ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரித்திரத்தை அனுசந்தித்து – நினைத்து, –
இதர விஷய ப்ராவண்யத்தை தவிரவே -மற்றைப் பொருள்களின் ஆசையை நீக்கவே,
அவன் தானே பிரதிபந்தகங்களை- தடைகளை எல்லாம் போக்கி
நித்தியமான கைங்கரியத்தைத் தந்தருளும் -என்கிறார் –
———————–
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
கழித்து வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவிற்று ஆக்கம் தரும் -என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
இரு வ்யக்தியை நிர்த்தேசியாமலே கீழில் பாட்டில் சொன்ன ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனே
இப் பாட்டுக்கும் பிரதிபாத்யன் -என்கிறார் –
——————————-
கழிமின் தொண்டீர்கள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே–1-6-8-
கழிமின் –
பாஹ்ய விஷயங்களில் -புறப் பொருள்களிலுள்ள ருசியைக் கழியுங்கள்.
கழிக்கையாவது, ‘பொல்லாது’ என்று இருக்கை. –
இந்த ருசியைப் பூண் கட்டிக் கொள்ளத் தேடுகிறவர்கள் கழிக்கச் சொன்னால் கழியார்கள் ஆதலின்,
‘தொண்டீர் கழிமின்’ என்கிறார்
தொண்டீர்-
பகவத் விஷயத்தில் -சாபலம் -ஆசையுடையவர்களே, கழிக்கப் பாருங்கள்.
கழித்துத் தொழுமின் –
‘அவனைத் தொழா நிற்கச் செய்தே இதுவும்-க்ரமத்தில் – முறையே கழிகிறது,’ என்று இராமல்
அவசியம் கழித்தே தொழுங்கள்.
மற்றைப் பொருள்களின் விரக்தி தானே பிரயோஜனமாக இருக்கும் ஆதலின்,
‘கழிமின்’ என்றவர், மீண்டும், ‘கழித்து’என்கிறார். –
அவனைத் தொழுதால்-
கரும்பு தின்னக் கூலி போன்று ஒரு பலன் இன்றே யாயினும் தொழுகை தானே பலன் ஆதலின்,
‘தொழுமின்’என்றவர்,
மீண்டும் ‘தொழுதால்’ என்கிறார். இப்படிச் செய்தால்,
வழி நின்ற வல்வினை மாள்வித்து –
இவ் வாத்துமாவுக்குச் ஸ்வரூபத்தோடு கட்டுப்பட்டதோ-ஸ்வரூப அனுபந்தியோ –
என்னும்படி பொருந்தி யிருக்கிற
கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி.
இனி, ‘வழி நின்ற வல்வினை’ என்பதற்கு
‘நடுவே நின்று,-பகவத் பிராப்தியை – பகவானை அடைதலைத் தடை செய்கிற -நிரோதிக்கிற -கர்மங்கள்’
என்று பொருள் கூறலுமாம்.
அழிவு இன்றி ஆக்கம் தரும்
ந ச புநரா வர்த்ததே ‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே,
மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தரும் –
————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
கழிமின்–கழித்து –என்றது வீடுமின் முற்றவும் வீடு செய்து என்றதைப் போலே -அனுவாதம்
கரும்பு தின்னக் கூலி இல்லாதப்ப போலே -என்றபடி வைதர்ம்ய த்ருஷ்டாந்தமானாலும் குறை இல்லை –
வழி நின்ற-ஆத்மா போகிற வழிகள் தோறும் நின்ற -ஸ்வரூப அனுபந்தியோ என்னும்படி நின்ற /
பிராப்தி விரோதியாய் நடுவே நின்ற என்றுமாம் / வழியாக நின்ற ஒழுங்காக நின்ற சந்ததமாக நின்ற /
நசிப்பித்து என்னாதே மாள்வித்து என்றதால் சவாசனத்வம் தோற்றுகிறது
ஆக்கம் -சம்பத்து -மோக்ஷம் ஆகிற சம்பத்து -அவதாரிகையில் கைங்கர்யத்தைச் சொல்லுகையாலே
இங்கே அர்த்தாந்தரமாகக் கண்டு கொள்வது
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply