நிகமத்தில் ‘இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர் -அப்யஸிக்க வல்லார்கள் –
சம்சாரத்தில் வந்து பிறவார்,’ என்கிறார்.
————————-
மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-
மாதவன் பால் சடகோபன் தீது அவம் இன்றி உரைத்த ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து-
தீது -அவம் -ஏதம் –
இதனை, ‘தீது இல் மாதவன்பால், அவம் இன்றி இருக்கின்ற சடகோபன் உரைத்த,
ஏதம் இல் ஆயிரம்’ என்று சொற்களைக் கொண்டு கூட்டி,
பிரபந்தத் தலைவன் குற்றம் இல்லாதவன் என்றும்,
பிரபந்தத்தை அருளிச் செய்தவர் குற்றம் இல்லாதவர் என்றும்,
பிரபந்தம் குற்றம் இல்லாதது என்று பொருள் அருளிச் செய்தனர் முன்னைய பெரியோர்.
ஸ்ரீ பட்டர், அவ்வாறு அன்றி, ‘ஏதம் இல் ஆயிரம்’ என்று பிரபந்த லக்ஷணம் கூறிய போதே,-
த்ரிவித தோஷ ராஹித்யம் – முக்குற்றங்கள் இல்லாமையும் சொல்லியதாம்;
இனி, தீதும் அவமும் என்பன செய்வன என்?’ என்னில்,
‘சடகோபன் மாதவன் பால் தீது அவம் இன்றி உரைத்த’ என்று கூட்டிப் பொருள் கொள்க,’ என்று அருளிச் செய்தார்.
அதாவது, தீதாவது, ‘நான்-ஸ்ரீ யப்பதி திருமகள் கேள்வன் அல்லனோ!’ என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்க இருக்குமது.
அவமாவது, ‘ஆஸ்ரயிக்கிறவன் அடைகின்றவன் நித்திய சம்சாரி அல்லனோ!’ என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கைவிடுமது.
இவை இல்லாமையைச் சொன்ன இப் பத்து என்றபடி.
ஓத வல்லார் பிறவாரே-
ஆயிரத்திலும் இந்தப் பத்தையும் கற்க வல்லார் பிறவார்.
பிறக்கை சுட்டி அன்றே
மாத்ரு சம்ரக்ஷணம் அழகிது ‘மாதாவைப் பேணுதல் அழகிது’ என்னுமாறு போன்று,
பகவத் ஸமாச்ரயணம் எளிது – ‘பகவானை அடைதல் எளிது’ என்று உபதேசிக்க வேண்டுகிறது –
இத் திருவாய்மொழியைக் கற்க வல்லார்கள் உபதேசம்-நிரபேஷமாக- இல்லாமலே சம்சார சம்பந்தம் அற்றுப்
பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப் பெறுவர்கள்
ஆதலின், ‘ஓத வல்லார் பிறவார்’ என்கிறார்-
———————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
பிரபந்தத்துக்கு குற்றம் இன்றிக்கே இருக்கையாவது -ப்ரதிபாத்ய வக்த்ரு தோஷம் உண்டாயிற்று அன்றே –
ஆகையால் பிரபந்த தோஷ ராஹித்யம் சொன்னபோதே மற்ற தோஷங்களும் இல்லை என்னுமது சித்தம் –
பிறவார் என்று-பிராப்தி பிரதிபந்தக ப்ரக்ருதி சம்பந்த ராஹித்யத்தை அருளிச் செய்கையாலே –
பிராப்தி பல அனுபவ கைங்கர்யங்கள் எல்லாம் அர்த்த சித்தர்கள் –
பகவத் விஷய ப்ராவண்யமே ஸ்வயமேவ பிராப்தி நிவர்த்தக நிவர்த்தகத்வம்
———————–
முதற்பாட்டில், ‘இறைவனைப் பற்றுகின்றவர்கட்குப்-ஆஸ்ரயிக்கிறவனுக்கு த்ரவ்ய பொருள் நியதி இன்று,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘அதிகாரி நியதி இல்லை,’ என்றார்;
மூன்றாம் பாட்டில் தம்முடைய முக் கரணங்களும்-கரண த்ரயமும் – பகவானிடத்தில்-ப்ரவணமான – அன்பு கொண்ட-படியை அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில், ‘நித்திய சூரிகளைப் போன்று அதுவே யாத்திரை ஆயிற்று,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘தன்னையே பிரயோஜனமாக – பலமாகப் பற்றினார்க்கு அவன்-நிரதிசய போக்யன் – எல்லை இல்லாத இனியன்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இப்படி-போக்கிய பூதனானவை – இனியன் ஆனவனை விட்டு வேறு பிரயோஜனத்தை –
பலத்தைக் கொண்டு அகலுவதே!’ என்று-ப்ரயோஜனாந்தர பரரை- தேவர்களை நிந்தித்தார்;
ஏழாம் பாட்டில், ‘இறைவனையே பலமாகப் பற்றினார்க்குக் காலத்தைப் போக்குதல்-கால ஷேபம்- இன்ன வகை’ என்றார்;
எட்டாம் பாட்டில்,-பிராப்தி விரோதிகளையும் – ‘இறைவனைப் பற்றுதற்குத் தடையாக உள்ளனவற்றையும் அவன் தானே போக்குவான்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘இது கூடுமோ!’ என்று ஐயம் உண்டாக, ‘வெறும் அவன் படியையோ பார்ப்பது?
அருகு இருப்பார் படியையும் பார்க்க வேண்டாவோ?’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘இவர்கள் விரோதிகளைப் போக்குவது எத்துணைக் காலத்தில்?’ என்ன, க்ஷண நேரத்திலே’ என்றார்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்கவே-அப்யஸிக்கவே பிறக்க வேண்டா,’ என்றார்
பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி,
அரி யன் அலன் ஆராதானைக்கு என்று உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு.–திருவாய்மொழி நூற்றந்தாதி–6-
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply