‘இப்படி அவனும் அவளும் குற்றங்களைப் போக்குவது எத்தனை காலம் கூடி?’ என்னில்,
‘தன் திருவடிகளிலே தலை சாய்த்த அளவிலே’ என்கிறார்.
———————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
நொடியாரும் அளவைக்கண் என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை
————————
கடிவார் தீய வினைகள் நொடி யாரு மளவைக் கண்
கொடியா அடு புள் உயர்த்த வடிவார் மாதவனாரே–1-6-10-
கடிவார் தீய வினைகள் –
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையும் தன்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத
கொடிய பாவங்களை எல்லாம் போக்குவார்.
‘வழி நின்ற வல் வினை மாள்வித்து’ என்ற இடத்தில்,ஆஸ்ரயித்த மாத்திரத்திலே
‘பற்றின அளவில் பாவங்களைப் போக்குவான்,’ என்றார்;
‘இருமை வினை கடிவார்’ என்ற இடத்தில், ‘அவன் தானானதற்கு மேல்
பிராட்டியும் உடன் இருக்கையாலே போக்குவான்,’ என்றார்.
‘எவ்வளவில் போக்குவான்?’ என்னில், ‘ஷண நேரத்திலே’ என்கிறார் இதில்.
நொடி ஆரும் அளவைக் கண் –
நொடி நிறையும் அளவிலே
கொடியா அடு புள் உயர்த்த வடிவார்-
தூரத்தில் கண்ட அளவில் -பிரதிபக்ஷம் – பகைவர்கள் மண் உண்ணும்படியான பெரிய திருவடியைக் கொடியாக
எடுக்கையைச் ஸ்வபாவமாக உடையவர்.
இனி, ‘வடிவார் என்பதற்கு-ஆர்ந்த வடிவை யுடையவர் – ‘அழகிய வடிவையுடையவர்’ என்று கூறலுமாம்.
இனி,வடிவார் மா -வாசியிலே அயர்ந்து இருக்கும் பெரிய பிராட்டி – இதனைப் பிராட்டிக்கு அடைமொழி யாக்கி,
வடிவிலே எழுந்தருளி யிருக்கின்ற’ என்று பொருள் கூறலும் ஒன்று.
மாதவனார்-
பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க ஆயிற்றுப் போக்குவது.
ஒருதலை ஜென்மம் -ஒருதலை மரணம் -நடுவே ஆதி வியாதிகள் -இவை செய்த குற்றங்களைப் பார்க்கக் கடவதோ-
குற்றம் கண்டில் விபூதியாக விட வேண்டாவோ -பொறுத்து அருளீர் என்றால் –
அவளுக்காகப் பொறுத்தோம் -என்னும் அத்தனை –
—————————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
மூன்று பாட்டுக்கும் உள்ள பரஸ்பர பேதம் அருளிச் செய்கிறார் -நொடியாரும் அளவைக் கண் -என்று இங்கே விசேஷம் –
நொடியானது நிறையும் அளவிலே என்றபடி
வடிவார் -ஈஸ்வர விசேஷணமான போது ஸ்வ பாவமாக உடையவர் என்றும்
அழகிலே வடிவை உடையவர் என்றும் த்வதீய அர்த்தம் -ஆர் -அழகு -வடிவு விக்ரஹம்
பிராட்டிக்கு விசேஷணமான போது -ஈஸ்வரன் வடிவிலே பொருந்தினவள் என்றும்-
அழகிய வடிவை உடையவள் என்றுமாம்
மாவுக்கு -பிராட்டிக்கு/ தவன் நாயகன் -மாதவன் என்றபடி
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply