ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து ஷூத்ர – சிறிய பயனைக் கொண்டு போவதே!’ என்று கேவலனை நிந்தித்தார்;
அவன் தன்னையே பற்றி இருக்குமவர்களுக்கு அவன் தான் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் இப் பாசுரத்தில்-
—————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
கீழில் பாட்டில் பிரமேயத்தை அனுவதித்துக் கொண்டு -வைப்பாம் மருந்தாம் அடியவரை வல்வினைத் துப்பாம்
புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்-என்கிற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
———————
வைப்பாம் மருந்தாம் அடியரை வல் வினைத்
துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பா லவன் எங்கள் ஆயர் கொழுந்தே–1-7-2-
வைப்பாம் –
ஆடு அறுத்துப் பலியிட்டு-‘-அரைப்பை யாக்கி -பணப்பை யாக்கி,- இஷ்ட விநியோக அர்ஹமாம்படி –
தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் -சேமித்து வைக்கும் சேமநிதி போன்று,
ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை
இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார்.
இதனால், பிராப்யத்வம் கூறியபடி.
மருந்தாம் –
‘ஆயினும்,-ஷூத்ர – சிறிய விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாத இவ் வுயிர்கட்கு அன்றோ
சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்?
இவன் அவ் விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில்,
அக் குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான
சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார்.
இதனால், பிராபகத்வம் கூறிய படி.
ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ் விரண்டாலும் பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச் செய்தார் ஆவர்.
ய ஆத்மதா பலதா — ‘இறைவன் தன்னைக் கொடுக்கிறான்; தன்னை அனுபவிப்பதற்குத்
தக்க வலிமையையுங் கொடுக்கிறான்,’ என்பது வேத மொழி.
‘இப்படிச் செய்வது யார்க்கு?’ என்னில்,
அடியரை-
ந நமேயம் ‘வணங்க மாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் தவிர்ந்தார்க்கு,
இனி, இதற்கு, ‘அவனைப் பற்றி வேறு ஒரு பயனைக் கொண்டு அகலாமல், அவன் தன்னையே பற்றி
அவன் படிவிடப் ஜீவித்து இருப்பாரை அடியார்கள்’ என்று பொருள் கூறலுமாம்.
வல்வினை துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்-
வலிய வினைகளிலே கொண்டு போய் மூட்டுகைக்கு ஈடான வலிய இந்திரியங்கள் ஐந்தாலும் துஞ்சக் கொடான்.
இனி, புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் என்பதற்கு, ‘
ஐந்து இந்திரியங்களிலும் புக்குத் துஞ்சக் கொடான்’ என்று பொருள் கூறலுமாம்.
துப்பு -என்று சாமர்த்தியம்
‘அவன் என்கிறது யாரை? அவன்தான் இப்படிச் செய்ய எங்கே கண்டோம்?’ என்னில்,
அதனை விரித்து விளக்குகிறார் மேல் :
எப்பால் எவர்க்கும் –
எல்லா இடத்திலும் உண்டான எல்லார்க்கும். ஸ்தான பேதங்களாலும் -இட வேற்றுமையாலும்-
மனுஷ்யாதி தேக பேதங்களாலும் -உடல் வேற்றுமையாலும் வரக் கூடிய சில உயர்வுகள் உள அன்றே?
பூமியைப் போன்றது அன்றே சுவர்க்கம்; மனிதர்களைப் போல் அல்லரே தேவர்கள்;
இவ் விரண்டும் அடங்க ‘எப்பால் எவர்க்கும்’ என்கிறார்.
எப்பால் -எல்லா இடத்திலும் என்றபடி -‘அப்பால், இப்பால்’ என்பன போன்று ‘பால்’ என்பது இடத்தைக் காட்டும்.
எல்லா இடத்திலும் உண்டான எல்லாருக்கும்
நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் –
ஆனந்தத்தாலே மேலே மேலே சென்று, பின்னையும் அது தன்னைச் சொல்லப் புக்கால்
யாதோ வாசோ நிவர்த்தந்தே -‘எந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே
மீள வேண்டும்படியான -ஆனந்த பிராஸுர்யம் -ஆனந்தத்தின் மிகுதியை யுடையவன்,
அதாவது,-சத குணி ஸ்தோத்ர க்ரமத்தாலே அப்யஸ்யமானமாகா நின்றுள்ள நிரதிசய ஆனந்த யுக்தன் – –
மனிதர்களுடைய ஆனந்தத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம் தேவர்களுடைய ஆனந்தம்;
அவர்களுடைய ஆனந்தத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம் இந்திரனுடைய ஆனந்தம்;
அவனுடைய ஆனந்தத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம் சிவனுடைய ஆனந்தம்;
அவனுடைய ஆனந்தத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம் பிரமனுடைய ஆனந்தம் என்று இப்படி
ஏற்றிக் கொண்டே சென்று கூறப்படுகின்றதாய், இதைக் காட்டிலும் மேம்பாடு இல்லாததாய் உள்ள
ஆனந்தத்தை யுடையவன் என்றபடி,
‘ஆனந்த மய’ என்னக் கடவது இறே
எங்கள் ஆயர் கொழுந்தே –
‘இப்படி -சர்வாதிகனானவன் -அறப் பெரிய இறைவன்-இதர சஜாதீயனாய் மற்றையாரோடு ஒத்த சாதியை யுடையவனாய்
வந்து அவதரித்தது, தன்னை ஆஸ்ரயித்தார்- அடைந்தவர்கள்-விஷய ப்ரவணராய் –
ஐம் புல ஆசையினராய் முடியும்படி விட்டுக் கொடுக்கவோ?
தான் சோக மோகங்களை அனுபவிக்கிறது, தன்னைப் பற்றினார் சோக மோகங்களை அனுபவிக்கைக்காகவோ?
மேன்மைக்கு எல்லையானவன் தாழ்வுக்கு எல்லையாயினது, இவர்களைக் கேட்டினை அனுபவிக்க விடவோ?-
அநர்த்தப்பட விடவோ என்கிறார்.
எங்கள் ஆயர் கொழுந்தே
ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு-பிராகிருத – சரீர சம்பந்தத்தினை விரும்பி,
‘எங்கள் ஆயர்’ என்கிறார்.
அன்றி,
எங்கள் – அவதாரந்தான் அடியார்களைக் காப்பதற்காகவே எடுக்கப்பட்டது ஆதலானும்,
வெண்ணெய் களவு கண்டு புசித்ததனால் நகரம் கலங்கிய செய்தி பழையதாக எழுதிக் கிடக்கவும்,
அதனைக் கூறிய அளவில் ‘எத்திறம்’ என்று மோகித்தவர் இவரே ஆதலானும், எங்கள் கொழுந்து’ என்கிறார்
என்று கொண்டு, ‘எங்கள்’ என்பதனைக் கொழுந்திற்கு அடை மொழி ஆக்கலுமாம்.
இனி, தான், பிரமன் முதலிய தேவர்கட்குத் தலைவனாக இருத்தலால் உளதாய பெருமையைப் போன்றே,
ஆயர்தங்களுக்குத் தலைவனாய் இருத்தலால் உளதாய பெருமையையும் பெருமையாக நினைக்கிறான் என்பார்,
‘ஆயர் கொழுந்தே’ என்கிறார் எனலும் ஒன்று. ஆயர் கொழுந்து – ஆயர்கட்கு முதல்வன்-
——————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
தனம் என்னாதே வைப்பாம் -என்றது நிதியினுடைய ஸ்வ பாவத்தை ஏறிட்டுக் கொண்டு
ஈஸ்வரனுடைய ப்ராப்யத்வம் பலிக்கிறது என்கிறார் –
அரைப்பை ஆக்குகை இஷ்ட விநியோகத்தில் ஹேது
நிதிக்கும் மருந்துக்கும் உண்டான ஆகாரங்களை ஈஸ்வரனுக்கு ஏறிட்டு -ப்ராப்யத்வமும் ப்ராபகத்வமும் சொல்லுகிறது –
அடியார்க்கு வைப்பாம் மருந்தாம் -அடியவரை வல்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சாக் கொடான் –
அடியவரை -என்றது -அத்வேஷாதிகளை உடையவருக்கும் என்றும் அநந்ய ப்ரயோஜனரையும்
புலன் -இந்திரியங்கள் -விஷயங்கள் –
எவர்க்கும் எப்பால் -எல்லா இடத்திலும் உண்டான எல்லார்க்கும்
நலத்தால் உயர்ந்து உயர்ந்து -என்றதையும் கொழுந்து -என்றதையும் கடாக்ஷித்து பாவம்
எங்களுடைய ஆயர் -அவருடைய கொழுந்து என்று அன்வயம் –
கொழுந்து -பிரதானன்/ எங்கள் என்று ஆஸ்ரிதர் எல்லாரையும் கூட்டி அருளிச் செய்து –
ஆத்மனி பஹு வசனம் என்றுமாம் –
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply