அஸ்தானே பய சங்கிகள் சொல்லும் வார்த்தையை நான் அஹ்ருதயமாகச் சொல்ல,
சர்வஞ்ஞனானவன் அதனை மெய்யாகக் கொண்டு தன் விபூதியோடே கூட
நான் இட்ட வழக்கு ஆனான் என்கிறார்.
போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே–5-1-2-
மா மருதின் நடுவே போனாய்-
அப்போது கண்டு நின்ற யசோதைப் பிராட்டியானவள், யமளார்ஜுனங்கள் -இரட்டை மருத மரங்கள் நடுவே
அவன் போனபடியைக் கண்டு பாவ பந்தம் தோற்றச் சொன்ன வார்த்தையை அது இல்லாத நான் சொன்னேன்.
தெளிந்த ஞானத்தாலே, பூத -இறந்த காலம்’ என்று இவர்க்குத் தோற்றுகிறது இல்லையாயிற்று.
சர்வேஸ்வரன் செய்து கொடுத்த வைஸத்ய -தெளிந்த – ஞானம் வயிறு எரிகைக்கு உடலாய் விட்டதித்தனை.
மா மருதின் நடுவே –
பெரிய வடிவுகளையுடைய அசுரர்கள் மரங்களாய் நின்றார்கள் ஆதலின் ‘மா மருது’ என்கிறார்.
இவனுடைய முஃத்யத்தை -இளமையை அறிந்து, பெருத்துத் தடித்து தர்ச நீயமான வேஷத்தோடே ஆயிற்று இருவரும்
கிருத சங்கேதராய்ச் சிறிதும் வெளி இடம் இல்லாதவாறு-ஒரு விவரமற – நின்றபடி.
ஒன்றிலே வெளி கண்டு போனால் போலே போனான் ஆதலின் ‘நடுவே’ என்கிறார்.
வ்யக்ராயாம் அத தஸ்யாம் ஸ கர்ஷமாண உலூகலம் யமளார்ஜூந யோர் மத்யே ஜகாம கமலேக்ஷண-ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 16. –
மருத மருதங்களின் நடுவே சென்றார்” என்ற ஆபத்தை ஆயிற்றுச் சொல்லுகிறது.
என் பொல்லா மணியே-
“தத: கடகடா சப்த சமா கர்ணந தத் பர: ஆஜகாம விரஜஜநோ தத்ருசே ச மஹாத்ருமௌ.”-ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 6 : 18.
அதன் பின் கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசத்தை அடைந்த
ஆயர்கள் அங்கு வந்தார்கள்”, “தாமரைக் கண்ணனான அந்தக் கண்ண பிரானும் சென்றார்” என்கிறபடியே,
இவற்றைத் தப்பிப் போய், முரிந்து விழுகிற ஓசையைக் கேட்டு-அபூர்வ தர்சனத்தால் – முன்பு இல்லாததனைக் காணும் காட்சியாலே
சிவந்த மலர்ந்த கண்களும் தானுமாய் இருக்கிறபடி.
புணர் மருதம் இற நடந்த பொற்குன்றினை”-பெரிய திருமொழி, 2. 5 : 1- என்னக் கடவதன்றோ.
அழகிது என்னில், நாட்டில் உள்ள அழகைப் போன்றது ஆம் என்று நினைத்து, வேறுபாடு தோன்ற ‘பொல்லா மணியே!’ என்கிறார் என்னுதல்.
அன்றிக்கே, நாட்டார் கண்டு கண்ணெச்சில் படாமைக்குக் கரி பூசுகிறார் என்னுதல்.
அன்றிக்கே, தொளையாத மணி; அதாவது அநுப புக்தமாய் – பிறரால் அநுபவிக்கப்படாத மணி என்னுதல்;
பொல்லல் – தொளைத்தல். இதுவும் யசோதைப் பிராட்டி சந்நிஹிதையாய்- அருகில் -நின்று சொன்ன வார்த்தை.
தேனே –
வந்து எடுத்துக்கொண்ட காலத்தில் ஸ்பர்சத்தாலும் முக்த ஜல்பத்தாலும் -மழலைச்சொற்களாலும் கொண்டாடிச் சொல்லும் வார்த்தை.
இன் அமுதே –
அப்போதையில் இனிமையாலே சொன்ன வார்த்தை.
ஆக, தேனே! இன் அமுதே! என்னும் இவை இரண்டானும் நிரதிசய போக்யமாய்,
போன உயிரை மீட்கவற்றாய் இருக்கையைத் தெரிவித்தபடி.
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்” என்று சொல்லுகிறபடியே நிரவதிக போக்யமாயிருக்கை.
என்று என்றே –
ஒருகால் சொல்லி, ‘தப்பச் செய்தோம்’ என்று மீளத்தான் செய்தேனோ என்பார் ‘என்று என்று’ என்கிறார்.
சில கூத்துச் சொல்ல –
பரிவுடைய யசோதைப் பிராட்டி இவற்றிலே ஈடுபட்டுச் சொல்லும் வார்த்தைகளை அன்றோ
அப் பரிவு இல்லாத நான் சென்னேன் என்பார் ‘கூத்துச் சொல்ல’ என்கிறார்.
கூத்தாவது, ஒருவன் நினைவையும் செயலையும் மற்றொருவன் செய்வது.
தானேல் எம்பெருமான் –
தானாகில், சர்வஞ்ஞனாய் -சர்வ நியாந்தாவாய் -இருப்பான் ஒருவன். என்றது,
அகவாய் அறியாதான் ஒருவன் அல்லன்,
அறிந்தால் உபேக்ஷிக்க மாட்டாதான் ஒருவன் அல்லன் என்பதனைத் தெரிவித்தபடி.
அவன்-
அப்படி, சர்வஜ்ஞனாய் சர்வசக்தியானவன்.
என்னாகி ஒழிந்தான்
நான் இட்ட வழக்கு ஆனான்.
என்னை யுடையவன் நான் இட்ட வழக்கு ஆனான்,
உடையவன் தான் உடைமை யானான்:
அதர உத்தரம் – கீழ் மேல் ஆயிற்று என்ற படி. நன்று; அவன் விபூதி செய்தது என்? என்னில்,
வானே மாநிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே-
“த்ரய ஏவாsதநா லோகே பார்யா தாஸஸ் ததா ஸீத: யத்தே ஸமதிகச்சந்தி யஸ்யை தே தஸ்ய தத் தநம்.”- உத்யோகபர்வம்.
மனைவி, புத்திரன், வேலைக்காரன் இவர்கள் ஸ்வதந்திரம் இல்லாதவர்கள், பரதந்திரர்கள்;
இவர்கள் எவனுக்கு அடிமை ஆவர்களோ அவனுக்கே இவர்கள் செல்வமும் உரியது” என்கிறபடியே,
விபூதியையும் நான் இட்ட வழக்கு ஆக்கினான் என்னுதல்.
அன்றிக்கே, ச விபூதிகனாய் -விபூதியை யுடையவனாய்க் கொண்டு என்னுள்ளே புகுந்தான் என்னுதல்.
வானே மாநிலமே’
என்றது, ஐம்பெரும் பூதங்கட்கும் உபலக்ஷணம்.
மற்றும்’
என்றது, ஐம்பெரும் பூதங்களின் காரியங்களான அண்டங்களை.
முற்றும்’
என்றது, பரமபதத்தை.
என்னுள்ளனவே’
என்றது, விபூதியும் என்னுள்ளே புகுந்தது என்றபடி.
அன்றிக்கே,
உபய விபூதி நிர்வாகமும் என் பக்கலிலே இருந்து பண்ணும் அத்தனையாய் விட்டது –
அன்றிக்கே உபயவிபூதி ஐஸ்வர்யமும் என் பக்கலிலேயாய் விட்டது
விஷய பிரவணன் ஆனவன் தான் உகந்த விஷயமே எல்லா ஐஸ்வர்யமாக நினைத்து இருக்குமா போலே –
உன்னாகத்து முற்றும் அகத்தடக்கி-திருவாய். 4. 3. 3 -என்கிறபடியே –
என்னாகி ஒழிந்தான்” என்பதற்கு நான்கு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
1- ‘உடையவன் தான்’ என்று தொடங்கி-முதற்பொருளுக்குக் கருத்து, உலகத்தோடு கூடினவனாய்க் கொண்டு
எனக்குப், பரதந்திரனானான் என்பது.
2-இரண்டாவது பொருளுக்குக் கருத்து, அவனும் என்னுள்ளே புகுந்தான், விபூதியும் என்னுள்ளே புகுந்தது என்பது.
3-. மூன்றாவது பொருளுக்குக் கருத்து, உபய விபூதி நிர்வாகத்தையும் என் பக்கலிலே இருந்துகொண்டு செய்கிறான் என்பது.
4-நான்காவது பொருளுக்குக் கருத்து, “அந்தாமத் தன்பு செய்து” என்கிறபடியே,
உபய விபூதியிலும் செய்யும் விருப்பத்தை என்னிடத்திலேயே செய்கிறான் என்பது.
ஆழ்வார் ஒருவரே இவனுக்கு -உண்ணும் சோறு அனைத்துமாக இருந்தான்
கோவை வாயாள்”என்ற திருவாய்மொழியிற் கூறியவாறே பொருந்தும் என்றபடி
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply