பண்ணிற்று -சரீரம் காரணமாக வந்த துக்கத்தை மறக்கப் பண்ணிற்று.
இரு -பெரிய -விசாலமான இரண்டு வல் -வினைகள் புண்ய பாபம்
ரூபம் அருள் நல் வினைகள் -இருள் வினைகள் -ஆசார்ய -ஹிருதயம்)
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply