ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை -1-6-9-

தன்னைப் பற்றின் அளவில் இப்படி விரோதிகளைப் போக்கி இப் பேற்றினைத் தரக் கூடுமோ?’ என்னில்,
‘வெறும் அவன் படியையோ பார்ப்பது!
அருகே இருக்கிறார் படியையும் பார்க்க வேண்டாவோ? 
ந கச்சின் ந அபராத்யதி ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்,’ என்பவர் அன்றோ
அருகில் இருக்கிறார்?’ என்கிறார்

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

திருமகளார் -என்றதைக் கடாக்ஷித்து -அருகே இருக்கிறார்ப்படியையும் என்கிறது –
பாபாநாம் வா ஸூபா நாம் வா வாதாரஹானாம் பிலவங்கம் கார்யம் கருணமார்யேண
ந கஸ்சின் ந அபராத்யதி -யுத்த காண்டம் –

——————

தரும அரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன்
பெருமை யுடைய பிரானார் இருமை வினை கடிவாரே–1-6-9-

தரும் –
இவ்வர்த்தத்தில் -இப்பொருளில்-சம்சயம் – ஐயம் இன்று.

அவ் வரும் பயனாய –
பெறுதற்கு அரிதாகச் சாஸ்த்ரங்களிலே பிரசித்தமான பிரயோஜன ரூபமானவற்றை.
அன்றிக்கே -‘பயனாய’ என்பதனை வினையாலணையும் பெயராகக் கொள்ளாது, பெயரெச்சமாகக் கொண்டு,
ஸ்ரீ திருமகளுக்கு அடை மொழி யாக்கி,
தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒரு வடிவு கொண்டாற் போன்று இருக்கின்ற
ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்று பொருள் கூறலும் ஒன்று.

திரு மகளார் தனிக் கேள்வன் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்குக் கணவன் ஆகையாலே-அத்விதீய  இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி -நாயகனாய் இருக்கிறவன். 
அப்ரமேயம் ஹி தத் தேஜ -ஜனக குலத்தில் அவதரித்த பிராட்டியானவள் எவனுக்கு மனைவியாக இருக்கின்றாள்?
அவனுடைய திறல் வலி முதலாயின அளவிட முடியாதனவாக இருக்கின்றன,’ என்கிறபடியே.
ஸ்ரீயப்பதி- திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக் கேள்வன்’ என்கிறார்.

பெருமை யுடைய பிரானார் –
ஸ்ரீ இலட்சுமிபதி ஆகையாலே வந்த மேன்மையுடைய உபகாரகர் ஆனவர். –
ஆஸ்ரித அநுக்ரஹமே -அடியார்கட்கு அருள் புரிதலே ஸ்வரூபமாக வுடையவர் ஆதலின், ‘பிரானார்’என்கிறார்.

இருமை வினை கடிவார்-
பேர் வாசியே யாம்படி நாம் செய்து வைத்த இருவகைப் பட்ட கர்மங்களையும் போக்குவார்.
நல் வினை தீ வினைகட்குத் தம்மில் தாம்-வைஷம்யம்- வேற்றுமை உண்டேயாயினும், 
மோட்சத்திற்குத் தடை என்னும் தன்மையில்-மோக்ஷ விரோதித்வாத் த்யாஜ்யமாகா நின்றன இறே

—————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ்ப் பாட்டிலும் தரும் என்று வைத்து -பின்னையும் தரும் என்றத்துக்குப் பாவம் -இவ் வர்த்தத்தில் சம்சயம் இல்லை
என்று அருளிச் செய்கிறார் –
கடிவார் –சரீர நிஷ்க்ரமணம் தொடங்கி-அவ்வரும் பயனாய் தரும் – கைங்கர்ய பர்யந்தமான பலன்களை சொல்லுகிறது
பிரான் -உபகாரகன் -அனுக்ராஹன்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading