ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-9-1–

நான்காம் பத்து -ஒன்பதாம்திருவாய்மொழி – ‘நண்ணாதார்’-பிரவேசம் –

உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை உபேக்ஷித்து -வெறுத்துப் பார்த்தார்,
தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை.
ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு வேண்டுமாகில்
அதனைத் தந்தருளவேண்டும்,’ என்கிறார் இத் திருவாய்மொழியில்.
இந்த அமங்கள வார்த்தையைத் திருமுன்பே விண்ணப்பம் செய்ய வேண்டும்படியாகக் காணும்
இவர் சம்சாரத்தை -இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி.
எம்பார், ‘உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று,
உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற சம்சாரிகள் -இம் மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்;
இதனைத் தவிர்த்தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.

உத்பபாத கதா பாணி-ஸ்ரீராமா. யுத்.16 : 16-
கதையைக் கையிலேயுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
ராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப் போலே
அவ்விடம் அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.
கதா -அங்குள்ளாரில் -ந நமேயம் என்னாதது தடி ஒன்றுமே யாயிற்று —
(அங்கு உள்ளாரில் -தண்டம் சமர்பிக்கும் ஓன்று இது தானே)
சதுர்ப்பி -அதுவும் எடுத்துத் தோளிலே வைக்க வேணுமே -அதுவும் வேண்டாதார் நால்வருமே யாயிற்று –
இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று அறிந்தானாகில்
தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்றதன்றோ?

என்றலும் இளவலும் எழுந்து வானிடைச் சென்றனன்
அனலனும் அனிலனும் அரன் சம்பாதியும்
வினைவலர் நால்வரும் விரைவின் வந்தனர்
கனை கழல் காலினர் கருமச் சூழ்ச்சியர்
இனைவரும் வீடணனோடு மேயினார்– என்றார் கம்பநாட்டாழ்வாரும்.

அங்ஙன் அன்றிக்கே, ‘ஏறு ஆளும் இறையோனும்’ என்ற திருவாய்மொழியில் தம்முடைய ஆற்றாமைக்குக்
கூட்டு ஆவார் உளரோ என்று லோக விருத்தாந்தத்தை -உலகத்தாருடைய செயல்களை –
அன்வேஷித்து -ஆராய்ந்து -சம்சாரிகளை -மக்களைப் பார்த்தார்;
அவர்கள், தாம் சர்வேஸ்வரனிடத்தில் ப்ரவணராய் ஈடுபட்டவராய் இருப்பது போன்று,
ஐம்புல இன்பங்களில் ப்ரவணராய் -ஈடுபட்டவராய் அவற்றினுடைய பேறு இழவுகளே லாபாலாபமாம்படி இருந்தார்கள்;
அதனைக் கண்டவாறே வாளேறு காணத் தேளேறு மாய்ந்தால் போலே, தம் இழவை மறந்தார்;
இவர்களுடைய இழவே துக்கமே நெஞ்சிலே பட்டது;
சர்வேஸ்வரனைப் பார்த்தார்;
அவன் சர்வஞ்ஞனாய் -சர்வசக்தியாய் -முற்றறிவினனாய் அளவில்லா ஆற்றலையுடையவனாய்ப்
பரம உதாரனாய்- வள்ளலாய் எல்லாருடைய-ரக்ஷணத்திலும் தீஷித்து – பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய்–
சர்வ அபராத சஹனாய் – எல்லாக் குற்றங்களையும் பொறுக்குமவனாய்–
சர்வ நியாந்தாவாய் – எல்லாரையும் நியமிக்கின்றவனாய் இருந்தான்.
அவன் படி இதுவாய் இருக்க, இவை இப்படி நோவு படுகைக்கு இவ்விடம் தன்னரசு நாடோ?’ என்று பார்த்து,
நீ சர்வேஸ்வரனாய்ப் -பரம க்ருபாவானாய் -பேரருட்கடலாய்ச் சம்பந்தம் உள்ளவனுமாய்- ப்ராப்தனுமாய் –
இவற்றின் கிலேசம் -துன்பம் அறிந்து போக்குவதற்குத் தக்க ஞான சத்திகளையுடையையுமாய் இருக்க,
இவை இங்ஙனம் கிடந்து நோவுபடுகை போருமோ?

‘ஆமாறு ஒன்றறியேன் நான்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘அவன் முற்றறிவினன்’ என்றும்,
(தம்மை ‘ஆமாறு ஒன்று அறியேன்’ எனின், அவன் முற்றறிவினன் என்பது தானே போதருமன்றோ?’)
‘கடல் கடைந்தாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘அளவிலாத ஆற்றலையுடையவனாய்’ என்றும்,
‘வள்ளலே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘பரம வள்ளலாய்’ என்றும்,
‘அரவணையாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லாருடைய பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய்’ என்றும்,
‘வினையேனை உனக்கு அடிமை அறக் கொண்டாய்,’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘எல்லாக் குற்றங்களையும் பொறுக்குமவனாய்’ என்றும்,
‘கண்ணாளா!’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லாரையும் நியமிக்கின்றவனாய்’
அம்மானே!’ என்றதனைத் திருவுள்ளம்பற்றி, ‘நீ சர்வேஸ்வரனாய்’ என்றும்,
‘கண்ணாளா!’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘பேரருட்கடலாய்’ என்றும், ( கண்-அருள்)
‘அம்மானே!’என்றதனையே திருவுள்ளம் பற்றிச் ‘சம்பந்தமுள்ளவனுமாய்’ என்றும் அருளிச்செய்கிறார்.)

இவற்றைக் கரைமரம் சேர்க்கவேண்டும்,’ என்று அவன் திருவடிகளைப் பிடிக்க,
நம்மால் செய்யலாவது உண்டோ? இவர்கள் சேதனர்- அறிவுடை மக்களான பின்பு இவர்கட்கே ருசி உண்டாக வேண்டுமே?
நாம் கொடுக்கிற இது புருஷார்த்தமாக வேண்டுமே?
புருஷன் விரும்பக் கொடுக்குமது அன்றோ புருஷார்த்தமாவது?
அசித்தாய்- அறிவில் பொருளாய் நாம் நினைத்தபடி காரியம் கொள்ளுகிறோம் அல்லோமே?
இவர்கட்கு நம் பக்கல் ருசி பிறக்கைக்கு நாம் பார்த்து வைத்த வழிகளை யடையத் தப்பின பின்பு
நம்மால் செய்யலாவது இல்லை காணும்; நீர் இதனை விடும்,’ என்று சமாதானம் செய்தான்.
அதனைக் கேட்ட இவர், ‘நீ கூறிய இது பரிஹாரமாய் நான் சமாதானத்தையடைந்தேனாவது
இவர்கள் தம் காரியத்திற்குத் தாம் கடவர்களாய் நோவுபடுகின்றார்கள்’ என்று
உன்னால் சொல்லலாம் அன்று அன்றோ?’ என்ன, ‘
இவர்கள் சேதனர்கள் அறிவுடையவர்களாகையாலே இவர்களின் வாசி அறிய வேண்டும் என்று
நம்மை ஒரு தட்டும் ஐம்புல இன்பங்களை ஒரு தட்டுமாக வைத்து,’
உங்களுக்கு வேண்டியது ஒன்றனைக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஐம்புல இன்பங்கள் இருந்த தட்டுத் தாழ்ந்திருக்கையாலே அந்தத் தட்டை ‘அமையும்’ என்று பற்றினார்கள்;
நாமும் ஆகும் தனையும் பார்த்து முடியாமை காணும் கை வாங்கியது;
இனி நம்மால் செய்யலாவது இல்லை; இனி, நீரும் இதனை விடும்,’ என்றான்.

ஆகில், உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும்
என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன,
முன்பே உம்மை வாங்கினோமே! சம்சாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில்,
இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு
இது காணும் என்று பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக –
வ்யாவ்ருத்தம் -வேறுபாடு தோன்ற இருக்கும் இருப்பைக் காட்டித் தந்து
அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில்,
இனி, உமக்குப் பேற்றுக்குக் குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக்கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.

(மைய கண்ணாள் மலர் மேல் உறை மார்பினன் செய்ய கோலத் தடம் கண்ணன்
விண்ணோர் பெருமான் தன்னை -என்று அன்றோ கண்டு அனுபவித்தார் )

ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க,
ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடா நிற்க,
இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்;
இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும்.

பிரகிருதி சம்பந்தமான துன்பம், ‘முந்நீர் ஞாலம்’ என்ற திருவாய்மொழியிலே;
பகவானைப் பிரிந்ததனால் உண்டான துன்பம், ‘சீலமில்லா’ என்ற திருவாய்மொழியிலே;
சமுசாரிகள் இழவைக் கண்டு வாடும் துன்பம், இத் திருவாய்மொழியிலே.

———————————

உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கின்ற இவர்கள் நடுவினின்றும் நான் உன் திருவடிகளிலே
வந்து கிட்டும்படி எனக்கு இச் சரீரத்தின் பிரிவினைச் செய்து தந்தருள வேண்டும்,’ என்கிறார்.

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்து ஏங்க,
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல் கடைந்தாய்! உன கழற்கே வரும் பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய் சாமாறே–4-9-1-

நண்ணாதார் முறுவலிப்ப –
ஒருவனுக்கு ஒரு கேடு வந்தவாறே, அற்றைக்கு முன்பு வெற்றிலை தின்று அறியார்களே யாகிலும்,
அன்றைய தினத்திலே ஒரு வெற்றிலை தேடித் தின்பது, ஓர் உடுப்பு வாங்கி உடுப்பது, சிரிப்பது ஆகா நிற்பர்கள் ஆயிற்று.
நண்ணாதார் –சத்ருக்கள் – பகைவர். பிறர் அநர்த்தம்- கேடு -கண்டு சிலர் உகக்கும்படியாவதே!
இஃது என்ன விஸ்மயம் ஆச்சரியம் தான்!
அர்ஜூனன், ‘என் பரகு பரகு கெடுவது என்று?’ என்ன,
ஸூஹ்ருதம் சர்வ பூதாநாம் – எல்லா ஆத்மாக்களுக்கும் சினேகிதனாய் இருக்கிற என்னை!’ என்கிறபடியே,
நான் எல்லா ஆத்மாக்களுக்கும் சினேகிதன்,’ என்று அறிந்தவாறே நீயும் என்னைப் போன்று
என் விபூதிக்குப் பரியத் தேடுவுதி காண்,’ என்றானே அன்றோ?

நல் உற்றார் –
சர்வேஸ்வரனே நிருபாதிக காரணம் பற்றாத -பந்துவாய் -உறவாய் அவனைப் பற்றினவர்களையே
‘அவன் தமர் எவ் வினைய ராகிலும் எங்கோன் அவன் தமரே என்றொழிவ தல்லால் – நமன் தமரால்
ஆராயப் பட்டறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற் காட்பட்டார் பேர்.’-(முதல் திருவந். 55.) என்று,
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே,’ – பெரிய திருமொழி.- என்றிருத்தல் தகுதியாக இருக்க,
சரீர சம்பந்தம் நிபந்தனமாக -காரணமாக வருகின்றவர்களைக் காரணம் பற்றாத-நிருபாதிக –
உறவினர்களாக நினைத்து, அவர்களுக்கு ஒன்று வந்தவாறே,
நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகும்,-திருவாய்மொழி, 9. 6 : 2.- என்று இவர் பகவத் விஷயத்தை
நினைத்தல் சொல்லுதல் செய்யப் புக்கால், படுவன எல்லாம் படா நிற்பர்களாயிற்று.
கரைந்தேங்க, முறுவலிப்ப’ என்ற இரண்டனையுமே யன்றோ?
சர்வ பூதாத்மகே மித்ர அமித்ர கதா குத -ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19 : 31.-எல்லா ஆத்துமாக்களையும் சரீரமாகவுடைய
கோபாலனிடத்தில் பகைவன் நட்டோன் என்கிற தன்மை ஏது?’ என்றது,
ராக-ஆசையையும் துவேஷத்தையும் பற்றி வருகையாலே,
மைத்ரியோடு -நட்புத் தன்மையோடு -ஸாத்ரவத்தோடு-பகைத்தன்மையோடு வாசி இல்லை.
த்வந்வைர் விமுக்தாஸ் ஸூ க துக்க சம்ஜ்ஜை -ஸ்ரீ கீதை, 15 : 5.-ஸூகம் துக்கம் என்கிற பெயரையுடைய
இரண்டால் விடப்பட்டவர்கள்’ என்கிறபடியே, -ஸூக துக்கங்கள்’ என்று சில பெயர் மாத்திரமே யன்றே உள்ளன?
உண்மையை நோக்குங்கால், இரண்டும் துக்கமாய் அன்றோ இருப்பன?
ஆதலால், இரண்டாய் வரும் துக்கங்களை யடைய நினைக்கிறது.
ராம மேவ -யுத். 131 : 95.-ஸ்ரீ ராம பிரானையே நினைத்தவர்களாய் ஒருவருக்கு ஒருவர் நலியவில்லை,’ என்கிறபடியே,
திரு வயோத்தியையில் உள்ளார், ஒருவரை ஒருவர் வேரோடே வாங்கிப் பொகட வேண்டும் படியான
ஸாத்ரவம் -பகைமை அனுவர்த்தியா -தொடர்ந்து நிற்கச் செய்தேயும் எல்லாரும் ஒரு மிடறாக விரும்பினார்கள்;
அதற்கு அடி என்?’ என்னில், பகைமை நெஞ்சிலே பட்டு அவர்களை நலிய நினைத்த போதாகப்
பெருமாளை நினைப்பார்கள்; ‘அவர் முகம் சுளியும்’ என்னுமதனாலே அதன் காரியம் பிறக்கப் பெற்றது இல்லை.
புஷ்பாங்கர ஏகைஸ் சமம் -என்று இறே இவ்விஷயத்தில் கை வைத்தார் இருப்பது –

சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரோடு பரிமாறும் போது மற்றுள்ள பிராட்டிமார் –
ஸ்ரக்- மலர் சந்தனம் முதலியவைகளைப் போன்று -போக உபகரண -இன்பத்திற்கு உறுப்பான
பொருள்களின் கோடியிலே சேர்ந்திருப்பார்கள்;
மற்றைப் பிராட்டிமார்களோடு பரிமாறும் போது பெரிய பிராட்டியார் தம்மோடு பரிமாறுவதைப் போன்றே நினைத்து மகிழா நிற்பார்;
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால், திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்?’ என்கிறபடியே,
அவர்களோடு இவன் பரிமாறும்போது பிராட்டிக்கே அற்றானாய் இருக்கும்; அதற்கு அடி,
அதனால் பிறக்கும் முகமலர்ச்சி அவள் பக்கல் காண்கையாலே. அல்பம் குணாதிக்யம் உள்ள இடத்தும் –
உயர் குணங்கள் பல பொருந்தியிருந்த ஸ்ரீ கௌசல்யையார்-சா பத்ன்யம் தோற்றாதபடி – தமக்கு என ஒரு தன்மை இன்றிக் —
யதா யதா ஹி-காலம் தோறும் காலம் தோறும் சக்கரவர்த்தியின் நினைவுக்குத் தகுதியாக
மற்றைய மனைவிமார்களுக்கு விரோத வுணர்ச்சி தோன்றாதவாறு பரிமாறிப் போந்தாரே அன்றோ

எண் ஆராத் துயர் விளைக்கும் –
முறுவலிக்கிறதும், கரைந்தேங்குகிறதும் இரண்டு துயராய்த் தோற்றுகிறதாயிற்று இவர்க்கு.
அந்தமில் பேரின்பத்துக்கு எல்லை காணிலும் துக்கத்துக்கு எல்லை காண ஒண்ணாதபடி ஆயிற்று இருப்பது;
அதனால் ‘எண் ஆரா’ என்கிறார்.
பரமபதத்தில் நிஷ்க்ருஷ்ட ஸூகமாகவே -துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே,
இதுவும் நிரவதிக –எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று.
ராஜ்யாத் பிரம்ச இத்யாதி -ராஜ்யத்தினின்று நீங்கியதும், வனத்தில் வாசம் செய்கிறதும், சீதை காணாமற் போனதும்,
பெரியவுடையார் ( ஜடாயு ) மரணமடைந்ததும் ஆகிய இப்படிப்பட்ட என் துக்கங்கள் நெருப்பையும் கூட எரித்துவிடும்
என்றாரே யன்றோ பெருமாள்?
இவர்கள் படுகிற துக்கத்தைக் கண்டு தன் கிருபையாலே அவன் எடுக்கக் கை நீட்டின இடத்திலே படுகிற பாடே அன்றோ இது?

ராஜ்யாத் ப்ரம்ஸ:–ஆரண்ய. 67 : 24. -திருவபிஷேகம் பண்ண நான் இட்டவாறே, ‘ராஜ்யம் எனக்கு வேணும்’ என்றார் சிலர்.
அத்தை இழந்தால் படை வீட்டில் இருக்கப் பெற்றதாகிலும் ஆமிறே, ‘என் மகன் ராஜ்யம் பண்ண வேண்டா; பிக்ஷை புக்காகிலும்
என் கண் வட்டத்திலே இருக்க அமையும்,’ என்றாளிறே ஸ்ரீ கௌசல்யை.
சீதா நஷ்டா – பிராட்டியும் தாமுமாய் ‘ஏகாந்தமாகப் புஜிக்கலாம்’ என்று போர, இருவரும் இரண்டு இடத்திலேயாம்படி விழுந்தது.
பிராட்டிக்குத் தனியிடத்திலே உதவப் புக்க பெரிய உடையாரையும் இழந்தது.
ராஜ்ய நாசோ பஹர்ஷதி’ என்றும்,
வனவாசோ மஹேநதய:’ என்றும் சொல்லிப் போந்தவற்றை
இப்போது அநர்த்தமாகச் சொல்லுகிறது என்?’ என்னில், ஆஸ்ரித சம்ஸ்லேஷத்துக்கும், ரிஷிகளை எடுக்கைக்கும் என்றிறே போந்தது;
அத்தோடே விரோதிக்கையாலே சொல்லுகிறார்.
பிராட்டியைப் பிரிகையாலும்,
பெரியவுடையார் இழவு பலிக்கையாலும்,
இவற்றுக்கு அடியானவையும் இப்போது அநர்த்தமாய்த் தோற்றுகையாலே சொல்லுகிறார்.
இவ்விரண்டாலும் வரும் துக்கங்களையடைய நினைக்கிறது.
நிர்த்தஹேதபிபாவகம் – பிரியாத இளையபெருமாளையும் பிரிக்க வற்றாயிறே இருக்கிறது.

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற் கெளிதே யாரும்
செப்பருங் குணத்தி ராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு; பின்பவ் வாசகம் உரைக்கக் கேட்ட
அப்பொழு தலர்ந்த செந்தாமரையினை வென்ற தம்மா!’ கம்பர் –

இவை என்ன உலகு இயற்கை –
உன்னை ஒழியப் புறம்பேயும் இந்த உலகப்பேறு இழவு ஆம்படி இது ஒரு உலக யாத்ரையை -ஒழுக்கினை
நீ பண்ணி வைத்தபடி என்? பிரானே! ‘நாம் பண்ணுகையாவது என்?
இவர்கள் தாங்கள் செய்த கர்மங்களினுடைய பலம் தொடர்ந்து வருகிறது இத்தனையன்றோ?
நம்மால் வந்தது அன்றுகாணும்,’ என்று பகவானுடைய அபிப்பிராயமாக, அருளிச்செய்கிறார் மேல் –

கண்ணாளா –
இவர்கள் செய்த கர்ம பலன்களை இவர்களே அனுபவிக்க வேண்டும் என்று இருந்தாயாகில்,
உன் கிருபைக்குப் புறம்பு விஷயம் எங்கே?
கண்ணாளன் –
அருளை உடையவன். அருள் உடையவனைக் ‘கண்ணுடையவன்’ என்னக் கடவதன்றோ?
அன்றிக்கே, கண் என்று இடமாய், அதனால், அகலிடம் என்றபடியாய், ‘பூமியை ஆளுகின்றவனே!’ என்னுதல்.
அன்றிக்கே, ‘இது ஏதேனும் தன்னரசு நாடோ?’ என்றது,
நீ நிர்வாஹகனாய் இருக்க இவை சொரூப விரோதங்களிலே செல்லுதல் என்?’ என்னுதல்.
கண் என்பது நிர்வாஹகனுக்குப் பெயர்.
தாங்கள் தாங்கள் சூழ்த்துக்கொண்ட கர்மங்களைத் தாங்கள் தாங்களே அனுபவிக்க வேண்டாதபடி
நாம் உதவ எங்கே கண்டீர்?’ என்ன, ‘ஒரு வெள்ளம் அன்றோ?’ என்று உதாஹரணம் காட்டுகிறார் மேல்

கடல் கடைந்தாய் –
துர்வாச முனிவரது சாபத்தால் வந்த அனர்த்தத்தை -கேட்டினைத் தப்புகைக்கு –
ப்ரயோஜனாந்தர பரர்க்கும்- வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களுக்கும் அரியன செய்து உதவுமவன் அன்றோ?’ என்கிறார்.
நன்று; அவர்களுக்கு இச்சை உண்டு; அநிச்சுக்களுக்கு -இச்சை இல்லாதவர்களுக்கு நம்மால் செய்யலாவது உண்டோ?’ என்ன,
ஆகில், இவர்கள் நடுவே இராதபடி என்னை உன் திருவடிகளிலே வரும்படி செய்ய வேண்டும்,’ என்கிறார் மேல் –

உன கழற்கே வரும் பரிசு –
விலக்கடிகளில் போகாமல், பிராப்தமுமாய் -வகுத்ததுமாய் -போக்யமுமான -இனியதுமான உன் திருவடிகளிலே
வந்து கிட்டுவது ஒரு வகை.
இவர்க்குக் கால் கூறு இச்சை உண்டாய் இருந்தபடியாலே, ‘அப்படிச் செய்கிறோம்,’ என்றான் ஈஸ்வரன்.

தண்ணாவாது –
தாழாது; தண்ணாக்கை – தாழ்க்கை. என்றது, ‘செய்கிறோம் என்று ஆறியிருக்க ஒண்ணாது;
செய்து கொடு நிற்க வேண்டும்,’ என்றபடி.
நாம் இப்படிப் பதறிச் செய்ய வேண்டுவது என்?’ என்ன,

அடியேனை’
என்கிறார் -என்றது, ‘சொரூப ஞானத்தாலே இவ்வுலக மக்களோடு பொருந்தாத என்னை’ என்றபடி.

பணி கண்டாய் சாமாறே –
பணிக்கை -சொல்லுகை; சொல்லுதல் நினைவோடே அன்றோ கூடியிருப்பது?
அன்றிக்கே, ‘சாமாறு பணிக்கவேண்டும்,’ என்றது, ‘உனக்கு ஒரு சொலவு; அடியேன் பெறுகிறது உயிரை,’ என்கிறார் என்றபடி.
அன்றிக்கே, ‘அடியேன் மரணத்தைப் பெறும்படி பார்த்தருளவேண்டும்’ என்னுதல்.
நன்று; பிரபந்த ஜன கூடஸ்தரான இவர், கேவலரைப் போன்று இவ்வளவை விரும்புகிறது என்?’ என்னில்,
வரம் ஹூ தவஹா ஜ்வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்த்திதி – ந சவ்ரி சிந்தா விமுக ஜன சம்வாச சைஸவம் -‘கண்ணபிரானுடைய
தியானத்தில் ஆசையில்லாத மனிதர்களோடு ஸஹ வாசம் செய்தலாகிற பெரும் துன்பத்தைக் காட்டிலும்
நெருப்பினுடைய ஜ்வாலைகளாகிற கூட்டின் நடுவில் அடங்கி இருப்பதானது சிறந்தது,’ என்கிறபடியே,
இவர்கள் நடுவில் இருக்கிற இருப்புத் தவிருகை தானே இப்போது தேட்டம் ஆகையாலே சொல்லுகிறார். என்றது,
காட்டுத் தீயில் அகப்பட்டவனுக்கு நீரும் நிழலுமே அன்றோ முற்படத் தேட்டமாவது?
பின்பே அன்றோ போக்யாதிகளிலே -இனிய பொருள்களிலே நெஞ்சுசெல்வது?
அப்படியே, இப்போது இவர்கள் நடுவில் இருத்தற்கு அடியான சரீரத்தின் பிரிவைப் பிறப்பிக்க வேண்டும் என்கிறார்,’ என்றபடி.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply