ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -1-7-10-

என்னோடு கலந்து எம்பெருமானுடைய நற்குணங்களைக் கால தத்வம் உள்ள தனையும்
அனுபவியா நின்றாலும் திருப்தன் ஆகிறிலேன்,’ என்கிறார்.

அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே–1-7-10-

அகலில் அகலும்-
இவன் அகன்ற படியே நிற்கில் –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -விபீஷணனே ஆயினும், அன்றி, இராவணன் தானே ஆயினும், இவனை அழைத்துக்கொண்டுவா,’
என்கிற சாபலம் உள்ளே கிடக்கவும் கண்ண நீரோடே கைவாங்கும்.
அதாவது, த்விதா பஜ்யேய மப்யேவம் ந நமேயம் ‘நான் இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்;
அப்பொழுதும் வணங்க மாட்டேன்,’ என்னும் நிர்பந்தத்தோடே நிற்கில் முடித்தே விடும் என்பதாம்.

அணுகில் அணுகும் –
தன் பக்கலில் ஆபிமுக்யம் பண்ணினால் ஆக்யாஹி மம தத்வேந என்னும் —
ராக்ஷஸாநாம் பலாபலம் -இராக்கதர்களுடைய பலாபலத்தை உள்ளவாறு எனக்குச் சொல்லுவாய்,’ என்பான்.
அதாவது, இளையபெருமாள் நிற்க, நால் அடி வர நின்றவனான விபிஷணனை அன்றோ-
ராஜ -ராம காரியம் செய்யும்படி சொல்லீர்,’ என்றான்; என்றது, விபீஷணனை அரக்கர் குலத்தானாக நினைத்தல் இன்றி,
இக்ஷூவாகு குலத்தவனாகவே நினைத்து, ‘அரக்கர்களுடைய பலாபலம் சொல்லீர்’ என்றான் என்றபடி.
இத் திருவாய்மொழியில் முதல் பாசுரம் ‘அகலில் அகலும்’ என்கிற இடம் சொல்லிற்று;
இரண்டாம் பாசுரம் ‘அணுகில் அணுகும்’ என்கிற இடம் சொல்லிற்று.

புகலும் அரியன் –
உகவாதார்க்குக் கிட்ட அரியனாய் இருப்பன்.
அர்ஜூனனும் துரியோதனனும் கூட வரச்செய்தே, அர்ஜூனனுக்குத் தன்னைக் கொடுத்து,
துரியோதனனுக்குப் பங்களத்தைக் கொடுத்துவிட்டான் அன்றே?

பொரு அல்லன் –
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டுமிடத்தில் தடையுடையன் அல்லன்.
பொரு என்று ஒப்பாய், ஒப்பாவது நேர் நிற்குமதாய், அத்தால் தடையைச் சொல்லிற்றாய், தடையையுடையன் அல்லன் என்றபடி. 
யத்ர கிருஷ்ணவ ச கிருஷ்ணா ச சத்ய பாமா ச பாமி– கிருஷ்ணனும் அர்ஜூனனும் திரௌபதியும் அழகுள்ள சத்ய பாமையும்
எந்த இடத்தில் இருக்கிறார்களோ, அந்த இடத்தில்’ புத்ரர்களும் புக ஒண்ணாத சமயத்திலே அன்றே சஞ்சயனை அழைத்துக் காட்சி அளித்தது?

அம்மான் –
இந்த ஸ்வபாவங்களை – தன்மைகளைக் காட்டி என்னை-அநந்யார்ஹன் – தனக்கே உரிமை ஆக்கினவன்.

நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பிலம் –
அவனுடைய ஒப்பு இல்லாத கல்யாண குணங்களைப்பாடி, ஒரு போதும் பிரிந்து தரித்து இரேன்.-
விச்சேதிக்க ஷமன் ஆகிறேன் அல்லேன் ‘ஆயின், எப்பொழுதும் இப்படி இருப்பீரோ?’ என்ன,

பகலும் இரவும் –
சர்வ -எல்லாக்காலமும். ‘ஆயின், விஷயத்தைக் குறைய அனுபவித்தோ?’ எனின்,

படிந்து குடைந்து –
எங்கும் கிட்டி விஷயத்தை அனுபவியா நிற்கச் செய்தே விட மாட்டுகிற்றிலேன்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading