ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -5-1-1–

ஐந்தாம் பத்து-முதல் திருவாய்மொழி – “கையார் சக்கரம்”-பிரவேசம் –

முதற்பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்;
மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கரியம் என்றார்;
நான்காம்பத்தால், இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐச்வர்ய கைவல்யங்கள் என்றார்;
அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்கிறார் இவ்வைந்தாம் பத்தால்.

நண்ணாதார் முறுவலிப்ப” என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அநுசந்தித்து,
அதற்குப் பரிஹாரமாகப் ‘பகவானுடைய பரத்வ ஞானத்தை உண்டாக்குவோம்’ என்று
பகவானுடைய பரத்வத்தை உபதேசித்தார் கீழில் திருவாய்மொழியிலே;
இரண்டு கிட்டம் தம்மிலே சேரக் கிடக்க அவற்றிலே-கிட்டம்-உலோகத்துண்டு.-
ஒன்று பொன்னாய் இருக்குமாறு போலே அவர்களிலே ஒருவராக இருக்கிற தாம், அவர்களையும் திருத்தும்படி
தமக்குப் பிறந்த நன்மைக்கு ‘அடி என்?’ என்று பார்த்து,
அதற்குக் காரணம் தம்பக்கல் ஒன்றும் காணாமையாலே தன்னுடைய நிர்ஹேதுகமான கிருபையாலே
செய்தானத்தனை என்கிறார் இத் திருவாய்மொழியில். என்றது-

இத் திருவாய்மொழியில் வருகின்ற “விதிவாய்க்கின்று காப்பார் ஆர்?”
என்ற பாசுரப் பகுதியைத் திருவுள்ளம்பற்றி ‘நிர்ஹேதுகமான’ என்கிறார்.

அநாதிகாலம் சம்சரித்து -பிறந்து இறந்து -புத்தி பூர்வம் விரும்புவது சப்தாதி விஷயங்களேயாய் -ஐம்புல இன்பங்களையேயாய்,
தன் பக்கலில் எனக்குள்ளது அஹ்ருதமான யுக்தி — மனத்தொடு படாத வார்த்தைகளேயாயிருக்க,
நான் புத்தி பூர்வம் செய்து போந்த பிராதிகூல்யங்களை மறந்து,
ஞானம் பிறந்த பின்பு ப்ரமாதிகமாக -என்னை அறியாமலே செய்து போந்தவற்றில் அஜ்ஞனாய்,
என்னை இவ்வளவாக விஷயீ -அங்கீ-கரித்தான்; பிறரையும் யான் திருத்த வல்லேனாம்படி செய்தான்’ என்று
தாம் பெற்ற பேற்றின் கனத்தைச் சொல்லி ஈடுபட்டு அநுபவிக்கிறார் என்றபடி.

நிர்ஹேதுகம்’ என்றால், எல்லார்க்கும் இத் திருவருள் கூட வேண்டுமே யன்றோ?
அங்ஙனம் இல்லை ஆதலின், ஒரு காரணம் பற்றியே கிருபை செய்தான் என்று கொண்டால் என்னை? எனின்,
அதற்கு விடை அருளிச் செய்கிறார்‘அநாதி காலம்’ என்று தொடங்கி.
பொய்யே கைம்மை சொல்லி” என்றதனைத் திருவுள்ளம்பற்றித் ‘தன் பக்கலில் எனக்குள்ளது மனத்தொடு
படாத வார்த்தைகளேயாயிருக்க’ என்றும்,
அவன் என்னாகி ஒழிந்தான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘நான் புத்தி பூர்வம்’ என்று தொடங்கியும் அருளிச் செய்கிறார்.
ஞானம் பிறந்த பின்பு என்னை அறியாமலே செய்து போந்தவற்றில் அஜ்ஞனாய்” என்றது, “காப்பாரார்” என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி-
மெய்யே பெற்றொழிந்தேன்” என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தாம் பெற்ற பேற்றின் கனத்தைச் சொல்லி’ என்கிறார்.

பகவானுடைய பரத்வ ஞானத்தைத் தம் நெஞ்சிலே படுத்தினபடியையும்,
அதற்கு உறுப்பாய் இருப்பது ஒரு நன்மை தமக்கு இன்றிக்கே இருந்தபடியையும்,
அநாதி காலம் தாம் விபரீதங்களையே அனுஷ்ட்டித்து – செய்து- போந்தபடியையும்,
புருஷார்த்தத்திற்கு உபாயமாகச் சொல்லுகிறவற்றில் தாம் ஒன்றும் கனாக் கண்டு அறியாதே இருக்கிறபடியையும்,
புருஷார்த்தம் வேணும்’ என்னும் நினைவும் இன்றிக்கே இருந்த படியையும்,
சம்சாரத்திலே தரை காண ஒண்ணாதபடி ஆழ்ந்து நோவு படாநிற்கச் செய்தே ‘நோவு படா நின்றோம்’ என்று
அறிவிக்கவும் மாட்டாதே உணர்த்தி அற்று இருக்கிற படியையும்,
அமுதம் இருக்க விஷத்தை விரும்புவாரைப் போலே ஆராவமுதை விட்டு இனிய அமுதம் என்னும்படி இனிய பொருளாகத்
தோன்றின சப்தாதி விஷயங்களை – ஐம்புல இன்பங்களை விரும்பிப் போந்த படியையும்,
அதற்கு மேலே அவன் பக்கல் இச்சை இன்றிக்கே இருக்க அவனை உகந்தார் சொல்லும் வார்த்தைகளைச்
சொல்லிப் போந்த படிகளையும் நினைத்து, இப்படி
எல்லா வகைகளாலும் தண்ணியேனாய் இருக்கிற என்னை, அவற்றுள் ஒன்றனையும் பாராமல்,
தான் சர்வசேஷி’ என்னுமிடத்தையும்
தன் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்’ என்னுமிடத்தையும் என் நெஞ்சிலே படுத்தி
என் பக்கலிலே வ்யாமுக்தனாய்- ஆராக் காதலனாய் என்னோடே வந்து கலந்தான் என்று தாம் பெற்ற
பேற்றினைச் சொல்லிப் பேருவகையர்-ஹ்ருஷ்டர் – ஆகிறார்.

இத் திருவாய்மொழியில் சொல்லப்பட்ட பொருள்களை விவரிக்கிறார் ‘பகவானுடைய’ என்று தொடங்கி.
கையார் சக்கரத்து”, “அம்மான் ஆழிப்பிரான்” என்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றிப் ‘பகவானுடைய
பரத்வ ஞானத்தை’ என்று தொடங்கியும்.
பொய்யே கைம்மை சொல்லி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி,அதற்கு உறுப்பாய்’ என்று தொடங்கியும்,
புறமே புறமே ஆடி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘அநாதி காலம்’ என்று தொடங்கியும்,
நின் கண் நெருங்க வைத்தே என தாவியை நீக்க கில்லேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றிப் ‘புருஷார்த்தத்திற்கு’ என்று தொடங்கியும்,
நாவாய் போல்” என்றதனைத் திருவுள்ளம்பற்றிப் ‘புருஷார்த்தம் வேணும்’ என்று தொடங்கியும்,
அலைநீர்க் கடலுள் அழுந்தும்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சம்சாரத்திலே’ என்று தொடங்கியும்,
உள்ளன மற்றுளவா” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘அமுதம் இருக்க’ என்று தொடங்கியும்,
போனாய் மா மருது” என்றதனைத் திருவுள்ளம்பற்றி அதற்கு மேலே’ என்று தொடங்கியும் அருளிச் செய்கிறார்.
தான் சர்வ சேஷி’ என்றது, “அம்மான் ஆழிப்பிரான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
“உய்ந்தொழிந்தேன்” என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தன் திருவடிகளில்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
அடியேனோடும் ஆனான்” “என்னை முற்றவும் தானானான்” என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி ‘ஆராக் காதலனாய்’ என்கிறார்.

—————————————–

என் பக்கல் உள்ளது அஹ்ருதயமான உக்தியாய் -மனத்தொடு படாத வார்த்தையாக இருக்க,
இதனை -ச ஹ்ருதயமாக -மனத்தொடு பட்டு வந்த வார்த்தையாகக் -கொண்டு விரும்பி,
இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான பேற்றினைச் செய்து கொடுத்தான் என்கிறார்.

கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே–5-1-1-

கைஆர் சக்கரத்து-
வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியைத் தரித்தானாயிற்று.
இதுதான் ஆபரணமுமாய் வினைத்தலையில ஆயுதமுமாய் அன்றோ இருப்பது.
ஒரு கைக்குப் படையாய் இருக்குமேயன்றோ?
“கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்” என்று அநுகூலர்க்கு ஆசைப்படுகைக்கு உடலாய்,
பிரதிபக்ஷத்தை -விரோதிகளைத் துணிக்கைக்கும் உடலாய் ஆயிற்று இருப்பது.
‘சக்கரத்து’ என்றவிடத்து ‘அத்து’ என்பது, சாரியை இடைச்சொல்.
மேல் வரும் இடங்களில் எல்லாம் இப்படியே கண்டு கொள்வது.

என் கரு மாணிக்கமே –
ஸ்ரமஹரமாய் நீல ரத்தினம் போலே பெரு விலையனான வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!
கையும் திருவாழியுமான அழகை அனுசந்தித்தால் -நினைத்தால் அடைவே
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை அனுசந்திக்க -நினைக்க வல்லர் அல்லரே-
அநந்தரம் -பின்னர் வடிவழகிலே கால் தாழ்ந்தார், படி கடந்து அவ்வருகு போமவர் அல்லரே.

என்று என்று –
இதனை ஒருகால் சொல்லித் தான் விட்டேனோ.
பகவத் விஷயத்தில் உட்புக்கது எல்லாம் குற்றமாய்த் தோற்றுகிறதாயிற்று;
போராது’ என்று இருக்கையாலே. இது பொல்லாததாய் இருந்தது இல்லையே! என்ன,
அழகேயன்றோ, பாவபந்தத்தோடு சொன்னேனாகில்.

பொய்யே கைம்மை சொல்லி –
பொய் என்பதும், கைம்மை என்பதும் -பர்யாயமான -ஒருபொருள் சொற்கள்.
இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், பிறரை பகட்டுகை -வஞ்சித்தல் அன்றிக்கே,
சர்வஞ்ஞனுமான சர்வேஸ்வரனும் ‘இது மெய்’ என்று பிரமிக்கும்படி பெரும் பொய்யை அன்றோ சொல்லிற்று என்றபடி.
பொய்யும் மெய்யுமாகக் கலந்துதான் சொன்னேனோ என்பார் ‘பொய்யே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்.

புறமே புறமே ஆடி –
இப்போது ‘புறம்’ என்கிறது, சப்தாதி விஷயங்களை -ஐம்புல இன்பங்களை.
பகவத் விஷயத்தில் அவகாஹித்தது- இறங்கியது போராது’ என்று இதனைப் ‘பொய்’ என்னா நிற்கச் செய்தேயும்,
சப்தாதி விஷயங்கள் -ஐம்புல இன்பங்கள் புறம்பாய்த் தோற்றுகின்றன ஆயிற்று இவர்க்கு;
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ” என்னுமவரே யன்றோ?
ஜாதி, வியக்தி- உருவங்கள் தோறும் பரிசமாப்ய வர்த்திக்குமா போலே -நிறைந்து இருக்குமாறு போலே ஆயிற்று
விஷயங்கள் தோறும் தனித்தனியே கால் தாழ்ந்தபடி.
இதுதான் எப்பொழுதை நிலையைப் பற்றச் சொல்லுகிறார்? என்னில்,
கால த்ரயத்திலும் உள்ளவையும் சம காலத்தில் போலே தோற்றுகையாலே பூர்வ வ்ருத்தத்தை- சென்ற பிறவிகளில்
நிகழ்ந்தனவற்றை நோக்கிச் சொல்லுகிறார் என்னவுமாம்;
மயர்வு அற மதிநலம் பெற்ற பின்பும் தமக்கு விஷயத்திற்குத் தகுதியாக-அநு ரூபமாக – போராமையாலே சொல்லுகிறார் ஆகவுமாம்.
உம்முடைய நிலை இதுவாகில் பேறு இருந்தபடி என்?’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்-

மெய்யே –
என் பக்கல் உள்ளவை பொய்யே ஆயினாற் போலே,
அவன் அடியாக வந்தது ஆகையாலே மெய்யேயாய் இருக்குமே அன்றோ.
பேற்றில் கண்ணழிவு சொல்லலாவது இல்லை என்றபடி.

பெற்றொழிந்தேன் –
பரமபதத்து ஏறப் போனாலும் இப் பேற்றினை அசையிட்டு இருக்குமத்தனை. என்றது,
இனி, இதனைக் காட்டிலும் ஏற்றம் செய்யலாவது இல்லை என்றபடி.
ஹேது -காரணம் இல்லை’ என்னா நின்றீர், பேறு கனத்திருந்தது; இதற்கு அடி என்? என்ன-

விதிவாய்க்கின்று –
பகவானுடைய கிருபை கரை புரளப் பெருகா நின்றால் நம்மால் செய்யலாவது உண்டோ?
விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
கேசவன் தமர்” என்னும் திருவாய்மொழிக்கு இப்பால் எல்லாம் இவர், ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
கிருபையை ‘விதி’ என்பதற்கு அடி, அவனால் தப்ப ஒண்ணாதபடி இருக்கையாலே–
வாய்க்கின்று –
பகவானுடைய கிருபை ஈஸ்வரனுடைய ஸ்வாதந்திரியமாகிய கரை புரளப் பெருகி வந்து கிட்டுமிடத்தில்.

காப்பார் ஆர் –
இதனைத் தடை செய்வார் ஆவார் உளரோ?
இரண்டு சேதநராலும் தடை செய்யப் போகாது என்பார் ‘காப்பது எது?’ என்னாமல், ‘காப்பார் ஆர்?’ என்கிறார். என்றது,
பரதந்திரனான இவனாலும் தகைய ஒண்ணாது,
ஸ்வதந்திரனான அவனாலும் தகைய ஒண்ணாது;
பலத்தை அநுபவிக்கிற இவனாலும் தகைய ஒண்ணாது,
பலத்தைக் கொடுக்கிற அவனாலும் தகைய ஒண்ணாது என்றபடி.
அன்றிக்கே, காப்பார் ஆர் என்பதற்கு,
“ந கச்சித் ந அபராத்யதி-குற்றம் செய்யாதார் ஒருவருமிலர்” என்கிறபடியே,-
கிருபை உண்டாவதற்குக் காரணமான பிராட்டி காக்கவோ?
தாமரையாளாகிலும் சிதகு உரைக்கு மேல் என்னடியார் அது செய்யார். செய்தாரேல் நன்று செய்வர்.” என்கிறபடியே,
கிருபைக்குப் பர தந்திரப்பட்டவனான நீ காக்கவோ?
கிருபயா பர்ய பாலயத்-கிருபையாலே காப்பாற்றினான்” என்கிறபடியே
கிருபைக்குப் பாத்திரமான நான் காக்கவோ? என்று

மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸய ஸ்யாத் ஸதாமேத தகர்ஹிதம்– யுத். 18:3
இந்த ஸ்லோகத்தில் எம்பார்-
சர்வஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் விஸ்ம்ருதியும் -மறதியும், சர்வசக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச்செய்வர்.
“தோஷோ யத்யபி” என்றதனை நோக்கி ‘அஜ்ஞானமும் மறதியும்’ என்றும்,
“கதஞ்சந நத்யேஜயம்” என்றதனை நோக்கிச் ‘சர்வசக்திக்கு ஒரு அசக்தியும் உண்டு’ என்றும் அருளிச்செய்கிறார்.
ஒருவன், தன்னை ஆஸ்ரயித்தால் , முன்பு புத்தி பூர்வம் பண்ணிப் போந்த குற்றங்களிலே விஸ்ம்ருதி -மறதி,
ஞானம் பிறந்த பின்பு -பிராமாதிகமாக -தன்னை அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம்
அவனை விடவேண்டி வருமளவிலே அசக்தி.
இப்படி இருக்கைக்குக் காரணம், ஸ்வாபாவிகமான -இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.
(நாராயண பதத்தால் கூறப்படுகின்ற சம்பந்தத்தைத் திருவுள்ளம் பற்றி.)
“ஆர்” என்பான் என்? ஸ்வதந்திரனான என்னால் தகையத் தட்டு என்? என்ன,

ஐயோ! –
ஆமாகில் செய்து பார்த்துக் காணாய்.
ஐயோ!
என்பது, ஹர்ஷ அதிசயத்தாலே -உவப்பின் மிகுதியினாலே சொல்லும் பாசுரம் -சொல்.

கண்ணபிரான்
உபகார சீலனான கிருஷ்ணனே!
ஒரு தாயினுடைய மெய்க்குப் போக மாட்டாத நீயோ என்னுடைய பொய்க்குப் போகப் புகுகிறாய்,
ஓர் ஆய்ச்சி கையிலே கட்டுண்ட நிலையிலே அந்தத் தளையினின்றும் தப்ப விரகு அறியாதே
சத்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்?
ஆர்ஜவமான கட்டை அவிழ்க்க மாட்டாதவன் க்ருத்ரிமமான -பொய்யான பந்தத்தை அவிழ்க்கமாட்டான் என்றபடி.

இனிப் போனால் அறையோ –
இனிப் போனாயாகில் அறையோ அறை.
என் பக்கலிலே ‘மெய்’ என்று பெயர் இடலாவது ஒரு பொய் பெற்ற பின்பு போனாயாகில் அறையோ அறை.
பகவானுடைய கிருபையைப் பக்க பலமாகக் கொண்டு ஈஸ்வரனுடைய ஸ்வாதந்தரியத்தை அறை கூவுகிறார்.
கண்ணபிரான்’ என்பது, சம்புத்தி -விளிப்பெயர் ஆகவுமாம்
அன்றிக்கே-பரோக்ஷ நிர்த்தேசமாய்-முன்னிலைப் படர்க்கையாக-
கண்ண பிரானானவன் இனிப் போனால் அறையோ அறை என்றுமாம்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply