ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-9-3–

ஆபி ஜாத்யாதிகள் எல்லாம் கிடக்க, இவை முடிகிறபடியைக் கண்டு பொறுக்க
மாட்டுகின்றிலேன்; துக்க கந்தம் இல்லாத உன் திருவடிகளிலே அடிமை கொள்ள வேண்டும்,’ என்கிறார்.

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே–4-9-3-

கொண்டாட்டும் –
முன்பு ‘இன்னான்’ என்று அறிய ஒண்ணாதபடி அவஸ்துவாய் -பொருள் அல்லாதானாய்ப் போந்தான் ஒருவன்
அல்பம் -சிறிது வாழப் புக்கவாறே ‘முதலியார்’ என்றாற் போலே சொல்லுவார்கள்.
பயிலும் திருவுடையார்’-திருவாய் 3. 7 : 1- என்றே அன்றோ இவர்கள் கொண்டாடும் விஷயம்-

குலம் புனைவும் –
நல் வாழ்வு வாழப் புக்க அன்று தொடங்கி இவனுக்கு ஒரு குலம் உண்டாகத் தொடுத்துச் சொல்லுவர்கள்.

தமர் –
முன்பு ‘இவனோடு நமக்கு ஓர் உறவு உண்டாகச் சொல்லுமது சாலத் தண்ணிது’ என்று போனவர்கள்
இவன் வாழப் புக்கவாறே உறவு சொல்லிக் கொடு வந்து கிட்டுவார்கள்,
அவன் தமர்’-முதல் திருவந். 55- என்று தமக்குத் தமர் புறம்பே அன்றோ?

உற்றார் –
முன்பு, ‘இவனோடு சம்பந்தம் செய்து கோடல் தரம் அன்று; நிறக்கேடாம்,’ என்று போனவர்கள்,
இப்போது ‘இவனோடு ஒரு சம்பந்தம் பண்ணினோமாக வல்லோமே!’ என்று ஆதரித்து மேல் விழுவர்கள்.

விழு நிதியும் –
நினைவின்றிக்கே இருக்கச் செய்தே சருகிலை திரளுமாறு போலே சீரிய நிதி வந்து கைப் புகுருமே;
அச் செல்வத்திற்குப் போக்கடி காணாமல், செய்வது அறியாமல், அதனை முன்னிட்டு ஒரு
ஸ்திரீயை -பெண்ணை ஸ்வீகரிக்கும் -மணந்துகொள்வான்;
அவள்தான் வண்டு ஆர் பூங்குழலாள் ஆயிற்று.
இவள் செவ்வி வண்டே உண்டு போமித்தனை போக்கித் தான் உண்ண மாட்டான் ஆதலின், ‘வண்டார் பூங்குழலாள்’ என்கிறது.
என்னை?’ எனின், இன்பத்திற்குத் தகுதி-யோக்யதை -யில்லாத பருவத்திலே ஆயிற்றுத் தான் அவளை மணந்துகொண்டது.
சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும்’-திருவாய். 5. 1 : 8-
இவை எல்லாம் சர்வேஸ்வரனே யன்றோ இவருக்கு?

மனை ஒழிய –
அவளுக்கும் தனக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கைக்குத் தன் இயற்றி -ஆற்றல் எல்லாம் கொண்டு பல நிலமாக அகத்தை எடுப்பான்.

உயிர் மாய்தல் –
இவை குறி அழியாதிருக்க, இவளைக் கூட்டோடே கொடுத்து, இப்படிப் பாரித்த தான் முடிந்து போவான்.

கண்டு ஆற்றேன் உலகு இயற்கை –
இப்படிப்பட்ட உலக வாழ்வினை என்னால் பொறுக்கலாய் இருக்கிறதில்லை.

கடல் வண்ணா –
இந்த உலக வாழ்க்கையின் படி அன்றிக்கே அனுபவிக்கலாவதும் ஒரு படி உண்டே.
இவர்கள் துக்கத்தை நினைத்தலால் வந்த துன்பம் தீரச் ஸ்ரமஹரமான உன் வடிவைக் காட்டியருளாய்.

அடியேனைப் பண்டே போல் கருதாது –
பொய்ந்நின்ற ஞானம்’ என்ற பாசுரத்தில் ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்ற அளவாக
என்னைத் திருவுள்ளம் பற்ற ஒண்ணாது. ‘என்னை?’ எனின்,
பகவத் விஷயத்தில் அவகாஹித்து -மூழ்கிச் சொல்லுகிற சொல்,
மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைப் பார்த்துச் சொல்லுகிற சொற்களைப் போன்று இராதே அன்றோ?
சிற்றாள் கொண்டார், இவர்க்காகில் இது சேர்க்கை பல்லி போலே பணியன்றோ என்று இருக்க ஒண்ணாது,’ என்கிறார் என்றாராம்.
(நிலைப்பல்லி, ‘சேர்க்கைப்பல்லி ஓர் இடத்திலேயே பலகால் சொல்லிக் கொண்டிருக்கும் )
அன்றிக்கே, மேலே, ‘உன்னைப் பிரிந்து கூப்பிட்ட அவ்வளவாக நினைக்க ஒண்ணாது,
பர அநர்த்தம் – பிறருடைய துக்கத்தைக் கண்டு கூப்பிடுகின்ற இதனை,’ என்னலுமாம்.

உன் திருவடிக்கே கூய்ப் பணி கொள்ளே –
உன் திருவடிகளிலே அழைத்து என்னை அடிமை கொண்டருளவேண்டும்.
உன் திருவடிகளிலே அழைத்தாலும், அடிமையின் சுவடு -இனிமை அறியில் அன்றோ நான் மீளாதொழிவது?
ஆன பின்னர், என்னை நித்ய கைங்கரியம் கொண்டருள வேண்டும்,’ என்னுதல்;
அன்றிக்கே, ‘சோற்றை யிட்டுப் பணிகொள்’ என்னுமாறு போலே, ‘கூய்ப் பணிகொள்’ என்கிறார் என்னுதல்.

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading