ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-8-11–

நிகமத்தில் இத் திருவாய்மொழியை அப்யசித்தவர்கள் -காழ்ப்பு ஏறின சம்சார துரிதம்
அற்றுப் பரமபதத்திலே புகப்பெறுவார்கள்,’ என்கிறார்.

உயிரினால் குறைஇல்லா உலகுஏழ்தன் உள்ஒடுக்கித்
தயிர்வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம்சேர் பிறப்புஅறுத்து வைகுந்தம் நண்ணுவரே–4-8-11-

உயிரினால் குறை இல்லா ஏழ் உலகு –
அஸங்யேரான ஆத்மாக்கள் -பூர்ணமாய் -நிறைந்துள்ள ஏழ் உலகங்களையும்.

தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை –
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிறபோது,
செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப்போலே அந்ய பரதைக்கு- வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று
எல்லா உலகங்களுக்கும் வேண்டுவன வற்றை -சம்விதானம் -யெல்லாம் தன் சங்கல்பத்தாலே -நினைவாலே செய்து,
பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது.
அன்றிக்கே, ‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக போஜனாதிகள் -உணவு முதலானவைகளை
உட்கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல்.
அன்றிக்கே,-ஸர்வஸ்ய ஜகத பாலவ் வத்சா பாலவ் பபூவது – எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான
அந்தக் கிருஷ்ண பலராமர்கள் கன்றுகளைக் காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே,
சர்வேஸ்வரனாயிருந்து வைத்து, அடியார்கள் ஸ்பர்சம் – சம்பந்தம் உள்ள பொருள்களால்
அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.

தடம் குருகூர்ச் சடகோபன் –
பிருந்தம் பிருந்தம் அயோத்யாயாம் –அயோத்தியா நகரத்தில் கூட்டம் கூட்டமாக’ என்கிறபடியே,
பெருமாளுடைய திருவபிஷேக மங்கள மகோத்சவத்தைக் காணவேண்டும்’ என்று நாடுகளடையத் திரண்டு கிடந்தால் போலே,
இவர் ஆத்மாவையும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் ‘வேண்டா’ என்று கழித்திருக்கிற இருப்பைக்
காண்கைக்காகத் திரண்ட ஸ்ரீ வைஷ்ணவ மக்களுக்கு அடைய இடம் போரும்படியான
பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

செயிர் இல்சொல் இசை மாலை –
செயிர் – குற்றம். இல் – இல்லாமை: குற்றம் இன்றிக்கே இருக்கை. என்றது,
ஆத்மாத்மீயங்கள்- ‘ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் வேண்டா,’ என்ற
வார்த்தையில் புரையற்று -குற்றமின்றி இருக்கையைத் தெரிவித்தபடி.

வயிரம் சேர் பிறப்பு அறுத்து –
இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற பிறவியினைக் கழித்து.

வைகுந்தம் நண்ணுவரே –
ஓர் உடம்பாய், ‘இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு,
ச ஏகதா பவதி த்ரிதா பவதி -அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே,
அவனுடைய சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும்
அஃது அடியான தன் சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும்-
அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி – பல சரீரங்களை மேற்கொண்டு அடிமை செய்யலாம்படியான தேசத்திலே
போய்ப் புகப்பெறுவர். என்றது, ‘பல படிகளாலும் அடிமை செய்யப்பெறுவர். என்றபடி.
(பல படிகளாலும்’ என்றது, சிலேடை : ‘பல சரீரங்களாலும், பல விதங்களாலும்’ )
அவன் விரும்பின படி இது என்று அறியாதே அன்றோ இவர்தாம் ‘வேண்டா’ என்கிறது-
(‘மங்கவொட்டு உன் மாமாயை’ என்ற திருப்பாசுரம் அநுசந்திக்கத் தகும்.
‘விரும்பினபடி’ சிலேடை : ‘விரும்பின விதம்’ என்பதும், ‘விரும்பின திருமேனி’ என்பதும்)

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறு படில் என்னுடைமை மிக்க வுயிர் – தேறுங்கால்
என்றனக்கும் வேண்டா எனு மாறன் தாளை நெஞ்சே!
நந் தமக்குப் பேறாக நண்ணு–திருவாய்மொழி நூற்றாந்தாதி–38–

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply