ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-7-

அவன்-நிரதிசய போக்யன் – எல்லை அற்ற இனியன் என்றீர்;
அவனை பிராபிக்கும்- அடைகின்ற வரையில் -நடுவு கால ஷேபம் -இடையிலே உள்ள காலத்தைப்
போக்கும் விதம் எப்படி?’ என்ன,
அதற்கு அன்றே, ‘மனத்துக்கு இனியானுடைய குணங்களிருக்கின்றன’ என்கிறார்?

—————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நாள் கடலைக் கழிமின்-என்றதைக் கடாக்ஷித்து ப்ரஸ்ன உத்தர ரூபேண சங்கதி அருளிச் செய்கிறார் –

————————————

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே–1-6-7-

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் –
‘பரந்த கடலை அகழியாக வுடைத்தாய், அது தானும் மிகையாம் படியான அரண்களை யுடைத்தாய் இருந்துள்ள
இலங்கைக்குத் தலைவன் அல்லனோ?’ என்னும் கெட்ட அகங்காரத்தாலே
‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று மதியாமல் எதிரிட்ட பையலுடைய.

தோள்கள் தலை துணி செய்தான் –
‘அகப்படாதவன் அகப்பட்டான்; தப்பாமல் கொன்று விடுவோம்’ என்று பாராமல்,
தோள்களைக் கழித்துத் தலைகளைச் சரித்துப் போது போக்காக நின்று கொன்றபடி.

தாள்கள் தலையில் வணங்கி-
அவனுடைய வீர சரிதங்களைக் கொண்டு திருவடியைப் போலே போது போக்கி.

நாள் கடலைக் கழிமின் –
இறைவனுடைய போக்யதை -இனிமை நெஞ்சிலே பட்டால், அவனை அடைவதற்கு முன்பு
இடையிலே யுள்ள நாள்கள் ஒரு கடல் போன்று தோன்றும் ஆதலின், ‘நாள் கடல்’ என்கிறார்.
இனி, இதற்குச் ‘சக்கரவர்த்தி திருமகனை அடைந்து -சம்சார துரிதத்தை -பிறவிப் பெருங்கடலைக்
கழித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறலுமாம்.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

குண ஜிதராய் வணங்குங்கோள்-என்று சொல்லுகையாலே குண அனுசந்தானமே போது போக்கு என்று சித்திக்கும்
தலை துணி செய்தான் தாள்கள் வணங்குகை யாவது வீர சரித அனுசந்தானம் -என்றபடி
தலையிலே வணங்கி தலையால் வணங்கி -நாள் கடல் ஓரு நாளே கடல் போலே இருக்கை –
நாள் என்று காலமாய் கால உப லஷிதமான சம்சாரக்கடல் என்றபடி
ஸ்ரீ பரமபதத்தில் எழுந்து அருளினை ஸ்ரீ சக்கரவர்த்தித் திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்கையாவது –
திருவடியைப் போலே -அவனுடைய சரிதங்களைக் கொண்டு போது போக்குகை -என்கிறார்-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading