பற்றுமிடத்தில் வரும்-அந்தராய பரிஹாரம் – இடையூற்றை நீக்குதலை அருளிச் செய்தார் கீழே ;
‘ஆயின், நீர் பரிகாரம் சொல்லுகைக்கு-அவாப்த ஸமஸ்த காமனாய்- எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய்,
சேஷியாயிருக்கிற அவன்தான் நமக்குக் கைப் புகுந்தானோ?’ என்ன,
அவன் பக்கல் திருத்த வேண்டுவது ஒன்று இல்லை;
அவன்-சங்க ஸ்வ பாவன்- பற்றுக்கு இருப்பிடமானவன்- என்கிறார்.
——————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —
ஆத்ம அனுபவம் ஆகிற அந்தராயத்தைத் தப்புங்கோள் என்ற அனந்தரம் சங்க ஸ்வ பாவனாவனுடைய சர்வவித
கைங்கர்யங்களிலும் அன்வயி என்றதற்குப் பிரயோஜனத்தை சங்கா பரிகார முகேன தர்சிப்பிக்கிறார் –
நீர் பரிகாரமும் சொல்லி நாங்களும் ஆஸ்ரயிக்கைக்கு அவன் இப்போது கைப் புகுந்தானோ என்றபடி –
ஈசன் என்றத்தைக் கடாக்ஷித்து அவாப்த ஸமஸ்த காமன் இத்யாதி –
——————-
பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன், முற்றில் அடங்கே-1-2-6-
பற்றிலன் –
பற்று -உண்டு சங்கம் -அத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவன் – அன்பை உறைவிடம் ஆக உடையவன்.
பற்றிலன் என்பது – பற்றிலான் என்பதன் விகாரம்;
இன்னான் இங்கு உண்டோ என்ன இங்கு இல்லை ‘அகத்திலான்’ என்பது போன்று;
அகத்திலான் – அகத்திலே இருப்பவன்.
அன்புள்ளவனாயினும் இறைவன் அன்றோ அவன்?’ எனின்,
ஈசனும் –
ஈஸ்வரத் -இறைமைத் -தன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடக்குமித்தனை.
இஸ் சங்கம் குணம் ஆகைக்காகவே கிடக்கிறது
கழற்றொண்ணாமையால் கிடந்தாலும் அச்சத்திற்குக் காரணமாமே?’ எனின், ஆகாது;
அவ்விறைமைத்தன்மை இவ்வன்பு குணமாகைக்காகக் கிடக்கிறது; அஞ்சுதற்கு உடல் அன்று;
பெரியவன் உடைய எளிமையே குணம் என்று சொல்லப்படும்.
‘ஆயின், இதனை நாம் காணும் இடம் உண்டோ?’ எனின்,
பிரசாதவ் பரமவ் நாதவ் ‘பூவில் கண் வைத்துத் தொடுக்கில் அதில் ஆசை பிறக்கும் என்று
கண்ணை மாற வைத்துத் தொடுத்து, பூ விற்றுப் பிழைக்குமத்தனை வறியவரான ஸ்ரீ மாலாகாரர்’
தண்ணளியே இவர்கட்கு விஞ்சியிருப்பது.
மேன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடந்தது இத்தனை;
‘இரண்டும் அவ்வாஸ்ர்ய கதமாய் – அவ்விறைவனிடத்தில் தங்கியிருக்க,
தண்ணளியே உள்ளது என்று அறிந்தபடி என்?’ என்னில்,
சேஷிகளாய் இருப்பார்க்கு அடியார்களை அழைத்துக் காரியம் கொள்ளலாய் இருக்க,
நெடுந்தெருவே போகிறவர்கள், மம கேஹம் உபாகதவ் (‘நான் இருந்த முடுக்குத் தெருத் தேடி வந்த போதே )
தண்ணளியே விஞ்சியிருக்கும் என்னும் இடம் தெரிந்தது இல்லையோ?’
தந்யோ அஹம் ( ‘ஒக்கச் சஞ்சரிக்கிற வழியிலே நிதி எடுப்பாரைப்போலே, )-
அர்ச்சியிஷ்யாமி (என்னுடைய -ஸ்வரூப அனுரூபமான விருத்தியலே அன்வயித்து– அடிமைக்குத் தக்கதான தொழிலிலே சேர்ந்து-
அழித்துக் கெடுத்து ஜீவிக்கப் பாரா நின்றேன் – அவன் விருப்பின்படி என்னை உபயோகித்துக் கொள்ள எதிர்பாரா நின்றேன்,’ )
என்றும் கூறினார் என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் கூறுமாற்றால் அறிதல் தகும்
இத்யாஹ-சூட்டு நன்மாலைகள் தூயன வேந்தி நிற்பார் சொல்லக் கடவ பாசுரத்தை இவன் சொல்லுவதே -என்று ருஷி கொண்டாடுகிறார்
மால்ய உப ஜீவன -பூவில் கண் வைத்துத் தொடுக்கில் சாபலம் பிறக்கும் என்று கண்ணை மாறவைத்துத் தொடுத்து
பூ விற்று ஜீவிக்கும் அத்தனை புல்லியனான சொல்லும் வார்த்தை ஈது-என்கிறான் –
முற்றவும் நின்றனன் –
சமோஹம் சர்வ பூதேஷூ (‘எல்லாப் பிராணிகளுக்கும் நான் ஒத்தவன்; எனக்கு எவனும் பகைவன் இலன்;
அன்பனும் இலன்; எவர்கள் என்னைப் பத்தியால் அடைகின்றார்களோ, அவர்கள் போலவே
நானும் அவர்களிடத்தில் அன்புடன் வசிக்கின்றேன்,’ )என்கிறபடியே-
ஆஸ்ரயணித்வே – அடையும் திறத்தில்-சமனாய் – ஒத்தவனாய் இருந்தான். –
இத்தலை இருந்தபடி இருக்கத் தான் எல்லார்க்கும் ஒத்திருக்கை.
பற்றிலையாய் –
நீயும் பற்றிலையாய் -நீயும் பற்றினையுடையையாய்-சங்கத்தை யுடையையாய்
அவன் முற்றில் அடங்கு –
அஹம் சர்வம் கரிஷ்யாமி (‘நான் எல்லா அடிமைகளும் செய்வேன்,’) என்கிறபடியே,
அவனுடைய-எல்லா கைங்கர்யத்திலும் அன்வயி – எல்லாத் தொண்டுகளிலும் சேர்வாய்.
அதவா –
இப் பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும்படி:
பற்றிலன் ஈசனும் –
வாஸூதேவோ அஸீ பூர்ண ( ‘எங்கும் நிறைந்து எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாக
இருத்தலின் வாசுதேவன் ஆகிறாய்,’) என்கிறபடியே,
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -ஞானம் ஆனந்தம் -அமல -குற்றம் இன்மை இவற்றையே-ஸ்வரூபனாய் – வடிவாக உடையவனாய்,-
திரை மாறின கடல் போலே-ஈஸிதவ்யரான-ஏவப்படுகின்றவர்களான நித்திய சூரிகளை உடையவனாய்த்-
பரம பதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘
ஆயின் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அன்றிக்கே இருந்தால் குறைபட்டு இரானோ?’ என்னில,
முற்றவும் நின்றனன் –
அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து ஆஸ்ரயிக்கிற – அடைகிற இவனாலே ஆம்படி நின்றான்;
த்வயி கிஞ்சித் சமாபந்நே கிம் கார்யம் சீதையா மம – ‘இன்று வந்து அடைந்த சுக்கிரீவனுக்கு ஒரு வாட்டம் வரில்,
பசுவானது அன்று ஈன்ற கன்றின் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றையும் கொம்பிலே கொள்ளுமாறு போன்று,
நித்தியாஸ்ரிதையான ஸ்ரீ பிராட்டியாலும் காரியம் இல்லை,’ என்றான் ஸ்ரீ ராமபிரான்-
பற்றிலையாய் –
விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்; அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத்தட்டு என் உனக்கு?
அவன் முற்றில் அடங்கு –
அவனையே எல்லாமாகப் பற்றப் பார்:
ஆயின், அவன் எல்லாமாக இருப்பனோ? எனின்,
வாஸூ தேவஸ் சர்வம் (‘எல்லாப் பொருளும் வாசுதேவனே’ )என்றும்,
மாதா பிதா பிராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண ( தாயும் தகப்பனும் உடன் பிறந்தோனும் வீடும்
காப்பாற்றுமவனும் நட்டோனும் கதியும் நாராயணனே ஆவன்,’ )என்றும்,
ஏகைக பல லாபாயா சர்வ லாபாய கேசவ (‘சுற்றத்தார்களில் ஒவ்வொருவர் ஒவ்வொரு பயன்பொருட்டு,’ என்றும்
வருவனவற்றால் அவன் எல்லாமாக இருப்பான் )என்பது ஓர்தல் தகும்.
———————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —
பற்றிலன் –
பற்று என்று சங்கமாய்– இல் என்று வாசஸ்தானமாய்-சங்க ஸ்வ பாவன்-பற்றிலே யானவன்
ஈசனும் -உம்மைத்தாய் தொகை -ஈசனே யாகிலும் –
சங்கம் பிரதமோபாத்தம் ஆகையால் ஈஸ்வரத்வம் தத் உப சர்ஜனம்-பயாவஹம் அன்று
ப்ரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோ அஹம் அர்ச்சஇஷ்யாமீ த்யாஹா
மால்ய உபஜீவித -ஸ்ரீ விஷ்ணுபுராணம் -பஞ்சம அத்யாயம் ஏகோந விம்ச அத்யாயம்
ஆகதவ் உபாகதவ் -கேஹம் உபாகதவ் -மம கேஹம் உபாகதவ் -என்று பிரித்து
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இருள் தரும் மா ஞாலத்தில் எழுந்து அருளின படியையும் –
சத்ரு பூயிஷ்டமான ஸ்ரீ மதுரையிலே எழுந்து அருளினை படியையும்
அதிலும் வீதியில் போகை அன்றிக்கே ஷூத்ர க்ருஹத்தில் எழுந்து அருளின படியையும் –
அதுவும் ராஜ வீதியில் இருக்கிற க்ருஹத்திலே அன்றிக்கே ஷூத்ரரான மனுஷ்யரும் அருவருக்கும் படியான
என் அகத்திலே வரும்படியே என்று எண்ணி -ரிஷியின் ஈடுபாடு
என்னுடைய ஸ்வரூபம் அநாதியாக இருக்க இழந்த நன் நிர்ஹேதுகமாக இப்போது காணப் பெற்றேன் –
தன கணம் லப்தா–ஸூத்ரத்தில் திரு உள்ளம் கொண்டு ஈஸ்வரனை தன ஸ்தானத்தில்
யதேஷ்ட விநியோகத்தை அருளிச் செய்கிறார்
ப்ராப்யத்வேன ப்ராபகத்வேன ச இத்யர்த்த தனஸ்ய ஆபரணாதி ரூபேண ப்ராப்யத்வம் –
அபீஷ்ட வஸ்து கிரய சாதனத்வேன ப்ராபகத்வம் –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -சூட்டுகைக்குத் தக்கதான நல்ல மாலைகள் –
அப்ராக்ருதம் ஆகையால் அனுரூபமாய் புழுகிலே தோய்ந்தால் போலே அநுராக ரஞ்சிதம் ஆகையால் நேரானவை –
தூயன -கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிற புழுவும் மயிரும் தூரலும் இல்லாமையால் பறி ஸூத்தமானவை
ஏந்தி -பாரதந்தர்யத்தாலே யாவத் அங்கீ காரம் தரித்துக் கொண்டு நிற்கிற நித்ய ஸூரிகள் –
சமோஹம் சர்வ பூதேஷூ ந மே த்வேஷ்யோ அஸ்தி ந பிரிய -யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷூ சாப்யஹம் -ஸ்ரீ கீதா 9- அத்யாயம் –
ஜென்ம வ்ருத்த ஞான சாஹித்ய ராஹித்ய வேஷேண-இருந்தபடி இருக்க –
முற்றில் அடங்கே -சகலத்தில் என்றாய் எல்லாக் கைங்கர்யங்களிலும் அன்வயி என்றபடி –
ஈசனும் பற்றிலன் என்று இரண்டாம் நிர்வாகம் -நித்ய ஸூரிகள் பக்கல் சங்கத்தை விட்டு
நம்மையே தாரகாதிகளாக-முற்றவும் – நினைத்து இருப்பான் ஒருவனாகிறது
அப்படி அனுஷ்டித்துக் காட்டின இடம் –
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம–பரதேந மஹா பாஹோ லஷ்மணனே
ந யவீ யஸா -சத்ருக்னேன ச ஸக்ருத்ன ஸ்வ ஸரீரேண வா புந —
நித்ய அநபாயினியாய் ப்ராணேப்யோ அபி கரீயஸியாய் -பாஸ்கரேண பிரபாயதா-
இவள் நிமித்தமாக இறே உமக்கு இப்படிப் பட வேண்டுகிறது என்று இதுக்கு நிமித்தமான இவளையும் வேண்டேன் –
இவ்வளவும் அல்ல -அவளிலும் பிரிய தமரான இவ் விளைய பெருமாள் நிமித்தமாக உமக்கு ஒரு வாட்டம் வரில்
அவரையும் நான் வேண்டேன் -தாம் உகந்ததே செய்பவன் ஆகையால் இவனிலும் பிரியனான ஸ்ரீ பரதாழ்வான் நிமித்தமாகவும்
அவனுக்கு நல்லனாய் நம் விஷயமாக இந்திரியத்தை ஜெயிக்கையாலே வீரனான சத்ருக்கன் நிமித்தமாக –
உமக்கு ஒரு வாட்டம் வரில் இவர்கள் இத்தனை போரையும் வேண்டேன் –
இவர்களுக்கு ஜீவன் இறே திரு மேனி -ஸ்வ சப்தம் பிராட்டி முதலானோரைச் சொல்லுகிறது -ஸ்வ சேஷாம் ஸரீரேண-
பற்றிலையாய் –
நீ ஒரு தலையும் நித்ய ஸூரிகள் ஒரு தலையுமானால் -அவர்கள் தலையை விட்டு உன் தலையைப் பற்றினான் –
மாணிக்கத்தை விட்டுக் கரியைப் பற்றினால் போலே-
நீயும் விடலான பிராக்ருதி பிராக்ருதங்கள் என்னும் கரியை விட்டு-பரம ப்ராப்யமான மாணிக்கத்தைப் பற்றத் தட்டு என்
அவனாகிற முற்றில் அடங்கு
பஹு நாம் ஜென்ம நாமந்தே ஞானவான் வாஸூ தேவஸ் ஸர்வமிதி மாம் ப்ரபத்யதே ச மஹாத்மா ஸூ துர்லபா -ஸ்ரீ கீதை 7-அத்யாயம்
பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தாரம் மித்ரா தயோ அபி வா ஏகைக பல லாபாய சர்வ லாபாயா கேசவா -ஸர்வவித போக்யத்வமும் விவஷிதம்
சர்வ சமனான சர்வேஸ்வரன் சங்க ஸ்வ பாவன் -ஆகையால் அவன் இடத்தில் சங்கம் உடையவனாய்க் கைங்கர்யத்தில் அந்வயிக்கை இப் பாட்டுக்குப் ப்ரமேயம்
இன்று ஆஸ்ரயித்தவனை நித்ய ஸூரிகளையும் விட்டு ஸ்ரீ பகவான் ஆதரிக்கும் –
ஆகையால் விஷயங்களை விட்டு ஸர்வவித பந்துவுமாக அவனை ஆஸ்ரயிக்க வேணும் என்று பிரமேயம் -என்னவுமாம் –
ஈசனும் பற்றிலன் -முற்றவும் நின்றனன் -என்று தொடங்கி அன்வயம் –
ஆஸ்ரயணத்வேன சமனாய் நிற்கும் சர்வேஸ்வரன் பக்கல் சங்கத்தை உடையனாய் அவனுடைய
எல்லாக் கைங்கர்யங்களிலும் அந்வயிக்கப் பார் என்று பிரதம அர்த்தம்
ஸ்ரீ பட்டர் யோஜனையில் சர்வேஸ்வரன் இன்று ஆஸ்ரயித்தவர்கள் பக்கலிலே தாரகதவாதிகள் எல்லாமாக நின்றான் –
நீயும் சாம்சாரிக சங்கத்தை விட்டுவனாய் அவனுடைய தாரகதவாதி ஸமஸ்த பாவத்திலும் அந்தர்ப்பவிக்கப் பார் -என்று த்விதீயார்த்தம் –
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply