பிறவித்துயர் அற-பிரவேசம்
கீழில் திருவாய்மொழியில் ஸ்வாராதன் என்றார் –
அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போகரூபமாய் இருக்கும்,’ என்கிறார் இத் திருவாய்மொழியில்
பகவத் ஸமாச்ரயணம் ஆகிறது தான்
இதுக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனும் ஆசைப்படும் படி போக ரூபமாய் இருப்பது ஓன்று இறே .
ஸ்ரீ யபதியாய்- திருமகள் கேள்வனாய், -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -எல்லா நற்குணங்கட்கும் கொள்கலனாய்,
சகல ஆத்துமாக்களுக்கும் சேஷியாய்,-நிரதிசய ஆனந்த யுக்தனாய் – எல்லை இல்லாத ஆனந்தத்தையுடையவனாய் –
ஏஷக்யேவாநந்தயாதி ( இறைவன் தன்னைக் கிட்டினாரையுந் தான் சந்தோஷிப்பிக்கிறான்,’ )என்கிறபடியே,
தன்னைக் கிட்டினாரையும் ஆனந்திப்பிக்கக் கடவனாய் இருப்பவன் இறைவன் ஆதலின்,
அவனுடைய ஆராதனையானது இன்ப மயமாக இருக்கும் என்கிறார்.
‘நன்று; இறைவனிடத்தில் அனுபவிக்கும் அனுபவம் அன்றோ இன்ப மயமாய் இருக்கும்?
அவனை ஆராதிக்கும் ஆராதனையும் இன்ப மயமாய் இருக்குமோ?’ எனின்,
மோக்ஷ தசையில் அனுபவம் இனிது ஆகிறதும் அவனைப் பற்றி வருகையாலே யன்றோ?
அப்படியே, ஆராதனையும் அவனைப் பற்றி வருகையாலே போக ரூபமாய் இருக்கும்
இதனால் தான் இறைவனுடைய ஆராதனையானது இதற்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனும்
ஆசைப்படும்படி போக ரூபமாய் இருப்பது ஒன்று இறே -என்கிறார்
அஸ்ரத்ததாந புருஷ -விசுவாச பூர்வக த்வரா ரஹிதரானவர்கள் –
அஸ்ய தர்மஸ்ய -என்றான் இறே தனக்கும் இனிதாய் இருக்கையாலே
பரந்தப -விரோதி வர்க்கத்தை உத்தர வல்லாய் நீ அன்றோ –
அப்ராப்யமாம் நிவர்த்ததந்தே–செய்த குற்றங்கள் அத்தனையும் பொறுத்து அவர்களை நல் வழியிற்
செலுத்துகின்ற என்னை யடையாது, தாமதாமுடைய விநாசத்தை சூழ்ப்பதான
சம்சாரத்தை விரும்பி அவ்வழியே போகின்றார்கள்,’ இது தான் இருந்தபடி பாராய் என்கிறான்
ப்ரத்யஷா வகம் அஹம்-
ந மாம்ச சஷூர் அபி வீக்ஷதே தம் – என்கிறானான் ப்ரத்யக்ஷ பூதனானவன்
தர்ம்யம் நம்மைக் காண்கை ஒரு தலையானால் அதர்ம்யம் ஆனாலும் மேல் விழ வேணும் –
இது அங்கன் அன்றிக்கே தர்மாதன பேதமுமாயும் இருக்கும்
ஸூ ஸூகம் கர்த்தும் – ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே தானும் போகரூபமாய் இருக்கும் –
அவ்யயம் -கோலின பலன்களைக் கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே
தான் முதல் அழியாதே கிடக்கும் – –
‘இந்த ஞானமானது எல்லா வித்தைகளுக்குள்ளும் உயர்ந்தது;
இரகஸ்யங்களுக்கு எல்லாம் தலையாயது; உத்தமமானது; பரிசுத்தமானது;
நேராக என்னைக் காட்ட வல்லது; மோட்சத்திற்குச் சாதனமானது; செய்வதற்கு இனிமையாய் இருப்பது;
என்றும் அழிவற்றது,’ என்றும் பகவான் தானும் அருளிச் செய்தான்.
ஆக, இப்படி சாதனா சமயமே தொடங்கி, மோக்ஷத்தை அடைதல் ஈறாக,
அவன் சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் இன்ப மயமாகவே இருக்கவும்,
அவனை விட்டு ஸூத்ர பிரயோஜனத்தை – மிகச் சிறிய பயனைக்கொண்டு அகலுவதே!’ என்று
கேவலரை நிந்தித்துக் கொண்டு,
இதனை ஒழியில்தாம் உளர் ஆகாதபடி தமக்கு இனிதாய் இருக்கையாலே
இவ் வாஸ்ரயணத்தினுடைய இனிமையைச் சொல்லித் தலைக் கட்டுகிறார்-
————————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
யுக்த அனுவாத பூர்வகமாக -தூய அமுதை பருகிப் பருகி என்ற பதத்தைக் கடாக்ஷித்துக் கொண்டு சங்கதி –
ஸ்ரீ வைஷ்ணவ போக்ய லிப்சயா-தாமும் இதில் போக்யத்தை அறிய வேணும் என்கிற வாஞ்சையாலேயே
திருப் பவளத்திலே வைத்து அருளிற்று –
ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சகல ஆத்மாக்களுக்கு சேஷியாய் -நிரதிசய ஆனந்த யுக்தனாய் –
விசேஷண சதுஷ்ட்யமும்–பின்னை நெடும் பணைத் தோள் -நிகரில் அவன் புகழ் -உய்யக்கொள்கின்ற நாதன் –
எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து -என்கிற பாசுரங்களைப் பற்ற
ஆஸ்ரயணம் போக ரூபம் என்னுமதுக்கு சப்தம் தூய அமுது —
பிரான் பெரு நிலம் கீண்டவன் -அவனை விட்டு ஷூத்ர பிரயோஜனங்களை -என்றது பிறவித் துயர் அற -என்றது
பின்னை யான் ஓட்டுவனோ என்றதை பற்றி தாம் உளராகாத படி இத்யாதி –
———————
‘இப்படி நிரதிசய போக்யனானவனை -எல்லை இல்லாத இனியனான இறைவனை விட்டு, –
பிரயோஜனாந்தரத்தை -வேறு பயன்களைக்-கொண்டு அகலுவதே!’
என்று கேவலரை நிந்திக்கிறார்.
‘அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால், பிற ஆழி நீந்தல் அரிது’ திருக் குறள்
—————–
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
பாவா வலம்பநேந -ஆழிப் படை அந்தணனை -என்ற பதத்தையும் -மனத்து வைப்பாரே-என்ற
பதத்தையும் கடாக்ஷித்து அவதாரிகை –
ஸம்ஸாரிணாம் காலாந்தரே பகவத் ஸமாச்ரயண யோக்யதா அஸ்தி –
கேவலா நாம் ஸாபி நாஸ்தீதி தான் ப்ரதமம் நிந்ததி
———————
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை
மறவியை இன்றி மனத்து வைப்பாரே–1-7-1-
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று
ஜரா மரண மோஷாயா– ‘பிறப்பு இறப்பு இவற்றினின்று விடுபடும் பொருட்டு என்னை அடைந்து,’ -என்கிறபடியே,
இருக்கிற கேவலரைச் சொல்லுகிறது.
‘ஆயின், கேவலன் தான் நினைத்த சிறிய பயனைப் பெறுதற்கு இறைவனை அடைதல் வேண்டுமோ?’ எனின்,
ஐஸ்வர்யார்த்திக்கும், ஆத்ம பிராப்தி காமனுக்கும், பகவத் பிராப்தி காமனுக்கும் சர்வேஸ்வரனையே உபாசிக்கையும் –
அந்திம ஸ்ம்ருதியும் – , உடலை விட்டு உயிர் நீங்குகிற காலத்தில் இறைவனை நினையும் நினைவும் வேண்டும்.
‘அங்ஙனம் ஆயின், பேற்றில் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகிறபடி என்னை?’ எனின்,
உபாசனை சமயத்தில் சிறுகக் கோலுகையாலே;
அதாவது, இறைவன் அளவும் செல்லாது நடுவே வரம்பு இட்டுக் கொள்கையாலே, இவ் வரம்பினையே,
‘வரம்பு ஒழி
வந்து ஒல்லைக் கூடுமினோ’ என்று ஸ்ரீ பட்டர் பிரானும் அருளிச் செய்தார்.
‘அவ் வரம்பு இட்டுக் கொள்ளுகைக்குக் காரணம் என்னை?’ எனின்,
ஸூஹ்ருத தாரதம்யம் -அவர் அவர் முற்பிறவிகளிற் செய்து வைத்த நல் வினைகளின் ஏற்றத் தாழ்வுகளே காரணமாம்.
சதுர்விதா பஜந்தா மாம் ஜனாஸ் ஸூஹ்ருதிந அர்ஜுனா ‘அருச்சுனா, நீங்கின செல்வத்தை மீண்டும் அடைய விரும்புகின்றவன்,
புதிய செல்வத்தை விரும்புகின்றவன், கேவலன், இறைவனையே அடைய வேண்டும் என்று விரும்புகின்றவன்
என்னும் இந் நால்வகைப் பட்ட நல்வினைகளையுடைய மக்கள் என்னை வணங்குகிறார்கள்’ என்று அருளிச் செய்தான் இறே
ஆக, அவரவர்களுடைய -ஸூஹ்ருதத்துக்கு அனுரூபமாக -நல் வினைகளுக்குத் தகுதியாகப் புருஷார்த்தங்களில் ருசி உண்டாகும்;
ருசிக்குத் தகுதியாக உபாசனம் -வழிபாடு உண்டாகும்;
உபாசனத்துக்கு -வழிபாட்டிற்குத் தகுதியாகப் பலம் –
பிறவித் துயர் அற –
‘இவனைப் பற்றி இப் பேற்றினைப் பெற்றுப் போவதே!’ என்று இரங்குகிறார்.
‘பிறவி என்னும் இதனால், பிறப்பு முதலாக உண்டாகும் மற்றை ஐந்து விகாரங்களையும் நினைக்கிறார்.
ஆக – பிறப்பு முதுமை மரணம் முதலான -சகல துரிதங்களும் -எல்லாத் துன்பங்களும் போகும்படியாக.
‘ஆயின், ‘இந் நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்று இவர் தாமும் அவற்றை நீக்கிக் கொள்ளுதற்கு விரும்பி இருக்கவும்,
அவர்களை நிந்தித்து அவர்கள் செயலுக்கு இரங்குதல் பொருந்துமோ?’ எனின்,
இவர்க்கு இப் பிறவியை நீக்கிக் கோடல் முக்கியம் அன்று–ஆனுஷங்கிகம் -;
பகவத் அனுபவமே -எம்பெருமானை அடைந்து அவனுக்குத் தொண்டு செய்தலே உத்தேசியம்;
அச் செயலுக்கு இவ் வுடல் தடையாய் இருத்தலின், இதனை நீக்கிக் கொள்ள விரும்புகிறார்;
அவர்கட்குப் பிறவி அறுதலே’ உத்தேசியம் ஆதலின், இரங்குகிறார்.
ஞானத்துள் நின்று –
ஆன்ம ஞானத்தின் அளவிலே நின்று,
இவ் வநுசந்தானம் இறைவன் அளவும் செல்லா நிற்கவும், அத் துணையும் செல்லாது,
ஆன்ம ஞானத்திலேயே கால் ஊன்ற அடியிட்டு நிற்கின்றார்கள் ஆதலின், ‘நின்று’ என்கிறார்.
துறவி-
துறக்கை.-
பிறவித் துயர் அற-
என்றத்தினுடைய பல ரூபமான பிரகிருதி விநிர்முக்த வேஷத்தை – சரீரத்தைத் துறத்தலாகிய காரியத்தைக் கூறியபடி.
சுடர் விளக்கம் தலைப் பெய்வார் –
என்கிற -இது, ‘ஞானத்துள் நின்று’ என்றதன் பலமாய் இருக்கிறது,
ஆத்துமாவானது-ஞான குணகமுமாய் ஞாதாவுமாய் – ஞானத்தைக் குணமாகவும், தான் அறிபவனாகவும் இருத்தலின்,
‘சுடர் விளக்கம்’ என்கிறார்.
‘ஆயின், மோக்ஷ தசையில் ‘சுடர்விளக்கந் தலைப் பெய்வார்’ என்கிறது என்?
சம்சார தசையில் அதற்கு அச் சுடர் விளக்கம் இல்லையோ?’ எனின்,
சம்சார தசையில் கர்மம் அடியாக வரக் கூடிய-சங்கோசம் – குறைவு உண்டு;
மோக்ஷ தசையில் அது இன்று ஆதலின்,விகஸிதமாய் மலர்ந்து தோன்றும்;
அதனை நோக்கி அங்ஙனம் அருளிச் செய்கிறார்
ஆக, ‘பிறவியினது எல்லாத் துன்பங்களும் போக வேண்டும்’ என்று ஆன்ம ஞானத்திலே ஊன்ற நின்று,
பிரகிருதித் தொடர்பினின்று விடுப்பட்டதான ஆத்தும சொரூபத்தை அடைய வேண்டும் என்று இருப்பவர்கள் என்பது பொருளாம்.
பிறவித் துயர் அற ஞானத்துள் நிற்றல், காரணம்;
துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்தல். காரியம்.
அறவனை –
அவர்கள் படியையும், காரியம், பலன் கொடுக்கின்றவன் படியையும் பார்த்து, ‘என்ன பரம உதாரனோ!’என்கிறார்;
ஒருவன் விரும்பும் பயன் யாதாயினும், அதனைப் பெறுவற்குத் தன்னை விரும்பும் அத்தனையே அவன் வேண்டுகின்றான் என்றபடி.
‘எங்களுக்கு நீ வேண்டா; ஷூத்ர பிரயோஜனம் -சிறிய பயனே அமையும்,’ என்று இருக்கிறவர்களுக்கும்
அதனைக் கொடுத்துவிடுவதே! என்ன தார்மிகனோ!’ என்கிறார்.
ஆழிப்படை அந்தணனை-
ஆத்தும அனுபவ விரோதியைப் போக்கைக்குக் கருவியான திருச் சக்கரத்தைக் கையிலே யுடையவன்.
அந்தணன்-என்று . சாணிச் சாற்றைப் போன்று ‘சுத்தன்’ என்று கொண்டார்கள் இத்தனை;
இனிமையில் நெஞ்சு சென்றது இல்லை.
சுத்தி குண விசிஷ்டன் -‘சுத்தி குணத்தோடு கூடினவன்’என்று ஆயிற்று அவர்கள் நினைப்பது.
‘கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாதே, தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான
சுத்தி மாத்திரத்தையே பற்றுவதே!’ என்கிறார்.
மறவியை இன்றி மனத்து வைப்பாரே –
அவனுடைய இனிமையையுங் கண்டு வைத்து, தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே
அதனைப் பெறுதற்கு அவனை அடைகின்றார்கள்.
‘மறவியை இன்றி’ என்று, அவர் தம் செயலுக்கு இரங்கும் இவர் மறப்பரோ?’ எனின்,
இவர்க்குக் கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் முன் அடி தோற்றாது;
‘சக்கரத்து அண்ணலே’ என்றால் பின்னைத் தரைப்படும் இத்தனை அன்றோ இவர்?’
ஸ்ரீ திருமங்கை மன்னனும், ‘ஆழியொடும், பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்!’ என்று
உத்தேஸ்யமான பொருளையும் மறக்கும்படி கலங்குவர்.
‘பிள்ளாய், நல்லதை மறக்கப் பண்ணா நிற்க இவ் விஷயம், தீயதை மறவாது ஒழிவதே!
மறவியை -மறப்பை -மறப்பு இன்றிக்கே-மறவாதே மனத்து வைப்பாரே-
உபாசன பரமானால் -சுடர் விளக்கம் குண பிரகாசகமான விக்ரஹமாகக் கடவது –
அவனுடைய இனிமையை அநுசந்தித்து வைத்தும், பின்னையும் இந் நிலை குறையாதே நிற்பதே!
இவ் வரிய செயலைச் செய்கைக்குத் திண்ணியர் ஆவதே இவர்கள்!’ என்று இரங்குகிறார்.
‘பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று துறவிச் சுடர் விளக்கந் தலைப் பெய்வார்,
மறவியை இன்றி, அறவனை ஆழிப்படை அந்தணனை மனத்து வைப்பாரே,’ இது அந்வயம் –
——————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
பிறவித் துயர் அற -கேவலனுக்கு வாசகம் –
ஞானத்தால் நின்று துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார்-என்கிற இது தே ப்ரஹ்ம தத் வித்து என்றதின் அர்த்தம்
ஆழிப்படை அந்தணனை மனத்து வைப்பார் -என்றது மாம் ஆஸ்ரித்ய-என்றதின் அர்த்தம் –
இப்படி வரம்பு இட்டுக் கொள்ளுகைக்கு அடி -ஸூஹ்ருத தாரதம்யம் -புருஷார்த்தில் உண்டான ருசி அனுகுணமாக வாயிற்று என்றபடி –
பிறவி என்கிற இது -அஸ்தி பரிணமதே விவர்த்ததே அபஷீயதே விநச்யதே என்கிற ஐந்து விகாரங்களையும்
பிறவித துயர் அற என்று வைத்து திரியட்டும்- துறவி -என்ற புனர் யுக்தி -முன்னது உபாசன விஷய சங்கல்பம் –
பின்னது பல விஷய சங்கல்பம் -என்றபடி –
ஞானத்தால் நின்று -என்று வைத்து சுடர் விளக்கம் தலைப் பெய்வார் என்றத்துக்கும்
உபாசன பல விஷய சங்கல்ப பரமாகக் கண்டு கொள்வது –
சுடர் -விளக்கம் -இரட்டிப்பு -ஞான குணகத்வமும்-ஞான ஸ்வரூபத்வமும் சொல்லுகிறது –
துறவி -துறந்த பிரகிருதி விநிர்முக்தமான / அறவன்-தார்மிகன் / அவன் படி -குணாதிக்யம் –
அர்த்திகளுடைய மநோ ரதம் பூரணம் பண்ணுகை தார்மிகத்வம் என்கிறார் –
நன்றான ஈஸ்வரனையும் -கையும் திருவாழியுமான இவ்விஷயம் -கைவல்யத்தை சில பாக்ய ஹீனர் மறவாது ஒழிவதே-
மறவியை இன்றி மனத்து வைப்பாரே-என்று கூட்டி சப்தார்த்தம் –
உபாஸக பரமாய்-இப்பாசத்தில் பகவத் பிராப்தி காமபரம் -சுடர் -குணங்கள் -விளக்கம் -தத் பிரகாசிக விக்ரஹம் –
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply