முதற்பாசுரத்திலே ‘எண் ஆராத் துயர்’ என்று திரளச் சொன்னார் –
அவற்றிலே சில வகைகளைச் சொல்லித் துன்பம் அடைந்தவராய் -விஷண்ணராய் , –
இவர்கள் துக்கத்தைப் போக்காயாகில் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.
சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?
ஆமாறு ஒன்று அறியேன் நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே–4-9-2-
சாமாறும் கெடுமாறும் –
சாகும்படியும் கெடும்படியும். ‘‘ஆறும், ஆறும்’ என்னுதல் என்னை?
சாதலுக்கும் கெடுதலுக்கும் மேற்படச் சில வகைகளும் உளவோ?’ என்னில்,
பல காலம் ஒருபடிப்பட வாழக் கடவனாகவும், தன்னோடு ஒக்க வாழ்வாரை அழியச் செய்யக் கடவனாகவும் கோலிக் கொண்டு போகா நிற்க,
நினைவு அற முடிந்து கொடு நிற்கும்படியும், நான்கு சின்னம் கைப்பட்டவாறே,
இனி, நமக்கு உள்ளதனையும் வாழ்வதற்கு ஒரு குறை இல்லை’ என்று நினைத்திருக்கச் செய்தே,
அதனை இழந்து துன்பப்பட்டுக் கூப்பிடும்படியும் எனச் சில உளவே அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி.
ஒருவன் தன் சாக்காட்டிற்கும் இசைவான், தன் கையில் அகப்பட்ட பொருள் தப்பினால்; அதனையே அன்றோ இவன் தஞ்சமாக நினைத்திருப்பது?
ஆதலின், சாதற்குப் பின் ‘கெடுதலை’ வைத்து அருளிச் செய்கிறார் –
ஒருத்தனை ‘ராஜத்துரோஹி’ என்று கையையும் காலையும் தறிக்க இவனை வினவப் புகுந்தவர்கள்,
இப்படிப்பட்டது வரல் ஆகாதே!’ என்ன, ஆயிரம் ஐந்நூறு என்று காசு சில தா,’ என்னாதே
இவ்வளவோடே போயிற்று உங்கள் அநுக்கிரஹமே அன்றோ?’ என்றானாம்.
இவர் நோவுபடுகைக்கு வேறே சில உளவாயின;
நின்னலால் இலேன்காண்’-2. 3 : 7. என்றும்,
பல நீ காட்டிப் படுப்பாயோ?’-6. 9 : 9.-என்றும்
இன்னம் கெடுப்பாயோ?’6. 9 : 8.- என்றும், ‘பகவானை அடையாதொழிவது -அலாபம் -விநாசத்திற்குக் காரணம்,-என்றும்,
இதர விஷயங்களைப் பார்ப்பது-தர்சனம் – கேட்டிற்குக் காரணம், என்றும் ஆயிற்று இவர் இருப்பது.
குருஷ்வ –அடியவனான என்னைத் தேவரீர் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருளவேண்டும்;
என்னை அழைத்துக்கொண்டு போவதில் பாவம் இல்லை; தேவரீருக்கே பயன் கிடைக்கின்றது;
நான் தேவரீருக்குக் கைங்கரியத்தைச் செய்து அதனால் பயனை அடைந்தவன் ஆகப் போகிறேன்,’ என்றும்,
யஸ்த்வயா ஸஹ ச ஸ்வர்க்க -‘ஸ்ரீராமரே! உம்மோடு கூடி வசிக்கும் இடம் எதுவோ, அது ஸ்வர்க்கம்;
உம்மைப் பிரிந்து வசிக்கும் இடம் எதுவோ அது நரகம் என்று எண்ணுகின்ற
எனது சிறந்த பிரீதியை அறிந்தவரான நீர் என்னுடன் புறப்படும்,’ என்றும்,
இவற்றை விநாசமும் கேடுமாகவேயன்றோ இவர்கள் நினைத்திருப்பது?
இவர்கள் இவை ஒழிய விநாசத்தையும் கேட்டினையும் எங்கே தேடிக்கொண்டார்கள்?
என் ஒருவர் தீக் கதிக் கண் செல்லும் திறம்?’-முதல் திருவந்.95.- என்னுமவர்களே அன்றோ இவர்கள்?
தமர் உற்றார் –
சரீர சம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘ஞாதிகள் -தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப்
பாரம் அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று;
இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’-8-10-9- என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு.
தலைத்தலைப்பெய்து –
மேல் விழுந்து மேல் விழுந்து.
ஏமாறிக் கிடந்து அலற்றும் –
ஏ’ என்று ஏக்கமாய்,-மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’-பெரியாழ்வார் திருமொழி -2-7-8- என்னக் கடவதன்றோ?
அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை; அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர்.
இவை என்ன உலகு இயற்கை –
இவை ஒரு லோக யாத்திரை -உலக வாழ்வு இருக்கும்படி என்? என்றது,
வாழ்வதற்கு எண்ணா நிற்க முடிவது; நான்கு காசு கையிலே உண்டானவாறே ‘இது நமக்கு உண்டு’ என்று இருக்க,
அது அழிந்து போவது; சரீர சம்பந்தம் காரணமாக வருகிறவர்களையே தனக்கு எல்லாவித உறவுமாக நினைத்து,
அவர்களுக்கு ஒன்று வந்தவாறே ‘பட்டேன் கெட்டேன்!’ என்று கூப்பிட்டு அலற்றுவது ஆகிற இவையும்
ஒரு உலகப் போக்கே! பிரானே!’ என்கிறார் என்றபடி.
நன்று; அவர்கள் என் படில் உமக்கு நல்லது? நீர் நம்மையே சொல்லிக் கூப்பிடும்படி பண்ணினோமே!
சீலமில்லாச் சிறியனேலும்’ என்ற திருவாய்மொழியில் கூப்பிடு அன்றோ உம்மது?’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்-
நான் ஆமாறு ஒன்று அறியேன் –
அவர்கள் தாம் கூப்பிடுகிறது உன்னோடு சம்பந்தம் இல்லையாயோ?
ப்ரக்ருதியோடே -சரீரத்தோடே இருக்கையாலே அன்றோ? அதனை என்னினின்றும் தவிர்த்தாயோ?
இவ்வுடம்பு கிடக்கையாலே, இன்னதற்கு நான் கூப்பிடப் புகுகின்றேன் என்று அறியா நின்றேனோ?’ என்கிறார்.
அன்றிக்கே, ‘மக்களுடைய இந்தத் துக்கம் போதற்கு விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்னுதல்; என்றது,
நீ எனக்குச் செய்து தந்த வாசி, நான் இவர்களுக்குச் செய்து கொடுக்கும் விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்றபடி.
அரவணையாய் அம்மானே –
இவற்றைக் காக்கும் பொருட்டுத் திருவனந்தாழ்வான் மேலே திருப் பாற்கடலிலே கண் வளர்ந்தருளி,
இவற்றைப் பாதுகாத்தல் உன் பேறாம்படியான குடல் சம்பந்தத்தை உடையவனே!
இவற்றிற்கு இவனோடு மெய்யான குடல் சம்பந்தமே அன்றோ?
இவனுடைய பொய்யோடு மெய்யோடு வாசியற இவனுக்கு இரண்டும் காப்பதற்கு உடலாயிருக்கும் –
(கிருஷ்ணாவதாரத்தில் பொய்யை. என்றது,‘ஆயுதம் எடேன்’ என்று கூறி, ஆயுதம் எடுத்தல் போல்வன.
‘இவனுடைய மெய்’ என்றது, இராமாவதாரத்தில் மெய்யை
‘நாஸ்தி சப்த வாச்சியமான அசித்தோடு, அஸ்தி சப்த வாச்சியமான ஆத்மவஸ்துவோடு’ என்றுமாம்.
உடலாயிருக்கும்’ என்றதும் சிலேடை : ‘சரீரமாக இருக்கும்’ என்பதும், ‘காரணமாக இருக்கும்’ )
கூமாறே விரை –
ஸூலபனாய் இவற்றைக் காப்பதற்காகத் திருப்பாற்கடலிலே கூக்குரல் கேட்கைக்காகக் கிட்டி வந்து கிடக்கிற நீ,
நான் உன் திருவடிகளை வந்து கிட்டும்படி என்னை அழைத்துக் கொள்வதிலே விரைய வேண்டும்.
இப்படி விரைய வேண்டுகிறது என்?’ என்னில்,
கண்டாய் –
என்னைக் கண்ட உனக்கு விரையாதே இருக்கலாய் இருந்ததோ?
ஏஹி பஸ்ய சரீராணி -காட்டிலே கொடியவர்களான இராக்கதர்களாலே பல வகையில் துன்
பாராய்’ என்று தம் வடிவைக் காட்டுகிறார்.
ஆனாலும், அநாதி காலம் நீர் பிரியில் தரியாதே போந்த உடம்பும் உற்றாரும் அன்றோ?’ என்ன,
அடியேனைக் குறிக்கொண்டே –
இந்த உலக வாழ்வில் செல்லாதபடியாய்இருக்கிற என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்.
உன் திருவடிகளில் சம்பந்தம் அறிந்த அன்று தொடங்கி உன்னைப் போன்று -பர அநர்த்தம் -பிறருடைய துக்கத்தைப்
பொறுக்க மாட்டாதபடியான என் வாசியைத் திருவுள்ளம் பற்றி யருள வேண்டும்’ என்னுதல்.
நன்று; ‘கூமாறே விரை கண்டாய்’ என்ற அளவில், ‘பிறருடைய துக்கம் பொறுக்க மாட்டாதவர்’ என்னுமிடம் தோற்றுமோ?’ என்னில்,
இவை என்ன உலகியற்கை?’ என்று இந்த லோக யாத்திரையை -உலக வாழ்வினை அனுசந்தித்து -நினைத்து வெறுத்து,
என்னை அங்கே அழைக்க வேண்டும் என்கையாலே தோற்றுமே அன்றோ?
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply