ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-9-6–

சம்சாரிகளுடைய பகவத் வைமுக்யாதி தோஷங்களை நினைத்து ஈஸ்வரனை இன்னாதாகை தவிர்ந்து,
ஜீவனார்த்தமாக பரஹிம்ஸை சம்சாரிகள் நடுவினின்றும் என்னை
உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.

மறுக்கி வல் வலைப் படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே–4-9-6-

மறுக்கி-இத்யாதி
கிராமணிகள் செல்வத்தைத் தேடிச் சேர்க்கும் படியை அருளிச் செய்கிறார்:
மறுக்கி –
சாது என்று தோற்ற வாழ்கின்ற ஒருவன், ஒரு தேசத்திலே வாழா நின்றால், –
அபாஸ்ரயமாக -அச்சம் இன்மைக்காகப் பற்றுக் கோடாக ஒருவனைப் பற்றி யிருக்க வேண்டும்,’ என்று
ஒரு கிராமணி பக்கல் சென்று சேர்வான்;
இவன் சாது’ என்று அவனுக்குத் தோற்றினவாறே, ‘உன்னை இன்னாரும் இன்னாரும் இன்னபடி சொன்னார்களே!’ என்பான்;
அவன் பீதனாய்- அஞ்சினவனாய், ‘இவன் நம்மைப் பாதுகாப்பவன்
உனக்கு ஒன்று வந்தால் சொல்லலாவது இல்லாதபடி என் வீட்டிலே உனக்குள்ள செல்வத்தையும் பொகட்டு
உன் நிலம் முதலாயினவற்றையும் என்மேலே திரிய விட்டு வை,’ என்பான்;
இப்படி அவன் நெஞ்சைக் கலங்கச் செய்து.

வல் வலைப் படுத்தி –
இவன் இனி இவை கொண்டு தப்ப ஒண்ணாதபடி தன் பக்கலிலே அகப்படுத்தி.

குமைத்திட்டு –
பின்னர் இவன் கொடுத்த செல்வத்தை அடையத் தன் பேரிலே செலவு எழுதிச் சிகைக்கு அடிப்பிக்கும்.

கொன்று –
இவன் இருக்குமாகில் ஒரு நாள் வரையில் சிலரை அடைந்து தொடரிலோ?’ என்று இவனைக் கொல்லுவான்.

உண்பர் –
இப்படிச் செய்தால் தான் செய்வது வயிறு வளர்க்கையே அன்றோ?

அறப்பொருளை அறிந்து – ‘
தேகத்திற்கு -வ்யதிரிக்தமாய்- வேறுபட்டதாய் இருப்பது ஒரு ஆத்ம வஸ்து உண்டு;
நாம் இப்போது செய்கிறவை அதிலே வந்தவாறே தட்டுப்படும்,’ என்று தர்மத்தின் உண்மையை அறிந்து.

ஓரார் –
அதனுடைய நிரூபணத்திலே -தன்மையிலே முதலிலே இழியார்கள்.
அன்றிக்கே பரஹிம்சையில் -பிறரைத் துன்புறுத்துவதினின்றும் நீங்கார்’ என்றுமாம்;
ஓர்தல் – ஒருவுதலாய். ஒருவுதல் -நீங்குதல் என்றபடி.
அன்றிக்கே, ‘செல்வமாகிய புருஷார்த்தம் ஒன்றையுமே அற விரும்பி. நன்மை தீமைகளை ஆராய்ந்து பாரார்’ என்னுதல்.

இவை என்ன உலகு இயற்கை –
இது ஒரு லோக யாத்திரை -உலகவாழ்வு இருக்கும்படியே

பிரானே! வெறித் துவள முடியானே –
வாசனையையுடைய திருத்துழாயை முடியிலே உடையவனே! என்றது,
இம்மக்கள் நடுவே இருக்கிற என்னை உன்னுடைய போக்யதையை -இனிமையைக் காட்டி அடிமை கொண்டவனே!’ என்றபடி.

வினையேனை –
சப்தாதி விஷய ஐம்புல இன்பங்களிலே ப்ரவணனாய் -ஈடுபட்டிருக்கிற இவர்களிலே ஒருவனாகப்
பிறப்பதற்கு அடியான பாபத்தையுடைய என்னை.

உனக்கு அடிமை அறக்கொண்டாய் –
நான் நின்ற நிலைக்குச் சேராதபடியான உன் திருவடிகளில் அடிமையை நிர்ஹேதுகமாக -ஒரு காரணமும் இன்றியே
என்னைக் கொண்டருளினாய்.

இனி –
அடிமை கொண்ட பின்பு.

என் ஆர் அமுதே –
எனக்கு நிரதிசய -எல்லை இல்லாத -போக்யன்- இனியன் ஆனவனே!

கூய் அருளாயே –
நான் இவர்கள் நடுவே இருக்கிற இருப்பை விட்டு உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்துக்கொண்டருள வேண்டும்.
அன்றிக்கே,
இனி என் – கூய் அருளாயே-
அவர்கள் ஒரு படியாலும்-அத்ருஷ்டத்தில் – பேற்றிலே நெஞ்சு வையாரான பின்பு,
நான் அவர்கள் அநர்த்தத்துக்கு -கேட்டிற்குக் – கரைந்ததற்குப் பிரயோஜனம் என்? அதனை விடலாகாதே?’
என்னை முதல் அங்கே அழைத்துக் கொண்டருள வேண்டும்,’ என்னுதல்.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading