ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-6-

‘அவன் படி இதுவாக இருக்க, அவனை விட்டு-பிரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவதே!’ என்று-
ப்ரயோஜனாந்தர பரரான – வேறு பலன்களை விரும்பிய தேவர்களை நிந்திக்கிறார்.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கௌபீ நாச்சாத ந பிராயவாஞ்சா கல்பத்ருமாதபி-ஜாயதே யாத புண்யானாம் சோ அபராத ஸ்வ தோஷஜ-என்றது அனுசந்தேயம்
தேவராய மஹா ராயனை ஆஸ்ரயித்தவன் படிக்கல்லுக்கு ராயசம் கேட்க
கிராமத்துக்கும் படிக்கல்லுக்கும் ராயசம் கொடுத்த கதையையும் நினைப்பது

———————————-

அமுதம் அமரர்கட்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே–1-6-6-

அமுதம் அமரர்கட்கு ஈந்த
‘என்ன பரம உதாரனோ!’ என்கிறார்.
‘நீ வேண்டா; எங்களுக்குச் சாவாமைக்கு பரிஹாரம் – -உரிய பொருளை உண்டாக்கித் தரவேண்டும்,’ என்றவர்களுக்கு
அவர்கள் உகந்த பொருளைக் கொடுத்து விடுவதே!
அவர்கள் பிரயோஜனத்தை அருவருத்து, தாம் உகந்த பிரயோஜனத்துக்கு உண்டான-வ்யாவ்ருத்தி – வேறு பாட்டினை அருளிச் செய்கிறார்;

நிமிர் சுடர் ஆழி நெடுமால்-
இவருடைய அமிர்தம் இருக்கிறபடி. 
‘நால் தோள் அமுதே’ அன்றோ இவர்க்கு அமுது? 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்’ என்கிறபடியே, கையுந்திருவாழியுமாய் அன்றோ அவருடைய அமிருதம் இருப்பது?
தேவர்கள் விரும்பிய பலனைத் தலைக் கட்டிக் கொடுக்கையாலே உண்டான புகர் திரு ஆழியிலே தோற்றும்படி இருத்தலின், 
‘நிமிர் சுடர் ஆழி’ என்கிறார்.
‘வேறு ஒரு பலனேயாகிலும் நம் பக்கல் கொள்ளப் பெற்றோமே!’ என்று கொண்ட பெரு மோகத்தின்
மிகுதி தோன்ற நிற்றலின், ‘நெடுமால்’ என்கிறார்.

அமுதிலும் ஆற்ற இனியன்-
தேவர்கள் வாசி அறிவார்களாகில் இவனை அன்றோ பற்றுதல் வேண்டும்?
ஆற்ற இனியன்-
மிகவும் இனியன். 
ஸ்ரீ நம்பி திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவ சாதி வெறும் மரையோ? ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று
கவிழ்ந்து பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையையும் விட்டு!’ என்பராம்.

நிமிர் திரை நீள் கடலானே –
அஸந்நிஹிதன் ‘அண்மையில் இலன்’ என்று தான் விடுகிறார்களோ!
அவ்வமிருதம் உண்டாகிற கடலிலே அன்றோ அவன் சாய்ந்தருளினான் என்பார், ‘கடலான்’ என்கிறார்.
‘தன் வாசி அறியாது இருப்பார்க்கும் எழுப்பிக் காரியங் கொள்ள லாம்படி கண் வளர்ந்தருளுகிறான் என்றபடி. 
‘தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி’ என்கிறபடியே, கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய்,
ஸ்வ சந்நிதானத்தாலே – தனது ‘சம்பந்தத்தாலே அலைகள் கொந்தளிக்கிற கடல் என்பார், ‘நிமிர் திரை நீள் கடலான்’என்கிறார். 
‘மாலும் கருங்கடலே என் நோற்றாய்?’ என்பது ஸ்ரீ பொய்கையார் திரு வாக்கு.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஈந்த என்றத்துக்குத் தாத்பர்யம் -பரம உதாரனோ -நம்மைக் கேட்க்கைக்கு இது தான் போருமோ-என்று விசாரியாமல்
அரித்தித்தையே ஹேதுவாக லோஷடத்தை யாகிலும் கொடுத்து விடுவதே -என்றபடி –
அமரர்களுக்கு -அமரர்கள் ஆகைக்கு என்றவாறு –
நிமிர் சுடர் -அபிவர்த்தமான தேஜஸ் ஸூ
உதாரஸ் சர்வ ஏவைதே
வெறும் மரையோ -கேவல அவயவமோ
தாமரையார்க்கும் அரவுடையார்க்கும் சது மறை நூல்
தாமரையார்க்கும் உயிராகுமாலியல் தண்ணம் துழாய்
தாமரையார்க்கும் உயிராம் முதல்வரைச் சாற்ற கில்லார்
தாம் மரையாகும் முது நீர் உடுக்கும் தலா தலத்தே
மரையோ -என்றது ஞான மாந்த்யத்தையும் கவிழ்ந்து கிடக்கையும் பற்ற
நிமிர் சுடர் ஆழி -என்ற அழகையும் அமுதிலும் ஆற்ற இனியன் என்ற போக்யத்தையும் பாராமல் –
மாலுகை -உகளுகை

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading